PDA

View Full Version : உலகக் கோப்பை - 2009 20/20



தாமரை
28-04-2009, 08:28 AM
உலகக் கோப்பைக்கான உத்தேச அணியை இந்தியா அறிவித்து ரொம்ப நாளாகுது. இந்த முப்பது பேருமே ஐபிஎல் லில ஆடிகிட்டு இருக்காங்க..

அவர்களின் திறமை வெளிக்காட்டலின் படி பார்த்தால் அணி எப்படி அமையும் என்பது எளிதில் விளங்கும்

1. வீரேந்திர சேவாக்
2. தினேஷ் கார்த்திக்
3. கவுதம் கம்பீர்
4. முரளி விஜய்
5. மஹேந்திர சிங் தோனி
6. அஜிங்க்யா ரஹானே
7. பத்ரிநாத்
8. ரோஹித் ஷர்மா
9. ராபின் உத்தப்பா
10. யுவராஜ் சிங்
11. விராட் கோலி
12. யூசுஃப் பதான்
13. மனோஜ் திவாரி
14. இர்ஃபான் பதான்
15. விருத்திமன் சஹா (வி.கா)
16. ஜாகீர் கான்
17. அபிஷேக் நாயர்
18. இஷாந்த் ஷர்மா
19. அமித் மிஸ்ரா
20. முனஃப் படேல்
21. ஆர். அஸ்வின்
22. ரவீந்த்ர ஜடேஜா
23. ஆர்.பி.சிங்
24. ப்ரக்யான் ஓஜா
25. பாலாஜி
26. ஹர்பஜன் சிங்
27. சுரேஷ் ரெய்னா
28. பிரவீன் குமார்
29. தவால் குல்கர்ணி
30. நமன் ஓஜா

இவர்களில் பலருக்கு விளையாடவே வாய்ப்பு இல்லை.

சிலர் தங்கள் இடம் தக்திக்கு உரியதா என்ற கேள்விக்கு உரியவராக இருக்கிறார்கள்..

சச்சின் டி20 அணியில் இல்லை.

இதில் 15 பேர் அணியில் இடம் பெறலாம். அந்தப் பதினைந்து பேர் யார் யார்?

mania
28-04-2009, 08:36 AM
ஐ பி எல் போட்டிகள் முடியும் தருணத்தில் இதை அலசலாமே......!!!!
அன்புடன்
மணியா...

தாமரை
28-04-2009, 08:46 AM
இப்போதைக்கு கர்சீஃப் போட்டு இடம் பிடிச்சு வச்சிருக்கேன்..

ஆட்டத்தைக் கவனிக்க யார் யார் என்ற லிஸ்ட் தேவை என்பதால் இப்பவே லிஸ்டை போட்டுட்டேன்.. இன்னிக்கு இந்தலிஸ்ட்ல ஆடப் போறது யாரு?


சேவாக், கம்பீர், அமித் மிஸ்ரா, ஜெடெஜா., நமன் ஓஜா, யூசுஃப் பதான்..

வெறும் புள்ளி விவரங்கள் ஒருத்தரோட திறமையை மதிப்பிட முடியாது இல்லையா... அதுக்குதான்.

mania
28-04-2009, 09:42 AM
இப்போதைக்கு கர்சீஃப் போட்டு இடம் பிடிச்சு வச்சிருக்கேன்..
ஆட்டத்தைக் கவனிக்க யார் யார் என்ற லிஸ்ட் தேவை என்பதால் இப்பவே லிஸ்டை போட்டுட்டேன்.. இன்னிக்கு இந்தலிஸ்ட்ல ஆடப் போறது யாரு?


சேவாக், கம்பீர், அமித் மிஸ்ரா, ஜெடெஜா., நமன் ஓஜா, யூசுஃப் பதான்..

வெறும் புள்ளி விவரங்கள் ஒருத்தரோட திறமையை மதிப்பிட முடியாது இல்லையா... அதுக்குதான்.

ஹா....ஹா.....ஹா....நானும்தான்.....:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா:D:D

மதி
28-04-2009, 10:34 AM
ஹா....ஹா.....ஹா....நானும்தான்.....:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா:D:D
அப்போ நானு:rolleyes::rolleyes:

mania
28-04-2009, 11:21 AM
அப்போ நானு:rolleyes::rolleyes:

:D:D ம்ம்ம்ம்ம்ம் நான் தான் நானு.....நீ நானோ....:D:D
அன்புடன்
மணியா....:D

மதி
28-04-2009, 11:23 AM
:D:D ம்ம்ம்ம்ம்ம் நான் தான் நானு.....நீ நானோ....:D:D
அன்புடன்
மணியா....:D
ஓஹோ..:rolleyes::rolleyes:

mania
28-04-2009, 11:25 AM
ஓஹோ..:rolleyes::rolleyes:

இந்த ஓஹோவுக்கு அர்த்தம் என்னவோ.......?????
அன்புடன்
மணியா....:D

தாமரை
28-04-2009, 11:41 AM
அணி வாரியாக வீரர்கள். இதுவரை ஆட வாய்ப்பே கிடைக்காதவர்கள் சிவப்பு வர்ணத்தில்

இந்தப் பட்டியல் மிக உதவியாக இருக்கும்

டெல்லி டேர் டெவில்ஸ்

1. வீரேந்திர சேவாக்
2. தினேஷ் கார்த்திக்
3. கவுதம் கம்பீர்
4. மனோஜ் திவாரி
5. அமித் மிஸ்ரா

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

1. முரளி விஜய்
2. மஹேந்திர சிங் தோனி
3. பத்ரிநாத்
4. ஆர். அஸ்வின்
5. பாலாஜி
6. சுரேஷ் ரெய்னா

மும்பை இண்டியன்ஸ்

1. அஜிங்க்யா ரஹானே
2. ஜாகீர் கான்
3. அபிஷேக் நாயர்
4. ஹர்பஜன் சிங்
5. தவால் குல்கர்ணி


ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்

1. ரோஹித் ஷர்மா
2. ஆர்.பி.சிங்
3. ப்ரக்யான் ஓஜா

பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ்

1. ராபின் உத்தப்பா
2. விராட் கோலி
3. பிரவீன் குமார்

பஞ்சாப் கிங்க்ஸ்

1. யுவராஜ் சிங்
2. இர்ஃபான் பதான்


ராஜஸ்தான் ராயல்ஸ்

1. யூசுஃப் பதான்
2. முனஃப் படேல்
3. ரவீந்த்ர ஜடேஜா
4. நமன் ஓஜா

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ்

1. விருத்திமன் சஹா (வி.கா)
2. இஷாந்த் ஷர்மா

தாமரை
28-04-2009, 11:42 AM
இந்த ஓஹோவுக்கு அர்த்தம் என்னவோ.......?????
அன்புடன்
மணியா....:D

பலர் மதிக்காக ரிசர்வ் பண்ணி காத்துகிட்டு இருக்காங்கன்னு அர்த்தம். :aetsch013::aetsch013::aetsch013:

மதி
28-04-2009, 12:46 PM
பலர் மதிக்காக ரிசர்வ் பண்ணி காத்துகிட்டு இருக்காங்கன்னு அர்த்தம். :aetsch013::aetsch013::aetsch013:
இப்படி சொல்லி தான் ரணகளமாக்கறாங்க... அந்த பலர்ல ஒருத்தரயாவது கண்ணுல காட்டுங்கப்பா....:traurig001::traurig001::traurig001::traurig001:

புலம்புவதையே பிழைப்பாய் வைத்திருக்கும்..

இன்பா
29-04-2009, 03:21 PM
ஆகா..!

இவ்வளவு திறமை வாய்ந்த ப்ளேயர்கள் இருக்கிறார்களா அப்போ நமக்குத் தான் உலக்கோப்பை... !!!!!!

தாமரை
29-04-2009, 03:43 PM
ஆகா..!

இவ்வளவு திறமை வாய்ந்த ப்ளேயர்கள் இருக்கிறார்களா அப்போ நமக்குத் தான் உலக்கோப்பை... !!!!!!

பேரைப் போட்டாவே இப்படியா...

இப்போ ஆப்பிரிக்காவில் ஆடுற ஆட்டத்துக்கும் இங்கிலாந்தில் ஆடப்போற ஆட்டத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கு.

அதுவேற தலை நேர்ல போகப்போறேன்னு சொல்லி இருக்காரு. யாராச்சும் சரியா ஆடலைன்னா அவரே இறங்கிடுவாரு..

அப்ப எந்தக் கோப்பை நமக்கு?:eek::icon_ush::rolleyes:

aren
30-04-2009, 02:49 AM
திவாரி டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேசம்
30-04-2009, 08:00 AM
பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது.மணி அண்ணா போற நேரத்தில் தாமரை இந்த திரி ஆரம்பிச்சுக்கார்...

தாமரை
04-05-2009, 11:45 AM
பார்த்தீங்களா பார்த்தீங்களா அணியை அறிவிச்சாச்சு..

இப்போ இடம் பிடிச்ச வீரர்கள் சரியா ஆடாம, இடம் பிடிக்காத வீரர்கள் வெறியுடன் ஆடி பிசிசிஐ மூஞ்சில கரிபூசுவாங்கன்னு எதிர்பார்க்கலாம்..


காப்டன் மற்றும் விக்கெட் காப்பாளர்

மஹேந்த்ர சிங் தோனி

பேட்ஸ்மேன்

கௌதம் கம்பீர்

பேட்டிங் ஆல்ரவுண்டர்கள்

வீரேந்திர சேவாக்
சுரேஷ் ரெய்னா
யுவராஜ் சிங்
யூசுஃப் பதான்
ரோஹித் ஷர்மா
ரவீந்த்ர ஜெடஜா

பௌலிங் ஆல்ரவுண்டர்கள்

பிரவீண் குமார்
இர்ஃபான் பதான்

சுழல் பந்து வீச்சு

ஹர்பஜன் சிங்
பிரக்யான் ஓஜா

வேகப்பந்து வீச்சு

ஜாகீர்கான்
ஆர்.பி.சிங்
இஷாந்த் ஷர்மா

நேசம்
05-05-2009, 04:46 AM
இதிலும் கடைசியாக விளையாடிய வீரர்களுக்கு தான் வாய்ப்பு கொடுப்பார்கள்.

aren
04-06-2009, 08:56 AM
நேற்று நடந்த பிராக்டிஸ் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றுவிட்டது. பாராட்டுக்கள். ஆனால் இதை வைத்து இந்தியதான் கோப்பையை வெல்லும் என்று சொல்லிவிடமுடியாது. பார்க்கலாம் நிலமை எப்படி இருக்கிறதென்று.

யார் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறீர்கள். உங்கள் கணிப்புகளை இங்கே பதிவு செய்யலாமே?

aren
04-06-2009, 09:00 AM
எனக்குத் தெரிந்து சூப்பர் எட்டிற்கு தேர்வுபெறு அணிகள் இதுவாக இருக்கலாம்:

1. இங்கிலாந்து
2. மேற்று இண்டீஸ்
3. ஆஸ்திலேலியா
4. தென் ஆப்பிரிக்கா
5. இந்தியா
6. பாகிஸ்தான்
7. நியூஜிலாந்து
8. இலங்கை

அயர்லாந்தும், பங்ளாதேஷும் நன்றாகவே விளையாடுகிறார்கள். நடுவில் பூந்து குட்டையைக் குழப்பலாம் என்று நினைக்கிறேன்.

aren
04-06-2009, 09:00 AM
இது என்ன பெரிய கண்டுபிடிப்பு என்று மக்கள் என்னை கிண்டல் செய்வார்கள், இருந்தாலும் ஆரம்பிக்கவேண்டுமே, அதனால்தான் ஆரம்பித்திருக்கிறேன்.

