PDA

View Full Version : தமிழர்களுக்கு என ஒரு சுதந்திர தாயகம்.புதியவன்
26-05-2009, 04:36 AM
உறவுகளே....

கேபி எனப்படும் பத்மநாதன் மீது வீண் கோவம் வேண்டாம், அவர் தனக்கு தரப்பட்ட வேலையை செவ்வனே முடித்திருக்கிறார். 30 வருட ஆயுத போராட்டத்தால் நாம் கண்டது என்ன? எத்தனை தியாகங்கள்? எத்தனை வேதனைகள்? இவற்றை எல்லாம் செய்தும் எமது பிரச்சினையில் எந்த நாடும் தலையிட முன் வரவில்லையே ஏன்? அல்லது தலையிடாது நொண்டி சாட்டு சொல்ல எடுத்த ஆயுதம் எது? தலைவர், புலனாய்து தலைவர், தற்கொலை போராளிகள், ஆயுதங்கள், இவை தானே?

சரி புலிகளின் இலக்கு என்ன? தமிழர்களுக்கு என ஒரு சுதந்திர தாயகம். அதை எந்த வழியில் அடைந்தால் என்ன? ஆரம்பத்தில் கரந்தடி கொரில்லா தாக்குதல் படையாக, பின் சிறிய, பெரிய முகாம்களை தாக்கி அவற்றை கைப்பற்றி ஆயுதங்களை சேர்க்க தொடங்கி, பின்னர் ஒவ்வொரு பாரிய முகாம்கள், பாரிய நிலப்பரப்புக்கள் என விரிவடைந்து இலங்கையில் 3இல்1 பங்கு நிலப்பரப்பை அனைத்து நிர்வாக சேவை நடாத்தி அங்கிகரிக்கப்படாத ஒரு நாடாக இயங்கியது, இருந்தும் என்ன பலன்? சில வல்லாதிக்க சக்திகளின் கைகளீல் சிக்கி மெல்ல மெல்ல அழிந்துகொண்டு இருந்தது எமது இனம். சகல வழங்கள், சகல கட்டமைப்புக்களை கொண்டு இருந்தும் எமக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, காரணம் ஆரம்பத்தில் எமது மக்களை காப்பாற்ற விடுதலைபுலிகள் அமைப்பு மேற்கொண்ட சில படுகொலைகள், பின்னாளில் உலக நாடுகள் எமது நாட்டை அங்கீகாரம் செய்ய அவ் படுகொலைகள் முட்டுக்கட்டைபோடும் என எதிர்பார்த்திருக்கவில்லை. எமது தமிழீழ நாட்டை அங்கிகரிக்க எந்த ஒரு நாடும் முன் வராத பொழுது தமிழரின் தலைமை ஒரு முடிவை அன்று எடுத்ததாக தெரிகிறது.

எப்பொழுது ரணில்-பிரபாகரன் ஒப்பந்தம் அதாவது பேச்சுவார்த்தை ஒப்பந்தம் கைச்சாத்தானதோ, அன்றே விடுதலைபுலிகள் தமிழீழ மக்களின் ஏக பிரதி நிதிகள் என்ற அந்தஸ்த்தை அன்றே பெற்றுவிட்டார்கள், ஆனால் உலக நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள முக்கிய தடையாக ஆயுதங்கள், தற்கொடை போராளிகள் மற்றும் ராஜீவ், பிரமேதாசா படுகொலையில் சம்பந்தப்பட்ட இன்ரர் போலால் தேடப்பட்ட விடுதலைபுலிகளின் தலைமை. இந்த தடைகளை மீறி தமிழீழ தேசத்தினை அங்கீகரிக்கமுடியாது, என்று அன்றே தமிழரின் தலைமையின் காதில் செய்தி போடப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை புலிகள் நேரடியாக யுத்ததில் இறங்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.

