PDA

View Full Version : உன் சந்தேகத்தால்.....



இன்பக்கவி
29-04-2009, 06:15 PM
உன்னையே
எண்ணினேன்...
உனக்காகவே
வாழ்கிறேன்.....

முழுவதுமாய்
உன்னை நம்பி
உன்னுடன் வந்தேன்....

உன்னை அடைந்தேன்...
உன்னால் நிறைய
இழந்தேன்....

உன்னுடன்
பேசும் போது
எல்லாம் என் மீது
கோபம் கொள்ளும்
நேரத்தை
கூட ரசித்தேன்...

கிண்டலாய்
நான் பேசும்
வார்த்தைகள்
சில நேரங்களில்
ரணமாய் வரும்
உன்னிடத்தில்....
இருந்து.....

உனக்கு மட்டுமே
சொந்தம் என்பாய்....
அதை ரசித்தேன்....
அப்போது அதன்
அர்த்தம்
தெரியாமல்........

இப்போது உணர்கிறேன்
என்னை யாரிடமும்
பேச விடாமல் எனக்கு நீ
போட்ட தடை என்று......

எல்லா நட்புகளும்
போய்விட்டது
உன்னால்...
உன் சந்தேகத்தால்.....

என்னால் சந்தோஷத்தில்
மிதக்கிறாய் என்பாயே....
எப்போதில் இருந்து
சந்தேகத்தில்
மூழ்கினாய்........????

கேட்க மனம்
இருந்தும்
துணிவில்லாமல்
அடிமையாய்
நான்.....

உன்னிடம்
எதிர்பார்ப்பது
என் உண்மையான
அன்பை புரிந்துக் கொள்....

என் துயர நேரத்தில்
ஆதரவாய் சாய
உன் தோள் கொடு.....
அது போதும்...
எனக்கு.....

சந்தேகப்பட்டு
என்னை சாக அடிக்காதே....

samuthraselvam
30-04-2009, 03:11 AM
வாவ்.............. சூப்பர் கவி...

நிறைய பேரின் நிலை இது தான்..

அதற்குக் காரணம், வாழ்க்கைத் துணையின் மேல் வைத்துள்ள அளவற்ற பாசம் தான்......

கணவன் மனைவிக்குள் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை தான் வாழ்வின் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரமே ஆட்டம் காணும்போது வாழ்வே நரகம் ஆகிவிடுகிறது.....

இதற்கு தீர்வு என்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதே ஆகும்....

கா.ரமேஷ்
30-04-2009, 05:25 AM
நிறைய பேர் வாழ்க்கையில் இந்த புரிதல் இல்லாமைதான் பெரும்பிரச்சனையாக இருக்கிறது.அருமையாக வடித்துள்ளீர்கள் கவி....