மக்களே வாருங்கள்.

நேசம்
04-06-2009, 09:09 AM
சூப்பர் எட்டுக்கு கூட எளிதாக சொல்லலாம்.அணியில் பலத்தை வைத்து.அதனால் அரையிறுதிக்கு வரும் அணிகளை கணியுங்கள்.ஆரென் அண்ணா பங்களாதெசு தவிர்த்து டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை கூறிவிட்டார்.இந்த மாதிரி போட்டிகளில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.

aren
04-06-2009, 09:22 AM
என்னுடைய கணிப்புப்படி அரையிறுதிக்கு தேர்வுபெறும் அணிகள்:

1. இந்தியா
2. இங்கிலாந்து
3. ஆஸ்திரேலியா
4. மேற்கு இண்டீஸ்

இது என்னுடைய கணிப்பு.

நேசம்
04-06-2009, 09:24 AM
அப்படியே பைனலுக்கு போகும் அணிகள், வெற்றி பெறும் அணிகள் சொல்லிங்கிட்டின்னா... பெட் கட்டலாம் உங்களை நம்பி....

aren
04-06-2009, 09:28 AM
இங்கிலாந்து
மேற்கு இண்டீஸ்

இந்த முறை மேற்கு இண்டீஸ் வென்றாலும் ஒன்னும் சொல்வதற்கில்லை.

mania
05-06-2009, 04:53 AM
இங்கிலாந்து
மேற்கு இண்டீஸ்

இந்த முறை மேற்கு இண்டீஸ் வென்றாலும் ஒன்னும் சொல்வதற்கில்லை.

:rolleyes::rolleyes: நீங்க ஒன்னும் சொல்லிடாதீங்க......அவுங்க ஜெயிச்சிட போறாங்க....:D:D:D
அன்புடன்
மணியா....:D
ஆமாம்.......நீங்க வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா......???? :rolleyes:
ஆசையுடன்
மணியா....
:D

aren
05-06-2009, 05:16 AM
:rolleyes::rolleyes: நீங்க ஒன்னும் சொல்லிடாதீங்க......அவுங்க ஜெயிச்சிட போறாங்க....:D:D:D
அன்புடன்
மணியா....:D
ஆமாம்.......நீங்க வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கா......???? :rolleyes:
ஆசையுடன்
மணியா....
:D

ஒரு இடத்திற்கு செல்லவேண்டிய வேலை இருக்கிறது ஆனால் அதற்கான சந்தர்பம் இன்னும் தெரியவில்லை. அது சரியானால் வரவேண்டிய நிலை ஏற்படும். கிளாஸ்டர்ஷர் வர நேரும் என்றே நினைக்கிறேன். அப்படி வரவேண்டியதாக இருந்தால் உங்களுக்கு தகவல் அனுப்புகிறேன்.

mania
05-06-2009, 05:29 AM
16ம்தேதி நாட்டிங்ஹாமில்.... மறந்துவிடாதீர்கள்....
அன்புடன்
மணியா...

மதி
05-06-2009, 06:10 AM
தலை... லண்டனிலா...??? உங்களை வரவேற்க ஆட்டோ வந்ததா??

தாமரை
05-06-2009, 06:16 AM
16ம்தேதி நாட்டிங்ஹாமில்.... மறந்துவிடாதீர்கள்....
அன்புடன்
மணியா...

நாட்டிங்ஹாமில் நாட்டி ஹம் - மணியா-ஆரென்!!!

இப்பவாவது கம்-நாட்டி (வாடா குறும்புக்காரப் பயலே) என்று கூப்பிடுகிறாரா பார்க்கலாம்.

பயணக்கட்டுரை தலைப்பு ரெடி!

mania
05-06-2009, 06:40 AM
நாட்டிங்ஹாமில் நாட்டி ஹம் - மணியா-ஆரென்!!!

இப்பவாவது கம்-நாட்டி (வாடா குறும்புக்காரப் பயலே) என்று கூப்பிடுகிறாரா பார்க்கலாம்.

பயணக்கட்டுரை தலைப்பு ரெடி!

யூ....யூ....யூ.....நாட்டி....:D:D
அன்புடன்
மணியா...:D

mania
05-06-2009, 06:42 AM
தலை... லண்டனிலா...??? உங்களை வரவேற்க ஆட்டோ வந்ததா??

ஹி...ஹி...ஹி....நான் லண்டன் இல்லை.....பக்கத்திலே லண்டன் குறுக்கு சந்து......:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா...:D:D

தாமரை
05-06-2009, 06:46 AM
16ம்தேதி நாட்டிங்ஹாமில்.... மறந்துவிடாதீர்கள்....
அன்புடன்
மணியா...


யூ....யூ....யூ.....நாட்டி....:D:D
அன்புடன்
மணியா...:D


ம்ம் 16 - (மார்க்(கண்டேயன்) - ஞாபகத்துக்கு வர்ரார்)
நாட்டி..
கலக்கறீங்க


நடத்துங்க நடத்துங்க..

யூ யூ யூ நாட்டி
யே யே யே பாட்டி
ஆ ஆ ஆ காட்டி
விடுங்க கொஞ்சம் ஊட்டி...

(ஊட்டின்னதும் மணியா ஹேப்பி - இன்று முதல் ஹேப்பின்னு பாடுவார்.. :D :D :D)

தாமரை
05-06-2009, 06:47 AM
ஹி...ஹி...ஹி....நான் லண்டன் இல்லை.....பக்கத்திலே லண்டன் குறுக்கு சந்து......:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா...:D:D

குறுக்கை ஓடிக்கணும்னு யாரோ பேசிகிட்டு இருந்தாங்களே!!!

தாமரை
05-06-2009, 08:40 AM
இந்தியா
இலங்கை
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்
மேற்கு இந்தியத் தீவுகள்
நியூசிலாந்து

----------------

இந்தியா
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்

-----------

தென்னாப்பிரிக்கா - இந்தியா

-----------

இந்தியா

aren
05-06-2009, 10:33 AM
ஆண்டூரு சைமண்ட்ஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ஆஸ்திரேலியா டீம் கொஞ்சம் கலக்கத்தில்தான் இருக்கிறது.

கடைசி எட்டு இடத்திற்கே வருமா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.

aren
06-06-2009, 03:01 AM
இங்கிலாந்து முதல் மாட்சில் ஹாலந்திடம் தோற்றுவிட்டது. கடைசி எட்டிற்கே தேர்வாகுமா என்று தெரியவில்லை. பூட்டகேஸ்தான் போலிருக்குது.

aren
06-06-2009, 03:11 AM
நான் இன்றுதான் குரூப் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். இன்று இங்கிலாந்து தோற்றுவிட்டதால் அது பாகிஸ்தானை வென்றேயாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி பாகிஸ்தானுடன் தோற்கும்பட்சத்தில் பாகிஸ்தானும் ஹாலந்தும் கடைசி எட்டிற்கே தேர்வாகும்.

ஆனால் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் ஆஸ்திலேயா, மேற்கு இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகியவை ஒரே குரூப்பில் இருக்கிறது. அப்படியென்றால் இதில் இரண்டுதான் தேர்வாகமுடியும். இதில் மேற்கு இண்டீஸில் கிரிஸ் கெய்ல் ஆடவில்லை என்ற நியூஸ் வந்திருக்கிறது. அப்படியானால் இலங்கை நிச்சயம் கடைசி எட்டிற்கு தேர்வாகிவிடும். ஆஸ்திரேலியாவில் சைமன்ட்ஸ் இல்லாதபட்சத்தில் ஆஸ்திரேலியாவும் பிரச்சனையில் உள்ளது. மேற்கு இண்டீஸ் அல்லது ஆஸ்திரேலியா உள்ளே போகும்.

இப்பொழுது என்னுடைய கணிப்புப்படி கடைசி எட்டு குழுக்கள் இதுவாக இருக்கலாம்:

1. இந்தியா
2. பங்ளாதேஷ்
3. பாகிஸ்தான்
4. ஹாலந்து
5. தென் ஆப்பிரிக்கா
6. நியூஜிலாந்து
7. இலங்கை
8. ஆஸ்திரேலியா அல்லது மேற்கு இண்டீஸ்

இதில் இங்கிலாந்து கடைசி எட்டிற்கு வருவதே சந்தேகம் என்று தோன்றுகிறது.

பாகிஸ்தான் போன முறை உலகக்கோப்பையில் அயர்லாந்திடம் தோற்று கடைசி எட்டிலிருந்து வெளியேறியதால் இந்தமுறை 20/20 தொடரில் கொஞ்சம் கவனத்துடன் விளையாடும் என்றே எதிர்பார்க்கிறேன்.

aren
06-06-2009, 03:14 AM
மேலே சொன்னபடி பார்த்தால் செமி ஃபைனலில் இருக்கும் குழுக்கள் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்:

1. இந்தியா
2. தென் ஆப்பிரிக்கா
3. இலங்கை
4. பாகிஸ்தான்

அப்படின்னா இந்த முறையும் கோப்பை இந்திய துணைகண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டிற்காக இருக்கலாம்.

அக்னி
06-06-2009, 02:55 PM
யாராச்சும் மாட்ச் பார்க்கும் (இலவச) சுட்டிகளிருந்தால், சுட்டுங்களேன்...

ஓவியன்
06-06-2009, 04:39 PM
யாராச்சும் மாட்ச் பார்க்கும் (இலவச) சுட்டிகளிருந்தால், சுட்டுங்களேன்...

மேட்ச் பார்க்கும் டிவி ஒன்று இருக்கு, சுட்(டி)டு தரட்டா...??? :D:D:D:D

"பொத்தனூர்"பிரபு
06-06-2009, 05:59 PM
யாராச்சும் மாட்ச் பார்க்கும் (இலவச) சுட்டிகளிருந்தால், சுட்டுங்களேன்...
http://www.teezcricket.com/
http://www.teezcricket.com/


http://www.teezcricket.com/

"பொத்தனூர்"பிரபு
06-06-2009, 06:32 PM
why dhoni comes to play ahead of inform raina , yuvaraj, and y pathan ??????????

"பொத்தனூர்"பிரபு
06-06-2009, 06:32 PM
why dhoni comes to play ahead of inform raina , yuvaraj, and y pathan ??????????
why dhoni comes to play ahead of inform raina , yuvaraj, and y pathan ??????????
why dhoni comes to play ahead of inform raina , yuvaraj, and y pathan ??????????
why dhoni comes to play ahead of inform raina , yuvaraj, and y pathan ??????????

மதி
06-06-2009, 06:32 PM
ம்ம்... 180 எடுத்திருக்கிறார்கள். போதுமா என்று இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிய ஆரம்பித்துவிடும்.

