PDA

View Full Version : தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!

Honeytamil
19-05-2009, 12:28 PM
இந்த கட்டுரையில் நான் எழுதவேண்டும் என நினைத்த அத்தனை விடயங்கலும் எழுதப்பட்டுள்ளன. இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/thalaivar-01.jpg

எம்.ஜி.ஆரை என்றிலிருந்து பிடித்தது, கமல்ஹாசனை எப்போதிலிருந்துப் பிடித்தது என்பதெல்லாம் நினைவில் இல்லாததைப் போலவே பிரபாகரனை எப்போதிலிருந்து பிடித்தது என்பதும் நினைவில்லை. நினைவு தெரிந்தபோது என் வீட்டு வரவேற்பரையில் இருந்தது மூவரின் படங்கள். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன். ஒருமுறை கூட்டுறவு வங்கி ஒன்றில் அப்பா கடனுக்கு முயற்சித்திருந்தார். வீட்டுக்கு வெரிஃபிகேஷனுக்கு வந்த வங்கி அதிகாரி பிரபாகரன் படமெல்லாம் இருக்கிறது என்று கூறி கடன் தர மறுத்த நகைச்சுவையும் நடந்தது.

மூன்றாவதோ, நான்காவதோ படித்துக் கொண்டிருந்தபோது கோடை விடுமுறைக்குப் பாட்டி வீட்டுக்குப் போயிருந்தேன். நாளிதழ்களை சத்தம் போட்டு படித்து தமிழ் கற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் செய்திகளை உரக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த வழியாக நடந்து வந்த மாமா பளாரென்று அறைந்தார். அந்த மாமா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். ஏன் அடித்தார் என்று தெரியாமலேயே அழுதுக் கொண்டிருந்தபோது தாத்தாவிடம் சொன்னார். “பிரபாகரனைப் பத்தி தப்புத்தப்பா நியூஸ் போட்டிருக்கான். அதையும் இவன் சத்தம் போட்டு படிச்சுக்கிட்டிருக்கான்”. எண்பதுகளின் இறுதியில் தமிழகம் இப்படித்தான் இருந்தது. பிரபாகரன் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர்.

நேருமாமா மாதிரி எங்கள் குடும்பத்தில் ‘பிரபாகரன் மாமா’. ஆந்திர நண்பன் ஒருவன் எனக்கு அப்போது உண்டு. சிரஞ்சீவி படம் போட்ட தெலுங்குப் பத்திரிகைகளை காட்டி, எங்க மாமா போட்டோ வந்திருக்கு பாரு என்று காட்டுவான். தெலுங்குக் குடும்பங்களில் பெண்களுக்கு சிரஞ்சீவி ’அண்ணகாரு’. எனவே குழந்தைகளுக்கு ‘மாமகாரு’ என்று சொல்லி வளர்ப்பார்கள். நானும் பெருமையாக பிரபாகரன் படங்கள் வந்தப் பத்திரிகைகளை காட்டி, “எங்க மாமா போட்டோ உங்க மாமா போட்டோவை விட நிறைய புக்லே, பேப்பருலே வந்திருக்கு. உங்க மாமா சினிமாவில் தான் சண்டை போடுவாரு. எங்க மாமா நெஜமாவே சண்டை போடுவாரு” என்று சொல்லி வெறுப்பேற்றி இருக்கிறேன். உண்மையில் பிரபாகரன் எனக்கு மாமன்முறை உறவினர் என்றே அப்போது தீவிரமாக நம்பிவந்தேன்.

தீபாவளிக்கு வாங்கித்தரப்படும் துப்பாக்கிக்கு பெயர் பிரபாகரன் துப்பாக்கி. போலிஸ் - திருடன் விளையாட்டு மாதிரி பிரபாகரன் - ஜெயவர்த்தனே விளையாட்டு. ரோல் கேப் ஃப்ரீ என்று ஆஃபர் கொடுத்தால் ஜெயவர்த்தனேவாக விளையாட எவனாவது விஷயம் தெரியாத பயல் மாட்டுவான். நாம் சுட்டுக்கிட்டே இருக்கலாம், அவன் செத்துக்கிட்டே இருப்பான்.

சென்னையின் கானா பாடகர்கள் பிரபாகரனை பாட்டுடைத் தலைவனாக்கி பாடுவார்கள். பிரபாகரனின் வீரதீர சாகசங்கள் போற்றப்பட்டும், ஈழத்தமிழர் அவலமும் உருக்கமாகப் பாடப்படும். பிரபாகரன் பெயர் பாடகரால் உச்சரிக்கப்படும் போதெல்லாம் விசில் சத்தம் வானத்தை எட்டும்.

குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து நன்கு விவரம் தெரியும் வயதுக்குள் நுழைந்தபோது துன்பியல் சம்பவமெல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது. சூழலே வேறுமாதிரியாகி விட்டது. பள்ளியிலோ, பொதுவிடங்களிலோ பிரபாகரன் பெயரை சொன்னாலே ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளுக்குள் பதிந்துவிட்ட அந்த கதாநாயகப் பிம்பத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்க வேண்டியதாயிற்று.

அந்தக் காலத்திலேயே பத்திரிகைகளில் எழுதுவார்கள். பிரபாகரன் மரணம், பிரபாகரன் ஆப்பிரிக்காவுக்கு தப்பித்து ஓட்டம், என்று விதவிதமாக யோசித்து எழுதுவான்கள் மடப்பயல்கள். இப்போது போலெல்லாம் உடனடியாக அது உண்மையா, பொய்யாவென்றெல்லாம் தெரியாது. உண்மை ஒருநாளில் வெளிவரலாம். ஒருவாரம் கூட ஆகலாம். அதுவரை மனம் படபடவென்று அடித்துக் கொள்ளும். தமிழ்நாட்டில் கலைஞருக்குப் பிறகு வதந்திகளால் அதிகமுறை சாகடிக்கப்பட்டவர் பிரபாகரன் ஒருவராகத்தான் இருக்கும். என் தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால் நேதாஜி மாதிரி நம் மாவீரனின் முடிவும் உலகுக்கு தெரியாததாக அமையவேண்டும்.

தலைவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். கொலைப்பழி இருக்கலாம். குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அதையெல்லாம் தாண்டிதான் அவரை நேசிக்கிறேன். அவரை நேசிக்க எந்த சித்தாந்தமோ, இன உணர்வோ, மொழிப்பாசமோ எனக்குத் தேவைப்படவில்லை. அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம். அவர் ஹீரோவாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது, வீரத்தைக் கொடுக்கிறது.

இந்த நேசத்துக்கெல்லாம் அவர் உரியவர்தான். இதுவரை உலகில் தோன்றிய மாவீரர்களில் மிகச்சிறந்தவராய் ராஜேந்திரச் சோழனை நினைத்திருந்தேன். மாவீரன் பிரபாகரன் ராஜேந்திரச்சோழனை மிஞ்சிவிட்டார். நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என்று இதுவரை உலகம் கண்ட எந்த மாவீரனுக்கும் சளைத்தவரல்ல எங்கள் பிரபாகரன். மற்றவர்கள் எல்லாம் ஓரிரு நாடுகளையோ, நான்கைந்து மன்னர்களையோ வென்றவர்கள். இலங்கை மட்டுமன்றி அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் என்று உலகையே எதிர்த்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக தினவோடு, திடமோடு போராடிய வரலாறு உலகிலேயே மாவீரன் பிரபாகரனுக்கு மட்டும் தான் உண்டு. இதுவரை உலகம் காணாத ஒப்பற்ற மாவீரன் எங்கள் பிரபாகரன் தானென்று தமிழினம் மார்நிமிர்த்து சொல்லிக் கொள்ளலாம்.

வதந்திகள் சாகடிக்கலாம். வரலாறு வாழவைக்கும்!

எழுதியவர் : யுவகிருஷ்ணா
(http://www.luckylookonline.com/2009/05/blog-post_19.html)

அமரன்
19-05-2009, 12:43 PM
சுதுமலையில் மின்னலாய்... கிட்டண்ணாவின் இறுதிச்சடங்கில் தென்றலாய்..

