PDA

View Full Version : நில்,கவனி, வாக்களி



நேசம்
11-05-2009, 09:13 AM
நில்,கவனி, வாக்களி



நினைவுகள் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் தாவுகின்றன .அப்போதெல்லாம் ரேடியோவின் முன்னாள் கூட்டம் கூட்டமாக வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை கேட்டப்படி அமர்ந்திருந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

இன்றைய தேர்தல் பரபரப்புகளோடு ஒப்பிட்டு பார்க்கையில் அன்றைய தேர்தல் முறைகள், தகவல் பரிமாற்றங்களும் எவ்வளவு பின்னோக்கி இருந்ததை என்பது உணரமுடிகிறது.

இன்றைக்கு அப்படியில்லை.ஆறு மணிக்கு ஒருவர் வழுக்கி விழுந்தால், நாகரிகமாக சொல்ல வேண்டுமென்றால் ஒருவர் மீது ஆறு மணிக்கு செருப்பு வீசப்பட்டால் அடுத்த நிமிடம் அனைத்து சேனல்களிலும் பரபரப்பு செய்தியாகி விடுகிறது.

ஊடகத்தின் பிரமிபுட்டும் வளர்ச்சி காரணமாக ஆளாளுக்கு தனித் தனி சேனலை ஏற்படுத்தி கொண்டு அதை கிட்டத்தட்ட அரசியல் மேடையாக பயன்ப்\த்துகின்றன. சுவரில் போஸ்டர் ஒட்டுவது கூட தேவையற்று போய்விட்டது.இந்த ஊடகங்கள் வந்த பிறகு
மக்களின் நாடி துடிப்பை அறியவும், கணிக்கவும் அதற்கேற்ப பல்டியடிக்க பழகவும் இந்த ஊடக வளர்ச்சி துனை செய்கிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வரை கடைசி பக்கத்தில் இடம் பெற்ற இலங்கை யுத்தம் என்னும் செய்தி இப்பொழுது முதல் பக்கத்தில் இடம் ஈழமாகவும், ஈரமாகவும் இடம் பெற இந்த அரசியல் கணிப்புகள் மட்டுமே.
தேர்தல் முடிந்த மறுநாள் ஈழமாவது சோளமாவது எங்கேயாவது ஒரு எஸ்டேட்டில் போய் நிம்மதியாக ரெஸ்ட் எடுக்க தலைவர்கள் போவது மட்டும் அக்மார்க் உண்மை.

இப்போதைக்கு ஈழத்தமிழனின் உயிர் அவர்களுக்கு ஒரு துருப்பு சீட்டு.ஈழம் என்று கூட சொல்ல கூடாது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தவர்க்ள் கூட இப்பொழுது தாவியதற்கு 40 தவிர வேற என்ன காரணம் இருக்கு முடியும்.

"அழுத்த*மாய் சொன்னால்" போர் நிறுத்தம் ஏற்படும் என்று தெரிந்தாலும் கூட்டணிக்காக அமைதிகாக்கும் அரசியல் கட்சிகளின் இருதலை கொள்ளி எறும்பின் நிலையையும் தமிழகம் நன்கு அறியும்.

இலங்கைக்கு வெளிப்படையான ஆதரவை சீனா அளிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்னும் பதட்டம் இந்தியா ராணுவத்திடம் காணப்படுகிறது
உணர்ச்சிவசப்பட்டு வாக்களிப்பத்தில் பேர் போன தமிழக மக்களை எப்படியேனும் உணர்ச்சி கொந்தளிப்பில் வைத்து இருக்கவேண்டும் என்னும் தலையான கவலை அரசியல் கட்சிகளுக்கு. "போர் நிறுத்தம் " என்று கதறும் அரசியல் கட்சிகள் ஓரு வேளை போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒட்டு போய்விட்டதே என்று கதறினால் ஆச்சர்யப்டுவதற்கில்லை.

