PDA

View Full Version : கமலஹாசனை பார்த்தேன்



ரங்கராஜன்
09-05-2009, 11:21 AM
வணக்கம் உறவுகளே

நான் இப்பொழுது சமீபத்தில் எழுதி வந்த ஒரு ஐயங்கார் வீட்டு கல்யாணம் என்ற திரியில், ஏழு பாகங்கள் வரை எழுதி திரியை நிறுத்தி விட்டேன். அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான் ரொம்ப நகைச்சுவையை கொடுத்தால் உங்களுக்கு திகட்டிவிடும், சில சமயம் எரிச்சலையையும் உண்டுபடுத்தும். அதனால் தான் அந்த திரியின் தலைப்பில் உள்ள கல்யாணத்தை பற்றிக்கூட சொல்லாமல் பாகங்களை முடித்து விட்டேன், அதுவும் இல்லாமல் என்னுடைய சொந்த வேலைகளும் இருப்பதால் தான் வரும் இரண்டு மாதங்களுக்கு மன்றத்திற்கு சரியாக வர முடியாது.

இவை அனைத்தும் ஒன்றாக வந்ததால் நான் என்னமோ மன்றத்தை விட்டு ஒதுங்குகிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள். வேலை முடிந்ததும் சரியாக திரும்பி வருவேன். அதற்கு அச்சாரமாக தான் இந்த திரியை தொடங்கிவிட்டு போகிறேன்.


என்னுடைய வாழ்க்கையில் நான் பார்க்கவேண்டும் என்று துடிப்பவர்கள் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான மூன்று பேர் இருக்கிறார்கள்.

1. எழுத்தாளர் சுஜாதா இவர் நவீன தமிழ் அறிவியல் எழுத்தின் தந்தை என்ற முறையில் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவரை பார்த்துவிட்டேன், உடலை மட்டும் தான், ஆனால் உயிரை அவரின் ஒவ்வொரு புத்தகங்களிலும் பார்க்கிறேன்.

2. ஹாலிவுட் புகழ் இயக்குனர் ஸ்டவன் ஸ்பீல்பர்க் (steven speilberg), இவரை ஏன் பிடிக்கும் என்று கேட்டால். இவரை பற்றி படித்த புத்தகங்கள் தான் காரணம். இவர் ஒரு படத்தை எடுத்துக் கொள்வதற்கு முன் அவர் அதில் சொல்லப்போகும் கருவை பற்றி doctrate வாங்கும் அளவிற்கு அந்த விஷயத்தை பற்றி தெரிந்துக் கொண்டு தான் அந்த படத்தையே தொடங்குவாராம். இத்தனைக்கும் இவர் எடுத்த புகழ் பெற்ற எல்லா படங்களும் இவருடைய சொந்தகதைகள் கிடையாது, இருந்தாலும் அவருக்கு அந்த கருவில் ஈடுபாடு அதிகமாகிவிடுமாம். அவரின் கிரியேட்டிவ் மூளையால் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கும் அவரின் திறமை ரொம்ப பிடிக்கும். இவரை பார்ப்பது என்பது முடியாத காரியம். நானும் ஒரு மனிதன் தானே ஒரு பேராசை இருந்து விட்டு போகட்டும்..

3. அடுத்து என்னுடைய ஆதர்சன நாயகன் கமல். இவரை ஏன் பிடிக்க ஆரம்பித்தது. அது ஒரு பெரும் கதை நான் மூன்றாவது படிக்கும் பொழுது எங்க வீட்டுக்கு கீழே ஒரு ஐயர் குடும்பம் இருந்தது, அவர்கள் வீட்டில் மூன்று மகன்கள் (14, 17, 20), அம்மா, அப்பா மொத்தம் ஐந்து பேர். இவர்கள் ஐவரும் கமலின் வெறித்தனமான விசிறிகள் குறிப்பாக அவங்க அம்மா. அப்பொழுது இருக்கும் டி.டி சேனலில் எதாவது கமல் படத்தை போட்டுவிட்டால் அவ்வளவு தான், அந்த ஏரியாவே அலறும் அளவிற்கு கொண்டாடுவார்கள் அந்த குடும்பத்தார். அவர்கள் குடும்பத்திற்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் போல என்று எல்லாரும் அவர்களிடம் இருந்து ஒதுங்கி நிற்கும் வேளையில்............ எனக்கு மட்டும் அந்த குடும்பத்தின் மீது ஒரு ஈடுபாடு.............அதனால் கமலின் மீது ஒரு ஈடுபாடு வந்தது.

அப்புறம் அது படிபடியாக வளர்ந்து அதிகமாகியது. அவரை ஒரு சினிமா காரனாக மட்டும் பார்க்காமல் பல்துறைவித்தகராக அவரின் திறமை மீது எனக்கு எப்பவுமே ஒரு ஈடுபாடு.

