PDA

View Full Version : மொட்டை மாடியும் சில இரவுகளும்..!! - 2



பூமகள்
29-04-2009, 11:19 AM
மொட்டை மாடியும் சில இரவுகளும்..!!



"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாத ஒரு திரவம், அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது"

"இரெவென்னும் வினோத மலர் எண்ண முடியாத இதழ்கள் கொண்டது. இரவின் கைகள் உலகைத் தழுவிக்கொள்கின்றன. அதன் ஆலிங்கனத்திலிருந்து விடுபடுவது எளிதானதில்லை."


- "யாமம்" நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்


கவிந்து,சூழ்ந்து, எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் ஓர் ஆழ்ந்த இரவு ஒவ்வொரு முறையும் புதிய வடிவத்தில் சிந்தனையைத் தட்டி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன..

அத்தகைய இரவுக்கும் எனக்குமான பந்ததுக்கு உற்ற துணையாக இருந்தது என் வீட்டு மொட்டை மாடி("வெற்றுத் தளம்" என்று மொழி பெயர்க்கலாம் தானே?)யும் அது அளந்து கொண்டிருந்த வான்வெளியும்..

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது மண்டை பிளக்கும் வெயிலுடன் ஒரு மதியப் பொழுதில் என் முதல் வெற்றுத் தள அறிமுகம் அமையப் பெற்றது..

மூன்று அடுக்கு வீட்டின் மேல் தட்டுக்கு தட்டுத் தடுமாறி கைபிடியற்ற படியேறி சாகசம் மேற்கொண்டு, நின்று முதன் முதலாக எல்லாக் கோணத்திலும் எங்கள் ஊரை நோட்டம் விடுகையில் அருகிருந்த தென்னை மரத்தில் சுனாமிக் காற்று தாக்குதல் திக்குமுக்காடச் செய்தது..

என்னை கைபிடி சுவரற்ற தளத்திலிருந்து கீழே சாய்க்கும் முனைப்போடு தொடர்ந்து புயல் காற்று அடித்துக் கொண்டிருக்க நடுக்கத்தோடே இறங்கினேன்.. முதன் முதலில் காதலன் விரல் பிடித்த காதலியிடம் ஏற்படும் நடுக்கம் போல அந்த நடுக்கம் என்னைச் சூழ்ந்து கொண்டது... அதன் பின் எனக்கு அந்த மூன்றாவது வெற்றுத் தளம் ஒரு அதிபயங்கர மரணக் குகை போலவே தோன்றியது...

இரவுகளும் அது கொண்ட ரகசியங்களும் எப்போதும் அதன் வழியில் சென்று கொண்டே இருக்க காலம் நகர்ந்து கொண்டே இருந்தது..


(இரவுகளின் வாசனைகள் தொடரும்...)

கா.ரமேஷ்
29-04-2009, 12:00 PM
அடுத்த இரவுகளின் வாசத்தை எதிர்பார்க்கிறோம் சகோதரி தொடருங்கள்....!

ரங்கராஜன்
29-04-2009, 02:01 PM
மன்றத்தில் என்னை தவிர எல்லோரும் தமிழில் விளையாடிகிறீர்கள், வார்த்தை உபயோகம் ஆகட்டும், சொல்ல வரும் கருத்தாகட்டும் எதுவாக இருந்தாலும் மறத்தமிழில் இருக்கிறது, நீங்கள் அனைவரும் தமிழை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை தான் இந்த சில மாதங்களில் எனக்கு மன்றம் உணர்த்தியது. உங்கள் அனைவரையும் போல தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் ஆசையும் இருக்கிறது, இனிமேல் பஞ்சத்துக்கு கண்டது போனதை எல்லாம் எழுதாமல், தமிழை நன்றாக படித்து விட்டு எழுத வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறேன். ஐந்து கதைகள் ஆரம்பித்து பாதியிலே நிற்கிறது, சூன்யம் என்னும் ஒரு கட்டத்தை அடைந்து விட்டேனோ என்ற பயமாக கூட இருக்கிறது, இந்த பிரச்சனை எல்லாருக்கும் வரும் என்று அறிவேன். இதை போக்குவது எப்படினு பல முறை யோசித்து தோல்வி அடைந்து இருக்கிறேன்.

