PDA

View Full Version : சேவல்காரி



ஆதவா
12-05-2009, 01:04 PM
அதிகாலை மணி ஐந்து. மிதமான வெப்பம் மெல்ல தாக்கத் துவங்கியிருந்தது. கோடைக்காலம் என்பதால் குளிருக்கான அறிகுறிகள் துளியும் தென்பட்டிருக்கவில்லை. கோபிச்செட்டிபாளையத்தில் பின்னிரவோ அல்லது முன்னிரவோ பெய்திருந்த மழையின் சுவட்டைத் தன் நாவால் நக்கியதைப் போன்று வெயில் தனக்குள்ளே உறிஞ்சியிருந்தது. கோபியிலிருந்து ஈரோடு செல்லும் சாலை என்றாலும் அவ்வளவு அதிகமாக வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. ஒன்றிரண்டு பால் வேன்கள், புல்லட் வண்டிகள் சில, பேருந்துகள் கூட வெகு குறைவாக சென்றுகொண்டிருந்தன. எதிர்படும் வாகனங்கள் இன்னும் விளக்கை அணைக்காமல் விர்றென்று வந்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே கிராமிய மணமும், சாணம் அல்லது வைக்கப்போர் வாசனையும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

சாலையின் இருமருங்கிலும் ஓங்கி உயர்ந்த மரம், நடுப்பகலிலும் நல்ல நிழலைத் தருவனவாகவும் வெப்பத்தை சற்றே தணிப்பதாகவும் இருக்கின்றன. கோபி நெடுஞ்சாலையில் மாடுகள் சென்றதற்கான அடையாளமாய் சாணம் காய்ந்து கிடந்தது.
மிதமான வேகத்தில் யமஹா க்ரக்ஷ் வண்டியில் சென்றுகொண்டிருந்தேன். வண்டியை ஓட்டும் பொழுது எங்கெங்கெல்லாம் சாணம் கிடக்கிறதோ அதன் மீது பயணித்துச் சென்றேன். எனக்கே தெரியவில்லை. நான் ஏன் அப்படிச் செல்கிறேன் என்று. பின் சீட்டில் என் அப்பா எந்த வித பேச்சுமின்றி ஒரு நிசப்த மூட்டையாக அமர்ந்திருந்தார். அவ்வப்போது பேசும் பொழுது உம் கொட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சில கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தேன். பிறகு பெரும்பாலும் நிசப்தம்தான். அதிலும் திருப்பூரிலிருந்து கோபி வரையிலும் அவ்வளவாக விடியாத இருட்டு சூழ்ந்திருந்ததால் சுத்தமாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை. எனது நினைவுகள் எல்லாம் நாம் செல்வது சரிதானா, சரிப்பட்டு வருமா என்பதிலேயே இருந்தது.

பொதுவாக அதிகாலைப் பயணங்களில் கைகள் சற்றே விறைத்து, உடலெங்கும் குளிரின் தீவிரம் ஊடுறுவித் துளைக்கும். இப்பொழுது அப்படியேதும் தெரியவில்லை. இன்னும் ஆரம்பிக்காத வெயிலின் அறிகுறிகள்தான் தென்பட்டன. இதைப் போன்றதொரு வெப்பநிலை நாள் முழுக்க இருந்துவிடாதா என்று ஏங்கும்படியான சூழ்நிலை. எதிர்வரும் காற்று அடித்து என் மூக்குக் கண்ணாடியின் வழியே நுழைந்து கண்களில் நீர் வந்துவிடாதபடி, எந்த இலக்குமில்லாமல் பயணிக்கும் ஒரு பயணியைப் போல வண்டியை செலுத்துக் கொண்டிருதேன்.

ஒத்தக்குதிரை வந்த பொழுது எங்கள் இருவருக்குமே ஒரு சந்தேகம் திரும்பவேண்டிய அல்லது செல்லவேண்டிய பாதையைக் கடந்துவிட்டோமா என்று. தார்ச்சாலையிலிருந்து இறங்கி அருகேயிருந்த ஒரு பெட்டிக் கடைக்கு வண்டியைச் செலுத்தினேன். அதனுள் ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். சுமார் அறுபத்தைந்து வயது இருக்கலாம். கருத்த முகம், அடர்ந்த கூந்தல் நன்கு சிவந்த பொட்டு, அந்நேரத்திலேயே அம்மூதாட்டி குளித்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வளவு புத்துணர்ச்சி முகத்தில் குடியிருந்தது. கழுத்தருகே சூடு பட்ட காயம் மட்டும் என் கண்களை உறுத்தியது. 'ஓடத்துறைக்கு இப்படித்தானே போவணும்" என்று வினவினேன். ஆமா, போங்க. ஒத்தக்குதிரையைத் தாண்டிட்டா, அடுத்த இரண்டாவது கட்டு" என்று சொல்லிவிட்டு, கடையின் கீழிருந்து பீடிக் கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் போன்றவற்றை எடுத்து அடுக்க ஆரம்பித்தார்.

இன்னும் ஒத்தக்குதிரையே வரவில்லை என்று எங்களுக்குள் சமாதானம் ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் வண்டியைச் செலுத்தினோம். அம்மூதாட்டி சொன்னது போல இரண்டாவது திருப்பம் எது என்பது தெரியாமல் ஒரு பாலத்தைத் தாண்டிச் சென்றோம். பாலத்தினடியே ஒரு ஓடத்தின் வறண்ட தடம் பதிந்து கிடந்தது. சற்றே எட்டிப் பார்த்தவாறு மேலும் சிறிது தூரம் சென்றோம். முதலாவது திருப்பம் எங்கேயோ கடந்து சென்றுவிட்டதைப் போன்ற உணர்வு.. இரண்டாவது திருப்பத்தினருகே "ஓடத்துறை" எனும் ஊர்ப்பலகை மஞ்சள் நிறத்தில் வலதோரமாக இருந்தது. அது மஞ்சள் நிறமா என்பது சரியாகத் தெரியவில்லை.

கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சுமார் பதினோரு கி.மீட்டர் தொலைவில் கவுந்தப்பாடிக்கு முன்னரே ஒரு குறுகிய தார்ச்சாலை இடதுபுறமாக உள்ளே செல்கிறது. அதுதான் ஓடத்துறைக்குச் செல்லும் வழி. ஓடத்துறையைப் பற்றி வழியில் விசாரிக்க ஆரம்பித்தாலே "மீன் வாங்கப் போறீங்களா" என்று எதிர்கேள்வி கேட்பார்கள். அந்த அளவுக்கு மீனுக்கு பிரபலமான ஒரு கிராமம். ஓடத்துறை குளத்தில் அதிகம் ஜிலேபி மீன்களையும், ஆறா மீன்களையும் பிடிக்கிறார்கள். விலை மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. இக்கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலையின் வழியெங்கும் ஒவ்வொரு கிளை தனித்தனியே பிரிந்து செல்கிறது. எக்கிளையில் செல்லவேண்டும் என்ற குழப்பத்தை மைல் துணைக்கற்கள் தீர்த்து வைக்கின்றன. சிறிது தூரத்திலேயே புழங்கும் கிராமம் தெரிந்துவிடும். ஓடத்துறை குளத்தைச் சுற்றி பேருந்துகள் செல்லும், வண்டியில் செல்லவேண்டுமெனில் குறுக்குப் பாதைகள் நிறைய செல்கின்றன. பெரும்பாலான பாதைகள் முடிவற்றோ அல்லது திருப்பப்பட்ட பாதைகளாகவோ இருக்கின்றன.

தொடரும்....

amuthuramalingam5
12-05-2009, 04:18 PM
தொடருங்கள்.. தொடருங்கள் ஆதவா,
பயண அனுபவம்.. ஈரமான எழுத்து.
அந்த காலை உங்களுக்கு குளிர்ந்ததோ இல்லையோ
படித்த எனக்கு குளிர்கின்றது.

(நான் இங்கு இடும் முதல் மறுமொழி இப்பதான் ஒன்னொனா தெறியுது)

ஆதவா
13-05-2009, 02:38 AM
தொடருங்கள்.. தொடருங்கள் ஆதவா,
பயண அனுபவம்.. ஈரமான எழுத்து.
அந்த காலை உங்களுக்கு குளிர்ந்ததோ இல்லையோ
படித்த எனக்கு குளிர்கின்றது.

(நான் இங்கு இடும் முதல் மறுமொழி இப்பதான் ஒன்னொனா தெறியுது)

வாருங்கள் ஆ.முத்துராமலிங்கம். உங்களுக்கு முதற்கண் வரவேற்புகள். இங்கே
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38 சென்று New thread என்று ஆரம்பித்து உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தாருங்கள்.

