PDA

View Full Version : தமிழ் கூறும் நல் உலகிற்கு ஒரு கெட்ட செய்தி



praveen
17-05-2009, 09:36 AM
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இத்தகவலை இதுவரை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,

இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

இரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

source : thatstamil.

அமரன்
17-05-2009, 09:38 AM
இனியாவது அங்கே தமிழனை வாழ வையுங்கள் உலகே.

anna
17-05-2009, 11:44 AM
இலங்கை அரசின் கூற்றின்படி பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டனர் அல்லவா? இனிமேலாவது எங்கள் இனம் அங்கு இருந்தால் வாழவிடுங்கள்.

இன்பா
17-05-2009, 12:34 PM
பிரபாகரன் தேர்தலுக்கும் முன்பாகவே கொல்லப்பட்டுவிட்டார்... என்று சிலர் சொல்கிறார்கள்...

தூயவன்
17-05-2009, 12:48 PM
இங்கும் ஒரு சிலர் கூறுகின்றனர்.. பிரபாகரன் இறந்து உண்மையா பொய்யா என்பதை விட அவரது உடல் நிச்சயமாக சிங்களவர்களிடம் மாட்டாது.

அது மட்டும் இல்லை .... இறுதியாக கிடைத்த தகவல் படி 800 சதுர மீற்றருகுள் ராணுவம் கட்டுபடுத்தி உள்ளது .

இது வரை பிரபாகரன் இறக்கவில்லை என்றால் கூட அடுத்த சில மணி நேரத்தில் அது நடத்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. :(

praveen
18-05-2009, 05:16 AM
இந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு கிளம்பினேன், தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா என்று பதைபபதைப்போடு பார்த்தேன்.

இரவு செய்திகளில் கலைஞர் தொ.கா யில், சுப.வீரபாண்டியன் சொன்னதாக ஒரு செய்தி சொன்னார்கள், அதில் இருந்து இந்த செய்தி பொய் என்று தெரிந்து கொண்டேன்.

சிங்கள ராணுவம் உளவியல் ரீதியாக மக்களை பாதிக்கும் வண்ணம் இந்த செய்திகளை பரப்பியிருக்கிறது என்றார். அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று உறுதிபடுத்தியிருந்தார்.


இதற்கிடையில் சென்னையில் காங்.தலைவர்கள், மத்திய அரசு மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கும், இலங்கை தூதரகம் இவற்றிற்கெல்லாம் பாதுகாப்பு கூட்டப்பட்டதாகவும், வர்த்தக நிறுவனங்களை பூட்ட சொல்லி சிலர் ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் தெரிகிறது.

சிவா.ஜி
18-05-2009, 06:14 AM
பிரபாகரனின் மகன் சார்லஸ் கொல்லப்பட்டதாக செய்தி கேட்டேன். உண்மையா நண்பர்களே? இங்கு துபாய் ரேடியோவில் சொன்னார்கள். இருந்தும் நம்பமுடியவில்லை.

அமரன்
18-05-2009, 07:07 AM
என்னைப் பொறுத்தவரை பிரபாகரன், பொட்டு அம்மான், நடேசன், சூசை போன்றோர் வீரச்சாவடைவதோ பிடிபடுவதோ நடக்காது என்ற நம்பிக்கை உள்ளது. சார்ள்ஸ் ஆன்டனி வீரச்சாவு உண்மையானதாக இருக்கலாம்.

ஏனெனில் வெளித்துரோகங்கள் மட்டுமல்லாது உள்ளகத் துரோகங்களும் மலிந்துவிட்ட நிலையில் களமுனையில் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைப் பொறுப்பாக்க வேண்டிய தேவை விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக செய்திகள் கசிந்திருந்தன.

எப்படி ஆனாலும் காலம்தான் உண்மையைச் சொல்லும்.

இன்பா
18-05-2009, 07:54 AM
துரோகம், வஞ்சகம், போர் விதி மீறல்கள்

அது மட்டுமல்லாது அமரன் அவர்கள் சொன்னதுப் போல உள்ளகத் துரோகங்கள்

தலை குனிவதை தவிர வேற்றன்ன செய்ய முடியும்....

இன்பா
18-05-2009, 08:25 AM
வன்னி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை சுற்றி வளைத்தது ராணுவம். இதில் பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், அவரது உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படைப் பிரிவுத் தலைவர் சூசை ஆகியோரும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது

thatstamil.com

இன்பா
18-05-2009, 08:39 AM
பதவிக்காக கண்டதையும் புசிப்பர்
வாக்குகளுக்காக காலையும் பிடிப்பர்
பணத்துக்காக பல்டியும் அடிப்பர்
மேடையில் மட்டுமே வீரம் காட்டி
இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பார்
சுயநல நாய்கள்

நீ தான் வீரன்., இப்போதாவது நல்லுலகம் செல்.,

வீரத் தலைவனுக்கு வீர வணக்கங்கள்...

அம்மா தாயே...
உன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா
உன் சூழ்ச்சி வெற்றியடைந்ததா
இரத்தமும் சதையையும் கண்குளிர கண்டாயிற்றா
உன் பகை தீர்ந்ததா
எஞ்சிய மக்களையாவது விடு

ஆனால் உனக்கு நல்லுகம் கிடையா
சாபமிடுகிறேன், இதயமற்றவளே......!!!!!!

அமரன்
18-05-2009, 08:40 AM
என் சிங்களச் சினேகிதி ஒருத்தியும் குறுச்சேதியில் தகவல் சொன்னாள்..

புலியின் கதறல் உருமா கட்டிய கவிதை..
உறுதிப்படுத்தும்வரை வேண்டாமே அழுகை..

ரங்கராஜன்
18-05-2009, 09:18 AM
சன் தொலைக்காட்சியில் FLASH NEWS போட்டு இருக்கிறார்கள்

பிரபாகரன் கொல்லப்பட்டார், முல்லைத்தீவை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல்

தாமரை
18-05-2009, 09:21 AM
http://news.rediff.com/report/2009/may/18/prabhakaran-shot-dead-says-sri-lankan-army.htm

இன்னும் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இல்லை

However, the army is withholding an official announcement till a DNA test of the bodies are conducted.

தூயவன்
18-05-2009, 09:25 AM
பலர் விரும்பாதது சிலர் விரும்பியது நடந்து விட்டது..
தனக்காக இல்லாமல் ஈழத்துகாக வாழ்ந்து.. இறுதி வரை அடி பணியாமல் போரடி வீர மரணம் அடைந்த வீரத் தலைவனுக்கு வீர வணக்கங்கள்

நேசம்
18-05-2009, 09:25 AM
டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி வந்துள்ளது.

ஆதவா
18-05-2009, 09:39 AM
times now, NDTV போன்றவற்றில் வீடியோ கொடுத்திருக்கிறார்கள்.. சிரிலங்கா அரசு இச்செய்தியை உறுதிபடுத்தியுள்ளது!!!!

இச்செய்தி உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் கவலை அளிக்கும் செய்தி!!
மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது!!!

இனியாவது தமிழ் இன மக்களுக்கு ???!!!!!!

ரங்கராஜன்
18-05-2009, 09:40 AM
பல வருடமாக வீரனாக வாழ்ந்து வீரனாகவே மறைந்த பிரபாகரனின் ஆன்மா சாந்தி அடையட்டும். (அவரின் ஆன்மா எப்பொழுது சாந்தி அடையும் என்று தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்)

http://www.youtube.com/watch?v=vt9lxePHuc0&feature=related

http://www.youtube.com/watch?v=EEijY7vDHy8&feature=related

ஓவியன்
18-05-2009, 09:49 AM
சன் தொலைக்காட்சியில் FLASH NEWS போட்டு இருக்கிறார்கள் [/B]

ஆயிரமாயிரமாக மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு ப்ளாஸ் நியூஸ் போடாத சன் தொலைக்காட்சி, இப்போது மட்டும் போட்டுக் கொண்டிருக்கிறதாக்கும்...

ஆதவா
18-05-2009, 09:49 AM
http://www.timesnow.tv/videoshow/4317131.cms

jeeva.p
18-05-2009, 09:57 AM
தொலைக்காட்சியில் வந்தது, பத்திரிகையில் வந்ததென்று கூறாமல் தயவு செய்து உண்மையைக் கூறுங்கள். யாராவது எங்கள் அண்ணாவினைப் பற்றிய உண்மையான செய்தியை அறிந்தால் தயவு செய்து நம்முடன் பகிர்ந்து கொள்ளவும்.

நன்றி


Please tell the truth, don't tell which is coming in news paper & TV.
If any one can tell the truth about our ANNAN, Please let us know. thanks

ஓவியன்
18-05-2009, 10:07 AM
ஜீவா உங்கள் கவலை நியாயமானதே, அரசாங்கம் உறுதிப்படுத்தியதாக தொலைக்காட்சி செய்திகள் கூறினாலும் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் இன்னமும் அவ்வாறான செய்திகள் வரவில்லை...

என்னால் முடிந்தளவில் தொடர்புகள் மூலம் முயன்று கொண்டிருக்கிறேன், உறுதிப்படுத்த முடிந்தால் நான் உறுதிப்படுத்திய செய்தியினைப் பகிர்வேன்...

தூயவன்
18-05-2009, 10:09 AM
http://www.youtube.com/watch?v=_vbY8VtzwwE

இன்பா
18-05-2009, 10:17 AM
நல்லவர் இவ்வுலகில்
வாழத் தகுதியில்லை
என்று இழுத்துக்
கொண்டாயா ????

கண்ணா...!!!

துக்கம் நெஞ்சடைக்க...!!!

anna
18-05-2009, 11:14 AM
நியூஸ் சேனல்களில் எல்லாம் ஒளிபரப்புகின்றனர்.ஆனால் பழைய படங்களைத்தான் காட்டுகின்றனர்.பிரபாகரனின் மகன் சார்லஸ் உடல் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும். சார்லஸின் இறந்த உடலின் படம் வெளியிடப்பட்டுள்ளது.
http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_85113161803.jpg

வெற்றி
18-05-2009, 11:18 AM
மாறுபட்ட முரணான செய்திகள் தான் தொடர்கிறது...
தமிழக செய்தி சேனல்கள் எல்லாம் மௌனமாக இருக்கிறது....24*7 இன்னும் உறுதி செய்ய வில்லை..ஆனால் டைம்ஸ் டுடே இறந்து விட்டார் என சொல்கிறது (ஆனால் உறுதிப்படுத்த டி.என்.ஏ சோதனை நடப்பதாக சொல்கிறது )

miindum
18-05-2009, 12:08 PM
இன்றுதான் இந்த வடக்கத்திய விபீஷணர்களுக்கு திருப்தியாக இருக்கும்....
விடுதலை உணர்வை இந்த சிங்கள நாய்களால் கொல்லமுடியுமா....

Honeytamil
18-05-2009, 12:11 PM
ஈழத் தமிழர்களின் தேசியத் தலைவரான பிரபாகரனை கொலை செய்வதற்கு 1989 ஆம் ஆண்டே உளவு நிறுவனங்கள் திட்டம் தீட்டின. அதற்காக, விடுதலைப் புலிகள் இயக்கத்திற் குள்ளேயே ஆட்கள் தயாரிக்கப்பட்டனர். 1989 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி இந்தியாவின் நாளேடுகளில் பிரபாகரன்,அவரது இயக்கத்தில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்துவிட்டார் என்ற செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டது. ‘எந்தச் செய்தி யானாலும் ஆதாரத்துடன்தான் வெளியிடுவோம்’ என்று மார்தட்டும் ‘இந்து’ நாளேடும், இந்தப் பொய்ச் செய்தியை வெளி யிட்டது. உளவு நிறுவனங்கள் தயாரித்திருந்த திட்டம் தான் செய்தியாகப் பரப்பப்பட்டது என்பதுதான் உண்மை. ஊகங் களுக்கே இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே அது இருந்தது.

1984 ஜூலை 24 ஆம் தேதி ‘இந்து’ நாளேடு வெளியிட்ட செய்தியை அப்படியே கீழே வெளியிடுகிறோம்.
“சென்னை-ஜூலை 13 - ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர்’ வி. பிரபாகரன், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சில நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது. சிறீலங்காவின் வடக்கு கிழக்கு மாகாண அரசியல் வட்டாரங்கள் இந்த செய்தியைத் தெரிவித்துள்ளன. சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் உடல்,வவுனியாவி லிருந்து வட கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்ற கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. வடக்கு கிழக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறு அரசியல் பிரிவினர், கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றியே பேசி வருகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக, மாத்தையா அறிவித்துக் கொண்டுவிட்டார். இப்படி மாத்தையா தன்னை தலைவராக அறிவிக்கும் “வீடியோ கேசட்” மக்களிடையே வலம் வந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் -மாத்தையாவும் காயமடைந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் பிரதிநிதியிடம், இது பற்றி தொடர்பு கொண்டு கேட்டபோது, இது பற்றி எதுவும் சொல்ல மறுத்ததோடு, இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.”

-என்று செய்தி வெளியிட்டது ‘இந்து’ ஏடு.

புலிகளின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கிட்டுவும், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரபாகரனுக்கு எதிரான போட்டிக் குழு,பிரபாகரனையும், அவரது ஆதரவாளர்களையும் வவுனியா காட்டுப் பகுதிக்குள் முடக்கிவிட்டது என்றும், அந்தப் பகுதியில் இரு தரப்பினருக்கு மிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், முக்கியமான பலரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது. இரு போட்டிக் குழுவினரும் தங்களுக்குள் இந்தத் தகவல்களை பேசிக் கொண்டபோது, வவுனியாவுக்கு அருகே உள்ள கொரியங்குளம் கிராமத்தில் இந்த உரையாடல்கள் இடைமறித்துக் கேட்கப் பட்டன என்றும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. பிரபாகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அனந்த பெரியகுளம் கிராமத்தில்,கடந்த இரண்டு நாட்களாக மக்கள் அவருக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி வருவதாகவும் ‘இந்து’ ஏட்டின் செய்தி கூறியது. இப்படி விரிவான“உண்மைகளை” வெளியிட்ட “தரம் நிறைந்த” ‘இந்து’ பார்ப்பன ஏடு, (4 பத்திகள் - 450வார்த்தைகள்) செய்தியின் கடைசியில் இவை எல்லாம் புரளிகள் என்று விடுதலைப்புலிகள் வெளியிட்ட மறுப்பை இரண்டே வரிகளில் போட்டு முடித்துவிட்டது. உயிர்த் துடிப்புடன் உலகமே வியக்கும் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்திய ஒரு தலைவருக்கு அவர் உயிருடன் இருக்கும் போதே, ‘மரணச் செய்தி’ வெளியிட்ட, இந்த ஏடுகள், அதற்காக ஒரு வருத்தம்கூட இது காலம்வரை தெரிவித்ததில்லை. இந்த செய்திக்கான பின்னணி என்ன? இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டு உருவாக்கிய சதித் திட்டம் தான்,இந்த செய்தியின் பின்னணி. தங்களுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் இயக்கத் திலேயே - மாத்தையாவைப் பிடித்து அவர் மூலம், பிரபாகரன் வாழ்வை முடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது.

ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து சிறீலங்காவின் அதிபர் பதவிக்கு வந்த பிரேமதாசா, வடக்கு கிழக்கில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்ததைக் கடுமையாக எதிர்த்து வந்தார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாசா, “இந்திய அமைதிப்படை உடனடியாக வெளியேற வேண்டும்” - என்று அறிவித்ததோடு, வெளியேறுவதற்கு காலக் கெடுவையும் நிர்ணயித்தார். 1989, ஜூலை 29 தான் அவர் நிர்ணயித்த காலக் கெடு. அந்தத் தேதிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதுதான் ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு அமுலுக்கு வந்த நாள். 1989 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதியோடு, ஒப்பந்தத்தின் இரண்டாவது ஆண்டு முடிவடைகிறது. எனவே பிரேமதாசா, இந்திய ராணுவம் வெளியேறுவதற்கான ‘கெடு’வை அந்தத் தேதியில் நிர்ணயித்தார்.

பிரேமதாசா இதை அறிவித்த 1989 ஜூன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29 ஆம் தேதிக்குள் ஒருவர் பின் ஒருவராக ஈழத்தின் முக்கிய தமிழர் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

1989 ஜூலை 13 ஆம் தேதி தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்த நான்கு நாட்களில், ஜூலை 17-ல் ‘புளோட்’ இயக்கத் தலைவர் உமா மகேசுவரன் கொல்லப்பட்டார்.

அடுத்த பத்து நாட்களில் ஜூலை 23-ல் ‘இந்து’ ஏட்டின் வழியாக பிரபாகரன் “கொல்லப்பட்டார்”.