"பொத்தனூர்"பிரபு
06-06-2009, 06:33 PM
180/5

மதி
06-06-2009, 06:33 PM
பிரபு.. இரண்டு முறை பதிந்துவிட்டீர்கள் போலும். ஆங்கிலத்தில் பதிப்பதைத் தவிருங்களேன்.

"பொத்தனூர்"பிரபு
06-06-2009, 06:38 PM
பிரபு.. இரண்டு முறை பதிந்துவிட்டீர்கள் போலும். ஆங்கிலத்தில் பதிப்பதைத் தவிருங்களேன்.


sorry not able to type in tamil

மதி
06-06-2009, 06:43 PM
மன்ற பக்கத்தின் கீழுள்ள unicode converter-ஐ பயன்படுத்துங்கள்...

aren
08-06-2009, 03:45 AM
நண்பர்களே,

மேற்கு இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொடுத்த உதையைப் பார்த்தீர்களா? அடேங்கப்பா. அந்த அடி, இந்த அடி, எப்படியெல்லாம் கெய்ல் புரட்டி எடுத்துவிட்டார். கலக்கல்தான் போங்க.

மேற்கு இண்டீஸ் எப்படியும் கடைசி எட்டிற்கு தேர்வாகிவிடும் போலிருக்கிறது. இன்னொரு டீம் இலங்கையா அல்லது ஆஸ்திரேலியாவா என்று இன்று தெரிந்துவிடும்.

இங்கிலாந்து பாகிஸ்தானை வென்று கடைசி எட்டிற்கு தேர்வாகிவிட்டது.

நேற்றைய நிலவரம்படி கடைசி எட்டிற்கு தேர்வாகிவிட்டவர்கள் அல்லது தேர்வாக அதிக சந்தர்பம் உடையவர்கள்:

1. இங்கிலாந்து
2. தென் ஆப்பிரிக்கா
3. நியூஜிலாந்து
4. மேற்கு இண்டீஸ்
5. இந்தியா

பங்களாதேஷ் இன்று எப்படி ஆடப்போகிறது என்பதைப் பொருத்து அது கடைசி எட்டிற்கு வருமா வராதா என்பதை கணிக்கமுடியும்.

பாகிஸ்தான் ஹாலந்தை வென்றால் உள்ளே வந்துவிடமுடியும்.

இலங்கை ஆஸ்திரேலியாவை வென்றால் உடனே அதனால் கடைசி எட்டிற்கு வந்துவிடமுடியும். நடக்குமா?

நேசம்
08-06-2009, 06:55 AM
ஒருவேளை பாகிஸ்தான் நெதர்லாந்தை வெற்றிப்பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் தான் இரண்டு அணிகளும் போக முடியும்.மேற்கு இந்தியா அணி ஆட்டகாரர்களின் ஆட்டம் நிலையானதாக இருக்காது.அதனால் அவர்களுக்கு சற்று வாய்ப்பு குறைவு

aren
08-06-2009, 08:26 AM
ஒருவேளை பாகிஸ்தான் நெதர்லாந்தை வெற்றிப்பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் தான் இரண்டு அணிகளும் போக முடியும்.மேற்கு இந்தியா அணி ஆட்டகாரர்களின் ஆட்டம் நிலையானதாக இருக்காது.அதனால் அவர்களுக்கு சற்று வாய்ப்பு குறைவு

பாகிஸ்தான் பயங்கரமாக இங்கிலாந்திடம் அடி வாங்கியதால் அது ஹாலந்துடன் ஆடும்பொழுது இந்த ரன்ரேட் விஷயத்தில் நிச்சயம் கவனம் செலுத்தேன் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

மேற்கு இண்டீஸ் நல்ல ரன்ரேட்டில் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளதால், இலங்கையுடன் மேற்கு இண்டீஸ் தோற்றாலும் கடைசி எட்டிற்கு செல்லமுடியும். ஆனால் இதே ரன்ரேட்டில் தோற்றுவிட்டால்தான் பிரச்சனை. அது நடக்காது என்றே எதிர்பார்க்கிறேன்.

ஆகையால் பாகிஸ்தானும் மேற்கு இண்டீஸும் கடைசி எட்டுக்கு போகும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்.

அறிஞர்
08-06-2009, 03:31 PM
வங்காளதேசம் மூட்டையை கட்டியது..
அயர்லாந்து, பங்களாதேஷ் அணியை தோற்கடித்து... சூப்பர் 8ல் புகுந்தது..

அமரன்
08-06-2009, 04:08 PM
போட்டிகளை நேரடியாகப் பார்க்காவிட்டாலும் பூனைகள் புலிகளாகவும் புலிகள் பூனையாகவும் புதுப் பொலிவுடன் போட்டிகளின் முடிவுகள் ஆனந்த அதிர்ச்சி தருகின்றன.

ஜாக்
08-06-2009, 04:23 PM
அயர்லாந்திடன் வங்கதேசம் மண்ணை கவ்வி விட்டதாஅல் இந்தியா சூப்பர் 8 க்கு தகுதி பெற்றுவிட்டது:icon_b:

அறிஞர்
08-06-2009, 07:01 PM
இலங்கை அருமையாக விளையாடுகிறது...
ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால்.. நன்றாக இருக்கும்.
ஒருநாள் போட்டியின் உலக சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.

பாலகன்
08-06-2009, 07:05 PM
இலங்கை அருமையாக விளையாடுகிறது...
ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால்.. நன்றாக இருக்கும்.
ஒருநாள் போட்டியின் உலக சாம்பியனை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.

இப்போ கொஞ்சம் தடுமாற்றம் இருக்குது. தில்ஷான் அவுட்

அறிஞர்
08-06-2009, 07:24 PM
தடுமாற்றத்தை அணித்தலைவர் சமாளிக்கிறார்.
127/4
33ரன்கள் 23 பந்தில் தேவை.

அறிஞர்
08-06-2009, 07:41 PM
ஆஸ்திரேலியா அடி வாங்கி.. ஊருக்கு மூட்டை கட்டிவிட்டது.

மிக மோசமாக பவுலிங்க் வீசின பிரட் லீ இனி டி20 அணியில் நீடிப்பது கடினம்.

இலங்கை ஆட்டம் அபாரம்.

இன்றைய இரு போட்டிகளும் சூப்பர்.
டாப் 8ல் உள்ள இரு அணிகள் வீட்டுக்கு மூட்டை கட்டிவிட்டது.

அமரன்
08-06-2009, 08:07 PM
இலங்கையின் இளமுகங்கள் புதுமுகப் பந்து வீச்சாளர்களாகப் பிரகாசித்தமை நல்ல மாற்றம்.

நேசம்
09-06-2009, 05:52 AM
ஆஸ்திரேலியா வெளியறியது தான் ரொம்ப சந்தோசம்.பாகிஸ்தானா இல்லை இங்கிலாந்தா சூப்பர் எட்டுக்கு போவது என்று இன்று தெரிந்து விடும்

aren
09-06-2009, 06:32 AM
ஆஸ்திரேலியா வெளியறியது தான் ரொம்ப சந்தோசம்.பாகிஸ்தானா இல்லை இங்கிலாந்தா சூப்பர் எட்டுக்கு போவது என்று இன்று தெரிந்து விடும்

நண்பரே

இங்கிலாந்து சூப்பர் எட்டிற்கு செல்வது உறுதியாகிவிட்டது. இப்பொழுது ஹாலந்தா அல்லது பாகிஸ்தானா என்று பார்க்கவேண்டும்.

நேசம்
09-06-2009, 08:33 AM
எப்படின்னா ஒருவேளை பாகிஸ்தான் ஹாலந்தை வெற்றிப்பெற்றால் ஆளுக்கொடு வெற்றியாகிறது.பிறகு ரன் ரேட் தானே பார்க்கப்படும்

aren
09-06-2009, 09:23 AM
எப்படின்னா ஒருவேளை பாகிஸ்தான் ஹாலந்தை வெற்றிப்பெற்றால் ஆளுக்கொடு வெற்றியாகிறது.பிறகு ரன் ரேட் தானே பார்க்கப்படும்

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இங்கிலாந்து ஹாலந்திடம் கடைசி பந்தில்தான் தோற்றது ஆகையால் ஹாலந்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையேயான ரன்ரேட் மிகவும் குறைவு. ஆனால் இங்கிலாந்து பாகிஸ்தானுடன் ஆடியபொழுது கிடைத்த ரன்ரேட் விகிதம் மிகவும் அதிகம். ஆகையால் அடுத்த மாட்சில் அயர்லாந்து பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டால் ஹாலந்தும் பாகிஸ்தானும் மட்டுமே ரன்ரேட் விஷயத்தில் சண்டை போட்டுக்கொள்ளும், இங்கிலாந்து தானாகவே அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும்.

பாகிஸ்தான் தோற்றுவிட்டால் கவலையேயில்லை அயர்லாந்தும் இங்கிலாந்தும் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும்.

ஆகையால் இங்கிலாந்து அடுத்த கட்டத்திற்கு ஏற்கெனவே தேர்வாகிவிட்டது என்று கொள்ளலாம்.

aren
09-06-2009, 09:24 AM
யாரோ ஒரு ஆள் அயர்லாந்திற்கு ஓட்டு போட்டுள்ளார். ரொம்பவும் தைரியம் அவருக்கு என்று நினைக்கிறேன்.

நான் ஒருவன்தான் இதுவரை மேற்கு இண்டீஸிற்கு ஓட்டு போட்டுள்ளேன் என்று தெரிகிறது.

தாமரை
09-06-2009, 09:28 AM
பாகிஸ்தான் ஹாலந்தை 25 ரன்கள் அல்லது 3 ஓவர்கள் வித்தியாசத்தில் வென்றால் பாகிஸ்தானும் இங்கிலாந்தும் உள்ளே செல்லும். இல்லாவிட்டால் இங்கிலாந்தும் ஹாலந்தும் உள்ளே செல்லும்.

இங்கிலாந்து இரு போட்டிகளிலும் விளையாடியாகி விட்டது, எனவே மேற்கண்ட கணக்குப்படி இங்கிலாந்து ஏற்கனவே தன் இடத்தை உறுதி செய்து கொண்டு விட்டது.

கீழ்கண்ட விதிப்படி

Placement for the Super Eight stage is determined as follows:
The first two teams in each group are placed 1 or 2. They will retain this position for the Super Eight stage, irrespective of whether they finish first or second in their group, unless they are knocked out by the team 3 in their group. In this instance, team 3 replaces the position of the team they knock out.

இதன்படி ஏ பிரிவில் இந்தியா A1, அயர்லாந்து A2 (பங்களாதேஷின் இடம்)
பி பிரிவில் அயர்லாந்து B1 (பாகிஸ்தானின் இடம்) இங்கிலாந்து B2
சி பிரிவில் மே.இ.தீவுகள் C1 (ஆஸ்திரேலியாவின் இடம்) இலங்கை C2
டி பிரிவில் நியூசிலாந்து D1, தென்னாப்பிரிக்கா D2.