நீங்கள் ஏற்கனவே தமிழ்மன்ற விதிமுறைகளைப் பற்றி படித்திருப்பீர்கள். சாதாரணவைகள்தான்.... பெரும்பாலும் உங்களைப் போன்ற மென்மையான எழுத்தாளர்களுக்குப் பொருந்தாதவை :)
---------------------------------------
உங்கள் பார்வைக்கு நன்றி.. தொடர்ந்து படித்து வாருங்கள்!!!! (இத்தொடரையாவது முடிப்பேன் எனும் நம்பிக்கையுண்டு!!)

பென்ஸ் : இப்படித்தானட ஒவ்வொரு தொடருக்கும் சொல்லுவ??

ஆதவா
14-05-2009, 04:20 AM
2

ஞாயிற்றுக் கிழமைகளில் திருப்பூர் எப்பொழுதும் ஒருவித சோம்பலோடுதான் புலரும். பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் ஞாயிறு அன்று வேலை வைத்திருப்பதில்லை. அதிகாலைப் பொழுதுகளில் ஒரு நீண்ட நெடுஞ்சாலையில் நீங்கள் ஒருவர் மட்டுமே பயணிக்கும்படி பாதையெங்கும் வெறுமை அலைந்து கொண்டிருக்கும். அஃது எட்டு மணி வரையிலும் சிலசமயம் நீடிக்கும். ஓடத்துறை அப்படியானதொரு சோம்பல் கிராமமல்ல. திருப்பூரின் எட்டு மணியைப் போன்ற கூட்டமொன்று ஓடத்துறையின் ஐந்து மணிகளில் எப்பொழுதும் இருக்கிறது. தென்படும் மனிதர்கள் எல்லோருமே ஒருவித அன்போடுதான் பார்வையிடுகிறார்கள். மனிதர்களின் நிறம் கருப்பாக இருந்தாலும் அவர்களது குணம் வெள்ளையாகவே இருந்துவிடுகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மணமுண்டு. நிறமுண்டு. அகலமில்லாத ஒற்றைப் பாதைகளும் குறுகி, குறுக்கில் நிற்கும் குறுங்கோவில்களும், பாதையெங்கும் பரந்திருக்கும் கால்நடைகளின் கால்த்தடங்களும் அம்மண்ணின் மணத்தை நிர்ணயிக்கின்றன. குட்டியாடுகளோடு அம்மா ஆடுகளும், குஞ்சுகளோடு கோழிகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிவதைக் காணும் பொழுது ஒருக்கணம் நாமும் இந்த கால்நடைகளைப் போல ஆகிவிடலாமா என்று தோன்றும். ஆடுகளின் ஏதாவது ஒரு காலில் கட்டப்பட்டிருக்கும் இரும்பு வளையத்தைக் காணும் பொழுது நாம் நினைத்தது தவறுதான் என்று அப்பொழுதே மனம் மாறிவிடும்.

ஓடத்துறையின் முழுதாய் விழிதிறக்காத காலையில் நாங்கள் இருவரும் எங்கள் பெரியப்பா வீட்டை அடையும் பொழுது மணி சரியாக ஐந்தே முக்கால். சென்ற தீபாவளியை (2008) வெகு விமர்சையாக கோழிக்கறியோடு கொண்டாடிய ஓடத்துறையில் கால்வைத்திடும் பொழுது ஒரு சில்லிப்பு ஏற்படுகிறது. என் அம்மாவின் அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டிக்கும் அம்மா இங்கேதான் இருந்தார். சமீபத்தில் இறந்து போனார். அந்த மூதாட்டிக்கு வயது தொண்ணூறைத் தாண்டி இருக்கலாம். என்னை நல்ல ஞாபகம் வைத்திருந்தார்.

வழக்கமான நலவிசாரிப்புகள் தொடங்கி முடிந்து நானும் அப்பாவும் பெரியப்பா மகன் சரவணனும் வண்டியிலேயே சந்தைக்குச் செல்லுவதென தீர்மானித்தோம். சந்தை, நாங்கள் இருந்த வீட்டிலிருந்து சுமார் மூன்று கி.மீட்டர்கள் இருக்கலாம். தார்ச்சாலையொன்று அவ்வழியே செல்லுகிறது. எனினும் நாங்கள் கிளம்பும் பொழுதே ஒரு பண்ணைக்காரர் வீட்டுக்குச் சென்றுவிட்டு அதே குறுக்கு வழியில் சந்தைக்குச் சென்றுவிடலாம் என்று தீர்மானித்தோம்.

வீட்டுக்குப் பின்புறமாக இருந்த சிமெண்ட் சாலையின் வழியே நுழைந்து ஒரு சந்தில் மண்பாதைக்கு மாறினோம். பொட்டலாகக் கிடந்த அவ்வெளியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பச்சை நிறம் பூசப்பட்ட பூமியாகக் காட்சியளித்தது. பாதங்கள் மட்டுமே பொருந்தும்படியான அப்பாதையில் வண்டியைச் செலுத்தினேன். முற்கள் ஏதும் இருந்தால் டயர் பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பாதையைவிட்டு விலகாத கவனத்தில் வண்டியை ஓட்டினேன். சற்று தூரத்தில் கரும்பு வாசனை அடித்தது. பாதையெங்கும் கரும்பின் துகள்கள் இறைந்து கிடந்தது. சக்கரையைக் காய்ச்சிய வாசம் இன்னும் அகன்றுவிடாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. அங்கங்கே தார்ச்சாலைகளும் மண்பாதைகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சரவணன் எங்கள் இருவரையும் ஒரு அடர்ந்த கிராமத்தினுள் கூட்டிச் செல்லுவதாகத் தோன்றியது. திரும்பிச் செல்லவேண்டிய வழியை அவர் மட்டுமே அறியும் வகையிலான சிக்கல் மிகுந்த வழிகள் அவை.

வழியிலேயே சரவணன் சொல்லிவிட்டார். சேவலின் விலை கொஞ்சம் ஜாஸ்திதான் ஆனால் நன்கு கறி விழும் என்றார். ஒரு சேவல் நான்கிலிருந்து ஐந்து கிலோவரை வரும், இன்னொரு சேவல் மூன்று கிலோ வரலாம். சேவலைப் பார்த்தாலே வாங்கிவிடத் தோணும் தோற்றத்தில் இருப்பதாகச் சொன்னார். விலை வேறு ஆயிரத்திஎண்ணூறு ரூபாய்.. எனக்கோ மனக்குழப்பம். இப்படியே விலை அதிகம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு திரும்பிவிடலாமா இல்லை பண்ணைக்காரர் வீட்டுக்குச் சென்று பார்த்துவிடலாமா??

ஒரு வலது திருப்பத்தில் பண்ணைக்காரரின் வீடு வந்தது. சற்றே பள்ளமாக இறங்கியிருந்த வாசல் நன்கு அகண்டு பெருத்து இருந்தது. நீளமான மரக்கட்டைகள் செறுகப்பட்டு மூடிக்கிடந்த கதவை சரவணன் தள்ளினார். தரையோடு பதிந்து ஒரு பெரிய ஆரத்தை வரைந்தது கதவு. வண்டியை அந்த காம்பெளண்டில் செலுத்தினேன். எங்களுக்காகவே காத்திருந்ததைப் போன்று கூவியது அங்கிருந்த சேவல்.

பாரதி
14-05-2009, 06:08 AM
சில நேரங்களில் தலைப்பே அத்திரியில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்கத்தூண்டும். அவ்வகையில் இதையும் சேர்க்க வேண்டும். அலங்கரிக்கப்படாத காலைப்பொழுதை அழகாக வார்த்தைகளில் அலங்கரித்த விதம் அருமை. தார் மற்றும் சிமிட்டிகளால் மூடப்பட்ட சாலைகள் வெப்பத்தை உமிழும் சமயங்களில் தடம் தெரியும் மண்பாதைகளின் நன்மை விளங்கும். அதையும் மனதில் பதியும் வகையில், மணம் கமழ வரும் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பேன் ஆதவா.
எழுதுங்கள்.

ஆதவா
14-05-2009, 06:33 AM
மிக்க நன்றி அண்ணா.. தொடர்ந்து என் எழுத்துக்களைப் படித்து பின்னூட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இத் தொடர் வலுவிழக்காமல் செல்ல உங்களைப் போன்றோரின் கருத்தும் மிக முக்கியம்!!!

சிவா.ஜி
14-05-2009, 07:23 AM
அதிகாலை ஆளரவமற்ற சாலைப்பயணம் சுகமானதுதான். ஏதேதோ நினைவுகளை அசைபோட்டபடியோ, இல்லை கடந்து செல்பவைகளையும், கண்ணில் படுபவைகளையும் ரசித்துக்கொண்டு செல்வது நல்லதோர் அனுபவம்.