“இந்திய ராணுவத்துக்கு எதிராக பிரேமதாசா குரல் கொடுத்த ஜுன் முதல் தேதியிலிருந்து அவர் கெடு நிர்ணயித்த ஜூலை 29க்குள் இந்தக் கொலைகள் திட்டமிட்டப்படி நடந்தன. இந்த சதி வலைக்குள் சிக்காத தலைவர் பிரபாகரன் மட்டுமே!”

-என்று எழுதுகிறார், ஆய்வாளர் சச்சி சிறீகாந்தா, தனது ‘Pirabhakaran Phenomenon’என்ற நூலில்.
மூன்று முன்னணித் தலைவர்களை கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்கள் உளவுத் துறையினரே என்று கருதுவதில் எந்த தவறும் இருக்க முடியாது.

(It may not be wrong to infer that Indias intelligence operators had planned assiduously to eliminate the three leading figures)

-என்றும் சச்சி சிறீகாந்தா சுட்டிக் காட்டுகிறார்.

பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்த மாத்தையா,இந்திய உளவு நிறுவனம் வீசிய வலையில் வீழ்ந்தார். 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 15) ஆர். பதக், பி. ஜெயம் ஆகியோர் இது பற்றி எழுதிய விரிவான கட்டுரை ஒன்று, இது தொடர்பான பல செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த,விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு,தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு,மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவியாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப்பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதரவாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம்
-1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (RAW) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல்வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும்,‘ரா’வின் முகவராக மாத்தையா செயல்பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”

-என்று ‘இந்தியா டுடே’ அக்கட்டுரையில் சுட்டிக் காட்டியது.

1991-ல் ராஜீவ் கொலை நடந்தபோது மாத்தையா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில், 2வது தலைவராகவே இருந்தும், ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனையும், பொட்டு அம்மானை யும் சேர்ந்த இந்திய உளவுத் துறை, இரண்டாவது இடத்தில் இருந்த மாத்தையாவை, குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது மாத்தையா மீது, உளவுத் துறை கொண்டிருந்த நெருக்கத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது.

பிரபாகரனின் இரண்டாவது “மரணம்”
1989 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் - பிரபாகரனை “மரணமடையச்” செய்த உளவு நிறுவனங்கள் 2005 ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ஒருமுறை‘மரணமடைய’ச் செய்தன. 2005 ஜனவரி 8 ஆம் தேதி இலங்கை அரசுக்குச் சொந்தமான சிறீலங்கா வானொலி, சுனாமி பேரழிவில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும்,இறந்துவிட்டதாக அறிவித்தது.

கொழும்பிலிருந்து வெளிவரும், ‘அய்லேன்ட்’ நாளேடு, பிரபாகரன் சடலத்தை எடுத்துச் செல்ல மிகவும் விலை உயர்ந்த சவப்பெட்டி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுனாமி நிவாரணப் பொருள்களோடு, கடத்தப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டது. சிறீலங்கா ராணுவத் துணை தளபதி அட்மிரல் தயாசந்த கிரி, இந்தச் செய்தியை வெளியிட்டதாக, அரசு வானொலி அறிவித்தது. ‘ஏ.எஃப்.பி.’என்ற சர்வதேச செய்தி நிறுவனமும் இந்த செய்தியைப் பரப்பியது. சிங்களர்களின் இணைய தளங்களில் இது பற்றி ஏராளமான கருத்துகள் குவிந்தன. உதாரணத்துக்கு ஒரு சில:

“இறந்தவர்களை அப்படியே விட்டுவிடுவோம்; வியாதி பரவி, வியாதியாலேயே அவர்கள் அழிந்து போய் விடுவார்கள். எகிப்தில் பிளேக் நோய் ஏற்படுத்திய அழிவு போல் இப்போதும், அங்கே நடந்திருக்கிறது. மனிதர்களால் விருப்பமில்லாத - செய்து முடிக்கவியலாத ஒரு செயலை,இப்போது கடவுளே செய்து முடித்துள்ளார்.”

“ஒரு கொடும் வில்லனை ஒழிப்பதற்கு, இத்தகைய சுனாமிகளால் தான் முடியும்”.

“சுனாமியால், காப்பகத்தில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டார்கள். புலிகள் ராணுவத்தில் சிறுவர்கள் மடிவதைப் போல், இவர்கள் கதையும் முடிந்து விட்டதாகவே கருதுவோம்.”

“இனி, அவர்களின் தலைவர்கள் இடுப்பில் பெரிய குண்டை கட்டிக் கொண்டு, அதை வெடிக்க வைத்து சாகட்டும்”
-இப்படி எல்லாம் சிங்களர்களின் இணையத்தளங்களில் மகிழ்ச்சிகள் பரிமாறப்பட்டன!

மகிழ்ச்சி சிங்களர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தான்!

இந்திய அரசின், முன்னாள் உளவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.இராமன், இப்போதும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கட்டுரைகளை எழுதி வருபவர். சென்னையில், ஆய்வு மய்யம் ஒன்றின் இயக்குனர் (Director, Institute of Topical Studies),, உளவு நிறுவனங்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பவர். பிரபாகரனின் ‘இரண்டாவது மரணம்’ பற்றி அவர் ஜன.10, 2005 இல் இணையதள கட்டுரையில் இவ்வாறு எழுதினார்.

“விடுதலைப்புலிகள் அமைப்பு கொடூரமானது. பிரபாகரன் உலகிலே மிகவும் கொடூர பயங்கரவாதி. அவருடைய மரணத்துக்குக்கூட யாரும் கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியமில்லை. (One need not shed any tears over his death) உண்மையிலே அவர் இறந்திருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கான தேவை, பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பு. விடுதலைப் புலிகள் பிரபாகரனைத் துரத்தி அடித்துவிட்டு, பயங்கரவாதத்தைக் கைவிட்டால், இந்தியாவும், சிறீலங்காவும்,விடுதலைப்புலிகளோடு இணைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்தகைய நிலையை உருவாக்க சிறீலங்கா தலைவர்கள், ராஜ தந்திரத் துடன் குறுகிய அரசியலைக் கடந்து செயல்படவேண்டும்.”

-இதுதான் பிரபாகரனின் மீது திணிக்கப்பட்ட “கற்பனை மரணத்துக்கு”இந்தியாவின் மூத்த உளவு அதிகாரியாக இருந்த பார்ப்பனர் தெரிவித்த கருத்து. பிரபாகரன் தலைமையை அழித்துவிட - ஒவ்வொரு முறையும் திட்டம் தீட்டி தோல்வி அடைந்த உளவுத் துறையினர் மீண்டும், அதே நிலையில் உறுதியுடன் செயல்பட்டு இருப்பதையே இது உணர்த்துகிறது.

1989 ஆம் ஆண்டில், பிரபாகரனின் ‘மரணச் செய்தியை’ அறிவித்த ‘இந்து’ பார்ப்பன நாளேடு, அதற்காக வெட்கப்பட்டு இப்போது ஒதுங்கிடவில்லை. தமிழ்நாட்டில்,மீண்டும் ஒரு ‘கற்பனை மரணச்’ செய்தியை வெளியிடாமல், பல ஏடுகளும்,ஒதுங்கிக் கொண்ட நிலையில் பார்ப்பன ‘இந்து’ மட்டும், மீண்டும் பிரபாகரன்‘மரணச் செய்தியை’ வெளியிட்டு, தனது தற்கால மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டது.

ஜன. 8 ஆம் தேதி இலங்கை அரசு வானொலி, இந்தப் பொய் செய்தியைப் பரப்பிய உடனேயே அதே நாளில், விடுதலைப்புலிகள் அமைப்பு, இதற்கு மறுப்பைத் தெரிவித்து விட்டது. மிகவும் கீழ்த்தரமான முறையில் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பும் இலங்கை அரசு வானொலிக்கு, கடும் கண்டனத்தைத் தெரி வித்து, அந்த செய்தி அப்பட்டமான பொய் என்று விடுதலைப் புலிகளின் மறுப்பு அறிக்கை கூறியது. அந்த மறுப்பு வந்ததற்குப் பிறகும்கூட, ‘இந்து’, பிரபாகரன் மரணச் செய்தியை வெளியிட்ட தோடு - “பிரபாகரன் எங்கே?” என்ற தலையங்கமும் தீட்டியது குறிப்பிடத்தக்கது.

“சுனாமியால் - தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, அவர்களை நேரில் சந்திக்க பிரபாகரன் ஏன் வரவில்லை? இது போன்ற அசாத்திய சூழ்நிலைகளில்கூட, அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படலாமா?”

-என்றெல்லாம் கேட்ட ‘இந்து’,

“பிரபாகரன் இறந்துவிட்டார் - என்ற செய்தியை புலிகள் திட்டவட்டமாக மறுக்கவில்லை. அவர்களின் மறுப்பு அறிக்கையில் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை”

-என்று எழுதி, பிரபாகரன் இறந்த செய்தியை மீண்டும் உண்மையாக்கவே முயற்சித்தது. இதுதான் ‘பார்ப்பனர்களின் பத்திரிகை தர்மம்’ போலும்!

பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாக உளவுத்துறை பரப்பிய செய்தி - ‘ஏ.எஃப்.பி.’செய்தி நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசு வானொலிக்குப் போய் அங்கிருந்து‘இந்து’ ஏட்டுக்கு வந்து - சிங்கள இணையதளத்துக்குப் போய் ‘இந்து’வின் தலையங்கத்தில் வலம் வந்து, மீண்டும் உளவுத் துறை உருவாக்கிய அமைப்புகளின் வழியாக பிரச்சாரத்துக்கு வந்தது. ஆம்; பிரபாகரன்“மரணமடைந்த” அந்த “செய்தியை” உளவுத்துறையின் உருவாக்கமான கருணா மீண்டும் “உறுதி” செய்தார்.

‘ஜன. 14, 2005 அன்று பிரபாகரன் இறந்து விட்டார்; இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களும் மரணமடைந்துவிட்டனர். இறந்தவர்களில் பொட்டு அம்மான், பிறைஹரன் ஆகியோரும் அடங்குவர். பிரபாகரனின் சடலம் 12 ஆம் தேதி பகல் 11.30 மணிக்கு கண்டெடுக்கப்பட்டது. சுனாமி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, படகுகளில் சென்று, விடுதலைப்புலிகள் தேடியபோது சடலம் கிடைத்தது. சடலம் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. ஆனாலும், புலிகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

வன்னியில் உள்ள எனது ஆதரவாளர்கள் இந்த செய்தியை எனக்குத் தெரிவித்தனர். பொட்டு அம்மானும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரும்,மரணமடைந்த செய்தி ஏற்கனவே உறுதியாகியுள்ளது. முக்கியத் தலைவர்களுக்குள்ள மரியாதையோடு, பொட்டு அம்மான், ‘மாவீரர்’துயிலுமிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிரபாகரன் வரக்கூடும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், பிரபாகரன் அனுப்பியதாக ஒரு இரங்கல் செய்தியை பால்ராஜ் படித்தார். புலிகளின் பல பதுங்கு குழிகளில் தண்ணீர் புகுந்துவிட்டது. புலிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வன்னி மருத்துவமனை முற்றிலும் நாசமாகிவிட்டது. மருத்துவமனையில் இருக்கும்போதுதான் பொட்டு
அம்மான் இறந்தார். ஆனாலும், விடுதலைப்புலிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. தங்களுடைய தலைவர் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். நாங்கள் சவால் விடுகிறோம். பிரபாகரன் உயிருடன் இருப்பது உண்மையானால் அவர் வீடியோ மூலம் பொது மக்களிடம் தோன்றி பேசட்டும்; பேசுவாரா? (I challenged if Pirabaharan is alive, let him Video a statment about the latest situation) -

இதுதான் பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று சவால் விட்டு - ஏராளமான“உண்மைத்” தகவல்களை தனது வன்னி ஆதரவாளர்கள் மூலம் திரட்டி, கருணா வெளியிட்ட அறிக்கை Lanka Truth (சிறிலங்கா உண்மை) என்பது கருணா அறிக்கை வெளியிட்ட அந்த இணைய தளத்துக்குப் பெயர். சிறீலங்காவின் உண்மை என்பது எது என்பதை நன்றாகவே இந்த செய்தி நாட்டுக்கு உணர்த்தியிருக்கும்.

உயிருடன் இருக்கும் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இந்த செய்தியைப் படித்து, சுனாமி சோகத்திலும் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை வாசகர்கள் கற்பனை செய்து கொள்ளலாம். உளவுத் துறையின் “திறமை” மிக்க பிரச்சார யுக்திகளுக்கு இது ஒரு மரண அடி.

சந்திரிகாவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘தினகரா’தலைப்பு செய்தியை இப்படி வெளியிட்டது. Prabakaran, no, no, no - Dinakara States!“பிரபாகரன் இல்லை; இல்லை; இல்லை; தினகரா அறிவிக்கிறது.”

இது சந்திரிகா குமாரதுங்காவின் நேரடி மேற்பார்வையில் வெளிவந்த ஏடு என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேரலையால் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பிணமாகிய சூழ்நிலையில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழும் மனநிலையில் தான் சிங்கள உயர்மட்டத் தலைவர்களும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் களும் இருந்தனர் என்பதே, இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். நாட்டின் பிரதமர் பதவியில் இருந்த சந்திரிகாவே தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏட்டில் பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடி மகிழ்கிறார். நூற்றாண்டு கண்ட பார்ப்பன ‘இந்து’ ஏட்டின் ஆசிரியர் என்.ராம் - பிரபாகரன் மரணத்தை செய்தியாக்கி
-அந்தப் பொய்யை தலையங்கமாகத் தீட்டும் வெட்கக் கேடான நிலைக்கு கீழே இறங்கிச் சென்றிருக்கிறார். பரப்பப்படும்

புரளிகளுக்கு தலையங்கம் தீட்டுவதுதான் ஒரு “தேசிய நாளேட்டுக்கு” உரிய தகுதியா? ‘இந்து’ ராம் இப்படி என்றால், உளவுத் துறையில் உயர் அதிகாரியாக செயல்பட்ட பி. இராமன், பிரபாகரன் மறைவுக்கு எவரும் கண்ணீர் கூட சிந்தக் கூடாது என்று எழுதும் நிலைக்குப் போய்விட்டார். பார்ப்பன ராமன்களும், சிங்கள பேரினவாதிகளும், பிரபாகரன் மரணத்தைக் கொண்டாடுவதில் ஒன்றுபட்டு கைகோர்த்தே நிற்கிறார்கள்.

உளவுத் துறையின் முகம் மீண்டும் ஒருமுறை கிழிந்து தொங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் தீட்டிட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் அப்போது நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கம்பீரமாக வந்து கலந்து ஆலோசனைகளை வழங்கி தன்னை “சுனாமிப் பேரலையில் சாகடித்த” பார்ப்பன - சிங்களக் கும்பலின் பொய்களை மரணக்குழிக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன்!

praveen
18-05-2009, 12:49 PM
சில தசாப்தங்களுக்கு முன்

ஒருமுறை நக்கீரன் இதழில் பிராபகரன் மரணம் என்ற செய்தியை அவரே படிப்பது போல ஒரு புகைப்படம் அட்டைப்படமாக வெளியிட்டிருந்தனர்.

உண்மையில் அந்த செய்தி ஒரு போட்டோ ட்ரிக்காக இருந்த போதிலும், பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்ப வைப்பதற்காக இருந்ததை தமிழ் ஆர்வலர் அனைவரும் பாராட்டினர். அதற்கு பின் விடுதலை புலிகள் இயக்கத்தினர் அந்த படத்தை பாராட்டியதாக நக்கீரன் கோபால் தெரிவித்திருந்தார்.

jeeva.p
18-05-2009, 12:58 PM
http://thirutamil.blogspot.com/2009/05/blog-post_18.html

anna
18-05-2009, 01:00 PM
முன்பு வந்த வதந்தி போலவே இப்போதும் ஆகிவிடவேண்டும் இறைவா.

அன்புரசிகன்
18-05-2009, 02:38 PM
இலங்கை அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மூத்த தளபதிகளின் உடலங்கள் எவையும் கைப்பற்றப்படவுமில்லை..

முக்கியமாக தலைவர் , சூசை, பொட்டுஅம்மான் ஆகியோரின் தடையங்கள் எதுவும் கிட்டவில்லை என்று இராணுவப்பேசச்சாளர் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு நேரடி செவ்வி வழங்கியிருந்தார். (நான் பார்த்தது) பிரபாகரனின் உடலமாக இருக்கலாம் என்று கருதிய ஒரு உடலத்தினை மரபணுபரிசோதனைக்காக கொழும்பு கொணர்ந்திருக்கிறார்கள்...

