PDA

View Full Version : டக்(ள)ஸுடன் சென்னையுலா - II



மதி
04-05-2009, 09:41 AM
உழைப்பாளர்கள் தினம். உழைப்பவர்க்கு என இருக்கும் தினம். அதைப்பற்றி உனக்கேன் கவலை. உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்பது நன்றாகவே தெரிகிறது. தப்பு தான். ஆனாலும் என்னையும் மனிதனாய் உழைப்பாளியாய் நம்பும் என் நிறுவனம் விடுமுறை தெரிவித்து சந்தோஷப்படுத்தியது. மூன்று நாள் விடுமுறை. என்ன செய்யலாம் என்று ஏகமாய் குழம்பவில்லை. காரணம் கிருஷ்ணகுமார். சுருக்கமாய் கி.கு. கல்லூரி சிநேகிதன். விரைவில் திருமணம். ஏற்பாட்டோடு ஏற்பாடா எங்களை மாதிரி வாலிபர்களுக்கு சட்டைத்துணி எடுத்திருந்தான். அதை வாங்கிப் போக வா என்றான். பயணப்பட்டேன் மூன்று நாள் பயணமாய். எண்ணற்ற எதிர்பார்ப்புடன்.

இறங்கியதும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன். கொஞ்சம் வித்தியாசமாய் தான் இருந்தது. முதுகில் பரவலாய் பூத்திருந்த வியர்வை. சற்று நேரத்திலேயே கசகசக்க ஆரம்பித்தது. முகத்தில் முத்து முத்தாய் தோன்றிய வியர்வைத் துளிகள். கொஞ்ச நேரத்துலேயே குளித்தது போல் கொட்ட ஆரம்பித்துவிட்டது. உழைப்பாளர்களுக்குத் தான் வியர்க்குமாம். அப்போ உழைப்பாளிகள் தினத்தன்று நானும் உழைப்பாளியானேன்.

எதையும் திட்டமிடாமல் போனதால் என்ன செய்வதென்று தெரியவில்லை. கி.கு வீட்டிற்கு சென்று இளைப்பாறிவிட்டு என் தம்பிக்கு தொலைப்பேசி வர சொன்னேன். அவன் பெரியம்மா பையனுடன் வந்தான். பயணம் களை கட்ட ஆரம்பித்தது. பயணம் பற்றி தலைக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன். கூப்பிடுவதாய் சொன்னார். தக்ஸிடமும் சொல்லியிருந்தேன். தாமரை புண்ணியத்தில் மலருக்கும் தெரிந்துவிட்டிருந்தது. பென்ஸ் வெட்டியாய் இருந்தால் கூப்பிடு. மொக்கைப் போடலாமென்றார். அன்று முழுதும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று வருவதிலேயே கழிந்தது. கி.கு வீட்டிற்கு வந்ததும் குளியல் போட்டு நல்ல உறக்கம்.

அடுத்த நாள் காலையிலேயே டக்ஸை கூப்பிட்டேன்.

“இன்னாப்பா.. வந்து சேந்துட்டியா..?” செல்லமாய் டக்ஸின் குரல்.

“ஆமா. எங்க இருக்கீங்க? இன்னிக்கு பிஸியா.. இல்லே பார்க்கலாமா?”

“ம்.. கொஞ்சம் வேலை மதி. மத்தியானத்துக்கு அப்புறம் பார்க்கலாமா?”

“ஓ.. கண்டிப்பா. சாயந்திரம் கொஞ்சம் பாரிஸுக்கு போகணும். போலாமா?”

ஏதோ கிஃப்ட் வாங்கவேண்டுமென்று கி.கு சொல்லியிருந்தான். அப்படியே டக்ஸையும் தள்ளிட்டு போகலாம் என்று எண்ணம்.

“ஓக்கே.. கரெக்டா வந்துடறேன். எங்க தங்கியிருக்கீங்க? வந்துடறேன்.”

“வேளச்சேரி. இங்க வந்தா ட்ரெயின்ல போலாம்”

“சரி. நாலு மணிக்கு கரெக்டா வந்துடறேன்”

போனை வைத்த ஐந்தாவது நிமிஷத்தில் தலையிடமிருந்து போன்.

“என்னப்பா வந்து சேர்ந்துட்டியா…?”

“ஓ.. நேத்திக்கு காலையிலேயே. அப்புறம் நீங்க என்ன பிஸியா?”