இப்பொழுது எதுக்கு இதை எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா, உங்களின் இந்த திரியில் இருந்து அதற்கான விடையை கண்டுபிடித்து விட்டேன், விடை : இரவு மொட்டை மாடியை பார்ப்பது விளையாட்டுக்கு சொல்லவில்லை, சத்தியமாக தான் சொல்கிறேன். எங்கோ படித்து இருக்கிறேன். “உன்னுள் அதிசயம் நிகழ வேண்டுமா, மற்ற அதிசயங்களை உற்று பார்” என்று, வானத்தை விட பெரிய அதிசயம் என்ன இருக்க முடியும், அதுவும் இரவு வானத்தை விட, அழகின் உச்சம் அதுதான். மனது கஷ்டமாக இருக்கும் சமயத்தில் நான் அடிக்கடி பிர்லா பிளானிட்டோரியம் செல்வேன், ஸ்பேஸ் ............. எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு, திரி ஆசிரியர் கோச்சிக்க போறாங்க..............

வாழ்த்துக்கள் பூமகள் நல்ல திரி இரவின் வாசத்தை தொடருங்கள், வாசனை பிடிக்க காத்து இருக்கிறோம்.

பூமகள்
29-04-2009, 03:02 PM
நன்றிகள் சகோதரர் ரமேஷ்.

தொடர விரும்பியே இப்பதிவு.. முடிந்தளவுக்கு விரைவாக எழுதிப் பதிக்கிறேன்..

--

என்னங்க தக்ஸ் இப்படி சொல்லிட்டீங்க...

நானாவது தமிழில் விளையாடுவதாவது....

அதுக்கு இங்க தாமரை, இளசு, அமரன், அக்னி, ஆதவா என்று ஒரு பெரும் படையே இருக்கின்றார்களே...

நானும் உங்களைப் போலவே படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் தக்ஸ்.. நிஜமாவே இரவில் மொட்டை மாடியில் வானை அளப்பது மிக அற்புதமான பொழுது போக்கு.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமானது.. அதுவே இப்பதிவுக்கு ஒரு முக்கிய காரணமும் கூட...

நல்லா சொல்லிட்டு வந்துட்டு.. பாதியில் திரி ஆசிரியர் யாருப்பா அது இடையில் கரடியாக??

எவ்வளவு வேணா சொல்லுங்க தக்ஸ்.... விமர்சிக்கவும் உங்கள் மனம் திறந்து கருத்து சொல்லவும் கூச்சப்பட வேண்டாம்.. பெரிய பதிவெனில் பொறுப்பாளர்கள் உங்கள் பதிவையே புதிய திரியாகக் கூட ஆகச் செய்வார்கள்..

இரவின் வாசத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்.. விரைவில் அடுத்த பாகத்தைப் பகிர்கிறேன்..

தாமரை
29-04-2009, 03:30 PM
=எவ்வளவோ சொல்லனும் போல இருக்கு, திரி ஆசிரியர் கோச்சிக்க போறாங்க..............

வாழ்த்துக்கள் பூமகள் நல்ல திரி இரவின் வாசத்தை தொடருங்கள், வாசனை பிடிக்க காத்து இருக்கிறோம்.

மொட்டை மாடிக்கும் பதின்ம பருவத்துக்கும் ரொம்பவே உறவுகள் உண்டு..

தங்கை திரி ஆரம்பிச்சப்பவே அவங்க முடிச்ச உடனே அதே திரியில் என்னைத் தொடரச் சொல்லி இருக்காங்க..

