PDA

View Full Version : சகோதரனே...!!!

சிவா.ஜி
06-05-2009, 11:42 AM
சகோதரனே...............

உன்னை இவ்வாறழைக்கவும்
எங்களால் இயலும்...
உன் குண்டுகள் துளைத்தவர்களும்,
வெடிகளால் சிதைந்தவர்களும்
ஏன் இறக்கிறோமென அறியாமலேதான்
இன்னுயிர் இழந்தார்கள்..!!

நீ கூட அப்படித்தான்....
ஏன் கொல்கிறோமென அறியாமலேதான்
அழிக்கிறாய்...

மதமும், மண்ணும்,
இனமும், பணமும்,...என
அநேகக் காரணங்களால்
ஆயுதமேந்தினாய்...

பிஞ்சென்றும், பிள்ளையென்றும்,
பெண்ணென்றும், ஆணென்றும்
ஏன்..சக மனிதனென்றும் கூட
பார்க்காமல் உயிரருந்தினாய்

உன்னை ஆயுதமேந்தத்
தூண்டிய காரணிகளைவிட
மகத்தானதான மனிதம் ஏந்த,
மறந்துவிட்டாய்...

துப்பாக்கியைத் தூக்கியெறி...
தீவிரவாதத்தை தீயிலெறி.....
திரும்பி வா...திருந்தி வா...
மனிதனாய் மாறி வா.....

சகோதரனாய் எங்களுடனிரு!!

அமரன்
07-05-2009, 09:49 AM
சமகாலப் பசிக்கு சத்தான ஆ'காரம். சகோதரனே என்ற விளிப்பு நான் விரும்பும் விழிப்பு.

ஒரு விடயத்தில் அதீதமாக வைக்கும் அதீதப் பற்றுத்தான் என்னைப் பொறுத்தமட்டில் தீவிரவாதம். அந்தப் பற்றுச் செலுத்தும் பாதைதான் சிக்கலானது. தவறான பாதையில் சென்றவனை சரியான தடத்துக்கு திருப்பும் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் அன்பு. அதனைக்காட்டி அவனை அணைக்கும் உங்கள் சிந்தனை எனக்குப் பிடித்திருக்கிறது சிவா.

மற்ற ஆயுதம் எல்லாம் தீவிரவாதிகளை அழிக்க இந்த ஆயுதம் மட்டும்தான் தீவிரவாதத்தை அழிக்கும். உடனடியாக அல்லாவிட்டாலும் நின்று வெல்லும் பண்பு இந்த ஆயுதத்துக்'குண்டு'. இதன் மேல் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.

தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அனைத்தையும் உருவாக்கியது சுயலாபம் கொண்ட அமைப்புகள் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

நேசம்
07-05-2009, 12:27 PM
உங்களது ஆதங்கம் புரிகிறது அண்ணா.அன்பால் எதையும் வெல்லலாம்.ஆனால் ஒரு திவிரவாதி உருவாக காரணமாக வேர்களை முற்றிலும் அழித்து விட்டால் அன்பால் உலகை ஆளலாம்.அன்பின் வெளிப்பாட்டை நம்மிடமிருந்து ஆரம்பிக்கலாம்

சிவா.ஜி
07-05-2009, 12:28 PM
சமகாலப் பசிக்கு சத்தான ஆ'காரம். சகோதரனே என்ற விளிப்பு நான் விரும்பும் விழிப்பு.

ஒரு விடயத்தில் அதீதமாக வைக்கும் அதீதப் பற்றுத்தான் என்னைப் பொறுத்தமட்டில் தீவிரவாதம். அந்தப் பற்றுச் செலுத்தும் பாதைதான் சிக்கலானது. தவறான பாதையில் சென்றவனை சரியான தடத்துக்கு திருப்பும் மிகச் சக்திவாய்ந்த ஆயுதம் அன்பு. அதனைக்காட்டி அவனை அணைக்கும் உங்கள் சிந்தனை எனக்குப் பிடித்திருக்கிறது சிவா.

