PDA

View Full Version : செய்யவேண்டியது என்ன?அமரன்
20-05-2009, 10:52 AM
இலங்கையில் அரசியல் ரீதியிலான அதிகாரம் பகிர்வு அவசியம் என்கிறது அமெரிக்கா.

இராணுவத்தின் பிடியில் தமிழ் மக்கள் இருப்பதை அனுமதிக்க முடியாது என்கிறது ஐ"நா" மனித உரிமை அமைப்பு.

தமிழருக்கா சுயாட்சியை வழஙகாதவரை இலங்கைக்கு சுபீட்சம் இல்லை என்கிறது நோர்வே.

இந்நிலையில் இந்திய வெளியுறவு மந்திரியும் பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கை விஜயம் என்கிறது செய்திகள்.

எப்படிப்பார்த்தாலும் தீர்வு நோக்கிய பயணத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.

தீர்வின் தேவையை இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சிறிதும் பெரிதுமான இனவாதச் செயல்களும் அழுத்திச் சொல்கின்றன.

இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

எந்த உணர்சிக்கும் இடங்கொடாது சிந்தித்துச் செயல்படுவோமா..

தாமரை
20-05-2009, 10:59 AM
இலங்கை அரசின் வழியாகத்தான் உதவிகளை அனுப்பியாக வேண்டும் என இலங்கை வற்புறுத்துமா?

தாமரை
20-05-2009, 11:06 AM
இந்திய அரசு 500 கோடி ரூபாய் அறிவித்து ஏற்கனவே 100 கோடி ரூபாயை அனுப்பி விட்டதாகவும் அதில் 45 கோடி செலவழித்திருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. தமிழக அரசு 25 கோடி ரூபாய்களை இலங்கைத் தமிழர் நலத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும் தெரிகிறது...

ஆயிரக்கணக்கான கோடி நிதியுதவி வரப்போகும் பட்சத்தில் அவை உண்மையாக செலவழிகிறதா என்பதில் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.

இன்பா
20-05-2009, 11:08 AM
ஒன்றை நன்றாக மனதிற் கொள்ள வேண்டும், அரசியல் ரீதியான தீர்வு என்று எதை சொல்கிறார்கள்? சம உரிமை வழங்குவதையா?, அது வாய்ப்பற்றது. சம உரிமை வழங்கப் படப்போவதில்லை. இதை நன்குணர்ததினாலே தானே பிரபாகரன் ஆயுதம் எடுத்தது.

இனி கேட்பாரற்ற நிலை அவ்வளவே?

இன்பா
20-05-2009, 11:12 AM
500 கோடிகளை கொண்டு எப்படி உதவிகள் செய்வது?

யாரிடம் அப்பணம் ஒப்படைக்கப் படுகிறது?
என்னென்ன உதவிகள் செய்வதாக திட்டம்?

இதை முதலில் அரசாங்கம் தெளிவு படுத்த வேண்டும்....

முதலில் செஞ்சுலுவை சங்கத்தினரையும், உலக மீடியாக்களுக்கும் அனுமதி தர நிர்பந்திக்க வேண்டும்.

அமரன்
20-05-2009, 12:59 PM
இலங்கை அரசின் வழியாகத்தான் உதவிகளை அனுப்பியாக வேண்டும் என இலங்கை வற்புறுத்துமா?

மாந்தநேச உதவிகளே மிகச்சரியான சிந்தனை. தீர்வுத்திட்டம் சரியான சிந்தனை.

அரசுக்கு இப்போ பணத்தேவை அதிகம்.. அதனால் வற்புறுத்தலாம். ஆனாலும் தட்டிக்கழிக்க முடியாத வற்புறுத்தல் இல்லை.

இந்தியாவின் இந்தளவு கோடி உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைந்ததாகத் தெரியவில்லை. இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் என் சொந்தக்காரர் சொன்னது "வன்னியில் குண்டு மழைக்குள் கிடந்தோம். இங்கே அந்த மழை இல்லை. வேறெந்த வேறுபாடும் இல்லை"

அட..நான் காசு அனுப்பலாம்னு பார்த்தால் அது கூட முடியாதுள்ளதே..

தாமரை
20-05-2009, 12:59 PM
http://www.thehindu.com/2009/05/20/stories/2009052060201200.htm


http://www.prokerala.com/news/articles/a53624.html

he said: "A package of Rs.500 crore which will be required for rehabilitation is under preparation. When our special envoys will be visiting Sri Lanka shortly, they will discuss it in detail."

He pointed out that Rs.45 crore out of an earlier aid package of Rs.100 crore (Rs.1 billion) has already been spent. The Tamil Nadu government has also announced relief aid of Rs.25 crore.