PDA

View Full Version : அவஸ்தை



ஆதவா
22-05-2009, 05:09 AM
முகங்களில் பூசிக்கிடக்கிறது
அழுகையின் பிரதிபலிப்பு
பெண்களுக்கு நடுவே
ஊர்ந்து செல்லுகிறது
சுரம் குன்றிய ஒப்பாரி
கனத்த விசும்பலுக்கிடையே
சிக்கித் தவிக்கிறது சொற்கள்
உதிர்ந்து விழுகிறது
வழியெங்கும் சேகரித்த
இதழின் இசைக்குறிப்புகள்
கவனிப்பாரற்று கடந்து செல்லுகிறது
வெறுமையின் நிழல்
யாராவது நீரருந்தச் சொல்வார்களாவென
வாசற்படியில் அமர்ந்திருக்கையில்
சம்பந்தமில்லாமல் தோன்றுகிறது
ஒரு கவிதைக்கான கரு.

பாரதி
22-05-2009, 11:43 AM
எங்கும் இழப்பென்ற செய்தி செவிகளில் அறையும் போது, ஒரு கரு உருவானதை அறியும் போது உண்டான மகிழ்வையும் மீறி, அதை படைக்கவியலா வேதனையும் எழுத்துகளில் தெறிக்கிறது.
நன்று ஆதவா.

ஆதவா
22-05-2009, 11:54 AM
மிக்க நன்றி அண்ணா... எல்லோரிடத்திலும் (படைப்பாளிகள்) ஏற்படுவதுதானே??

மன்றத்தில் அப்படி யாராவது சங்கடமான சூழ்நிலையில் இருந்தால் அதைத் தெரியப்படுத்திக் கொள்ளச் செய்யலாமா?? (ஒரு திரி ஆரம்பித்து.)

அமரன்
25-05-2009, 01:21 PM
ஆதவா..
உங்க வீட்டு வாசலுக்கு எதிர்த்தாப்ல மரம் ஏதாவது நிக்கும் பாருங்க. அங்கின ஏதாச்சும் குருவி கிருவி உட்காந்திருக்கும். கொஞ்சம் தள்ளி கரன் கம்பத்துல ஏதாச்சும் காக்கா உக்காந்து செட்டைக்குள் அலகு விட்டு சொறிஞ்சிட்டு இருக்கும் பாருங்க. இன்னும் இன்னும் நிறைய இருக்கும் பாருங்க. குறிப்பாத் தொலைவில ஒருத்தன் வாசல் கூட இல்லாமல் தவிச்சுட்டு இருப்பான் பாருங்க. எல்லாம் தெரியுதா?

சும்மா சொல்லக் கூடாது.. உங்கள் மனக்கண்ணாடி அச்சொட்டாய் விம்பம் காட்டுது.