PDA

View Full Version : சிங்கள ராணுவத்திற்கு 80 லாரியில் ஆயுதம்--தமிழக உறவுகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது



தூயவன்
02-05-2009, 02:59 PM
கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு 80 லாரிகளில் ராணுவ தடவாளங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில் 5 லாரிகளை கோவையில் இருந்து அவினாசி செல்லும் வழியில் பெரியார்

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர். பின்னர் அந்த லாரிகளில் இருந்த ராணுவ தடவாளங்களை அடித்துநொறுக்கினர்.



மேலும் சில பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தினர் தடியடி நடத்தி கலைத்தனர். இச்சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி : TSN

கொழும்புக்கு செல்லவிருந்த இந்திய இராணுவ ஆயுத லாரிகளில் 5 லாரிகள் தமிழர்களால் சேதம்

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

நன்றி : தமிழ்வின்

ஓவியன்
02-05-2009, 04:53 PM
தானாடாவிட்டாலும் தன் சதை தானாக ஆடும்...

தூயவன்
02-05-2009, 05:10 PM
தானாடாவிட்டாலும் தன் சதை தானாக ஆடும்...

ஆட வில்லை அடித்து நொருக்கி உள்ளது :D :D

ரங்கராஜன்
02-05-2009, 05:42 PM
ஓ அது கொழும்பு செல்ல இருந்த லாரிகளா?, நான் மாலை சன் செய்திகளில் அந்த செய்தியை பார்த்தேன். அதில் இப்படி வந்து இருந்தது. FLASH NEWS ஆக

முக்கிய செய்திகள்

கோவையில் ராணுவ வாகனங்கள் மீது தி.க. கழகத்தினர் தாக்குதல், ராணுவ வீரர்கள் லாரிகளை விட்டு ஓடினார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து வந்த நீயூஸ்

கலவரத்தில் ஈடுபட்டவர்களை ராணுவ வீரர்கள் அடக்கினார்கள் என்று வந்தது.

நான் நினைத்தேன் தேர்தல் பாதுகாப்புக்கு வந்த ராணுவத்தினரை தான் அடித்து உதைத்தார்கள் என்று. உங்கள் பதிவில் இருந்து தான் தெரிந்தது, அவை கொழும்பு செல்லவிருந்த சரக்குகள் என்று. நன்றி வவ்வால் மனிதனே.

அமரன்
02-05-2009, 09:33 PM
பார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவிக்கவில்லை. எதப்பா நிஜம்????

இன்பா
03-05-2009, 04:13 AM
திகவினரின் அராஜகம்,

80 லாரிகளும் ஆயுதங்கள் இல்லவே இல்லை, அதிலும் ராகெட் லான்சர்களும் இல்லவே இல்லை, அப்படியும் இருந்திருந்தால் அது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டது,

தேர்தல் வன்முறையில் ஈடுபடுவோர்களை ஒடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொண்டுவரப்பட்டது. ஒரு வேளை பிரபாகரன் என்ற கொடிய தீவிரவாதி, தப்பித்து செகந்திரபாத் வந்தால் குண்டுகள் வைத்து தாக்கு தமிழர்களை காப்பதற்க்காக கொண்டுவரப்பட்டது.

வீரர்கள் பயிர்ச்சியின் போது ராகெட் லான்சர்கள் வைத்து விளையாடுவதற்காக கொண்டுவரப்பட்டது.

புனிதமான கட்சியான காங் மீது குற்றம் சுமத்துபவர்களை ஒழிக்க வேண்டும் என்ற கருணை அடிப்படியில் கொண்டுவரப்பட்டது.

இப்படி கொண்டுவரப்பட்ட லாரிகளை அடித்து நொறுக்கியவர்கள் தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவித்தவர்கள், அவர்கள் நாடுகடத்தப் படவேண்டும்.

சோனியா போன்ற நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு பெய்யென பெய்யும் மழை.......

கலைஞர் தவிர அனைத்து தமிழர்களும் தீவிரவாதிகள்...