அப்படி கனவில் என்னுடன் வாழ்ந்து வந்த என்னுடைய ஆதர்ஸன நாயகனை நான் நேரில் பார்த்தேன், இப்பொழுது நான் டைப் செய்துக் கொண்டு இருக்கும் என்னுடைய கணிணிக்கும் எனக்கும் உள்ள தூர வித்தியாசத்தில் பார்த்தேன். பிரமிப்பை தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை. அந்த கதையை தான் நான் இங்கு பகிர்ந்துக் கொள்ள உள்ளேன்................ சிறிது கால அவகாசத்தில் திரும்பி வருகிறேன்,

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_god.jpg

நன்றி

அமரன்
09-05-2009, 11:25 AM
மூர்த்தி..
மன்றத்துடன் கட்டுண்டவர்களால் மன்றத்தை விட்டுப் போக முடியாது. நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அப்பப்ப வந்து போவீங்கல்ல.

ரங்கராஜன்
09-05-2009, 11:29 AM
மூர்த்தி..
மன்றத்துடன் கட்டுண்டவர்களால் மன்றத்தை விட்டுப் போக முடியாது. நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? அப்பப்ப வந்து போவீங்கல்ல.
எங்கு இருந்தாலும் என்னுடைய மனம் முழுவதும் இங்கே தான் இருக்கும்

அமரன்
09-05-2009, 11:30 AM
எங்கு இருந்தாலும் என்னுடைய மன முழுவதும் இங்கே தான் இருக்கும்

மற்ற இடங்களில் எல்லாம் மனமில்லாமல்தான் இருப்பீங்க..:)

பாரதி
09-05-2009, 12:43 PM
முழுக்க முழுக்க நகைச்சுவையைக் கொடுத்தால் திகட்டி விடும் என்பதை ஏற்க இயலாது மூர்த்தி. சாவி அவர்களின் "வாஷிங்டனில் திருமணம்", பாக்கியம் இராமசாமி அவர்களின் " சீதாப்பாட்டி-அப்புசாமி கதைகள்", தேவன் அவர்களின் கதைகள் என பலர் எழுதிய முழு நகைச்சுவைக்கதைகளும் பெரும்பாலாரோனால் விரும்பி வாசிக்கப்பட்டு, பெரும் பாராட்டுதலைப் பெற்றவையே.

உங்கள் சொந்தப்பணிகளை நல்ல முறையில் முடித்து வாருங்கள். சமயம் கிடைக்கும் போது இளைப்பாறவும் மன்றம் வாருங்கள்.

எனக்குப்பிடித்த நடிகரைக்குறித்த உங்களின் படைப்பைப் படிக்க பொறுமையாக காத்திருப்பேன். சென்று வாருங்கள்.

நேசம்
10-05-2009, 08:14 AM
உங்கள் சொந்த பணிகள் முடிந்து வழக்கம் போல் உங்கள் பணி தொடரவேண்டும்.

விகடன்
21-06-2009, 07:05 AM
அனுபவத்தைல் சொல்வீர்கள் என்றுபார்த்தால் முகவுரையுடன் சென்றுவிட்டீர்களே...

praveen
21-06-2009, 08:22 AM
தக்ஸ், எனக்கும் கமல்ஹாசன் என்ற நடிகரை மிகவும் பிடிக்கும், எல்லோரும் பணத்திற்காக நடித்தால், இவர் அதையும் தாண்டி கூடுதலாக நடித்திருப்பது போலே தெரியாத வண்ணம் அந்த பாத்திரமாகி விடுவார்.

இவரின் பல படங்கள் என்னிடம் வீடியோ பதிவுகளாக இருக்கிறது, நேரம் கிடைத்தால் அடிக்கடி பார்த்து மகிழ்வது வழக்கம். ஆனால் எனக்கு இவர் நடித்த சில வன்முறை/சோக படம் பார்க்க பிடிப்பதில்லை (உ.தா மகாநதி, குருதிபுனல் இப்படி) மற்றபடி இவர் நடித்த படங்களில் ஹாஸ்ய படங்கள் அனைத்தையும் கணக்கு வழக்கு இல்லாமல் பார்த்து கொண்டேயிருக்கிறேன்.

முடிந்தால் சில காட்சிகளை மட்டும் நம் மன்றத்தினருக்காக Divx பார்மேட்டில் தரப்பார்க்கிறேன், உங்களின் இந்த திரியில் தர அனுமதி உண்டா தக்ஸ் :)

பரஞ்சோதி
21-06-2009, 08:29 AM
தம்பி தக்ஸ்,

உலகத்தில் திகட்டாத விசயம் குழந்தையின் பாசமும், நகைச்சுவையும் தான்.

