PDA

View Full Version : தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்கள்!-புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதலHoneytamil
21-05-2009, 05:40 AM
http://i39.tinypic.com/14wq2s3.jpg

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம்.

புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்

5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்

புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

-நக்கீரன்-
-தமிழ்வின்-

//நக்கீரனை ஆயிரம் மடங்கு அல்ல, இலட்சம் மடங்கு நம்பலாம் என்பதுதான் கடந்த கால வரலாறு. //

இன்பா
21-05-2009, 05:57 AM
நிறைய மேற்கோள் காட்டி இது பிரபாகரன் இல்லவே இல்லை என்று உறுதியாகிவிட்ட நிலையில்...

இச்செய்தி சோகத்திலும் சிறிது மகிழ்ச்சி கொடுக்கிறது...

Honeytamil
21-05-2009, 06:21 AM
1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........
2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......
3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டு தான் செத்தவரோ?
4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......
5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............
6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....
7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....
8. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........
9.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????

மேலும் பூச்சாண்டி காட்ட விரும்புபவர்களுக்கு
கீழேயுள்ள கடையில் முகமூடிகள் வாங்கலாம்.....
http://www.maskworld.com/english/products/masks/latex-masks--110/real-face-masks--1102

Honeytamil
21-05-2009, 06:26 AM
19 ஆம் தேதி அதிகாலை முள்ளிவாய்க்கால் பஸ்டாண்ட் அருகில் 3ஆவது தெருவில் ஒரு வீட்டில் பிரபாகரன் ஒளிந்து இருப்பதாக ஒரு SMS எனக்கு வந்தது...உடனே நான் அந்த SMS ஐ 58, 59 ஆவது பிரிவை சார்ந்த இந்திய sorry இலங்கை வீரர்களுக்கு அனுப்பினேன் உடனே அவர்கள் பிரபாகரனை பிடிக்க கிளம்பினார்கள் நாங்கள் அப்படியே சத்தம் வராமல் கிளம்பினோம் வழியில் எங்களை யாரும் சந்தேகபடாமல் இருக்க , தாடி, மச்சம் , நரைச்சமுடி போன்றவற்றை வாடகைக்கு எடுத்துகொண்டு செடப் செய்து கொண்டு பிரபாகரன் இருப்பிடம் நோக்கி கிளம்பினோம்..மணி 6.30 ஆனது..SMS தகவல் படி 6.45.க்கு பிரபாகரனுக்கு பல் விளக்கும் பழக்கம் இருப்பதால் வீட்டின் பின் புறம் காத்திருந்தோம். 6.45 ஆனவுடன் பிரபாகரன் - பேஸ்ட், பிரஷ் - உடன் வெளியே வந்தார்...பல்விளக்கி கொண்டு .அப்போது எங்கள் கமாண்டர் நாயாகராசமரசிங்கே தன் பையில் இருந்த பிரபாகரன் படத்தை எடுத்து உறுதிபடுத்தி கொண்டார்...காரணம் பிரபாகரன் லுங்கி , பணியனோடு தான் வந்தார் எங்களிடம் இருந்தது மிலிட்டரி உடை போட்டோ ..so அதனால் சிறிது நேரம் குழப்பம் நிலவியது..அப்போது பிரபாகரன் பல்விளக்கி முடிந்த உடன் ஷேவ் செய்ய ஆரமித்தார்..அப்போது அவர்தான் பிரபாகரன் என்று மூண்டும் உறுதி படுத்தி கொண்டோம்....திடீரென எங்கள் வீரருக்கு தும்மல் வர..ஹ்ச்..ஹச் என்று இரண்டு தடவை தும்மினார்...உடனே எங்களை கண்ட பிரபாகரன் லுங்கியோடு ஓட ஆரமித்தார்...நாங்களும் விரட்டினோம் அப்போது எதிரே வந்த பொட்டு அம்மான், சூசை இருவரும் ஒரு dress செட் கொண்டு வந்து கொடுத்தனர் பிரபாகரனும் அதை மாட்டி கொண்டு ஓடினார் ..ஓடினார்..நாங்களும் விரட்டினோம்..விரட்டினோம்...அப்போது அந்த வழியாக "ஆய்" போக வந்த 57 வது டிவிசனர் இதை கண்டனர் ..மிளகாய் பொடியை எடுத்து கண்ணில் தூவினர்..அதில் ஒரு வீரர் துப்பாக்கி கட்டையை திருப்பி வைத்து ஓங்கி ஒரே அடி பிரபாகரன் தலையில் அடித்தார் ( ஒரு வேளை இவர் கப்பற்படையில் பணியாற்றி இருப்பாரோ ) ..அய்யோ..என்று கத்தி கொண்டு தரையில் ரத்தத்துடன் சாய்ந்தார் பின்பு தன் தலைவன் விழுந்ததை கண்டு சூசையும், பொட்டு அம்மானும் ராணுவத்தினரின் துப்பாக்கியை வாங்கி தாங்களே தங்கள் தலையில் அடித்து கொண்டு விழுந்தனர்....பிரபாகரனை கொன்று தமிழ்துரோகியாக எந்த தமிழனும் ஆகவில்லை..அந்த பொறுப்பையும் நாங்களே ஏற்று கொண்டோம்...பின்பு அனைத்துல ஊடகங்கள் கேட்டு கொண்டதற்க்கு இணங்க

