PDA

View Full Version : பிரபாகரன்: திட்டமிட்டு பரப்பப்படும் ‘செய்திகள்’!



Honeytamil
25-05-2009, 04:05 AM
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது மீடியா பயங்கரவாதம்.prabhakaran1

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம்.

அதற்கு முன் இப்போது வரும் ‘புதுப்புது மரணச் செய்திகள்’ குறித்து, நிஜமான தமிழ் உணர்வாளர் என அனைத்துத் தமிழர்களும் பாரபட்சமற்று நம்பும் பழ நெடுமாறன், நம்மிடம் கூறியதை இங்கே பதிவு செய்துவிடுகிறோம்.

“தலைவர் பிரபாகரன் வீர மரணம் அடைந்துவிட்டதாக இப்போது செல்வராஜா பத்மநாதன் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி இடம்பெற்ற கடும் போரில் தீரத்துடன் போரிட்டு பிரபாகரன் வீரச் சாவை தழுவியதாக அவர் இன்று (மே 24) குறிப்பிட்டுள்ளார்.

கவனிக்கவும்… கடந்த 19-ம் தேதியன்று இதே பத்மநாதன் தனது பேட்டியில், ‘சற்று முன்னர்தான் பிரபாகரனுடன் பேசினேன். அவர் நலமுடன், பாதுகாப்பாக உள்ளார்’ என்று கூறியிருந்தார். எங்களைப் போன்ற உணர்வாளர்களிடமும் இதையே சொன்னார்.

எனில் 17-ம் தேதி வீரச் சாவடைந்த தலைவருடன் 19-ம் தேதி பேசியது எப்படி?

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை.

மேலும் புலிகளின் அனைத்துலக உளவுத் துறைப் பொறுப்பாளர் அறிவழகனும் தலைவர் நலமுடன் இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.

எனவே தொடரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் இருப்பது அவசியம். உண்மை என்னவென்பது புலிகளின் தளபதிகள் மூலமாகவே வெளியில் வரும். இந்த நிமிடம் வரை அவர் நலமுடன் இருக்கிறார் என்பதே உண்மை.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன… உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால், அதை இத்தனை நாட்கள் கழித்து பத்மநாதன் கூறியதன் அவசியமன்ன?” என்றார் அவர்.

இது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பழ நெடுமாறன் மற்றும் வைகோ வெளியிட்டுள்ளனர்.

எனவே உறவுகளும் உணர்வாளர்களும் சற்றுப் பொறுமையுடன் காத்திருக்கவும்… உண்மை விரைவில் வெளியில் வரும்.

praveen
25-05-2009, 04:11 AM
நண்பரே, உலகம் முழுதும் உள்ள தமிழர்களை அமைதிபடுத்துவதற்காக மற்றும் பிராபாகரன் நிச்சயம் இறந்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், ஒரு பொய்யை சொல்லி இருக்கலாம். பின்னர் எப்படியும் அது உண்மையாகி விடலாம் என்று நினைத்திருந்திருக்கலாம்.

பின்னர் இதுவரை தொடர்பு கொண்டது, தகவல் பெற்றதன் அடிப்படையில் அவர் இப்போது தெரிவித்திருக்கலாம். கடைசி (17ந்தேதி) நாட்களில் இலங்கை ராணுவம் முற்றுகையிட்ட நிலையில் தகவல் தொடர்பு மற்றும் நேரில் சம்பவத்தை கண்டவர் என அனைத்தும் அழிக்கப்பட்டிக்கலாம்.

எனவே உண்மைநிலை என்ன என்ற இலங்கை ராணுவத்திற்கு மட்டுமே தெரியும். ஆனால் அவர்கள் எப்போதாவது தான் உண்மை பேசுவார்கள், இந்த போரில் பாதிக்கு மேல் பொய் பேசியே (அல்லது உண்மையை மறைத்து) வந்துள்ளனர் என்பது எல்லோரும் அறிந்ததே.

பழ.நெடுமாறன் அவர்களும் வைகோ வும் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர்களா அல்லது தகவல் தொடர்பு அதிகாரிகளா?. இரண்டும் இல்லை பற்றாளர்கள். அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களால் என்ன 99% தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தமிழீழமும் போய் பிரபாகரனும் இல்லை என்பதை ஒருசேர ஏற்றுக்கொள்ளா புத்தி மறுக்கிறது.

ஆனால் உண்மையிலே, பிரபாகரன் இறந்திருப்பதனால், அவர் கடைசிவரை களத்தில் இருந்து போர் புரிந்து வீரச்சாவு அடைந்த மாவீரன் என்று தெரிகிறது.

