PDA

View Full Version : ஈழத்தையும் பெற்றுத் தருவோம் - கலைஞர்அமரன்
07-05-2009, 09:55 PM
நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்

என்னை நம்பு! என்னை மறவாதே! நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன்! எங்களுக்காக நீ!

உங்களுக்காக நான்! என்பதை மறந்து விடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்! நான் நேரில் உன்னோடு இல்லாமலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இருதயத்தால் உன்னோடு ஒன்றிப் போய் இருக்கின்றவன் எனக்கு நிம்மதியை வழங்கு!

விரிவாகப் பெற: http://thatstamil.oneindia.in/news/2009/05/07/tn-i-will-be-making-efforts-to-see-that-eelam.html

ஓவியன்
08-05-2009, 11:24 AM
நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.


நல்லதோர் நகைச்சுவை..!! :)

virumaandi
08-05-2009, 11:34 AM
உங்களால் இயன்றதை செய்துள்ளீர்..
மறக்கமாட்டோம்...
உங்களின் வயதின் தன்மை கருத்தில் கொண்டு.. மன அமைதி பெறுங்கள்..
போராடும் அவர்களும் இருக்கிறார்கள்..
ஆனால் அவர்களை வழி நடத்த உங்களை போல் ஒருவர் அங்கு இல்லை..

உங்களால் இன்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது..
தமிழர்களுக்காக எத்தனையோ செய்துள்ளீர்..
எங்களுக்காக இனி.. ஓய்வுடன்.. உடல் நலம் தேற.... அமைதியுடன் இருங்கள்..

நீங்கள் நன்றாக இருந்தால் தான்.. தமிழர்களின் ஒரே தலைவர் உங்கள் மீது எது யாரால் நடந்தாலும்.. உங்கள் மீது கல்லெறிய முடியும்..
னீங்கள் நன்றாக இருந்தால் தான்.... நாங்கள் எதுவும் செய்யாமல்.. அறிக்கையிலும்.. வீர வசனம் பேசியும்.. வெறும் தேர்தலுக்காக.. ஈழ எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து உங்கள் மீது நீங்கள் எதுவும்.. செய்யவில்லை என்று.. கல்லெறிய முடியும்....

உடல் நலம் பெறுங்கள் தலைவா..
உங்களின் உடல் நலம் தான் தமிழர்கள் எங்கள் கனவு...

திடீர் இட்லி சாம்பார் அல்ல.. ஈழம்.. என்பது உமக்கு தெரியும்..
இன்றக்கோ முதல் குரல் கொடுத்தவர்களில் நீங்கள்.. ஆனால் இன்று தமிழர்களின் உயிர் தான் முக்கியம் அதற்கு போர் நிறுத்தம்..
அடுத்து தான் ஈழம் கோரிக்கை..
முதல் போர் நிறுத்தத்தை பெற்று தர முயற்சித்தீர்.. கிடைத்தது..
ஈழம் நாடு சுதந்திரம் பெற அனைவரின் முயற்சியும் தேவை..

உங்களின் உழைப்பு போதும்.. உங்களின் ஆதரவு மட்டுமே தேவை..
உங்களின் இள வயதில் நீங்கள் எவ்வலவோ போராட்டம் கண்டீர்..
இனி அத்தகைய வயதுள்ள வீரம் பேசும் தமிழ் தலைவர்களும்.. தமிழ்னாட்டினில் உலவும் கன்னட தலைவர்களும், தெலுகு தலைவர்களும் எவ்வளவு உழைப்பை எத்தனை ஆண்டு காலம் உழைத்தனர் என்று எங்களுக்கும் தெரியும்..

தலைவா.. உடல் நலம் தேறுங்கள்.. எதை பற்றியும் கவலை வேண்டாம்
இழம் கிடைக்கும் உங்களால்..
ஈழம் கிடைக்கும் முன்னர்.. எங்கள் கலைஞர் கிடைக்க வேன்டும் எங்களுக்கு

ஓவியன்
08-05-2009, 11:38 AM
முதல் போர் நிறுத்தத்தை பெற்று தர முயற்சித்தீர்.. கிடைத்தது..

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

ஏம்பா இப்படியெல்லாம் காமெடி பண்ணுறீங்க...???