மற்ற எந்த ஒரு சுவைக்கும் இல்லாத சிறப்பு நகைச்சுவைக்கு உண்டு, ஆம் நகைச்சுவை மட்டுமே நோய் தீர்க்கும், மற்ற சுவைகள் நோயை உருவாக்கும்.

மேலும் நேரமில்லை என்பது எல்லாம் நாமாக நினைப்பது தான், கற்பனை செய்து கொண்டே இருங்கள், அதை குறித்து வையுங்கள், மன்றம் வரும் போது பதிவாக கொடுங்கள்.

கமல் அவர்களை பற்றி இன்னும் எழுதுங்கள்.

ரங்கராஜன்
21-06-2009, 12:53 PM
அனைவருக்கும் நன்றிகள்

இந்த திரியை வெகு விரைவில் தொடர்கிறேன், பிரவீன் அவர்களே நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதை தாராளமாக பகிர்ந்துக் கொள்ளலாம், அதற்கு என் அனுமதி தேவையே இல்லை பிரவீன். நானும் உங்களின் பகிர்வுகளை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

பரம்ஸ் அண்ணா நீங்கள் கூறுவது 100/100 உண்மை, வேலை இருக்கு அதனால் திரியை தொடங்க முடியவில்லை என்பது எல்லாம் சும்மா தான். ஆனால் உண்மையில் எனக்கு சிந்திக்கும் மூடு இல்லை, அதற்கு காரணம் வேலை பளு மற்றபடி உக்கார்ந்து எழுத நேரம் இல்லை என்று நான் சொல்லவில்லை. நான் அனுபவித்த காட்சிகளை கோர்வையாக வாசகர்களுக்கு பிடித்த மாதிரி திகட்டாமல் எழுத இன்னும் மூடு வரவில்லை அண்ணா, எதோ இப்ப நீங்களும் பிரவீன் அவர்களும் கேட்டு வீட்டீர்கள் இல்லையா?, சீக்கிரமே போட்டு விடுகிறேன் பதிவை......... பரவாயில்லைப்பா என்னுடைய எழுத்தை படிக்கவும் இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தில் ....................:icon_rollout::icon_rollout::icon_rollout:

நன்றி

kavitha
23-06-2009, 06:17 AM
நீங்கள் கமல்ஹாசனைப்பார்த்தபோது எடுத்த புகைப்படம் என்று ஆவலோடு இணைப்பைச் சுண்டிப்பார்த்ததில்... நம்ம கமல் மட்டுமே இருக்கிறார்.
உங்களைக்காணவில்லையே! ::DD

பாரதி
11-07-2009, 02:35 PM
பணிப்பளுவில் நீங்கள் மூழ்கி விடுமுன்னர், இயலுமென்றால் உங்களுக்கு நேரம் கிடைக்குமென்றால் திரியை நிறைவு செய்யுங்கள் மூர்த்தி. நன்றி.

ரங்கராஜன்
06-09-2009, 04:50 PM
ரொம்ப நாளுக்கு முன் ஆரம்பித்த திரி இது, முடிக்காமல் சாரி ஆரம்பிக்காமல் வைத்து இருந்தேன். என்ன காரணம்???? பல தயக்கம், பல நெருடல்கள் சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஒருதலைப்பட்சமாக ஒருவரை பற்றி எழுதும் பொழுது, படிப்பவருக்கு என் மீது இருக்கும் கோபத்தை, அல்லது பேசுபவர் மீது இருக்கும் கோபத்தை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதை நான் ஒரு குறையாக சொல்லவில்லை, நான் என் மனதிற்கு பிடித்த விஷயங்களை எழுதப்போய், படிப்பவருக்கு அது எரிச்சலை ஏற்படுத்தி என்னால் ஒரு சிறந்த கலைஞன் அடிப்படவேண்டாமே என்ற ஒரு உணர்ச்சியில் தான் இந்த திரியை தொடங்காமல் வைத்து இருந்தேன். இப்பொழுது விட்டால் பின் எப்பொழுதும் தொடர முடியாமல் போய்விடும் என்ற நினைப்பில் தான் இந்த திரியை தொடங்குகிறேன். புது வேலை காரணமாக என்னால் மன்றத்துடன் பழைய படி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்?? மன்றம் இல்லாமல் இருக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். மன்றம் எல்லாரைப் போலவே என்னுள் கலந்து
விட்டது,

ஒவ்வொரு முறை மன்றம் வரும் பொழுதும் இந்த திரிக்கு வந்து பாரதி அண்ணாவின் இந்த கடைசி பதிவு வரை கண்டிப்பாக பார்த்து விட்டு செல்வேன். காரணம் எனக்கு பிடித்த விஷயங்களை பற்றி எவ்வளவோ இந்த மன்றத்தில் எழுதி இருக்கேன். ஆனால் எழுத வேண்டும் என்ற சிந்தனையை ஊட்டிய கமலஹாசனை பற்றி எழுத என்னால் முடியவில்லையே என்று. காரணம் பிறகு சொல்கிறேன்.