டக்ஸ், ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன்,, ஒரு வார்த்தை நம்மை விட்டு வெளிப்பட்டு விழுந்த உடனே அது உலகிற்கு சொந்தமாகி விடுகிறது.. இதிலயும் என் திரி உன் திரி அப்படின்னு பேசலாமா?

எல்லாத் திரியையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்போமே...

இன்றும் சரி.. சிவா.ஜி, பென்ஸ், பூமகள், ஆதவா, மதி, நாட்டாமை, மீரா, பரம்ஸ் இது போன்ற பலருக்கு இருக்கும் அன்பான உறவுக்கு காரணம் இது நம்ம இடம் என்ற உணர்வுதானே தவிர இது என் திரி இது உன் திரி என்ற பாகுபாடல்ல,

நீங்கள் நினைப்பதைச் சொல்லணும். அதுதான் முக்கியம்..

பூமகள்
30-04-2009, 08:14 AM
நன்றிகள் தாமரை அண்ணா..

விமர்சிப்பது பற்றியும் கருத்து கூறுவது பற்றியும் ஒரு நல்ல தெளிவை ஏற்படுத்திவிட்டீர்கள்..

--

தக்ஸ்..

அள்ள அள்ளக் குறையாத கதை வடிக்கும் உங்கள் கற்பனா நதி வற்றிவிட்டது போல் உணர்கிறீர்களா?? அது வெறும் மாயை தான்..

உங்களை மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு வான் வேடிக்கை பார்த்து பின் எழுத முயலுங்கள்.. இவ்வகை வெறுமை எல்லா கலைஞர்களுக்கும் ஏற்படும்.. எனக்கும் ஏற்பட்டது..

மீள நானும் போராடி வருகிறேன்.. ஆனால், என்னைப் பொறுத்த வரை.. வற்புறுத்தி அழைப்பதை விட பதிவுகள் தாமே சிந்தையில் தோன்றுவதையே வரவேற்கிறேன்..

இயல்பிலேயே அந்த சிந்தனைத் தோன்ற ஏதுவான சூழல் ஏற்படுத்திக் கொண்டாலே போதும்..

கவலையை விடுத்து மகிழ்வோடு எழுத முயலுங்கள் தக்ஸ்.. உங்களால் நிச்சயம் முடியும். :)

மதி
30-04-2009, 09:25 AM
மொட்டை மாடியும் சில இரவுகளும்... தலைப்பைப் பார்த்தவுடன் உள்ளே வரத் தயங்கினேன். ஏனோ கவிதைகள் பக்கமும் இலக்கியங்கள் பக்கமும் போக பயம். எதுவுமே புரியாமல் போய்விடுமோ என்று. ஆனாலும் சின்ன தைரியத்தில் உள்ளே வந்தேன்.

அதோ இரவு நேர வானம் பரந்து கிடக்கு. ஒவ்வொரு நட்சத்திரமாய் பின் தொடர்கையில் சில இரவுகளும் காணாமல் போயிருக்கு. எத்தனையெத்தனை நட்சத்திரங்களோ அத்தனையத்தனை இரவுகளும் தொலைபட காத்திருக்கின்றன. மொட்டைமாடி வாசம் இரவு நேர வானழகை கண்களுக்கு காட்டட்டும். (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... எப்படியோ யாருக்கும் புரியாத மாதிரி ஏதாச்சும் எழுதணும்னு இருந்த ஆசை நிறைவேறியாச்சு..ஹிஹி)

தொடருங்க பூமகள்..

தாமரை
30-04-2009, 09:39 AM
ஆமாம் ஆமாம் .. ஆனா மதி எழுதினா என்ன தலைப்பில் எழுதுவார் தெரியுமா?

நள்ளிரவும் நடுத்தெருவும்

மதி
30-04-2009, 10:12 AM
ஆமாம் ஆமாம் .. ஆனா மதி எழுதினா என்ன தலைப்பில் எழுதுவார் தெரியுமா?