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

masan
10-05-2009, 02:02 PM
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா சாத்தானின் ராச்சியத்தில் மரணசாசனம் பாடும் கவிஞ்ஞர்

anna
10-05-2009, 02:19 PM
ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா சாத்தானின் ராச்சியத்தில் மரணசாசனம் பாடும் கவிஞ்ஞர்

இது எப்படி இருக்கு தெரியுமா? தமிழர்களுக்காக தழிழர் நலனுக்காக எப்பவும் சிந்திக்கும் ஒரே தலைவர் கலைஞர் என்பது உலகறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்வரை போர் நடந்தால் இறப்பு என்பது இருக்கத்தான் செய்யும் இதற்காக நாம் வருத்தப்படுவதற்கு இதில் ஒண்ணுமில்லை என சொல்லியவர் தான் இன்று இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைத்து தருவேன் என சொல்வது எப்படி இருக்கிறது என்றால் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது. இப்போது நீங்கள் எல்லாம் கலைஞரை கிண்டல் செய்வது தினமும் சோறு போட்டவ மூதேவி ஒரு நாள் போட்டவ மகராசி எனபது போல் உள்ளது.

இன்பா
10-05-2009, 02:48 PM
கலைஞர் என்றைக்குமே மக்களை பற்றி கவலைப் பட்டதே இல்லை,

எதிர் கட்சிகள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் அவரிடத்தில் உரிய பதில் இல்லை மாற்றாக நீ யோக்கியமா? நீ அப்படி சொன்னாயே? என்ற தேவையற்ற விளக்கங்கள் தான்.

அவரின் ஒரே கவலை திமுகவை அவரது குடுப்பத்துக்குள்ளாக வைத்திருப்பதே... யார் எக்கேடு கெட்டாலும் அவருக்கு கவலையே இல்லை.

ஆக இந்த முறை திமுக காங் தான் வெற்றிப் பெறப்போகிறது. காரணம் கலியுகத்தில் துரோகிகள் நயவஞ்சகர்கள் தான் போற்றப் படுவார்கள்.

ஈழம் எக்கேடு கெட்டாலும், தமிழகம் எக்கேடு கெட்டாலும், யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை எனக்காக யாரும் எதுவும் செய்யவும் இல்லை.

காங். மந்தியில் ஆட்சி அமைந்தால் பங்கு வர்த்தகம் நன்றாக இருக்குமாம், ஆகவே நானும் திமுக. காங், குக்கு வாக்களிக்கப் போகிறேன்.

இன்றிலிருந்து நானும் சுயநலவா(வியா)தி........ :)

உதயா
10-05-2009, 03:14 PM
ஈழத்தில் இருக்கும் நம் ரத்தங்கள் (உயிர்கள்) அரசியலுக்கு காட்சி பொருளாகி(க்கி)விட்டார்கள்.

அமரன்
10-05-2009, 05:51 PM
ஜே அம்மாவும் சொல்லி உள்ளார். கலைஞரும் சொல்லி உள்ளார். நமக்காக இருவரும் கருத்து ஒருமித்து உள்ளார்கள் என மகிழ்ச்சியுறுங்கள். நாங்களும் ஒன்றுபடுவோம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்.

anna
10-05-2009, 06:51 PM
ஈழத்தில் இருக்கும் நம் ரத்தங்கள் (உயிர்கள்) அரசியலுக்கு காட்சி பொருளாகி(க்கி)விட்டார்கள்.

இது தான் சரியான உண்மை. நம்ம அரசியல்வாதிகள் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்வார்கள். தற்போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் மென்று கொள்கின்றனர்.

masan
10-05-2009, 07:02 PM
தமிழக அரசியல் வரலாற்றை சற்றே திரும்பிப்பார்த்தால் யார் சாத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்...அண்ணா அவர்களே ஒருநாள் சோறு போட்டாலும் பசிக்கு போடுறாங்களே..அதுதானே எங்களுக்குத் தேவை அதை விட்டுவிட்டு பசிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிட்டு இறந்தபின் போடும் வாய்கரிசியை அல்லவா உங்கள்ம் தலைவர்கள் போடுகிறார்கள் அதுவும் தினம்தோறும்

இன்பா
11-05-2009, 04:03 AM
அண்ணா அவர்களே ஒருநாள் சோறு போட்டாலும் பசிக்கு போடுறாங்களே..அதுதானே எங்களுக்குத் தேவை அதை விட்டுவிட்டு பசிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிட்டு இறந்தபின் போடும் வாய்கரிசியை அல்லவா உங்கள்ம் தலைவர்கள் போடுகிறார்கள் அதுவும் தினம்தோறும்

நச்.......