Group A----Group B----Group C------Group D
இந்தியா----நெதர்லாந்து--மே.இ.தீவுகள்--நியூசிலாந்து
அயர்லாந்து--இங்கிலாந்து--இலங்கை-----தென்னாப்பிரிக்கா


இதிலிருந்து
க்ரூப் E : இந்தியா, இங்கிலாந்து, மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்கா
க்ரூப் F : அயர்லாந்து, நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து

ஆக இலங்கை நியூசிலாந்திற்கு அரையிறுதி வாய்ப்பு இப்பொழுதே உறுதியாகிறது...

இது எப்படி இருக்கு?

நேசம்
09-06-2009, 09:28 AM
நிங்கள் சொல்லும் கணக்கு சரிதான்.இங்கிலாந்து அடுத்த கட்டத்துக்கு உறுதியாகிவிட்டது.யாரும் எதிர்பார்க்காத மேற்கு இந்தியா தான் இந்த கப்பை வெல்லும் என்று எனக்கு தோன்றியது.கெய்லை தவிர மற்ற முன்னனி ஆட்டகாரர்கள் சரியாக விளையாடுவதில்லை.அதனால் வாய்ப்பு சற்று குறைவாக தெரிகிறது

தாமரை
09-06-2009, 09:46 AM
ஆண்டூரு சைமண்ட்ஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதால் ஆஸ்திரேலியா டீம் கொஞ்சம் கலக்கத்தில்தான் இருக்கிறது.

கடைசி எட்டு இடத்திற்கே வருமா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.

ஏனுங்க நீங்க குறி சொன்னா நல்ல வருமானம் வருமே...

:icon_b:

அறிஞர்
09-06-2009, 12:51 PM
பாகிஸ்தான் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.. 38-1

நேசம்
09-06-2009, 01:29 PM
பாகிஸ்தான் முன்று விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் * 14 ஒவர்

நேசம்
09-06-2009, 01:42 PM
அணித்தலைவரும் மிஸ்பாவும் அதிரடியாக விளையாடுவதால் அணி ஸ்கோர் 137/3 * 17 ஒவரில்

நேசம்
09-06-2009, 01:57 PM
இறுதியாக ஐந்து விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள்.யூனுஸ்கான் 36, மிஸ்பா 31,

அறிஞர்
09-06-2009, 02:46 PM
நெதர்லாந்து தடுமாறுகிறது. 49/4 (9 ஓவர்)
பாகிஸ்தான் வெற்றிப்பாதையில் செல்கிறது...

ராஜா
09-06-2009, 05:04 PM
ஆஸ்திரேலியாவோட டப்பா டான்ஸ் ஆடிருச்சு போல..!

அமரன்
09-06-2009, 08:18 PM
ஆஸ்திரேலியாவோட டப்பா டான்ஸ் ஆடிருச்சு போல..!

ஒருத்தரே ஆண்டுட்டு இந்தா சலிப்புத் தட்டும். இப்படி ஆட்டம் கண்டால் ஆ(கொ)ட்டங்கள் அடங்கி ஆட்டங்கள் களைகட்டும். நமக்கு கொண்டாட்டம்தானே.

தென்னாபிரிக்கா நியூசிலாந்தை ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திவிட்டது.

பாகிஸ்தான் நெதர்லாந்தை வெற்றிகொண்டது.

அறிஞர்
09-06-2009, 08:34 PM
நாளை... இலங்கை, மேற்கு இந்திய அணி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
நாளை ஆட்டத்தில் இந்தியா தோற்றால், சில சாதகங்கள் கிடைக்கும்.

aren
10-06-2009, 05:27 AM
நாளை ஆட்டத்தில் இந்தியா தோற்றால், சில சாதகங்கள் கிடைக்கும்.

என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நமக்கு எப்படி சாதகங்கள் கிடைக்கும். நாம் இன்றைய போட்டியில் ஜெயித்தாலும் தோற்றாலும் நாம் குரூப் ஈ யில் தான் இருப்போம். அப்படியென்றால் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இண்டீஸ் ஆகியோர்தான் இருப்போம்.

நேசம்
10-06-2009, 05:32 AM
இந்தியா தோற்றால் குருப் எப் க்கு வந்து விடும் என்று அறிஞர் நினைக்கிறார் போலிருக்கு.அப்படி இந்தியா போனால் அங்கு தான் கடுமையான போட்டி இருக்கும்.ஏனென்றால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மிகப்பெரிய சவாலை கொடுக்கும்.

aren
10-06-2009, 08:05 AM
இந்தியா தோற்றால் குருப் எப் க்கு வந்து விடும் என்று அறிஞர் நினைக்கிறார் போலிருக்கு.அப்படி இந்தியா போனால் அங்கு தான் கடுமையான போட்டி இருக்கும்.ஏனென்றால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மிகப்பெரிய சவாலை கொடுக்கும்.

குரூப் எஃப்பிற்கு போக சான்ஸே இல்லை. இந்த தடவை சீடிங் முறையில் போட்டிகளை வகுத்துள்ளார்கள். ஆகையால் ஆஸ்திரேலியா இருந்த இடத்தில் அதனை வென்ற மேற்கு இண்டீஸ் உள்ளது. அதுபோல் பங்களாதேஷ் இருக்கவேண்டிய இடத்தில் அயர்லாந்து இருக்கிறது. இந்த இரண்டு மாற்றமே சாத்தியம்.

நான் மேலே இன்னொரு பதிவில் கொடுத்துள்ள பட்டியலைப் பார்க்கவும்.

aren
10-06-2009, 08:08 AM
Thu Jun 11
13:30 local | 12:30 GMT 13th Match, Group F - Ireland v New Zealand (D1 v A2)
Trent Bridge, Nottingham 6 - 17° C Forecast AM Showers



Thu Jun 11
17:30 local | 16:30 GMT 14th Match, Group E - England v South Africa (B2 v D2)
Trent Bridge, Nottingham 6 - 17° C Forecast AM Showers



Fri Jun 12
13:30 local | 12:30 GMT 15th Match, Group F - Pakistan v Sri Lanka (B1 v C2)
Lord's, London 10 - 18° C Forecast Mostly Sunny



Fri Jun 12
17:30 local | 16:30 GMT 16th Match, Group E - India v West Indies (A1 v C1)
Lord's, London 10 - 18° C Forecast Mostly Sunny



Sat Jun 13
13:30 local | 12:30 GMT 17th Match, Group E - South Africa v West Indies (C1 v D2)
Kennington Oval, London 12 - 22° C Forecast Partly Cloudy



Sat Jun 13
17:30 local | 16:30 GMT 18th Match, Group F - New Zealand v Pakistan (D1 v B1)
Kennington Oval, London 12 - 22° C Forecast Partly Cloudy



Sun Jun 14
13:30 local | 12:30 GMT 19th Match, Group F - Ireland v Sri Lanka (A2 v C2)
Lord's, London 14 - 23° C Forecast Partly Cloudy



Sun Jun 14
17:30 local | 16:30 GMT 20th Match, Group E - England v India (A1 v B2)
Lord's, London 14 - 23° C Forecast Partly Cloudy



Mon Jun 15
13:30 local | 12:30 GMT 21st Match, Group E - England v West Indies (B2 v C1)
Kennington Oval, London 14 - 21° C Forecast Rain



Mon Jun 15
17:30 local | 16:30 GMT 22nd Match, Group F - Ireland v Pakistan (B1 v A2)
Kennington Oval, London 14 - 21° C Forecast Rain



Tue Jun 16
13:30 local | 12:30 GMT 23rd Match, Group F - New Zealand v Sri Lanka (D1 v C2)
Trent Bridge, Nottingham N/A

Tue Jun 16
17:30 local | 16:30 GMT 24th Match, Group E - India v South Africa (D2 v A1)
Trent Bridge, Nottingham

நேசம்
10-06-2009, 08:26 AM
என்னுடைய கணிப்பு நியூசிலாந்து அல்லது மேற்கு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,இந்தியா அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.உங்க கணிப்பு என்ன ஆரேன் அண்ணா

aren
10-06-2009, 08:36 AM
குரூப் ஈ யில் இருக்கும் அணிகள்:

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கு இண்டீஸ்

இதிலிருந்து இரண்டு அணிகள் மட்டுமே அரையிறுதிக்குச் செல்லும். என்னுடைய கணிப்புப் படி மேற்கு இண்டீஸ் மற்றும் இந்தியா செல்ல வாய்ப்பிருக்கிறது.

குரூப் எஃப்பில் இருக்கும் அணிகள்:

அயர்லாந்து
பாகிஸ்தான்
இலங்கை
நியூஜிலாந்து

இதில் பாகிஸ்தானும் இலங்கையும் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது

aren
10-06-2009, 08:37 AM
அரையிறுதியில் இந்தியாவும் இலங்கையும்
மேற்கு இண்டீஸும் பாகிஸ்தானும் மோதுவதற்கு சாத்தியம் உள்ளது

aren
10-06-2009, 08:38 AM
குரூப் ஈயில் இந்தியாவும் மேற்கு இண்டீஸும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும்.

அதுபோல் குரூப் எஃப்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கும்

நேசம்
10-06-2009, 08:51 AM
ஆக மொத்தம் ஆசியா நாட்டுக்கு கப்பை வாங்க வாய்ப்பு இருக்கும்.நிங்கள் (நானும் அதை தான் சொன்னேன்) சொல்வது நடந்தால் இந்தியா இலங்கைகூட மோத வேண்டி இருக்குமா...

அறிஞர்
10-06-2009, 03:16 PM
ஆரெனும், நேசமும் சேர்ந்து... கோப்பை கொடுத்துவிடுவார்கள் போல.....

இலங்கை-மேற்கு இந்தியா ஆட்டம் விறு விறுப்பில்லாமல் செல்கிறது. இலங்கை எளிதில் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

ஓவியன்
10-06-2009, 03:37 PM
இலங்கை எளிதில் வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

அதிரடியாக அரைச் சதம் குவித்த பிரவோவின் வீழ்ச்சி கூறி நிற்பதும் அதுதான்.....

அன்புரசிகன்
11-06-2009, 02:14 AM
ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிக்கு அருகாமையில் நிற்பது நிலை இருந்தது...

அதுவும் ஒரு சிக்ஸரை தடுத்தவிதம் நடுவர்களை குழப்பிவிட்டது இது தான் விளையாட்டில் முதல் தடவையாம்...

வெற்றிபெற்ற இலங்கையணிக்கு வாழ்த்துக்கள்.

நேசம்
11-06-2009, 05:39 AM
ஆரெனும், நேசமும் சேர்ந்து... கோப்பை கொடுத்துவிடுவார்கள் போல.....

.


ஆரென்னா கணிச்சது எல்லாம் பலிக்குது.... அதனால நம்மளவும் சேர்ந்து ஒத்து ஊதினால், பின்னால் நான் அப்பவே சொன்னேன் இல்லையான்னு பந்தா வுடுலாம்.ஆனால் இந்த தடவை

aren
11-06-2009, 05:52 AM
ஆரென்னா க*ணிச்ச*து எல்லாம் ப*லிக்குது.... அத*னால* ந*ம்ம*ள* சேர்ந்து ஒத்து ஊதினால், பின்னால் நான் அப்ப*வே சொன்னேன் இல்லையான்னு ப*ந்தா வுடுலாம்.ஆனால் இந்த* த*ட*வை

நான் சொல்வது தப்பாகி எப்படியாவது இந்தியாவிற்கு கோப்பை கிடைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

நேசம்
11-06-2009, 05:57 AM
நான் சொல்வது தப்பாகி எப்படியாவது இந்தியாவிற்கு கோப்பை கிடைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.


