PDA

View Full Version : பஞ்சாபில் சீக்கியர் கலவரம்: கன்னியாகுமரி ரெயிலுக்கு தீவைப்பு; துப்பாக்கி சூடு-ஊரடங்கு உத்தரவ



கா.ரமேஷ்
25-05-2009, 12:15 PM
நன்றி: மாலைமலர்

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள குருத்வாராவில் நேற்று சீக்கியர்களின் இரு பிரிவுக்கு இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டனர். கத்திக் குத்தும் விழுந்தது.இரு தரப்பிலும் 30 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் நிலை கவலைக்கிடமாக இருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் ராம்நந்த் (56) என்ற சீக்கிய மத குரு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பஞ்சாபில் உள்ள சீக்கியர்களிடையே நேற்று பதற்றம் ஏற்பட்டது. சண்டிகார், ஜலந்தர் நகரங்களில் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு நகரங்களிலும் பாதுகாப்புக்கு துணை நிலை ராணுவம் வரவழைக்கப்பட்டது.

ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் ஜலந்தர் நகரில் வன்முறை அதிகரித்தது. கடைகள் மீது கல்வீசப்பட் டது. வாகனங்கள் அடித்து நொறுக்கி தீ வைக்கப்பட்டன. சீக்கியர்கள் கும்பல், கும்பலாக தீ வைப்பில் ஈடுபட்டதால் ஜலந்தர் நகரில் நேற்றிரவு பெரும் கலவரம் மூண்டது.

நவன்சாகர், ஹோசியர்பூர் பகுதிகளில் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் ஜலந்தர்-சண்டிகர், ஜலந்தர் - பக்வாரா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

நகோதர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் திரண்டு வந்து போலீஸ் மீது கல்வீசி தாக்கினார்கள். போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது. ஜலந்தர் ரெயில் நிலையமும் கல்வீசி தாக்கப்பட்டது.

ஒரு ஏ.டி.எம். தீ வைத்து எரிக்கப்பட்டது. ரெயில்கள் தாக்கப்பட்டதால் அமிர்த சரசுக்கு சென்று கொண்டிருந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஜலந்தரில் நிறுத்தப்பட்டன.

சீக்கியர்களில் தலித் இன அமைப்புகளும், தேராசச்கந்த் ஆதரவாளர்களும் கலவரத்தை பெரிய அளவில் நடத்தினார்கள்.

வியன்னாவில் கொல்லப்பட்டது தேரா இன சீக்கிய மத குரு என்பதால் தேரா இனத்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

நள்ளிரவைத்தாண்டியும் கலவரம் ஓயவில்லை. மக்கள் வெளியில் வர பயந்து வீடுகளில் முடங்கினார்கள். கடைகளை உடைத்து சூறையாடுவது அதிகரித்தது.

இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த ஜலந்தர் மாவட்டம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன் முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத்தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் அமைதி காக்குமாறு பஞ்சாப் முதல்- மந்திரி பிரகாஷ்சிங் பாதல் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜலந்தர் முழுக்க முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கலவரம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் மத குரு சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பஞ்சாபில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஒரு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று பஞ்சாப் முழுக்க பதற்ற நிலை ஏற்பட்டது. இன்று காலை ஜலந்தரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லம்பிரா கிராமத்தில் கலவரம் வெடித்தது.

அந்த சமயத்தில் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் சுல்ரா போலீஸ்கார்கள் அணிவகுக்க வந்து கொண்டிருந்தார். அவரது காரை கலவரக்காரர்கள் வழிமறித்து தாக்கினார்கள். போலீஸ் சூப்பிரண்டு சரப்ஜித் சிங்கின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

நிலைமை சுட்டுக்கடங்காமல் போகவே துணை நிலை ராணுவத்தினரும் போலீசாரும் 20 ரவுண்டு சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதற்கிடையே சீக்கியர்களின் கலவரம் பஞ்சாப் முழுக்க பரவி அரியானா மாநிலத்தையும் தொட்டது. அந்த 2 மாநிலங்களிலும் கிராம அளவிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பெண்களும் கையில் கம்பு எடுத்து வந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

மக்சூடா எனும் ஊரில் போலீஸ் நிலையம் எரிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின.

ஜலந்தர் தவிர அம்பாலா, பாட்டியாலா, லூதியானா நகரங்களிலும் இன்று காலை பெரிய அளவில் கலவரம் வெடித்தது. ஜலந்தர், அமிர்தசரசில் இன்று காலை பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கலவரம் காரணமாக ஜம்முதாவி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜலந்தர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கலவரக்காரர்கள் அந்த ரெயிலுக்கு தீ வைத்தனர். இதில் 4 பெட்டிகள் எரிந்து நாசமானது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. பக்வாரா எனும் இடத்திலும் ஒரு ரெயிலுக்கு தீவைக்கப்பட்டது. சாலைகளில் மரங்களை வெட்டிப்போட்டுள்ளனர்.

