PDA

View Full Version : ஜ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல்



தூயவன்
01-05-2009, 04:59 AM
முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

ஜ.நா தயாரித்து வந்த அறிக்கையானது தற்போது கசிந்துள்ளதால் பல புகைப்படங்கள் எமக்கு

கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் பல செயற்கைக்கோள் புகைப்படங்களானது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
ஒவ்வொரு நாளாக மக்கள் இடம்பெயரும் காட்சிகளும், இன்று இருந்த கட்டிடங்கள் நாளை அந்த இடத்தில் இடிந்து தரைமட்டமாக இருக்கும் காட்சிகளும் செய்மதியூடாக எடுக்கப்பட்டுள்ளது. பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. "சாட்சியம் அற்ற போர்" எனபெயரிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையில் மக்கள் வரிசை வரிசையாக இடம்பெயர்வதும் அவர்கள் இடம் பெயரும் சமயத்தில் வீழ்ந்து வெடிக்கும் குண்டுகளின் புகைமண்டலமும் தெளிவாக படம் பிடிக்கப்பட்டுள்ளன.

புலிகளால் அமைக்கப்பட்டிருக்கும் மண் அரண் முதல் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளுகம்பி வேலி மற்றும் தடைகள் என்பன திட்டவட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையானது இலங்கை அரசு போர் குற்றங்கள் புரிந்திருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான அளவு சாட்சிகளை உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. புதுமத்தளான் மற்றும் கரையோரப்பகுதில் மக்கள் அமைத்திருக்கும் தற்காலிக குடில்கள் அவை பின்னர் அகற்றப்பட்டு இடம் மாறி இருப்பதுஇ எறிகணை வீச்சில் நிலப்பரப்புகள் குண்டும் குழியுமாக காணப்படுவது என்பனவும் முறையே இங்கு படம் பிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இடம் பெயரும் மக்கள், கூட்டமாக ஒரே நேராக நடந்து செல்கின்றனர். கண்னிவெடிகளை தவிர்ப்பதற்காக
http://athirvu.com/un/thumbs/i0.jpg

26-03- 2009 இந்த இடத்தில் காணப்பட்ட 800 தற்காலிக குடில்கள் 19-04- 2009 இங்கு இருந்து காணாமல் போயுள்ளது
http://athirvu.com/un/thumbs/i1.jpg


இங்கு வட்ட வட்டமாக காணப்படுவது அனைத்தும் எரிகுண்டு எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடம்
http://athirvu.com/un/thumbs/i2.jpg

மண் அரன் மற்றும் வீதித் தடை அத்துடன் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ள பிரதேசம்.
http://athirvu.com/un/thumbs/i3.jpg

12 மீட்டர் விட்டம் கொண்ட பாரிய குழி. கடும் விமானத்தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் மற்றும் அணை
http://athirvu.com/un/thumbs/i4.jpg


பாரிய மணித அவலம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் இடம் எல்லாத் தரவுகளும் குறியிடப்பட்டுள்ளது
http://athirvu.com/un/thumbs/i5.jpg

அமரன்
01-05-2009, 08:10 AM
இலங்கைத் தீவின் போர் அனர்த்தங்களைச் சாட்சிப்படுத்தும் விதமாக இயங்கும் தளத்தையும் பாருங்கள் மக்களே. இந்த சாட்சியங்களே பலவற்றுக்கு உதவியது.

http://www.warwithoutwitness.com/

கா.ரமேஷ்
02-05-2009, 06:28 AM
இனியாவது உலக சமுதாயம் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்குமா?

யார் கொடுத்தாலும் இந்தியா,சைனா(வெட்கபடகூடிய விசயமாக) எதிர்ப்பது என்னவோ நிச்சயம் என தோன்றுகிறது....

கா.ரமேஷ்
02-05-2009, 06:34 AM
:fragend005:

jk12
03-05-2009, 02:54 PM
மனதுக்கு பாரமாக உள்ளது....

இதற்கு நம் இந்திய அரசைமட்டும் குறை கூறிகொண்டிருப்பது நியாயமா?
மிதவாதிகளின் மறைவு, அனைத்து தரப்பையும் அணைத்து செல்லாதது, சிதறுபட்ட கூட்டமாக ஆனது, தன்னை என்றும் நேசித்த மக்களின் மனதிலும் வடுவை உண்டாக்கியது போன்ற பல நிகழ்வுகளும் இதற்கு காரணமல்லவா....

சமிபத்தில் படித்த ஓரு வரி 'பிச்சைகாரர்களே இல்லாத ஊரில் உள்ள அனைவரும் பிச்சைகாரர்கள் போல அகதிகள் முகாமிலே தங்க நேர்ந்துள்ளது'.... மனதை மிகவும் வருத்துகிறது.
திரு.பாலசிங்கம் இருந்திருந்தாலவது நிலைமை கை மீறிபோகாமல் பார்த்திருப்பார்.

அங்கு இன்னலுறும் மனித உயிர்களுக்காகவாவது நம் இந்திய அரசாங்கமும் அனைத்து உலக நாடுகளும், உயிர் பயத்தினாலும் அவர்கள் இயற்கையான குணத்தினாலும் வன்மம் கொண்டுள்ள இலங்கை தலைமைகளை சிறிதளவாவது அடக்க முயற்சித்திருக்கலாம்
இப்பொழுது செய்ய துவங்கியிருக்கும் முயற்சிகளாவது சிறிதளவாவது அவர்களின் காயங்களுக்கு மருந்திடும் என என்றும்போல் நம்பிக்கையுடன் மிக நம்பிக்கையுடனும் பிரார்த்தனை செய்வோம்.