அமரன்
11-05-2009, 09:12 AM
அண்ணா அவர்களே ஒருநாள் சோறு போட்டாலும் பசிக்கு போடுறாங்களே..அதுதானே எங்களுக்குத் தேவை அதை விட்டுவிட்டு பசிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிட்டு இறந்தபின் போடும் வாய்கரிசியை அல்லவா உங்கள்ம் தலைவர்கள் போடுகிறார்கள் அதுவும் தினம்தோறும்

மாசன் அவர்களே! எவருமே இன்னும் பசிக்குச் சோறு போடவில்லை. போடுகிறோம் என்றுதான் சொல்லி உள்ளார்கள். யார் போடுகிறார்கள் என்று இறுதிவரை பொறுத்திருந்து பார்ப்பதுதான் நலம். இடையில் ஏன் ஏடாகூடாமகக் கதைப்பான். பானையைப் போட்டு உடைப்பான்.

நமக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையும் எங்கள் இருட்டு வாழ்வுக்கு வலுவான காரணம். பட்டும் திருந்தாமல் இருக்கும் எங்களை என்ன என்று வைய.

நெல்லுக்குத்தும் தெம்பு கலைஞருக்கும் உண்டு.. ஜேக்கும் உண்டு. எங்கள் பொறுப்பு கல்லுக் குத்தாமல் இருப்பது.

உதயசூரியன்
11-05-2009, 05:41 PM
புரிய வில்லை..
ஒவியன்...
தமிழர்கள் என்றால் அனைவருக்கும் தான் பொறுப்புள்ளது..
இலங்கை தமிழர்களின் தவறினால்.. ராஜபக்ஷேவை ஆட்சியில் உட்காரவைத்து விட்டு.. இப்பொழுது கலைஞரை மட்டும் குற்றம் சொல்ல எப்படி முடியும்..
அவர் என்றைக்குமே ஈழத்துக்கு ஆதரவாளர்..
ஆனால்.. ராஜிவ் மரணத்திற்கு பிறகு பட்ட அடி எல்லாம்.. தி.மு.க விற்கு தான் கிடைத்தது..
இன்னும் அதில் இருந்து பலரால் மீள முடியவில்லை..
ஆனாலும் நாங்கள் ஈழத்தை ஆதரிக்கிறோம்..

ஆனால் தமிழக வரலாற்றில் தமிழர்களை அழிக்கும் வேலையில் இருக்கும் ஜெவை.. அவர் அறிக்கை விட்டார் என்று கொஞ்சினால்.. பாவம் நீங்கள்..
தமிழ்னாட்டில் நடக்கும் தேர்தல் இந்தியாவிற்க்கானது..
கடந்த 5 வருடம் செய்த செயல்களும் இனி செய்ய இருக்கும் செயல்களுக்குமானது..

தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் ஜெ என்பது எல்லோருக்கும் தெரியும்..

மனதில் வைத்து கொள்ளுங்கள்..
தேர்தல் நேரம் மட்டும் தான் வெளியே வருவார் அவர்.. வந்ததும் தனது நடிப்பை தத்ரூபமாக நடிப்பார்..
கடந்த 2001 ல் சிறுபான்மையினரை கடற்கரையில் கூட்டி.. அவர்களின் வாழ்வுரிமை மானாட்டில் பல வாக்குறுதிகலை அளித்தார்..
அதை நம்பி லத்திப்.. சமது எல்லாம் போனார்கள்
கடைசியில் என்ன ஆனது.. ஒரே மாதத்தில்.. அவர்களை வெளியே துரத்தி.. சிறுபான்மையினரை.. வறுத்தெடுக்கும் சட்டங்களை போட்டார்....

தமிழ்னாட்டுக்கு தெரியும் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு நன்றாக தெரியும்..ஜெவை பற்றி...
ஒரு கத்தி பாரா பாலத்தை கூட மத்திய அரசு கட்ட முனைந்த போது.. அதை ஜெ முதல்வராக இருந்த போது ஒரு அங்குலம் கூட நகர்த்த விடாமல் இருந்தார்..

ஆனால் மத்தியில் கூட்டாட்சி.. மானில சுயாட்சி கண்டு..
மத்தியில் இணக்கமாக இருந்து பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்த தலைவர் கலைஞர் தான்..

என்னமோ இலங்கை தமிழர்கள் பிரச்சினை இந்த 2 மாதமாக தான் நடப்பது போல் பேசுவது.. அ.தி.மு.க. ஆதரவாளர்களுக்கு.. வேறு எதுவும்.. சொல்லி ஓட்டு கேட்க முடியாத கேவலமான நிலை.. அதனால்.. வரலாற்றையே மாற்ற நினைக்கிறார்கள்..

உண்மையான தமிழர்களுக்கு தெரியும்.. யாருக்கு அதில் அக்கறை என்று.. முள்ளில் பட்ட சேலையை பக்குவமாக எடுக்க வேண்டும்..