அதே நேரத்தில் 26 வருடங்கங்களுக்கு மேலாக இலங்கையில் நடந்துவந்த போர் இன்றய பிரபாகரனின் மரணத்துடன் முடிவுக்கு வந்துள்ளதாக மகிந்த அறிவித்துள்ளார்... உண்மை எது என்பது இறைவனுக்கே வெளிச்சம். காலம் பதில்சொல்லட்டும்.

தூயவன்
18-05-2009, 03:42 PM
தலைவா நீ இறக்கவில்லை என்று நாம் நம்புகிறோம்...
எமக்கு தமிழீழம் வேண்டாம் நீ உயிருடன் இருந்தால் மட்டும் போதும்

அறிஞர்
18-05-2009, 03:51 PM
செய்திகள் தெளிவாகவும், உண்மையானதாகவும் இல்லை.
என் இலங்கை நண்பர்கள்... பலர் நேற்று துக்கத்துடன் இருந்தனர்.

அறிஞர்
18-05-2009, 03:57 PM
புதிய செய்தி...
பிரபாகரனை நெருங்கவில்லை: இலங்கை ராணுவம் பல்டி
தட்ஸ்தமிழ்.காம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக முதலில் செய்தி பரப்பிய இலங்கை ராணுவம் நேற்று இரவு இன்னும் பிரபாகரன் உள்ளிட்டோரை நெருங்கவில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் தற்போது 800 சதுர மீட்டர் பரப்பளவில் மட்டுமே உள்ளனர். அங்கு பதுங்கு குழிகளையும், தற்காப்பு அரண்களையும் அமைத்து வைத்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடன் இருக்கும் தலைவர்களை நாங்கள் நெருங்கவில்லை. அவர்கள் அனைவரும் அங்குதான் இருப்பார்கள் என நம்புகிறோம்.

விடுதலைப் புலிகள் தற்போது உள்ள பகுதியைச் சுற்றிலும் பெருமளவில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது என்றார்.

ராணுவத்தின் செய்திகளை எப்போதுமே நம்ப முடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியன்
18-05-2009, 04:10 PM
இலங்கை அரசாங்கம் உடலங்களிலிருந்து அடையாளம் கண்டதாக அறிவித்திருந்த புலிகளின் தலைவர்களது பட்டியலில் தலைவரதும் தளபதி சூசை அவர்களது பெயரும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

புதியவன்
18-05-2009, 04:32 PM
விடுதலைப்புலிகளின் தலைவல் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர் அவர்களிடையேதான் பிரபாகரனும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆயின் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே? படையினர் சுற்றிவளைத்துள்ள 800 மீற்றர் பரப்பிற்கு உள்ளேயா? அல்லது, அதற்கு வெளியே வன்னியிலா அல்லது அதற்கும் அப்பால் இலங்கையினுள்ளேயா? இல்லை வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா? ஏன்ற கேள்விகள் பலரையும் உலுப்பிவிட்டு இருக்கிறது.

இன்று இலங்கையில் ஜனாதிபதி தரையிறங்கி மண்ணை முத்தமிட்ட போது நாட்டில் பட்டாசுகள் வெடித்துக் கிழம்பின. சிங்கள மக்கள் நாட்டிற்கு இரண்டாவது தடவையாகக் சுதந்திரம் கிடைத்துவிட்டதெனக் கூறி பால்பொங்கல் பொங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காவற்துறை மற்றும் இராணுவ வாகணங்களில் சென்று வீதி உயர வானுயர சிங்கக் கொடிகளையும் தேசியக் கொடிகளையும்;, பௌத்த கொடிகளையும் பாதுகாப்பு தரப்பினர் கட்டுகின்றனர். திருமலையில் வெள்ளவத்தையில், கண்டியில் நுவரெலியாவில் என எல்லா இடங்களிலும் கொழுத்தப்பட்ட வெடிகள் மணித்தியாளக்கணக்காக வெடித்தனவாம். தமிழ் மக்கள் கூனிக் குறிகி பார்த்து நிற்கிறார்களாம்.

இந்த மகிழ்ச்சியைத் தூண்டுமுகமாக தலைநகரில் கையடக்கத் தொலைபேசியில் தககவல்களையும்; செவி வழியான தகவல்களையும் அரசாங்கத் தரப்பினர் வேகமாகப் பரப்பி விட்டனர்;. பிரபாகரனின் சடலம் கொழும்பு வைத்தியசாலையில் என்றனர். பனாங்கொட ராணுவ முகாமில் என்றனர். இல்லை அவரது சடலம் எரிந்துவிட்டதகவும் கூறினர்.

இந்தியாவிலும் வேகமாகவே செய்திகள் பரவின. பல ஊடகங்களும் செய்திகளை வேகமாகவே வெளியிட்டன.

அரசாங்கத்திற்கும் ஒரு தேவை உண்டு யுத்தத்தை முடிப்பதாக இருந்தால் ஆகக் குறைந்தது பிரபாகரனை அல்லது பொட்டு அம்மானை முடித்தாக வேண்டும். அப்போதுதான் யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்க முடியும்.

அதனால் முடிந்து விட்டதாகக் கூறினால்த்தான் மக்களிடம் இவர்கள் யுத்தம் முடிந்ததாக கூற முடியும்.

ஆனால் களத்தில் நடப்பதுவோ வேறு. அரச படைகளின் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்களே பெருமளவில் கொல்லப்பட்டு பெருமளவில் காயம் அடைகின்றனர்.

நடக்கும் சண்டையில் புலிகளும் கொல்லப்படுகின்றனர். சில முக்கியஸ்த்தர்களுடன் பல போராளிகளும் கொல்லப்படுகின்றனர். காயமடையும் கொல்லப்படும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான புலிகளே மரணிக்கின்றனர். இந்த நிலையில் கொல்லப்படும் மக்களும் புலிகளின் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவை இவ்வாறு இருக்க ஜோர்டானில் இருந்து முண்டியடித்துக் கொண்டு இலங்கை சென்ற ஜனாதிபதி இன்று இலங்கை நேரம் 1.30ற்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருந்தார். முடியவில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போட்டுள்ளார்.

முல்லைத் தீவின் கரை முள்ளிவாய்க்கால் பகுதியின் ஒரு கிலோ மீற்றர் பகுதிக்குள் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலிகள் தொடர்ந்தும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருவதாக படைத்தரப்பினர் இரகசியமாகக் கூறுகின்றனர்.

இதில் நேற்றைய தினம் இரவும் அதிகாலையும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எனது நேற்றைய செய்தி ஆய்வில் நந்திக்கடல் பரப்பின் ஒரு பக்கம் யாருடைய கட்டுப்பாட்டில் என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கான விடையை இன்று பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்கள் பல படகுகள் தப்பிச் சென்றுள்ளதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஆயின் 26 வருடங்களின் பின் புலிகளிடம் இருந்து கடல்ப் பகுதியை கட்டுப்பாட்டுள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் பாதுகாப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின் அர்த்தம் என்ன?

இந்த கடல்ப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் புலநாய்வுத் துறையைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தளபதிகள் கொல்லப்பட்டது உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த மாஸ்ரர் என்பவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. ஆயினும் புலிகள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் மூழ்கடிக்கப்பட்ட படகுகள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தவிர தப்பிச் சென்ற படகுகளில் சென்றவர்கள் யார் அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற கேள்வி பாதுகாப்புத் தரப்பை பெரும் குளப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் அந்தப் படகுகளில் பாதுகாப்பான தமது தளத்திற்குச் சென்றதுவே உண்மை என பேசப்படுகிறது.

அப்போ புலநாய்வுத் துறை தலைவர் நேற்று கரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார் ஆயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனியும் அங்கு இருப்பாரா? அல்லது கொல்லப்பட்டு இருப்பாரா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அவையும் பொய்யான பிரச்சாரம் என்றே புலிகளில் பலர் கூறுகின்றனர். அவர் முன்னரே தனது பாதுகாப்புத் தளத்திற்குச் சென்று விட்டதாகவே கூறுகிறார்கள்.

ஆக விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகின்ற உயர் கட்டமைப்பு, புலனாய்வுக் கட்மைப்பு, அவற்றிற்குரிய ஆளணி தளபாடங்கள் என்பவை பாதுகாக்கப்பட்டுவிட்டதாகவே புலிகளின் உட்கட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய ஊடக பிரச்சாரத்தை புலிகளும் மறுக்கப் போவதில்லை எனவும் தெரிய வருகிறது. காரணம் தொடருகின்ற சர்வதேச பிராந்திய அரசியல் நகர்வுகளிற்கு அரசாங்கத்தின் பிரச்சாரம் வெகுவாக உதவும் என்பதால் புலிகள் மொனம் காக்கவே முற்படுவர்.

தமது சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனின் அரசியல் நகர்வுகள், அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கோரிக்கை, அதனை நோக்கிய புலிகளின் பதில்கள், இந்திய அரசின் முன் நடவடிக்கைகள் சர்வதேசத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ள பந்தை அவர்கள் பிரயோகிக்கும் முறை முதலானவற்றைப் பொறுத்தே புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனவும் புலிகள் தரப்பில் பேசப்படுகிறது
தகவல் : kusnacht siva
18 May 2009 USA

நன்றி,
ஈழம் வெப்சைட்.கொம்

புதியவன்
18-05-2009, 04:47 PM
நாங்கள் விடுதலைக்காகப் போராட எடுத்த ஆயுதம் சரணடைய அல்ல - நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கிறோம். சரணடைய அல்ல- செல்வராசா பத்மநாதன்

www.nitharsanam.com/public/LTTE/kpvp.jpg
திங்கட்கிழமை 18 மே 2009

சிறிலங்காவில் விடுதலைப்புலிகளின் இப்போதைய நிலைமைகள் என்ன?
செல்வராசா பத்மநாதன்: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே வைக்கவும் அரசியல் நீரோட்டத்தில் கலக்கவும் தயாராக உள்ளது.

அலெக்ஸ் தொம்சன்: எவ்வளவு போராளிகள் அங்கிருக்கின்றனர்?
செல்வராசா பத்மநாதன்: ஆகக்குறைந்தது இரண்டாயிரம் போராளிகள் உள்ளனர். நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளோம். எங்கள் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மணித்தியாலமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிலிருந்து இதுவரை மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 25000 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

அலெக்ஸ் தொம்சன்: இவர்கள் பொதுமக்கள் தானா?

செல்வராசா பத்மநாதன்: ஆம்.

அலெக்ஸ் தொம்சன்: சிறிலங்கா அரசாங்கத்திற்கு என்னவாறான அழைப்பை நீங்கள் விடுத்திருக்கிறீர்கள்?
செல்வராசா பத்மநாதன்: உடனடியாக யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு நேற்றிலிருந்து கோரி வருகிறோம். நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கவும் சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.

அலெக்ஸ் தொம்சன்: இது இந்தப் போர்களின் ஒரு முடிவா?
செல்வராசா பத்மநாதன்: ஆம் நாம் போரை நிறுத்த விரும்புகிறோம்.

அலெக்ஸ் தொம்சன்: விடுதலைப் புலிகள் போரை இன்னொரு வடிவத்தில் முன்னெடுத்துச் செல்வார்களா? அதாவது ஒரு கெரில்லாப் போராக.

செல்வராசா பத்மநாதன்: நாங்கள் கடந்த 38 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டே வருகிறார்கள். இன்னொரு 30 வருடங்களுக்கு... நாங்கள் அதனை நம்பவில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வு காணவே விரும்புகிறோம்.

அலெக்ஸ் தொம்சன்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடமிருந்து எவ்வாறான உத்தரவுகள் வருகின்றன?
செல்வராசா பத்மநாதன்: நான்கு மணித்தியாலங்களாக நான் அவருடன் உரையாடினேன். அவர் இந்தச் செய்தியைத் தான் சிறிலங்காவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கச் சொன்னார். இப்போது நாங்கள் அவர்களுடைய பதிலுக்காகக் காத்திருக்கிறோம். இதுவரை ஒருவரும் அதற்குப் பதிலளிக்கவில்லை. ஒருவரும் போரை நிறுத்த முன்வரவில்லை.

அலெக்ஸ் தொம்சன்: பிரபாகரன் இன்னமும் அங்கு தான் இருக்கிறாரா?
செல்வராசா பத்மநாதன்: ஆம்.

அலெக்ஸ் தொம்சன்: அவர் சுற்றிவளைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்தா உங்களுடன் பேசினார்? அவர் சரணடையத் தயாரா?
செல்வராசா பத்மநாதன்: சரணடைய அல்ல. நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடத் தயாராக இருக்கிறோம். சரணடைய அல்ல.

அலெக்ஸ் தொம்சன்: ஏன் சரணடைய மாட்டீர்கள்?
செல்வராசா பத்மநாதன்: முக்கியமாக இதில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது. நாங்கள் விடுதலைக்காகப் போராடவே ஆயுதம் எடுத்தோம். அவ்வாறானால் ஏன் சரணடைய வேண்டும். நாங்கள் அவர்களுடன் இணைந்து பிரச்சினையைத் தீர்க்கத் தயாராக உள்ளோம். சரணடைய அல்ல.

அலெக்ஸ் தொம்சன்: ஏன் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்துள்ளார்கள். அவர்களை வெளியேற விடவில்லை.
செல்வராசா பத்மநாதன்: நாங்கள் பொதுமக்களை எங்களுடன் தடுத்து வைத்திருக்கவி;ல்லை. அந்தப் பொதுமக்கள் எங்களுடைய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அல்லது சிறிலங்கா இராணுவம் தமக்குப் பாதுகாப்பளிக்கும் என நம்ப அவர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் முகாமுக்குப் போக விரும்பவில்லை. அங்கு சித்திரவதையும் துன்புறுத்தல்களும் இடம்பெறுவதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் சிறிலங்காப்படையினரிடம் செல்லத் தயாராக இல்லை. அரசாங்கம் உணவையும் மருந்தையும் நிறுத்தி விட்டுள்ளது. அவை இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் 35000 பேரை அனுப்பி வைத்தோம். நாங்கள் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைத்திருக்கவில்லை. அது ஒரு தவறான தகவல். தவறான பிரச்சாரம்.

அலெக்ஸ் தொம்சன்: அது உண்மையானால் ஏன் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அங்கிருந்து மக்களை வெளியேற விடாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்கள்?

செல்வராசா பத்மநாதன்: உண்மையில் நாங்கள் துப்பாக்கிப்பிரயோகம் செய்யவில்லை. இருதரப்பிற்குமான துப்பாக்கிப்பிரயோகத்துள் சிலர் அகப்பட்டார்கள். நாங்கள் ஏன் எங்களுடைய மக்களைக் கொல்ல வேண்டும்?

அலெக்ஸ் தொம்சன்: பொதுமக்களுடைய நிலைமை பற்றி அங்கிருந்து நேர்காணல்கள் வழங்கிக் கொண்டிருந்த இரண்டு வைத்தியர்களைப் பற்றி உங்களிடம் கேட்கலாமா? அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டார்களா?

செல்வராசா பத்மநாதன்: நேற்றிரவு ஒரு வைத்தியர் காயமடைந்தார். நாங்கள் அவரை சிகிச்சைக்காக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்னொரு வைத்தியர் இராணுவ முகாம் ஒன்றில் சிகிச்சை பெறுவதாக அறிந்தேன்.

அலெக்ஸ் தொம்சன்: ஆக சாராம்சத்தில்ää விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராக இருக்கிறார். சரணடைய அல்ல.
செல்வராசா பத்மநாதன்: ஆம். சரணடைய அல்ல. ஆயதங்களைக் கீழே வைக்கத் தயார். சரணடைய அல்ல.

அலெக்ஸ் தொம்சன்: ஆக போர் முடிவுக்கு வந்து விட்டது. அல்லது மாற்றமடைந்துள்ளது.
செல்வராசா பத்மநாதன்: போர் முடிவடைந்து விட்டது. அது அரசியல் வழிக்கு மாற்றமடைந்து விட்டது. சில மணித்தியாலங்கள் என்ன நடக்கிறது எனப் பார்ப்போம். நாங்கள் சொல்கிறோம்ää எங்களுடைய தேசத்திற்கான அரசியல் தீர்வுக்காக நாங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கத் தயாராக இருக்கிறோம்.

4 மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:
Channel

நன்றி,
நிதர்சனம்

விகடன்
18-05-2009, 05:35 PM
மரபணுச் சோதனைக்கு பிரபாகரனின், அல்லது அவருடைய நெருங்கிய உறவினரின் மரபணு தேவையல்லவா? அதை எங்கிருந்து பெறுவார்கள்?

ரொம்பக் குழப்புறாங்களப்பா

ஓவியன்
18-05-2009, 05:50 PM
மரபணுச் சோதனைக்கு பிரபாகரனின், அல்லது அவருடைய நெருங்கிய உறவினரின் மரபணு தேவையல்லவா? அதை எங்கிருந்து பெறுவார்கள்?