நி ஒன்று சொன்னால் நான் இன்னொன்று சொல்வேன் என்று தேசிய, மாநில* க*ட்சிகளுக்கு இடையில் குழம்பி போய் இருப்ப*து பொது மக்களே.

காலையில் ஒரு கட்சி மீது இருக்கும் அப்பிராயம் மாலையில் மாறி விடுகிறது. மறு நாள் இரண்டையும் தவிர்த்து முன்றாவதாக உள்ள கட்சிக்கு ஒட்டு போடுலாம என்ரு மனம் தடுமாறுகிறது.ஊடக, இனைய வளர்ச்சியில் ஒட்டுமொத்த கருத்துருவாக்கத்தை பரவலாக நிறுவுவதென்பது சாத்தியமில்லை.

ஒட்டு போடுவதற்கு முன்பாக சில கேள்விகள் எழுப்புங்கல்

இந்த தலைவருக்கு இந்த பிரச்சனையில் கடந்த கால நிலைப்பாடு என்ன? கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படி?

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான நிலைப்பாடு கொண்டு இருந்தார் எனில் முடிந்த அந்த சிக்கலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு இருந்தார் எனில் அவருடைய வாக்குறுதி குறைந்த பட்சம் நம்பிக்கைகுரியது என கருதி கொள்ளலாம்.

இரண்டவதாக அந்த பிரச்சனையில் அந்த நபர் தந்துருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற சாத்திய கூறுகள் என்ன?
அந்த தலைவர் ஆதரிக்கும் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருமா.. வரும்பட்சத்தில் இவரின் கொள்கையோடு அந்த கட்சி உடன்படுகிறாதா...

முன்றவதாக எல்லாம் சரியாக இருந்தால் சர்வேத அளவில் இந்த திட்டத்தை அவர்கள் ஆட்சி காலத்தில் நிறைவேற்ற முடியுமா என்று பாருங்கள்.அதை நிறைவேற்றுவதற்க்கு எந்தெந்த நாடுகளீன் ஒத்துழைப்பு வேண்டும், அதை நிறைவெற்ற சாத்திய கூறுகள் என்ன என்பதையேல்லாம் ஆராய்தல் அவசியம்.

நான்கவதாக இந்த திட்டம் ஏன் கடந்த காலத்தில் நிகழவில்லை.?அத*ற்கு முட்டுகட்டைகள் இருந்தவை என்ன..? அவைகள் வரும் காலத்தில் தொடருமா
என்று பாருங்கள்.
கண்முடித்தனமாக வாக்குறுதிகள் தருபவர்களிடம் இதை நிறைவேற்ற நிங்கள் வைத்துருக்கும் திட்டங்கள் என்ன என்று கேள்விகள் எழுப்புங்கள்
நிலவில் நிலம் தருவோம் என்று சொன்னவுடன், மொட்டி மாடியில் படுத்து கொண்டு நிலவை பார்த்து கொட்டாவி விட்டால், அடுத்த தேர்தலி நாலு நட்சத்திரம் உறுதி என்று வாக்குறுதி வந்து சேரும்.

இந்திய நாட்டின் ஒட்டு மொத்த அமைதி, மக்களின் ஒற்றுமை, சுகந்திரம், பாதுகாப்பு, நட்புறவு, சர்வேத அங்கீராம், உள்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் என அனைத்தையும் ஆராய்ந்தே யாருக்கு ஒட்டு போடுவது என்பதை முடிவு செய்யுங்கள்.