மக்கள் திலகத்துடன் எனக்குத் தலைவனாவன்.
தலைவா என்றழைக்கும் இடைவெளி கொடுக்காது அண்ணனானவன்.

அறிஞர்
19-05-2009, 01:50 PM
பிரபாகரன் பற்றி வரிகள்... எண்ணங்கள் அருமை...

ரங்கராஜன்
19-05-2009, 05:14 PM
இந்த கட்டுரையை படிக்கும் பொழுதே நெஞ்சு புடைக்கிறது, ஒவ்வொரு வரி படித்து முடித்தவுடன் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை பார்த்தேன் வீரம் தானாகவே ஊற்றெடுக்கிறது. உண்மையில் அவர் மாவீரன் தான், மேலே உள்ள படத்தில் மிக மிக அழகாகவும் இருக்கிறார், பிரபாகரன் அவர்களை பற்றிய இந்த செய்திகளை நீங்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது போட்டு இருந்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும், அந்த ஊக்கத்திலே அவர் இன்னும் பல நாட்கள் வாழ்ந்து இருப்பார். எங்களை போலவர்களுக்கும் அவரின் உண்மையான வரலாறு தெரிந்து இருக்கும். எங்களை போல பல இளைஞர்களுக்கு அவரின் வரலாறு தவறாக திரித்து சொல்லப்பட்டு இருக்கிறது, மன்றம் வந்த பின் தான் அவரைப் பற்றிய பல தகவல்களை படிக்க நேர்ந்தது.

அமரன் சொன்னது போல உலகத்திலே தனியாக விமானப்படை வைத்திருந்த இயக்கம் அவருடையது மட்டும் தான்.

பிரபாகரன் உண்மையில் ஒரு ஹீரோ தான், ஆனால் கால் நூற்றாண்டாக பாடுபட்ட ஒருவனுக்கு அவன் கனவை பார்க்காமலே இறந்து போவது ரொம்ப கொடுமையான விஷயம் தான்.

ஆண்டவா செத்தது பிரபாகரனாக இருக்ககூடாது

உதயசூரியன்
19-05-2009, 06:08 PM
உண்மை.. எனக்கு.. எம்.ஜி.ஆரை.. பிடிக்காமல்.. சிவாஜியை பிடித்தது..
அவ்வளவு தான்....மாற்றம்.. ஆனால் இக்கட்டுரையில் வந்த முதல் பத்தி என் வாழ்க்கையிலும் உண்டு..
பிரபாகரன் படத்தை.. பெட்டியில் வைக்க பெற்றோர் சொன்னதால்.. என்னுடைய பெட்டியில் இருக்கு...

வாழ்க தமிழ்

உதயா
19-05-2009, 06:46 PM
இன்னும் இன்னும் படிக்கவேண்டும் என்று ஆசை வருகிறது. எவ்வளவு அழகாண செய்தி.

அறிஞர்
19-05-2009, 07:01 PM
பிரபாகரன் பற்றி விக்கிபீடியாவில்

http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran

Honeytamil
20-05-2009, 04:53 AM
பிரபாகரன் பற்றி விக்கிபீடியாவில்

http://en.wikipedia.org/wiki/Velupillai_Prabhakaran

ஆம் அந்த தளத்தில் எல்லாம் தப்பு தப்பாக எழுதப்பட்டுள்ளது.

Honeytamil
20-05-2009, 04:56 AM
அவர் ஒரு அண்ணனாக , தம்பியாக , மாமனாக ஒரு ஹீரோவாக நிச்சயம் தமிழர்களினது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நிச்சயம் வாழ்வார்!!! அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

நேசம்
20-05-2009, 05:00 AM
அவர் ஒரு ஹீரோ என்பது எனக்கு பசுமரத்தாணியாய் சிந்தனையில் ஓங்கி அறையப்பட்டுவிட்ட விஷயம்.

நிதர்சனமான உண்மை.

sagee
20-05-2009, 09:42 AM
இந்த கட்டுரையி என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கிரது.
என் தலைவனின் வீரத்தை சொல்ல வார்த்தைகலே இல்லை.................!

வருகிற கண்ணீரை கூட அடக்கி கொன்று, நெஞ்சை கல்லாக்கி
என் தலைவன் மீண்டும் எமக்காயி பிரப்பான் இவ்தரனியிலே.
என்ற நன்பிக்கையுடன் வாழ்கிரேன்.
உணர்வுகளை பகிர்ந்து கொன்றதுக்கு.

நன்றி
வணக்கம்.........

அய்யா
10-07-2009, 11:09 AM
தமிழர்கள் என்றால்...?

ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?

ஆதி
10-07-2009, 12:25 PM
தமிழர்கள் என்றால்...?

ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?

என்னை போன்ற இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோதான்..

விக்ரம்
10-07-2009, 12:29 PM
தமிழர்கள் என்றால்...?

ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?
ஆதி முதல் அந்தம் வரை அவருடைய அணுகுமுறையில் மாற்றம் இல்லை. அவரைப் பற்றிய கண்ணோட்டம் மட்டும் மாறிக் கொண்டே இருந்தது.

சிலருக்கு என்றும் ஹீரோவாய், இன்னும் சிலருக்கு ஒருகாலத்தில் ஹீரோவாய் - பின்னர் வில்லனாகவும் தோன்றினார்.

உலக மக்கள் அனைவருக்கும் ஹீரோ (அ) ஒரு இனத்திற்கே ஹீரோ என்று ஒருவரை இதுவரை நம்மால் இனம் காண முடியாது.

Honeytamil
10-07-2009, 12:30 PM
தமிழர்கள் என்றால்...?

ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?

தமிழ்ர்கள் என்றால் எல்லாரும் ஒன்றுதான். பிறகென்ன இந்திய தமிழ் , இலங்கை தமிழ்???

கா.ரமேஷ்
11-07-2009, 04:34 AM
நிதர்சனமான உண்மை பதிவு....
தமிழர் எல்லோருக்கும் மட்டுமல்ல உலகத்திற்க்கே அவர் மாவீரன் தான்....!

praveen
11-07-2009, 05:31 AM
தமிழர்கள் என்றால்...?

ஈழத் தமிழர்களுக்கா... இந்தியத் தமிழர்களுக்கா..?

ஏன் மலேசியத்தமிழன், சிங்கப்பூர் தமிழன், சவுதி தமிழன் இவர்களை எல்லாம் விட்டுவிட்டீர்களே.

அப்படியே தமிழ்நாட்டு தமிழன், பாண்டிச்சேரி தமிழன் என்றும் பிரிக்கலாமே.

தமிழ் பேசுகிறவர் அல்லாமல் தமிழை நேசிப்பவர்களும் தமிழர்கள் தான்.

இங்கே வந்து பிழைத்து சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த தமிழன் தான். மலையாளி என்று கலைஞரால் தூற்றப்பட்டு, முதலமைச்சரான எம்.ஜி.ஆரும் தமிழன் தான்.

முதலில் ஒரு மாயக்கோடு போட்டு பிரிக்கும் வேலையை விட்டொழியுங்கள். இதனால் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பால்தாக்கரே என்ன தமிழரா?. அவருக்கு பிரபாகரனை மிகவும் பிடிக்கும். பிரகாஷ்ராஜ் பிறப்பால் தமிழரா அவருக்கு பிரபாகரனை ரெம்ப பிடிக்கும், தனது இறந்து போன மகன் உயிருடன் இருந்து அவனிடம் பேசுங்கால், " மகனே, உண்மையான மாவீரன் பிரபாகரன் தான்" என்று சொல்வேன் என்று பேட்டியில் கொடுப்பார்.

அய்யா(பெரியார்) என்ற பெயர் வைத்து கொண்டு இப்படி அந்த பெயருக்கு களங்கம் விளைவிக்கலாமா?.