ஈழத்துக்கு ஒரு தமிழ் தலைவர் பிரபாகரன்
தமிழகத்திற்க்கு ஒரு தமிழ் தலைவர் கலைஞர்

ஜெ வால் மட்டும் இறந்தவர்கள் எத்தனை அப்பாவி தமிழர்கள்..
தமிழ் நாட்டு ராஜபக்ஷே ஜெயலலிதா..
அதற்காக அவரை ஏன் உயிருடன் பிரபாகரன் விட்டு வைத்தார் என்று இலங்கை தமிழர் தலைவர் பிரபாகரனை கேட்க முடியுமா...??

தமிழகத்தில் நல்லது நடக்கும் போது சும்மா வேறு எதையாவது சொல்லி பிரச்சாரம் செய்யும் போக்கை மக்கள் கவனித்து கொன்டு தான் இருக்கின்றனர்..

ஜெ கூட்டணி தான் இப்போ காமடி கூட்டணீ...

ஈழ தமிழர்கள்...தவறாக முடிவெடுத்தே பழக்க பட்டால் நாங்கள் என்ன சொல்வது...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அன்புரசிகன்
11-05-2009, 06:29 PM
ஈழ தமிழர்கள்...தவறாக முடிவெடுத்தே பழக்க பட்டால் நாங்கள் என்ன சொல்வது...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
இது வேறயா.... சரி.. எத்தனையை கேட்டுவிட்டோம். இதையும் கேட்ப்போம்...

யாரும் ஜெயலலிதாவை போற்றவில்லை. ஓவியன் சொல்லவந்ததை சரியாக புரியுங்கள்... நான் இந்த பதிவு பதியும் வரை இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவில்லை. ஏற்பட்டது முன்னர் தான். (அது இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர். அது முறிந்துவிட்டது.) பிறகு அப்படி ஏதும் கனவிலும் யாருக்கும் நடக்கவில்லை. கலைஞருக்கு மட்டும் எப்படி நிகழ்ந்தது..??? நேற்று மட்டும் 2000 ற்கும் அதிகமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் உங்களுக்கு தெரிந்திராது என்று நினைக்கிறேன். நினைத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது என்று அவர் சொல்லியிருக்கமாட்டார். (கேட்டது கிடைத்தது வரி).

என்னசெய்வது... ஈழத்தமிழரின் தவறான முடிவுகள் - எண்ணங்கள் - எதிர்பார்ப்புக்கள் இன்று வரை தொடர்கிறது.... முட்டாள் ஈழத்தமிழர் நாம்...

உதயசூரியன்
11-05-2009, 07:25 PM
மனதை காயபடுத்த சொல்லும் விதத்தில் அதை சொல்லவில்லை..
அப்படி மனது புண்பட்டால்.. மன்னிக்கவும்...அன்பு ரசிகன்
உலக நாடுகளே கேட்டும் நடக்காத விஷயமா.. கலைஞர் கேட்டு நடக்க போகுது..
ஆனால்.. அவர்கள் ஏதோ ஒரு காரணமாக பின் வாங்கினர்.. அது தற்காலிகம் தான்..
ஆனால் அதை வைத்து மட்டும் இங்கே அரசியல் வியாபாரம் செய்யும் கட்சிகள் எது என்று அடையாளம் காண வைத்தது அவர்களை அவர்களே காட்டி விட்டார்கள்...

ஆரம்பத்தில் இருந்து ஈழ ஆதரவாளர் கலைஞர்..
னேற்று வரை ராஜபக்ஷேவின்... தங்கை ஜெ.. ஏன் தேர்தல் முடிந்தபிறகும்.. அது தொடரும்...

தமிழ் செல்வனுக்கு கவிதை வடித்ததை கூட பொறுக்க முடியாத ஜெ..
ஆண்டன் பாலசிங்கம் மருத்துவத்தை கூட அனுமதிக்காத ஜெவை விட கலைஞர் என்ன தவறு செய்தார்...

ஈழ தமிழர்களின் ஆரம்ப கால போராட்டத்தில் பலர் இருந்தனர்..
ஈழம் ஒன்றே குறிக்கோள் என அனைவரையும் ஒற்றுமை படுத்தி வந்தவர் கலைஞர்..
ஆனால்.. நம் விடுதலை புலிகளின் சகோதர யுத்தத்தில் நிகழ்ந்த்த கொலைகளையும் மீறி அவரை தமிழ் நாட்டினில் இருந்து பாதுகாப்புடன் ஈழத்திற்க்கு அனுப்பி வைத்தவர்.. கலைஞர்..
அன்று முதல் இன்று வரை.. கலைஞரின் வியூகங்களை மூத்தவர் என்று கேட்டிருந்தால்.. கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்
எம்.ஜி.ஆரும்.. இந்திராகாந்தியும் போதும் என இருந்தனர்..
அப்புறம் அவர்களாலேயே வந்தது வம்பு...