புலிகளை சர்வதேசத்திற்கு தமிழரின் பிரதி ஏக பிரதி நிதிகளாக நாமே காட்டி கொடுத்துவிட்டோமே என்று ஞானம் கடந்த சிந்தனையால் வெகுடொழுந்த சிங்களம், தானாக சமாதானத்தை முறித்து போரை தொடங்கி இன்று வெற்றி பெற்றுவிட்டோம் என்று கொக்கரித்து நிற்கின்றது. ஆனால் புலிகள் சர்வதேசத்தில் தங்கள் காய்களை வெகு சாதுரியமாக நகர்த்தி வந்துள்ளார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இத்தனை வருடங்களீல் புலிகள் இராணுவம் மீது தற்காப்பு, ஊடறுப்பு தாக்குதலை மட்டுமே நடாத்தி வந்துள்ளார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். ஏனெனில் புலிகளின் தலைமை அன்றே தீர்மானித்துவிட்டது, ஆயுதப்போராட்டத்தால் எதையும் வெல்ல முடியாது. முடிந்தளவு எதிரிக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு தங்களின் ஆயுதங்களின் உயிர்களை மெளனிக்க வைப்பது.

நேற்றைய கே.பி இன் பேட்டியில் சில வரிகளில்...

'' எனி வன்முறை போராட்டத்திற்கு இடம் கொடுக்கபோவதில்லை''
'' புதிய தலைமைத்துவம் ஒரு குழுமம் (ரீம்) வடிவில் அமைக்கப்படும்''
''ஆயுதங்களின் பாவனையை மெளனிக்க வைத்துவிட்டோம்''

இதிலிருந்து ஒன்றை தெளிவாக உலகத்துக்கு சொல்லி இருக்கின்றது கே.பி. வடிவில் தமிழரின் தலைமைத்துவம், அதாவது எமது அதாவது தமிழர்களின் 50 வருட அற + ஆயுத போராட்டத்தில் விலகி நின்று வேடிக்கை பார்த்த சர்வதேச நாடுகளே, இதுவரை காலமும் எமது இனம் சிறுக சிறுக அழிக்கப்பட்டு கொண்டு இருக்கும் பொழுது விடுதலைபுலிகள் என்ற சொல்லை பிரயோகித்து எட்ட நின்று சிங்களத்திற்கு மகுடி ஊதினது போதும், இப்பொழுது அப்படி ஏதாவது நொண்டி சாக்கு சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா? இலங்கை அரசே உத்தியோகபூர்வமாக சொல்லிவிட்டதே? அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டார்கள், பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று? எனி என்ன? இலங்கை அரசே உங்களை எமது பிரச்சினையில் தலையிட அனுமதி தந்துவீட்டார்களே? இனியும் என்ன தாமதம்??

35 வருட அனுபம் வாய்ந்த எமது தானை தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு தெரியாதா எப்படி காய்களை நகர்த்தவேண்டும் என்று? இப்பொதைக்கு சிங்களம் மற்றும் தமிழர்களின் எதிரிகளுக்கு எமது தானை தலைவன், விடுதலைபோரொழி அனைந்துவிட்டதாகவே இருக்கட்டும். எமது தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாகவே இருக்கட்டும். எப்பொழுது சுதந்திர தமிழீழம் தமிழ் மக்களால் வென்றெடுக்கப்படுகிறதொ அப்பொழுது மீண்டும் ஒளிப்பான் எம் சூரியன்.
நன்றி டான்க்லஸ்
யாழ் இணையம்

ஓவியா
26-05-2009, 07:41 PM
நன்கு சிந்தித்து பார்த்தால் இனி அகிம்சைவழியில் போறாடவே புலிகள் தீர்மானித்து சில கசப்பான முடிவுகளை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள் என்று புலப்படும்.

எது எப்படியோ, என் கணிப்பு சரியாகவே இருக்கின்றது.

நன்றி: ராஜ்குலன்
நன்றி: டான்க்லஸ்

அமரன்
27-05-2009, 08:05 AM
ஆயுதப் போராட்டத்தை விட சிக்கல் நிறைந்ததாக அறப்போராட்டம் இருக்கும்.

விகடன்
27-05-2009, 05:58 PM
பார்க்கப்போனால் இப்போதுதான் சர்வதேசம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறது.
பார்க்கலாம், தமிழர்களுக்கான விடிவுகாலம் எப்போது எப்படி பிறக்கப்போகின்றது என்பதை...