PDA

View Full Version : குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி...அன்புரசிகன்
13-05-2009, 05:15 AM
இலங்கையிலிருந்து இணையம் பார்ப்போர், பெண்கள், இளகிய மனமுடையவர்கள் எவரும் இந்த சுட்டிக்கு தயவுசெய்து செல்லவேண்டாம்...
------------------
வன்னியில் கடத்தப்பட்ட இளைஞர்களின் உறுப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில்!! திடுக்கிடும் தகவல்!! (http://meenagan.blogspot.com/2009/05/blog-post_12.html)

http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8

என்ன பாவம் செய்துவிட்டனர் இந்த அப்பாவிகள்... எதிரியாக இருந்தாலும் இப்படி செய்ய மனம் வருமா என்பது புரியாத புதிராக உள்ளது....

இலங்கை ஒரு சனநாயக நாடு... நம்புங்கப்பா....:sauer028:

யாரப்பா இப்பவும் இலங்கையில் போரில்லை என்று சொல்லிக்கொண்டு திரியுறாங்க... அவுங்க கட்டாயம் இதப்பாருங்க...

aren
13-05-2009, 05:29 AM
நெஞ்சை உருக்கும் செய்தி. படத்தைப் பார்க்கவே முடியவில்லை

பூமகள்
13-05-2009, 05:33 AM
பார்க்க இயலாத மன,உடல் நிலை..

உங்களோடு சேர்த்து துக்கத்தில் பங்கெடுக்கிறேன்..

கனத்த மனதுடன்,

உதயா
13-05-2009, 05:33 AM
அட கடவுளே... இதை செய்த மிருங்களுக்கு எப்போது தண்டனை?

இன்பா
13-05-2009, 05:52 AM
அட கடவுளே... இதை செய்த மிருங்களுக்கு எப்போது தண்டனை?

மனிதரின் மனங்கள் கல்லாகிவிட்டது,

இனி இயற்கை அன்னைதான் தண்டனை கொடுக்க வேண்டும்... கூடியவிரைவில்....

அன்புரசிகன்
13-05-2009, 05:54 AM
இந்த செய்தியை ஒரு பாதிரியார் தான் வெளியிட்டிருக்கிறார். (அவர் கண்டியை சேர்ந்தவர்) அவர் உயிர் காக்க என் இறைவனிடம் பிரார்த்தனைகள்...

நேசம்
13-05-2009, 09:36 AM
சிங்களர்களின் இனவெறி இந்த அளவுக்கு கொடுரமாக போகும் என்பதை நினைக்கும் போது கடவுள் தான் ஈழத்தமிழர்களை காப்பற்ற வேண்டும்.

அமரன்
13-05-2009, 10:35 AM
சிங்களச் சிறுவர்கள் உருட்டி விளையாட தமிழனின் தலை கொய்து கொடுக்கும் நிலை வருமென்றார் யாரோ ஒருவர். அந்த நிலை வந்து சேர்ந்தது என்று தோன்றுகிறது.

சூரியன்
13-05-2009, 01:26 PM
உண்மையில் மனிதநேயம் என்பது செத்துவிட்டது.
இதன் முடிவு எது?????????

rajasi13
13-05-2009, 01:53 PM
இப்போது புரிகிறதா நண்பர்க்ளே, புலிகள் பலமிழந்தால் மற்றவர்கள் கதி என்ன ஆகுமென்று.- தமிழகத்திலிருந்து நண்பன்.

இன்பா
13-05-2009, 03:41 PM
உண்மையில் மனிதநேயம் என்பது செத்துவிட்டது.
இதன் முடிவு எது?????????

இதன் முடிவு என்ன... ஈழத் தமிழர்கள் அனைத்தும் உடையவர்கள்... இறுதிவரை போராடி மடிவார்கள்...

ஆனால் இங்கே இருக்கும் சிலர் (தமிழர் என்று சொல்லிக்கொள்ளும்) நன்றாகவே இருப்பார்கள்.... அவர்கள் குடும்பமும் நன்றாகவே இருக்கும்...!!