நள்ளிரவும் நடுத்தெருவும்
புரியலியே....:fragend005::fragend005:

ரங்கராஜன்
30-04-2009, 10:33 AM
--

தக்ஸ்..

அள்ள அள்ளக் குறையாத கதை வடிக்கும் உங்கள் கற்பனா நதி வற்றிவிட்டது போல் உணர்கிறீர்களா?? அது வெறும் மாயை தான்..

உங்களை மெல்ல ஆசுவாசப்படுத்திக் கொண்டு வான் வேடிக்கை பார்த்து பின் எழுத முயலுங்கள்.. இவ்வகை வெறுமை எல்லா கலைஞர்களுக்கும் ஏற்படும்.. எனக்கும் ஏற்பட்டது..

மீள நானும் போராடி வருகிறேன்.. ஆனால், என்னைப் பொறுத்த வரை.. வற்புறுத்தி அழைப்பதை விட பதிவுகள் தாமே சிந்தையில் தோன்றுவதையே வரவேற்கிறேன்..

இயல்பிலேயே அந்த சிந்தனைத் தோன்ற ஏதுவான சூழல் ஏற்படுத்திக் கொண்டாலே போதும்..

கவலையை விடுத்து மகிழ்வோடு எழுத முயலுங்கள் தக்ஸ்.. உங்களால் நிச்சயம் முடியும். :)

நன்றி பூமகள்

உங்களின் ஊக்கத்திற்கு, கவலைகள் எல்லாம் ஒண்ணும் இல்லை ஜாலியாக தான் இருக்கிறேன், அதான் கதை வரமாட்டுது, கவலையாக இருந்தால் நிறைய வரும். நான் சூன்யமாகி விடுமோ என்று சொன்னது, கதைகள் கரு கிடைக்காமல் இல்லை, ஆனால் அதை கொண்டு செல்லும் விதங்கள் கிடைக்காமல் தான், ஒரே மாதிரி எடுத்து செல்ல போர் அடிக்குது, நம் படைப்பை நம்பி படிக்கிறார்கள், அரைத்த மாவையே அவர்களுக்கு புது புது தட்டில் எத்தனை முறை தான் படைப்பது, ஒரே கையில் சாப்பிடுவதால் அவர்களுக்கும் அலுப்பாக இருக்கும் தானே, கொஞ்ச நாள் வேறு கையில் சாப்பிடட்டும், நான் பிரியாணியுடன் திரும்பி வருகிறேன், வந்தாலும் இங்கு நிறைய பேர் வெஜிட்டேரின்களாக மாறி இருப்பார்கள். :lachen001::lachen001::lachen001:

நன்றி

தாமரை
30-04-2009, 10:33 AM
உங்களுக்கு பிடிச்ச விஷயமே வெளியூர் போனா நடுராத்திரில் நட்ரோட்டில் அலையறதுதானே..

சென்னைச் சந்திப்புகளுக்கு பின் நிகழ்வுகளைத்தான் சொன்னேன்

மதி
30-04-2009, 10:57 AM
உங்களுக்கு பிடிச்ச விஷயமே வெளியூர் போனா நடுராத்திரில் நட்ரோட்டில் அலையறதுதானே..

சென்னைச் சந்திப்புகளுக்கு பின் நிகழ்வுகளைத்தான் சொன்னேன்
இந்த முறை அப்படி எதுவும் நடக்காமல் இருக்கட்டும்... :rolleyes::rolleyes::rolleyes:

சிவா.ஜி
30-04-2009, 01:04 PM
நானும் இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதியில் இருந்ததால் எட்டிப் பார்க்கவில்லை.

பார்த்தபிறகு...ஏன் பார்க்காமலிருந்தேன் என வருத்தப்பட்டேன்.