அப்படி தப்பு நடந்தா, அதை அவசியம் வரவேற்கனும். எனக்கு என்னமோ இந்தியா மிதப்பில் ஆடுவது மாதிரி தெரிகிறது. மிடில் ஆர்டரில் ரெய்னாவை தவிர்த்து தோனி, யூசுப் சிறப்பான ஆட்டத்தை தரவில்லை. நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்மாவை பலிகடா ஆக்குவது போல் தெரிகிறது

தாமரை
11-06-2009, 07:07 AM
இந்தியா
இலங்கை
ஆஸ்திரேலியா
இங்கிலாந்து
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்
மேற்கு இந்தியத் தீவுகள்
நியூசிலாந்து

----------------

இந்தியா
நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான்

-----------

தென்னாப்பிரிக்கா - இந்தியா

-----------

இந்தியா


நான் இன்றுதான் குரூப் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். இன்று இங்கிலாந்து தோற்றுவிட்டதால் அது பாகிஸ்தானை வென்றேயாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி பாகிஸ்தானுடன் தோற்கும்பட்சத்தில் பாகிஸ்தானும் ஹாலந்தும் கடைசி எட்டிற்கே தேர்வாகும்.

ஆனால் ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால் ஆஸ்திலேயா, மேற்கு இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகியவை ஒரே குரூப்பில் இருக்கிறது. அப்படியென்றால் இதில் இரண்டுதான் தேர்வாகமுடியும். இதில் மேற்கு இண்டீஸில் கிரிஸ் கெய்ல் ஆடவில்லை என்ற நியூஸ் வந்திருக்கிறது. அப்படியானால் இலங்கை நிச்சயம் கடைசி எட்டிற்கு தேர்வாகிவிடும். ஆஸ்திரேலியாவில் சைமன்ட்ஸ் இல்லாதபட்சத்தில் ஆஸ்திரேலியாவும் பிரச்சனையில் உள்ளது. மேற்கு இண்டீஸ் அல்லது ஆஸ்திரேலியா உள்ளே போகும்.

இப்பொழுது என்னுடைய கணிப்புப்படி கடைசி எட்டு குழுக்கள் இதுவாக இருக்கலாம்:

1. இந்தியா
2. பங்ளாதேஷ்
3. பாகிஸ்தான்
4. ஹாலந்து
5. தென் ஆப்பிரிக்கா
6. நியூஜிலாந்து
7. இலங்கை
8. ஆஸ்திரேலியா அல்லது மேற்கு இண்டீஸ்

இதில் இங்கிலாந்து கடைசி எட்டிற்கு வருவதே சந்தேகம் என்று தோன்றுகிறது.

பாகிஸ்தான் போன முறை உலகக்கோப்பையில் அயர்லாந்திடம் தோற்று கடைசி எட்டிலிருந்து வெளியேறியதால் இந்தமுறை 20/20 தொடரில் கொஞ்சம் கவனத்துடன் விளையாடும் என்றே எதிர்பார்க்கிறேன்.


ஹி ஹி இந்தக் கணிப்பில் ஆரென் தவறி இருக்கார்....
நான் சொன்னதில் ஆஸ்திரேலியா மட்டுமே சூப்பர் 8 க்கு வரலை.

க்ரூப் ஈ யில் இருந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா
க்ரூப் எஃப் ல இருந்து - ஸ்ரீலங்கா - நியூசிலாந்து

பார்ப்போமா:icon_b:

aren
11-06-2009, 08:15 AM
நம்ம கணக்கு தப்பானால் என்ன, கடைசியில் இந்தியா கோப்பையை வென்றால் எனக்கு சந்தோஷம் தாமரை.

நேசம்
11-06-2009, 08:23 AM
என்னுடைய கணிப்பு
க்ருப் ஈ யில் இருந்து இந்தியா மேற்கு இந்தியா
க்ருப் ஃப் யில் இருந்து இலங்கை நியூசிலாந்து

அறிஞர்
11-06-2009, 01:43 PM
இந்தியாவில் தோனி மூன்றாவது ஆட்டக்காரராக இறங்கினால்... ரன்விகிதம் பாதிக்கப்படும்.

ரெய்னா, யுவராஜ் சிங்க், தோனி, யூசுப் இறங்குவதே சிறந்தது...

அறிஞர்
11-06-2009, 01:45 PM
நியூசிலாந்து சிறப்பாக விளையாடுகிறது. அயர்லாந்துக்கு எதிராக பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று தோன்றுகிறது.

நியூசிலாந்து 176/4 (17.5 ஓவர்களில்)

தமிழ் தென்றல்
11-06-2009, 02:21 PM
இம்முறை இந்திய அணி உத்வேகத்துடன் ஆடுவதாகத் தோன்றவில்லை. அடுத்த அணியினர், தங்கள் ஆட்டத்தினை கணிக்க வேண்டாம் என இப்படி ஆடுகிறார்களா அல்லது தொடர் விளையாட்டுகளின் அயற்சியா தெரியவில்லை. அயர்லாந்து அணியினரிடம் கூட கவனமாக ஆடுகிறேன் பேர்வழி என 113 ஓட்டங்கள் எடுக்க 16 ஆவது ஓவர் வரை ஆடுகிறார்கள்.

1999 இறுதிப் போட்டியில் கில்கிறிஸ்டின் ஆட்டம் 133 ஓட்டங்கள் எடுக்க 10 ஓவர்களிலேயே அரை சதம் குவித்து ஆட்டமிழந்தார். அந்த அதிரடி ஆட்டமல்லவா கோப்பை நாயகர்களுக்கான ஆட்டம்.. நாங்களும் வெல்கிறோம் என அயர்லாந்திடம் கூட அஞ்சியவாறே ஆடுவது சரியல்லவே..

நாளைய போட்டியில் வெற்றி பெறுவதைப் பொறுத்தே இந்திய அணியின் அடுத்த நிலை குறித்து உறுதி சொல்ல இயலும். :)

ஓவியா
11-06-2009, 05:32 PM
என்னமோ போங்க,
என்னால் ஒரு மேட்சிக்குகூட 'லைfபா' போகாத நிலைக்கு டிக்கட் விலை எகிறிகிடக்குதே!! :traurig001::traurig001:

"பொத்தனூர்"பிரபு
11-06-2009, 10:05 PM
க்ரூப் ஈ யில் இருந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா
க்ரூப் எஃப் ல இருந்து - ஸ்ரீலங்கா - நியூசிலாந்து

அறிஞர்
11-06-2009, 11:05 PM
க்ரூப் ஈ யில் இருந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா
க்ரூப் எஃப் ல இருந்து - ஸ்ரீலங்கா - நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா மீது அபார நம்பிக்கை...
மேற்கு இந்திய தீவின் மீது நம்பிக்கை ஏதும் இல்லையா...

"பொத்தனூர்"பிரபு
12-06-2009, 02:24 AM
தென் ஆப்ரிக்க வீரர்கள் மீது நம்பிக்கை உண்டு
மே தீவு வீரர் கெய்ல , பிராவோ மீது மட்டும் நம்பிக்கை உண்டு
ஆக 2 ஐ விட 11 பெரிசு

"பொத்தனூர்"பிரபு
12-06-2009, 02:25 AM
தென்னாப்பிரிக்கா- நியூசிலாந்து


தென்னாப்பிரிக்கா

ஓவியன்
12-06-2009, 12:16 PM
இந்தியாவில் தோனி மூன்றாவது ஆட்டக்காரராக இறங்கினால்... ரன்விகிதம் பாதிக்கப்படும்...

வேகமாக முதலாவது விக்கட் விழும் சமயத்தில் மூன்றாவதாக தோனி இறங்கியும் ம்ற்ற சந்தர்பங்களில் ரெய்னா இறங்கியும் மாறுபட்ட அணுகு முறைகளைக் கையாளலாம்....

ரோஹித் நன்றாக அடித்தாடி ஓட்ட விகிதத்தை ஏற்றி விட்டு ஆட்டமிழக்கையில் தோனி மூன்றாவதாக இறங்கி அடக்கி வாசிப்பது தேவையற்றது....

அமரன்
12-06-2009, 05:37 PM
பாகிஸ்தானை இலங்கை வென்றது.

இந்தியா நிதானமாக ஆடுகிறது.

தூயவன்
13-06-2009, 04:11 AM
பிராவோ வின் அதிரடி ஆட்டதால் மேற்கு இந்திய தீவு வெற்றி

அன்புரசிகன்
13-06-2009, 04:26 AM
இந்தியாவின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சரியாக ஆடவில்லை... பின்வரிசை ஆட்டக்காரர்களால் இந்தியாவின் ஓட்டம் நிமிர்ந்தது...

மேற்கிந்தியதீவு அணிக்கு வாழ்த்துக்கள்...

பரஞ்சோதி
13-06-2009, 08:26 AM
இந்திய அணியில் ஏதோ ஒன்று குறையுது, அது என்ன உற்சாகமா?

தோனி, யுவராஜ் முகத்தில் மகிழ்ச்சி, நட்பு இல்லாதது போல் இருக்கிறது.

நேற்று தோனி பலமுறை பாதி மைதானத்தில் நின்று யுவராஜ அய்யா வா, அய்யா வா என்று அழைக்கிறார்.

தோனி அவுட் ஆன பின்னரே யுவராஜ் அதிரடி ஆட்டம் ஆடினார். என்னமோ நடக்குது, மர்மமாக இருக்குது.

அய்யா
13-06-2009, 11:04 AM
இதே சந்தேகம் எனக்கும் வந்தது பரஜோதி அண்ணா!

முன்பு ஒருமொறை யுவராஜ் சதம் அடித்துவிட்டு, தோனியைப் பார்த்து கேவலமாக ஒரு சைகை செய்தார்.

யுவராஜை புறக்கணித்து தோனிக்கு தலைமைப்பதவி கொடுத்ததில் ஏதோ பிரச்னை என எண்ணுகிறேன்.

பா.ராஜேஷ்
13-06-2009, 11:14 AM
அணியில் ஒற்றுமை இல்லையெனில் குப்பை தான் வரும்.கோப்பை வராது!? பயிற்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

பரஞ்சோதி
13-06-2009, 11:32 AM
தோனியிடம் பழைய ஆட்டம் இல்லை என்பது இந்திய அணிக்கு பாதிப்பான ஒன்று.

ஆரம்ப காலத்தில் அதிரடி ஆட்டம் ஆடினார், சிக்ஸர்கள் மிக சகஜமாக வரும்.

உலக தரவரிசையில் முதலிடம் வந்த பின்னர் அதிரடி போய் அமைதி அடி வந்தது, 50, 50கள் வந்தது, அதே நேரம் மண்வெட்டி ஷாட் ஒன்றை அடிக்க தொடங்கினார், அதிலும் பவுண்டரிகள் வந்தன.