கலைஞர் நாமம் வாழ்க,
கலைஞர் குடும்பம் வாழ்க,
தளபதி ஸ்டாலின் வாழ்க,
அண்ணன் அழகிரி வாழ்க,
கனி மொழி வாழ்க,
மாறன் குடும்பம் வாழ்க,
அன்பழகன் மட்டும் அடுத்த முதல்வராகமல் இருக்க வேண்டும்,

கலைஞரே துணை...!!!!!!!!!!!!!!!!!!!!!!
அவரன்றி தமிழன் இல்லை...!!!!!!!!!!!
தள்ளாத வயதிலும் தமிழர்களை தாங்கிப்பிடிக்கும் தானைத் தலைவர்.....!!!!!!!!!!!!!

கலைஞர் மற்றும் காங், க்கே ஓட்டு போடுங்கள்....!!!!!!!!!!

ஜேய் ஹிந்த்...!!!!!
தமிழை மட்டும் கேள்விக்குறியாக்கிவிடுங்கள்....!!!!!!!!!!!!!!!!!!

தங்கவேல்
03-05-2009, 05:26 AM
ஆவேசம் வேண்டாம் வரிப்புலி.... உண்மையான போராட்டங்கள் என்றுமே தோற்றதாக சரித்தம் சொல்லவில்லை. உலகையே அச்சுறுத்திய ஹிட்லரின் கதை என்னவாயிற்று ? உலகையே பயமுறுத்தி வந்த பலம் பொருந்திய நாடுகளின் இன்றைய கதை என்ன ? வரலாற்றில் எவ்வளவோ உண்மைச் சம்பவங்கள் பதிந்து கிடக்கின்றன. துரோகிகள் அனைவரும் காலவெள்ளத்தில் துரும்பாக அடித்துச் செல்லப்படுவர் என்பது உண்மை.

ராணுவத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குலைவது இந்தியாவின் ஜன நாயகத்திற்கு நல்லதல்ல என்பது என் கருத்து.

AARUL
03-05-2009, 06:18 AM
முன்பே தெரிந்து இருந்தால் 80 லாரி யும் அட்டித்து பட்டைய கிஇலபி இருப்போம்

praveen
03-05-2009, 06:38 AM
இந்த செய்தியை அப்படியும் எடுத்து கொள்ள முடியவில்லை, இப்படியும் எடுத்து கொள்ள முடியவில்லை

இலங்கை ராணுவத்திற்கு தான் என்பதற்கு ஆதாரம்
1)இதற்கு முன் ரயிலில் பீரங்கி கொண்டு போனது பத்திரிக்கையாளர்களால் பிடிபட்டது
2)ஆமாம் நாங்கள் தான் சப்போர்ட் செய்தோம் என்று டெல்லி அரசியல் வியாதிகள் சொல்வதால்
3)இலங்கை ராணுவத்திற்கு தாம்பரம் விமானப்படை தளத்திலே பயிற்சி கொடுத்தது

வழக்கமான ராணுவ இடப்பெயர்ச்சி தான் என்பதற்கு
1)இலங்கையில் போர் முடிவிற்கு வந்து விட்டதால் மேலும் ஆயுத சப்ளை இருக்காது
2)அப்படி ஆயுதம் கொண்டு போக வேண்டி வந்தால் தமிழ்நாட்டு வழியாகவா கொண்டு செல்வார்கள்
3)தேவையில்லாமல் ராணுவத்தை சந்தேகித்து உள்நோக்கமான பரபரப்பு அரசியல் செயல்

எப்படி இருந்தாலும் தேர்தல் சமயத்தில் இது நிச்சயம் பரபரப்பு கிளப்பும். ஆனால் அமைதியான முறையிலே இந்த தடுப்பை எதிர்நோக்காமல், முழு உண்மை நிலை அறியாமல் ராணுவ தளவாடங்களை உடைத்தது, தீயிட்டது தவறான செயல். இவர்களின் இந்த கண்மூடித்தனமான செயலால் ஆத்திரம் அடைந்த இராணுவத்தினர் நேரடியாக இறங்கி பத்திரிக்கையாளர் போலிஸ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டக்கரார்கள் என அனைவரையும் தாக்கியது கொடுமை.

