PDA

View Full Version : வன்னியில் 25000 பேர் பலி - சூசை.அமரன்
17-05-2009, 10:58 AM
விடுதலைப்புலிகளின் கடற்தளபதி சூசை அவர்கள் ஐரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளினூடாக களத்தில் இருந்து நேரடியாகப் பேசினார். அவருடைய பேச்சின் சாரம்.


2 X 2 கிலோமீட்டருக்குள் உள்ள எங்கள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் 25000 பேர் வரையான மக்கள் பலியாகியுள்ளனர். 25000 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயப்பட்டவர்களும் மீதமிருப்போரும் பதுங்கு குழிகளுக்குள் தங்கியுள்ளார்கள்.

http://www.tamilnational.net/data/2009/may/17/Soosai_TamilNational_17May_2009.mp3

இவர்களை மீட்க ஐ.நா, ஐ.சி.ஆர்.சி உள்ளடங்கலான அமைப்புகளுடனும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை.

புலம்பெயர் மக்களே உங்கள் எழுச்சியின் மூலம் மக்களைக் காத்திடுங்கள்.. மக்களைச் சர்வதேசத்திடம் சேர்ப்பதுக்காக எங்கள் இறுதிக் குருதிச் சொட்டு இருக்கும் வரை போராடுவோம்.

---------------

இலங்கை முழுவதும் படையினர் கட்டுப்பாட்டில் வந்தது என்று இன்று காலை அறிவித்து கோலாகலக் கொண்டாட்டங்களை ஸ்ரீலங்கா அரசு முன்னெடுது வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்பா
17-05-2009, 12:42 PM
கலைஞர் எப்படியும் தமிழ் மக்களை காப்பாற்றிவிடுவார்... (தன் மக்களை)
சோனியா எப்படியும் போரை நிறுத்திவிடுவார் (அனைவரும் கொல்லப்பட்டவுடன் போர் நிறுத்தி தானே ஆக வேண்டும்)

தமிழர்களுக்கு சம உரிமை ராஜபக்ஷே அளிப்பார் (இருந்தால் தானே அந்த பிரச்சனை)

தூயவன்
17-05-2009, 12:50 PM
ஹ்ம்ம் நானும் கேட்டேன் ... :(

நேசம்
17-05-2009, 01:10 PM
கவலைப்பட கூடிய செய்தியாக இருக்கிறது.

ஆதவா
17-05-2009, 01:23 PM
இருபத்தி ஐந்தாயிரமா??? கண்ணீர்தான் இதற்கு பதில்!!??!!

ரங்கராஜன்
17-05-2009, 02:03 PM
ஒரு உயிர் உருவாக பத்து மாதங்கள் ஆகிறது, ஆனால் பல்லாயிர கணக்கான உயிர்கள் சில வினாடிகளில் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறது. கடவுள் ஏன் கல்லானான்??????????????????

அமரன்
17-05-2009, 06:41 PM
கடவுள் ஏன் கல்லானான்??????????????????
ஏன்னு கண்ணதாசன் சொல்லி இருக்காரே..

அக்னி
17-05-2009, 09:00 PM
உரிமையை இழந்தோம்... உறவையும் இழந்தோம்... உணர்வை இழக்கலாமா...

உணர்வுகள் ஓங்கி ஒலிக்கின்ற போதும்,
மௌனித்தே இருக்கின்றது உலகம்...

உலகம் மௌனித்துப்போன இந்த நொடிகள்,
மரணித்த தமிழர்களுக்காக ஓர் நாள் கதறியழும்...

அந்த நாள் வரும்...
ஆனால் உறவுகளின் உயிர்கள்..?

ஒடுக்கப்படும் மக்களே,
சர்வதேசத்தை நம்பினால், சர்வநாசம் என்பதனை,
மனதிற் கொள்ளுங்கள்...

ஓவியன்
18-05-2009, 03:30 AM
சூசை அண்ணாவை இலங்கை அரசாங்கம் பலிகொண்டதாக அறிவித்து பல மாதங்களின் பின் அவர் குரல்....

ஆனால் அது சொல்லும் செய்தி.....

இனி நாமென்ன சொல்ல, உலகமெங்கும் உலாவும் ஈழத்தமிழரென்ற நாடோடிக் கூட்டத்தில் நானும் ஒருவன் - அவ்வளவுதான்.

விகடன்
18-05-2009, 04:37 AM
உண்மைதான். எமது வாழ்க்கை ஓர் நாடோடி வாழ்க்கை போலாகிவிட்டது. அடக்கு முறையினை எதிர்த்து போராடிய ஒரே ஒரு தமிழினம் இன்று உலகமே கைவிடப்பட்டோ அல்லது அனுதாபச் செய்திகளை கேட்டுக்கொண்டோ இருக்கும் நிலை.

தூயவன்
18-05-2009, 04:43 AM
நமக்காக இனி யாரும் இல்லை

praveen
18-05-2009, 05:24 AM
நமக்காக இனி யாரும் இல்லை

நண்பர்களே, ஆறுதலுக்காக அல்லது பொய்யாக கூறவில்லை, எனக்கு ஏற்பட்ட ஒரு நம்பிக்கையில் சொல்கிறேன்.

ஆயுத நடவடிக்கைகளில்(அதுவும் தீவிரவாதத்திற்கு எதிரானது என்ற போர்வையில்) தமிழ் மக்கள் பாதிப்படைந்ததை தான் தமிழகம் தடுக்க முடியவில்லை, இனி இலங்கை அரசு தமிழர்களுக்கு சம உரிமை தர மறுத்தால் தமிழக மக்கள்(அரசியல் தலைவர்கள்) நிச்சயம் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.

இத்தனை நாளும் விடுதலைப்புலிகள் என்று சொல்லியே மத்திய அரசு தமிழர்களுக்கு உதவாமல் ஏமாற்றி வந்தது, இனி அப்படி சொல்ல முடியாது.

காலம் மாற காட்சிகளும் மாறும், பொறுத்திருந்து பாருங்கள்.

அமரன்
18-05-2009, 07:14 AM
இறந்தவர்கள் எண்ணிக்கையில் முரண்பட்டாலும் இந்தச் செய்தியைப் படியுங்கள்.
http://www.puthinam.com/full.php?2b1VoUe0dIcYe0ecAA4o3b4g6DV4d3f1e3cc2AmS3d434OO3a030Mt3e

பாரதி
18-05-2009, 08:19 AM
1951-2001 வரை படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் குறித்த விபரங்களை அறிய, 3.94 எம்.பி அளவுள்ள பி.டி.எஃப் கோப்பை தரவிறக்கம் செய்ய http://www.puthinam.com/full.php?2bZTuYe0dHj740ecJJ4T3b4f5Hn4d3e3d3cc2HrT3d424PS3b022Rt3e சுட்டிக்கு செல்லுங்கள்.