இல்லைடா, அதற்குத்தான் நேற்று சாள்ஸ் அன்ரனியின் உடலைக் கண்டெடுத்ததாக கூறினார்கள்...

அதுசரி, சாள்ஸ் அன்ரனியின் உடலை யாருடன் மரபணு சோதனை செய்து உறுதிப் படுத்துவார்கள், பிரபாகரனின் உடலுடனா...??

என்று யோசித்தால் நீ கூறுவது போல குழப்பம் தான் மிஞ்சும்.

புதியவன்
18-05-2009, 05:54 PM
http://www.nitharsanam.com/public/LTTE/kpvp.jpg

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

இதனையடுத்து ஜரோப்பியவாழ் தமிழர்கள் பெரும் மனச்சோர்வடைந்து குழப்பத்தில் காணப்பட்டனர். இந்த ஒட்டுக் குழுக்கள் தமது இணையத்தளம் மூலம் இப்பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனவே தமிழீழ உறவுகளே இலங்கை அரசின் கூலிப்படைகள் நடாத்தும் இணையங்களை சென்று பார்வையிடுவதை நிறுத்துங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய்யைத் தவிர வேறொன்றும் இல்லை.

நன்றி,
ஈழம் வெப்சைட்.கொம்.

விதிமுறைகளை மீறி செய்தி வெளியிட்டிருபின் மன்னிக்கவும்.

இப்படிக்கு,
புதியவன்.

விகடன்
18-05-2009, 05:56 PM
இறந்தக்து சாள்ஸ் அன்ரனியாகவும், மரபணு செய்ய வைத்திருக்கும் உடல் பிரபாகரனுடையதாகவும் இருக்கட்டுமே. ஆக இப்ப ஈழத்தில் (அரசின் மொழியில்) பயங்கரவாதிகளுமில்லை, பயங்கரவாதமும் இல்லை. பூண்டோடு அழிந்துவிட்டது. இனியாவது உலக நாடுகள் சொன்னதுபோல் நல்லதோர் அரசியல்த்தீர்வு அமையுமா?
பார்க்கலாம். அவ்வாறு ஓர் அரசியல்த்தீர்வு அமைந்துவிட்டால் அனைவருக்கும் சந்தோசந்தான்.

ஓவியன்
18-05-2009, 06:11 PM
இத்தனை பேர் இறந்து கொண்டிருக்கையில் வாய் மூடியிருந்த உலக நாடுகள், இனி வாய் திறந்து நல்லதொரு அரசியல் தீர்வுக்கு வழி சமைக்குமென்ற நம்பிக்கை எனக்கு ஏனோ இல்லை, அப்படி ஒரு தீர்வு கிடைக்காது போனால் நமக்கென ஒரு நாடு இனி எப்போதும் இருக்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை.

விகடன்
18-05-2009, 06:30 PM
நான் மட்டும் நம்பிக்கை வைத்தா சொன்னேன்....

எமது ஐயம் உருப்பெற்றால்.... என்று சிந்தித்துப்பார்த்தேன். அப்போது உதயமானது ...

"தமிழினி மெல்ல சாகும்" என்று சொல்லிய வார்த்தை மாறி
”தமிழினி விரைந்து சாகும்” என்றுதான் அமையும்.

அறிஞர்
18-05-2009, 06:43 PM
செய்தி உண்மையாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறோம்.

பாலகன்
18-05-2009, 06:53 PM
நான் அப்பவே நினைச்சேன்... அதுக்குள்ள புலி சோககீதம் எல்லாம் பாடிடுச்சி. சீக்கிரம் அந்த நல்லசெய்தியுடன் வாருங்கள் நண்பரே

உதயா
18-05-2009, 06:58 PM
தவறாக பதித்துவிட்டேன். என் பதிப்பை நீக்குகிறேன்.

அன்புரசிகன்
18-05-2009, 07:03 PM
http://www.channel4.com/news/articles/world/asia_pacific/tamil+tigers+interview+transcript/3151457


key Tamil Tiger leader has spoken exclusively to Channel 4 News, saying their chief is still alive and they want a political solution. Alex Thomson reports.
A full transcript of the interview with LTTE Tamil Tigers head of international relations Selvarajah Pathmanathan.

Alex Thomson (AT): What is the latest situation for LTTE in Sri Lanka?

Selvarajah Pathmanathan (SP): Our organisation is ready to lay down its arms and participate in the peace process.

AT: How many cadres or soldiers are involved here?

SP: Less than 2000 cadres. They are in the perimeter area. We prepared to stop the war. Our people are dying. Every hour more than a hundred dying. More than 3000 die from yesterday. 25,000 wounded.

AT: These are civilians, yes?

SP: Yes.

AT: What are you calling on the Sri Lankan government to do?

SP: From yesterday we are calling on talks to stop the fighting and immediate ceasefire. We are ready to lay down the arms and participate in the peace process.

AT: Is this end of the war after all these wars?

SP: Yes we'd like to end this war.

AT: What do you say that the LTTE will continue fighting by other means, guerrilla war?

SP: I believe that over the 38 years we fight and only the civilian and human life are every day dying. The...in another 30 years will continue we don't believe that - we believe in peaceful way for solution for Tamil people.

AT: What are the orders from the LTTE leader Velupillai Prabhakaran ?

SP: Prabhakaran actually ordered that. For 4 hours I talked to him - he passed this message to Sri Lanka Government and international players...and we are waiting for their answer. Until now no one give their answer or no one stop the war.

AT: Is Mr Prabhakaran still in this area in Sri Lanka?

SP: Yes sir.

AT: And you spoke to him from this surrounded area, and he is ready to surrender?

SP: Not surrender. We are lay down the arms not surrender.

AT: Why not surrender?

SP: Actually its mainly a thing...about security...we take arms for freedom struggle - why surrender to them. We ready to work with them not surrender.

AT: Why did LTTE take so many human shields and not allow them to leave?

SP: We never take the civilian with us. The civilian they are relative our family or the related. Or they don't believe Sri Lankan army will give security to them. They don't like to go to camp. As you know they torture and harassment. They don't want to go to Sri Lanka forces. The government stop medicine and food. People are dying without. We asked - we sent 35,000 out ourselves. We don't take human shield. It's the wrong information. Wrong propaganda.

AT: So its not true then that LTTE cadres fired on civilians to prevent them leaving?

ST: Actually we never shoot them. Some crossfire happened. Why would we kill our own people?

AT: Can I ask about the two doctors who were giving interviews about the condition of the civilians. They have disappeared?

SP: Last night one doctor injured. We send them to the military side. And for the treatment. Acutally now I heard one doctor in Colombo for treatment other in military camp.

AT: To summarise, the condition of the commander Pr...LTTE are willing to lay down weapons but not surrender?

SP: Yes not surrender - willing to lay down arms not surrender.

AT: So is the war over or changing?

SP: War maybe over or changing to political way. Depending on few hours to see what going on. We are saying...willing to lay down arms...willing to lay down arms and find political solution for our nation.

அன்புரசிகன்
18-05-2009, 07:08 PM
அல்ஜஸீராவில் இலங்கை இராணுவ அதிகாரியின் தகவலின் படி இதுவரை எதுவும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

யாரும் கலங்கவேண்டியதில்லை. செ. பத்மநாதனின் அறிக்கையின் படி இன்னமும் தலைவர் உயிருடன் இருக்கிறார்.

தூயவன்
18-05-2009, 07:18 PM
நன்றி கடவுளே... நான் பி பி சி தமிழ் ஓசை கேட்டேன்.. அதில் அரச தரப்பே ஒப்புகொண்டு விட்டது. தம்மால் இனும் உறுதி படுத்த முடியவில்லை என்று ...

அமரன்
18-05-2009, 08:48 PM
தமிழ்வின்னில் வெளியான செய்தியை இங்கே இணைக்கிறேன்.

தெரிவிப்பது யாராகினும் திர்மானிப்பது நீங்களாயிருக்கட்டும்..

///பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பொட்டம்மான், சூசை, கபில் அம்மான், ரட்ணம் மாஸ்ரர், ஜெயம், வேலவன், லோரன்ஸ் போன்ற தளபதிகளும் தேசியத் தலைவருடன் சென்று விட்டதாகச் சொல்லப்படுகின்றது. இன்று அதிகாலை நந்திக் கடலில் விடுதலைப் புலிகள் நடத்திய ஊடறுப்புத் தாக்குதலை தொடர்ந்து தேசியத் தலைவரும் தளபதிகளும் முற்றுகையை உடைத்திருக்கலாம் என்று சிறிலங்காப் படைத் தரப்பு மட்டத்தில் பேசப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும், கைது செய்யப்பட்டு விட்டதாகவும், அவருடைய உடல் பனகொடை முகாமில் உள்ளதாகவும் பல வதந்திகள் சிங்கள மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டுள்ள நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

இதில் உண்மையான செய்தியை அறிவதற்கு சில மணித்தியாலங்களோ, சில நாட்களோ, சில மாதங்களோ காத்திருக்க வேண்டி வரலாம் என்றே படுகின்றது.

தற்பொழுது இன்று (18.05.09) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டு விட்டதாக பன்னாட்டு ஊடகங்களில் செய்தி பரவ விடப்பட்டுள்ளது.////

தூயவன்
19-05-2009, 02:28 AM
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.

வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.

கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தமிழ் வின்

தூயவன்
19-05-2009, 02:30 AM
பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பேட்டி

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.



இந்நிலையில் இன்று இரவு சென்னையில் உள்ள கொங்கு தமிழ் அறக்கட்டளையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் முக்கியஸ்தர்களான பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன் ஆகியோர் ஒன்று கூடி இலங்கையின் தற்போதுள்ள நிலைமை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு முன்பாக பழ.நெடுமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா?பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் நலமுடன் தான் இருக்கிறார்.

எப்படி இவ்வாறு உறுதியுடன் சொல்கிறீர்கள். நீங்கள் அவருடன் பேசினீர்களா?

நான் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளுங்கள்.

இலங்கை பிரச்சனையில் உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மே-21ல் தமிழகம் முழுவதும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாபெரும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நன்றி : தமிழ் வின்

lenram80
19-05-2009, 02:43 AM
இரு தினங்களுக்கு முன்பே, "துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். '

தினமணி
19 May 2009 10:33:00 PM IST
தலையங்கம்

sakthim
19-05-2009, 04:16 AM
சற்று முன் மக்கள் தொலைக் காட்சியிலும் ராஜ் தொலைகாட்சியிலும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தகவல்.

இது உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்ளுகிறது.

நண்பர்களுக்கு ஏதாவது செய்தி தெரிந்தால் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புரசிகன்
19-05-2009, 04:23 AM
தமிழ்நெட் இணையத்திற்கு வழங்கிய பேட்டி:


The clarifications from Mr. Pathmanathan follow:

Statement 1:

I wish to inform the Global Tamil community distressed witnessing the final events of the war that our beloved leader Velupillai Pirapaharan is alive and safe. He will continue to lead the quest for dignity and freedom for the Tamil people.

The President and the Government of Sri Lanka needing to carry on and gloat in the planned Victory Celebrations on Tuesday, had their military establishment deliberately come up with the story detailing the demise of the leader of the LTTE. We categorically reject this and wish to inform the Tamil community to be vigilant and to exercise maximum restraint whilst grieving for the loss of Tamil civilian lives in the barbaric conduct of the final chapters of this battle.

The Tamil freedom struggle is a just cause and will not be quashed by the events of the last 24 hours. Truth and justice will always prevail.

Statement 2:

We wish to bring to the notice of the International Community the events of the last 24 hours in the so called safety zone in the war in Sri Lanka.

Subsequent to our announcement that the LTTE had decided to "silence the guns" in view of the unbearable civilian carnage at the hands of the Sri Lankan military and the heavy weaponry donated to it by third parties, we were informed by some member states of the International Community that arrangements had been made with the Sri Lankan military for discussions on an orderly end to the war.

We were instructed to make contact with the 58th Division of the Sri Lankan forces in the war zone, un-armed and carrying white flags. Head of our Political Wing, Mr. B. Nadesan and Mr. Puleedevan then proceeded to do so. They were un-armed and carrying white flags and were called on by the Officers of the 58th Division to come forward for discussions. When they complied they were both shot and killed. We vehemently condemn this action. The International Community needs to take this into account in its deliberations about charges of "Crimes against Humanity" against the members of the Sri Lanka Government and its military establishment. This act is even more unpalatable when one takes into account that the LTTE released as an act of goodwill, seven Sri Lankan Prisoners of War the day before totally unharmed.

We appeal to the International Community to act now to ensure the safety and basic needs of the displaced people who are suffering in the prison camps of the Sri Lankan military. The onus is now on the International Community to see that further war crimes and crimes against humanity are not committed on Tamils by the Sri Lankan state and to force the Sri Lankan state to yield in to the political aspirations of the Tamil people.

இது இன்று வெளியாகிய செய்தி.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29409

Honeytamil
19-05-2009, 04:30 AM
நண்பர்களே…

தமிழர் தலைவர் பிரபாகரன் ‘இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக’ இலங்கை ராணுவம் கூறிவிட்டது.

இலங்கையின் பிரதமரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

ஒட்டுமொத்த இந்திய-இலங்கை சேனல்களும் பிரபாகரன் மரணம் என்பதை கேள்விக் குறிகளோடு வெளியிட ஆரம்பித்து பின்னர் தாங்களாகவே உறுதிப்படுத்திக் கொண்டன. இந்த நிமிடத்தில் உலகின் பார்வையில் பிரபாகரன் என்று ஒருவர் இல்லை. அவரது தளபதிகள் அனைவரும் இறந்துவிட்டனர். மகனும் இறந்துவிட்டார். இலங்கை ராணுவம் அப்படியானதொரு தோற்றத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது.

ஆனால்-

நீண்ட மௌனத்துக்குப் பிறகு புலிகள் தரப்பு இந்தக் கட்டுக் கதைகளை மறுத்துள்ளது.

இதுகுறித்து நாம் வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத, ஆனால் ஆட்சியில் உள்ளவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியியிடப்பட்ட தகவல்களே. இவை குறித்த நமது கருத்துக்கள் எதையும் நாம் இன்னும் பதிவு செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் சொன்னாலும், அதை பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவுமில்லை. உறுதிப்படுத்தவுமில்லை. அவர்களது ராணவத்தின் லட்சணம் என்னவென்பது உலகம் அறிந்தது.

பிரபாகரனை இதுவரை ஒரு முறை இருமுறையல்ல… இருபது முறை ‘கொன்று’ சாதனைப் படைத்தவர்கள் இதே ராணுவத்தினர். அந்தப் பேடித்தனத்தை மறைக்க ஒரு இத்தாலிப் பெண்மணியின் முந்தானை உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. அந்த முந்தானை நிழலில் இளைப்பாறிபடி, இந்திய ராணுவத்தின் துணையோடு மக்களையும் போராளிகளையும் கொன்றழித்து வருகின்றனர். இந்திய ராணுவம் தந்த, தமிழகத்து ‘லங்கா ரத்னா’க்கள் செய்யத் தயாராக உள்ள ஊடக பயங்கரவாத உதவிகளை நம்பி, இப்போது பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு இணையாக சிங்கள ஆட்சியாளர்களின் பிஆர்ஓக்களாகவே மாறி, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசின் வெளியுறவுத் துறை.

ஆனால்-

இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தனது வெற்றியைப் பறைசாற்றிய இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்சே, பிரபாகரன் மரணம் குறித்து வாய் திறக்கவில்லை. பயங்கரவாதத்தை வேரறுத்து விட்டாராம்… இனி ஒரு கையகல நிலம்கூட புலிகளின் வசம் இல்லையாம். இதுதான் ராஜபக்சே இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் சொன்னது.

ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார, பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் மரணம் குறித்து எந்தத் தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றே சொன்னார்.

இலங்கை ராணுவம் ஒரு அறிக்கையையும், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையும், இலங்கை அரசாங்கத்தின் அறிக்கை என்ற பெயர் தாங்கி இன்னொன்றுமாக இதுவரை மூன்று அறிக்கைகள் வந்துள்ளன.

இந்த அறிக்கைகளையே இதுவரை செய்திகளாக வந்துள்ளன. தமிழ்நெட், தமிழ்வின் உள்ளிட்ட தளங்களும் பிரசுரித்துள்ளன. இப்போது புலிகள் தரப்பு விளக்கங்களும் அங்கே இடம்பெற்றுள்ளன.