உங்கள் எழுத்தில் எப்போதுமே இலக்கிய மணம் திகழும். இந்தக் கட்டுரையில் கிராமிய மணமும் கலந்து சுகமான வாசத்தை தருகிறது. ஓடத்துறை கிராமத்தைக் கண்ணுக்கு முன்னால் காட்டி எங்களையும் சில நிமிடங்களுக்கு அங்கே வாழவைத்துவிட்டீர்கள்.

தொடருங்கள் ஆதவா...சேவல் திருப்பூர் வந்து சேர்ந்ததா என அறியும் ஆவலுடனும், உங்கள் எழுத்தை மேலும் சுவைக்கும் ஆவலுடனும் காத்திருக்கிறேன்.

ஆதவா
14-05-2009, 07:38 AM
மிக்க நன்றி அண்ணா.. இம்முறை கிராமிய மணம், இலக்கிய மணம் என்று எந்த இலக்குமின்றி என் எழுத்துக்கள் பயணிக்கிறது. கிராமிய நடைகளில், பாரதி, முகிலன் போன்றோர் அளவுக்கு எட்டமுடியாவிடினும் ஓரளவு முயன்றிருக்கிறேன்!

தொடர்ந்து வாருங்கள்!!!! சேவல் தான் கதையின் மையக்கரு!

அன்புடன்
ஆதவா

மதி
14-05-2009, 08:34 AM
நான் அடிச்சு சொல்றேன்.. என் அளவுக்கு முடியாது... :D:D:D

ஆதவா.. சம்பவங்களை சொல்லும்விதத்தில் தான் ஜெயிக்கின்றோம். இதுவரை வந்த வர்ணனைகள் எங்களை உன்னுடனே பயணிக்கவைத்தது. அந்த அதிகாலையும், தார்சாலையும், கரும்பு வாசனையும் நாங்களும் உணர்ந்தோம்..

தொடர்க.

amuthuramalingam5
14-05-2009, 09:36 AM
ஆதவா, நல்ல எழுத்துகளில் நீரோடையென செல்கின்றது உங்கள் எழுத்து.
நாம் கடந்து போகின்ற ஒவ்வொரு விசயமும் ஏதாவதொரு விதத்தில் நம்மிடம் தங்கிவிடுகின்றது. உங்கள் சேவல் காலை எத்தனை ரசனையாக இருந்திருக்கின்றது, அந்த காலையில் எங்களையும் பயணிக்க விட்டிருக்கின்றீர்கள்.

இன்னொன்னு ஆதவன் நீங்க சொன்ன அந்த வெறுமை அப்பி நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலை.. அது போன்று ஒரு தருனத்தில் நானும் ஒரு நாள் அலைந்து திரிந்து அனுபவம் கொள்ள வேண்டும் என்ற ஆசை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்றது. இது ஏனென்று தெறியவில்லை, சில உலகப் படங்களின் பாதிப்பாக இருக்கலாம்.

(என்னை தமிழ்மன்றத்தில் அறிமுகப்படுத்திக் கொள்ள இரண்டு மூன்று நாள் ஆகும் ஆதவா)

samuthraselvam
14-05-2009, 10:07 AM
ஆஹா... எங்க ஊருக்கு வந்தீங்களா?

அதிகாலை நேரத்தில் சத்தியமங்கலம் - ஈரோடு நெடுஞ்சாலை எப்போதுமே நிசப்தமாய் இருக்கும்..

அதன் இருமருங்கிலும் மரங்கள். பயணித்தால் அவ்வளவு சுகமாய் இருக்கும்.

தினமும் நடை பயிற்சி செய்ய அந்த நிசப்தம் தூண்டும். ஆனால் வேலை பளு அந்த ஆசையை அடக்கிவிடும்.

உங்களின் வர்ணனை மிக அழகாக உள்ளது ஆதவா....

வாழ்த்துக்கள்..........

தொடருங்கள்.................

ஆதவா
15-05-2009, 04:04 AM
நன்றிங்க மதி...

உங்க அளவுக்கு நான் எப்பவுமே முயற்சி பண்ணமாட்டேன் :D:D:D

மிக்க நன்றி...
---------------------
வாங்க ஆ.முத்துராமலிங்கம். மெதுவா வாங்க, புரிஞ்சிகிட்டு வரவங்க ரொம்ப பிணைப்பா இருப்பாங்க.. உங்கள் ரசனையை ரசித்தேன்..
------------------------------
உங்க ஊர் ஓடத்துறையா?? அடடா.... மிஸ்ஸாயிடிச்சே..
அடுத்த முறை வரும்பொழுது உங்க வீட்டுக்கு வாரேன்..
நன்றிங்க.

ஆதவா
15-05-2009, 04:09 AM
3
என் அம்மா சொல்லும் பொழுதே எனக்கு அதில் இஷ்டமில்லை. வேண்டாம் என்று மறுத்தேன். ஆனால் நேசம் கலந்த கட்டாயம் மனதினுள் குழப்பம் ஏற்படுத்தியிருந்தது. சேவல்களை வாங்க அறுபது கி.மீட்டர்கள் செல்லவேண்டுமா எனும் கேள்வியை விட, வாங்கி வந்த சேவல்களை ஒருவாரம் எப்படி வளர்ப்பது? எங்கள் ஏரியாவில் நாய்த் தொல்லைகள் அதிகம். அதைவிட திருட்டும் மிக அதிகம். எங்கள் வீடு திறந்த வெளியாக எந்த வாசற்கதவும் இல்லாமல் இருப்பது இன்னும் பிரச்சனையைத் தரக்கூடியது. அதிலும் திருப்பூரைக் காட்டிலும் எந்த விதத்திலும் ஓடத்துறை சேவல்கள் விலை குறைந்தது அல்ல. ஒன்றிரண்டு அல்ல. ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வரையிலும் அதிகம். எங்கள் வீட்டில் ஓடத்துறை கிராமத்தை பரிந்துறைப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது பெரியப்பா மகன் சரவணனின் அதீத நட்பும் ஆழ்ந்த அக்கறையும் சேவல்களுக்காக அலைந்து திருந்ததும் ஆகும். இரண்டாவது சேவல்கள் நன்கு திடகாத்திரமாக, கறி அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே தீபாவளிக்குச் சென்ற பொழுது அங்கிருந்த தோட்டத்துச் சேவல்களைத்தான் கறியாக்கிச் சமைத்தார்கள். அதன் ருசியை அனுபவித்துவிட்ட நாக்கு மீண்டும் அதைப் போன்றதொரு ருசியைத் தேடி அலைவது அப்படியொன்றும் ஆச்சரியமில்லைதானே.

நாங்கள் தொண்ணூற்றி ஒன்பது சதவிகிதம் ப்ராய்லர் கோழிகளைச் சாப்பிடுவதில்லை. நாட்டுக்கோழிகள்தான் எங்கள் சமையலுக்கு ஏற்ற கோழிகள். வழக்கமாக கோழிகளை வாங்கும் கறிக்கடையில் நான் சென்று விசாரித்தேன். கிலோ ருபாய் 170 வீதம் 15 கிலோவுக்கு 2550 ரூபாய், கொஞ்சம் முன்னது பின்னது ஆகலாம் என்று தெரிந்து கொண்டேன்.

எங்கள் கறிக்கடைக் காரர் நாட்டுக்கோழிகளில் நன்கு அனுபவமிக்கவர். வெகு வருடங்களாக அத்தொழில் செய்துவருகிறார். சற்றே பெருத்த வயிறுடையவர். அடர்ந்த மீசை, கருஞ்சிவப்பு மேனி, எப்பொழுதுமே நன்கு அழுக்கான லுங்கியையும் கிழிந்த அடர் நீல வர்ண பனியனும் அணிந்திருப்பார். அவரை ஒருநாள் கூட சட்டை அணிந்து பார்த்ததில்லை. அவர் பண்ணைக் கோழிகளை விற்பதில்லை என்பதால்தான் சுமார் பதினைந்து வருடங்களாக அக்கடையில் கோழிகள் வாங்குகிறோம். நன்கு செழித்த நாட்டுக்கோழிகளை மட்டுமே அவர் விற்பது வழக்கம். அவரது கடையில் கோழிகள் வெகு விரைவாகவே விற்று தீர்ந்துவிடும். அந்த அளவுக்கு கிராக்கி. நான் அல்லது என் அப்பா சென்றால் கொஞ்சம் முன்னுரிமை தருவார். கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்வார். என்றாலும் பண விஷயத்தில் அவர் எப்பொழுதுமே கறார்தான். பணம் போதவில்லை என்றால் அடுத்த முறை தரச்சொல்லுவார் ஆனால் விலையை மட்டும் குறைத்துக் கொள்ள மாட்டார். அந்த கோழிக்கடைக்காரருக்கு ஒரு மகனும் உண்டு. அம்மா கோழிகளை சுடுநீரில் முக்கி எடுக்க, அப்பா, பொங்குகளைப் பிரித்து சுத்தம் செய்து உரிக்க, மகன் தனித்தனியே நறுக்கி வாடிக்கையாளர்களுக்குத் தருவார். நாங்கள் எப்பொழுதுமே கோழிகளின் பொங்குகளை உரித்தோ, அல்லது உயிரோடோ வாங்குவது வழக்கம்.