சமீபத்தில் ரொம்பவும் மெதுவாக ஆடுகிறார், அவர் பேசாமல் மற்றவர்களை முன்னே விளையாட விட்டு 5வது, 6வது ஆட்டக்காரராக வரலாம், அடிச்சாலும், அடிக்கலைன்னாலும் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டாங்க.

தாமரையார் வந்தால் மிகச் சரியாக சொல்வார். அவரை எங்கே?

அன்புரசிகன்
13-06-2009, 01:19 PM
கூட்டுறவு என்பது சுத்தமா இந்திய அணியிடையே காணக்கிடைக்கவில்லை...

IPL ன் பின்னர் அனைவரும் தாங்கள் தான் சிறந்தவர் என்ற எண்ணம் மனதில் குடிகொண்டுவிட்டது என நினைக்கிறேன். சாகீர்கான் ஜூசுப் பதான் இர்பான் பதான் இருவரும் தான் எதார்த்தமாக ஆடினார்கள்...

பரஞ்சோதி
14-06-2009, 06:01 AM
அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால் இஷாந்த் சர்மா இடத்தில் ஆர்.பி. சிங் வர வேண்டும்.

பந்து வீச்சாளருக்கு வேகம் மட்டுமே போதாது, கொஞ்சம் மூளையை கூட பயன்படுத்த வேண்டும்.

ஐபிஎல்லில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீசி அணியை வெல்ல உதவிய ரோகித், யுவராஜ், ரெய்னா போன்றோருக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை.

மேற்கு இந்திய தீவுகள் அணியினர் பொதுவாக சுழல் பந்து வீச்சில் திணறுவார்கள் தானே.

நேசம்
14-06-2009, 11:56 AM
கூட்டுறவு என்பது சுத்தமா இந்திய அணியிடையே காணக்கிடைக்கவில்லை...

...

நிச்சயமாக இந்திய அணியில் ஒருமித்து ஆட்டும் தன்மை மட்டுமிள்ளமால் மிகவும் மிதப்பாக ஆடுவதாக காணப்படுகிறது.:icon_p:

நேசம்
14-06-2009, 12:00 PM
அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா வெல்ல வேண்டும் என்றால் இஷாந்த் சர்மா இடத்தில் ஆர்.பி. சிங் வர வேண்டும்.

.

எனக்கும இது ஆச்சர்யமாக இருந்தது.ஆர்பிசிங்க் நல்லா பார்மில் இருக்கும் பொது ஐபிளில் சரியாய் விளையாடாத சர்மாவை இறக்கியது,மேற்கு இந்தியாவுக்கு ஏதிராக ஸ்பின்னர்கள் ஹர்பஜன் சிங்க் மற்றும் ஓஜா பந்து விச்சு எடுபடாது பொது பார்த டைம் பந்து விச்சாளார்கள் ரோகித் சர்மா மற்றும் யுவராஜை பயன் படுத்தமால் இருந்தது என் என்று புரிய வில்லை

அய்யா
15-06-2009, 03:55 AM
ஹி..ஹி..! இந்தியா புட்டுகிச்சு!

நடப்பு சாம்பியனும், காகிதப்புலிகளுமான இந்திய அணி நேற்று மண்ணைக் கவ்விவிட்டது.

இஷாந்த் ஷர்மாவும், ஜாகிர் கானும் வளைச்சு வளைச்சு லெக்கிலேயே போட்டுக்கொடுத்ததாலா..?

அயர்லாந்துன்னா முன்னாடி இறங்கும் தோனி, இந்த ஆட்டத்துல பம்மிப் பதுங்கினதுனாலா..?

35 பந்துல 25 ஓட்டம் எடுத்து எழவுகொட்டுன ஜடேஜாவாலா..?

நெஞ்சத்தில் வஞ்சத்தை வைத்து, ஃபீல்டிங்கிலும் வழிந்து, பந்துவீச்சிலும் பாரி வள்ளலாகத் திகழ்ந்த யுவராஜாலா..?

இந்தியர்களின் இயலாமையைப் புரிந்து, ஷார்ட் பிட்சாக போட்டுத் தாக்கிய இங்கிலாந்து வீச்சாளர்களாலா..?

முக்கியமான போட்டியை "போற்றுதலுக்குரிய புத்திசாலித் தலைமையாளர்" தோனி அசட்டுத்தனமாகக் கையாண்டதாலா..?

ஐபிஎல் அதிரடிகள் ரோஹித்தும், ரெய்னாவும் மீண்டும் சொதப்பியதாலா..?

அமரன்
15-06-2009, 07:17 AM
என்னமோ போங்க. அயர்லாந்து பலருடைய கவனத்தை ஈர்த்து விட்டது. அதன் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.

Honeytamil
15-06-2009, 07:23 AM
என்ன இந்தியா இப்பிடி கவுத்திடிச்சே ???? அடுத்த உலககிண்ண சாம்பியன் அயர்லாந்த்தாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவர்களிடம் அந்தளவுக்கு திறமை இருக்கிறது.

ஆதி
15-06-2009, 08:29 AM
இந்திய அணியில் தற்போது இல்லாத ஒற்றுமைதான் அனைத்துக்குமான காரணம்..

ஈகோ வ யூ கோ நு அனுப்புற வரைக்கும் இந்திய அணி பழைய நிலமைக்கு வருவதில் சிரமம் நீடிக்கும்..

பரஞ்சோதி
15-06-2009, 09:18 AM
நேற்றைய போட்டியில் எக்கசக்கமான தவறுகள்.

பீல்டிங்க் மிக மிக மோசம். அனுபவ பந்து வீச்சாளர்கள் உதிரிகளை அள்ளி அள்ளி வழங்கினார்கள். தோனியும் பின்னாடி இருந்து சில வாய்ப்புகளை தவற விட்டார். இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆட்டவீரர்களிடத்தில் ஆர்வமில்லை, உற்சாகமில்லை, வெறியும் இல்லை.

அன்று பாகிஸ்தான் எத்தனை வெறியோடு ஆடினார்கள், அது நம்மிடம் இல்லை.

ஜடேஜாவுக்கு முதல் போட்டி, தான் ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது, யுவராஜு அடுத்த முனையில் இருக்கையில் ஒரு ரன் எடுத்து அவரை அடிக்க விடாமல் தானே அடிக்க போனது முட்டாள்தனம்.

எல்லாவற்றையும் விட வேதனையானது, தோற்கிறோமே என்கிற கவலையில்லாமல் சிரித்து மகிழ்ந்த வீரர்கள் தான்.

ஐபில் போட்டிகளில் கோடிகளை பார்த்து திருப்தி அடைந்துவிட்டார்களோ?

இங்கிலாந்து வீரர்களின் உற்சாகம், நம்பிக்கை, போராட்டம் எல்லாமே இருந்தது.

அறிஞர்
15-06-2009, 03:53 PM
ஆட்டத்திற்கு முன்.. இந்திய வீரர்கள் இங்கிலாந்து வீரர்கள் கிண்டலடித்து உசுப்பேத்தியுள்ளனர். அதற்கு சரியான அடியை இங்கிலாந்து வீரர்கள் கொடுத்துள்ளனர்.

டாஸ் வென்றபொழுது.. முதல் பேட்டிங்கை எடுத்து இருக்கலாம் (நம் பவுலர்கள் பல நேரங்களில் நம்ப இயலாது).

இசாந்த் சர்மா அணியில் நீடித்ததின் மர்மன் என்ன?

ஜடேஜா... கட்டை போடும் பொழுது... அவரை அவுட்டாக சொல்லியிருக்கலாம்.

யுவராஜ் எதிர்பாராமல் அவுட்டானது... துரதிருஷ்டம்.

ரெய்னா, ரோகித் சர்மாவை பந்துவிச்சில் அனுமதித்து இருக்கலாம்.

எப்படியோ.. உலக சாம்பியன்கள் வாயடைத்து இந்தியா திரும்பவேண்டியதுதான்.
--------------
அரையிறுதியில்
மேற்கு இந்தியா - தென்னாப்பிரிக்கா
இலங்கை - பாகிஸ்தான்....

அய்யா
15-06-2009, 04:57 PM
சாம்பியன் யாரு அறிஞர் அண்ணா?

பச்சை புள்ளைங்கதானே?

அமரன்
15-06-2009, 05:38 PM
ரெண்டு பச்சை இருக்குதுங்களே அய்யா.
எப்படின்னாலும் நமக்குப் பச்சைன்னாலே பயம்தானுங்கோ..

ஓவியா
15-06-2009, 05:40 PM
எங்க இங்கிலாந்து கோப்பையை கொண்டு வருமா இல்லையா என்று நாங்கள் காத்துக்கிடக்கும் சமயம், இப்படி இந்தியாவை கவுத்து எங்களின் கனவுகள் நனவாகலாம் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டுள்ளது எங்கள் இங்கிலாந்து.

நமது தளத்தில் இங்கிலாந்துக்கு ஓட்டு போட்ட இன்னோரு நபர் யாரேன்று நான் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

கோப்பை வராவிட்டாலும் இந்தியாவை வீழ்தியதே எங்களுக்கு வெற்றிதான்.....:icon_b::icon_b::icon_b: வாழ்க கேவின் பீடேட்சன்..இங்கிலாந்துக்கு ஜே :medium-smiley-080:

அமரன்
15-06-2009, 05:43 PM
யக்கோவ்.. எனக்கொரு ஆசை. கிரிக்கெட்டின் தாயகமென வருணிக்கப்படும் இங்கிலாந்து எந்த உலகக் கோப்பையும் பெறாது வரலாறு படைக்க வேண்டும். அந்த ஆசைல மண்ணைப் போடுறீங்களே.

ஓவியா
15-06-2009, 05:45 PM
யக்கோவ்.. எனக்கொரு ஆசை. கிரிக்கெட்டின் தாயகமென வருணிக்கப்படும் இங்கிலாந்து எந்த உலகக் கோப்பையும் பெறாது வரலாறு படைக்க வேண்டும். அந்த ஆசைல மண்ணைப் போடுறீங்களே.

என்ன செய்யறது, நமக்கு ஒரு கண்ணு போனாலும் இட்ஸ்ஸ் ஓகே, பத்துவீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் போகனுமே!! ;)

நேசம்
15-06-2009, 05:46 PM
ஹி ஹி ... நான்தான் அக்கா

ஓவியா
15-06-2009, 10:37 PM
ஹி ஹி ... நான்தான் அக்கா

அடடே அடடே!!! சரி இனி நாம் இருவரும் ஒருகட்சி.... மற்றவர்களுக்கு எதிர்கட்சி. :)

aren
16-06-2009, 03:54 AM
இன்று நடக்கும் நியூஸிலாந்து இலங்கை ஆட்டத்தில் யார் வெல்லப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை வென்றால் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும், மேற்கு இண்டீஸும் இலங்கையும் அரையிருதியில் மோதுவார்கள். ஆட்டம் விருவிருப்பாக இருக்கப்போகிறது.

இந்தியா போட்டியில் இல்லை, ஆகையால் சந்தோஷமாக போட்டியை டென்ஷன் இல்லாமல் பார்க்கலாம்.