இன்னொரு பக்கம் சர்வதேச பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் யாரையும் போர்ப் பகுதிக்குள் அனுமதிக்கவும் மறுத்து வருகின்றன இலங்கை அதிகார பீடத்தில் உள்ள அமைப்புகள்.

http://www.envazhi.com/wp-content/uploads/2009/05/charles-antony.jpg

இதுவரை சார்லஸ் ஆன்டனியின் உடல் என்று காட்டப்பட்டிருப்பது, அவர்தானா என்று உறுதிப்படுத்த முடியாத அளவிலேயே உள்ளது (கவனிக்க படம்). ஆண்டனி முன்பே தப்பித்துவிட்டார் என்று செய்தி பரப்பியவர்களும் சிங்கள காடையர்களே என்பதை கவனத்தில் கொள்க.

நடேசன் மற்றும் புலித்தேவன் உடல்களும் காட்டப்படவில்லை. மிகவும் அழுத்திக் கேட்டபோது, பல உடல்கள் எரிந்த நிலையில் இருந்ததாக நாணயக்கார தெரிவித்துள்ளார். 18 முக்கியத் தலைவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தவரகள், அவற்றை சர்வதேச சமூகம் முன் காட்டியிருக்க வேண்டுமல்லவா… இன்னொன்று இறந்தவர்கள் சாதாரண போராளிகள் அல்ல. சர்வதேசம் நன்கறிந்த தலைவர்கள். குத்துமதிப்பாக, இது இன்னாரது உடல் என்று கூறி ஒட்டுமொத்தமாக மூடி மறைத்துவிட முடியாது.

அப்படியெனில் தலைவர் பிரபாகரன் எங்கே? அவருக்கு நிகரான பெரும் சக்தியாக ராணுவத்தினர் அறிவித்திருந்த பொட்டு அம்மான் எங்கே?

புலிகளின் தரப்பிலிருந்து இந்த ‘மரணங்கள்’ குறித்து முதல்முறையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பிரபாகரன் குறித்து வந்துள்ளவை அரசின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவித்துள்ளனர். மேற்கொண்டு விரிவான விவரங்கள் எதையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

இப்படி அவசர அவசரமாக புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம், பாதுகாப்புத் துறை மற்றும் அரச தலைவர் அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து சர்வதேச அளவில் இப்போது பேசப்படுவது இதுவே:

ஒருபக்கம் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட பெரும் தலைவர்கள் இலங்கையில் நடக்கும் இன அழிப்புப் போரை நிறுத்துமாறு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர் இலங்கை அரசுக்கு.

இன்னொரு பக்கம், இந்திய அரசு நாளை மறுதினம் ராஜீவ் மரண நாளுக்கு முன் புலிகளை அழிக்க கொடுத்திருந்த அஸைன்மெண்ட்.

இந்தச் சூழலில், பிரபாகரன் உள்பட புலிகள் தலைவர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிடுவதால், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தைத் திசை திருப்ப முடியும், இந்தியாவையும் திருப்திப்படுத்த முடியும் என்பதாலேயே இலங்கை இப்படி அவசர அவசரமாக பிரபாகன் “கொல்லப்பட்ட’தாகவும், ‘போர் முடிந்து’விட்டதாகவும் அறிவித்துள்ளது என தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்னொன்று போர் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே சர்வதேச நிதி உதவிகள் சாத்தியமாகும் என்பதும் இந்த அவசர அறிவிப்புக்குக் காரணம் என்கிறார்கள். இதில் உள்ள உண்மை மற்றும் சாத்தியக் கூறுகளை யாரும் அத்தனை சுலபத்தில் மறுத்துவிட முடியாது.

பிரபாகரன் குறித்த வதந்திகளை புலிகள் மௌனமாக அனுமதித்தது ஏன்?

இந்தப் போர் ஓய்ந்ததாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் எழும் அரசியல் தீர்வு எத்தகையது என்பதைப் பொறுத்து மீண்டும் புலிகளின் இருப்பு உறுதிப்படுத்தப்படும் என்று சில புலம் பெயர் தமிழர் அமைப்புகள் இப்போது கூறியுள்ளன. அம்பாறை மாவட்ட தமிழர் அமைப்பும் இதையே அறிக்கையாகத் தந்துள்ளது.

நாளை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே முன்வைக்கப் போகும் பொய்களை முன்னிட்டும் கூட புலிகள் அமைதி காக்கக் கூடும்.

எனவே…

அரசு தரப்பிலிருந்து வரும் செய்திகள், நூறு சதவிகித பொய்யாகவே இருந்தாலும், அவற்றை வெளியிடுவது அரசாங்கமே என்பதால் அந்தச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றன பெரும்பான்மை ஊடகங்கள்.

இந்த அடிப்படையிலேயே நாமும் செய்திகளைத் தருகிறோம். இவை பதிவுகளே. உரிய நேரத்தில் இந்தச் செய்திகளின் உண்மை நிலையை உணர்த்தும் நமது சுயமான ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடுவோம். அப்போது இலங்கை அரசின் பொய்களை துகிலுரிய இந்த பதிவுகளும் உதவக் கூடும்… இப்போதே அந்தப் பொய்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டதாகவே நமக்குத் தெரிகிறது!

நன்றி,
எஸ்எஸ் (www.envazhi.com)

sakthim
19-05-2009, 04:46 AM
நல்ல தகவலை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றிகள் நண்பரே,பிரபாகரன் நல்முடன் இருக்க பிராத்திப்போம்.

அன்புரசிகன்
19-05-2009, 05:07 AM
சாள்ஸ் இன் உடல் என்று காட்டப்பட்டதற்கும் சாள்ஸ் இற்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை... இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் வெளியாகிய சாள்ஸின் படம்...

http://www.tamilmantram.com/photogal/images/2528/large/1_Capture.JPG

Honeytamil
19-05-2009, 05:56 AM
இலங்கை தொலைக்காட்சிகளில் இருபதாவது தடவையாக முழுநேர காமெடி திரை...

மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக்கவும்

http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post_18.html

Honeytamil
19-05-2009, 05:59 AM
சார்ல்ஸ் மாதிரி ஆள் கிடைத்ததால் போட்டோ போட்டுட்டீங்க... என்ன ராஜாக்களா... பிரபாகரன், நடேசன், பொட்டுஅம்மான் மாதிரி ஆட்கள் யாராவது இருக்கானான்னு தேடிக்கிட்டு இருக்கீங்களா போட்டோ போட... இல்ல ஆள் கிடைக்கலையா???

http://wethepeopleindia.blogspot.com/2009/05/blog-post_18.html

அமரன்
19-05-2009, 06:04 AM
இரு தினங்களுக்கு முன்பே, "துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்' என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். '

தினமணி
19 May 2009 10:33:00 PM IST
தலையங்கம்

இருக்கலாம்..
இல்லாமலும் இருக்கலாம்..


வன்னி பேரழிவைச் சந்தித்த நாள்
காயமடைந்த மக்களையும் போராளிகளையும் மீட்டிடுங்கள் என்று சர்வதேசத்திடம் கோரியமை,
ஆயுதங்களை மௌனமாக்குகிறோம் எனக்கூறியமை,
நடேசன், புலித்தேவன் கொல்லப்பட்டனர் எனும் அரசின் அறிவிப்பு

என பலதை கணக்குப் போட்டுப் பார்த்தால் வேறு கோணமும் கிடைக்கலாம்.

பாரதி
19-05-2009, 06:11 AM
மகிந்த இராசபக்சே இன்று நாடாளுமன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை ஆரம்பிக்கப்பட்டு 9.45 மணிக்கு சிறப்புரை ஆற்றினார்.





தமிழில் அவர் 5 நிமிடங்கள் பேசினார். அப்போது அவர், ‘’இலங்கையில் நடந்த போர் தமிழர்களுடனான போர் அல்ல; விடுதலைப்புலிகளுடனான போர்" என்றார்.




இப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.





ஆனால், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை’’ என்று அறிவித்தார்.
செய்தி மூலம்:திருத்தமிழ் வலைப்பூ.

அமரன்
19-05-2009, 06:22 AM
ம்ஹும்.. நடந்தது தமிழருக்கு எதிரான போர் அல்ல.. புலி அழிப்புப் போர் என்று வியாக்கியானம் கொடுத்தார் அதிபர். அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மொரட்டுவ, தெமட்டகொட போன்ற கொழும்பின் புறநகர்களில் தமிழர்கள் மீது சிங்கள வெறித்தாக்குதல் நிகழ்ந்துள்ளது. காவல்த்துறை புகார் எழுதக் கூட கட்டிய கைகளை இறக்கவில்லை.

புலி செத்துட்டுது என்றதும் சிங்களத்தின் கிலியும் செத்து விட்டது.. இல்லை இல்லை.. தமிழனிடம் அது கூடு பாய்ந்துட்டுது.

இன்பா
19-05-2009, 06:28 AM
அப்படியோர் செய்தி உண்மையாக இருக்க வேண்டும்... இறைவா!!!

தூயவன்
19-05-2009, 06:28 AM
http://photos-b.ak.fbcdn.net/photos-ak-snc1/v3722/213/72/1128792242/n1128792242_30194937_4563470.jpg

http://photos-c.ak.fbcdn.net/photos-ak-snc1/v3722/213/72/1128792242/n1128792242_30194938_1341249.jpg

இவர் தான் சாள்ஸ் அன்டனி என்று சொல்லுகிறார்கள் ... இறந்து கிடப்பதும் ஒரு போட்டோ தான்... ஆனால் இவர் தான் சாள்ஸ் அன்டனியா என்று தெரியாது

http://www.army.lk/html/images/image/chals_2.jpg

இவர் தான் உண்மையான சாள்ஸ் அன்டனி ... ஆனால் மேலுள்ள படங்கள் இதனுடன் ஓத்து போகவில்லை

கா.ரமேஷ்
19-05-2009, 06:36 AM
இன அழிப்பு போர் என்பது எல்லோருக்கும் தெரியும்.இவன் சொல்வதால் எல்லோரும் மறுத்துவிட போவதில்லை.அதே சமயத்தில் அவர்களுக்கு(சிங்களவர்களுக்கு) பின்னூட்டம் சரியாக அமைந்து விட்டதால் வாதிடுகிறார்கள் எதிர்கேள்வி கேட்க எவரும் முன் வர மாட்டார்கள் என பொய்களை அள்ளி விடுகிறார்கள்.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்.
http://tamilwin.com/view.php?2a46QVb4b3bj9ES34d2SWnB3b02N7GGe4d34YpDce0ddZLuIce0dg2hr2cc0Zj0A2e

http://www.ndtv.com/news/world/prabhakaran_is_alive_claims_pro-ltte_website.php

அமரன்
19-05-2009, 06:50 AM
இன்னொரு விசயம்.. பிரபா செத்துட்டார் என்றதும் தீவிர எதிர்ப்பாளன் கூட கண்ணீர் விட்டான். வயோதிபர்கள் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டனர். இளவட்டங்கள் வன்முறைக்குத் தயாராகி விட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த அமைப்பாளர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. புலம் பெயர் தமிழன் போராட்டம் திசை திரும்பிவிடுமோ, திசை திருபப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி கிட்டும் வரை இந்த இறுக்கமான சூழல் இருந்தது. செய்தியைக் கேள்விப்பட்டபோது அந்த இடமே "ஆனந்தபுரமாக" தாண்டவமாடியது.

அன்புரசிகன்
19-05-2009, 06:50 AM
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை விட இனி இலங்கை அரசு செய்யப்போவதை இலங்கை அரசுக்கு துணைபோனவர்கள் பார்க்கத்தானே போகிறார்கள். போட்டிபோட்டு உதவி தங்கள் பலங்களை சரிபார்த்த நாடுகளுக்கு கரி பூசப்படும் காலம் வெகு விரைவில் வரும். உண்மையான நட்பு அப்போது புரியும்...

நேசம்
19-05-2009, 06:56 AM
ஆனந்த விகடன் இதழிழ் ஒரு கேள்விக்கு மதன் பதில அளிக்கையில், இந்தியா இன்று செய்யும் உதவிக்கு ஒரு நாள் அந்த பலனை அனுபவிக்கும் என்று பொருள் பட கூறி இருந்தார்.

நேசம்
19-05-2009, 07:07 AM
நாடோடிகளாக திரிந்த யூதர்களுக்ககே ஒரு நாடு கிடைத்த போது, முழு உரிமையுடைய என் ஈழசகோதரர்களுக்கு ஒரு நாள் தனி ஈழம் கிடைக்கும் என்ற தமிழர்களின் நம்பிக்கை பொய்த்து விட்டதோ...

தூயவன்
19-05-2009, 07:19 AM
சற்று முன் இலைங்கை பாதுகாப்புக்கு இணையதளத்தால் வெளியிடப்பட செய்தி


Prabhakaran's body found - Army Chief

Commander of Sri Lanka Army General Sarath Fonseka has confirmed that the body of V.Prabhakaran, psychopathic leader of world's most barbaric terrorist outfit Liberation Tigers of Tamil Eelam (LTTE) has been found short while ago (May 19).

According to the defence sources, the LTTE leader who has ordered thousands of Tamil youth to give up their lives for him has tried to save his life until the last moment.

More information will follow...

http://www.defence.lk/new.asp?fname=20090519_03

எனினும் இது வரை அவர்கள் அதை உறுதி படுத்தவில்லை...

தாமரை
19-05-2009, 07:23 AM
பிரபாகரன் எங்கிருக்கிறார் என்று அறிய செய்யப்படும் சதியாகவும் இது இருக்கலாம் என்பதே இது வரை நடக்கும் சம்பவங்களை வைத்து யூகிக்க முடிகிறது.

எனவே அமைதி காப்பதும், சர்வதேச உதவி அமைப்புகளை தமிழர் பகுதிகளுக்குள் நலப்பணிகளுக்கு அனுமதிக்க வற்புறுத்துவதுமே நல்லது..

இதனால் அல்லலுறும் மக்களுக்கு உதவ முடியும் என்றால் நல்லதுதான்.. உணவு, உடை, மருந்துகள் இப்படி நல உதவிகளை நேரடியாகச் செய்ய இலங்கை அரசு சர்வதேச நல அமைப்புகளை அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் உடனடியாக வைக்கப்பட வேண்டும்.. இதுதான் இன்று உடனடியாக செய்யக் கூடியதாக இருப்பது,

கைகட்டப்பட்ட தமிழ்நாட்டவருக்கு இது நல்ல வாய்ப்பு. எஞ்சி இருப்போரின் நல்வாழ்விற்கான முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.

வெளியுறவுத் துறையில் யார் மந்திரியாகப் போகிறார்கள். இலங்கையைப் பொறுத்தவரை அவர்களது அணுகுமுறை என்ன என்பது இந்த வாரம் தெளிவாகிவிடும்..

சூட்டோடு சூடாக காரியங்களை செய்வது நல்லது. இது தமிழகத் தலைவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு..

பார்க்கலாம்

இன்பா
19-05-2009, 07:40 AM
நல்ல கருத்து, ஆக்கப்பூர்வமான கருத்து....
நன்றி தாமரை

அமரன்
19-05-2009, 07:41 AM
மக்கள் எழுச்சியில் கடந்த இரு நாட்களாக எழுப்பப்பட்ட உணர்ச்சிகள்.. நீங்கள் சொல்லும் பாதையில் அண்ணா.

aren
19-05-2009, 08:10 AM
இந்தியாவில் சசி தரூர் வெளிநாட்டு மந்திரியாக அறிவிக்கப்படலாம்.

பாரதி
19-05-2009, 08:15 AM
நந்திக்கடல் பகுதியில் சீருடையுடன் உடலம் கண்டுபிடித்தததாக இலங்கை இராணுவம் படக்காட்சியை வெளியிட்டுள்ளதாக மக்கள் தொலைக்காட்சியில் அண்மைச்செய்தியாக கூறுகிறார்கள்.... உண்மையா..?

விகடன்
19-05-2009, 08:22 AM
தினமலரில் செய்தி ஒன்றைப்போட்டிருக்கிறார்களே....
பார்த்தீர்களா?

பார்வையிட,
இங்கே சொடுக்குக-01 (http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=1184)

இங்கே சொடுக்குக-02 (http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=14165)

இன்பா
19-05-2009, 08:24 AM
கண்ங்கள் திறக்க இறந்து கிடக்கும் தலைவனை காண ஏனோ வலிக்கிறது, கண்களி நீர் வடிகிறது...

http://www.youtube.com/watch?v=XM_uWwZmx2E

அய்யோ என்று கதற வேண்டும் போல் உள்ளது...!
பாவிகளை நினைத்து இரவுத்திரம் கூடுகிறது....

பாரதி
19-05-2009, 08:24 AM
இலங்கைப்பாதுகாப்புத்துறை இணையத்திலும் செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணம் செய்தி வந்துள்ளது.
http://www.defence.lk/new.asp?fname=20090519_03

விகடன்
19-05-2009, 08:31 AM
இனிமேல் தமிழரின் உரிமைகளை தட்டிக்கேற்றவோ, உணர்வுகளையோ வெளிப்படுத்தவோ ஒருவர் வரமாட்டார்.