சாலை நெடுக டயர்களை கொளுத்தி போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் பஞ்சாபில் உள்ள பக்வாரா நகரிலும், ஹோசியர்பூர் நகரிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாட்டியாலா நகரில் இன்று காலை 2 பஸ்களை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலைத்தனர்.

பஞ்சாப், அரியானாவில் கலவரம் பரவி உள்ளதால் முக்கிய நகரங்களில் பதற்றம் நீடிக்கிறது. சண்டிகாரில் உச்சக்கட்ட பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அமைதி காக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலவரம் பரவுவதை தடுப்பதற்காக வன்முறை காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று தொலைக்காட்சிகளுக்கு பஞ்சாப், அரியானா அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி தலைவர் அவ்தார்சிங் கல வரத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், சீக்கிய மதக்குரு ஆஸ்திரியாவில் கொல்லப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக ஆஸ்திரிய நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டு முழு விபரமும் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

சீக்கிய மத குரு கொல்லப்பட்டதற்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

//////இது போன்ற கலவரங்களை அடக்காமல் என்ன செய்கிறீர்கள் மத்திய அரசே?.உங்களுக்கு சீக்கிய மதகுரு தலைவர் இறந்தால் இரங்கள் தெரிவிப்பீர்கள்(அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு இறந்ததற்கே இப்படி இரங்கல்).ஆஸ்திரியா இந்தியவிலா இருக்கிறது அதன் இறையாண்மை கெட்டு விடாதா?. எங்கள் 2 லட்சம் மக்களை கொன்றாலும் இறையாண்மை என்பீர்கள் நல்ல கொள்கைகள் மத்திய அரசுக்கும் மனம்கெட்ட தமிழனுக்கும்....

இன்பா
25-05-2009, 02:53 PM
என்னங்க அவனுக்கு அவன் பிரச்சனை தான் முக்கியம்
நமக்கு அப்படியா, கோட்டர் வேணும் காசு வேணும்...
பதவி வேணும்... என்னங்க பேச்சு பேசுறீங்க...!!!!

நமக்கு ஒரு பிரச்சனைன்னு போராடினா தேசிய பாதுகாப்பு சட்டம்,
அவன் ஒரு பிரச்சனைன்னு கலவரம் செஞ்சா அமைதி காக்க சொல்வது...?
இது நல்ல இருக்கு இல்லை...

சரிப்பா நான் சப்பிட்டேன், தூங்கப் போரேன்...

virumaandi
25-05-2009, 05:20 PM
அது சரி ரமேஷ்..
கடைசியில் நீங்கள் யாரை திட்டி இருக்கிறீர்...
மத்திய அரசை..?? (தமிழ் நாட்டினில் கலவரம் நடந்தாலும்...???)
மிக சரி தான்..
அங்கே நடக்கும் மானில அரசு..??

அதே இங்கே நடந்தால் இங்க இருப்பவனே.. பல கருணாக்களாக இருப்பான்...

பாரா பஜே ந்னு சீக்கியர்கலை சொன்னது சரியாதான் இருக்கும்..

இன்ரைக்கு அல்ல பல முறை சொன்னதுண்டு..
சட்டம் ஒழுங்கு.. கலாசாரம் எல்லாம் தென்னிந்தியாவிற்கு தான்..
வட இந்தியனுக்கு இல்லை..

கா.ரமேஷ்
26-05-2009, 05:13 AM
தோழருக்கு,
இங்கே நான் ஏன் மத்திய அரசை குறை சொல்லி இருக்கிறேன் என்றால் புதிதாக பதவியேற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஆஸ்திரியா சம்பவத்திற்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.பிரதமரும் வருத்தம் கூறியிருக்கிறார்.சீக்கியர்களுக்காக வருத்தம் தெரிவிப்பதையோ ஆதரவு தெரிவிப்பதையோ குறைசொல்ல வில்லை அந்த கரிசனமும் ஆதரவும் என் இன மக்கள் அழியும்போது இல்லாதது ஏன்?

தவிற அங்கே இதுவரை துப்பாக்கி சூடு, ரயில் எரிப்பு ,பேருந்து எரிப்பு கலவரம் என வன்முறை தலைவிரித்தாடுகிறது இதுவரை தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற வகையில் ஏதாவது செய்திருக்கிறார்களா? இது எல்லாம் இறையாண்மையை குலைக்கின்ற செயல் இல்லையா?(தமிழ் நாட்டில் அப்படி இல்லையே)

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.
///சட்டம் ஒழுங்கு.. கலாசாரம் எல்லாம் தென்னிந்தியாவிற்கு தான்..
வட இந்தியனுக்கு இல்லை..//