PDA

View Full Version : தமிழக பஸ்களில் - சாட்டிலைட் டிவிஅறிஞர்
19-05-2009, 02:06 PM
தமிழகத்தில் பல முன்னேற்றங்கள்.
---------------------
ஒரே மாதிரி காட்சிகள் ஒளிபரப்பு அரசு பஸ்களில் சாட்டிலைட் டிவி விரைவில் அறிமுகம்

திருச்சி, மே 19: தமிழகத்தில் பேருந்துகளில் ஆடியோ டேப் ரெக்கார்டர்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பும் முறை 1980ம் ஆண்டில் பிரபலமடைந்தது. நாளடைவில் விசிஆர், விசிடி உதவியுடன் வீடியோவில் சினிமா படங்கள், பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இவை துவக்கத்தில் தனியார் பஸ்களிலும், தொடர்ந்து அரசு பேருந்துகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை சாட்டிலைட் உதவியுடன் ஒளிபரப்ப வழிவகை செய்யப்பட்டது.

சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஒளிபரப்பப்படும் காட்சிகள், மாநிலம் முழுவதும் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் ஒரே நேரத்தில் காணலாம். இதற்கென பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள பிரத்யேக டிவிக்களை ஆன், ஆப் செய்வது மட்டுமே கண்டக்டர், டிரைவர்களின் வேலையாக இருக்கும்.

பேருந்துகளின் இரைச்சலுக்கு ஏற்ப ஒலி அளவு கூட கட்டுப்பாட்டு அறையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் டிவி, சிடி பிளேயர், டிவிடி பராமரிப்பு செலவு குறையும். மேலும், விளம்பர உரிமையை தனியாருக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் இருந்து, சோதனை ஓட்டமாக மதுரை, விழுப்புரம், சேலம், கோவை கோட்டங்களை சேர்ந்த 32 பஸ்களில் புதிய முறையில் சினிமா காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் எல்லா பஸ்களிலும் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முறையில் ஒளிபரப்பாகும் காட்சிகள் துல்லியமாக இருப்பதாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நன்றி - தினகரன்

மன்மதன்
19-05-2009, 02:12 PM
நல்ல முன்னேற்றம்...

அமரன்
19-05-2009, 03:38 PM
சந்தோசமான விடயம்..
பஸ்ஸில் போக முடியாதவர்களையும் கவனத்தில் எடுத்துட்டா இன்னும் சந்தோசம்.

பாரதி
19-05-2009, 03:39 PM
பயண நேரத்திலும் கூட மூளைச்சலவை செய்ய திட்டமா...? ஹூம்....

செல்வா
19-05-2009, 04:42 PM
சுத்தம் ... தூக்கம் வந்தா மூடிவைக்கச் சொல்லிட்டு தூங்கலாம். படாவதி படம் போட்டாலும் ஒண்ணு முடிஞ்சதும் விட்டுதுடா தொல்லைனு நிம்மதியா இருக்கலாம். இதிலயும் விளம்பரங்கள் போடத்துவங்கியாச்சுண்ணா அவ்வளவுதான்...
பேருந்து நிலையங்களில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிலைதான்...
பயணம் போகிற நம்ம நிலமைய நெனச்சாதான்....
ஹ்ம்... ஒரே பெருமூச்சுதான்...

நேசம்
20-05-2009, 04:54 AM
நல்லவேளை ஆன் அப் செய்வது நடத்துனரில் கையில் இருக்கிறது.ஒட்டு மொத்த பயணிகள் விரும்ப விட்டாலும் திரைப்படம் ஒடிகொண்டே இருக்கும்.தனியார் பேருந்துகளில் போடுவது போல் புது படம் போடுவாங்களா....

தாமரை
20-05-2009, 05:07 AM
அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்ய நல்ல வழி...

aren
20-05-2009, 05:27 AM
விளம்பரங்களை பயணிகள் பார்க்கவேண்டும். ஆகையால் பார்க்கும்படியாக இருக்கும் பிரோக்கிராமை மட்டுமே ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன்.

பணம்டா பணம் (சத்யா படத்தில் ஆனந்த் கமலைப்பார்த்து பேசும் வசனம் ஞாபகத்திற்கு வந்தது)

ஸ்ரீதர்
20-05-2009, 07:04 AM
வீட்டுல டிவி பார்த்து மூடர்களாக இருக்கும் தமிழர்களை பஸ்ஸில் பயணிக்கும்போதும் மூளையை சிந்திக்கவிடாமல் செய்யும் முயற்சி. இதற்கு செய்யும் செலவை பஸ் வசதி இல்லாத/குறைவாக உள்ள கிராமத்திற்கு செய்தால் நல்லது. அல்லது இருக்கும் பஸ்களின் எண்ணிக்கையை உயர்த்த உபயோகப்ப்படுத்தாலாம்.

சுதந்திரதினம் , குடியரசு தினம் , பண்டிகைகள் எல்லாவற்றையும் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துதான் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்!!!??????????????? பயணம் செய்யும்போதாவது நம் குடும்பத்தினரிடம் பேசும் வாய்ப்பை இந்த திட்டம் தட்டிப்பறிக்கக்கூடும்.