பாரதி
19-05-2009, 08:31 AM
மக்கள் தொலைக்காட்சியில் தற்போதைய அண்மைச்செய்தி : இலங்கை இராணுவம் வெளியிட்டிருக்கும் படங்கள் பொய்யானவை என பழ.நெடுமாறன் மறுப்பு.

அகத்தியன்
19-05-2009, 08:33 AM
பிரபாகரனின் படத்தினை வெளியிட்டுள்ளனரே?

பூமகள்
19-05-2009, 08:36 AM
http://www.in.com/news/readnews-current-affairs-prabhakaran-body-found-identified-sl-army-9279521-3310dfe9ccf1528aec7dce37c60268ebebc7c2de-hp.html

IBN செய்தி இணைய தளத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் நம்பமுடியாமல் நான்.

இதிலுள்ள செய்தி நம்பகத் தன்மை வாய்ந்ததா என்று அறிந்தோர் கூறவும்.

பாரதி
19-05-2009, 08:36 AM
தட்ஸ்தமிழ் இணையச் செய்தி:

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.

நந்திக்குளம் என்ற இடத்தில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா கூறியுள்ளார்.

தனது இயக்க உடையில் உள்ள பிரபாகனின், தலையில் குண்டு பாய்ந்துள்ளது. அதை மறைக்க தலையில் ராணுவத்தினர் ஒரு தொப்பியை வைத்துவிட்டு வீடியோவை எடுத்துள்ளனர்.

நந்திக்குளம் என்ற ஒரு சிறிய தீவுத் திட்டில் நீர் நிறைந்த புல் வெளியில் அவரது உடல் கிடந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது. உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவை இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

இது குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா, நேற்றே பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் இன்று தான் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

நேற்று பிரபாகரன் ஒரு வேனில் தப்ப முயன்றபோது இடைமறித்து தாக்குதல் நடத்திக் கொன்றதாகவும் உடலை மீட்டதாகவும், டிஎன்ஏ சோதனைக்காக ஹெலிகாப்டரில் கொழும்பு கொண்டு சென்றுள்ளதாகவும் கூறிய ராணுவம், இன்று தான் உடல் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறுவது ஏன் என்று நயணகாராவிடம் கேட்டதற்கு,

அப்படிப்பட்ட செய்தியை நேற்று ராணுவம் கூறவே இல்லை. சில மீடியாக்கள் தான் அப்படி செய்தி வெளியிட்டன. உடல் இன்று தான் மீட்கப்பட்டது என்றார்.

ராஜா
19-05-2009, 08:38 AM
வீரத்திருமகன் பிரபாவுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..

பாரதி
19-05-2009, 08:48 AM
கீழ்க்கண்ட தளத்தில் காணொளி காட்சியாகவும் பார்க்க முடிகிறது...
http://www.itn.lk/

சுதந்திர ஈழம் காணாமல் கண்துஞ்ச மறுத்தவரின் கண்கள் .......

அகத்தியன்
19-05-2009, 08:55 AM
இதுவரையில் இருந்த நம்பிக்கை இப்போது இல்லாமல் போய்விட்டது. இலங்கையின் ஒரு சிறுபான்மை என்கிறவகையில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் சில முரண்பாடுகள் விடுதலைப்புலிகள் மீது இருந்தாலும், பிரபாகரன் எனும் தனி ஆளுமை பற்றி எனக்க்கு எப்போதுமே ஒரு பிரமிப்பு இருந்தது. அந்த போராட்ட வீரனின் மரணம் மனதுள் ஏதோ வெறுமையினை உண்டாக்குகின்றது.

ரங்கராஜன்
19-05-2009, 08:55 AM
கண்ங்கள் திறக்க இறந்து கிடக்கும் தலைவனை காண ஏனோ வலிக்கிறது, கண்களி நீர் வடிகிறது...

http://www.youtube.com/watch?v=XM_uWwZmx2E

அய்யோ என்று கதற வேண்டும் போல் உள்ளது...!
பாவிகளை நினைத்து இரவுத்திரம் கூடுகிறது....

அவரின் கண்கள் திறந்தபடி இருப்பதை பார்க்கும் பொழுது உண்மையில் எதோ துக்கம் தொண்டையை அடைக்கிறது,

அவரின் பல வருட போராட்டத்திற்கு எந்த வித பலனையும் அனுபவிக்காமல் இறந்துவிட்டார் என்று நினைக்கும் பொழுது கண்களில் கண்ணீர் முட்டுகிறது.

அவரின் உடல் ஆர்மி ஆட்களிடம் கிடைத்து இருக்க கூடாது, அதே போல அவரை சுட்டும் பிடித்து இருக்கமாட்டார்கள் ஆர்மி ஆட்கள். அவரின் உடலில் பாதி தலையையும் காணவில்லை, அவர் தற்கொலை செய்துக் கொண்டு இருக்கலாம், அவரின் உடலை இவர்கள் கைப்பற்றி காயத்தில் உயிர் போனது போல ஆக்கி இருக்கிறார்கள். தலையில் அடிப்பட்டு இருந்தால் முகத்தில் ரத்தம் வடிந்து இருக்குமே, முகம் மட்டும் எந்த சிதைவும் இல்லாமல் இருக்கிறதே. ஆர்மி ஆட்கள் பிரபாகரன் இறந்த பின் இவர்களே சுட்டு பிடித்தது போல நாடகம் ஆடுகிறார்கள். பாவிகள்............. புத்தரின் பெயரால் ரத்தத்தை குடிக்கும் இவர்களை என்ன சொல்வது.

வரலாறுகள் என்றும் இறப்பது இல்லை.

நேசம்
19-05-2009, 09:03 AM
பார்க்கும் போதே நம்மையறிமால் கண்களில் கண்ணிர் வருமளவுக்கு அத்தைகைய போரட்ட களத்தை கண்டவர் வீரதிருமகன்.இத்தனை கால போரட்டடத்திலும் தனி ஈழம் காணமுடியவில்லையே என்று கண்களை திறந்து கொண்டு விரமரணம் அடைந்து விட்டயோ.......

அவரது ஆத்மா சாந்தியடைட்டும்

ஆதவா
19-05-2009, 09:20 AM
எதையோ இழந்த உணர்வு..

பிரபாகரன் இடத்திற்கு இனியொருவர் வருவதற்கு இன்னும் எத்தனை நாட்களோ??? தமிழர்களின் கதி இனியெப்படியோ??

வசீகரன்
19-05-2009, 09:54 AM
மனம்விட்டு அழுங்கள் நண்பர்களே..... மனது வலிக்கிறது........
உரிமைக்காக போராடிய ஒரு சகாப்தத்தை
தன் இனத்தின் மீது திணிக்கப்பட்ட கொடுங்கோள்களை கண்டு வெகுண்டெழுந்து குரல் கொடுத்த மாவீரனை........
ஆள் அம்பு படை பண சூழ்ச்சி என அனைத்து அஸ்திரங்களுடன்
வீழ்த்தி விட்டார்கள் பாவிகள்........

போர்க்களத்தில் எந்த தற்கப்புகளும் இல்லாமல் இறுதி வரை
அடி பணியாது நெஞ்சுரம் கொண்டு எதிர்த்த மாவீரன் கொல்லப்பட்டுவிட்டார்......

உலகே இதோ இனி கேட்பாராற்று கண்ணீர் விட்டு அழகூட திராணியற்று
பரிதாபியாக மாறிவிட்டது எம் தமிழ் இனம்................

தூயவன்
19-05-2009, 09:57 AM
எமது இனத்துக்கு கிடைத்த உன்ணதமான ஒரு தலைவனை நாம் இழந்து விட்டேம் ..
அவன் கண்களை பாருங்கள் ஆயிரம் செய்திகள் சொல்லும்...
சாவால் அவன் இறந்தாலும் வரலாற்றில் அவன் வாழ்வான்..

கடவுளே ஈழ தமிழருக்காக உரிமையை கொடுக்கவில்லை , நாட்டை கொடுக்கவில்லை ஒரே ஒரு தலைவனை கொடுத்தாய்.. இப்போது அவனையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டாஜெ இது உனக்கே நியாயமா ?

இன்பா
19-05-2009, 10:45 AM
இனி பாருங்கள்
உன்னதமான எங்கள் அரசியவாதிகள் அரங்கேற்றும் நாடகத்தை....
தலைவன் பட்டத்தை தட்டிச்செல்ல...

வரலாற்றால் மன்னிக்கப் படக்கூடாதவர்கள்...
அவர்கள் மூக்கை கூட உடைக்க முடியவில்லையே...!!!!!!!!!!!!!! :(

praveen
19-05-2009, 10:52 AM
புலிகளின் வெளி உலக பேச்சாளர் சொன்ன வஞ்சகமாக புலிகள் இயக்கத்தலைவர்கள் சிலர் கொல்லப்பட்ட செய்தி கீழே கண்டதாக இருக்கும் போல் தெரிகிறது.

தினமலர் தளத்தில் ஒரு கருத்தாக இதனை கண்டேன்.


யு என் எச் சி ஆர் மூலமாக தொடர்புகொண்டு விடுதலைப்புலிகளிடம் இருந்த 8 ராணுவத்தினரை விடுதலை செய்வதாகவும் அவர்களுடன் இணைந்து நடேசன் புலித்தேவனும் சரணடைவதாகவும் முன் அறிவித்தலுடன் வெள்ளைகொடியுடன் சென்றவர்களை ராணுவத்தை மீட்டு மிகுதியிருவரையும் ராணுவம் சுட்டுகொன்றது

இதுதான் உண்மை.இதற்கான பதிவுகள் யூ என் எச் சீ ஆரிடம் உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன

praveen
19-05-2009, 11:25 AM
வன்னி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார்.

இதன் மூலம் புலிகளின் இறந்த உடல்களையும் காட்டிக் கொடுத்தவர் என்ற 'பெருமை' அவருக்குப் போய்ச் சேர்ந்துள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்து இலங்கை ராணுவத்திடம் முழுமையான தகவல்கள் இல்லை. முன்னாள் புலிகள் இயக்கத்தினரை வைத்துத்தான் பிடிபட்டவர்களையும், கொல்லப்பட்டவர்களையும் அவர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை நடந்த சண்டையில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளைக் கொன்றதாக ராணுவம் அறிவித்தது. இந்த சண்டையின்போது பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அது கூறியது. இவர்களில் பிரபாகரன் இறந்தது குறித்து குழப்பச் செய்திகளை வெளியிட்ட இலங்கை ராணுவம் இன்று பிற்பகல் வாக்கில்தான் பிரபாகரனின் இறந்த உடலை வீடியோ படமாக வெளியிட்டது.

இந் நிலையில் நேற்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினரின் உடல்களை அடையாளம் காணும் பணியில் கருணாவை ஈடுபடுத்தியுள்ளது இலங்கை ராணுவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கருணா ஒவ்வொரு உடலையும் அடையாளம் காட்டி, அது யார், என்ன என்ற விவரத்தை ராணுவத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அதன்படி பொட்டு அம்மான், பா.நடேசன், புலித்தேவன் சார்லஸ் அந்தோணி, அவரது உதவியாளர் சுதர்மன், போலீஸ் பிரிவு தலைவர் இளங்கோ, படைப் பிரிவுத் தலைவர்கள் பானு, ஜெயம், படைப் பிரிவு சிறப்புத் தலைவர் ரமேஷ், உளவுப் படை மூத்த தலைவர் தாமஸ், படைப்பிரிவு தலைவர் லட்சுமணன், கடற் பிரிவு முக்கிய தலைவர் ஸ்ரீராம், பெண்கள் படைப் பிரிவின் மூத்த தலைவியான இசையருவி, உளவுப்படை துணைத் தலைவர் கபில் அம்மான், பெண்கள் படை பயிற்சிப் பிரிவு தலைவி அஜந்தி, மார்ட்டர் பிரிவு தலைவர் வரதா, பிரபாரகனின் செயலாளர் புதியவன், படைப்பிரிவின் சிறப்புத் தலைவர் ஜனார்த்தனன் ஆகியோரை கருணா அடையாளம் காட்டியுள்ளார்.

பிரபாகரனின் உடலையும் அவரேதான் அடையாளம் காட்டியிருப்பார் எனத் தெரிகிறது.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் இறந்த பின்னரும் அவர்களைக் காட்டிக் கொடுத்த 'பெருமை'யைப் பெற்றுள்ளார் கருணா.

அமரன்
19-05-2009, 11:27 AM
நண்பர்களே!
அழுதது போதும். தமிழன் வாழ வேண்டும் என்ற அவனது கனவை நனவாக்க உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். திறந்திருக்கும் அவனது கண்கள் மூடக் கூடும்.

தமிழனுக்கு அங்கே பிரச்சினை இல்லை என்றால் மௌனமாகிடுவோம்.

அமரன்
19-05-2009, 11:31 AM
பட்டியலைப் பார்க்கையில் கருணாவின் பங்கு அளப்பரியது என்பது தெரிகிறது. கடற்புலித் தளபதி சூசை எங்கே?! அவர்தானே கடைசியாக ஊடகங்களில் நேரடியாகக் கதைத்தார்.

அமரன்
19-05-2009, 11:37 AM
மரபணுச் சோதனைக்கு பிரபாகரனின், அல்லது அவருடைய நெருங்கிய உறவினரின் மரபணு தேவையல்லவா? அதை எங்கிருந்து பெறுவார்கள்?

ரொம்பக் குழப்புறாங்களப்பா

பிரபாவின் அப்பா, அம்மா எல்லாம் எங்கேப்பா. உயிருடன் இருக்காங்களா.

அமரன்
19-05-2009, 11:38 AM
நாடோடிகளாக திரிந்த யூதர்களுக்ககே ஒரு நாடு கிடைத்த போது, முழு உரிமையுடைய என் ஈழசகோதரர்களுக்கு ஒரு நாள் தனி ஈழம் கிடைக்கும் என்ற தமிழர்களின் நம்பிக்கை பொய்த்து விட்டதோ...

நாங்களும் இப்போ நாடோடிகள்தாம்பா.

விகடன்
19-05-2009, 11:39 AM
ஓர் காரியத்தை செய்ய முயன்றால் அதை இறுதிவரை முழுமையாக செய்து முடிப்பது சிலரது குணம். பொதுவாகப் பார்த்தால் அதுவே நல்ல குணமும் கூட...

ஆதி
19-05-2009, 11:40 AM
என்னால் நம்ப முடியவில்லை.. எனக்கென்னவோ இதை பார்த்தால் மாஸ்க் மாதிரி தெரிகிறது.. ஏன் தலையை மறைக்கிறார்கள்.. முகத்தை மட்டுமே தான் காட்டுகிறார்கள்.. முழு உடம்பை ஏன் காட்டவில்லை..

praveen
19-05-2009, 11:55 AM
என்னால் நம்ப முடியவில்லை.. எனக்கென்னவோ இதை பார்த்தால் மாஸ்க் மாதிரி தெரிகிறது.. ஏன் தலையை மறைக்கிறார்கள்.. முகத்தை மட்டுமே தான் காட்டுகிறார்கள்.. முழு உடம்பை ஏன் காட்டவில்லை..

நாளை இன்னொரு முறை பிரபாகரன் சுடப்பட்டு இறந்தார் என்ற காட்சி காட்டும் போது காட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் உடல் கருகி விட்டது, அடையாளம் காணமுடியவில்லை, டி.என்.ஏ டெஸ்ட் என்றார்கள்.

இப்போது முகத்தை காட்டி, அடையாள அட்டை, உறுப்பினர் எண் பொறித்த வில்லை இதெல்லாம் காட்டுகிறார்கள். ஏன் முகத்தை மட்டும் காட்டினால் நம்பாமல் போனாலும் போவார்கள் என்று கூடுதல் செட்டப்களா என்று தெரியவில்லை..

விடுதலைப்புலிகளின் அதிகார தகவல் வரும் வரை இந்த படம் ஒடும். பின்னர் நாளை வேறொரு படம் காட்டுவார்கள்.

ராணுவம் சுற்றி வளைத்திருக்கையில் தப்பித்து செல்ல முயன்ற போது என்ற செய்தி தான் உதைக்கிறது. யாருக்கோ, இப்படி காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இப்படி செய்வது போல தெரிகிறது. பிரபாகரன் போன்ற ஒத்த சாயல் உடையவரை தலையில் அடித்து கொண்று பின் இப்படி உடை அணிவித்து கூடுதலாக சில தடயங்களை காட்டி ஜோடிப்பது போல தெரிகிறது.