சொல்ல நினைப்பதை சுவையாய் சொல்வது ஒரு கலை. அதில் தங்கை பட்டம் வாங்கியவர். சின்ன வயதில் கைப்பிடியில்லா படிக்கட்டினூடே ஏறி மொட்டைமாடியில் நின்று காற்று அச்சுறுத்தி பயந்து இறங்கிய நிகழ்வை சொன்ன விதம் அருமை. கைகள் நடுங்கியதற்கு காட்டிய உதாரணம் அசத்தல்.

தக்ஸ் சொல்றமாதிரி....வெட்டவெளியில் நின்றுகொண்டு வானத்தைப் பார்ப்பது சிந்தனை ஊற்றை கொப்பளிக்கச் செய்யும். அந்த ஊற்றிலிருந்து பொங்கிய பிரவாகமாக பூவின் எழுத்துக்கள் புறப்பட்டிருக்கின்றன.

இன்னும் பெருகட்டும். சுவைக்க காத்திருக்கிறோம் தங்கையே.

ஆதவா
30-04-2009, 01:25 PM
கௌகள் நடுங்கியதற்கு காட்டிய உதாரணம் அசத்தல்.
.

என்ன கொடுமை இது??? :D

ஆதவா
30-04-2009, 01:34 PM
மொட்டைமாடி என்றால் நினைவுக்கு வருவது எனது நிகழ்கால வாழ்க்கை. இந்த கோடையில் வீடு முழுக்க உருண்டு கொண்டிருக்கும் வெப்பத்தைத் தாங்காமல் இரவில் மொட்டைமாடிக்குச் சென்று படுப்பது வழக்கம். எனது நிகழ்கால இரவுகள் எப்பொழுதும் வானைப் பார்த்தபடி நட்சத்திரங்களை எண்ணியபடி புதிர்மிகுந்த மேக ஓவியங்களை ரசித்தபடி செல்கிறது. ஆனா இரவு என்றால் எப்பொழுதுமே எனது கடந்தகால வாழ்வின் வெறுப்புகள்தான் நினைவுக்கு வருகின்றன. தனிமை இருளில் சுருண்டு படுத்த நினைவுகள்தான்......

எனது இரவுகள் குறித்த சிறுகுறிப்பொன்று இங்கேயும் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள் நண்பர்களே!

http://tamilmantram.com/vb/showthread.php?t=19882

சிவா.ஜி
01-05-2009, 03:20 PM
என்ன கொடுமை இது??? :D

ஆதவா......:sauer028:.......ஆஃபீஸில் அவசரமாய் தட்டச்சியது. அதுக்கு இப்படியா....?

அமரன்
04-05-2009, 09:00 AM
பூமகள் விரல்களின் வழியே ஒழுகும் தமிழ்த்தேனில் மொட்டை மாடி அனுபவத் தினையும் கலந்து தரும்போது தின்னக் கசக்குமா என்ன. முதல் கவளம் விழுந்த நொடியில் நாடி நரம்புகளில் பாயத் தொடங்கும் சில்லிர்ப்பில் தூக்கம் கலைக்கிறது இன்னும் வேண்டும் என்ற ஏக்கம்.

சின்ன வயதில் உச்சிப் பனையில் வெய்யில் குடிக்கும் குருவியைக் காணும் பொழுதுகளில் ஆசை துடிக்கும். முல்லைப் பந்தலில் அமர்ந்து இரவு மை எழுதிய வானப் புத்தகத்தை வாசிக்கும் தருணங்களில் உயரத்திலேறி நட்சத்திரப் புள்ளிகளை இணைத்துக் கோலம் போட மனமேவும். நிலவுத்தாளில் எழுதப்பட்ட கதைகளை அன்னை சொல்வாள். அந்தக் கதைகளை கிட்டத்தில் சென்று படிக்க வேண்டும் என்று ஆசைத்தோழி கொல்வாள். இன்னும் இன்னும் எத்தனையோ..