பிரபாகரன் வெறும் ஹீரோ மட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு எல்லாம் ஹீரோ. அதாவாது ராஜாதி ராஜன். அவரை மாவீரன் ஏற்றுக்கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்க மாட்டான். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அனைத்து தமிழரிலும் மேம்பட்ட சுத்த மாவீரன்.

குடும்பத்திற்கு ஒருவரை போருக்கு அனுப்ப சொல்லி, தன் குடும்பத்தில் இருவரை போரில் பலி கொடுத்த ஒரே தலைவன் பிரபாகரன் தான்.

இன்பா
11-07-2009, 06:09 AM
இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...

தூயவன்
11-07-2009, 10:10 AM
அருமையான விளக்கம் பிரவீன்...
மிக்க நன்றி.. இதை விட சிறந்த பதிலை யாராலும் கொடுக்க முடியாது.
நேற்று இதை பார்த்தேன் பதிலளிக்க மனமின்றி சென்று விட்டேன்.

விக்ரம்
11-07-2009, 10:12 AM
அவரை மாவீரன் ஏற்றுக்கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்க மாட்டான்.
இது சுத்த ஹம்பக்.

நீங்கள் ஒரு ஹீரோ, உங்களுக்கு அவர் ஹீரோ -> ஹீரோவுக்கெல்லாம் ஹீரோ ஒகே.

அதை ஏற்றுக் கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்கமாட்டான் என்று சொல்வது ரொம்ப ஓவர். புள்ளி விபரக் கணக்கு தரட்டுமா? உலகத்தில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள்? அவர்களில் எத்தனை பேருக்கு அவர் ஹீரோ என்று.

உங்கள் நம்பிக்கை, உங்கள் சந்தோசம் எதிலும் குறுக்கிடவில்லை. ஆனால் அவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் அசல் தமிழனில்லை என்று சொல்வது அதிகம்.

இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)

கோபம் மனிதனின் அறியாமை - எனது பதில் பதிவுக்கு கோபப் படமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

பிரபாகரன் ஹீரோ தான். அது அவரவர்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய ஹீரோ. அவருக்காக திரி உருவாக்கலாம். புகழ் பாடலாம். ஆனால், திணிக்கப்படும் ஹீரோவாக இருக்க கூடாது.

இன்பா
11-07-2009, 10:24 AM
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)

நண்பர் விக்ரம்,

சூழ்நிலை, காரணம், உரிமை, தேவை, கட்டாயம், நிர்பந்தம் இவையனைத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஹீரோவாக திணிக்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. உரிமைக்காக அடுத்தவரை மட்டும் அல்ல தன் குடும்பத்தாரை மட்டும் அல்ல தன்னையும் தியாம் செய்ய துணிந்த வீரனை, அனைவரும் ஹீரோவாகத் தான் பார்ப்பார்கள் என்று பெருமித உணர்வுடன் தமிழனாக பீற்றிக்கொளவது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

அதை கலங்கப்படுத்தவதாக உங்கள் பதில் அமைந்திருக்கிறது.

தூயவன்
11-07-2009, 10:37 AM
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே (கொலை செய்வதற்கில்லை)

ஆமாம் ஆமாம் எதிரி உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்வான்.. பெண்களை கற்பழிபான்.. உங்களை மட்டும் இல்லை உங்கள் சொந்தகளுக்கும் ஏன் உங்கள் இனத்திற்கும் இதே கதி தான்.. அது மட்டும் இல்லை உங்கள் இனத்தை முழுமையாய் அழிக்க நிற்பான். ஆனால் நிங்கள் ஏதும் செய்யாமல் வேடிக்கை பார்பிர்கள் ஏன் என்றால் "இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே"

இங்கு நிங்கள் என்று கூறியது உங்களை அல்ல நண்பரே.. ஈழத்தில் தமிழர்கள் பட்டவை.
உங்களுக்கு புரிய வேண்டும் என்பதுக்காக "நிங்கள்" என்று கூறினேன்

Honeytamil
11-07-2009, 11:49 AM

ஆமாம் பெட்மான் , அவர் எதற்காக ஆயுதம் ஏந்தினார் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள். அவர் தமிழர்களும் கோழைகள் அல்ல குட்ட குட்ட குனிந்துகொண்டிருக்கமாட்டார்கள் என்று சிங்கள தேசத்துக்கென்ன
சர்வதேசத்துக்கே தெரியவைத்தார்.

தமிழினத்தின் கற்பனைக்கெட்டாத கர்மவீரனாக,
காவிய நாயகனாக,
தமிழினத்தின் வியத்தகு வீரனாக,
இனத்தின் விடுதலை ஆன்மாவாக,
தமிழினத்தின் மீட்பராக
தலைவர் பிரபாகரனும், தமிழ் மக்களின் தலைவிதியை மாற்றியமைக்கும் சக்தியாக தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரின் அடிமனதில் உறைந்து விட்டனர் என்பது அகிலமறிந்த உண்மை.

இதை எவராலும் எக்காலத்திலும் மறுத்துரைக்க முடியாது.

praveen
11-07-2009, 12:02 PM
விக்ரம், நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் பார்த்திருப்பீர்கள், அதில் ஜாக்சன் துரையிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் பேசுவது போல ஒரு உரையாடல் வரும். (இது உண்மையிலே வீரபாண்டிய கட்டபொம்மன் பேசினாரா என்று கேட்காதீர்கள்.)

இந்த மண்ணில் பிறந்த எவரும் பேடியாக இருந்ததில்லை - வீரபாண்டிய கட்டபொம்மு
பேடியாய் இருப்பவன் - இது ஜாக்சன் துரை

இந்த நாட்டின் அசல் வித்தாக இருக்க மாட்டான் - இது வீ.பா.கட்டபொம்மு.

இந்த உரையாடலை கேட்ட பின் அந்த மாதிரி திருநங்கையாக இருப்பவர் எல்லாம் இந்த நாட்டினருக்கு பிறந்தவரில்லை என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளலாமா?.

ஒரு விசயத்தை சிறப்பிக்க சொல்லப்படும் வார்த்தையை அப்படியே எடுத்துக்கொள்ள கூடாது.

======== ====== ========== ==========

உங்கள் கொலைக்குற்றச்சாட்டிற்கு பதில்.

உலகிலே, பல காலம் அராசாண்ட இனம் தமிழினம். பல நாடுகளை தத்தம் எல்லை மீறீ சென்று வென்று ஆட்சி புரிந்தவன் தமிழன். இன்று உலகெமெங்கும் தமிழனுக்கு என்று எந்த ஒரு நாடும் இல்லை. தேசிய நீரோட்டம், ஒருமைப்பாடு என்பதில் உடன்பட்டு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தத்தம் உரிமை/பழமை இழந்து அடங்கியிருக்கிறார்கள்.

அப்படி இருந்த ஒரு நாட்டில்(இலங்கையிலே), அடக்குமுறையை எதிர்த்து பலர் அஹிம்சாவழியில் போராடி அடக்குமுறையால் அடிபட்டனர், முழுமையான தீர்வு கிடைக்கபெறாததினால் சில இளைஞர்கள் ஆயுதவழியை, இந்தியாவில் சுபாஸ் சந்திர போஸ் ஏற்றது போல முன்னெடுத்து சென்றனர். எப்படி இங்கே ஆங்கில அதிகாரிகளை சுட்டுக்கொண்றார்களோ (வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கொண்றது) அது போல இலங்கை அரசு அதிகாரிகளை களையெடுத்தனர். பின்னர் இயக்கத்தை வலுப்படுத்த எண்ணி தத்தம் சகோதரர்களுக்கும் சண்டையிட்டனர். அதில் இறுதியில் வெற்றி பெற்று தனீஈழம் கண்டனர். ஒரு நாட்டை நிர்வகிப்பது போலவே நிர்வகித்தனர். அந்த நாட்டின் உயர்நிலையில் இருந்தவரை பற்றித்தான் இங்கே பேச்சு.

ஒரு போலிஸ் அதிகாரி/ராணுவ வீரன், ஒருவரை பணி நிமித்தம் அல்லது தனது துறை சார்ந்த நடவடிக்கைக்காக கொல்வது கொலை அல்ல.