எப்போது இந்த செய்தி கிடைக்கும் என்று காத்திருக்கும் பினந்தின்னி கழுகு பத்திரிக்கைளுக்கும் டிவிகளுக்கும் இந்த செய்தி தீனி அன்றைய செய்தி பஞ்சத்திற்கு தீனியாக அமையும் என்று நினைக்கிறேன்..

Honeytamil
19-05-2009, 11:59 AM
இந்திய ஆக்கிரமிப்புப் படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில் 1990 ம் ஆண்டு கடைசிப் பகுதியில் தேசிய தலைவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி 3 ஆண்டு கால மர்மத்தை முடித்து வைத்தார்.

அன்று அந்த மர்மமே அவரை எதிரிகளிமிருந்து காத்தது. தேசிய தலைவரின் இருப்பிடத்தை அறிய சுற்றித் திரிந்த இந்திய ஜவான்கள் இறுதியில் விடுதலைப்புலிகள் மதிநுட்ப நகர்வால் அன்று தோற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அன்று இந்திய அரசு தமிழ் மக்களைக் குழப்பி.. அவர்களை தன்னிடம் பணிய வைக்கச் செய்த பரப்புரைக்கு ஒத்த பரப்புரை ஒன்றை சிறீலங்கா சிங்கள அரசு இன்று முடுக்கிவிட்டுள்ளது.

அதற்கு அமைய பிளாஸ்ரி சேர்ஜரி (plastic surgery) மூலம் தத்துரூபமாக முகமளவில் பிரபாகரனை ஒத்து உருவாக்கப்பட்ட ஒரு உடலை பிரபாகரனின் உடல் என்று வீடியோ எடுத்துக் காட்டி உலகெங்கும் வாழும் மக்களை ஏமாற்றி வருகிறது. இது ஒருவகையில் தமிழ் மக்களை பாதிக்கும் விடயமாக இருப்பினும் இன்னொரு புறத்தில் இறந்தவராக சொல்லப்படுபவர் அப்படியே இறந்ததாக இருப்பது அவரின் பாதுகாப்பிற்கு உதவலாம். இந்தியப் படையினர் காலத்தில் இறந்தவர் இறந்தவராக இருந்த படியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/prabaharan2009_1.jpg

http://i433.photobucket.com/albums/qq52/honeytamil/prabaharan2009_2.jpg

தலைவர் பற்றிய காணொளிகள் சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப என்றே வெளியிடப்பட்டுள்ளன. அவருடைய முகம் போன்ற ஒன்றை உடலம் ஒன்றின் மீது போலியாக பிளாஸ்ரி சேர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர். இதனை இட்டு மக்கள் குழப்பமடையாமல் எதிரியின் தமிழின அழிப்புத் திட்டத்தை முறியடிக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய முன் வர வேண்டும். உலகத்தமிழினமும் இதற்காக ஈழத்தமிழர்களுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி நேற்று, நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்று (19 -05- 2009) தான் மீட்கப்பட்டதாம் என்று சிறீலங்கா சிங்கள இராணுவப் பேச்சாளர் நாணயக்கார கூறியுள்ளார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் நேற்று பிரபாகரன் இறந்ததாக தாம் (சிறீலங்கா) ஒரு அறிக்கையும் விடவில்லை என்று முழுப் பொய்யைக் கூறியுள்ளார். இந்த எதிரியின் குழப்பமும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிரிகள் தேசிய தலைவரின் இழப்பு எத்தகைய பாதிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதை கணித்துவிட்டு ஒப்போ திட்டமிட்டு இந்தப் பரப்புரையை செய்கின்றனர். அதற்கு நாணயக்காரவின் இந்த குழப்பம் நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. எமக்கு அது அல்ல இப்போ முக்கியம்.

தமிழ் மக்களாகிய எம்மைப் பொறுத்தவரை எமது தமிழீழ போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் மக்களாகிய நாம் முன்னெடுத்துச் செல்லவதே இன்றைய இக்கட்டான இந்நிலையில் ஸ்திரமான முடிவாக இருக்க வேண்டும். அதற்கான செயற்பாடுகளும் திட்டமிடல்களுமே அவசியம். சிறீலங்கா சிங்கள அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. அப்பாவித் தமிழ் மக்கள் வதை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுவதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை… எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தமிழீழ விடுதலைப் போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே இன்றைய எமது சிந்தனையில் இருக்க வேண்டிய முக்கிய விடயம்.

நிச்சயம் தேவையான பொழுதில் தேசிய தலைவர் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்..!

-www.nerudal.com-

உதயா
19-05-2009, 12:09 PM
bbc, al zajeera செய்திகள் மட்டும் பாருங்கள். என்ன ஆனார்கள் தமிழ் தமிழ் என்று கூறியவர்கள் எல்லாம். ஒரு செய்தி கூட காணவில்லை. தமிழர்களின் தொலைகாட்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. வெக்கக்கேடானது.

உதயா
19-05-2009, 12:15 PM
எனக்கு ஒரு சந்தேகம். 100 மீட்டர் 200 மீட்டர் அளவில் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்த படைகள் பக்கத்தில் இருக்கும் போது.. முகம் மொத்தமும் மழித்து சுத்தமாக இருக்கிறதே அந்த படத்தில். அப்படி எனில் நண்பர் கூறியது போல் பிலாஸ்டிக் சர்ஜரி தான் என்பது தின்னமாகிறது.

கா.ரமேஷ்
19-05-2009, 12:20 PM
http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dZj0A0ecGG7N3b4j9EY4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e

உதயா
19-05-2009, 12:32 PM
இந்த திரியை படிக்கும் போது தான் மனது கொஞ்சம் ஆசுவாசப்படுகிறது. நன்றி நண்பரே.

அமரன்
19-05-2009, 12:34 PM
எனக்கு ஒரு சந்தேகம். 100 மீட்டர் 200 மீட்டர் அளவில் இருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருந்த படைகள் பக்கத்தில் இருக்கும் போது.. முகம் மொத்தமும் மழித்து சுத்தமாக இருக்கிறதே அந்த படத்தில். அப்படி எனில் நண்பர் கூறியது போல் பிலாஸ்டிக் சர்ஜரி தான் என்பது தின்னமாகிறது.

ஐம்பது தாண்டிய பிரபா நரைக்காத மீசையுடன் இருக்கையில் சவரம் செய்து டிப்டாப்பாக இருக்கமாட்டார் என்று எப்படிச் சொல்வீர்கள். சாமானியர்கள் நாமே இந்தளவுக்கு சிந்திக்கும்போது அரசியல் சாணக்கியர்கள் எந்தளவுக்குச் சிந்திப்பார்கள்.

தாமரை
19-05-2009, 12:35 PM
புருவங்களை கவனித்தாலே வேற்றுமை நன்கு புரிகிறது.

உதயா
19-05-2009, 12:47 PM
உண்மை தான் அமரன் அவர்களே... இவன்கலெல்லாம் அரசியம் சாணக்கியன் இல்லை. அரசியல் சாக்கடைகள். இந்த நாய்களுக்கு சாணக்கியன் பெயரை கொடுத்து சிறப்பிக்க வேண்டாம்.

lenram80
19-05-2009, 01:02 PM
பிரபாகரன் தப்பித்துப் போயிருப்பார் என்பதில் பெருத்த சந்தேகமே. இவர் மிகப் பெரிய இனப் போராளி. சதாம் போல ஓடி ஒளியும் அளவுக்கு பிரபாகரன் இருந்திருக்கமாட்டர் என்றே தோன்றுகிறது.

அதே சமயம் தன் உடல் எதிரிக்கு கிடைக்கக் கூடாது என்று தனது ஆட்களை வைத்து தன் உடலை எரிக்கச் சொன்ன கிட்லர் போல இவர் ஏன் செய்யவில்லை?
காரணம் இதுவாக இருக்கலாம்..... கிட்லர் இறக்கும் போது அவருக்குத் தெரியும் நாசிசம் தன்னோடு அழிக்கப்பட்டு விடும் என்று.
ஆனால் தமிழினம் அழிக்கப்பட முடியாது. என்வே தன் உடலைப் பார்த்த உணர்வுள்ள அனைவரும் அடுத்த பிரபாகரன்களாக வரலாம். அவர்கள் மூலம் இந்த விடுதலைப் போர் தொடரும் என்று நினைத்தாரோ?

ஆதி
19-05-2009, 01:18 PM
2004 எடுத்திருக்கும் படத்தில் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் இறந்த முகத்தில் இல்லையே எங்கே போயின ?

அறிஞர்
19-05-2009, 02:36 PM
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோ (http://videos.oneindia.in/watch/9909/ltte-prabhakaran-dead-body-found.html)வையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.

அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோக்களையும் (http://videos.oneindia.in/watch/9909/ltte-prabhakaran-dead-body-found.html) ராணுவம் வெளியிட்டுள்ளது.

நந்திக்குளம் என்ற இடத்தில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா கூறியுள்ளார்.

தனது இயக்க உடையில் உள்ள பிரபாகனின், தலையில் குண்டு பாய்ந்து சிதைந்துள்ளது போல காட்சியளிக்கிறது. ஆனால், அதை மறைக்க தலையில் ராணுவத்தினர் ஒரு ஊதா நிற துணையை வைத்து மறைத்துள்ளனர்.

நந்திக்குளம் என்ற ஒரு சிறிய தீவுத் திட்டில் நீர் நிறைந்த புல் வெளியில் அவரது உடல் கிடந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது. உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களை இலங்கைhttp://cache2.hover.in/hi_link.gif அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

இது குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா, நேற்றே பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாகவும் இன்று தான் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறினார்.

நேற்று பிரபாகரன் ஒரு வேனில் தப்ப முயன்றபோது இடைமறித்து தாக்குதல்http://cache2.hover.in/hi_link.gif நடத்திக் கொன்றதாகவும், ராக்கெட்டை ஏவியதில் அவரது உடல் எரிந்து போனதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இன்று வெளியிடப்பட்ட வீடியோவில் அவரது உடல் எரிந்து போனதற்கான காயங்கள் ஏதுமில்லை.

மேலும் டிஎன்ஏ சோதனைக்காக உடல் நேற்றே ஹெலிகாப்டரில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவம்http://cache2.hover.in/hi_link.gif கூறியிருந்தது. ஆனால், இன்று தான் அவரது உடலை ஒரு புல்வெளியில் மீட்டதாகக் கூறி வீடியோவை காட்டுகிறது.

இந்த முரண்பாடுகள் குறித்து நயணகாராவிடம் கேட்டதற்கு,

வேனில் தப்பியபோது பிரபாகரனை தாக்கினோம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவரது உடலை நேற்றே கொழும்புhttp://cache2.hover.in/hi_link.gif கொண்டு சென்றதாகவும் நாங்கள் கூறவில்லை. அப்படி ஒரு தவறான செய்தியை சில மீடியாக்கள் தான் வெளியிட்டன. அவர் நேற்று கொல்லப்பட்டா, உடல் இன்று தான் மீட்கப்பட்டது என்றார்.

அறிஞர்
19-05-2009, 02:41 PM
மனதை கனக்கவைக்கும் செய்தி..
உடலை பார்த்தால் பிரபாகரன் போன்றே உள்ளது.
http://www.youtube.com/watch?v=RED0EjlrVAE

அறிஞர்
19-05-2009, 02:53 PM
பிரபாகரன் உடல் மீட்பு-ஏராளமான மர்மங்கள்!
முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.

ஒரே நாளில் ராணுவம் இப்படி மாற்றிக் கூறியுள்ளதால், பிரபாகரன் எந்தச் சூழ்நிலையில் கொல்லப்பட்டார், யார் அவரை சுட்டுக் கொன்றது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவின்படி விடுதலைப் புலிகள்http://cache2.hover.in/hi_link.gif இயக்க சீருடையில் கம்பீரமாக காணப்படும் பிரபாகரனின் தலையில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

முதலில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது ராணுவம் அவரை சுட்டுக் கொன்றதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுக் காயம் உள்ளது. அதைக் காட்டாமல் மறைக்க துணியை வைத்து ராணுவம் மறைத்துவிட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சயனைட் அருந்தி இறந்த பின் சுடப்பட்டாரா?:

மேலும், தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக முன்பு கூறப்பட்டதை இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஹலகலே இன்று மறுத்துள்ளார். இதனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கத்தில் இருந்து பிரபாகரன் சுடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அவர் சயனடை அருந்தி தற்கொலைhttp://cache2.hover.in/hi_link.gif செய்த பின்னர் உடலை எடுத்து வந்து தலையில் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் அவரது உடல் கிடந்த இடம் என்று ராணுவம் கூறுவது பாதுகாப்புhttp://cache2.hover.in/hi_link.gif வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு எப்படி அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.

ஒரே நாளில் நடந்த டி.என்.ஏ சோதனை!:

இறந்தது பிரபாகரன் தான் என்றும், டி.என்.ஏ. சோதனைகள் அதை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனைகள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு விடை இல்லை.

அதே போல பிரபாகரன்http://cache2.hover.in/hi_link.gif ஏன் புலிகள் உடையில் இருந்தார்?, தப்பியோட முயல்பவர் சாதாரண உடையில் இருந்திருக்க மாட்டாரா? என்ற கேள்விகளும், அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

மொத்தத்தில் பிரபாகரனின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன.
thatstamil.com

உதயா
19-05-2009, 03:06 PM
அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா?
எனக்கு வந்த அதே சந்தேகம். சற்று முன் நம் தளத்திலேயே நான் கேட்ட சந்தேகம்.

அன்புரசிகன்
19-05-2009, 03:08 PM
இந்த காணொளியில் உள்ள பிரபாகரனின் முக உடலத்திற்கும் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியாகிய பிரபாகரனின் உடல படத்திற்கும் ஏதாவது ஒற்றுமை காட்டமுடிகிறதா...

http://defence.lk/img/20090519_07.jpg
இன்னமும் இந்த சர்ச்சை தொடரத்தான் உள்ளதே தவிர இதற்கு முடிவு விடுதலைப்புலிகளின் அறிக்கைகளில் இருந்து தான் வரவேண்டும்.

praveen
19-05-2009, 03:27 PM
பிரபாகரன் பல வருடங்களாக மீசையே வைத்து கொண்டிராதவர் ஜம்மென்று மீசையும் அதில் ஒரு முடிகூட நரைக்காததையும் பார்த்து பலர் ஆச்சர்யப்படுகின்றனர்.

பாவம் யாரே ஒருவர் பிரபாகரன் முகஜாடையில் இருந்தவரை போட்டு தள்ளி விடுதலைபுலி இயக்க உடை அணிவித்து போலியாக அடையாள அட்டை, இலட்சினை செய்து படம் எடுத்து அவர்கள் சொன்ன பொய்யை நிஜமாக்க பார்த்திருக்கிறார்கள்.

அமரன்
19-05-2009, 03:41 PM
அதெல்லாம் சரி.. காயமடைந்த மக்கள் என்ன ஆனார்கள். இராணுவத்தினால் மீட்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள். அவர்களுக்கான புனரமைப்புகள் எந்தளவில் உள்ளன. இதை எல்லாம் யாரும் சொல்ல மாட்டீங்களா.

jk12
19-05-2009, 05:06 PM
தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்
[ செவ்வாய்க்கிழமை, 19 மே 2009, 01:54.02 PM GMT +05:30 ]

1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டுதான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????
- http://www.tamilwin.org/view.php?2aSWnBe0dZj0A0ecGG7N3b4j9E84d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e

எனக்கும் தோன்றிய பல சந்தேகங்கள் அப்படியே இந்த தளத்திலும் தரபட்டுள்ளது.

அவரின் சில செயல்பாடுகள் மனதில் வடுக்களையும் ஏற்படுத்தியிருந்தாலும் அவர் ஓரு மகத்தான தலைவர். இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் காலத்தில் மனதில் முழுமையாக நிறைந்திருந்த ஓரு அற்புதமான தலைவர்.
வல்லூறுகழும் ஓநாய்களும் நிறைந்திருந்த பூமியில் அவர் புலியாகதான் இருக்கவேண்டும்... அப்படியே இருந்தார்.

காண்பிக்கபட்ட வீடியோ நம்பும்படியாக இல்லையேனிலும் மனதை மிகவும் பாதித்தது.... பாதிக்கிறது. அவரை மறுபடியும் ஊடகங்களில் கானும்வரை இப்போழுது காண்பிக்கபட்ட காட்சிகள் மனதை காயபடுத்திகொண்டேயிருக்கும்.

எது நிகழகூடாது என நினைத்திருந்தது நடந்து விட்டது / அல்லது நடந்து விட்டதோ என சந்தேகபடவைக்கும் இந்நாள் ஓரு மறக்கமுடியாத கறுப்பு தினம்.