இதற்கிடையில் அதிகாரப்பூர்வமற்ற நான் இதுவரை பல பத்திரிக்கைகள் (குறிப்பாக ஜூனியர் விகடன்) மூலம் அறிந்தவரையிலான ஒரு செய்தியாக, சக தளபதிகள் சரண் அடைந்தால் பிரபாகரன் தப்பிக்க அனுமதி அளிக்கப்படும் என்ற இலங்கை ராணுவத்தின் கூற்றை நம்பி பிராபாகரன் தப்பிக்க முயன்ற போது, இலங்கை ராணுவம் வஞ்சகமாக அந்த வேனை ராக்கெட் தாக்குதல் நடத்தி அதில் உள்ளவர்களை தாக்கியதாகவும், பின் அதே போல சரணடையவந்தவர்களிடம் இருந்த இலங்கை ராணுவ வீரர்களை பெற்றதும் புலிகளின் தளபதிகளை சுட்டு கொன்றதாகவும் தெரிகிறது.

சரணடைவது, இறுதி நேர தப்பித்தல் என்பதை மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் இதனை புலிகள் தரப்பும், சரணடைய வந்தவர்களை நயவஞ்சமாக கொன்றதை சொன்னால் சிக்கல் வரும் என்று இராணுவ தரப்பும் மெளனமாக இருக்கிறது.

ஆனால் இதனை கேள்விப்பட்ட பத்திரிக்கையாளர்கள் பெயர் சொல்ல வேண்டாம் என்று சொல்லியே மற்ற பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்ததாக தெரிகிறது

- இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்றும் தெரியவில்லை

Honeytamil
25-05-2009, 04:14 AM
இந்த காணொளி வலு சேர்க்கும் என்று நினைக்கிறேன்

இது எதை குறிக்கிறது ? இது 18 ஆம் திகதி காலையில் எடுக்கப்பட்ட காணொளி. இதனைத்தான் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது சத்தமில்லாமல்.
ஆனால் இதனைப்பார்க்கும்போது விளங்குகிறது அப்போதுதான் கொன்றிருக்கிறார்கள்.
யார் இது ? ஏன் ? எப்படி ? என்ன நடந்தது ?
இதற்கும் விளக்கம் சொல்வாரா பத்மநாதன் ?

http://unmaimukam.blogspot.com/2009/05/blog-post_24.html

Honeytamil
25-05-2009, 05:23 AM
மனம் நம்ப மறுத்தாலும் தலைவர் உண்மையிலேயே வீர மரணம் அடைந்தால் நாம் அவருக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும் . எதையுமே அந்த காலங்களிலே நிறை வேற்ற வேண்டும் . எம் தலைவனுக்கு வீர வணக்கம் செலுத்த நாதியில்லை என நினைக்க தோன்றும் .

அமரன்
25-05-2009, 06:13 AM
பெரும்பான்மைத் தமிழரின் அபிமானம் வென்றவராக பிரபா இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் வரைக்கும் தமிழனுக்கு தீர்வு கிடைக்காது என்பதை அவரே உணர்ந்துள்ளதாகவே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடே பிரபாவின் வீரமரணம்.

வன்முறைப் புலிகள் ஒழிந்து விட்டார்கள். பிரபா மாண்டு விட்டார். தமிழனுக்கு இலங்கையில் பிரச்சினை என்று உலகுக்கும் சரி.. ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் சரி.. அறிந்து விட்டார்கள். எனவே இனி என்ன செய்வார்கள்....?

Mano.G.
25-05-2009, 08:19 AM
அவர் சாகவில்லை,
இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிரார், எல்லோர் மனதிலும்,
உயிருடனோ இல்லை உயிரற்ற நிலையிலோ,
உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி,
இருந்தாலும் இம்மாதிரி செய்திகள்
சமயங்களில் பாதுகாப்பு காரணங்களால் வெளியிடுவதும் உண்டு

ராஜா
25-05-2009, 09:59 AM
பிரபாவின் தற்போதைய நிலைகுறித்து, வைகோ, பழ.நெடுமாறன் போன்றோர் உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.

anna
25-05-2009, 10:08 AM
தலைவர் பிரபாகரன் போரில் வீரமரணம் அடைந்து விட்டார் என்பது உண்மைதான். அவரின் வீரமரணத்தை சர்வதேச விவகார பிரிவு பொறுப்பாளார் செல்வராஜ் பத்மநாபன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.அதன் சுட்டி கீழே உள்ளது. அன்னாரின் வீரமரணத்திற்கு தமிழர்களாகிய நாம் வீரவணக்கம் செலுத்துவோம். அவரின் இலட்சியத்தை நாம் நெஞ்சில் நிறுத்தி பாடுபட வேண்டும்.

http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1