“ஆமாம்ப்பா கொஞ்சம். இன்னிக்கு ஆபிஸ் போகணும். வேலை இருக்கு. அப்புறம் சாயந்திரம் இருந்தா கூப்பிடறேன்.”

“ஹிஹி. என்ன தலை சிட்டிங்கா..?”

“அடப்பாவி.. வீட்ல பின்னி எடுத்திடுவாங்க. நான் நல்ல பிள்ளை”

“எங்ககிட்டேயே பொய் சொல்றீங்க.. சரி இன்னிக்கு சி.எஸ்.கே மாட்ச் இருக்கே.. மறந்துட்டீங்களா?”

“மறக்கல.. என்னாத்த விளையாடறாங்க. போர் அடிக்குது. அதுக்கு உங்களையாச்சும் பாத்து பேசலாம்..”

தலைக்கு தலை வணங்கினேன். ச்சே.. தலை எவ்ளோ நல்லவர். அவர்கிட்ட போய் சிட்டிங்..சீட்டிங்னு தப்பா பேசிட்டோமே. ஏகத்துக்கும் வருத்தப்பட்டேன்.

“ஓக்கேப்பா. சாயந்தரம் ஃப்ரீயானா போன் பண்றேன். பாக்கலாம்”

“ஓக்கே தலை.”

மாலை நாலு மணி.

வருவதாய் சொன்ன டக்ஸ் இன்னும் வந்து சேரவில்லை.

(அந்த நேரத்தில் டக்ஸ் என்ன செய்தார், ஏன் தாமதாய் வர நேர்ந்தது, அப்புறம் என்னாச்சு..விரைவில்)

அன்புரசிகன்
04-05-2009, 09:51 AM
அட அட அட... இது எல்லாம் உண்மையா இல்ல உடான்ஸா...??? (சிறுகதை பகுதியில இருக்கே.................)

ஆனாலும் பாருங்க. அவனவன் கப்ல கடா தான் வெட்டுவானுங்க நீங்க பெரிய யானையையே போட்டுத்தள்ளீட்டீங்க... :lachen001:

ஏற்பாட்டோடு ஏற்பாடா எங்களை மாதிரி வாலிபர்களுக்கு சட்டைத்துணி எடுத்திருந்தான்.

தொடருங்கள்...

சிவா.ஜி
04-05-2009, 09:55 AM
அடி சக்கை அடுத்த சந்திப்பா?...நடத்துங்க நடத்துங்க. தக்ஸ் இப்பல்லாம் நல்ல பிள்ளையாயிட்டான்...பொறுப்பா வேலை செய்யுது புள்ளை பாவம். அதான் வர லேட்டாகியிருக்கும்.
அப்புறம் பென்ஸோட மொக்கை போட்டீங்களா?, தலையைச் சந்திச்சீங்களா? மல்ரு இன்னா சொல்லுச்சி...? எல்லாம் சொல்லுங்க.

மதி
04-05-2009, 10:00 AM
ரசிகரே...
சில இடத்துல நடந்ததை அப்படியே சொல்ல முடியாதுல்ல. அதான் கதை பகுதியில போட்டேன்.. :)

சிவாண்ணா..
கொஞ்சம் பொறுத்திருங்க.. மீதி விரைவில்.

aren
04-05-2009, 10:08 AM
சந்திப்பெல்லாம் தடபுடலாக நடக்கிறதே. ஹூம் நமக்குத்தான் இப்படி எதுவுமே நடக்கமாட்டேங்கிறது.

ஜூலை முதல் வாரத்தில் சென்னை வருகிறேன். யாராவது அங்கே இருந்தால் சந்திக்கலாம்.

தாமரை
04-05-2009, 10:12 AM
என்னாது, டக்ளஸூம் டாக் லெஸ்ஸூம் மீட் பண்ணினாங்களா?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=363930#post363930

அமரன்
04-05-2009, 11:01 AM
டக்ளசுடன் சென்னையுலா என்றிருந்ததைப் பார்த்ததும் எப்பேலிருந்து மதிக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் ஏற்பட்டதென்று ஆடிப்போயிட்டேன்.

சரி...சரி.. சீக்ரமாப் பிலிம் காட்டுங்க மதி. சிப்ஸ், பொப்கோர்ன், கோலா எல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்.

ஆதவா
04-05-2009, 11:06 AM
ம்ம்ம்ம்!~!!!!