அவை எல்லாம் நிறைவேறிய போது பருவம் சென்று விட்டிருந்தது.

தொடருங்கள் பூ.

பூமகள்
05-05-2009, 08:49 AM
மேலான விமர்சனமிட்டு என்னை மகிழ்வித்தமைக்கு நன்றிகள் சிவா அண்ணா..

உங்கள் பாராட்டு விமர்சனத்துக்கு நான் தகுதியானவளா என்று அறியேன்.. ஆயினும் அவ்வகையில் உங்கள் சிந்தை போலவே எழுத முற்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்..
--

நன்றிகள் தம்பி ஆதவா..

இரவுகள் தன்னோடு பல கதைகளை எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்... உண்மை தான்.. நம் சிந்தையின் அலைவரிசைக்கு தகுந்த படி எப்போதும் அது வாசித்தபடியே தான் இருக்கிறது..

உங்கள் பதிவு பல அசத்தல் ஆதவா.. அதிலும் இலக்கியங்கள் பகுதியில் எழுதும் உங்கள் தமிழ் எழுத்துகளின் வன்மை நெஞ்சை அள்ளும்... உங்களைப் போன்றோர் தான் எனக்கு முன்னோடிகள்.. நிச்சயம் படிக்கிறேன்..

நன்றிகளும் வாழ்த்துகளும் ஆதவா..

பூமகள்
05-05-2009, 08:53 AM
இரவையும் நிலவையும் விண்மீன் கூட்டத்தையும் எத்தனை எத்தனை கற்பனை கொண்டு கண்டு வளர்ந்திருப்போம்..

ரசிக்க வயது தடையில்லையே... அதே பருவத்துக்கு எப்போதும் சென்று ரசிக்கப் பழகினால்.. நாம் இன்னும் இளமையோடு உலவலாமல்லவா??

இன்றும் என்றும் நான் ரசிக்கும் ஒரு அழகிய ஓவியம் இரவும் அது கொண்ட வான்வெளியும்..

உங்களின் அமுத விமர்சன ஊக்கியில் திக்கு முக்காடிப் போய்விட்டேன்.. விரைந்து அடுத்த பாகம் பதிக்க விழைகிறேன்..

நன்றிகள் "சிகரன்" அமரன் அண்ணா..

பூமகள்
06-05-2009, 10:10 AM
மொட்டை மாடியும் சில இரவுகளும் - 2


ஓடுகளின் கூரை வழி கசியக் காத்திருக்கும் வெளிச்சத்துக்கு வரவேற்பளிக்க ஒற்றை தேவதையாகக் காத்திருக்கும் கண்ணாடி ஓட்டின் வழி, நிலவையும் இரவின் கருமையையும் நிழல் போலப் பார்த்து உலகத்தையே அதன் வழி பார்த்தது போன்று பிரம்மித்தப் பள்ளி நாட்கள்..

மொட்டை மாடி வீடு சொந்தமாக அமையப் பெற்றதும்.. அதன் மீதான மோகம் இன்னும் இன்னும் அதிகமாகத் துவங்கியது..

ஒவ்வொரு அந்தி சாயும் வேளையும் தவறாமல் மேற்தளம் சென்று மேற்கில் விடைபெறும் சூரியனை வழியனுப்பத் தவறியதில்லை.. படிக்கப் பாடப் புத்தகத்தை எடுத்துச் சென்றாலும்..
வானில் பறக்கும் பச்சை கிளிகளோடு படித்துப் பறந்தது தான் அதிகம்..

இரவின் வர்ண ஜாலம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முகத்தோடு என்னை வரவேற்றுக் கொண்டிருந்தது..

நண்பர்களற்ற தனித்த பொழுதெல்லாம் என்னோடு இரவும் வானும் உரையாடி மகிழ்வித்தது..

இரவென்பது ஒரு பிரதிபளிப்பு... அது தன் ஆலிங்கனத்தை என் மனதுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தது..