ஆனால் மக்கள் தான் அடிமைகளாக இருப்பர்... (அப்படி இருக்க தானே ஆசைப் படுகிறார்கள்...)

ஆகமொத்தம் தமிழர்கள் என்றால் இளிச்சவாயர்கள், பதவி வெறி பிடித்தவர்கள்... என்று உலகுக்கு பறைசாற்றியாகிவிட்டது...

நாக்கு பிடிங்கி சாகலாம்.....

விகடன்
13-05-2009, 03:46 PM
பாதிரியாரின் துணிச்சலை பாராட்டியாகவேண்டும்.
அவரின் இந்தச் செயலும் தமிழர்களிற்கான விடுதலைப் போராட்டந்தான்.
இதனால் அவரிற்கு என்ன நிகழுமோ???? என்பதை எண்ணும்போது கவலைதான் அளிக்கிறது. அவரை காப்பாற்ற அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம். ஏனெனில் இந்தளவு கொடூரமாக இருக்கும் சிங்களம் அவரை சும்மாவிடும் என்று சொல்லமுடியாது.

அறிஞர்
13-05-2009, 04:13 PM
சோகத்தின் உச்சம்....
உறவுகளின் துக்கத்தில் பங்கெடுக்கிறேன்.

ரங்கராஜன்
13-05-2009, 05:17 PM
ரத்தமும் சதையுமாக இருக்கும் மனிதனின் உடலை, இப்படி தேங்காய் நாரை உரிப்பது போல கிழித்துப்போட்டு இருக்கிறார்களே, பார்த்தவுடன் இதயம் ஒரு நிமிடம் நின்றுவிட்டது, அந்த புகைப்படத்தை சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் பார்த்தால் உண்மையில் ரத்த கண்ணீர் வடித்து இருப்பார்கள் ............. இந்த கொலையை செய்த கயவர்கள் கண்டிப்பாக மனித விந்தில் இருந்து உருவாகி இருக்க மாட்டார்கள், எதாவது கழிவில் இருந்து உருவாகி இருப்பார்கள். இந்த மாதிரி காட்டுமிராண்டிகளுக்கு கண்டிப்பாக இதைவிட பல பல மடங்கு கோரமான சாவாக தான் அமையும், அமைக்கப்பட வேண்டும்.

சிவா.ஜி
14-05-2009, 07:29 AM
கொடுமை. மிருகங்கள் கூட தன் இனத்தை இப்படி செய்யாது. சிங்களவன் மிருகமும் இல்லை. ஆண்டவன் சாத்தான்களை படைத்து மொத்தமாய் சிங்களவர்களாக மாற்றிவிட்டான் என்றே தோன்றுகிறது.

என் இனம் இன்னும் எத்தனை துயரங்களைத்தான் தாங்க வேண்டுமோ?

உங்கள் சோகத்தில் பங்கெடுக்கிறேன் அன்பு.

ஸ்ரீதர்
14-05-2009, 07:41 AM
ஆண்டவா!!!

இவர்களை காப்பாற்றமாட்டாயா???

கனத்த நெஞ்சுடன்

- ஸ்ரீதர்

samuthraselvam
14-05-2009, 09:35 AM
ஐயோ கடவுளே...!
இவங்க எல்லாம் மனுசங்களா இல்ல, மிருகத்தைவிட கொடியவங்களா?

பார்த்ததும் மனசே வெந்து போச்சே...

இவங்களை பெத்தவுங்களோ அல்லது கூட பிறந்தவுங்களோ இந்த கொடுமைய பார்த்தா அவங்க நிலை எந்த மாதிரி இருக்கும்?

ஒரு சக மனுசனா கூட பார்க்காமல் இன வெறி இப்படி கொடுமை படுத்துதே...

அவங்களுக்கு அழிவே இல்லையா? அவங்க இனவெறிக்கு ஒரு முற்றுப் புள்ளியே கிடையாதா?

கடவுளே சீக்கிரம் அந்த இனவெறியர்களுக்கு கொல்லி வை....

பாரதி
14-05-2009, 12:43 PM
நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்தே விளங்குகிறது. எனக்குப் பார்க்கத் தோன்றவில்லை.