ரங்கராஜன்
19-05-2009, 05:22 PM
எல்லாமே நியாயமான சந்தேகங்கள் தான்

உதயசூரியன்
19-05-2009, 06:01 PM
மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு..
இருந்தாலும்..... இறந்தாலும் உறுதியாக சொல்ல இயலவில்லையே..
வதந்திகளையும் இது போன்ற செய்திகளையும் படிக்க மனம் செல்ல மறுக்கின்றது...

முழு அர்ப்பணிப்பு என்றால்....தியாகம் என்றால் உழைப்பு என்றால்...
போர் முறை என்றால் ஆயுத போரட்டம் என்றால்.. அது விடுதலை புலிகளிடம் தான் உலகம் கற்று கொள்ள வேண்டும்...

துரோகங்கள் என்றால் அதை கருணா மற்றும் சில இலங்கை தமிழ் இதர சமூகத்திடம் தான் உலகம் கற்று கொள்ள வேண்டும்...

நம்பிக்கையுடன் இருக்கிறோம்...
தலைவர் வருவார் என்று...

வாழ்க தமிழ்

lenram80
19-05-2009, 08:36 PM
கலகம்.காமில் இப்படி வந்திருக்கிறது.

சிங்களவனின் கொட்டம் எல்லாம் இதோடு அடங்கிவிடும். எங்கயோ இருந்து கொண்டுவந்த ஆசாமி முகத்தில பிரபகரண்ட முகமூடிய போடு எங்களுக்கு எல்லாம் வித்தை காட்டின சிங்கள சொறியர் கூட்டம் இப்ப வெக்கி தலை குனிகேறது. இந்த படத்தை பார்த்தல் எல்லாம் உங்களுக்கு விளங்கும்

http://www.kalakam.com/forum/viewtopic.php?f=15&t=1018#p1121


ஆனால், கலகம்.காம் போட்டாவில் மிகத் தெளிவாக மார்பிங் செய்தது தெரிகிறது. அப்படி என்றால் இறந்தது உண்மை தானோ?

அறிஞர்
19-05-2009, 08:39 PM
வீடியோ பதிவு கொஞ்சம் தெளிவாக உள்ளதே...

அமரன்
19-05-2009, 08:54 PM
ஆங்காங்கே சிதறுண்டிருந்த தொடர்புபட்ட செய்திகளை ஒன்றாக்கியுள்ளேன். மேலதிக செய்திகள் கிடைத்தால் அவற்றையும் இங்கேயே கொடுங்கள்.

நன்றி.

அக்னி
19-05-2009, 10:20 PM
பாதுகாப்பு வலயத்தினுள் சிக்குண்டு,
ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் மீட்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற,
தமிழ் உறவுகள் எங்கே...???

உலகத் தலைவர்களே, செய்தியாளர்களே, மக்களே...
இதற்கும் சற்றேனும் குரல் கொடுங்களேன்...

ஓவியன்
20-05-2009, 02:40 AM
அக்னி, இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள், நடேசன் மற்றும் புலித்தேவன் அண்ணாமாருடன் இருந்த காயமடைந்த போராளிகள் எங்கே..??

lenram80
20-05-2009, 02:49 AM
தினமணி தலையங்கம் 19-5-09

தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம்.

தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம்

lenram80
20-05-2009, 02:49 AM
.....

Mano.G.
20-05-2009, 05:12 AM
நேற்று காலையில் எங்கள் நாட்டு ஆங்கில தினசரியில் முதல் பக்க செய்தி பார்த்து
கண்கலங்கிய நான், சிறிது நேரத்தில், இருக்காது, அந்த செய்தி பொய், என நினைத்து என்னை தேற்றி கொண்டேன்,
இங்கே கண்ட அனைத்து ஆதாரங்களும்
என்னக்கு மேலும் நம்பிக்கையூட்டியுள்ளது, நமது தலைவர் இன்னமும் இருக்கிரார்,
இருக்கிரார்.

மனோ.ஜி

Honeytamil
20-05-2009, 05:56 AM
இப்படியும் செய்யலாம்!!!
http://i41.tinypic.com/2450mcl.jpg

vjthas
20-05-2009, 05:57 AM
he will live , till world end.

vjthas
20-05-2009, 06:16 AM
அன்புள்ள நண்பர்களே;
தலைவர் வருவார். காத்திருப்போம். சிங்களவன் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அமரன்
20-05-2009, 07:22 AM
நண்பர்களே!!!

ஒருவரின் மறைவுச்செய்தியைக் கூற திரி தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியின் நம்பகத்தன்மை உரசிப்பார்க்கப்பட்டது. இப்போது ஒரு சிலரின் மறைமுகத்தால் கோர முகத்தைக் காட்டத் தலைப்படுகிறது. இனியும் அது தொடரவேண்டாம். நிர்வாகத்தைக் கடும்போக்காளர்கள் ஆக்கவேண்டாம்.

நன்றி.

lenram80
20-05-2009, 02:47 PM
கருணா உறுதிப் படுத்தும் படம்

இந்தியா டுடே-யில் வெளியான செய்தி

http://indiatoday.intoday.in/index.php?option=com_content&task=view&id=42908&sectionid=4&issueid=106&Itemid=1

உதயா
20-05-2009, 03:33 PM
கலக்கம் தளத்தில் கொடுத்திருக்கும் போட்டோவில் தாடி எல்லாம் முளைத்துவிட்டதே?

ரங்கராஜன்
20-05-2009, 04:42 PM
கலக்கம் தளத்தில் கொடுத்திருக்கும் போட்டோவில் தாடி எல்லாம் முளைத்துவிட்டதே?

அட ஆமாம், உறவுகளே எல்லோரும் இங்கே போய் பாருங்கள், பிரபாகரன் சாகவில்லை என்று தான் தோன்றுகிறது, இறந்து கிடப்பது அவர் இல்லை போல

http://www.kalakam.com/forum/viewtopic.php?f=15&t=1018#p1134

உதயா
20-05-2009, 06:38 PM
மற்றொன்றையும் கவணிக்கவேண்டும். இறந்த ஒரு உடல் 10 நிமிடத்தில் கல்லாகிவிடும். பின் அந்த உடலில் ஒரு ஒறுப்பையும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. அப்படி இருப்பின் பல மணிகளுக்கு முன் இறந்துவிட்டார் என்று கூறப்பட்ட உடலின் தலையை அப்படி இப்படி திருப்புகிறார்களே அது எப்படி?

தாமரை
20-05-2009, 07:14 PM
உதயா உங்களுக்கு இது உதவும்..

http://morganparkcps.enschool.org/ourpages/auto/2007/9/4/1188935219791/Notes%20on%20Stages%20of%20Decomposition.doc

Rigor mortis refers to the hardening of muscle cells that begins shortly after death and causes board-like stiffness in about 12 hours, lasts about 12 hours and then disappears in about 12 hours.

மன்மதன்
21-05-2009, 07:46 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=42&pictureid=212

தூயவன்
24-05-2009, 05:01 PM
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் பி.பி.சி தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமரன்
24-05-2009, 05:09 PM
இந்த திரியின் என் முதல் பதிவு.
இனியாவது அங்கே தமிழனை வாழ வையுங்கள் உலகே.

தூயவன்
24-05-2009, 05:24 PM
தொடர்பு பட்ட செய்திகள்

தமிழீழ தேசியத்தலைவர் பற்றிய வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்::பழ நெடுமாறன் இன்று அறிக்கை

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார்
என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.

தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நகல் : 91-44-2377 5537
பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.

இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.

*

பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின�
�றன.

பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.

சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

தூயவன்
24-05-2009, 05:26 PM
பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்--வைகோ அறிக்கை

பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்; வைகோ அறிக்கை

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.
யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.

மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண் மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணி போட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும்,இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?

அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4’ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்

தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,

தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்

virumaandi
24-05-2009, 08:34 PM
இந்த வைக்கோவிற்கு இனி இதை விட்டால் வேறு பேச்சில்லை.. ஆனால் அது கூட இவ்வளவு நாள் சும்மா கம்முனு இருந்து விட்டு.. இப்போ அடிக்கின்றார் கமெண்ட்..
தேர்தல் வரை.. அவ்வளவு வீரம்...
தேர்தலில் அவருக்கு வாக்களித்திருந்தால் அடுத்த நாளே ராணுவத்தை ஓட விட்டிருப்போம் என்று சொல்லி அதை ஒட்டாக.. காசாக்க பார்த்த வைகோ.....
தேர்தலுக்கு பின் தானே தாக்குதல் தீவிர படுத்த பட்டது.. உடனே அரிக்கை கூட வர்வில்லை.. இத்தனைக்கும்.. இவர்கள் தான் ஜெயிப்பார்கள் என கணிப்புகள் கூறியது..

ஈழத்துக்கு ஒரு சுயனலக்காரன்.. கருணா...
தமிழ்னாட்டுக்கு சுயனலக்காரர்களில் ஒருவர் வைகோ

praveen
10-06-2009, 03:59 AM
[நன்றி புதினம் ] இந்த செய்தி எடுத்தது தமிழ்வின் தளத்தில்



அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.

சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.

வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது.

கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம்.

எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம்.

எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார்.

'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார்.

அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது.

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - வெளிநாட்டுப் பணயங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...

அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.

தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார்.

வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.

உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.

அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட "தமிழீழம்" என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.

மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.
ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக் குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார்.

எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடி குண்டு அங்கியை - துப்பாக்கிக் குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.
எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு - களத்தில் அவர் மடிந்திருக்கின்றார்.

மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார்.

தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.

முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் -

இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு.

பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.

"தமிழீழம்" என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் போரிக்கையைப் பலப்படுத்தி -

எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -
பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.

பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.

ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார்.

அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார்.

தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.

அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களைத் தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.

அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.

அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட.

அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம்.

அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட.

தேசத் தந்தை எஸ். ஜெ.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது.

தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

மிகக் கொடூரமான இன அழிப்புப் போரிற்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.
முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை.

பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - "தமிழர்கள்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.

அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - முப்பது ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'

தி.வழுதி


==== ====== ========== ======== ==============

மேலே கண்ட செய்தியை ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் உள்ளது, ஆனால் உண்மை என்ற ஒன்று கசப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், என்ற அடிப்படையில் இந்த செய்தியை இங்கே பதிகிறேன்.

அமரன்
10-06-2009, 06:07 AM
ஆம்.. பிரபாகரனால் விசுவரூபம் எடுத்து நிலைத்து விட்ட சுதந்திர தாகம் சிதைஞ்சு போகக் கூடாது. எந்தத் தடையையும் தாண்டி, வழிகளை மாற்றி போகுமிடம் போய்ச் சேரவேண்டியது எங்கள் பொறுப்பு (நமது பொறுப்பெனச் சொல்ல முடியாதளவுக்கு தமிழன் ஒற்றுமையுடன் இருப்பது வெட்கக்கேடு). பிரபாவையோ புலிகளையோ எக்ஸ்ரேப் பார்வை எடுக்கிறேன் எனப் புறப்பட்டு மனங்களில் குண்டுவீசி தமிழர் சாம்ராஜ்ஜியத்தை முற்றாக அழிக்கும் பலர் இன்றும் உளர். அவர்களை இனங்கண்டு ஒதுக்கி நம் இனங்கண்டு சேர்ந்து வெற்றியை நோக்கிப் பயணிப்பதே இன்றைய கட்டாயம். ஒவ்வொருவர் கடமை.

praveen
11-06-2009, 03:47 AM
புது தில்லி, ஜூன் 10: விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி "மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை "இந்திய -ஆசிய செய்தி சேவை' நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் முல்லைத்தீவில் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையில் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கிய சகாக்களும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. ஆனால் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்று மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் பிடிபட்டபோது, இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரும் (வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா) உடன் இருந்துள்ளார். அவரது முன்னிலையிலேயே பிரபாகரன் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்கள் 18 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக "இந்திய -ஆசிய செய்தி சேவைக்கு' அளித்த பேட்டியின்போது கருணா தெரிவித்துள்ளார். இதில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டதை கருணா மறைத்துள்ளார்.

பிரபாகரன் பிடிபட்டவுடன், இலங்கை ராணுவத்தின் 53வது பட்டாலியனின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு வைத்து அவரை துன்புறுத்தியதாகவும் மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.

பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவருடைய 12 வயது இளைய மகன் பாலசந்திரனும் உயிருடன் பிடிபட்டுள்ளார். பிரபாகரனின் கண் எதிரே அவரது மகனையும் இலங்கை ராணுவத்தினர் துன்புறுத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.

இலங்கை ராணுவ மூத்த அதிகாரிகளின் நேரடி பார்வையிலேயே இந்த சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் அதை மறைத்துள்ளனர்.

மேலும் பிரபாகரன் பிடிபட்ட பிறகு, எஞ்சிய விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த ராணுவம், அவர்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்துள்ளது.

மேலும் பிரபாகரனின் மனைவி மதிவதனி, உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை இலங்கை அரசு மறைத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிரபாகரன் பிடிபட்டாரா என்பதைதான் உலக மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். அவருடைய மனைவி கொல்லப்பட்டாரா, அவரது சடலம் கிடைத்ததா என்பது குறித்து எங்களுக்கு முக்கியமல்ல' என்று பிரிகேடியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியம், கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கரிகாலன், புலிகள் அமைப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் யோகரத்தினம் என்கிற யோகி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைமையகத்தின் முன்னாள் தலைவர் லாரன்ஸ் திலகர், அரசியல் ஆலோசகர் வி.பாலகுமார், யாழ்ப்பாணத் தலைவர் இளம்பரிதி மற்றும் திரிகோணமலைத் தலைவர் ஈழன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிறகு, தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமனி தளம்

======= ========== ===================

மேலே கண்ட செய்தி உண்மை போல தெரியும் வண்ணம், ரகசியமாக கிடைத்த தகவல் போல வெளியிட்டு தமிழ் மக்களை பிராபாகரன் இறந்து விட்டார் என்று நம்ப வைக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஆனால் பிரபாகரன் எப்படி உயிருடன் பிடிபட்டார் என்று நம்ப முடியவில்லை. மேற்கொண்டு நம் மன்றத்தினர் அறிய இந்த செய்தியை இங்கே பதிக்கிறேன்.

Honeytamil
11-06-2009, 05:08 AM
பிரபாகரன் அவர்கள் உயிருடன் பிடிபடுவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை.அவர் சரணடைவதற்கும் வாய்ப்பில்லை . நீங்கள் கூருவதுபோல இது உலகை நம்பவைக்க வெளியிடப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம். புலிகளை பொறுத்தவரை இலங்கை அரசு பிரபாகரன் இறந்ததாக கூறியதை தங்களுக்கு உலகின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து இயக்கத்தை விடுவித்துக்கொள்ள ஏற்பட்ட சந்தர்ப்பமாக கருதுகிறார்கள். அவர்களுடைய தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் இவற்றையே வெளிப்படுத்துகின்றன.

எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.

அய்யா
11-06-2009, 05:26 AM
என் ஈழ நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளபடி, பிரபாகரன் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் மூன்றாவது நாடு ஒன்றிடம் சரணடைய முயன்றதாகவும், இலங்கை ராணுவம் தந்திரமாக அவரைப் பிடித்து சித்திரவதை செய்து இறுதியில் அவர் தலையில் சம்மட்டியாக் அடித்துக் கொன்றதாகவும் அறிகிறேன்.

manuneethi0809
09-09-2009, 11:33 PM
பிரபாகரன் அவர்கள் உயிருடன் பிடிபடுவதற்கு நிச்சயம் வாய்ப்பில்லை.அவர் சரணடைவதற்கும் வாய்ப்பில்லை . நீங்கள் கூருவதுபோல இது உலகை நம்பவைக்க வெளியிடப்பட்ட செய்தியாக கூட இருக்கலாம். புலிகளை பொறுத்தவரை இலங்கை அரசு பிரபாகரன் இறந்ததாக கூறியதை தங்களுக்கு உலகின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து இயக்கத்தை விடுவித்துக்கொள்ள ஏற்பட்ட சந்தர்ப்பமாக கருதுகிறார்கள். அவர்களுடைய தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் இவற்றையே வெளிப்படுத்துகின்றன.

எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.

ஊண்மை நிச்சயம் வெளிவரும்

ஊண்மையான பல விடயங்களை அறிய கீழேயுள்ள இணையத்துக்கு செல்லுங்கள்

http://www.manuneethi.net

அமரன்
10-09-2009, 06:43 AM
வாங்க மனுநீதி.

உறுப்பினர் அறிமுகப்பகுதியில் உங்களைப் பற்றிச் சொல்லி மன்ற விதிகளின்படி பதிவுகளைத் தந்து மகிழ்ந்து மகிழ்வியுங்கள்.