மகிழ்ந்து சென்ற பொழுதெல்லாம் படபடக்கும் ஆரவாரத்தோடு தோரணங்கள் போல பச்சைக் கிளிகளோடும் குருவிகளோடும் புறாக்களோடும் என் மகிழ்வை இரட்டிப்பாக்கியது..

துக்கத்தில் பேச்சிழந்து சென்ற பொழுதெல்லாம் மேகமற்ற வானத்தோடு, இருள் விரைந்து குவிய நட்சத்திரங்கள் கூட கண் சிமிட்டாதபடி பார்த்துக் கொண்டது..

என்னைப் பற்றி அதிகம் என்னை விட புரிந்தது போல என்றும் அமைதியாக என் மனப் போராட்டத்தைக் கேட்டு மௌனித்திருந்தது..

அந்த மௌனத்தினூடே எனக்கு பக்குவத்தையும் புகட்டிக் கொண்டிருந்தது..

அழும் கணங்களில், இத்துயரை விட உலகம் பெரியது.. அதனினும் பெரியது வான்வெளி.. அதனினும் பெரியது பால்வெளி... என்று பிரபஞ்ச உண்மையை எனக்குப் பறைசாற்றித் தேற்றியது...

இரவென்பது ஒவ்வொரு நாளும் எனக்கு புத்தருக்குக் கிடைத்த ஞானத்தைப் போல என்னை என்னுள் செலுத்த உதவிக்கொண்டிருந்தது..

இரவுகள் எல்லாமே அதன் அடர் கருமையைப் போல ஆழமானதும் நீளமானதும் அல்லவா??!!


-- இரவுகளின் வாசனை தொடரும்.

samuthraselvam
06-05-2009, 10:27 AM
இரவின் அருகாமை இன்பத்தை பல மடங்கு பெருக்கியும், துன்பத்தை பல மடங்கு குறைத்தும் மனதை அமைதிப்படுத்தும் என்பது எவ்வளவு பெரிய உண்மை.....

மேலும் தொடர வாழ்த்துக்கள்.. பூ..... http://tbn1.google.com/images?q=tbn:tNldN34iO1itlM:http://2.bp.blogspot.com/_JLFjvqC5_HI/ScpR3EQVhDI/AAAAAAAAAOQ/X2MdSTA86CA/s400/StairwayToHeaven-D-4d.jpg
வான் வழிப் பயணத்தில் நாங்களும் உடன் வருகிறோம்.

பூமகள்
06-05-2009, 10:44 AM
நன்றிகள் தங்கை லீலுமா..

படமும் விமர்சனமும் வெகு அழகு... படத்தைப் பெரிதாகத் தந்தால் கவிதை எழுதக் கூட தூண்டுமே..

படத்தைப் பெரிதாகத் தரும்படி தங்கைக்கு வேண்டுகோள்..