நான் அவரிடம் விசாரிக்கும் பொழுதே அருமையான சேவல்கள் இருந்தன. ஒவ்வொன்றும் மூன்று கிலோ பிடித்தம் பெறும். "எத்தனை கோழின்னாலும் வாங்கிக்கோ தம்பி ஆனா முன்னாடியே சொல்லிடு" என்றார். நான் அவரிடம் யோசித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வீட்டில் ஒரு முடிவோடுதான் காத்திருந்தார்கள்.

ஓடத்துறை சேவல், ஓடத்துறை சேவல், ஓடத்துறை சேவல்.... எரிச்சலாகவே வந்தது இந்த கோழிகள் மீது. துளிகூட எனக்கு இஷ்டமேயில்லை அங்கே சென்று வாங்கவேண்டுமென்று. ஒரேயடியான நச்சரிப்பின் காரணமாக ஒத்துக் கொண்டேன்.


4

பண்ணைக்காரரின் காம்பெளண்டில் நுழையும் பொழுதே சாணத்தின் வாசனை மூக்கில் ஊடுறுவியது. ஒரு கறுத்த நாயை முன்புறம் கட்டிப் போட்டிருந்தார்கள். நாங்கள் நுழையும் வரை அமைதியாக முகட்டை மண்மீது வைத்து படுத்திருந்த அந்நாய் எங்களைப் பார்த்ததும் குரைக்க ஆரம்பித்தது. வலது புறத்தில் பெயர் தெரியாத மரங்கள் ஒன்றிரண்டு இருந்தன. அதற்கு அருகே பண்ணைக்காரரின் வீடு. இடது புறத்தில் ஒரு பெரிய காலி வீடும் மாட்டு கொட்டகையும் இருந்தது. இவையெல்லாவற்றிற்கும் பின்புறம் வயல்வெளி இருந்தது. அதில் தட்டு விதைத்திருந்தார்கள். பண்ணைக்காரரின் மனைவி பல்துலக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேவந்தார். நல்ல குண்டு பெண்மணி. அதிகாலை சோம்பல் துளியும் அற்றவராக இருந்தார். அவரது கையில் ஒரு கூடை இருந்தது. சற்று விரித்து பின்னப்பட்டிருந்த அந்தக் கூடையில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருந்தன.

சரவணன் அந்த பெண்மணியிடம் பண்ணைக்காரர் எங்கே என்று விசாரித்தார். அவர் சொல்லுவதற்குள்ளாகவே " வா தம்பி " என்ற ஒரு குரல் அருகேயிருந்த மரத்திலிருந்து வந்தது. அடர்ந்த அம்மரத்தினிடையே அவரைக் காண இயலவில்லை. அவர் எப்படி இருப்பார் என்று யோசிக்கவுமில்லை. சரவணன் மட்டும் அவரிடம் பேசினார். நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தைச் சட்டென்று புரிந்து கொண்டார். சரவணன் இங்கே முன்பே வந்திருக்கவேண்டும். எங்களுக்காக சேவல் வாங்க இவ்வளவு தூரம் அலைந்திருக்கிறார். பண்ணைக்காரர் இன்னமும் தெரியாத உயரத்திலிருந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'பெரிய சேவல் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். சரியான நஷ்டம் எனக்கு. ஆயிரம் ரூபாய்க்கு ஐம்பது ரூபாய்கூட குறைத்துக் கொள்ளமாட்டேன்' என்று பிடிவாதமாக இருந்தார். இடையிடையே சரவணன் எங்களிருவரையும் நோக்கினார். விலைகுறைக்கமாட்டார் என்று அவர் கண்களாலேயே பதில் சொன்னார். நான்கு கிலோ எடையுள்ள ஒரு சேவலை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் கிலோ 250 ரூபாய் கணக்கு வருகிறது.. இது டபுள் ரேட் என்றேன். கொஞ்சமும் இறங்கி வராமலேயே இருந்தார் மரத்திலிருந்தும் விலையிலிருந்தும்..

அந்த சேவலின் அருகே என் அப்பா அமர்ந்து அதன் கழுத்தினடி பிடித்தார். சேவல் சற்றே திமிறி கூவியது. அதன் வயிற்றுப் பகுதியை மிதமாக அழுத்தி "நன்கு கறி விழும்" என்றார். எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் விதமாக நானும் அழுத்திப் பார்த்தேன். அந்த சேவலைப் பற்றி சொல்லவில்லையே.. இதுவ்ரை நான் கண்ட சேவல்களிலேயே நன்கு உயர்ந்த சேவல் அது. திடமாக கொழுத்திருந்த அது நான்கு கிலோவுக்கும் மேலேதான் வரும் என்று காண்பவரெல்லாம் கணக்கிடும் கம்பீரம். கூர்ந்த அதன் பார்வையும் சிலுப்பித் திருப்பும் அதன் தலையும் கறியின் ருசியை மனதாலேயே கணக்கிடச் செய்யும். ஐந்து வயது குழந்தையின் கரத்தைப் போன்ற அதன் தொண்டை, நாவில் எச்சில் ஊறச் செய்தது. அதன் கால்விரல்களை எடுத்து என் உள்ளங்கையில் வைத்தேன். என் அப்பா, அப்படிச் செய்யவேண்டாம் என்றார். சட்டென்று இறக்கிவிட்டேன். அதன் விரல்கள் என் உள்ளங்கையை மறைக்குமளவுக்குப் பெருத்து நீண்டு இருந்தது. பண்ணைக்காரரும் சரவணனும் சொன்னது உண்மைதான். அந்த சேவலைப் பார்த்தவுடனே யாவருக்கும் வாங்கத் தோன்றும்.

சிறிது நேரத்திற்கெல்லாம் பண்ணைக்காரர் இறங்கி வந்தார். அவரது தோற்றத்தைப் பார்த்ததும் எனக்கு வியப்புதான் மேலிட்டது. கருத்து குண்டாக, அவரது மனைவியைப் போன்றே தோற்றம். பெருந்த தொந்தி அவர் கட்டியிருந்த கோமணத்தை மறைத்து விழுந்தது. பெரும்பாலும் கிராமத்தவர்களை தொப்பையோடு அவ்வளவாக கண்டதில்லை. ஒட்டிய வயிறோடே கண்டு பழகியதால் இவரைப் பார்த்ததும் புதுமாதிரியாக இருந்தது. அவர் மரத்திலிருந்து இறங்கி நடந்து வந்த பொழுது துள்ளிக் குதித்தது அவரது தொந்தி. பெருத்த புட்டம் தொந்தியைவிடக் குறைவாகத் துள்ளியது. சற்றும் சங்கோஜமின்றி எங்கள் முன் நடந்துவந்தார். அவரது வீட்டுக்கு எதிரேயிருந்த காலிவீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இன்னும் கூவும்...

பாரதி
15-05-2009, 07:49 AM
இப்போது மன்றத்தின் தினம் சேவலின் ஒலியுடன்தான் விடிகிறது. நல்ல விவரிப்பு ஆதவா.

samuthraselvam
15-05-2009, 08:25 AM
உங்க ஊர் ஓடத்துறையா?? அடடா.... மிஸ்ஸாயிடிச்சே..
அடுத்த முறை வரும்பொழுது உங்க வீட்டுக்கு வாரேன்..
நன்றிங்க.

எங்க ஊரு ஓடந்துறை இல்லங்க.

சத்தி - கோபி செல்லும் வழியில் இருக்கு. ஈரோடுன்னா மொத்தமா எங்க ஊருதான். ஹி ஹி ஹி...... :D

நீங்க சொல்லுறதைப் பார்த்தால் அந்தக் கோழிகள், நாட்டுக் கோழிகளில் ஒரு வகை. பெருவெட்டைக் கோழிகள்ன்னு சொல்லுவாங்க.