பேடிப்பயல்கள் ராணுவமான இலங்கை அரச படையினர், இலங்கை தமிழர்களை, விடுதலைப்புலிகளை ஒழிக்கிறேன் என்று கொன்ற போதும், அப்பாவி சிங்கள மக்களை விடுதலைப்புலிகள் ஒரு போதும் கொன்றதில்லை. அவர்கள் குறிக்கோள் இலங்கை இராணுவத்தை எதிர்ப்பதே ஆகும்.

நீங்கள் மனதில் வைத்து சொல்லும் ஒரே ஒரு கொலையை நானும் ஒத்துக்கொள்ளவில்லை தான். அதனை இப்போது பேசுவது திரி திசைமாறி விடும்.

உலகிலே எந்த ஒரு தலைவனையும் விமர்சனம் என்ற போர்வையிலே குறை சொல்வது உண்டு. மகாத்மா காந்தியை கூட குஷ்வந்த்சிங் இல்லஸ்டிரேட்டடு வீக்லியில் அவர் மறைந்த பின்னும் கடுமையான மதிப்பு குறித்து சொன்னதுண்டு. எனவே போர்க்களத்தில் இருந்தவரை கொலையாளி குற்றவாளி என்று சொல்வதில் வியப்பில்லை.

அவரை நீங்கள் ஹீரோ என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இலங்கை தமிழர் வாழ்க்கை பற்றி முழு நிலை பற்றி அறிந்திராதவர் என்று தான் அர்த்தம். உங்களின் ஹீரோ யார் என்று சொல்லுங்கள் நான் அவர் பற்றி மாற்றுக்கருத்து சொல்கிறேன். மாற்றுக்கருத்து சொல்லமுடியாத வீரன் இல்லை. விக்ரம் உள்பட :)

நாகரா
11-07-2009, 12:33 PM
இருதய ஆழ சுதந்திர வேட்கையின்
திருஉருப் பிரபா கரம்

நேசமே வீரமாய் எழுந்தது சுதந்திர
தாகமே ஈழமாய் மலர்ந்தது

மேலோட்டமாய்க் காணாமல் உள்ளாழ்ந்து விளங்க
ஈழநாட்டமே பிரபாகரப் புலி

தேகமே நசிவது மாயா சுதந்திர
ஈழமே பிரபா கரம்

சிங்கந் திருத்தப் பாய்ந்தப் புலியும்
சிங்கந் திருந்தப் பசுவாம்

போரில்லாப் புண்ணிய ஈழம் மலரவே
போர்செய்தப் பிரபா கரம்

மாயுமோ ஈழத் திருநில நோக்கம்
சாயுமோ பிரபா கரம்

அறத்துக்குச் சார்பாகும் அன்பே தானிந்த
மறத்துக்கும் துணையென்னும் வள்ளுவம்

சிங்கமும் வேண்டாம் புலியும் வேண்டாம்
அன்புதான் வேண்டும் நமக்கு

நாகரா
11-07-2009, 12:46 PM
சிங்கம் இருக்கும்வரைப் புலியும் இருக்கும்
துஞ்சாப் பிரபாகர தருமம்

விதையாய் விழுந்ததன்று விருட்சமாய் எழுந்ததின்று
விளையும் பிரபாகர ஈழம்

சுதந்திர உணர்வை மாய்க்க முடியுமோ
இதந்தர உயிர்க்கும் ஈழம்

நாகரா
11-07-2009, 01:00 PM
ஈழமே பிரபாகரம் இருதய ஆழத்தில்
வாழுமே அஃதென்றும் உணர்

விக்ரம்
11-07-2009, 02:10 PM
ஆழமாய் பதில் சொல்ல விரும்பவில்லை, என்பதனால் உங்கள் வாதங்களை ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமில்லை பிரவீண். உங்கள் உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று மட்டும் தான் அர்த்தம்.

அய்யா
15-07-2009, 01:47 PM
என்னை போன்ற இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோதான்..

உங்களைப் போன்ற சிலர் அவரை ஹீரோவாக ஏற்பதில் எனக்கொன்றும் எதிர்ப்பில்லை ஆதி அண்ணா!

ஆனால் ஒட்டு மொத்த இந்தியத் தமிழர்களோ, ஏனைய தமிழர்களோ அவரை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்..

அவ்வளவு ஏன்?

இலங்கையிலேயேகூட் அத்தனைத் தமிழரும் அவரை ஹீரோவாக ஏற்கவில்லையே!

அய்யா
15-07-2009, 01:50 PM
தமிழ்ர்கள் என்றால் எல்லாரும் ஒன்றுதான். பிறகென்ன இந்திய தமிழ் , இலங்கை தமிழ்???

இலங்கைத் தமிழரிலேயே கூட யாழ்ப்பாணத்தமிழரென்றும், மலையகத் தமிழரென்றும் வேறுபாடு உள்ளது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது!

அய்யா
15-07-2009, 01:57 PM
ஏன் மலேசியத்தமிழன், சிங்கப்பூர் தமிழன், சவுதி தமிழன் இவர்களை எல்லாம் விட்டுவிட்டீர்களே.

அப்படியே தமிழ்நாட்டு தமிழன், பாண்டிச்சேரி தமிழன் என்றும் பிரிக்கலாமே.

தமிழ் பேசுகிறவர் அல்லாமல் தமிழை நேசிப்பவர்களும் தமிழர்கள் தான்.

இங்கே வந்து பிழைத்து சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த தமிழன் தான். மலையாளி என்று கலைஞரால் தூற்றப்பட்டு, முதலமைச்சரான எம்.ஜி.ஆரும் தமிழன் தான்.

முதலில் ஒரு மாயக்கோடு போட்டு பிரிக்கும் வேலையை விட்டொழியுங்கள். இதனால் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பால்தாக்கரே என்ன தமிழரா?. அவருக்கு பிராபாகரனை மிகவும் பிடிக்கும். பிரகாஷ்ராஜ் பிறப்பால் தமிழரா அவருக்கு பிரபாகரனை ரெம்ப பிடிக்கும், தனது இறந்து போன மகன் உயிருடன் இருந்து அவனிடம் பேசுங்கால், " மகனே, உண்மையான மாவீரன் பிரபாகரன் தான்" என்று சொல்வேன் என்று பேட்டியில் கொடுப்பார்.

அய்யா(பெரியார்) என்ற பெயர் வைத்து கொண்டு இப்படி அந்த பெயருக்கு களங்கம் விளைவிக்கலாமா?.

பிராபாகரன் வெறும் ஹீரோ மட்டும் அல்ல, ஹீரோக்களுக்கு எல்லாம் ஹீரோ. அதாவாது ராஜாதி ராஜன். அவரை மாவீரன் ஏற்றுக்கொள்ளாதவன் அசல் தமிழனாக இருக்க மாட்டான். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த அனைத்து தமிழரிலும் மேம்பட்ட சுத்த மாவீரன்.

குடும்பத்திற்கு ஒருவரை போருக்கு அனுப்ப சொல்லி, தன் குடும்பத்தில் இருவரை போரில் பலி கொடுத்த ஒரே தலைவன் பிராபாகரன் தான்.

உங்கள் கருத்து உங்களுக்கு.. என் கருத்து எனக்கு!

பிரபாகரனை ஆதரித்தால்தான் தமிழன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட பெருமை எனக்கு வேண்டாம்.!

சிங்களன் கற்பழிக்கிறான் என்று குற்றம் சாட்டும் அருகதை, வெருகலாற்று கொடூரங்களை நிகழ்த்திய அற்பப்பிறவிகளுக்குக் கிடையாது.

தமிழன் என்றால் தவறில்லாமல் தமிழ் எழுதுபவனாக இருத்தல் வேண்டும்.. புலித்தலைவருக்கு ***** போட்டுப் பார்க்கக் கூடாது.

தவறிருந்தால் பொறுத்தருள்க. நீங்கள் என்னை விமர்சித்ததால் உங்கள் உணவை கொஞ்சம் புகட்டினேன்.