முதலில் ஒரு நடிகரைப் பற்றி பேசியவுடனே எல்லாருக்கும் முதலில் தோன்றுவது பேசுபவன் அந்த நடிகரின் ரசிகன் என்று. அந்த ரசிகன் என்ற வார்த்தையில் ஒரு அடிமைத்தனம் இருக்கும், அதனால் கேட்பவன் அடிமையாக இருக்கும் அந்த பேசுபவனை அந்த அடிமை சிறையில் இருந்து காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு அந்த நடிகரை பற்றி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவார்.

நான் அந்த மாதிரி ஒரு ரசிகன் அல்ல, முதலில் நான் ஒரு ரசிகனே அல்ல........... நான் கமலஹாசன் என்ற கிரியேட்டரை விரும்புகிறவன். அவருடைய சகலக்கலாத்தன்மையை பார்த்து வியப்பவன்.


தயவு செய்து கமல் என்றவுடன், வாய்க்கு வாய் முத்தம் கொடுப்பவர், தலைகணம் பிடித்தவர், பெண்களை மாற்றிக் கொண்டு இருப்பவர், என்று நினைப்பை விட்டு விட்டு இந்த திரியை மேலே தொடருங்கள். இது கமலுக்கு வக்காலத்து வாங்கும் திரி அல்ல, என்னை பொறுத்தவரை ஒரு கலைஞனை கலைஞனாக மட்டும் பாருங்கள், அவனுடைய கலை திறமையை பாருங்கள். அவனுடைய அந்தரங்க உறவு, எத்தனை வெள்ளை முடி, எந்த இடத்தில் அவனுக்கு கடன் இருக்கிறது என்பதை பற்றி ஆராயாதீர்கள். இதை மன்றத்தில் சொல்கிறேன் என்பதால் நம் மன்ற உறவை சொல்கிறேன் என்று நினைத்து விட வேண்டாம், பொதுவாக சொல்கிறேன், பொதுவாக சொல்வது என்றால் அதை ஏன் மன்றத்தில் சொல்ல வேண்டும்??? எங்க எழுத எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே தான் அதை சொல்ல முடியும். கமல் என்ற ஒற்றை கலைஞனுக்காக இதை எழுதவில்லை, நாளை நம்முடைய மன்றத்தில் இருந்தே பல பிரபலங்கள் வரலாம், அவர்களும் இந்த பிரச்சனைகளை சந்திக்கலாம் அதனால் தான் சொல்கிறேன்.