அதுதான் நாலு கிலோ, மூணு கிலோ இருக்கும். சாதாரண கோழிகள் இரண்டு கிலோவை தாண்டாது.
அதன் ருசி பெருவெட்டைக் கோழிகளை விட அதிகம்.:aetsch013:

பண்ணைக்காரரின் தோற்றத்தை நீங்கள் வர்ணிப்பதைப் பார்த்தால், எங்கள் பக்கத்து தோட்டத்துக்காரர் தான் நினைவுக்கு வருகிறார். அவரும் சின்ன கொழந்தை போல தான் உடை அணிவார்.:icon_rollout:

பூமகள்
15-05-2009, 08:49 AM
தம்பி ஆதவாவின் பதிவுகள் எதார்த்தத்தை எங்கும் நிரப்பிச் செல்கிறது..


ஒவ்வொரு வரியும் நெஞ்சில் ஆழ்ந்து பேசுகிறது..

பண்ணைக் காரரின் வீடும்.. அதற்காகச் சென்ற வழியும் மெல்ல எங்கள் ஊரை அசைபோட வைத்தன. அவரின் தோற்றத்தை விவரித்த விதம் அருமை.(இப்பதிவை அவர் படிக்காமல் இருக்க பிராத்திக்கிறேன். ;)) எங்கள் ஊரில் இப்படி ஒருவரைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அப்படியே தான் உலவுவார்.. :D:D

நாட்டுக் கோழிகள் உண்பது வெகு அரிது. மொத்தமே பத்து முறைகள் அதிகபட்சம் உண்டிருக்க வாய்ப்புண்டு.. இப்போது சாப்பிட வேண்டுமென்று நினைத்தால்... அழுகையே மிஞ்சுகிறது.

நாவில் எச்சில் ஊற வைத்த பதிவு. கண்டிப்பாக இந்த முறை எப்படியாவது நாட்டுக் கோழி சாப்பிட்டாக வேண்டும்.


சேவல் கறி உண்ட அனுபவம் இல்லை. ஆதவாவின் பதிவு மூலம் அது கற்பனையிலேனும் நிறைவேறும் எனக் காத்திருக்கிறேன்.

சிறந்த பதிவு தம்பி ஆதவா.

தொடருங்கள்.. விடிகாலையில் சேவல் கூவும் போதே நாங்களும் எழுந்து உங்களோடு பயணிக்கிறோம்.

சிவா.ஜி
15-05-2009, 09:17 AM
ஆதவா சொல்றது சரிதான். தொப்பையோட கிராமத்துக்காரங்களைப் பார்ப்பது அபூர்வம்தான். நல்ல உழைப்பாளிங்க...உடலெல்லாம் திண்னென்றிருக்கும்.

ஒரு சேவல் 1000 ரூபாயா....ஆச்சர்யமாக இருக்கிறது. ப்ராய்லர் கோழிகளையே சாப்பிடுபவர்களுக்கு, நாட்டுக்கோழியின் ருசி மிகவும் பிடித்துப்போகும். அதுவும் நல்ல பக்குவத்துடன் செய்யப்படும் கோழிக்குழம்பு அவ்ளோ ருசியா இருக்கும்.

அந்த ருசிக்காக அவளோதூரம் போனது ஆச்சர்யமில்லை. ஆனா சேவல் வாங்க போன கதையை நீங்க சொல்ற விதம்தான் டாப். சின்னச்சின்ன விஷயங்களைக் கூட விடாமல் எழுதியிருப்பது வியக்கவைக்கிறது.

அதுவும் அந்தக் கருத்த நாய் முகட்டை மணலின் மீது வைத்திருந்தது என்று நீங்கள் எழுதியிருப்பதைப்பார்த்து வியந்தேன். வெறுமனே நாய் இருந்தது என எழுதாமல், நாய்களின் இயல்பான செயலையும் குறித்து எழுதியிருப்பது அருமை.

சீக்கிரம் குழம்பு வெச்சுட்டு கூப்பிடுங்க ஆதவா.....

மதி
15-05-2009, 10:04 AM
அண்ணே நானும் இதுவரை சேவல் கறி சாப்பிட்டதில்லே... எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்கோ...

samuthraselvam
15-05-2009, 10:20 AM
அண்ணே நானும் இதுவரை சேவல் கறி சாப்பிட்டதில்லே... எனக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்கோ...

சேவல்கறி சாப்பிடனுன்ன அந்த பண்ணைக்காரருக்கு உதவி ஆளாய் பத்து நாளைக்கு வேலை செய்யனுமாம். அவர் எந்த வேலைகளை எப்படி செய்யராரோ அதுபோலவே அதாவது அவர் மாதிரியே நீங்களும் இருக்கனுமாம். அப்படி தான் ஆதவா என்கிட்டே சொன்னார். அவர்கூட அப்படி வேலை செய்துதான் சேவல்கறி சாப்பிடனுமாம். :lachen001:

சிவா.ஜி
15-05-2009, 10:29 AM
சேவல்கறி சாப்பிடனுன்ன அந்த பண்ணைக்காரருக்கு உதவி ஆளாய் பத்து நாளைக்கு வேலை செய்யனுமாம். அவர் எந்த வேலைகளை எப்படி செய்யராரோ அதுபோலவே அதாவது அவர் மாதிரியே நீங்களும் இருக்கனுமாம். அப்படி தான் ஆதவா என்கிட்டே சொன்னார். அவர்கூட அப்படி வேலை செய்துதான் சேவல்கறி சாப்பிடனுமாம். :lachen001:

அடப்பாவமே....அப்ப ஆதவாவும் பப்பி ஷேமா....பாவம் மதிக்கு இனிமே சேவல்கறி சாப்பிடனுன்னு தோணவே தோணாது....

மதி
15-05-2009, 10:54 AM
சேவல்கறி சாப்பிடனுன்ன அந்த பண்ணைக்காரருக்கு உதவி ஆளாய் பத்து நாளைக்கு வேலை செய்யனுமாம். அவர் எந்த வேலைகளை எப்படி செய்யராரோ அதுபோலவே அதாவது அவர் மாதிரியே நீங்களும் இருக்கனுமாம். அப்படி தான் ஆதவா என்கிட்டே சொன்னார். அவர்கூட அப்படி வேலை செய்துதான் சேவல்கறி சாப்பிடனுமாம். :lachen001:

சீச்சி.. இந்த சேவல்கறி கசக்குதில்லே...:eek::eek:

ஆதவா
15-05-2009, 11:08 AM
மிக்க நன்றி பாரதி அண்ணா.

மிக்க நன்றிங்க சமுத்திராசெல்வம். கோபி கிட்டன்னா

நமக்கு பக்கத்து ஊரு... நான் சொன்ன

நாட்டுக்கோழிங்க எல்லாம் கட்டு சேவலுங்க... அதை

பிறகு சொல்றேன்...

மிக்க நன்றிங்க பூமகள்.

ப்ராய்லர் கோழிகளைவிட நாட்டுக்கோழிகள் வலுவானது,

சுவையானது, ஆரோக்கியமானது.. அதிலும் குறிப்பா,

தோட்டத்துக்கோழிங்க..

நாங்க தொண்ணூறு சதம் நாட்டுக்கோழியைத்தான்

சமைப்போம். ப்ராய்லர் உவ்வே ரகம்...

மிக்க நன்றீங்க சிவா.ஜி அண்ணா.. இந்த சுவாரசியம் இறுதி வரை செல்லவேண்டும் என்பது என் விருப்பம். பார்ப்போம்.

மதி!!!! என்ன சொல்றீங்க/??? இதுவரைக்கும் சாப்பிட்டதில்லையா... இல்லை இதுவும் உங்க புலம்பலோட ஒண்ணா?? நன்றிங்க மதி.
------------------------------

ஆதவா
15-05-2009, 11:13 AM
சேவல்கறி சாப்பிடனுன்ன அந்த பண்ணைக்காரருக்கு உதவி ஆளாய் பத்து நாளைக்கு வேலை செய்யனுமாம். அவர் எந்த வேலைகளை எப்படி செய்யராரோ அதுபோலவே அதாவது அவர் மாதிரியே நீங்களும் இருக்கனுமாம். அப்படி தான் ஆதவா என்கிட்டே சொன்னார். அவர்கூட அப்படி வேலை செய்துதான் சேவல்கறி சாப்பிடனுமாம். :lachen001:

:waffen093::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-034::violent-smiley-027:

samuthraselvam
15-05-2009, 11:22 AM
ஆதவா அதை சாப்பிட விட்டு எவ்வளோ தெம்பா வந்து அந்த அனுபவத்தை எழுதறாரு. நீங்களும் டிரை பண்ணுங்கப்பு.

சிவா.ஜி
15-05-2009, 11:29 AM
ஆதவா அதை சாப்பிட விட்டு எவ்வளோ தெம்பா வந்து அந்த அனுபவத்தை எழுதறாரு. நீங்களும் டிரை பண்ணுங்கப்பு.

அதை சாப்பிட விட்டாரா...இல்லை சாப்பிட்டு விட்டாரா...?