அவர்களை சோதனை இட்டதில்..
கைப்பற்ற பட்டவை
புலிமார்க் சீயக்காய் - 3 பாக்கெட்
புலி(ளி) சாப்பாடு - 12 பொட்டலம்
இரட்டை புலி தீப்பட்டிகள் - 5
இவையே உறுதி செய்ய போதும் என்றும் தெரிவித்தனர்

இப்படிக்கு காமெடி செய்திகள் தரும் ஆமி.லங்கா

ஷப்பா ஒரு கதை எழுதனும்னா ராஜேஷ்குமார எல்லாம் பாக்க வேண்டியது இல்லை....சிங்கள ராணுவத்தில வேலை செஞ்சாலே போதும் இல்லனா அவங்க website படிச்சாலே போதும்...

கா.ரமேஷ்
21-05-2009, 07:09 AM
சற்றுமுன் தான் நானும் செய்தியை படித்தேன்.மகிழ்ச்சி விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என நம்புவோம்.அவர் இல்லை என்ற புரளிக்கே சிங்களர்கள் செய்ய தொடங்கிய அட்டூளியங்கள் பல,இவர்களா சமராக தமிழ்மக்களை பாவிக்க போகிறார்கள்.இப்போது கிளிபிடித்திருக்கும் அந்த நாடக கம்பெனி காரர்களுக்கு.

நேசம்
21-05-2009, 07:16 AM
உண்மையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி.ஆனால் தலைவர் உடனடியாக தன்னை வெளிக்காட்ட கூடாது.அப்போதான் அத்வாசிய தேவைகளை ஈழத்தமிழர்களுக்கு நிறைவெற்ற உலக நாடுகள் வற்புறுத்த ஆரம்பிக்கும்.

anna
21-05-2009, 07:30 AM
இந்த செய்தி மிகப்பெரிய சோகத்திலும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. உயிரோடு இருந்தால் போதும்.

தூயவன்
21-05-2009, 07:47 AM
மிகவும் நன்றாக உள்ளது உங்களுக்கு மட்டும் தான் க்ரபிச் தெரியுமா .. நாங்க உங்களுக்கு கிங்கு .. நன்றி கோபால் அண்ணா

சிவா.ஜி
21-05-2009, 07:50 AM
உயிரோடு இருந்தாலே போதும் நேசம் சொன்ன மாதிரி உடனடியாக மக்கள் முன் தோன்றாமல் இருக்க வேண்டும்.

இன்பா
21-05-2009, 09:18 AM
உண்மை என்று தான் நினைக்க தோன்றுகிறது...

உண்மை என்னும் பட்சத்தில், சில காலம் மறைந்து பலம் சேர்ந்து சிலர் டங்குவார் கழட்டுவார்...

உதயா
21-05-2009, 11:51 AM
உண்மையாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி.ஆனால் தலைவர் உடனடியாக தன்னை வெளிக்காட்ட கூடாது.அப்போதான் அத்வாசிய தேவைகளை ஈழத்தமிழர்களுக்கு நிறைவெற்ற உலக நாடுகள் வற்புறுத்த ஆரம்பிக்கும்.

