PDA

View Full Version : முதல் பாடம்



பாரதி
14-05-2009, 04:24 PM
சில வரிகளிலேயே இத்தனை அழகாக கதை எழுத முடியுமா என்ற வியப்பைத் தந்த கதை இது!
-----------------------------------------------------------
முதல்பாடம்

வீடு முழுவதும் ஒரு பறவை போல சுற்றிக் கொண்டிருந்தான் அவன். அழ அழ எல்.கே.ஜியில் சேர்த்து இரண்டு நாளாகியிருந்தது. கசங்கிய உடுப்புகளோடு சாயங்காலம் வீட்டிற்குள் நுழைந்தான். கூடவே ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவனது அக்காவும் வந்தாள்.

"அம்மா, இப்ப பாருங்களேன்" என்றவள், தம்பியைப் பார்த்து "ஷட் அப் அண்ட் ஸிட் டவுன்" என்றாள்.

சட்டென்று கீழே உட்கார்ந்து உதடுகளின் மீது விரலை வைத்துக் கொண்டான். கண்களில் ஒரு மிரட்சி இருந்தது.

--------------------------------------------------------------
நன்றி : மாதவராஜ் அவர்களின் தீராதபக்கங்கள் வலைப்பூ.

பென்ஸ்
14-05-2009, 06:09 PM
இது வேலியா... இல்லை வலியா..???
பகிர்வுக்கு நன்றி பாரதி...

பாரதி
15-05-2009, 07:41 AM
இப்போதைய கல்வித்திட்டத்தை இதைவிட தாக்கம் ஏற்படும் வகையில் கூற முடியுமா என தெரியவில்லை. சுதந்திரப்பறவையை சுட்டுவிரல் கத்தி மூலம் கட்டுப்பாடு என்ற போர்வையில் அடைத்து வைக்கும் அவலத்தை நினைக்கையில் வருத்தமே மேலிடுகிறது. பின்னூட்டத்திற்கு நன்றி பெஞ்சமின்.

samuthraselvam
15-05-2009, 08:14 AM
வருத்தமான நிகழ்வுகள் தான். இனி வரும் காலங்களில் பிறந்ததுமே பள்ளிக்கு அனுப்ப வேண்டுமோ...?

பாவம் அந்த பிஞ்சுக் குழந்தைகள். துள்ளித் திரிய வேண்டிய காலங்களில் சிறையில் வைத்தது போல இருக்கும்.