இந்தியாவில் அமைதிவழியில் அஹிம்சா முறையிலே போராட்டங்கள் தொடர வேண்டும், ஏனென்றால் புலிகள் தலைவர் வே.பிராபாகரன் கூட முன்னர் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ஒயர்லெஸ் செட்களை போலிஸார் கைப்பற்றிய போது உண்ணாநோன்பு தான் இருந்தார், அப்போது பேட்டி எடுத்த கல்கி இதழ் " இதே போல இலங்கையிலும் இல்லாமல் ஆயுத போராட்டம் ஏன்" என்று கேட்டதற்கு, அஹிம்சையை உணர்ந்த இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம், இலங்கை அரசிற்கும் அஹிம்சைக்கும் பல காத தூரம் என்று கொடுத்த பேட்டியை படித்தது நியாபகம் வருகிறது.

தீபன்
03-05-2009, 06:49 AM
1)இலங்கையில் போர் முடிவிற்கு வந்து விட்டதால் மேலும் ஆயுத சப்ளை இருக்காது
:lachen001::lachen001::lachen001::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_b:

தூயவன்
03-05-2009, 10:56 AM
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502001.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502002.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502003.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502007.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502004.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502005.jpg
http://www.puthinam.com/d/p/2009/may/may/kovai_20090502006.jpg

jk12
03-05-2009, 02:32 PM
அந்த லாரிகளில் வந்த பொருட்க்கள் இலங்கைக்கு அனுப்பபட வந்ததா என்பது சந்தெகமே. ஏனேனில் பொருட்கள் கலவையாக இருந்துளதுபோல்தான் தோன்றுகிறது (குடாராம், சில துப்பாக்கிகள், சில லாஞ்சர்கள், என கலந்து உள்ளது. கப்பலில் ஏற்றுவதற்கேனில் அவைகள் பிரிக்கபட்டு பெட்டிகளில் தனி தனியாக் அடுக்கிவைக்கபட்டிருக்கும்)
எது உண்மையோ நாம் அறியோம்...

ஆனால் அந்த் லாரிகள் வருவது தெரிந்து பத்திரிக்கையாளர்கள் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர்... ஆனால் போலிஸ் இல்லை...
நடப்பவை எல்லாம் வினோதமாக உள்ளது.

நம் தமிழ் மக்கள் போர் பூமியிலும் அகதிகள் முகாம்களிலும் படும் வேதனைகளை பார்த்து கனத்து போன மனது, நம் ராணுவத்தை அடிப்பது போன்ற நிகழ்வுகள் மேலும் மனதிற்க்கு வருத்தத்தை அளிக்கிறது.

இன்பா
03-05-2009, 02:54 PM
ராணுவத்தை தாக்குவதாக எல்லோரும் தவறாக பார்காதீர்கள்,

ராணுவத்தினரை ஆட்டிவைப்போர்க்கு காட்டும் வெறுப்பு தான் இந்த செயல்...!!!!!!!!!!!!!!!!!!!!!!

நம் ராணுவத்தை நாம் என்றுமே போற்ற வேண்டும்!!! இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடமே இல்லை..!!!!!!!!

இந்த ஈனமான செயல் நடைபெறக் காரணம் காங்ரஸும் அதனுடன் துணை போகிறவர்களும் தான்...!!!!

ரங்கராஜன்
03-05-2009, 04:02 PM
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்க்கும் பொழுது, சினிமா படங்களில் காட்டும் பல விஷயங்கள் உண்மையாக தான் இருக்குமோ என்று எண்ண தோன்றுகிறது.