அன்புரசிகன்
16-06-2009, 04:19 AM
சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் சொன்னது போல்

போனவருடம் எது இந்திய அணியிடம் இருந்ததோ எப்போதும் பாக்கிஸ்தானிடம் எது இல்லாதிருப்பதோ அது இம்முறை இந்தியாவிடம் இல்லாமல் போய்விட்டது...
போய்ட்டுது. எல்லாம் போய்ட்டுது....

இந்திய அணியிடம் கட்டியெழுப்பப்படவேண்டியது அது தான்...

நேசம்
16-06-2009, 04:42 AM
அடடே அடடே!!! சரி இனி நாம் இருவரும் ஒருகட்சி.... மற்றவர்களுக்கு எதிர்கட்சி. :)

இப்போ எந்த கட்சி... அமரன் சொல்வது போல சாதனை தொடர்ந்து படைப்பாக போலிருக்கு :sauer028:

பரஞ்சோதி
16-06-2009, 11:52 AM
ஓவியா அக்கா,

நேற்று நம்ம பசங்க சரவணனும் சந்திரபாலும் இங்கிலாந்து பால் ஊத்திட்டாங்க.

ஓவியன்
16-06-2009, 12:40 PM
நேற்று நம்ம பசங்க சரவணனும் சந்திரபாலும் இங்கிலாந்து பால் ஊத்திட்டாங்க.

தமிழ் பெயர்களை நிரம்பவே இரசித்தேன் அண்ணா, நான் யாரைச் சொல்லுறீங்கனு கொஞ்சம் குழம்பித்தான் போயிட்டேன்..!! :):):)

ஓவியா
16-06-2009, 01:39 PM
ஓவியா அக்கா,

நேற்று நம்ம பசங்க சரவணனும் சந்திரபாலும் இங்கிலாந்து பால் ஊத்திட்டாங்க.

:cool::cool::cool::cool::cool::cool::cool:


சித்தப்பூ, எல்லா நாய்க்கு ஒரு நாளிருக்கும் என்ற பழமொழியை நினைவுகூறுகிறேன். ;)

அறிஞர்
16-06-2009, 04:27 PM
தோனியை புரிச்சிக்கவே முடியலைங்க..

இன்றும் இசாந்த் சர்மா... இருக்கிறார்... இந்தியா தோற்கவே... இது போதும்...

அறிஞர்
16-06-2009, 04:36 PM
டி20 பெண்கள் அணியில்
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
----------
ஆண்கள் அணியில் இந்த 4 நாடுகளும் வெளியேறியுள்ளது.

அறிஞர்
16-06-2009, 08:52 PM
ஆப்பு.. ஆப்பு.. சூப்பராப்பு.....
சூப்பர் 8ல்... இந்தியா அனைத்து மூன்று ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது...
உலக சாம்பியன் என மார்தட்டிய அணிக்கு நல்ல அடி...

ஓவியன்
17-06-2009, 04:00 AM
ஹீ, ஹீ..!!

வெல்லப் போகும் அணிக்கான நம்ம மன்ற வாக்கெடுப்பில் இப்போதும் இந்தியா முன்னணியில் இருக்கு..!! :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

தூயவன்
17-06-2009, 05:09 AM
இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் இறுதி போட்டிகு வரும் என்று நினைகிறேன் ... தென்னாப்பிரிக்கா மிகவும் பலமான அணி தான்.. ஆனால் என்னவோ சமீப காலமாக இலங்கைகு அதிஸ்ட காற்று மிக பலமாக அடிக்கிறது (எல்லா விசயத்திலும் :( )

பரஞ்சோதி
17-06-2009, 06:58 AM
:cool::cool::cool::cool::cool::cool::cool:


சித்தப்பூ, எல்லா நாய்க்கு ஒரு நாளிருக்கும் என்ற பழமொழியை நினைவுகூறுகிறேன். ;)

அத்தை, கடி பலமா? இவ்வளவு கோபமாக இருக்கீங்க?

- சக்தி

பரஞ்சோதி
17-06-2009, 07:01 AM
தோனியை புரிச்சிக்கவே முடியலைங்க..

இன்றும் இசாந்த் சர்மா... இருக்கிறார்... இந்தியா தோற்கவே... இது போதும்...

தோனியின் இறுமாப்பு தான் காரணம், அன்று தோற்ற அணியை வைத்தே இன்று தென் ஆப்பிரிக்காவை வெல்வேன் என்ற எண்ணம்.

ஆடுகளத்தில் தோனியும், யுவராஜூம் கபடி ஆடியதை பார்த்தீங்களா?

இலங்கை முதற்கொண்டு அனைத்து அணிகளும் சுழல்பந்தை வைத்து வித்தை காட்ட, இவரோ வேகத்தை காட்டி உதை வாங்கியதன் மர்மம் என்ன?

அய்யா
17-06-2009, 07:07 AM
சூப்பர் 8ல் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா படுதோல்வி!

நோட்டின் அருமைக்காக ஐபிஎல்லில் உயிரைக் கொடுத்து விளையாடிய இந்திய சூப்பர்ஸ்டார்கள்,

நாட்டின் பெருமைக்காக டி20ல் விளையாடியபோது களைப்படைந்துவிட்டார்களாம்!

இதில், கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கதையாக, 2011ல் விசுவரூபம் எடுத்து வைகுண்டம் போகப்போறோம்ன்னு தோனி சொல்லியிருக்கிறார்.

என்னவோ போங்க!

அய்யா
17-06-2009, 07:10 AM
இலங்கை முதற்கொண்டு அனைத்து அணிகளும் சுழல்பந்தை வைத்து வித்தை காட்ட, இவரோ வேகத்தை காட்டி உதை வாங்கியதன் மர்மம் என்ன?

தோனியின் "அறிவான்மையும், ஆளுமைத்தன்மையும்" காரணமாக இருக்குமோ?

அய்யா
17-06-2009, 07:12 AM
டி20 பெண்கள் அணியில்
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
----------
ஆண்கள் அணியில் இந்த 4 நாடுகளும் வெளியேறியுள்ளது.


வினோதமான சமன்பாடு! இரசித்தேன் அறிஞர் அண்ணா!

பரஞ்சோதி
17-06-2009, 07:13 AM
ஐபில் போட்டிகள் தொடங்கப்பட்டவுடனேயே நான் என் தோழர்களிடம் சொல்லியிருந்தேன். இனிமேல் கிரிக்கெட்டும் கால்பந்து போலாகிவிடும்.

காசு வாங்கிய கிளப் அணிகளுக்கு உயிரை கொடுத்து ஆடுவாங்க.

நாட்டுக்காக ஆட வரும் போது கால் வலி, மூட்டு வலி என்று ஒதுங்கிடுவாங்க, ஒலிம்பிக் போன்றவற்றில் சுத்தமாக யாருமே வரமாட்டாங்க,

அதே போல் தான் கிரிக்கெட்டிலும் நடக்கிறது.

ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் ஆரம்பிச்சி வைச்சிட்டார். நம்மவர்களோ அணியாக சென்று தோற்றுட்டாங்க.

அய்யா
17-06-2009, 07:16 AM
ஒலிம்பிக் போன்றவற்றில் சுத்தமாக யாருமே வரமாட்டாங்க,



ஒலிம்பிக்கில், ஸ்கிரிப்ட் (திரைக்கதைன்னு சொல்லலாமா?) கிடையாதே அண்ணா!

ஓவியன்
17-06-2009, 07:49 AM
இந்திய கிரிக்கட் அணியின் வெற்றி, மற்றும் தோல்விகளுக்கு நம் போன்ற இரசிகர்களும் முக்கிய காரணம். அதாவது ஒரு வெற்றியைக் கண்டு விட்டால் கண், மண் தெரியாது புகழ்ந்து தள்ளுவதும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் திட்டித் தீர்ப்பதுமாக நாமிருந்தால் இந்த இரண்டுமே விளையாட்டு வீரர்களின் மனதினைப் பாதிக்கும். தோல்விகளின் போது தட்டிக் கொடுப்பு அவசியமாகிறது, அது இந்த தோல்வியில் இந்திய அணியினருக்குக் கிடைக்காத பட்சத்தில் தொடரும் தோல்விகளைத் தவிர்க்க முடியாது போகலாம்.

அய்யா
17-06-2009, 07:56 AM
உண்மை அண்ணா!

இந்திய வீரர்களை பொருத்தவரை போற்றலும், தூற்றலும் உச்சமே! தங்கள் புகழை விளம்பரங்கள், காட்சிகள் மூலம் கோடிகளாக மாற்றத்தெரிந்தவர்கள், சற்று நாட்டுக்காகவும் உழைக்கலாம்தானே?

பரஞ்சோதி
17-06-2009, 08:06 AM
இந்திய கிரிக்கட் அணியின் வெற்றி, மற்றும் தோல்விகளுக்கு நம் போன்ற இரசிகர்களும் முக்கிய காரணம். அதாவது ஒரு வெற்றியைக் கண்டு விட்டால் கண், மண் தெரியாது புகழ்ந்து தள்ளுவதும் ஒரு தோல்வியைச் சந்தித்தால் திட்டித் தீர்ப்பதுமாக நாமிருந்தால் இந்த இரண்டுமே விளையாட்டு வீரர்களின் மனதினைப் பாதிக்கும். தோல்விகளின் போது தட்டிக் கொடுப்பு அவசியமாகிறது, அது இந்த தோல்வியில் இந்திய அணியினருக்குக் கிடைக்காத பட்சத்தில் தொடரும் தோல்விகளைத் தவிர்க்க முடியாது போகலாம்.


உண்மை தான் தம்பி, உங்கள் கருத்துகள் சிறப்பானவை.

ஆனால் ஒன்று, இம்முறை இந்திய அணி ஒன்றும் மற்ற அணியினரை விட தரம் குறைந்த அணி அல்ல.

தோல்விக்கு முழு காரணம் அணியினர் கட்டுகோப்போடு ஆடாததே. போராடி தோற்றார்கள் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அங்கே அவங்க ஆடும் விதம் தான் மீண்டும் மீண்டும் திரையில் போட்டு காட்டுறாங்க தானே, முன்னை விட முழு விபரமும் கிடைக்கிறதே, அதனால் தான் ஆத்திரம் அடைகிறார்கள்.

அணியில் சுத்தமாக ஒற்றுமையில்லை என்பதும் புலப்படுது. உனக்கு தேவை என்றால் நீ ஆடிக்கோ என்ற எண்ணம் இருக்குது.

அய்யா
17-06-2009, 08:24 AM
மீண்டும் கோப்பையை வென்றால், தலைமைப்பதவி நிரந்தரமாக தோனிக்கு சொந்தமாகிவிடும் என்று யாரும் பயப்பட்டிருக்கத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தோனியின் செயல்பாட்டைப் பார்த்தால் அவருக்கே அந்த ஆசை இல்லை போலத் தெரிகிறது.