திறமையை அலசுங்கள், கலைஞனை விட்டு விடுங்கள். மன்றத்தில் இதை சொல்ல இன்னொரு காரணம் இங்கு இருப்பவர்கள் அனைவரும் என்னுடைய சொந்தங்கள், அந்த ஒரு உரிமையில் தான் சொன்னேன். இதையெல்லாம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது எனக்கு?, தகுதி இல்லை ஆனால் மனசாட்சி இருக்கிறது. நானும் கலைஞர்களை பல முறை கிண்டல் செய்து இருக்கிறேன், அந்த வயதில் எனக்கு அது ஒரு ஜாலி கூட இருப்பவர்களை சிரிக்க வைக்க, அதுவும் பெண்களை குறிப்பாக சிரிக்க வைக்க அப்படி செய்து இருக்கிறேன். ஆனால் கொஞ்ச
நாட்களுக்கு முன் நான் ஒரு நாடகம் பார்க்க போய் இருந்தேன். நாடகத்தின் பெயர் இராவணன், அது ஒரு சரித்திர நாடகம். அதில் என்னுடைய மாமா எதோ கூட்டத்தில் முனிவர் வேடத்தில் நடிக்கிறார். அவரை நாடகம் முடித்தவுடன் அழைத்துக் கொண்டு வருவதற்கான வேலை எனக்கு தரப்பட்டது, வேறு வழியில்லாமல் அந்த நாடகத்தை பார்க்க சென்றேன். மொத்தமே 50 பேர் தான் இருந்தார்கள் அதுவும் ராஜாமுத்தையா ஹாலில் பெரிய அரங்கம் அது, பின்பு தான்
தெரிந்தது, அமைச்சர் யாரோ வருவாராம் அதற்காக காத்துக் கொண்டு இருந்தவரகள் என்று. ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் வந்தார், வந்தவர் கொஞ்ச நேரம் இராவணனையும், இந்த நாடகத்தை ஏற்பாடு செய்தவரையும், ஆர்.எஸ். மனோகர் என்ற பழம் பெரும் நடிகரையும் (மறைந்த) வாழ்த்திவிட்டு போனார். நாடகம் தொடங்கியது, கூட்டம் கொத்து கொத்தாக எழுந்து சென்றது, ராவணன் சிரிக்கும் பொழுது எல்லாம் குழந்தைகள் அழத்தொடங்கியது. குழந்தைகளுக்கு துணையாக தாய்மார்கள் எழுந்துச் செல்ல, தாய்மார்களுக்கு துணையாக கணவன்மார்கள் எழுந்துச் செல்ல......... இப்படியே கூட்டம் போனது. கடைசியில் பார்த்தால் நானும், ஒரே ஒரு பெண்ணும் தான் அமர்ந்து இருந்தோம். அந்த பெண் எனக்கு மூன்று ரோக்கல் முன்னாடி, நான்
எட்டிச் சென்று பார்த்தேன். என்னுடைய மாமா இல்லாத சீனாக பார்த்து நான் அவள் இருந்த ரோவில் அமர்ந்தேன், அவளிடம் பேச்சுக் கொடுத்தேன், அவளும் பேசினால் அவள் ஒரு பத்திரிக்கையாளராம் (அப்போ நான் பத்திரிக்கை வேலையில் சேரவில்லை). நாடகத்தை பற்றி பத்திரிக்கையில் எழுத அவளை பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார்களாம். நாங்கள் எதோ பேசிக் கொண்டு இருக்க, மேடையில் ராவணன் ஆர்வமாக வீணை வாசித்துக் கொண்டு இருக்கும் காட்சி ஓடிக் கொண்டு இருந்தது. இதுவரை வாழ்க்கையில் அவ்வளவு ரோஸான ராவணனை நான் பார்த்ததே இல்லை, தமன்னாவை விட ரோஸாக இருந்தார். அதை அவளிடம் சொன்னேன், அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். மேடையில் நடிப்பவர்களுக்கு கீழே வரிசையில் உள்ள யாரும் தெரியமாட்டார்கள் பெரிய பெரிய மின்விளக்குகள், அவர்களை நோக்கி இருப்பதால் அவர்களுக்கு கீழே யாரும் தெரியமாட்டார்கள். நாடகம் முடிந்தது, அவர்கள் முகத்தில் அடித்துக் கொண்டு இருந்த பெரிய பெரிய விளக்குகள் அணைக்கப்பட்டன, நாடக நடிகர்கள் எல்லாரும் குழுவாக வந்து வரிசைகளை பார்த்து ஆர்வமுடன் வணக்கம் சொன்னார்கள். அப்படி வணக்கம் சொல்லும் பொழுது கீழே வரிசையில் அமர்ந்து இருக்கும் மக்கள் கைத்தட்ட வேண்டும் அதுதான் மரபு ஆனால் அன்று நானும் அந்த பெண்ணும் மட்டும் தான், அவளும் தன்னுடைய வேலை விஷயமாக இருந்ததால், நான் ஒருத்தன் தான் அந்த அரங்கத்தின் ஒரே பார்வையாளன்.. உண்மையில் அன்று அது ஒன் மேன் ஷோ தான், வரிசையை நோக்கி இருக்கும் விளக்குகளை வேற போட்டுவிட்டார்கள். நானும் அந்த பெண்ணும் மட்டும் நடுவில், மேடையில் அனைவரும் மக்கள் கொஞ்சமாவது இருப்பார்கள் என்ற நினைப்புடன் கைகளை கூப்பியப்படியே சீட்டுகளை பார்த்தார்கள்.

மக்கள் யாருமே இல்லை என்று தெரிந்தவுடன் ஒரே நொடியில் அவர்கள் அனைவரின் முகம் வாடியதே, அந்த காட்சியை நான் எப்படி என்னுடைய எழுத்துக்களில் கொண்டு வருவது என்று தெரியவில்லை. அதற்கான உவமையும் என்னிடம் இல்லை. இரண்டு மணி நேரம் உயிரை கொடுத்து நடித்ததை யாருமே பார்க்கவில்லை என்று நினைத்தவுடன் அவர்கள் அனைவரின் உள்ளங்களும் பொசுங்கிப்போனது. அப்படி இருந்தும் எங்கள் இருவரை பார்த்தபடி கையை கூப்பியபடியே நின்று இருந்தார்கள். அந்த பெண் எழுந்தாள், கையை தட்டினாள், நானும் அவளுடன் எழுந்தேன் கையை தட்டினேன், வேகமாக தட்டினேன். அவள் நிறுத்திவிட்டாள், இப்பொழுது அரங்கள் முழுவதும் என் கைத்தட்டல் மட்டும் தான் ஒலித்தது.