ஏன் கேக்கறன்னா...அதை சாப்பிட விட்டிருந்தா அதுதான் தெம்பா நடந்திருக்கும்.....ஹி...ஹி...

samuthraselvam
15-05-2009, 11:31 AM
:waffen093::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-034::violent-smiley-027:

:aktion033::aktion033::icon_nono::icon_nono::icon_wacko::icon_wacko::angel-smiley-026::angel-smiley-026::ernaehrung004::sport-smiley-018::sport-smiley-018::medium-smiley-025::smilie_bett::smilie_bett:

ஆதவா
26-05-2009, 04:16 AM
5

வீட்டிலுள்ளோர் நச்சரிப்பும், பெரியப்பா மகன் சரவணனின் அக்கறையும் சேர்ந்து ஒருவழியாக ஓடத்துறைக்குச் செல்லவேண்டுமென்று முடிவெடுத்தாகிவிட்டது. ஞாயிற்றுக் கிழமை அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பிச் வந்தால்தான் ஓடத்துறை ஆறு மணிச் சந்தையில் கோழிகளை வாங்கமுடியும் என்று சரவணன்
சொன்னது நினைவுக்கு வந்தது. சனிக்கிழமை இரவே என் அம்மா, மூவாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து வைத்திருந்தார்.

மாடிக்குச் சென்று மொபைலில் அலாரம் வைத்துவிட்டு தெளிந்த வானத்தைப் பார்த்தேன். நிலவு ஒரு கோழியைப் போன்று உருவெடுத்து நிற்பதாகவும் மேகமாக நானும் அப்பாவும் உருமாறி அதை விழுங்குவதாகவும் சட்டென்று நினைத்துக் கொண்டேன். ஓடத்துறைக்குச் சென்று கோழிகளைப் பிடித்து இங்கே வளர்த்து அதைக் கறியாக்கித் தின்பது எப்படி சாத்தியமாகும் என்று பலகோணங்களில் யோசித்தேன். என்னோடு சேர்ந்து நித்திராதேவியும் யோசித்ததோ என்னவோ சிறிது நேரம் கழித்து அலாரம் அடிக்க ஆரம்பித்தது.. அப்பொழுதுதான் தெரிந்தது நெடுநேரமாகத் தூங்கிவிட்டோம் என்பது. என் அப்பா முன்பே எழுந்திருந்தார். சீக்கிரம் கிளம்பு என்றார். எத்தனை மணி என்று கூட தெரியாமல் சோம்பலை முறியோ முறி என்று முறித்துவிட்டு மாடியிலிருந்து இறங்கினேன். நேராகச் சென்று கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூணரையைக் காண்பித்தது. இந்த நட்ட நடுஇரவில் பயணிப்பதா என்று உச் கொட்டிக் கொண்டே கழிவறைக்குச் சென்றேன்.

மணி மூணே முக்கால் அல்லது நான்கைத் தொட்டிருக்கும் இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பினோம். ஆளரவமற்ற அப்பாதையில் தனியாக என் வண்டி சென்றது. இதற்கு முன்புவரை எங்கள் ஏரியாவில் இப்படி ஆளில்லாத உலகத்தைக் கண்டதேயில்லை. கொஞ்சம் ஸ்லம் ஏரியாவாக இருப்பதால் நாய்கள் ஆங்காங்கே திரிவதைக் காணமுடியும். ஒருசில புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டுமிருக்கும். என் அப்பா ஒரு கூடையொன்றை எடுத்துக் கொண்டார். கூடவே இரண்டு சாக்குப் பைகள். எத்தனைக் கோழிகள் வரை வாங்கவேண்டும் என்று கேட்டேன். பதினைஞ்சு கிலோவுக்கு எத்தனை வருமோ அத்தனை வாங்கிக்க வேணும் என்றார். எப்படியும் ஆறு கோழிகள் வந்துவிடுமா என்றேன்.. வந்திரும் என்றார்.

திருப்பூர் - பெருமாநல்லூர் முக்கியச்சாலையில் அமைந்திருந்த அந்த பெட்ரோல் பங்கிற்கு நேரே வண்டியைச் செலுத்தினேன். ஒரு இளைஞன் மட்டுமே பாயை விரித்து படுத்துக் கொண்டு மொபைலில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான். நூறு ரூபாய்க்கு பெட்ரோல் அடிங்க என்றேன். கொட்டாவி விட்டவாறே நூறு ரூபாய்க்கு செட் செய்து பெட்ரோலை வண்டியில் ஊற்றினான். அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம் இருந்தது. என்னுடன் படித்தவனாக இருக்கலாம். இதற்கு முன்பு வரை அவனை இங்கே பார்த்ததில்லை. ஒருவேளை இரவு ஷிப்டுக்கு வந்திருக்கலாம்...

பெருமாநல்லூர் சாலையில் சீறிப்பாய்ந்தது என் வண்டி. யாருமில்லாததால் ஓரளவு வேகமாகவே சென்றேன். இருட்டியிருந்ததால் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணைக் கூசுவதாக இருந்தது. அவ்வச்சமயங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்து ஒதுங்கியே சென்றேன். பொதுவாகவே நான் வண்டியோட்டும் பொழுது என் கவனம் முழுக்க, எதிர் வண்டியின் மேலேயும், ப்ரேக் மேலேயும் தான் இருக்கும். அவ்வளவு எளிதில் உரசிவிடமாட்டேன். அவ்வளவு எளிதில் வாகனத்தைக் கடந்து சென்றுவிடமாட்டேன். என் நண்பர்கள் கூட சில சமயம் உனக்கு வண்டியோட்டத் தெரியவில்லை என்பார்கள். நான் அதைப் பற்றி அலட்டிக் கொண்டதில்லை. இருப்பினும் ஊட்டிக்குச் செல்லும் பொழுதெல்லாம் நூறு கி.மீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறேன்.

சுமார் ஒருமணிநேரப் பயணம். பயணத்தை ஒருவரியில் விவரிப்பதென்றால் மரங்களினூடாக எவ்வித கவலையுமின்று நுழையும் காற்றைப் போல அமைந்தது எங்கள் பயணம். கோபியை வந்தடைந்துவிட்டேன். விடியும் சூழ்நிலையில் கோபிச்செட்டிப் பாளையம் காத்திருந்தது. டவுன்பஸ்கள் இயங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன.

இன்னும் கூவும்

ஆதவா
29-05-2009, 04:29 AM
6

பண்ணைக்காரர் அழைத்துச் சென்ற அந்த காலிவீட்டில் இரண்டு சேவல்கள் இருந்தன. இரண்டும் சிவப்புநிறச் சேவல்கள் அந்த காலி வீட்டிற்குள் நுழைந்ததும் கோழிப்பண்ணைக்குள் நுழைந்த வாசம் அடித்தது. வீடு நீண்டு பெரியதாக இருந்தது. கோழிகளுக்கெனவே அவ்வீட்டைக் கட்டியிருக்கிறார்கள் போலும். நன்கு உயர்ந்த ஓட்டு வீடானா அங்கே கோழிக் கழிவுகளும் இரைகளும் சிதறிக் கிடந்தன. செருப்புடனேதான் உள்ளே சென்றோம். இரண்டு மூலைகளில் அச்சேவல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இடது மூலையிலிருந்த ஒரு சேவலைப் பார்த்து," அது கோவிலுக்கு வளர்த்தரோம். அதைத் தரமுடியாது ; இந்த சேவலைப் பாருங்க " என்று வலது மூலையிலிருந்த சேவலைக் காண்பித்தார். வெளியே பார்த்த சேவலைக் காட்டிலும் எடையும் பொலிவும் குறைவாக இருந்தது. சிவப்புநிறச் சேவலை சாமிக்குப் படைக்கலாம் என்று அந்த பண்ணைக்காரர் என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சேவலை சரவணன் தன் கையால் தூக்கி கையிடுக்கில் வைத்துக் கொண்டு எடைப் பார்ப்பதைப் போன்று மேலும் கீழுமாய் குலுக்கி மூணு கிலோ இருக்கும் என்றார். அதற்குள்ளாகவே என் அப்பா, இந்த கோழி எவ்வளவு ருபாய் வரும் என்று பண்ணைக்காரரிடம் கேட்டார். அவர் சற்று யோசித்துவிட்டு, அறுநூறு ரூபாய் என்றார்.

சேவல் நன்கு திடமாகக் கொழுத்துதான் இருக்கிறது என்றாலும் மூணு கிலோ பெறாததற்கு அறுநூறு ரூபாய் தரவேண்டுமா என்று யோசித்தேன். கணக்கிட்டுப் பார்த்ததில் கிலோவுக்கு இருநூறு ரூபாய். மனம் கொஞ்சம் சஞ்சலப்பட்டது. சரவணன், "கோழி நல்லா இருக்கும், வாங்கிக்கோங்க " என்று வற்புறுத்தினார். நான் என் அப்பாவைப் பார்த்தேன். அவரும் வாங்கிவிடும் தோரணையில் இருந்தார்.