உண்மை. தமிழனுக்கு என்னதான் செய்து கொடுக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

Honeytamil
21-05-2009, 01:01 PM
மிகவும் நன்றாக உள்ளது உங்களுக்கு மட்டும் தான் க்ரபிச் தெரியுமா .. நாங்க உங்களுக்கு கிங்கு .. நன்றி கோபால் அண்ணா

நக்கீரனின் படங்கள் க்கிராபிக்ஸாக இருந்த்தாலும் செய்திகள் நூற்றுக்கு நூறு உண்மையானவை என கடந்தகாலங்களில் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Honeytamil
21-05-2009, 01:33 PM
தமிழனுக்கு எதிரானவர்களும் ஆப்பு அடிக்கப்பட வேண்டியவர்கள் (இதில் தழிழர்(?) சிலரும் அடங்குவத்தான் கவலைக்குரியது.)...

.............................................................................................

தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் நடந்தது இதுவாகவும் இருக்கலாம்...

சரத் பொன்(னயன்)சேகாவின் தொலைபேசி உரையாடல்...(உரையாடல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது...)

பொன்சே : நான் பொன்சே கதைக்கிறன்...

000 : சொல்லுங்க sir...

பொன்சே : எனக்கு அவசரமா நாலு ஐந்து body வேணும்...

000 : bodyயா...எதுக்கு...?

பொன்சே : நான் சொன்னத செய் man...

000 : நானே arange பண்ணனுமா...?

பொன்சே : ஆமா...

000 : உங்க பேரில் bill போடட்டா...?

பொன்சே : evidence நீயே create பண்ணுவா போல...no evidence man...

000 : எங்கே arrange பண்ண...?

பொன்சே : எங்கேயாவது சீக்கிறம் arrange பண்ணு...

000 : House of Fashion , No Limitன்னா okவா...?

பொன்சே : house of fashion , no limit...! என்ன man சொல்றா...?

000 : girls போடுற உள் bodyயதான சொல்றீங்க...?

பொன்சே : ஆமா...உங்க வீட்டு கொடியில் காயிறத எடுத்திட்டு வா...

000 : அது use பண்ணியிருக்கு பறவாயில்லயா...?

பொன்சே : you idiot...டேய்......
உங்கள எல்லாம் வச்சுகிட்டு...இந்தியாவும் உலக நாடுகளும் இல்லாட்டா என்ன வச்சு காமெடிதான் பண்ணியிருப்பீங்க...அப்புறம் எல்லோரும் சேர்ந்து ரூபவாகினியில் அசத்தப்போவது யாரு சிங்களத்திலதான் பண்ணிகிட்டு இருந்திருக்கவேணும்...(அதுவும் நல்லாத்தான் இருக்கும்...அதுல விஜயகாந்த் voiceல மிமிக்கிரி பண்ணி பாகிஸ்தான் தீவிரவாதிகள பிடிக்கிறமாதிரி...நீங்க புலிகள தீவிரவாதின்னு பொய் அறிக்கை விட்டு பிடிக்க வேண்டியதுதான)

நான் சொன்னது dead body man...!

000 : ooooo...sorry sir...

பொன்சே : சீக்கிறம் arrange பண்ணு...

000 : ஆண் bodyயா...? பெண் bodyயா...?

பொன்சே : ஆ.....gym
body...
ஐயோ...முடியல...இப்பவே கண்ணை கட்டுதே...

000 : கோபப்படாதீங்க...இப்ப உங்க plan புரிஞ்சு போச்சு...

பொன்சே : இப்பவாவது புரிஞ்சுதே...சீக்கிறம் bodyய ready பண்ணி முள்ளிவாய்க்கால் எடுத்துட்டு வா...
middle ageல ஒரு இரண்டு...கொஞ்சம் oldடா ஒரு இரண்டு...young ageல ஒன்று...

000 : ஏன் முள்ளிவாய்க்கால்...?கொழும்பில் வாய்க்கால் இல்லையா...?

பொன்சே : கொழும்பில் எங்க இருக்கு...?