சுயலாபத்திற்காக பல நிகழ்ச்சிகளை அரசியல்வாதிகளே நடத்துகிறார்கள் அதுவும் தேர்தல் வரும் சமயம் பார்த்து, ரயில் கடத்தல் (யாரோ மர்ம மனிதனாம்), இப்போ ராணுவ வண்டிகள் என்ற பெயரில் சாதாரண லாரிகளில் ராக்கெட் குண்டுகள். இன்னும் இந்த தேர்தல் முடிவதற்குள் என்ன என்ன நடக்குமோ??????????.

கொஞ்ச நாளைக்கு முன்பு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மீது ஆர்வம் திடீர் என்று வந்தது. பழைய செய்தி தான் இருந்தாலும் ஆர்வம் காரணமாக, அதை பற்றிய செய்திகளையும், வீடியோக்களை சேகரித்து பார்க்கும் பொழுது மனது கனத்து விட்டது. புஷ்ஷின் வெறித்தனமான விளையாட்டு, அப்பாவி மனிதர்கள் மீது, ஆதாரத்துடன் அந்த வீடியோ விவரித்த பொழுது மனது விம்மியது, எல்லாமே ஒரு நாடகம் தான், ஆனால் போன உயிர்கள் நிஜம், அழுகை நிஜம், அனாதையாக ஆக்கப்பட்டவர்கள் நிஜம். எதோ ஒரு வெள்ளைகாரன் செத்தாலே மனது வலிக்கிறதே, நம் ரத்தம் அங்கு யாரோ ஒரு மிருகத்தால் சுவைக்கப்படுகிறது.

நம்மால் என்ன செய்ய முடியும், வீரமாக பேச முடியும், உயிரே கொடுப்பேன் என்று சொல்ல முடியும், முத்துகுமாரின் மரணம் என்ன மாற்றத்தை உண்டு பண்ணியது, ரத்தம் இன்னும் சுவைக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. தனி நாட்டை விட உயிர் பெரிது அல்லவா?, மனிதர்கள் இல்லாமல் யாரை வைத்து நாட்டை உருவாக்குவது?, தினம் தினம் செய்திதாளில் வரும் ஈழத்தமிழர்களின் முகங்களை பாருங்கள், எலும்பும் தோலுமாக, அடுத்து என்ன என்ற கேள்விகளை மட்டும் சுமந்துக் கொண்டு வரும் பரிதாப முகங்கள். போட்டோவை பார்த்து விட்டு கொஞ்ச நேரம் மனம் பாரமாக இருக்கும், அடுத்த பக்கத்தில் திரிஷாவின் படத்தை பார்த்தவுடன் மனது குதுகலமாக மாறிவிடும். இது தமிழனின் இயல்பு இல்லை, மனிதனின் இயல்பு, என்ன மனிதனுக்கு ஏற்றார் போல நார்மல் ஆவதற்கு நேர வித்தியாசம் ஆகும் அவ்வளவு தான்.

மனித சங்கிலி, உண்ணாவிரதம், ஒரு நாள் கடையடைப்பு போன்ற விஷயங்களால் சத்தியமாக ஒன்றும் ஆகாது, இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது. மக்கள் அரசியல்வாதிகளிடம் காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு முடித்தவுடனே, அவனுடைய அதிகாரத்தை இழந்துவிடுகிறான். அவனுடைய அத்தியாவசிய தேவைகளுக்கே அவனுடைய அரசு உதவாத பொழுது, இவன் குரலை வைத்துக் கொண்டு எப்படி சகோதர நாட்டின் முடிவை அவை எடுக்கும். இப்பொழுது இருக்கும் கட்சிகள் இந்த பிரச்சனைகளை கையில் எடுத்திருப்பது தூய்மையான சுயநலத்திற்காக தான், வோட்டு வோட்டு வோட்டுக்கு மட்டும் தான்.

நாம் சாமானியர்களால் ஒன்றும் செய்ய முடியாது, பிரபலங்கள் ஆரம்பித்தார்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டவுடன் அமுக்கினார்கள், ஒளிந்தார்கள், மறந்தார்கள், மறைந்தே போனார்கள்.