பண்ணைக்காரர் அந்த வீட்டைவிட்டு வெளியே வருகையில் சரவணனைப் பற்றி விசாரித்தார். இன்னார் மகன் என்று தெரிந்து கொண்ட பிறகு அவர் பழைய நினைவுகளை எடுத்துவிட ஆரம்பித்தார். நான் அப்பாவோடு ஆலோசித்தேன். சிவப்புச் சேவல் மட்டும் வாங்கிவிடலாம். வெளியே கட்டப்பட்டிருக்கும் அந்த கம்பீரச் சேவலை வாங்கவேண்டாம் என்று முடிவெடுத்தவாறு அறுநூறு ரூபாயை மட்டும் பண்ணைக்காரரிடம் கொடுத்துவிட்டு, சேவல் இங்கேயே இருக்கட்டும் சந்தைக்குப் போய்விட்டு வந்து வாங்கிக் கொள்கிறோம் என்றோம். அவரோ, சந்தைக்கே போனாலும் இந்த மாதிரி கட்டுச் சேவல் உங்களுக்குக் கிடைக்காது என்றார்.
உடனே சரவணன், "இல்லைங்க, இது கட்டுக்கு இல்லை, விஷேஷத்துக்கு" என்றார். அவர் அதைப் பற்றி அவ்வளவாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. இதைப் போன்றே பலரும் சொல்லியிருக்கக் கூடும்.

அப்பொழுதுதான் ஒரு விஷயத்தையே கவனித்தேன். இங்கே பெரும்பாலும் சேவல் சண்டைக்காகத்தான் வளர்க்கிறார்கள் என்பது. பண்ணைக்காரர் இந்தச் சேவலை இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகச் சொன்னதன் மர்மம் இதுதானா? கட்டுச் சேவல்களின் கம்பீரமும் இளமையிலேயே அதன் வலிமையும் அப்பொழுதுதான் என்னை லயிக்க வைத்திருந்தது. நான் இதுவரையிலும் சேவல் சண்டையைப் பார்த்ததில்லை. இதைப் போன்ற கிராமங்களில் நடப்பது மட்டும் தெரிகிறது. சேவலை நன்கு வலுவாக வளர்ப்பதில் ஒவ்வொருவருக்கும் போட்டியுண்டு போலும். நான் வைத்த கண் மாறாமல் அந்த சேவலையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களை உருட்டியபடி அங்கேயும் இங்கேயும் தலையைத் திருப்பியவாறு அது கூவியது.

பூமகள்
29-05-2009, 07:59 AM
கட்டுச் சேவல்கள் போட்டியை என் பால்ய பருவத்தில் நான் கண்டிருக்கிறேன் ஆதவா. எங்க தெருவில் ஒரு ஆஜானுபாவமான ஒரு அண்ணன் தம்பி இருந்தார்கள். அவர்களைக் கண்டால் அந்த வீதியே நடுங்கும்.

அவர்கள் நிறைய சேவல்களை வளர்த்தார்கள். அடிக்கடி மாலை நேரத்தில் மற்ற இடங்களிலிருந்தும் சேவல்களோடு நிறைய பேர் வந்துவந்து சேவல் சண்டை விட ஆயத்தமாவார்கள். வெகு சிறு பிராயத்தில் பார்த்ததால் அதிகம் நினைவில் இல்லை. ஆனால், இரு சேவல்களும் ஆக்ரோசமாக சண்டை போடுவதை நன்றாக வேடிக்கைப் பார்த்த நினைவு இருக்கிறது. சுற்றிலும் கூட்டம் கூடி, அந்த சேவல்களுக்கு உற்சாகமூட்டிக் கொண்டு, கத்திக் கொண்டு இருப்பார்கள் இளைஞர்களும் சேவல் வளர்ப்பாளர்களும்.

இறுதியில் வெற்றி பெற்ற சேவல் வைத்திருப்பவருக்கு பணப்பரிசும் கொடுக்கப்பட்டது.

கிழக்குச் சீமையிலே படத்தில் கூட ஒரு சேவல் சண்டை வருமே.. அது போலவே தான் இருக்கும்.

--

உங்கள் கூடவே ஒவ்வொரு வினாடியும் பயணப்பட்ட உணர்வு. நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் பயணப்படும் சுகமே தனி தான். அதை அனுபவித்ததோடு நில்லாமல் எங்களையும் அனுபவிக்க வைத்தமைக்கு நன்றிகள் ஆதவா.

நல்ல தெளிந்த நடையில் செல்கிறது தொடர். விரைவில் அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் தம்பி.

சிவா.ஜி
30-05-2009, 09:03 AM
சேவல்கட்டை நான் வேலந்தாவளத்தில் இருந்தபோது பார்த்திருக்கிறேன். காலில் சேவலுக்கென்றே பிரத்யேகமாக இருக்கும் கூரான கத்தியை கட்டியிருப்பார்கள். முதலில் இரண்டு சேவல்களையும் முகத்துக்கு நேரே காட்டி உசுப்பேற்றுவார்கள்.

பின்னர் தொடங்கும் அந்த ஆக்ரோஷ சண்டை. அதி பயங்கரமாக இருக்கும். ச்ண்டையைவிட அந்த சேவல்களின் பார்வையில் தெரியும் கொடூரம் பயங்கரமாய் இருக்கும். மிக அதிக பணம் புழங்கும் சூதாட்டம் என்பதால் இப்போது தடை விதித்துவிட்டார்கள்.

இரவு மேகம் சேவலாகி ஓடிப்பிடித்து விளையாடியதையும், அதிகாலைப் பொழுது ஒற்றை பைக் பயணத்தையும் விவரித்த விதத்தை மிக ரசித்தேன் ஆதவா. அந்த பெட்ரோல் பங்க் பையன் கூடப்படித்தவன்தானா..?

அழகான நடையில் சேவல்காரியை தொடர்ந்து நாங்களும் வருகிறோம்...

விகடன்
21-06-2009, 11:02 AM
அந்தச் சேவலின் கடைசிக்கூவல் அதுதானா ஆதவா?

ஆதவா
13-11-2010, 03:55 AM
7

மீண்டும் வண்டியில் ஒரு சிறு பயணம். இம்முறை சரவணனுக்கு சந்தைக்குச் செல்லும் வழி தெரியவில்லை. அத்தனை கிளைகள் பாதையில் பிரிந்து சென்றன. வழியில் சென்றுகொண்டிருந்த ஒரு முதியவரிடம் விசாரித்தோம். அவர் ஒரு ஊரின் பெயரைச் சொல்லி அங்கே ஒரு கோவில் இருப்பதாகவும் அதற்கு நேரெதிரே சென்று வலது புறம் திரும்பினால் சந்தை வந்துவிடும் என்றும் கூறினார். நானும் அக்கோவிலை எதிர்நோக்கியே என் வண்டியைச் செலுத்தினேன்.

"சேவலின் விலை அதிகமாக இருக்குதே" என்றேன். "கட்டு சேவல் எப்பவுமே விலை ஜாஸ்திதான்" என்ற சரவணன் தொடர்ந்தார், " இங்கல்லாம் சேவல் வாங்கணும்னா அறுநூறு இல்லாட்டி எழுநூறு ரூபாய் ஆகும். குறைஞ்சது மூணு கிலோ சேவல் இல்லாட்டி கோழி கிடைக்கும். சில சமயத்தில விலை ரொம்ப குறைச்சலாவும் இருக்கும்" என்றார். "இதுக்கு திருப்பூரே பரவாயில்லையே" என்றேன் நான். " கட்டுச் சேவலோட கறியைவிட தோட்டத்துக் கோழி, பண்ணைக்கோழிக் கறியெல்லாம் ருசியாவே இருக்காது. அன்னிக்கு நீங்க வந்தப்போ சாப்பிட்டீங்கள்ல? அதெல்லாமே கட்டுச்சேவல் தான். எதிர்பார்க்கிறத விட அதிகமா கறி விழும். இளஞ் சேவல்களா இருக்கும். பார்க்கிறதுக்குத்தான் ரேட்டு ஜாஸ்தி. கணக்கு எல்லாம் ஒண்ணுதான்" என்றார் சரவணன். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை.