இன்று.. ரணில் விக்ரமசிங்கேவையும் ராஜபக்ஷேவையும் ஒரே கோணத்தில் பார்த்து ..
ரனில் தோற்றது தானே இவ்வளவுக்கும் காரணம்...
இந்த விஷயத்தில்..முடிவெடுக்கும் போது எந்த ஒரு தமிழ்னாட்டு தமிழ் தலைவர்களும் ஒன்னும் சொல்லவில்லையே..
இந்தியாவின் பாதிப்பு இல்லையே..

ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் வந்தது..அப்போது ரனிலிடமிருந்து..
இலங்கையில் இருந்து.............
இலங்கை தமிழர்கள் தவறான முடிவெடுத்து விட்டார்கள்...என்று..

அதை தான் இங்கே குறிப்பிட்டேன்..

மனது புண்பட்டால் மன்னிக்கவும்..

கலைஞரிடம் உள்ள குறைகளை சுட்டி காட்டுவது போல தான் நானும் சுட்டி காட்டினேன்..

தி.மு.க..
தமிழர்களின்...
இலங்கை தமிழர்களின்...
உலக தமிழர்களின் ஆணிவேர்....
உண்மை.. அது தமிழர்களின் கட்சி..
அதனால் தமிழர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.. ( தமிழ் நாடு தனி நாடாக இருந்திருப்பின் நீங்கள் கேட்கவே வேண்டாம்)
வாஸ்தவம்.. அந்த அதிகம் தி.மு.கவால் தமிழ்னாடு மற்றும் இந்திய எல்லைக்குள் நடக்கின்றது...
ஆனால் உலக அரங்கில் போராடுகின்றது.. எல்லோரையும் போல..
ஆனால் அந்த ஆணி வேருக்கு தண்ணியை கூட உற்றாமலே அதை பிடுங்கும் முயற்சியில் இருந்து விட்டு தற்போது தமிழர்கள் என்ற போர்வையில் சொல்வதை வேடிக்கை...

மரத்தை வெட்டினாலும்.. தமிழர்களின் ஆணி வேரை பிடுங்காதீர் தமிழர்களே.. அது என்றைக்கும் துளிர் விடும் நமகாக...

கலைஞர் தமிழ் நாட்டுக்கு தேவையான முதலீட்டுக்களை பெற்று வளர்ச்சி பாதைகளில் இட்டுள்ளார்..

அதை விட்டு விட்டு.. இலங்கை தமிழர் பிரச்சினையில்.. என்று அவரை மட்டும் குற்றம் சொல்லி ஓட்டுக்களை மாற்றி அளித்தால் ..??
அதை விட மிக பெரிய முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை...
நாளை கலைஞரை ஒன்றும் கேட்க முடியாது..
இன்றும் கலைஞர் அரசு இருந்ததால் தால்.. விடுதலை புலிகளின் கொடி ஆங்கங்கே தைரியமாக பறக்கிறது.. தமிழகத்தில்..
முத்துகுமாருக்கும் அதை தொடர்ந்தவர்களுக்கும்.. புலி கொடிகள் போர்த்தபட்டன..

ஆனால்.. அங்கே.. 30 நாட்களுக்கு முன்னர்.. ஈழம் என்று சொன்னதற்க்கே பொறிந்து தள்ளி.. அப்படி ஒரு நாடே இல்லை என்றும்.. இலங்கை என்று சொல்லுங்கள் என்று பத்திரிகையாளர்களை திட்டிய ஜெ வை ஈழ தமிழர்கள் நம்பினால்..??
விளைவு...???

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

இன்பா
12-05-2009, 04:27 AM
நண்பர் உதயசூரியரே...!

குறைகளை சூட்டிக்காட்டுவது எனக்கும் பிடித்த செயல் என்று நினைக்கிறீர்களா?,

சரி விடுங்கள், குறைகள் எல்லாரிடத்திலுமே இருக்கிறது.

யாரிடம் அதிக குறைகள் என்று போட்டியே நடத்தலாம் அந்த அளவுக்கு அனைவரிடத்திலுமே குறைகள் இருக்கின்றன. இன்னும் அரசியல்வாதிகள் என்றால் சொல்லவே தேவையில்லை.