குப்பை படங்களை பார்க்க குடும்பத்துடன் முன்று மணி நேரம் ஒதுக்கும் நாம், இந்த முடை குடும்பத்தினருடன் முன்று மணி நேரம் அமர்ந்து கலந்துரையாடினாலே நாட்டின் தலைவர் யாரய் இருந்தால் நலம் என்பது புரிந்து போகும்


முடிவு எடுக்க வேண்டியது நிங்கள், தனிப்பட்ட அபிப்ராயங்களை வெளியேற்றுங்க*ள்

samuthraselvam
11-05-2009, 09:36 AM
குப்பை ப*ட*ங்க*ளை பார்க்க* குடும்ப*த்துட*ன் முன்று ம*ணி நேர*ம் ஒதுக்கும் நாம்,இந்த* முடை குடும்ப*த்தின*ருட*ன் முன்று ம*ணி நேர*ம் அம*ர்ந்து க*ல*ந்துரையாடினாலே நாட்டின் த*லைவ*ர் யார*ய் இருந்தால் ந*ல*ம் என்ப*து புரிந்து போகும்

நேசம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

தங்களின் படைப்புகளுக்குள் எத்தனை நட்சத்திரங்களை ஒழித்து வைத்துள்ளீர். அதெல்லாம் வானத்தில் இருக்கட்டும். இப்படி பொது சொத்துக்களை அபகரிப்பது குற்றம்.:lachen001:

இல்லை, என் கண்களுக்கு மட்டும் தான் இந்த நட்சத்திரங்கள் தெரிகிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை....:D

இதனால் படிக்க சிரமமாக உள்ளது... கொஞ்சம் என்ன பிரச்னை என்று கூறுங்கள். என் கணினியிலா? அல்லது உங்களுடையதிலா? எப்போதுமே உங்களின் பதிவுகள் மட்டும் அப்படி தெரிகிறது...:traurig001:

நேசம்
11-05-2009, 09:38 AM
அதான் எனக்கு புரியவில்லை சகோதரி.எனது கணீனிய்ல் தான் இந்த பிரச்சனை.

அமரன்
11-05-2009, 09:41 AM
மன்றத்தின் நேரடித் தமிழ்த் தடச்சு வசதியைப் பயன்படுத்தினால் இந்தமாதிரி நட்சத்திரங்கள் இடைக்கிடை தோன்றும். பிரிவியூ பார்த்து நட்சத்திரங்களைக் களைந்து விட்டுப் பதிந்தால் இதனைத் தவிர்க்கலாம்.

samuthraselvam
11-05-2009, 09:45 AM
http://tamilmantram.com/vb/showthread.php?t=13959

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330

இதில் போய் பார்த்து தங்களின் பிரச்சனையை சரி செய்து கொள்ளவும்.

அமரன்
11-05-2009, 09:54 AM
இந்தக் கட்டுரையை எங்கே, யார் எழுதினார் என்று சொல்லுங்களேன் நேசம்.

நேசம்
11-05-2009, 09:58 AM
ஆனந்த விகடனில் வந்ததாக எங்களது ஊர் இனையதளத்தில் வந்து இருந்தது.குறிப்பிட மறந்து விட்டேன்.

அமரன்
11-05-2009, 10:04 AM
ஊடகங்கள் பிரச்சார மேடைகளாகிவிட்டன என்று காட்டமாகச் சொல்லிவிட்டு தானும் அதைக் காத்திரமாகச் செய்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர்.

நேசம்
11-05-2009, 10:14 AM
பெரும்பாலன கட்சிகளுக்கு சமிப காலங்களில் சொந்த ஊடங்கள் இருப்பது அதிகரித்து விட்டன. நடுநிலையான ஊடகங்கள் இருக்க தான் செய்யும் இல்லையா அமரன்

அமரன்
11-05-2009, 10:39 AM
அப்படியான ஊடகங்கள் நிச்சயமாக உள்ளன நேசம்.

நான் நினைக்கும் நடுநிலைமை "ஈழத்தை வைத்து மட்டும் வாக்குகளைப் போடாது இந்தியாவையும் வைத்து வாக்குகளைப் போடுங்கள்" என்பதே.

இந்தக் கருத்தை வலுப்படுத்தும் கட்டுரையும் அதன் ஆசிரியரும் நாட்டு நலனில் அக்கறை மிகுந்தவர்.