ரங்கராஜன்
06-05-2009, 11:48 AM
நல்லா இருந்தது பூமகள், உங்கள் வாக்கியங்களில் ஒருவித தொடர்ச்சி இல்லை என்றாலும், இந்த ஸ்டைல் நன்றாக இருக்கிறது, அதாவது random unexpected writing வகை, என்ன எழுதப்போகிறோம்னு எழுத்து பேப்பரில் தெரியும் வரை எழுதுபவருக்கே தெரியாது. இந்த வகையான எழுத்தும் சொல்லும் எப்பொழுது உபயோகிப்பார்கள் தெரியுமா????????, மனது வலிக்கும் பொழுது, அல்லது சந்தோஷத்தில் திக்கு முக்காடி இருக்கும் பொழுது, கடவுளிடம் வேண்டும் பொழுது, குழந்தைகளை கொஞ்சம் பொழுது வார்த்தைகள், ரொம்ப பிடித்தவர்கள் வந்து உங்களிடம் “என்னை ஏன் பிடிக்கும்?” என்ற கேள்வி கேட்கும் பொழுது, இந்த மாதிரி வார்த்தைகளும், வாக்கியங்களும் துண்டு துண்டாக வரும். ஆனால் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அழகாகவும், அர்த்தம் பொதிந்தும், இனிமையான ஓசையுடனும் உங்களை அறியாமலே வரும். ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்டுள்ள சில ஆத்மார்த்தமான வேலைகளை செய்யும் பொழுது நீங்கள் வார்த்தைகளை தேர்ந்து எடுப்பது இல்லை, வார்த்தைகள் தான் உங்களை தேர்ந்து எடுக்கின்றன். அதனால் தான் அந்த எழுத்துக்கள் படிக்கவும், கேட்கவும் சுவையாக இருக்கும். நம் மன்றத்தில் அமரனுடைய சில விமர்சனங்களும், பெரியண்ணா இளசு அவர்களின் சில விமர்சனஙக்ளும் இந்த வகையை சார்ந்தவகைகளாகும். படித்தால் புரியாது, புரிந்தால் படித்துக் கொண்டே இருக்கத் தோன்றும். இப்பொழுது நீங்கள் எழுதி இருக்கும் இரண்டாம் பாகம் அந்த மாதிரி தான் இருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட சில சொற்கள் இரவும் வானும், இரவின் வர்ணஜாலம், கசிய காத்திருக்கும் வெளிச்சம், கருமையும் நிழலும், ஆலிங்கனத்தை, ஆரவாரத்தோடு தோரணங்களை, ஆழமானதும் நீளமானதும்........... இப்படி பல வார்த்தைகள் உங்களை அறியாமல் உங்களுக்கு வந்து இருக்கிறது என்று நம்புகிறேன், இரவை பற்றி நிறைய சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தான் உங்களிடம் இருந்து இப்படி அருமையான வார்த்தைகளை கொடுத்து இருக்கிறது.

ஆனால் இதில் ஒரே ஒரு பிரச்சனை இருக்கு, இந்த வகை எழுத்தை எழுதுபவரின் மனநிலையில் இருப்பவர்களுக்கு தான், அதாவது wavelengthல் இருப்பவர்களுக்கு தான் இந்த எழுத்தின் முழு வீர்யம் தெரியும், புரியும். தொடருங்கள் வாழ்த்துக்கள் பூமகள், பாகம் 2 ரொம்ப கொஞ்சமாக எழுதி இருக்கிறீர்கள்.

அமரன்
16-06-2009, 09:40 AM
மொட்டை மாடி இரவுகள் நீட்சி அடைவது எப்போது?

பகல்பொழுதில் பயப்பிரக்ஞையில் கதவுகள் சாத்தப்பட்டிருக்கும். இருட்டைப் போர்த்தி உள்ளகம் தூங்கி வழியும். வெளியில் நிரம்பி கூரையில் வழிந்தோடும் வெளிச்சக் குழம்பு ஒற்றை ஓட்டில் கிடைத்த கண்ணாடி இடைவெளியினூடு ஒழுகத் தொடங்கும். கற்றைகளால் ஆன ஒற்றைக் கோடாக, வளையல் அணிந்த பெண்ணின் மின்னும் கரங்களாக நிலத்தில்"பட்டு"த் தெறிக்கும். உள்ளகத்தில் சிறிது வெளிச்சம் பரவும். ஆனாலும் அச்சம் அங்கிருந்து விலக மறுக்கும். வெளியில் இருட்டுக் கட்டும். உள்ளுக்குள் இருக்கும் சிறு வெளிச்சம் மெட்டுக் கட்டும். பயத்தினை ஊடறுத்து வீதிசமைக்கும். கதவினை மெல்லத்திறந்து மொட்டைமாடிக்குக் கால்களை நகர்த்தும்.

மொட்டை மாடி இரவுகள் நீட்சி பெறும்.

சரிதானே பூமகள்!!