ஈழத்தமிழர்கள் விசயத்தில் ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறாய் என்று பலர் என்னிடம் சொல்லியதுண்டு எச்சரித்ததும் உண்டு. நீங்கள் சொல்வது போல தமிழர்களின் ஆணிவேர் கலைஞராக இருப்பின் எனக்கும் சந்தோசமே.

கடந்த சில நாட்களாக என் பதிவுகளால் பலருக்கு உடன்பாடு இல்லை என்பதையும் நான் அறிவேன். ஆனால் நான் கேட்கும் கேள்விகள் பொய்யென்றாகிடாது. குறைகள் சொன்னால் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை தகுந்த பதில் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைப் போல நீ மட்டும் யோக்கியமா என்று கேட்பது சரியல்ல. மற்றும் குறைகள் மட்டும் சொல்கிறாயே என்று குறை சொல்வதும் சரியல்ல. இப்படித்தான் கலைஞரும் எதிர் கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

இந்த தேர்தலில் எப்படியும் திமுக மற்றும் காங். கூட்டணி தான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கத்தான் போகிறது.

பொறுமையின் சிகரமும், செயல் வீரருமான கருணாநிதி அவர்கள் என்ன தன் செய்துவிடப்போகிரார் என்பதை பார்கத்தானே போகிறோம்.

நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், இப்படித்தான் நடக்கும்,

புலிகளுடன் சேர்த்து பல அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள், எஞ்சியவர்களுக்கு மறுவாழ்வு என்ற பெயரில் அடிமைகளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்று தலைவர் இருக்கப் போவதில்லை. கைதிகளைப் போல நடத்தப் படுவார்கள்.

இதை அரசியல்வாதிகள், "இலங்கை தமிழருக்கு நிம்மதியான அமைதியான வாழ்கை நான் தான் ஏற்படுத்திக் கொடுத்தேன்" என்று தோள்தட்டிக்கொள்வார்கள்.

சிவா.ஜி
12-05-2009, 04:44 AM
அடக்கடவுளே....தி.மு.க காரர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உதயசூரியன் அவர்களே...நாங்களும் தமிழர்கள்தான். தனக்குத்தானே உலகத்தமிழினத்தலைவன் என்று கூறிக்கொள்ளும் கருணாநிதியைப் போன்ற சந்தர்ப்பவாத, சுயநல அரசியல்வாதியை நாங்கள் ஒருபோதும் தமிழனாகவே கருதவில்லை.

தன் குடும்பத்துக்காக மட்டுமே எல்லா அரசியலையும் நடத்தும் பச்சோந்தி என்றுமே ஈழத்தமிழர்களைப் பற்றி நினைத்ததில்லை என்பதுதான் நிஜம். பூனைக் கண்ணை மூடிக்கொண்டால்...உலகம் இருட்டாகிவிடாது. தி.மு.க காரர்கள் சொல்வதால் மட்டுமே கருணாநிதி தமிழினத் தலைவராகிவிட மாட்டார்.

விழித்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் இந்தக்குடும்பம் எஞ்சியிருக்கும் அனைத்து தமிழர்களின் கோவணத்தையும் உருவிவிடுவார்கள்.

aren
12-05-2009, 05:12 AM
நண்பர்களே, இந்தப் பதிவில் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்ளாதீர்கள்.

நாம் அனைவரும் நண்பர்கள் என்பதை மறந்திடவேண்டாம்.

விவாதம் விவாதமாக இருக்கட்டும்.

நேசம்
12-05-2009, 05:38 AM
உயிருக்கு தினந்தோறும் போராடி கொண்டு இருக்கிறான் ஈழசகோதரன்.ஆனால் அதற்காக குரல் கொடுக்கும் விசயத்தில் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லமால் போனது போல் அதன் தாக்கத்தை நம்மிடம் கொண்டு வந்து விட்டனர்.

அமரன்
12-05-2009, 07:59 AM
என்னங்க உதயசூரியன். திரியை அரசியல் மேடையாகத் திரிச்சிட்டீங்க.. ஓவியன் சொன்னது என்னமோ.. நீங்கள் சொன்னது என்னென்னெமோ. விடயத்தை மட்டும் பேசுவோம்.

மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய மிக வலுவான சக்தி கலைஞர். அவர் உண்மையான உணர்வுடன் இருந்த உண்ணாவிரத்தை கேலிக்கூத்தாக்கியது கொழும்பு (டெல்லியும்?). இந்த நிலைப்பாடுதான் என்னது.