வழியில் செல்லும் பொழுது மயில்களைக் கண்டோம். "இங்கே மயிலைக் கறியாக்குவாங்களா" என்று கேட்டார் என் அப்பா. அது சாமிப் பறவைங்கறதால அப்படி யாரும் செய்யமாட்டாங்க, கொறவங்கதான் ஒண்ணுரண்டு புடிச்சு போயி வித்திடுவாங்க, அப்பக்கூட யாரும் அதிகம் வாங்கமாட்டாங்க" என்று பதிலளித்தார் சரவணன். மயிலைக் கூட விடாமல் தின்னும் ஆசாமிகள் இந்த உலகில் இருக்கிறார்களோ என்னவோ? கொக்குகள் கூட இங்கே இருப்பதைக் காண முடிந்தது..

எதிர்நோக்கிய அந்த கோவில் வந்தது. அதற்கு நேரெதிர் சாலையில் திரும்பிய பொழுதே சந்தைக்காக மக்கள் ஓரளவு கூடியிருப்பதை உணரமுடிந்தது. நன்கு விடிந்திருந்த பொழுதில் ஜனநடமாட்டம் சற்று மிகுந்திருந்தது. சந்தை, வாரத்தின் இருநாட்களில் உணவுப்பண்டங்களை விற்பதற்கென்று கூடுவதற்கான இடமாக இருப்பதை அறியமுடிகிறது. ஒரு திறந்த வளாகமொன்றில் எல்லாவிதமான பண்டங்களையும் கூறு போட்டு விற்கிறார்கள். நாங்கள் அந்த வளாகத்தினுள்ளேகூட போகவில்லை. வெளியேயே பலர் கோழிகளையும் சேவல்களையும், குஞ்சுகளையும் ஏன், முட்டைகளைக் கூட விற்றுக் கொண்டிருந்தார்கள். சுற்றியெங்கும் ப்ராய்லர் கோழியின் சுவடே இல்லாத ஊராக இருந்ததை நிதானித்தேன். பல சேவல்கள் சண்டைக்காகவே விற்கப்படுவதை அவர்கள் சொல்லும் விலையிலிருந்தே அறியமுடிந்தது.

இன்னும் கூவும்

சூரியன்
13-11-2010, 05:34 AM
சேவல்களை பற்றி பல தகவல்கள்,
படிக்க ஆர்வமாக இருக்கின்றது.

எனக்கு சேவல்,கோழி இரண்டுமே ஒத்துவராது.
ஒருமுறை அதை சாப்பிட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது தான் நினைவுக்கு வரும்.

ஆதவா
16-11-2010, 04:40 AM
8

ஒரு தேநீரங்காடியின் ஓரமாக எனது வண்டியை நிறுத்தினேன். அப்பாவும் சரவணனும் சேவல் விற்குமிடத்திற்குச் சென்று விசாரிக்கத் துவங்கினார்கள். உடன் நானும் சென்றேன். ஒரு சாக்கடையின் ஓரமாக அமர்ந்து கொண்டு பலர் விற்றுக் கொண்டிருந்தனர். பெண்கள் கூட இந்த வியாபாரத்தில் இறங்கியிருப்பதைக் கண்டேன். நாங்கள் முதலில் ஒரு பெரியவரைக் கண்டோம். அவரிடம் இரண்டு மஞ்சள் நிறச் (Off white) சேவல்கள் இருந்தன. சேவல் ஒன்றும் மூன்றரை கிலோ பெறுமானமாக இருந்தது. அந்த பெரியவர் தலையில் துண்டைக் கட்டி வேட்டியை நன்கு இழுத்துக் கட்டியிருந்தார். நான் அவரது முகத்தைக் காணவேயில்லை. அந்த சேவல்களின் மீதுதான் என் பார்வையனைத்தும் இருந்தது. பண்ணைக்காரர் வீட்டில் பார்த்த சேவலைக் காட்டிலும் கம்பீரத்தில் குறைச்சலான இச்சேவல்களின் விலை ஒவ்வொன்றும் அறுநூறு ரூபாய். இரண்டுமாக ஆயிரத்தி இருநூறு... கொஞ்சம் குறைக்கக் கேட்டோம். குறைக்கமுடியாது என்றும் கட்டுக்கு வளர்ப்பதாகவும் கூறினார். அவரது இடது கரத்தில் நாலணா அளவுக்குக் காயமேற்பட்டு இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. சேவல்களால் வந்தது என்றார். இந்த அளவுக்குக் கீறிவிடுமா என்று ஒருக்கணம் வியந்தேன். பிறகு நாங்கள் அங்கிருந்து அகன்று அருகேயிருந்த ஒரு கூட்டத்தினுள் எட்டிப் பார்த்தோம்.

அக்கூட்டத்தினுள் ஒருவர் குத்தவைத்து அமர்ந்தவாறு அவரது சேவல்களை விற்றுக் கொண்டிருந்தார். மெலிந்த தேகத்தோடு கையில் ஒரு பீடியையும் இன்னொரு கையில் கோழியின் கால்களையும் பிடித்தவாறே பேரம் பேசிக்கொண்டிருந்தார். அவ்வப்போது பீடியை இழுத்தார். ஒருசிலர் விசாரித்தார்கள். பெரும்பாலானோர் ஏமாற்றத்தோடு திரும்பியதைப் பார்க்க முடிந்தது. அவரிடம் இரண்டு மஞ்சள் சேவல்கள் விலைபேசலாம் என்று அவரிடம் பேசினோம். சரவணன் தான் பேசினார். விஷேஷத்திற்கு வேண்டும் என்றும் சேவற்சண்டைக்கு இல்லை என்றும் நாலைந்து கோழிகள் இன்னும் வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தார். அவர்களிருவரும் பேரம் பேசட்டும் என்று யோசித்தவாறே நான் அடுத்தடுத்த கோழி விற்பவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவழியாகப் பேசி இரண்டு சேவல்களை வாங்கிவிட்டனர். வண்டியில் சொறுகப்பட்டிருந்த சாக்குப்பையை எடுத்துக் கொண்டு அச்சேவல்களை பைக்குள் திணிக்கச் சென்றேன். இரண்டும் தலையைத் தூக்கியவாறே சாக்குப் பையில் நுழைந்தது. அதன் கனம் ஏழு கிலோ இருக்கலாம் என்பது என் கணிப்பு. எவ்வளவு ஆச்சு என்றேன். ஆயிரத்தி ஐம்பது என்றார். பரவாயில்லை. ஓரளவுக்கு சரியான ரேட்டுதான் என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு பொட்டக்கோழியை வாங்கணும் என்றார் அப்பா.

பொட்டக் கோழி எதுக்கு? நாம சேவல்தானே சாப்பிடுவோம் என்றேன். சாமிக்கு அறுக்கணும்னா பொட்டக்கோழிதான் வேணும். ஏதாவது ஒரு கோழியை வாங்கிக்குவோம் என்றார். ஒருமனதாக ஒப்புக் கொண்டேன். ஏற்கனவே சேவல்களை வாங்கியிருந்தவர்களிடமே கோழியை விசாரித்தார். அப்படியும் இப்படியுமாக ஐநூறு ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். அந்த கோழி சரியான சுறுசுறுப்பான கோழி. சாக்குப்பையில் திணிக்கவே முடியவில்லை. இறக்கைகள் இரண்டும் படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது. சாக்குப்பையினுள் நுழைக்க நுழைக்க அதன் தலை, திமிறிக்கொண்டு வெளியே வந்து அது சுதந்திரமாகத் திரியப் பார்த்தது. நான் இறக்கைகளைப் பிடித்துக் கொண்டு பையினுள் நுழைப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது. அக்கோழி மெலிந்த ஆரஞ்சு வர்ணத்தில் அதாவது சாம்பல் நிறமும் சிவப்பு நிறமும் இணைந்த கலவையாக இருந்தது. அக்கோழியும் சுமார் மூன்று கிலோ பெறும். தற்சமயம் மூன்று சேவல்கள், ஒரு கோழி வாங்கியாகிவிட்டது. சராசரி எடையைப் பார்த்தால் பன்னிரண்டு கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம். இன்னும் இரண்டு கோழிகளாவது வேண்டுமே..

தொடர்ந்து வரும்...

பென்ஸ்
16-11-2010, 07:01 PM
ஆதவா... சேவல் கறியை விட இந்த சேவல்காரி சூப்பர்...வார்த்தை வர்ணைகள் நல்லா இருக்கு ஆனா பல வார்த்தைகள் எனக்கு புரியவில்லை.. அவை இதுவாகதான் இருக்கனும் என்று நானே புரிந்து கொண்டேன்...
உதா
பொங்கு- இறகுகள்

பரவாயில்லை ஒரு வருடத்திற்க்கு பிறகு வந்து வாசிப்பதால் காத்திருக்க வேண்டியதில்லை அல்லவா..???


உண்மையில்... கதை கொஞ்சம் போரடிக்குது....