தினம் தவறாமல் ஐக்கிய நாட்டு சபை வேண்டுகோள் வைக்கிறது; இருந்தும் முடிந்தபாடில்லை.

மனங்களைக்கொன்று பிணங்களையும் விட்டு வைக்காத அவர்களை.....

praveen
14-05-2009, 01:41 PM
சீனாவிலும் இதே வேலையை செய்து வருகின்றனர் என்று சமீபத்தில் விகடன் இதழ் ஒன்றில் படித்தேன். அவர்களிடம் இருந்து ஆயுதம் தவிர இந்த மாதிரி அழிவையும் வாங்கி வருகிறார்கள் போல.

ஆட்சியில் இருக்கும் போது இப்படி அடுத்தடுத்து செய்யும் முட்டாள்கள், அடுத்த ஆட்சியின் போது நிச்சயம் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டவரின் படையினர் விரைவில் தீர்வு செய்வார்கள்.

அன்புரசிகன்
14-05-2009, 04:31 PM
மீண்டும் ஒரு காணொளி...

குழந்தையின் இறப்பை கண்கூடாக கண்டுள்ளீர்களா....

தைரியம் இருந்தால் பாருங்கள்...

http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8

பாரதி
14-05-2009, 04:42 PM
மனதைத்திடப்படுத்திக்கொண்டு பார்க்கலாம் என்று எண்ணினேன்.
படமும் வந்தது. ஆனால் சில விநாடிகளுக்கு மேல் என்னால் பார்க்க இயலவில்லை. மூடிவிட்டேன்.
என்ன கொடுமை.....?
இதை விடவும் வேதனை தரக்கூடிய ஏதேனும் இருக்கிறதா..?
உலகம் குருடர்களாலும் செவிடர்களாலும் நிரம்பியதாக ஆகி விட்டதோ...?

ரங்கராஜன்
14-05-2009, 05:35 PM
அன்பு உண்மையில் என்னால் கொஞ்ச வினாடிக்கு மேல் பார்க்க முடியவில்லை, இருந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு பார்த்தேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதுவரை என் வாழ்நாளில் யார் சாவதையும் கண் எதிரே பார்த்தது இல்லை, இதுதான் முதல் முறை அதுவும் ஒரு பால்மணம் மாறாத குழந்தை இறப்பதை பார்த்தேன், கண்கள் என்னை அறியாமல் கலங்கி விட்டன, இதயம் அப்படியே வலிக்கிறது, அந்த வலியுடன் தான் இதை எழுதுகிறேன். அந்த குழந்தையின் கடைசி மூச்சு, அதுவும் அவன் கஷ்டப்பட்டு இழுக்கும் பொழுது என்னுடைய உயிரே போய்விடும் போல இருக்கிறது. அவன் ஒவ்வொரு முறை இழுக்கும் பொழுதும் அவனின் இதயத்தின் கீழே அடிப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் வருகிறது....................... இதற்கு காரணமானவர்களை அசிங்கமான வார்த்தையை சொல்லி திட்ட வேண்டும் என்பது போல கோபம் வருகிறது. குழந்தை என்ன பாவம் செய்தது. அவனை சுற்றி அழும் அவனுடைய உறவினர்களின் ஓலம் என்னுடைய காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது, ஈக்கள் அந்த சிறுவனை மொய்க்கும் காட்சியை பார்த்தால் இதயத்தை கத்தியால் கிழிப்பது போல வலிக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை, இந்த பாதிப்பு என்னை விட்டு விலக எத்தனை வருடங்கள் ஆகுமோ என்று தெரியவில்லை.

விகடன்
14-05-2009, 06:22 PM
இவ்வாறு எத்தனையோ இறப்புக்கள் அந்த நிலத்திலே நடக்கிறது. செய்தித்தணிக்கைகளாலும், தொடர்புகளின் துண்டிப்பாலும் இன்னும் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதான் உண்மை.

தமீழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று பறை சாற்ரிக்கொண்டு தமிழின அழிப்பை நடக்கின்றது.