அவள் திரும்பி பார்த்து சிரித்தாள், நான் கைத்தட்டுவதை நிறுத்தினேன். அந்த நாடகத்தில் இராவணன் வேடத்தில் நடித்தவர் தான் அந்த நாடகத்தை போட்டவர். அவர் மைக்கை வாங்கி தழுதழுத்த குரலில் “நீங்களாவது இருந்தீர்களே, இருவருக்கும் நன்றி” என்றார். அந்த குரல் இன்னும் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்த பத்திரிக்கையாளர் பெண் அடுத்த நாள் பத்திரிக்கையில் ஒருவருக்காக நடந்த இராவணன் நாடகம் என்ற தலைப்பில் ஒரு ஆர்டிக்கல் எழுதி இருந்தாள். பாவம் அவளை என்ன சொல்வது, அவள் தொழிலுக்கு அவள் துரோகம் செய்ய முடியாதே. கலைஞர்கள் அந்த கலையை உயிராக பார்க்கிறார்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சாதாரணமான ஒரு விஷயம். என்னடா மச்சான் ரஹ்மான் இந்த படத்துல சோதப்பி இருக்கார் என்போம், நம்மால் ஒரு சின்ன சத்தத்தை உண்டு பண்ணமுடியுமா???

குருதிபுனல் _ Drohkal

அன்பேசிவம் - Trains planes and automobiles

விருமாண்டி - Roshomon-life of david gale

தெனாலி - What About Bob

அவ்வைசண்முகி - Mrs Doubtfire-Toutsie

சதிலீலாவதி - She Devil

ராஜபார்வை - Butterflies are free-Graduate

மகளிர் மட்டும் - Nine to Five

நம்மவர் - To sir, with love

பஞ்சதந்திரம் - Things gone wrong

இப்படி சில படங்கள் அவர் ஆங்கில படத்தின் தழுவல்களாக வந்து இருக்கிறது, படத்தை நம்ம சமுதாயத்திற்கு ஏற்ப கொடுத்து இருப்பார்கள். கமலஹாசன் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு பிடிக்காது.
அது அவர் அவர்களின் தனிப்பட்ட கருத்து. எனக்கு தெரிந்து பிடிப்பவர்கள் சொல்லும் காரணம் நிறைய (பிடித்துவிட்டால் காரணமே தேவையில்லை தானே). அதனால் பிடிக்காதவர்கள் சொல்லும் காரணங்கள் சிலதை பார்ப்போம் ஓவர் ஆக்*ஷன், வல்கராக நடிக்கிறார், அவரை மையப்படுத்தியே கதையை நகர்த்துவது, எல்லா காட்சியிலும் அவரே வருவது, நகைச்சுவை டிராக்குகளில் அவரே நடிப்பது, எக்கச்சக்க பந்தா, நிஜ வாழ்க்கையில் அவரின் முகம் என்று பல பல காரணங்கள் சொல்வார்கள். அதையும் மீறி எனக்கு அவரை பிடிக்க காரணம் ஒன்றே ஒன்று தான். அவரிடம் இருக்கும் அந்த வல்லவத்தன்மை நடிப்பு, நடனம், இசை, இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை, வசனம், தொழில்நுட்பம்
கவிதை, பல மொழிகளை தெரிந்து வைத்திருப்பது என்று எல்லாவற்றிலும் கலக்குவது அது தான் அவரிடம் எனக்கு மிக மிக பிடித்த விஷயம். இப்படி சின்ன வயதில் இருந்தே எனக்கு கமல் என்றாலே ஒரு வித புத்துணர்ச்சி தான். இப்பொழுது இருக்கும் இளைய தலைமுறை இயக்குனர்கள் முக்கால்வாசி நபர்கள் கமலின் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள், அதை அவர்களே தங்களின் பேட்டியில் சொல்லியும் இருக்கிறார்கள். ஷங்கர், பாலா, சேரன், அமீர், செல்வராகவன்
என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரி நான் விஷயத்திற்கு வருகிறேன், கமலை பார்ப்பது என்னுடைய ஆசையாக இருந்தது. இந்த ஆசையை நான் எப்பொழுதோ நிறைவேற்றி இருப்பேன், அதுவும் சென்னையில் இருந்துக் கொண்டு அவரை பார்க்க முடியாதா என்ன?. அதுவும் என்னுடைய வேலையே வடபழனியில் தான், பார்க்க முடியாதா என்ன?, ஆனால் அப்படியெல்லாம் போய் வாசலில் காத்து இருந்து பார்ப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, என் தன்மானமும் அதற்கு இடம் தராது. நான் அவரை பார்க்கும் நிகழ்வு அகஸ்மாத்தாக நடக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். இதற்கு காரணம் சுஜாதா ஐயா தான், அவர் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் நீங்கள் பார்த்து பிரமிக்கும் ஒருவரிடம் ரொம்பவும் நெருங்கி விடாதீர்கள், அந்த பிரமிப்பு போய்விடும் என்பார். அதனாலே எனக்கு மிக மிக பிடித்த கமலை நான் தானாக நெருங்கவில்லை. ஆனால் மனதிற்குள் அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதே போல அவரை வெறியோடு சில காலங்கள் ரசித்து இருக்கிறேன், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைத்துக் கொண்டேன். அதற்கு காரணம் என்னுடைய கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் ஒருவன், அவன் அதிதீவிர அஜீத் ரசிகன், அஜீத் ஒவ்வொரு படத்திற்கும் என்ன கெட்டப் போடுகிறாரோ அதே போல இவனும் ரிலீஸான அடுத்த நாளில் அதே கெட்டப்பில் கல்லூரிக்கு வருவான். தீனா, வில்லன், ரெட் என்று பல பழைய கெட்டப்பிலும் வருவான். அவனிடம் அஜீத் ரசிகர்கள் அவரை பற்றி யாராவது பேச ஆரம்பித்தால், அவர்களே வெறுக்கும் அளவிற்கு அஜீத்தை பற்றி புகழ்ந்து பேசுவான். இதனால் அஜீத்தை பிடித்த பலருக்கு இவனாலே அஜீத்தை பிடிக்காமல் போனது என்னையும் சேர்த்து. அதே போல தானே மற்றவர்களுக்கு கமலை பிடிக்காமல் போகும் என்ற நினைப்பில் தான் நான் என் நிலையை மாற்றிக் கொண்டேன். காரணம் ஒருவன் ஒன்று சொன்னால் அதை எப்படியாவது எதிர்த்து ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று பலர் என் கல்லூரியில் திரிந்ததால் அதை செய்வதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் மனத்திற்குள் கமலை பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் குறையாமல் இருந்தது. சுஜாதா ஐயாவின் இறுதி ஊர்வத்திற்கு சென்று வந்ததை நம் மன்றத்தில் ஏற்கனவே சுஜாதாவின் நேர்மை என்ற தலைப்பில் பதிந்து இருக்கிறேன். சுஜாதா ஐயா இறந்து மூன்று நாள் கழித்து அவரின் இரங்கல் கூட்டத்தில் கலந்துக் கொள்ள தேசிகன் அவர்கள் என்னை அழைத்தார்.

