PDA

View Full Version : யுத்தம் முடிந்தது



shibly591
17-05-2009, 07:04 AM
புத்தனின் ப்ல்லிடுக்குகளில்
ரத்தமும் சதையுமாய்
நொறுங்கிப்போன மனிதப்பிணங்கள்...

சிவா.ஜி
17-05-2009, 07:24 AM
புத்த பிக்குகளின்
பல்லிடுக்கில்
புத்தனே பிணமாக......

மூன்று வரிகளில் சோகம் சொல்லியிருக்கிறீர்கள் ஷிப்லி. அங்கு புத்தனுமில்லை, புத்தமுமில்லை. ரத்தம் மட்டுமே....

செல்வா
17-05-2009, 10:00 AM
புத்த பிக்குகளின்
பல்லிடுக்கில்
புத்தனே பிணமாக......
.
சரியான சாட்டையடி வார்த்தைகள் அண்ணா...

வாழ்த்துக்கள் இருவருக்கும்

அமரன்
17-05-2009, 10:07 AM
யுத்தம் ஓய்ந்தது..
பயங்கரவாதம் ஒழிந்தது...
சுதந்திரம் மலர்ந்தது..
சுபீட்சம் உதயமானது..

வீடுகள் தோறும்
தேசியக் கொடி பறக்கிறது..
எங்கள் வீட்டிலும்
தேசியக் கொடி பறக்கிறது..

எல்லாம் சொல்லி விட்டு
கடைசியில் கேட்டாள் அம்மா..
"மாமாவும் மாமியும்
எங்கே எண்டு தெரிஞ்சுதா"

நேசம்
17-05-2009, 10:19 AM
நிகழ்காலத்தின் சோகத்தை பிரதிபலிக்கின்றன அனைவருடைய வார்த்தைகள்.

ஓவியன்
04-06-2009, 05:05 AM
அமரனின் பின்னூட்டக் கவிதையிலும் இந்தக் கவிதைக்கு நான் வேறு எதனைப் பின்னூட்ட.....?

நாகரா
27-06-2009, 10:57 AM
புத்தம் கல்லாய் இறுக
சித்தம் வன்பில் முறுக்கேறக்
கொல்லும் நோன்பில்
வெல்லும் அதர்மம்!

ஷில்பி, சிவா மற்றும் அமரனின் கவிகள் யாவும் அருமை