தூயவன்
16-07-2009, 01:13 PM
உங்கள் கருத்து உங்களுக்கு.. என் கருத்து எனக்கு!

ரிப்பீட்டு

பிரபாகரனை ஆதரித்தால்தான் தமிழன் என்ற பெருமை எனக்குக் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட பெருமை எனக்கு வேண்டாம்.!

அய்யோ ஆத்தாடி பார்றா.. மன்றத்தில் உங்களை யாரவது வந்து கேட்டார்களா ? பிரபாகரனை ஆதரியுங்கள் என்று..

அது போக "தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!" என்ற இந்த கட்டுரையை எழுதியவரே எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு இந்திய தமிழர் தான் (இதற்காக அவரை இந்தியர் இல்லை என்று நிங்கள் கூறினால் கூட ஆச்சரிய படுவதிக்கு ஒன்றும் இல்லை)

இந்த கட்டுரையை அவர் தனது சொந்த blogக் இல்
பதிந்திருந்தார். இங்கு பார்பதுக்கு முன்பே நான் படித்து விட்டேன்.

இலங்கையிலேயேகூட் அத்தனைத் தமிழரும் அவரை ஹீரோவாக ஏற்கவில்லையே!

ஆமாம் கருணா , பிள்ளையான் , டக்லஸ்.... போன்றவர்கலுடன் உங்களை போன்ற ஒரு சில இந்திய தமிழர்களும் ஏற்கவில்லை....

இலங்கைத் தமிழரிலேயே கூட யாழ்ப்பாணத்தமிழரென்றும், மலையகத் தமிழரென்றும் வேறுபாடு உள்ளது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது!

நீங்கள் தான் அப்படி கூறுகிறிர்கள்..
ஈழ தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்கும் (அவுதும் இலைங்கை அரசின் நேரடி அச்சுறுத்தளுக்கு ஆளான (கோத்த பாயவின்)) மனோ கணசேன் தன்னை ஒரு போதும் மலையாக தமிழர் என்று கூறியதில்லை.

"தமிழர்" "தமிழர் உரிமை" இது தான் அவர் பேச்சில் எப்போதும் இருக்கும்

நல்ல வேளை நண்பரே நீங்கள் பிரபலமானவராக இல்லை.இருந்தால் ஒரு வேளை முட்டை தான் :lachen001:

praveen
16-07-2009, 01:35 PM
கட்டபொம்மன் பிறந்த அதே மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான், அதற்காக எட்டப்பன் தமிழன் இல்லை என்றாகி விடுமா என்பது போன்றது உங்கள் வாதம்.

இலங்கையில், மனிதத்தை மதிக்காதவனிடம் காந்திவழியில் போர் புரிந்து ஆகாததால் தான் கத்தி(துப்பாக்கி) தூக்கினர் என்ற உண்மை தெரியாத நீங்கள் இனி இலங்கை பற்றி எழுதாதீர்கள். அவர்களை குறை கூறாதீர்கள்.

Honeytamil
16-07-2009, 01:44 PM
இலங்கைத் தமிழரிலேயே கூட யாழ்ப்பாணத்தமிழரென்றும், மலையகத் தமிழரென்றும் வேறுபாடு உள்ளது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது!

எங்களுக்கு அதுவும் தெரியும் .ஏன் வன்னியில் இருப்பவர்களில் 50% பேர் மலையகத்தமிழார்களே. இந்த மலையகத்தமிழார்கள் என்று நீங்கள் கூறுபவர்கள் யார் தெர்யுமா? வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியாவிலிருந்து கூட்டி வரப்பட்டவர்கள் தான். நாங்கள் ஒருபோதும் அவர்களையும் எங்களையும் பிரித்துப் பார்த்ததில்லையே? நாங்கள் எங்காவது சொல்லிக் கொள்கிறோமா யாழ்ப்பான தமிழ் , மட்டக்களப்பு தமிழ் , மலையகத்தமிழ் , வவுனியாத்தமிழ் என்றெல்லாம்?????

நூர்
16-07-2009, 02:53 PM
தலைவர் பிரபா மறைமுக ஆட்சிகாலத்தில்,
1லட்சம் பேர் (தமிழ் பேசும் ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் மட்டும்) பூர்வீக மண்ணில் இருந்து, 1மணி நேரத்தில் கட்டிய துணிதவிர வேறு ஏதுவும் இல்லாமல்,அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டார்கள். என கேள்விபட்டேன், உண்மையை தெரிந்தவர்கள் யாராவது சொல்வீர்களா?

விகடன்
17-07-2009, 01:24 PM
அவ்வாறு துரத்தியடிக்கப்பட்டது உண்மைதான்.
நீங்களே சிந்தித்துப்பாருங்கள். கைக்குழந்தைகளை வைத்திருக்கும் தமது பிள்ளைகளை முதலில் கையிலெடுக்க வேண்டும். அவர்களுடன் சேர்த்து எத்தனை பொருட்களை காவமுடியும்?
அந்த பொருட்களை எத்தனை இடத்திற்குத்தான் காவமுடியும்??

இவற்றை சிந்தித்துப்பார்த்தாலே ஈழத்தமிழர் பட்ட அவலம் நன்றாக புலப்படும்.

ஏன். இன்றுகூட தமக்கு வேண்டிய அத்தியவசிய உடகள், மாற்றுத்துணிகளை வேண்ட பணவசதி இல்லாதோர் பெரும்பான்மையாகவே உள்ளனர். உறவினர்கள் தெரிந்தோர் அனுப்பிய பணங்களை பெற்றுக்கொள்ள எந்த அனுமதியோ வசதியோ இல்லாது இருப்போரும், கையில் ஏதோ ஒரு வகையில் கிடைத்த பணத்தை செலவழித்து வேண்டிய தேவையை பூர்த்திசெய்ய வழியேதுமின்றி இருப்போரும் தற்போது தடுப்புமுகாம்களில் உள்ளனர்.

பாருங்களேன், அரசியல் இலாபம் கருதி தமது ஆட்சிக்கால இறுதியில் சில தமிழரை முகாம்களிலிருந்து வெளியேற்று உலக நாடுகள் மத்தியில் தாம் தமிழர்களை வெளியே சுகந்திரமாக செல்ல விடுவதாக பரப்புரை செய்வதுடன் தமிழரிற்கென தனியே தமிழ்க்கட்சி இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்ற பிரச்சாரமும் செய்வர்.

விகடன்
17-07-2009, 01:28 PM
இலங்கைத் தமிழரிலேயே கூட யாழ்ப்பாணத்தமிழரென்றும், மலையகத் தமிழரென்றும் வேறுபாடு உள்ளது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது!

இருக்கின்றதுதான். ஆனால் அந்த வேறுபாட்டிற்கான மூலம் எது என்று உங்களுக்கு தெரியுமா அய்யா?

இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். தமிழர்களிடையே இப்படிப்பட்ட வேறுபாடு தரப்படுத்தல் போன்றன இருப்பதால்த்தான் இன்னும் பிந்தங்கியே இருக்கிறான். என்று தமிழர் என்ற ஓர் தலைப்பின்கீழ் அனைவரும் அணி திரள்கின்றோமோ அன்றுதான் உலகில் நமக்கென்று தனிப்பேச்சும் மூச்சும் இருக்கும். அதுவரை எம்மை ஏய்ப்போர் இருக்கத்தான் செய்வர்

நூர்
17-07-2009, 03:15 PM
பதிலுரைக்கு நன்றி.விராடன் அண்ணா.

விகடன்
17-07-2009, 10:07 PM
மன்னிக்க வேண்டும் நூர். தாங்கள் குறிப்பிட்ட கேள்வியில் குறிப்பிடப்பட்ட ஓர் சொல்லை (”தமிழ் பேசும் ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் மட்டும்” ) தவறாக புரிந்து தற்காலத்தில் தமிழர்கள் படும் துன்பத்தையும் அவலத்தையும் எழுதிவிட்டேன்.