000 : வெள்ளவத்த பாலத்துக்கு கீழ் ஓடுதே அது...

பொன்சே : ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம்தான்...எதுக்கு risk எடுத்துகிட்டு...

000 : எனக்கு risk எடுக்கிறதெல்லாம் rusk சாப்பிடுறமாதிரி...(உலக நாடுகள் ஆப்படிக்கிற உங்க areaவ பொத்தி மறைச்சுக்கிட்டதால எங்க ஆப்போட sharpபு புரியல...தனியா வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்...ஆப்பு)

பொன்சே : ஒரு வகையில பார்த்தா அதுவும் குட்டி யாழ்ப்பாணம்தான்...ஆனாலு களனி ஆறு கப்பு கொஞ்சம் overரா இருக்கு...அதால நான் சொன்ன இடத்துக்கு கொண்டுவா...வரும்போது ஒரு plastic surgeonஐயும் கூட்டிட்டு வா...

000 : அதை விட கிரபிக்ஸ்ல செய்யிறது நல்லம்ன்னு நினைக்கிறன்...

பொன்சே : do what i said man...

000 : ok sir...

(அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொல்லனுமா என்ன...!)

.............................................................................

(மறுநாள்...)

பொன்சே : என்ன man!...நாம விட்ட பீலா இப்பிடி ஆகிட்டுது...(தமிழன் என்ன கேனயனா?...எவ்வளவோ கண்டுபிடிச்சிட்டம்...இதை கண்டுபிடிக்கமாட்டமா...?)

000 : இதுக்குத்தான்...எதையுமே plan பண்ணிப் பண்ணனும்...plan பண்ணிப் பண்ணாட்டா இப்படித்தான் சொதப்பும்...

bitter luck...sorry better luck next time...

so....வதந்திகளை நம்பாதீர்கள்...இதற்கான பதிலை வரும் காலம் சொல்லும்...அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம்...


...[நாங்க அடிக்கிற ஆப்பு ரொம்ப ரொம்ப sharp-pu]...

praveen
21-05-2009, 01:59 PM
சீரியசான திரியை சிரிப்பாக்கிட்டீங்களே.

அறிஞர்
21-05-2009, 02:32 PM
செய்திகள் உண்மையாக இருக்கவேண்டும் என்பதே எம் விருப்பம்.....
தமிழருக்கு சம உரிமை.... விடிவுகாலம் விரைவில் பிறக்கவேண்டும்.

சூரியன்
21-05-2009, 03:57 PM
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் சந்தோசமே.
அவர் இருப்பது உறுதியாகும் வரை பதட்டமே நிலவும்.

உதயா
21-05-2009, 04:36 PM
இன்னு மாலை ஒரு செய்தி கேட்டேன். சிக்களவர்கள் இருக்கும் பகுதியில் இருந்த ஒரு தமிழ் குடும்பத்தினரின் வீட்டை அடித்து நொருக்கிவிட்டு அவர்கள் காணியையும் எடுத்துக்கொண்டு, வெறும் ஒரு லட்சம் மட்டும் கொடுத்து வேறு இடத்தில் இருக்கும் படி இலங்கை அதிகாரிகள் கூறியதாக ஒரு செய்தி. இப்போதே சிங்களவர்கள் அவர்களின் குணத்தை காட்ட துவங்கி விட்டார்கள்.

விகடன்
21-05-2009, 04:52 PM
இனிமேல் ஆயுதம் ஏந்திப் போராடுவதில்லை என்று சொல்லப்பட்டிருப்பதாகக் கேள்வி. ஆகையால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரை வைத்து இனிமேலும் தமிழ் இளைஞர் யுவதிகளை சித்திரவதயோ கொலையோ செய்யவேண்டாம் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன்.

புதியவன்
21-05-2009, 06:27 PM
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தமிழீழமே வெல்லும்"

தர்மம் என்றுமே அழிவதில்லை என்பதற்கு இதுவே சான்று.
இழ்ழத்துச் சொந்தங்களின் வலிகளை நாமும் பகிர்ந்து கொள்வோம். வான்படை கண்ட மறத்தமிழ் கூட்டம் மீண்டும் எழும், அதுவரை தளராது போராடுவோம்