இதை இன்னும் அறிந்துகொள்ளாத ஜென்மங்களும் அறிந்தும் வெளிப்படுத்தாத ஜென்மங்களும், உரிய நடிவடிக்கை எடுக்கும் உலக தலைவர்கள் இரங்கள் செய்திகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டும் இருக்கின்றன.

அறிஞர்
14-05-2009, 06:56 PM
உறவுகளின் பதிலை கண்டபின்.. பார்க்க இயலா சூழ்நிலையில்.. நான்.
இத்தனை கொடூரமான மானிடர் உலகில் ஏன் தோன்றினரோ...
இதற்கு என்றுதான் முடிவு வருமோ...

jk12
14-05-2009, 07:07 PM
குழந்தை படும் வேதனை மனதை பாரமாக்குகிறது...
இதையும் பொறுமையாக மற்றோரு கல்நெஞ்சக்காரன் சிறிதும் கையில் நடுக்கமில்லாமல் படமாக்குகிறானே......
கொடுமைகள்

This is an insult to humanity! first tamil tigers raided sinhalese villages in north and they cut open pregnant women in order to cut the necks of their unborn babies.now they shell/moeter their own people and kill their own children and show the horrific clips to the world!... WHY? Just to satisfy one mans desire to be the ruler of all tamils? Tigers and their supporters arent human. Bloody Cannibal devils.

How do u certainly know wht/who killed him? If u are tamil u'll claim is SL army. If u are sinhalease u'll say it's LTTE. I would say both side killed him. DO U KNW HOW MANY DIDE LIKE THAT?
But y ........... oh Simply bcoz tamils want a seperate land in a tiny island in indian ocean. mmmmmm maybe brutal terrorism affected this island 30 years ago n its in verge of defeat and now everyone realized deaths of innocents. Even it was going on for 30 years in this country.

மேற்கண்டுள்ள இருசெய்திகளும் அதே வலைதளத்தில் உள்ளது. இவையும் உண்மையா???!!!

எது உணமையெனினும் போர்முனை காட்சிகள் மிகவும் மனதை காயபடுத்துகிறது...

இப்படி வானிலிருந்து எல்ல்லோர்மேலும் குண்டு மழை பொழியும் விஞ்யாணமும் அதை உலகின் நடைமுறையில் அடுத்து அடுத்து நிகழ்த்திவரும் மனிதர்களும் அழிய பிரார்திப்போம்

விகடன்
15-05-2009, 07:33 AM
ஆமாம். அவன் கல் நெஞ்சுக்காரந்தான். அந்த நெஞ்சைக் கல்லாக்கியதும் ஈழப்போர்தான். எத்தனை உயிரிழப்புக்களை நேரில் பார்த்திருப்பான். அவன் மனதில் எத்தனை அகோர நிகழ்வுகள் படமாக்கப்பட்டிருக்கும்... சிந்திக்க வேண்டிய விடயம்.

ஆதவா
15-05-2009, 09:45 AM
அந்த படங்களையே என்னால் பார்க்க முடியவில்லை... இந்த குழந்தையின் மரணம்...????

அவர்களை என் உறவுக்காரர்களென எண்ணிப்பார்த்தேன்!!!

வேண்டாம்.... இனி இத்திரிக்கு வந்துசெல்ல தைரியமில்லை எனக்கு!

samuthraselvam
15-05-2009, 10:07 AM
எல்லோரும் சொல்லுவதைப் பார்த்தால் மிகவும் கொடுமையாக இருக்கும் போல் இருக்கிறதே...? நல்ல வேலை இந்தக் கொடுமையைப் பார்க்க என்னால் புடியவில்லை. என் கணினி கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தக் கோரக்காட்சியைப் பார்க்கவில்லை.

அமரன்
15-05-2009, 07:49 PM
சிங்களத்தின் வெறித்தனத்தை உரித்துக் காட்டும் இந்த ஒளிவீச்சை யூ-டியூப்பிலிருந்து அழித்து விட்டார்கள்.

சுடுக்காட்டுக்குள் கொஞ்சம் ஊர் இருக்கிறது என்றான் உணர்ச்சிக் கவிஞனின் காசி ஆனந்தன்.

அந்த ஊரும் இப்போது அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.