ஐந்து மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம் என்றார்கள் மீயூசிக் அகாடமி வாசலில் நான் 4.30 மணிக்கு சென்று விட்டேன், ஒரு ஈ காக்கா காணவில்லை, மணி கொஞ்சம் கொஞ்சமாக கடந்து சென்றது யாரும் வரவில்லை, ஐந்து மணி ஆகியும் யாரும் வரவில்லை.
எவ்வளவு பெரிய எழுத்தாளர் .........ச்ச என்ன மக்கள் டா நம் மக்கள் என்று எரிச்சல் தான் வந்தது,........ இருக்கு வரை தான் எல்லாம் இறந்துவிட்டால், நாய் கூட சீண்ட மாட்டுது என்று என்னையே நானே நொந்துக் கொண்டேன். நான் எனக்குள் பேசிக் கொண்டு
இருந்ததை பார்த்த வாட்ச்மேன்

“என்ன சார் என்ன வேணும்”

“ஒண்ணும் இல்லங்க, யாரும் வரலையே”

“யாரு வரணும்”

“சுஜாதாவின் இரங்கல் கூட்டம்”

“அது பக்கத்து தெருவுல இருக்கும் அகாடமியில் நடக்குது, இங்க என்ன சார் பண்றீங்க”

“..........”

வண்டியை எடுத்துக் கொண்டு அவசரமாக அவர் சொன்ன இடத்திற்கு போனேன், அங்கு வெளியில் போலீஸ் கூட்டமாக இருந்தது. நான் அவசரமாக வண்டியை நிறுத்த வந்தேன். பக்கத்திலே ஒரு சூப்பர் கார் ஒன்று நின்ற இருந்தது, கமலஹாசனின் கார் அது.

(தொடரும்...........)

மஞ்சுபாஷிணி
06-09-2009, 05:17 PM
அருமையான பதிவு இது தக்ஸ்...