ஈழத்தமிழருக்கு ஓரளவு நிம்மதியைப் பெற்றுக் கொடுத்தோம் என்று கலைஞரும், கலைஞர் டிவியும், கழகக் கண்மணிகளும் திரும்பதி திரும்ப சொல்வதால், அதிலும் நிலமை எப்படி உள்ளது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின்பும் கூறுவதுதான் கலைஞரை இந்த விடயத்தில் சந்தேகிக்கத் தூண்டுகிறது.

அடுத்து நீங்கள் வைத்த ஈழத்தமிழர், சகோதர யுத்தம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு பதில்வாதங்களுமுண்டு. பதில் குற்றச்சாட்டுகளும் உண்டு. அதெல்லாம் பேசுவது நல்லதல்ல. விடயம் மட்டும் பேசுவோமே..

aren
12-05-2009, 08:38 AM
இலங்கை தமிழர்கள் இந்தியா அவர்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தரும் என்று நினைத்தால் அதைவிட தவறான செயல் எதுவும் இருக்கமுடியாது.

அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய யூனியனோ பெற்றுத்தந்தாலும் தரலாமே ஒழிய இந்தியா இதற்கு உடன்படாது என்பதே என்னுடைய கருத்து.

இலங்கைப் பிரச்சனையை ஒப்பிடும்பொழுது இந்தியாவிற்கு காஷ்மீர் பிரச்சனையும் அஸ்ஸாம் பிரச்சனையும் கண்முன் வரும். அப்படி இந்தியா இலங்கையிடம் சண்டையிட்டு தமிழ் ஈழம் பெற்றுத்தந்தால் காஷ்மீரர்களும் அஸ்ஸாமியர்களும் இதே கேள்வியை இந்தியாவிடம் எழுப்புவார்கள். அதற்கு இந்தியா உடன்படாத நிலையில் இந்தியா இப்பொழுது இருக்கிறது.

ஆகையால் இந்தியா வெறும் வார்த்தையில் மட்டுமே தனி ஈழம் பற்றி பேசுமேயொழிய நிச்சயம் இந்த விஷயத்தில் இறங்காது என்பது என்னுடைய கணிப்பு.

ஆகையால் தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்று கருணாநிதி சொன்னாலும் ஜெயலலிதா சொன்னாலும் இது வெறும் ஏட்டில் எழுதிய சுரைக்காய் மாதிரிதான். இது வெறும் ஓட்டிற்காக பாடும் பாட்டு, இதில் சுருதியை யாரும் எதிர்பார்க்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.

பாவம் இன்னும் எத்தனை வருடங்கள் நம் இலங்கை தமிழர்கள் தமிழ்நாடும் இந்தியாவும் தமக்கு உதவும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ, தெரியவில்லை.

என்னுடைய கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
12-05-2009, 09:43 AM
ஆரென் அண்ணா.

உங்கள் கருத்து வருத்தம் தரும் என்று எண்ணவில்லை.

துன்பத்தில் மூழ்க்கிட்டு இருப்போருக்கு சிறு துரும்பே நம்பிக்கை தரும் என்ற எண்ணத்தில்தான் இதை இங்கே பகிர்ந்தேன். ஆனால் அதுவே வினையாகி விட்டது போல் தோன்றுகிறது.

இன்பா
12-05-2009, 11:10 AM
இல்லை தவறான மேற்கோள்,

அப்படியே நீங்கள் சொல்வது வாத்தத்திற்காக எடுத்துக் கொண்டால்,

இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவது சாந்தியப்படாது எனெல் பரவாயில்லை, இந்திய ராணுவத்தை/தளவாடங்களை அனுப்பி புலிகளை ஒடுக்குவதை கைவிட்டாலே பெரும்பாலும் பிரச்சனைகள் தீருமே?

இந்தியாவின் துணை இல்லாமல் இருந்திருந்தால் வாலாட்டியிருப்பானா சிங்களவன், வாலை சுருட்டி மூலையில் ஒடுங்கியிருப்பானே?

ஆகாவே காங். வாக்களிக்காமல் இருங்கள், தனி ஈழமும் வேண்டம் புடலங்காயும் வேண்டம் இருப்பவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும். ஒரு உயிருக்கு ஆபத்து என்றால் துடிக்க வேண்டும். ஒரு இனமே அழிந்துக்கொண்டிருக்கிறது தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள... இதை தயவு செய்து எந்த வகையிலும் நியாயப்படித்தி பேசாதீர்கள்...

aren
12-05-2009, 11:14 AM
புலி அவர்களே

இங்கே கலைஞர் அவர்களும் ஜெ அவர்களும் தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்றார்கள். அதுதான் இந்த பதிப்பின் தலைப்பும். அதற்காகவே நான் என்னுடைய பதிப்பை இங்கே பதித்தேன்.