மற்ற ஆயுதம் எல்லாம் தீவிரவாதிகளை அழிக்க இந்த ஆயுதம் மட்டும்தான் தீவிரவாதத்தை அழிக்கும். உடனடியாக அல்லாவிட்டாலும் நின்று வெல்லும் பண்பு இந்த ஆயுதத்துக்'குண்டு'. இதன் மேல் எனக்கு ஆழமான நம்பிக்கை உண்டு.
தீவிரவாதிகள் என்று சொல்லப்படும் அனைத்தையும் உருவாக்கியது சுயலாபம் கொண்ட அமைப்புகள் என்பதும் என் அசைக்கமுடியாத நம்பிக்கை.

அற்புதமான வார்த்தைகள் அமரன். கண்டிப்பாக சுயலாபம் கொண்ட அமைப்புகளால்தான் தீவிரவாதம் வளர்க்கப்படுகிறது. எனவே தீவிர வாதியை அழிப்பதைவிட தீவிரவாதத்தை அழிக்க வேண்டும்.

சில சமயங்களில் கவிதையைவிட பின்னூட்டம் பிரமாதமாக இருப்பது நம் மன்றத்தில் மட்டுமே காணக்கிடைக்கும். அதைத்தான் உங்கள் பின்னூட்டத்தில் காண்கிறேன். நன்றி பாஸ்.

ரங்கராஜன்
07-05-2009, 12:45 PM
வித்தியாசமான பார்வை சிவா அண்ணா, உண்மையில் இப்படி அழைக்க முடியுமா என்று தெரியவில்லை, இறந்த பல சொந்தங்கள் கண் முன்னே வந்து போவதாள், அவர்களை சகோதரனே என்று அழைக்க முடியுமா????? முடியும், இன்னும் உயிருடன் இருக்கும் நம் சொந்தங்கள் காப்பாற்ற படுவார்கள் என்ற பட்சத்தில் அவர்களை, சகோதரனாக மன்னித்து ஏற்றுக் கொள்ள உங்களை போல நானும் தயார்.............. பேச்சினால் வராத பிரச்சனையே கிடையாது, அதே போல பேசினால் தீராத பிரச்சனையும் கிடையாது.

இப்பொழுது உலக அளவில் சண்டையிட்டுக் கொள்ளும், இருதுருவமாக இருக்கும் பலரின் நிலை இதுதான். அவர்களின் சண்டைகள் எதாவது ஒரு சின்ன கருத்து வேறுபாடுடன் ஆரம்பித்து இருக்கும், ஆனால் அது வளர்ந்து பலர் கை மாறி இப்பொழுது பல உயிர்களை பலிவாங்கி இருக்கும்..........

சார்லி சாப்பிளின் இந்த வாசகம் எனக்கு மிகவும் பிடித்தது “உலகத்தையே காதல் செய்யுங்கள்”

நல்ல கவிதை சிவா அண்ணா வாழ்த்துக்கள்

செல்வா
07-05-2009, 01:24 PM
கோரத்துவம் மறைய சகோதரத்துவம் விதைக்கும் கவிதை....

இன்னொரு குரங்கைக் கொல்லாதே என்று சகக் குரங்குக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை..

இன்னொரு புலியைக் கொல்லாதே என்று சகப்புலிக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை..

ஏனென்றால் தன்னினத்தை அழிப்பதை அவைகள் என்றுமே செய்வதில்லை...

ஆனால் மனிதனில் மட்டும்.... இத்தனை வன்மம் குரோதம்

இவைதீர விதைக்க வேண்டியதைச் சரியாக விதைக்க வந்திருக்கும் க விதை.

கவிதையில் இன்னும் ஈரம் தெறித்திருக்கலாமோ...?
அறிவுரை பாணி அகற்றி..
மனவாழத்தைத் தொடவைக்கலாமோ சிறிது மாற்றி?

வாழ்த்துக்கள் அண்ணா....

அமரன்
07-05-2009, 02:24 PM
கவிதையில் இன்னும் ஈரம் தெறித்திருக்கலாமோ...?
அறிவுரை பாணி அகற்றி..
மனவாழத்தைத் தொடவைக்கலாமோ சிறிது மாற்றி? ....

வாழ்த்துக்கள் அண்ணா....

அண்ணன் மீதிருக்கும் உரிமையிலதானே இதைச் சொல்லி இருக்கே செல்வா.