பின்னர்த்தான் தெளிந்தேன். நீங்கள் ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறச் சொன்ன முஸ்லீம் இனத்தவரை பற்றி கேட்டிருப்பதை விளங்கிக்க்கொண்டேன்.

அந்தக் காலங்களில் முஸ்லீம் இனத்தவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறச் சொன்ன பொழுது தமது உடமைகளை, சொத்துக்களை விட்டு விட்டு வெளியேறினார்கள்தான். ஆனால் அவர்களிற்கு உயிர்ச்சேதமோ, பொருளாதார தடையோ இருக்கவில்லை. பிற்காலங்களில் தடுப்புமுகாங்களில்கூட இருந்த சரித்திரமில்லை. இருந்திருந்தாலும் மிக சொற்ப அளவிலிருந்திருக்கலாம். நான் கேள்விப்படவில்லை.

ஆனால் தற்காலத்தில் தமிழர் படும் அல்லல் சொல்லில் அடக்கிவிடமுடியாது. மேலே நான் சொல்லிய விடயங்கள் தற்காலத்தில் உள்ளவையே.

உங்கள் கேள்விக்கு பதிலாகில் இதுதான்....

ஆமாம். பல சொத்துக்களை மட்டும் இழந்து வெளியேறியிருந்தனர். அதனால் பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்கொள்ளவேண்டியிருந்தமை மறக்கவோ மறுக்கவோ முடியாததுதான். முஸ்லீம் சமூகத்தில் சிலர் செய்த மன்னிக்கப்பட முடியாத குற்றத்திற்காக அனைத்து முஸ்லீம் சமூகத்தையும் தண்டிப்பதாக அமைந்த அந்த நடவடிக்கை கசப்பானதே.

நூர்
18-07-2009, 02:30 AM
என் கேள்வியை சரியாக புரிந்து கொண்டு,நடுநிலையான பதிலுரைக்கு நன்றி.விராடன் அண்ணா.

ஓவியன்
18-07-2009, 04:56 AM
ஒரு ஈழத்தமிழனின் முழு வலிகளை உணர வேண்டுமானால் ஒரு ஈழத்தமிழனாகவே வாழ்ந்து பார்க்க வேண்டும். வெறும் பத்திரிகைகளினது அரையும் குறையுமான தகவல்களை மையமாக வைத்து வாதம் செய்ய யாரும் முன்வருதல் கூடாது. இங்கே பலருக்கு யார் எது சொனாலும் அதற்கு எதிர்வாதம் வைத்தே பழக்கமாகத் தெரிகிறது, இந்த திரியினை முழுமையாகப் படித்தால் என் நெஞ்சில் வலிகள் மட்டுமே மீதமாக....

ஒரு ஈழத்தமிழனாக கூறுகிறேன், எங்களுக்கு உதவிதான் செய்யவில்லை, உபத்திரமாவது செய்யாமல் நம் போக்கிலேயே விட்டு விடுங்கள்...

நாம் எப்படியோ பிழைத்துப் போகிறோம், இத்தனை கொடுமைக்குள்ளும் இதுவரை எப்படியோ பிழைத்ததைப் போலவே.....

அமரன்
18-07-2009, 02:37 PM
"தமிழர்கள் தன்மானத்துடன் வாழ பெரியார் போராடினார்" இப்படித்தான் தமிழீழக்குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அப்படியான நல்விதைக்கூடமாக மன்றம் இருக்கும்படியாக அனைவரும் பார்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி.

-பொறுப்பாளர்

அய்யா
18-07-2009, 04:06 PM
ரிப்பீட்டு

அய்யோ ஆத்தாடி பார்றா.. மன்றத்தில் உங்களை யாரவது வந்து கேட்டார்களா ? பிரபாகரனை ஆதரியுங்கள் என்று..

அப்படியும் கேட்பாங்களோ..?

அது போக "தமிழர்களின் ஹீரோ - பிரபாகரன்!!!" என்ற இந்த கட்டுரையை எழுதியவரே எங்கள் உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு இந்திய தமிழர் தான் (இதற்காக அவரை இந்தியர் இல்லை என்று நிங்கள் கூறினால் கூட ஆச்சரிய படுவதிக்கு ஒன்றும் இல்லை)

இந்த கட்டுரையை அவர் தனது சொந்த blogக் இல்
பதிந்திருந்தார். இங்கு பார்பதுக்கு முன்பே நான் படித்து விட்டேன்..

இருக்கட்டுமே.. இந்தியத் தமிழர் அனைவரும் இவரைப் போலவே நினைத்திருந்தால், தேர்தல் முடிவு வேறாகியிருந்திருக்கும்.. பிரபாவும் ஏங்கிப்போய் வேற முடிவு எடுத்து கோடரியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை.

ஆமாம் கருணா , பிள்ளையான் , டக்லஸ்.... போன்றவர்கலுடன் உங்களை போன்ற ஒரு சில இந்திய தமிழர்களும் ஏற்கவில்லை....

கருணாவை வெரட்டிவிட்டுதானே இவ்வளவு கதிக்கு ஆளாகியிருக்கு புலிகள் இயக்கம். கிழக்கு மக்கள் சுகமாதான் இருக்காங்க. புலிகள் பின்னால போனதாலதான் வடக்கு மக்களுக்கு, இவ்வளவு துயரம்.

நீங்கள் தான் அப்படி கூறுகிறிர்கள்..
ஈழ தமிழர்களுக்காக இன்று வரை குரல் கொடுக்கும் (அவுதும் இலைங்கை அரசின் நேரடி அச்சுறுத்தளுக்கு ஆளான (கோத்த பாயவின்)) மனோ கணசேன் தன்னை ஒரு போதும் மலையாக தமிழர் என்று கூறியதில்லை.

"தமிழர்" "தமிழர் உரிமை" இது தான் அவர் பேச்சில் எப்போதும் இருக்கும்

அப்படி ஒரு வேறுபாடே இல்லை என்பது தங்கள் கூற்றானால், உங்களிடம் ஈழ விடயங்களை விவாதித்து ஆகப்போவது ஒன்றும் இல்லை.

நல்ல வேளை நண்பரே நீங்கள் பிரபலமானவராக இல்லை.இருந்தால் ஒரு வேளை முட்டை தான் :lachen001:

இதுபோன்ற பேச்சுகளால்தான், ஈழ் மக்கள் பட்ட பாட்டுக்கு உலக அளவில் ஏன்னு கேட்க நாதியே இல்லாமப் போய்விட்டது.

அய்யா
18-07-2009, 04:09 PM
கட்டபொம்மன் பிறந்த அதே மண்ணில் தான் எட்டப்பனும் பிறந்தான், அதற்காக எட்டப்பன் தமிழன் இல்லை என்றாகி விடுமா என்பது போன்றது உங்கள் வாதம்.

இலங்கையில், மனிதத்தை மதிக்காதவனிடம் காந்திவழியில் போர் புரிந்து ஆகாததால் தான் கத்தி(துப்பாக்கி) தூக்கினர் என்ற உண்மை தெரியாத நீங்கள் இனி இலங்கை பற்றி எழுதாதீர்கள். அவர்களை குறை கூறாதீர்கள்.

துப்பாக்கி தூக்கிதான் என்ன சாதித்தார்கள். எண்ணற்ற மக்களை துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கியதுதான் மிச்சம்.

இதைப் புரிந்துகொள்ளாத நீங்கள்தான் இலங்கை பற்றி எழுதலாமோ!

அய்யா
18-07-2009, 04:10 PM
இருக்கின்றதுதான். ஆனால் அந்த வேறுபாட்டிற்கான மூலம் எது என்று உங்களுக்கு தெரியுமா அய்யா?

இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். தமிழர்களிடையே இப்படிப்பட்ட வேறுபாடு தரப்படுத்தல் போன்றன இருப்பதால்த்தான் இன்னும் பிந்தங்கியே இருக்கிறான். என்று தமிழர் என்ற ஓர் தலைப்பின்கீழ் அனைவரும் அணி திரள்கின்றோமோ அன்றுதான் உலகில் நமக்கென்று தனிப்பேச்சும் மூச்சும் இருக்கும். அதுவரை எம்மை ஏய்ப்போர் இருக்கத்தான் செய்வர்

உங்களின் மேன்மையான கருத்தை ஏற்கிறேன் விராடன் அண்ணா!

அய்யா
18-07-2009, 04:16 PM
தலைவர் பிரபா மறைமுக ஆட்சிகாலத்தில்,
1லட்சம் பேர் (தமிழ் பேசும் ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் மட்டும்) பூர்வீக மண்ணில் இருந்து, 1மணி நேரத்தில் கட்டிய துணிதவிர வேறு ஏதுவும் இல்லாமல்,அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டார்கள். என கேள்விபட்டேன், உண்மையை தெரிந்தவர்கள் யாராவது சொல்வீர்களா?

ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் ஏகபோக தலைவர்கள் என்று தண்டோரா போடாதகுறையாக புகழப்பட்ட புலிகளின் அக்கிரமச் செயலை இன்னும் முஸ்லீம் மக்கள் மறக்கவில்லை, மன்னிக்கவும் இல்லை நூர்.

புலிப்பினாமிகள் அதுகுறித்து விவாதிக்க முன்வரமாட்டார்கள். இலங்கை முஸ்லீம்கள் மட்டுமல்ல, டெலோ, ஈபிஆர் எல் எஃப் உள்ளிட்ட ஏனையக் குழுக்களில் இருந்த தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்ததும் புலிகள் இயக்கம் தான்.

ஊடறுப்பு தாக்குதலில் வல்லவரான கருணாவிடம் மட்டும் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை.

அய்யா
18-07-2009, 04:38 PM
ஒரு ஈழத்தமிழனின் முழு வலிகளை உணர வேண்டுமானால் ஒரு ஈழத்தமிழனாகவே வாழ்ந்து பார்க்க வேண்டும். வெறும் பத்திரிகைகளினது அரையும் குறையுமான தகவல்களை மையமாக வைத்து வாதம் செய்ய யாரும் முன்வருதல் கூடாது. இங்கே பலருக்கு யார் எது சொனாலும் அதற்கு எதிர்வாதம் வைத்தே பழக்கமாகத் தெரிகிறது, இந்த திரியினை முழுமையாகப் படித்தால் என் நெஞ்சில் வலிகள் மட்டுமே மீதமாக....

ஒரு ஈழத்தமிழனாக கூறுகிறேன், எங்களுக்கு உதவிதான் செய்யவில்லை, உபத்திரமாவது செய்யாமல் நம் போக்கிலேயே விட்டு விடுங்கள்...

நாம் எப்படியோ பிழைத்துப் போகிறோம், இத்தனை கொடுமைக்குள்ளும் இதுவரை எப்படியோ பிழைத்ததைப் போலவே.....

உங்களைப் புண்படுத்துவது என் நோக்கமில்லை ஓவியன் அண்ணா. ஒருவேளை அப்படி ஒரு சாயல் இருக்குமானால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ஈழ மக்களுக்கு ஒரு விடியல் வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அப்படி ஒரு விடியல் கிட்ட, ஈழவர் அனைவரும் ஒற்றுமையாக ஒரு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். எவரையும் பகைத்தல் ஆகாது. ஒவ்வொருவரும் தன்னாலியன்ற பங்களிப்பை ஆக்கபூர்வமான முறையில் நல்கவேண்டும்.

இஸ்ரேல் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதுபோன்ற ( அது போன்ற தான்.. அதே என்று சொல்ல யூதர்களுக்கிருந்த வர்த்தக ஆளுமை ஈழ மக்களுக்கு இல்லையென்னும் நிதர்சனம் என்னைத் தடுக்கிறது) ஒரு வேள்விக்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

ஒரே நாளில் முடிவதல்ல அது!

தற்போதைக்கு, குறைந்த பட்சம் ஒரு சமஷ்டி அமைப்புக்கு ஈழ மக்கள் தயாராக வேண்டும்.

தனி நாடு என்னும் தற்போது நிறைவேறாத பகற்கனவையும், அதைப் புலிகள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் விட்டொழிக்க வேண்டும்.

இலங்கையின் பெரும் அன்னியச் செலாவணி உங்களால்தான் கிடைக்கிறது. அந்த துருப்பு சீட்டை தக்க அளவில் பயன்படுத்தி, உங்கள் சொந்தங்களுக்கு ஆகக்கூடிய வசதிகளையும், உரிமைகளையும் பெறவேண்டும்.

ஏதோ எனக்குத் தெரிந்தது இதுதான். ஏற்றாலும் சரி. அல்லது, கிளிநொச்சி இழப்பு ஒரு பின்னடைவு என்ற என் கூற்றை ஒதுக்கித் தள்ளியதுபோல, தள்ளினாலும் சரி.

இனி இத்திரியில் அமைதி காக்கிறேன்.

நூர்
18-07-2009, 06:12 PM
மிக பொருமையாக அத்தனை விஷயங்களையும்,அழகாக தந்து இருக்கிறீர்கள்.நன்றி ஐயா.

தூயவன்
19-07-2009, 07:21 AM
அப்படியும் கேட்பாங்களோ..?

இருக்கட்டுமே.. இந்தியத் தமிழர் அனைவரும் இவரைப் போலவே நினைத்திருந்தால், தேர்தல் முடிவு வேறாகியிருந்திருக்கும்.. பிரபாவும் ஏங்கிப்போய் வேற முடிவு எடுத்து கோடரியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை.

தவறு நண்பரே.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. இருபினும் கூறுகிறேன்..
இந்தியா மிகப் பெரிய நாடு 100 கோடி மக்களுக்கு மேல் இருகின்றனர். பல மாநிலங்கள் இருகின்றன.. தமிழ் நாட்டில் 6 கோடி மக்களுக்கு மேல் இருகின்றனர்.. நிங்கள் சொல்லவது போல வாக்களிக்க தகுதி பெற்ற அனைவரும் வாக்களித்திருந்தால் கூட மற்ற மாநிலங்களின் மக்களின் வோட்டை பொருத்தே தேர்தல் முடிவு அமையும்.

கருணாவை வெரட்டிவிட்டுதானே இவ்வளவு கதிக்கு ஆளாகியிருக்கு புலிகள் இயக்கம். கிழக்கு மக்கள் சுகமாதான் இருக்காங்க. புலிகள் பின்னால போனதாலதான் வடக்கு மக்களுக்கு, இவ்வளவு துயரம்.

புலிகள் அமைப்பு மிகவும் கட்டு கோப்பான அமைப்பு.. யார் தவறு செய்தாலும் பார பச்சம் இன்றி தணடிக்க படுவார்கள்..
கருணா செய்த தவறுகள்...

1. தமிழ் கலாச்சாரத்துக்கு மாறாக வேறு பெண்களுடன் கள்ள உறவு வைதிருந்தமை.

2. இயக்கத்துக்கு சேர வேண்டிய பணத்தை தனது (குடும்ப) நலனுக்காக பயன்படுத்தியமை.. கோடி கணக்கான பணத்தை கொள்ளை அடித்தமை.

3. இது போக (இயக்கத்தில் இருந்து பிரிய முன்பே)
இலைங்கை இராணுவத்துடன் தொடர்புகளை வைத்திருந்தமை...

இதை அனைத்தும் பிரபாகரன் அறிந்தவுடன் கருணாவை பேசுவதற்காக வன்னிக்கு கூப்பிட்டார்.
ஆனால் தான் செய்த தவறுகள் தலைமைக்கு தெரிந்து விட்டது என்று தெரிந்தவுடன் தலைமை மீது பழிகளை போட்டு விட்டு தப்பித்து விட்டார். இது தான் நடந்த உண்மை.

//கிழக்கு மக்கள் சுகமாதான் இருக்காங்க//

காமடி பணதிங்கப்பா. உண்மை நிலவரம் தெரியாம பேசாதிங்க...