உண்மையில் இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி கலைஞர்கள் அவர்களால் முடிந்த புகழை சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மைகள். கவிஞன் கவிதை எழுதுகிறான், எழுத்தாளன் கட்டுரை, கதைகள் எழுதுகிறான். அரசியல்வாதிகள் அறிக்கை விடுகிறார்கள், நடிகர்கள் அழுது நடிக்கிறார்கள். நாளேடுகள் ரத்தம் சொட்டும் புகைப்படங்களை ரெட் கலர் அதிகமாக ஷேட் வைத்து பிரசுரிக்கிறார்கள். வெட்டியான்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, இந்த பிரச்சனையை வைத்து காசை சம்பாத்தித்து இவர்கள் உண்ணும் அரிசிகள் எல்லாம் இறந்தவர்களுக்கு போட்ட வாய்க்கரிசிகள் தான்.

இந்த பிரச்சனையை மக்கள் தீர்க்க ஒரே ஒரு வழித்தான் இருக்கிறது, அது மக்கள் புரட்சி மட்டும் தான். சும்மா கையை பிடித்துக் கொண்டு நிற்பதும், காலை 6 மணிக்கே சாப்பிட்டு வந்து 4 மணி நேரம் உக்கார்ந்து விட்டு போவதும் மாதிரி இல்லாமல், தங்களின் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் புரட்சியில் ஈடுபட வேண்டும், தேவை என்றால் அங்கு போய் ஆர்மியுடன் மோத தயாராக இருக்க வேண்டும், இது எதோ சினிமா வசனம் அல்ல, உண்மையில் நம் சகோதிரிகளின் தாலிகள் தொடர்ந்து அறுக்கப்படாமல் இருக்க, பிஞ்சு குழந்தைகளின் மார்பில் குண்டு விழாமல் இருக்க, இவைகளை நாம் செய்ய வேண்டும், அப்படி ஒரு கூட்டம் கிளம்பினால் அதில் கண்டிப்பாக நானும் இருப்பேன். ஆனால் அதற்கு பதிலாக அந்த பிரச்சனைகளை பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டு, ஏசி அறையில் கணிணியின் முன்னாடி உக்கார்ந்துக் கொண்டு பிரச்சனையை பற்றி பேசினால் தீராது நண்பர்களே. நாம் அலசி, யோசித்து தள்ளாடிக் கொண்டு போவதற்குள் அங்கு ஒரு உயிர் மிச்சம் இருக்காது.

இந்த பதிவை நான் யாருடைய மனதை காயப்படுத்தவும் போடவில்லை, ஏனென்றால் அதில் குறிப்பிட்டு இருக்கும் கையாளாகாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன், நன்றி.

இன்பா
03-05-2009, 04:48 PM
இந்த பிரச்சனையை மக்கள் தீர்க்க ஒரே ஒரு வழித்தான் இருக்கிறது, அது மக்கள் புரட்சி மட்டும் தான். சும்மா கையை பிடித்துக் கொண்டு நிற்பதும், காலை 6 மணிக்கே சாப்பிட்டு வந்து 4 மணி நேரம் உக்கார்ந்து விட்டு போவதும் மாதிரி இல்லாமல், தங்களின் வேலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் புரட்சியில் ஈடுபட வேண்டும், தேவை என்றால் அங்கு போய் ஆர்மியுடன் மோத தயாராக இருக்க வேண்டும், இது எதோ சினிமா வசனம் அல்ல, உண்மையில் நம் சகோதிரிகளின் தாலிகள் தொடர்ந்து அறுக்கப்படாமல் இருக்க, பிஞ்சு குழந்தைகளின் மார்பில் குண்டு விழாமல் இருக்க, இவைகளை நாம் செய்ய வேண்டும், அப்படி ஒரு கூட்டம் கிளம்பினால் அதில் கண்டிப்பாக நானும் இருப்பேன். ஆனால் அதற்கு பதிலாக அந்த பிரச்சனைகளை பற்றி ஆராய்ச்சி செய்துக் கொண்டு, ஏசி அறையில் கணிணியின் முன்னாடி உக்கார்ந்துக் கொண்டு பிரச்சனையை பற்றி பேசினால் தீராது நண்பர்களே. நாம் அலசி, யோசித்து தள்ளாடிக் கொண்டு போவதற்குள் அங்கு ஒரு உயிர் மிச்சம் இருக்காது.

தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இதுப் போல் அரசியல் வாதிகளை நம்பினால் எந்த ஒரு விடிவும் கிடைக்கப் போவதில்லை, இந்த விசயத்தை வைத்து எப்படி ஆதாயம் தேடுவது என்று தான் யோசிப்பார்கள்.

தாங்கள் கூறிய யோசனை மிகச்சிறந்த யோசனை, மக்கள் சக்தி முன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.

அப்படித்தான் மாணவர்கள் மந்தியில் எழுந்த புரட்சி அரசியல் வாதிகளின் அறிவுக் கூர்மையால் முறியடிக்கப் பட்டது.

வழக்கறிஞர்கள் மந்தியில் எழுந்த புரட்சி அரசியல் வாதிகள் அறிவுக் கூர்மையால் திசை திருப்பு அடக்கப் பட்டது.

மக்களிடையே உண்மையை சொல்லி புரட்சி செய்து வந்த இயக்குனர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப் பட்டார்.

இப்படி எல்லா முறைகளிலும் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள்...

இன்னுமொரு புரட்சி ஏற்பட வேண்டும் அந்த புரட்சி ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும் அதை வழி நடத்த ஓர் ஆள் வேண்டும்.

jk12
03-05-2009, 04:57 PM
இன்னுமொரு புரட்சி ஏற்பட வேண்டும் அந்த புரட்சி ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பாக அமைய வேண்டும் அதை வழி நடத்த ஓர் ஆள் வேண்டும்.
சரியான வார்த்தை...
அரசியலை சார்ந்தவர்கள் செய்யவந்தால் அது அனைத்து தரப்பினராலும் ஏற்று கொள்ளபடாது.
அவர்களைதவிர இங்கு பேசவும் ஆளில்லை. பேசியவர்களும் அறிந்தோ அறியமலோ எதாவது அரசியல்வாதிகளை ஓன்றிவிடிகிறார்கள்.

தமிழருவி மணியன் தான் சார்ந்திருந்த இயக்கத்தை கொள்கைக்காக துறந்துவிட்டு அவர் கருத்துகளை கட்சி சார்பில்லாமல் கூறிவருகிறார்; ஆனால் அவருக்கு பெரியதாக செய்ய ஆளுமைஇல்லை

ரங்கராஜன்
04-05-2009, 06:25 AM
கலைஞரின் காமெடிகள் என்று ஜெயா டிவியில் ஒரு வீடியோ போட்டார்கள் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=GdLtcDUtyvU

நேசம்
04-05-2009, 07:00 AM
தாக்ஸ் சொல்வது போல் மக்களிடம் புரட்சி வரவேண்டுமென்றால் அது உண்மையான இன உணர்வுள்ள அரசியல்வாதிகள் கையில் தான் உள்ளது.அதுதான் தமிழகத்தில் பிரச்சனை

srjah
06-05-2009, 02:53 PM
திகவினரின் அராஜகம்,
80 லாரிகளும் ஆயுதங்கள் இல்லவே இல்லை, அதிலும் ராகெட் லான்சர்களும் இல்லவே இல்லை, அப்படியும் இருந்திருந்தால் அது தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டது,
என்னையா நீங்கள் நன்றாகக் கண்ணைத் திறந்து பாருங்கள் எது நிஐம் எது பொய் என்று.

jk12
14-05-2009, 07:28 PM
அந்த லாரியில் மிக சில உபகரணங்கள் இருந்தது தொலைகாட்ச்சியில் தெரிந்தது.... ஆனால்; அதிகமாக ரானுவத்தினரின் படுக்கைகளும், கூடரங்களுமே இருந்தது.

