PDA

View Full Version : 15வது இந்திய பார்லிமென்ட் 2009 தேர்தல் முடிவுகள்praveen
16-05-2009, 06:23 AM
அனைவர் எதிர்பார்ப்பையும் (ஏ)மாற்றியபடி ரிசல்ட் வந்து கொண்டிருக்கிறது.

இந்திய நிலவரம் (முன்னிலை)
காங்.கூட்டணி 242
பிஜேபி.கூட்டணி159
3வது அணி 78
4வது அணி 31
ஏனயவை 30

மொத்தம் 543
வெளியானவை 540


தமிழ்நாட்டை பொறுத்தவரை முன்னனி நிலவரம்

அ.தி.மு.க கூட்டணி
அ.தி.மு.க. 10
இ.கம்யூ 2
பா.ம.க. 1
ம.தி.மு.க. 1
மா.கம்யூ 1

Total 15தி.மு.க.கூட்டணி
தி.மு.க. 15
காங்கிரஸ் 7
இ.யூ.மு.லீக் 1
வி.சிறுத்தைகள் 2

Total 25

samuthraselvam
16-05-2009, 06:33 AM
இந்திய தேசிய காங்கிரஸ் - 1
பாரதிய ஜனதா கட்சி - 2
மூன்றாவது அணியில்
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி - 1
தெலுங்கு தேசம் - 1
ஆகிய முடிவுகளும் வந்து விட்டதே...!

ஆதவா
16-05-2009, 06:35 AM
மறுபடியும் காங்கிரஸா....
மன்மோகன் வாழ்க..

சூப்பர் ஸ்டார் ரித்தீஷின் வெற்றி வாழ்க....!!!!

எப்படியோ, நல்லாட்சி நடந்தா சரி!!!

அமரன்
16-05-2009, 06:49 AM
சுடச்சுடக் குடுங்க பிரவீன்.
வை.கோ அய்யா என்ன ஆனார்.

அமரன்
16-05-2009, 07:11 AM
மதுரையில் அழகிரியும் (தி.மு.க) சிவகங்கையில் ராஜகண்ணப்பனும் (அதிமுக>திமுக>அதிமுக -- சரிதானோ?) வெற்றி பெற்றனர். விகடன்.காம்.

கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் ஆதிசங்கர் வெற்றி
திண்டுக்கலில் காங்கிரஸ் வெற்றி
பொள்ளாச்சியில் அதிமுகவின் சுகுமார் வெற்றி -தட்ஸ்தமிழ்

praveen
16-05-2009, 07:29 AM
சுடச்சுடக் குடுங்க பிரவீன்.
வை.கோ அய்யா என்ன ஆனார்.

வை.கோ, ப.சிதம்பரம் போன்ற பிரபலங்கள் சில ஆயிரம் வாக்குகள்ள் வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்.

மதி
16-05-2009, 07:31 AM
தற்சமயம் இந்தியாவிற்கு தேவை 5 வருடம் நிலையாக இருக்கக்கூடிய ஆட்சி. அவ்வகையில் தற்போதைய தேர்தல் நிலவரம் மகிழ்ச்சியளிக்கிறது. பெருன்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மறுபடியும் ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.

samuthraselvam
16-05-2009, 07:50 AM
ஐக்கிய முற்போக்கு கூட்டணி
இந்திய தேசிய காங்கிரஸ் - 12
திராவிட முன்னேற்ற கழகம் - 4
தேசியவாத காங்கிரஸ் - 1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1
தேசிய ஜனநாயக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி - 11
மூன்றாவது அணி
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் - 3
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி - 1
தெலுங்கு தேசம் - 1

ஆகிய இடங்களில் வெற்றி

praveen
16-05-2009, 07:55 AM
விகடன் தளத்தில் சமிபத்தில் கண்ட விவரம்

http://img193.imageshack.us/img193/8778/electionresults1.jpg

http://img196.imageshack.us/img196/1664/electionresults2.jpg

மதி
16-05-2009, 07:58 AM
ப.சிதம்பரத்தின் தோற்றுள்ளார். ம்ம். நன்றி பிரவீன்.

samuthraselvam
16-05-2009, 08:31 AM
உதய சூரியன் அவர்களே... இது அந்தக் கட்சி நல்லது இந்த கட்சி நல்லது என்பதுக்காக ஆரம்பிக்கப்பட்ட திரி அல்ல.

தேர்தல் நிலவரம் என்ன என்பதை பற்றி அறிய ஆரம்பிக்கப்பட்ட திரி.

தங்களுக்கு தி மு க பிடிக்கும் என்பதுக்காக அதன் புகழ் பாடவும் மற்ற கட்சிகளை ஏசவும் இத்திரி ஏற்றது அல்ல என்பது என் கருத்து.

சரிதானே பிரவீன்.....?

எனவே தாங்கள் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது என்பது என் கருத்து.

அமரன்
16-05-2009, 08:55 AM
இது தேர்தல் முடிவுகள் தொடர்பான திரி. நோக்கம் தவிர்த்து இருக்கும் பதிவுகளை தனியாக்கியுள்ளேன். எல்லாத்திரியையும் ஒன்றுபோல் ஆக்குவதை தயவுசெய்து தவிர்க்கப் பாருங்கள் நண்பர்களே.