இதுபோன்ற பேச்சுகளால்தான், ஈழ் மக்கள் பட்ட பாட்டுக்கு உலக அளவில் ஏன்னு கேட்க நாதியே இல்லாமப் போய்விட்டது.

ஈழ பிரச்சனை ஐ.நா வரை சென்றதே தமிழருக்கு கிடைத்த வெற்றி அது போக அமெரிக்க ,பிரிடன் போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை மிக பெரிய வெற்றி...
இன்று வரை அமெரிக்க ,பிரிடன் ,கனடா போன்ற நாடுகள் இலங்கைக்கு கிடைக்க இருக்கும் கடனுதவியை தடுத்து நிறுத்தி வருகின்றன.. காரணம் இலைங்கையின் தமிழர்களுக்கு எதிரான மனிதயுரிமை மீறல்கள்.

துப்பாக்கி தூக்கிதான் என்ன சாதித்தார்கள். எண்ணற்ற மக்களை துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கியதுதான் மிச்சம்.

தமிழர்களின் பிரச்சனை இன்று பேசபடுகின்றது என்றால் அது புலிகளின் ஆயுத போரட்டத்தால் தான்.
ஆயுத போராடம் தோல்வி அடைந்திருந்தாலும் உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் புலிகொடியை கையில் எடுத்திருக்கின்றமை புலிகளுக்கு கிடைத்த வெற்றி.

போராட வடிவம் மாறலாம் இலக்கு ஒன்று தான்

தலைவர் பிரபா மறைமுக ஆட்சிகாலத்தில்,
1லட்சம் பேர் (தமிழ் பேசும் ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் மட்டும்) பூர்வீக மண்ணில் இருந்து, 1மணி நேரத்தில் கட்டிய துணிதவிர வேறு ஏதுவும் இல்லாமல்,அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டார்கள். என கேள்விபட்டேன், உண்மையை தெரிந்தவர்கள் யாராவது சொல்வீர்களா?

உண்மைதான்.. மிக பெரிய தவறு ஆனால் அதிலும் சில விடயங்களை நிங்கள் சொல்ல மறத்து விட்டீர்கள்.
பல முஸ்ஸிம் குழுக்கள் அற்ப ஆசைகளுக்காக புலிகளுக்கு எதிராக செயற்பட்டமை.
யாழ் பள்ளி வாசிலில் ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டமை.

இதற்காக ஒட்டு மொத்த முஸ்ஸிம்களையும் துரத்தியமை மிக பெரிய தவறு..

இந்த புலிகளின் செயற்பாட்டை நானும் ஏற்க வில்லை.

ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் ஏகபோக தலைவர்கள் என்று தண்டோரா போடாதகுறையாக புகழப்பட்ட புலிகளின் அக்கிரமச் செயலை இன்னும் முஸ்லீம் மக்கள் மறக்கவில்லை, மன்னிக்கவும் இல்லை நூர்.

"புலிகளின் ஆயுத போராடம் தோற்றால் சிறு பான்மையினரின் உரிமைகள் முற்று முழதாக பறிக்க படும் புலிகள் தோற்றால் முஸ்லீம்களின் உரிமைகளும் கேள்வி குறியாகும்" என்று பேரியல் அஸ்ரப் வெளிபடியகவே ஒரு தனியார் தொலைகாட்சியின் அரசியல் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இதே கருத்தை தான் முஸ்லீம் காங்கரசின் தலைவர் ராவ் கக்கிமும் கூறியிருந்தார்.

சமாதான காலங்களில் இவர்கள் பிரபாகரனையும் வேறு பல புலிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசி இருந்தமை உங்களுக்கு தெரியுமா ?

முஸ்லீம்களுக்கு புலிகள் மீது வருத்தம் இருப்பது என்னமோ உண்மை தான்.. ஆனால் புலிகள் இல்லா விட்டால் ஒட்டு மொத்த சிறு பான்யினரின் உரிமைக்கும் கேள்வி குறியாகும் என்பதை பல முஸ்லீம்கள் உணர்திருந்தனர் .

ஈழ மக்களுக்கு ஒரு விடியல் வேண்டும் என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அப்படி ஒரு விடியல் கிட்ட, ஈழவர் அனைவரும் ஒற்றுமையாக ஒரு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். எவரையும் பகைத்தல் ஆகாது. ஒவ்வொருவரும் தன்னாலியன்ற பங்களிப்பை ஆக்கபூர்வமான முறையில் நல்கவேண்டும்.

மிக்க மகிழ்ச்சி நண்பரே.. இந்த வார்த்தைகளுக்காக எனது மனபூர்வமான நன்றிகள்..
இந்த பந்தியில் உள்ள வசனங்கள் நிதர்சனமானவை.
முழுமையாகாக ஏற்கிறேன்:icon_b:

இனி இத்திரியில் அமைதி காக்கிறேன்.

நானும் அமைதி அமைதி அமைதி......
அய்யா உங்கள் மனது புண்படும் படி பேசி இருந்தால் இந்த தம்பியை மன்னித்து விடுங்கள்.(பாவம் சின்ன புள்ள)
நான் அய்யா போன்ற நண்பர்களை இழக்க விரும்பவில்லை.
மன்றத்தில் அப்போதும் அமைதியும் அன்பும் நிலவட்டும். வேற்றுமைகளை துறந்து தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமையுடன் இருப்போம்.

நூர்
19-07-2009, 07:43 AM
உங்கள் கருத்துக்கும் நன்றி.

அமரன்
19-07-2009, 01:08 PM
மன்றம் மீதான உங்கள் பற்றுக்கு நன்றி நண்பர்களே!

-பொறுப்பாளர்

அமரன்
19-07-2009, 01:18 PM
இஸ்ரேல் கட்டியெழுப்பப்பட்ட வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதுபோன்ற ( அது போன்ற தான்.. அதே என்று சொல்ல யூதர்களுக்கிருந்த வர்த்தக ஆளுமை ஈழ மக்களுக்கு இல்லையென்னும் நிதர்சனம் என்னைத் தடுக்கிறது) ஒரு வேள்விக்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும்.
ஒரே நாளில் முடிவதல்ல அது!

தரமான கருத்து. ஆரத்தழுவுகிறேன் அய்யா.

யூதர்களிடம் என்றும் இருக்கும் யூதர்கள் என்ற ஒற்றுமையும் தமிழர்களிடத்தில் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு அற்றுப் போய்விட்டது அய்யா. தமிழ் பேசும் மக்கள் என்ற நிலையிலிருந்து இன, மத ரீதியாக விரிசல் விழத் துவங்கி இன்று.... பல பரிமாணங்களில் பிளவு பட்டிருக்கும் தமிழர்களிடத்தில் யூதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் குடிபுகாது. போடுறதைத் தின்று விட்டு கொடுக்கிறதைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சுரனையற்ற பிறவியாகவே ஈழத்தில் வாழும் தமிழன் காலம் தள்ளவேண்டியதுதான். இந்நிலைக்கு நானும் காரணம் என்று எண்ணும் ஒவ்வொருவனும் தன் நெஞ்சே தன்னை தின்னும் கொடுமைக்கு ஆளாகவேண்டியதுதான். அது புலியானாலும் சரி, புலி எதிர்ப்பாளனானாலும் சரி, புலி ஆதரவாளனானாலும் சரி, சாமான்ய மனிதனாலும் சரி, இதற்கு விதிவிலக்கல்ல.

அய்யா
19-07-2009, 02:05 PM
அனைவருக்கும் நன்றி!

ஆரோக்கியமான விவாதத்துக்கு வழிவகுத்த பட்மனுக்கு சிறப்பு நன்றிகள்!

அமரனண்ணாவின் பொறுப்பான வழிநடத்தல் மற்றும் கருத்துகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

என் எதிர்ப்பு, கருத்துகளுக்குத் தானே தவிர, கருத்திட்டோருக்கு அல்ல என்பதைப் புரிந்துகொண்ட உறவுகளுக்கு தலை வணங்குகிறேன்.