ஒரு கலைஞனை பப்ளிக்கான நாம் விமர்சிக்கலாம்.. எப்படி? அவருடைய திறமைகளை, அவருடைய நடிப்பை... அவருடைய பர்சனல் வாழ்க்கையை விமரிசிக்க நாம் யாரு? எனக்கு சத்யராஜ் ஹீரோவை பிடிக்கும்... கமலின் அருமையான நடனம் அமைந்த சாகர சங்கமம் பிடிக்கும்... பரதம் இஷ்டப்பட்டவங்களுக்கு கமலை பிடிக்காமல் போகாது கண்டிப்பா.. ஒரு வேலைன்னு எடுத்துக்கிட்டால் அதுக்காக மெனக்கெடும் கமலைப் பார்த்து சிவாஜி சார் சொன்னது என் கலை வாரிசி கமல் அப்டின்னு... ஒவ்வொரு முறை படம் எடுக்கும்போதும் அவர் எடுத்துக்குற முயற்சிகள் சிரமங்கள் கடன் இப்படி எத்தனையோ இடறெல்லாம் தாண்டி தான் கமல் இப்படி சாதித்து ஒளிப்பெற்று இருக்கார்.

திறமை உள்ளோரிடம் அவரின் படைப்புகளை மட்டும் விமரிசிக்கும் பண்பட்டவர் நாம். நாம என்ன சின்னக் குழந்தையா எனக்கு கமல் பிடிக்காது ரஜினி பிடிக்கும். அவர் அப்படி இவர் அப்படின்னு விமரிசனம் செய்ய?

அருமையான பதிவு தக்ஸ்... சுஜாதா இறப்பு செய்தி கேட்டப்ப சட்டுனு மூட் அப்செட் ஆனது உண்மை. இனி இது போன்று ஒருவர் பிறப்பாரா? அவரின் கதைகள் அவரின் ஆர்ட்டிகள் படிச்சிருக்கேன். அத்தனை அருமையா இருக்கும்..

ஒரு கலைஞருக்கு தன் படைப்புகளை கைத்தட்டி ஊக்குவிக்கும்போது உத்வேகம் பிறக்கும்.. இன்னும் இன்னும் இன்னும் அருமையா தரனும் என்று...

நீங்க தொடருங்க தக்ஸ்.. அருமையான பதிவு இது..

பாரதி
06-09-2009, 05:43 PM
திரி தொடர்வதைக் கண்டு மகிழ்கிறேன் மூர்த்தி.

கமலஹாசன் குறித்து முரண்பட்ட பார்வைகள் மக்களிடையே உண்டு. சலங்கை ஒலி படத்தில் அவருடைய நடிப்பை / நாட்டியத்தை விமர்சிக்காமல், அவர் நாட்டியமாடும் காட்சியில் அக்குளில் முடி தெரிந்ததை பெரிது படுத்தி செய்திகளில் விமர்சித்தவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு படத்திற்காகவும் அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும், சீரிய முயற்சியும், புதுமையை தரும் விதமும்...... மிகவும் பாராட்டத்தகுந்தவை.

அவர் மேல் கூறப்படும் குறைகள் எல்லாம் அவரை மேலும் மேலும் சிறப்பான நடிகராக்குவதற்கே உதவி இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் பார்வையில் அவரைக் காண நானும் ஆவலோடு இருக்கிறேன்.

Mano.G.
06-09-2009, 06:36 PM
தம்பி தாக்ஸின் தீவிர மறுபரிசீலனைக்கு பிறகு
இத்திரி மறுபடியும் தொடங்கபட்டதற்கு
தம்பிக்கு வாழ்த்துக்கள்,

மனோ.ஜி

மதி
07-09-2009, 12:31 AM
தொடருங்க தக்ஸ்... வழமையான உங்கள் பார்வையில்...

samuthraselvam
07-09-2009, 04:57 AM
அருமையான பதிவை மீண்டும் ஆரம்பித்ததுக்கு பாராட்டுக்கள் அண்ணா.... ஒரு கலைஞனை விமர்சிக்க அவரின் திறமைகள் அவரின் நடிப்பு ஆகியவற்றைதான் எடுத்துக்கொள்ள வேண்டும்... ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கை, குடும்பம் இப்படி அவர்களின் அந்தரங்கத்தில் விமர்சனம் என்ற பெயரில் மூக்கை நுழைப்பது என நிறையப் பேர் இருக்கிறார்கள்...

தொடருங்கள் அண்ணா...

பால்ராஜ்
17-09-2009, 01:45 PM
நடிப்பு என்பது மிகைப்படுத்தப்பட்ட நாடகத்தனம் என்பதை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த தமிழ் திரை உலகிற்கு கிடைத்த வரப் பிரசாதம் கமல்..

அறிஞர்
17-09-2009, 01:52 PM
நகைச்சுவையுடன்.. கூடிய பதிவு... சிறப்பு....
கமல் ஒரு பெரிய வரப்பிரசாதம்...
எதிர் காலத்தில் அவருடன் பேட்டி கண்டு இங்கு கொடுங்கள்..