மதி
04-05-2009, 11:45 AM
மணி நாலரை ஆகியிருந்தது. பொறுமையாக நிதானமாக மேம்பால நிழலில் வண்டியோட்டிக் கொண்டே டக்ஸ் வருவதை வேளச்சேரி ரயில்நிலையத்திலிருந்தே பார்க்க முடிந்தது. கண்களில் கண்ணாடி. Fast track. கோடு கோடாய் டி-ஷர்ட். வண்டியை ஸ்டாண்டில் வைத்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க வந்தார்.

“ஹாய்.. மதி.. எப்படி யிருக்க?”

“நல்லாயிருக்கேன் டக்ஸ்.. அப்புறம் ஆள் மெலிஞ்சிட்டாப்ல இருக்கு”

“இந்த நக்கல் தானே வேணாங்கறது.. ஆனாலும் குசும்பு தான் போ”

“ம்ம்.. அப்புறம். தலைக்கு போன் பண்ணினேன். கூப்பிடுவதாய் சொன்னார். இப்போ ஃபோர்ட் போய் அங்க கொஞ்சம் கிஃப்ட் வாங்கணும்.. ஓ. சாரி… இது என் தம்பி, குமார். பெரியம்மா பையன் கணேஷ். ஃப்ரண்ட் கி.கு. சுருக்கமா கிருஷ்ணகுமார்..”

“ஐய்யோ.. உன் ராவடி தாங்கல.. ஆமா என்ன பாஸ் இவ்ளோ நீளமா தலைமுடி வளர்த்திருக்கீங்க?”

நீண்டு வளர்ந்திருந்த குமாரின் முடியைப் பார்த்ததும் டக்ஸுக்கு ஆச்சர்யம். குமார் வெறுமனே புன்னகைத்து வைத்தான். கேட்டுக் கேட்டு புளிச்சுப் போன கேள்வியாயிருக்கும் போல.

எப்போதும் போல அதே உற்சாக குவியலாய் என்னிடம்,

“அப்புறம் பாஸ்.. வேலையெல்லாம் எப்படி போகுது..? இந்த ரிஸஷன்.. அது இதெல்லாம்..?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஏதோ வேலையே இல்லாம வாழ்க்கை ஓடுது..”

“சரி.. சரி.. அப்புறம் என்ன ப்ளான்?”

டக்ஸ் சொல்லி முடிக்கவும் ரயில் வந்து நிற்கவும் சரியாயிருந்தது. ஜன்னலோர சீட்டாய் பார்த்து உட்கார்ந்தேன். இன்னமும் வேடிக்கைப் பார்க்க அவ்வளவு ஆர்வம்.

“டக்ஸ். இப்போ போறோம்.. பர்சேஸ் பண்ணிட்டு அப்படியே தலையை கூப்பிட்டு மீட்டறோம். முடிந்தால் மலரையும் கூப்பிடுவோம்.”

“ஓ.. சூப்பர்.. எங்க. அப்போ மீட் பண்ணினோமே ஸ்டேடியத்துல. அங்கேயேவா.? அன்னிக்கு சாப்பிட்ட கீரைவடை செம சூப்பர்.” நாக்கு சப்புக் கொட்டுவது தெரிந்தது. அவரின் மெல்லிய உடலுக்கான இரகசியமும் புரிந்தது.

அப்புறம் வழ வழா பேச்சு.

“தாமரை எப்படி இருக்கார்..? யப்பா.. அவர் கைல மாட்டிக்கிட்டு எல்லோரும் படற பாடு இருக்கே..” சலித்துக்கொண்டார் டக்ஸ்.

வரிசையாக பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர் என கடக்க ஆரம்பித்தது. வேலையை ஆரம்பித்தார் டக்ஸ்.

“மதி, இதோ வருதே. இதான் அஸெண்டாஸ் பில்டிங். இது டைடல் பார்க். இங்க தான் மத்திய கைலாஷ் இருக்கு. நல்ல ஃபேமஸான கோவில். இங்க இறங்கி இந்தப்பக்கம் போனா அடையாறு. இந்தப்பக்கம் போனா சைதாப்பேட்டை. இதான் பாஸ் சிட்டி செண்டர். ஃபேமஸான மால். உன்னாலே உன்னாலே படத்துல கூட ஒரு பாட்டு எடுத்தாங்களே.. அது இங்க தான். இதான் பாஸ்.. திருவல்லிக்கேணி. ஏகப்பட்ட பேச்சிலர் மேன்ஷன் இருக்கு. இதான் உங்களுக்குத் தெரியுமே. கிரிக்கட் ஸ்டேடியம். போன தடவை இங்க தானே சந்திச்சோம். அப்புறம்…இது….”

