PDA

View Full Version : அலைகள்



கீதம்
22-05-2009, 11:17 PM
அளவற்ற உன்
அன்புப் பிரவாகத்தைப் போலவே
பாய்ந்தோடி வந்து
பாதந்தழுவுகின்றன,
பால் வண்ண அலைகள்!
உன் நினைவுகளில் சிக்கி,
பரவசப்பட்டு நிற்கும் பொழுதிலே,
காலடி மண்ணைப் பறித்து,
என்னை வேரற்று வீழச்செய்து,
பரிகசித்துச் செல்கின்றன,,
அலைகளும், உன் நினைவுகளும்!

ஆதவா
23-05-2009, 06:44 AM
வணக்கம் கீதம்...

உங்கள் கவிதை சொல்லும் செய்தி அலாதியானது. சற்றே பழைய கருத்தென்றாலும் கூட. கவிதை வடிவம் நன்றாக இருக்கிறது. இன்னொரு கோணத்தில் யோசித்தால், படிமம் படிந்திருப்பதாகவும் இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

முதல் வரி இறுதி வரியோடு இணணயும் பொழுது முரணாகிறது. கொஞ்சம் கவனித்து எழுதியிருக்கலாம்.

கவிதைக்கான எனது விமர்சனம் :
அலைகளிலிருந்து சற்று தள்ளியே நில்லுங்கள்.

அன்புடன்
ஆதவா

அமரன்
23-05-2009, 09:40 AM
பாதக் குறுகுறுப்பு..
நரம்போடும் சிலிர்ப்பு.
ஆரத் தழுவும் காற்று..

எல்லாமே நினைவில் வந்தது
அலையடித்த கணத்திலேதான்..

அலையே அடி..
அடிக்கடி அடி..
அடியே அலை..
அடிக்கடி அலை..

கரையில்தான் இருக்கிறது
கலங்கரை..

ஆதவா
23-05-2009, 10:27 AM
கரையில்தான் இருக்கிறது
கலங்கரை..

அபாரம் அமரன்.... இவ்விரு வரிகளே பொருத்தமான விமர்சனம்

ஓவியா
24-05-2009, 12:55 AM
அளவற்ற உன்
அன்புப் பிரவாகத்தைப் போலவே
பாய்ந்தோடி வந்து
பாதந்தழுவுகின்றன,
பால் வண்ண அலைகள்!

இந்த ஆரம்பம் ரொம்ப சுகமாக இருக்கின்றன

உன் நினைவுகளில் சிக்கி,
பரவசப்பட்டு நிற்கும் பொழுதிலே,
காலடி மண்ணைப் பறித்து,
என்னை வேரற்று வீழச்செய்து,
பரிகசித்துச் செல்கின்றன,,
அலைகளும், உன் நினைவுகளும்!

அப்பாடா என்ன ஒரு ரசனை.. ரசிக்கிறேன்


கீதம், எனக்கு முன்பே இரண்டு கவிப்புலவர்கள் பலமாக விமர்சித்து விட்டதால், எனக்கு பேசவே வரலே :D

இருந்தாலும் பழைய கஞ்சிய சூடா கொடுத்து ரசிக்க ருசிக்க வைத்தமைக்கு நன்றி.

தொடர்ந்து எழுதுங்கள், எழுத்துலகில் எதிர்காலம் சிறப்பாக இருக்கலாம்

வசீகரன்
25-05-2009, 04:53 AM
அளவற்ற உன்
அன்புப் பிரவாகத்தைப் போலவே
பாய்ந்தோடி வந்து

என்னை வேரற்று வீழச்செய்து,
பரிகசித்துச் செல்கின்றன,,
அலைகளும், உன் நினைவுகளும்!

தெள்ளிய வரிகளில் அழகாக மனதை வருடுகின்றன கவிதை
பாராட்டுக்கள் கவிஞரே....!!!