உதயசூரியன்
16-05-2009, 09:02 AM
என்னுடைய பதிவை மட்டும் நீக்கிவிட்டீர்களே.. சரி அதை.. அரசியல் திரிகளிலாவது இணைத்து விடுங்களேன்..
ரொம்ப கஷ்ட பட்டு தட்டச்சு செய்தேன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அமரன்
16-05-2009, 09:04 AM
உங்கள் பதிவுகளை நீக்கவில்லை உதயசூரியன். அவைகளைத் தனியாக்கி அரசியல் பகுதியில் வைத்திருக்கிறேன்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20213

samuthraselvam
16-05-2009, 09:06 AM
என்னுடைய பதிவை மட்டும் நீக்கிவிட்டீர்களே.. சரி அதை.. அரசியல் திரிகளிலாவது இணைத்து விடுங்களேன்..
ரொம்ப கஷ்ட பட்டு தட்டச்சு செய்தேன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

புது திரியாக அமர் அண்ணாவின் உபயத்தால் தனி திரி உங்கள் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது நண்பரே...!

praveen
16-05-2009, 09:37 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் முதலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் ராஜ கண்ணப்பன் பின்னர், 300 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை தொகுதியில் ஆரம்பம் முதலே அதிமுகவின் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின் தங்கியிருந்தார்.

இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலங்குடி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆலங்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சிவகங்கை தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி- தட்ஸ்தமிழ்

நூர்
16-05-2009, 10:09 AM
உடனடி தேர்தல் செய்திக்கு நன்றி.

tkpraj
16-05-2009, 11:12 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வென்றதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துவிட்டது.

praveen
16-05-2009, 11:41 AM
இந்திய மற்றும் தமிழக அளவில் வெற்றிபெற்ற \ தோல்விபெற்ற முக்கியமானவர்கள்.
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=41&pictureid=210

praveen
16-05-2009, 11:45 AM
தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 40 வேட்பாளர் வெற்றி விவரம்

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=41&pictureid=209

sakthim
16-05-2009, 11:54 AM
பிரவீன் படம் தெரியவில்லையே? ஏதாவது செய்ய முடியுமா பாருங்கள்.

praveen
16-05-2009, 12:04 PM
நம் தள ஆல்பம் பகுதியில் ஏற்றி சுட்டி தந்திருக்கிறேன்.

உங்கள் பதிவிற்கு பிறகு, பின்னர் இந்த பதிவை மாற்றி பதிக்கிறேன்.

விக்ரம்
16-05-2009, 12:14 PM
பா.ம.கவின் நீலச்சாயம் வெளுத்துப் போனதை தேர்தல் முடிவுகள் டும், டும், டும் போட்டுக் காண்பிக்கின்றன.

வெற்றி
16-05-2009, 12:52 PM
சிவகங்கை தொகுதி நிலவரம் என்ன என பார்க்காலம் என தமிழ் மன்றம் வந்தேன்...(மாலை 6.18 க்கு) ஆனால் பிரவீன் காலை மணி 11.50 ல் இருந்தே அப்டேட் செய்வதை கண்டு வியந்தேன்...நல்ல வேகம் பிரவீன் அண்ணா...மிக்க நன்றி...சூப்பர் ஸ்டார் ரித்தீஷின் வெற்றி வாழ்க....!!!!
எப்படியோ, நல்லாட்சி நடந்தா சரி!!!

குலுங்கி...குலுங்கி சிரித்தேன்.... இடுக்கண் வருங்கால் நகுக ..அப்படினா என்னா அர்த்தம் ????

praveen
16-05-2009, 01:18 PM
தமிழக தேர்தல் முடிவுகள் 2009
தமிழ்நாடு-39

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (23) 6
தேசிய முற்போக்கு திராவிட கழகம் (39) 0
திராவிட முன்னேற்ற கழகம் (21) 18
இந்திய தேசிய காங்கிரஸ் (16) 7
விடுதலை சிறுத்தைகள் (2) 1
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (4) 1
பாட்டாளி மக்கள் கட்சி (6) 0
இந்திய கம்யூனிஸ்ட் (3) 1
மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி (3) 1
பாரதிய ஜனதா கட்சி (10) 0
சமத்துவ மக்கள் கட்சி (5) 0
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி(2)0
மனித நேய மக்கள் கட்சி(4) 0
புதிய தமிழகம் கட்சி (1) 0
கொங்குநாடு முன்னேற்ற பேரவை கட்சி (12)0

அடைப்புக்குறிக்குள் இருப்பவை போட்டியிட்ட மொத்த இடங்கள். அதற்கு பின் இருப்பவை வென்ற இடங்கள்.

இதற்கு பின் பாண்டிச்சேரி தொகுதி ஒன்று அங்கே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.

இன்பா
16-05-2009, 04:00 PM
நான் ஏற்கணவே சொன்னதுப் போல நான் வாக்களித்த கட்சி ஒரு இடத்திலும் வெற்றிப் பெறவில்லை...

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் :D

virumaandi
16-05-2009, 05:08 PM
பிரவீன்.. ஜெயப்ரதா வெற்றி பெற்று இருக்கிறார்.. தற்போதைய நிலவரப்படி என எண்ணுகிறேன்...சரியா...??

aren
16-05-2009, 06:52 PM
ஒவ்வொரு தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு என்ற விபரங்கள் இருக்கிறதா

பாரதி
16-05-2009, 10:35 PM
92 கிலோ பைட் என்ற அளவுள்ள கோப்பாக இங்கிருந்து பெறலாம். ஆனால் இங்கேயும் இன்னும் முழுமையான ஓட்டு எண்ணிக்கை தரப்படவில்லை. http://www.hindu.com/2009/05/17/stories/verdict2009.pdf