டக்ஸின் ஞாபகசக்தி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பெங்களூரில் மடிவாளா (நல்ல பேர்ல.. இன்னமும் இதே கேள்வியோட தான் அலையறேன்), பிடிஎம், ஜெயநகர்..இப்படி சொற்ப ஏரியாக்களைவிட்டால் எந்த ஏரியாவும் தெரியாது.

ஒருவழியா இறங்கி ப்ராட்வே பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வரிசையா குடிசைகள். ப்ளாட்பார குடிசைகள். ஒரு ஆள் கூட உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சின்ன சின்ன வாசல்

“இங்க இருக்கறவங்க நல்லது கெட்டது.. சந்தோஷம் துக்கம் எல்லாமே இங்க தான். ஒரு தபா வந்தப்போ ஒரு சின்னப் பொண்ணு இறந்து போயிருந்திச்சு. வீட்டுக்கு வெளியே வச்சுக்கிட்டு ஒரு நாலஞ்சு பேர் ஒப்பாரி வச்சுக்கிட்டு இருந்தாங்க.. ரெண்டுவீடு தள்ளி ரெண்டு பொம்பளைங்க வீட்டுக்கு வெளியே உட்கார்ந்துட்டு தலையை விரிச்சுப் போட்டு பேன் பாத்துட்டு இருந்தாங்க. சந்தோஷமும் துக்கமும் அதிகமா பாதிக்கறதில்ல. இவங்களுக்கு எல்லாம் பழகிப் போச்சு.”

இதுவரை நான் அருகில் இருந்து பார்த்திராத ஒரு புது உலகை பக்கத்திலிருந்து உற்று நோக்கினேன். எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். இம்முறை பார்க்கும் பார்வையே வேறு. இவர்கள் வாழ்வே அந்தப் ப்ளாட்பாரத்தில் தான். சற்று நடுத்தர வயதுள்ள ஒரு ஆள் சவரம் செய்து கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் தாண்டி சௌகார்பேட்டையில் நுழைந்தோம். அது சௌகார்பேட்டை என்பது கணேஷின் கண் விரிந்ததிலிருந்தே தெரிந்தது.

“ஏ.. பேசாம இங்கேயே ரூம் எடுத்திடலாம்னு இருக்கேன்.. பாரேன்.. ஒரு தமிழ் பொண்ணுகூட இல்லே..”

ஆங்காங்கே பரவலாய் பரபரப்பாய் நடந்துக் கொண்டிருந்த பெண்களைத் தான் சொன்னான்.

(டக்ஸ் ஏன் தாமதமாய் வந்தார் என்று எனக்கும் இதுவரை தெரியாது. நானும் கேட்கவில்லை)

பாரதி
04-05-2009, 12:57 PM
நண்பர்களுடனான சந்திப்புகள் எப்போதுமே இனிமையானவைதான். இரசிக்கும் வகையில் அதை இங்கு தரும் மதிக்கு நன்றியுடன் கூடிய பாராட்டு.

பென்ஸ்
04-05-2009, 04:27 PM
ஆனாலும் என்னை நீ கூப்பிடவேயில்லையே மதி...:confused::confused::confused:

மதி
04-05-2009, 05:39 PM
ஆனாலும் என்னை நீ கூப்பிடவேயில்லையே மதி...:confused::confused::confused:
உங்களுக்குத் தான் கால் பண்ணினோமே... அது ஒரு தனி கதை

ஆதவா
05-05-2009, 02:52 AM
ஆனாலும் என்னை நீ கூப்பிடவேயில்லையே மதி...:confused::confused::confused:

நண்பர்களை மீட் பண்ணமுடியலேன்னு கவலைப்படாறாப்ல தெரியலையே.... ஏதோ, நம்மாளுங்க போன இடத்தில பொண்ணுங்களப் பார்க்க முடியலைன்னு ஃபீல் பன்றாப்ல இருக்கு!!!!! ம்ம்ம்... என்னவோ நடக்குது!!!

ஆதவா
05-05-2009, 02:54 AM
உங்களுக்குத் தான் கால் பண்ணினோமே... அது ஒரு தனி கதை

அத த்னியா சொல்லிடுங்க.. ஏன்னா கலாய்க்க வசதியா இருக்கும்!! :D