PDA

View Full Version : குழந்தை ஓவியம்



ஆதவா
23-05-2009, 02:18 PM
மலைமுகடுகளுக்கிடையே
சூரியன் ஒளிந்திருப்பதாய்
வானம் குறுகி நிலப்பரப்பில்
பொதிந்திருப்பதாய்
தமிழின் எழுத்தொன்று
தலைகீழாய் அந்தரத்தில் தொங்குவதாய்
திரிந்த கயிற்றின் முனை
கீற்றுகளாய் படிந்திருப்பதாய்
அந்த ஓவியம் வரையப்பட்டிருக்கிறது
நல்லாயிருக்கா டாடி என்று
நீட்டுகிறாள்
வெரிகுட் என்று சொல்லியபடி
புன்னகைக்கிறார் கண்ணில்லாத அப்பா.

பாரதி
23-05-2009, 03:17 PM
நன்றாக இருக்கிறது ஆதவா.

குழந்தையைத் தீட்டிய அப்பா, குழந்தை தீட்டிய ஓவியத்தைப் பாராட்டியதில் வியப்பொன்றுமில்லை. தந்தையிடம் தான் வரைந்ததைக் குழந்தை காட்டுவதை எண்ணி அழகிய வார்த்தைகளில் வண்ணமிட்ட உங்கள் கவிதையும் ஓவியமே!

பாராட்டுகிறேன் ஆதவா.

ஓவியா
24-05-2009, 12:02 AM
சில நேரங்களில் சொல்லாத வார்த்தைக்கு விலை ஏது!!
அதே சமயம் இப்படி கண்ணில்லாத அப்பா சொல்லிய வார்த்தைக்கும் விலையேது!!

கவிதை ரொம்ப நல்லாயொருக்கு. இப்படியெல்லாம் சிந்திக்க என்னால முடியலையே என்ற பொறாமையுடன் பாரட்டுகிறேன்.

ஆதவா
24-05-2009, 12:57 AM
மிக்க நன்றி பாரதி அண்ணா... அப்பாவுக்கு எப்பவுமே குழந்தை பெரியதுதான்...

மிக்க நன்றி ஓவியா அக்கா.. ரசித்து படித்தமைக்கு.....

ஓவியா
24-05-2009, 01:06 AM
ஆமாம் உன் வலைபதிவில் படித்துள்ளேன் :icon_b:

அமரன்
25-05-2009, 10:53 AM
காட்சிகளைக் கண்முன் நிறுத்துவதில் வென்ற சொற்றொடர்கள் தம்மீது படிபங்களைப் படிய வைக்கவும் தவறவில்லை.

இந்தக் கவிதைக்கு உள்ளர்த்தம் கற்பிக்கிறது என்னிலை.

தாக்கமோ அதீதம். தாகமும்தான்.

தந்தையின் ஞானத்திருட்டி பிரம்மிக்க வைக்கிறது.

குழந்தையின் நெருக்கம் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒருவரை மிகவும் பிடித்து விட்டால் அவரது குறைகள் தெரிவதில்லை..

ஏதோ ஒரு உணர்வு இழை கட்டி இழுப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

மனமாரப் பாராட்டுகிறேன் ஆதவா!

இளசு
30-06-2009, 07:03 PM
மனவானம் அன்புநிலப்பரப்பில் அடங்கும்தானே..


அமரன் சொன்னதுபோல் இக்கவிதையின் தாக்கம் - அது ஏற்படுத்தும் தாகம்.. அதிகம்!

அன்புமொழிகள் உப்புநீர் போல -
அருந்த அருந்த தாகம் அதிகரித்தபடியே...



வாழ்த்துகள் ஆதவா...

நாகரா
06-07-2009, 10:11 AM
குழந்தை இருதயம் வரைவது
ஊனங்கள் தாண்டித்
தந்தையைச் சேரும் அற்புதத்தைப்
படம் பிடிக்கும் அருங்கவிதை

வாழ்த்துக்கள் ஆதவா

சசிதரன்
06-07-2009, 02:04 PM
மிக அழகிய கவிதை ஆதவா...:)

ஆதவா
05-09-2009, 02:43 PM
அமரன், இளசு, நாகரா, சசிதரன்....

மிக்க நன்றிங்க..