இன்பா
12-05-2009, 11:25 AM
புலி அவர்களே

இங்கே கலைஞர் அவர்களும் ஜெ அவர்களும் தனி ஈழம் பெற்றுத்தருவோம் என்றார்கள். அதுதான் இந்த பதிப்பின் தலைப்பும். அதற்காகவே நான் என்னுடைய பதிப்பை இங்கே பதித்தேன்.

புரிகிறது ஆரென் அண்ணா,

ஆதனால் தான் சொல்கிரேன் இப்போது உடனடி தேவை தனி ஈழம் அல்ல, காயப்பட்ட உடல், ரணமான மனங்களுக்கு கொஞ்சம் அமைதி அதை பெற்று தரலாமே? போர் நிறுத்தத்துக்கு உண்மையான உணர்வுடன் கூடிய செயல். நிற்பந்திக்கலாமே சோனியாவிடம். இந்திய உதவிகளை நிறுத்த சொல்லலாமே. ரா உதவிகளை நிறுத்த சொல்லலாமே? செய்ய மனமிருந்தால் எத்தனையோ செய்திருக்கலாம். நடகமாடுகிறார்.

ஜெ. வந்தால் தனி ஈழம் பெற்றுத்தரமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும் அட்லீஸ்ட் போர் நிறுத்தத்துக்காகவாவது குரல் கொடுப்பார்... நிர்பந்திப்பார்...

ஆனால் கலைஞரோ என்ன செய்வது எப்படி சாய்வது என்று தவித்துக்கொண்டு தான் இருப்பார்... ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.. அப்படியும் எடுத்தால் அவரை சோனியா நன்றாக ஏமாற்றி ஏப்ரல் ஃபூல் என்று கைகொட்டி சிரிப்பார்...

aren
13-05-2009, 02:06 AM
சரி புலி அவர்களே. உங்கள் விருப்பப்படி ஜெ அவர்கள் வந்து போரை நிறுத்தட்டும்.

உதயா
13-05-2009, 05:26 AM
திரி அரசியல் பக்கம் சென்று விட்டது. ஈழத்தமிழர்கள் பாடு எப்போதும் போல் பெரும் பாடுதான்.

அண்ணன் ஆரென் சரியாக சொல்லி இருக்கிறார்கள். ஜெ யாக இருந்தாலும், மு.க வாக இருந்தாலும் பேச்சளவில் மட்டுமே தனி ஈழம். சீமான், சேரன் சொன்னதை போல் நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். போடும் ஓட்டை நிருத்து, நீ போடும் சப்த்ததை உயர்த்து. அது போதும். தனி ஈழம் பிறக்க அது தானே வழி வகுக்கும்.

உதயசூரியன் கட்சி என்று வந்துவிட்டால் அவர் அதை மட்டுமே பிரிச்சு மேய்கிறார். உதயசூரியன் நாம் விவாதிப்பது கட்சி இல்லை நண்பா நம் உறவுகளின் உயிர் பற்றி. இப்படி சொல்வதால் ஜெ க்கு நான் அபிமானி என்று நினைக்கவேண்டாம். எனக்கு இந்த அரசியல் சாக்கடையில் மூழ்க விருப்பம் இல்லை.

எவ்வளவோ காலமாக இந்த பிரச்சனை நடந்து கொண்டு தானே இருக்கிறது. ஆளும் கட்சிகளும், முன்பே ஆட்சி நடத்திய கட்சிகளும் ஏன் இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்கவில்லை? இப்போ ஓட்டு வேண்டும் இருவருக்குமே... இல்லை இல்லை மூவருக்குமே. அதனே...?

இந்த அரசியல் விளையாட்டை அவர்கள் உயிரில் விளையாடாதீர்கள்.

இன்பா
13-05-2009, 06:10 AM
சரி புலி அவர்களே. உங்கள் விருப்பப்படி ஜெ அவர்கள் வந்து போரை நிறுத்தட்டும்.

காங். ஒழிந்தாலே போதும்...!!!!!!!!!
சோனியா காந்தி(?), (கோட்சேவை மன்னியுங்கள் என்றவர் அவர், அவர் பெயரைப் போய் இந்த?????? இதை விட கேவலம் உண்டோ???????) ஒழிந்தாலே போதும். தானாக எல்லாம் நடக்கும்....

ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்.... ஜெவுக்கு ஆதரவு என்பதை விட காங் வரக்கூடாது.. அது தான் ஓவ்வோர் தமிழனின்(உண்மை தமிழனின்) ஆவா....