நம் ரானுவத்துக்கு எதிராக நடந்த இந்த செயல் அனைவராலும் நிச்சயம் மிகவும் கண்டிக்கபடவேண்டிய செயலாகும்.

தேர்தல் முடிந்துவிட்டது இப்பொழுது நம் அம்மையாரையும், மாம்பழத்தாரையும் பார்த்துகொண்டிருங்கள். மிகவும் உன்னிப்பாக யார்கூட சேரலாம் என்று பார்த்துகொண்டிருக்கிறர்கள்.


கலைஞரின் காமெடிகள் என்று ஜெயா டிவியில் ஒரு வீடியோ போட்டார்கள் பாருங்கள்.
மிக கேவலமான கற்பனை.... முன்பேல்லாம் தி.மு.கவினர்தான் கீழ்தரமாக பேசுவார்கள், அநாகரிகமாக பேசுவார்கள் என நினைத்திருந்தேன்....
இருவருமே ஓரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

பூமகள்
15-05-2009, 02:38 AM
பார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவிக்கவில்லை. எதப்பா நிஜம்????
கோவையில் நடந்த நிகழ்வு குறித்து அன்றைய தினமே உறவினர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அங்கு, நடந்த போராட்டம் உண்மை. ராணுவ தளவாடங்கள் இருந்ததும் உண்மை. தி.க. தலைவர் ராமகிருஷ்ணன் அவர்கள் போராடியதும் உண்மை.

ஈழத் தமிழர்களைக் கொல்ல கொண்டு சென்ற வாகனங்கள் முற்றுகை இடப்பட்டபின், சப்பைக்கட்டுகளாக மாற்று காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது... நம்பினால் அவர்கள் தமிழர் இல்லை.

உண்மையை மக்கள் அறிவார்கள்.

கா.ரமேஷ்
15-05-2009, 10:05 AM
/////////////////பார உந்துகளில் ஆந்திராவுக்கு பயிற்சிக்காக சென்ற சிப்பாய்கள் வந்ததாகச் சொல்லி உள்ளார்கள். அதில் ஆயுதங்கள் இருந்ததாகத் தெரிவிக்கவில்லை./////////////////////
சரி அப்படியே வைத்துக் கொள்வோம் இவர்கள் ஹைதராபத்தில் பயிற்ச்சி முடித்து வந்திருந்தவர்களை தவறுதலாக தாக்கிவிட்டிருக்கிறார்கள்.

3 மாதங்களுக்கு முன்னால் பீரங்கிகள் அனுப்பப் பட்டதே அப்போது தாக்கி இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? கொச்சியில் என்ன பாகிஸ்தான் எல்லையா உள்ளது பீரங்கிகளை அனுபினீர்கள்.
ஒரு இனத்தை அழிப்பது என்று முடிவெடுத்து எதுவேண்டுமானாலும் செய்வீர்கள் ஆனால் மக்கள் தடுக்க முனைந்தால் அது தீவிரவாதம் என்பீர்கள்,நாட்டின் இறையாண்மையை குலைக்கும் செயல் என்பீர்கள்.

குளத்தூர் மணி அவர்கள் கூட சொல்லி இருக்கிறார்கள் அங்கே 30 அல்லது 40 மட்டுமே தி.க தொண்டர்கள் மற்றவர்கள் எல்லோருமே பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பொதுமக்களும் அருகே வசிக்கும் கிராம மக்களுமே...
http://www.puthinam.com/full.php?2bUTsSe0dek7e0ecCB424a4e8GQ4d3jYc2cc2Cp13d43cSV3b021Oq3e

ராணுவத்தை தாக்கியது கண்டிக்க தக்கது என சொல்லும் கருத்துடையவர்கள் ராணுவவீரர்கள் பொதுமக்களையும் பத்திரிக்கையாளர்களையும் தாக்கினார்களே அந்த விஷயத்தை ஏன் மறைக்கிரீர்கள் அவர்கள் செய்தது மட்டும் சரியா?