ஓவியன்
17-06-2009, 08:24 AM
உண்மைதான் அண்ணா, டெக்கான் சார்ஜர்சிடம் ‘கில்லி’ ஏற்படுத்திக் காட்டிய ஏன் கடந்த உலகக் கிண்ணத்தில் இந்திய அணியினரிடமே தோனி ஏற்படுத்திக் காட்டிய ‘டீம் ஸ்பிரிட்’ இன்று இந்திய அணியிடம் குறைந்திருக்கிறது. தோனிக்கும் யுவி’க்குமிடை ஏதோ பிரச்சினை நிலவுவதாகத் தெரிகிறது, அதனலேயே அணி இரண்டு பட்டு நிற்பதாக நினைக்கிறேன். நாம் (நாமென்றால் இந்தி அணி நிர்வாகிகளுட்பட) அணியினரை வெறுமனே திட்டிக் கொண்டிருக்காமல் இப்படியான பிரச்சினைகளேதும் இருப்பின் அதனைக் களையும் வழி வகைகளை ஆராய்ந்தால் மீண்டும் நம் பலம் நம்மிடம் வந்து விடும்.

அத்துடன் ஐபிஎல் கில்லிகளான மாணிஸ்பாண்டே, நம்மவர் கார்த்திக் எல்லோருக்கும் அணிக்குள் வாய்ப்புகளைக் கொடுத்து அணியினை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

பேசாம நாம FakeICCworldtwenty20player என்ற பெயரிலே ஒரு வலைப்பூவை ஆரம்பிச்சு நாம நம்ம கருத்துக்களைச் சொன்னால்தான் எல்லோரும் புரிஞ்சுப்பாங்க போல...!! :icon_rollout: :icon_rollout:

xavier_raja
18-06-2009, 02:08 PM
இந்தியா ஊதிகினு போச்சு தலைவரே.. வெளங்காத பசங்க... விளம்பரத்தில நடிக்கதான் லாயக்கு.

அறிஞர்
18-06-2009, 02:39 PM
அரையிறுதியில் பெண்கள் அணி தோல்விமுகம்..

தூயவன்
19-06-2009, 04:15 AM
பாகிஸ்தான் இறுதி போட்டியில் .......

அய்யா
19-06-2009, 07:21 AM
நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில்.

ஒரு போட்டியை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை மற்ற அணிகளுக்கு பாடமாக கற்றுத்தந்தன பாகிஸ்தானும், தென்னாப்பிரில்லாவும்..

பாக் அணி கூட்டு முயற்சிக்கு உதாரணமாகத் திகழ்ந்தது.. அதிலும் இறுதிக்கட்டத்தில் உமர் குல் வீசிய ஓவ்வொரு பந்தும் இரத்தினங்கள்! பாக் அணியில் எவருமே பயனற்றுப் போகவில்லை.

இது இவ்வாறெனில், விடாமுயற்சிக்கும், போராட்டக்குணத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது தென்னாப்பிரிக்கா..

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வெற்றியின் விளிம்புவரை தங்கள் அணியை கொண்டுசென்று எதிரணிக்கு பதட்டத்தை பரிசளித்தனர் காலிஸும், டுமினியும்..

பாராட்டுகள் வீரர்களே..!

இதுபோன்ற எந்த அம்சமும் இந்திய அணியில் காணக் கிடைக்கவில்லை..

உமர் குல் இடத்தில் ஜாகிர் கானோ, இஷாந்த் ஷர்மாவோ இருந்திருந்தால் முடிவு வேறாகியிருக்கும்!

திறமையுள்ளவர்கள் வெற்றிபெறும்போது கிடைக்கும் திருப்தியே தனி!

அய்யா
19-06-2009, 07:26 AM
அரையிறுதியில் பெண்கள் அணி தோல்விமுகம்..

நியூசி அணித்தலைவி ஆலன் வாட்கின்சன் இந்திய வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்! அவர் ஒருவரே எடுத்த 89 ஓட்டங்களுக்குதான் இந்திய வீராங்கனைகள் 10 பேரும் சேர்ந்து (92) பதில் சொல்ல முடிந்தது..!

இந்திய வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு இத்தொடரில் விக்கெட் பஞ்சம் ஏற்பட்டுப் போனதென்றே கூறலாம்.

மித்தாலி ராஜின் வழக்கமான மட்டையடியும் மிஸ்ஸிங்..!

அமரன்
19-06-2009, 07:28 AM
என்றும் காணா ஒன்று பாகிஸ்தான் அணியிடம் கண்டேன் இன்று.

பலமான எதிரணியாக தென்னாபிரிக்கா தன் கடமையைச் செய்தது.

ஒரு நல்ல போட்டியை கண்டுகளித்த திருப்தி.

அமரன்
19-06-2009, 10:08 PM
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் சிறீலங்காவும் களமாடுகின்றன.

மேற்கிந்தியத் தீவுகளுடனான அரை இறுதிப் போட்டியில் அபாரமாகத் துடுப்பாடிய தில்ஷான் இறுதிவரை ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைக் குவித்தார்.

அன்புரசிகன்
20-06-2009, 03:11 AM
கடந்த இலங்கை அணியின் ஆட்டத்தில் கண்ட அதே அதிசயம் நேற்றும் நிகழ்ந்தது. அந்தரத்தில் பறந்தவாறே எல்லையில் பந்தை தடுத்த விதம். நடுவரே குழம்பி இறுதியில் 4 ஓட்டங்கள் வழங்கினார்.

மத்யூ வின் முதலாவது பந்து பரிமாற்றத்திலேயே மே.இ அணி 3 ஆரம்ப ஆட்டக்காரர் விக்கட்டுக்களை இழந்தது இலங்கை அணியின் வெற்றிக்கு பலமாக வழிவகுத்தது... One man show என்ற வாறு நேற்று ஒருவர் தான் வெற்றிக்கு வழிவகுத்தார். துடுப்பாட்டத்தில் டில்ஷான் பந்துவீச்சில் மத்யூ என்று சிறப்பான ஆட்டம்...
கைல் சிறப்பாக ஆடியும் சிறந்த இணைப்பாட்டம் இல்லாதது மே.இ அணிகளின் தோல்விக்கு வழிவகுத்தது...

இறுதியாட்டம் விறுவிறுப்பாக அமையும்.

அய்யா
20-06-2009, 04:47 AM
இலங்கையின் ஆட்டம் தொழில்முறை நேர்த்தியுடன் மிளிர்ந்தது.

சிறந்த களத்தடுப்பு வியூகம் அமைப்பதில் இத்தொடரில் எவ்வணியும் இலங்கைக்கு இணையில்லை. புதிய வீச்சாளர்கள் பொறுப்புடன் கடமையாற்றினர். என்னைக்கேட்டால் நேற்றைய வெற்றிக்கு மட்டையடியைவிட வீச்சும் தடுப்புமே காரணமென்பேன்.

இந்தியத் துணைக்கண்ட அணிகளே இறுதியில் நுழைந்தது கூடுதல் மகிழ்ச்சி!

அய்யா
20-06-2009, 04:56 AM
மகளிர் அரையிறுதியும் விழிப்புருவத்தை உயர்த்தச் செய்தது!

163 ஓட்டங்கள் எடுத்த ஆஸி. வெற்றிக்கனவு கண்டிருக்கக்கூடும். அதிலும், இங்கிலாந்து அணி 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தலைவி ஷார்லெட் எட்வர்ட்ஸ் ஆட்டமிழந்தபோது, இங்கி ரசிகர்களுக்கும் நம்பிக்கை போயிருக்கும்.

http://www.cricinfo.com/db/PICTURES/CMS/105000/105078.jpg

அடுத்து மட்டையடித்த பேத் மார்கன், க்ளேர் டெய்லர் இருவரது ஆட்டத்தை எவ்வளவு மெச்சினாலும் தகும். மூன்றாவது விக்கெட்டுக்கு அசைக்கவியலாத வகையில் 122 ஓட்ட பங்களிப்புடன் பதற்றமின்றி ஆஸியின் பெரும் எண்ணிக்கையைத் துரத்தியவிதம் இருக்கிறதே.. அப்பப்பா.. அற்புதம்!

மகளிர் கிரிக்கெட் ஒரு மந்தமான ஆட்டம் எனச் சொல்பவர் எவரேனுமிருந்தால் தன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.!

பரஞ்சோதி
20-06-2009, 11:17 AM
நன்றி அய்யா.

நானும் மகளிர் கிரிக்கெட் பார்த்து அசந்து போனேன், என்னமாக டைவ் அடிக்கிறாங்க, விளையாடுறாங்க.

பரஞ்சோதி
20-06-2009, 11:19 AM
இலங்கை அணியில் தில்சான், மேத்யூ, அஜந்தா, முரளி ஆகியோர் அபாரமாக செயல்பட்டார்கள்.

ஒருவர் சோபிக்கவில்லை என்றாலும் அடுத்தவர் அசத்தியது தான் கலக்கல். மிகச் சரியான அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.

வெற்றி இலங்கைக்கு என்று நினைக்கிறேன்.

அன்புரசிகன்
21-06-2009, 12:13 PM
பெண்களுக்கான 20/20 துடுப்பாட்டப்போட்டியில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றுள்ளது... நியூசிலாந்து அணி 85 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களை இழந்தது.

இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கினை அடைந்தது...

பரஞ்சோதி
21-06-2009, 12:31 PM
அப்பாடா, பெண்கள் கிரிக்கெட்டிலாவது உலக கோப்பையை வென்றார்களே!!!

வெற்றி பெற்றி அணிக்கு என் பாராட்டுகள்.

நேசம்
21-06-2009, 12:36 PM
பெண்கள் கிரிகேட்டுக்கு இவ்வளவு ரசிகர்களா.... இறுதி போட்டியில் யார் முதலில் மட்டை விசிகிறார்களா (எங்கே ன்னு கேட்க குஉடாது ) அவர்களுக்கு வெற்றி உறுதி.

அன்புரசிகன்
21-06-2009, 02:02 PM
அப்பாடா, பெண்கள் கிரிக்கெட்டிலாவது உலக கோப்பையை வென்றார்களே!!!

வெற்றி பெற்றி அணிக்கு என் பாராட்டுகள்.
என்ன அண்ணா பெண்கள் கிரிக்கட்டிலாவது என்று சொல்கிறீர்கள்...

ஆண்களின் ஆட்டத்திலும் விறுவிறுப்பாக அமைந்தது இந்த இறுதி ஆட்டம். சிறப்பாக ஆடினார்கள்...

இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
21-06-2009, 06:21 PM
பாகிஸ்தான் கோப்பையை பெற்றது.

வாழ்த்துகள் பாகிஸ்தான் ஆண்கள் அணிக்கும் இங்கிலாந்து பெண்கள் அணிக்கும்.

இங்கிலாந்து ஆண்கள் சாதிக்காததை பெண்கள் சாதித்தார்கள். அதுசரி. அரசிக்குத்தானே அங்கு மவுசு.

ஓவியா
21-06-2009, 09:16 PM
கோவிக்காதீங்க, பாக்கிஸ்தான் வெற்றி பெற்றதோ இல்லையோ இலங்கை அணி தோத்ததே எங்களுக்கு வெற்றினு என் அலுவலகம் முழுதும் கொண்டாடி மகிழ்கிறார்கள். என்னத்த சொல்ல!!

ஆனால் மன்றத்தில் ஒருவர்கூட இலங்கை அணிக்கு வாக்களிக்கவில்லை, இதன் காரணம்தான் என்ன!!! உங்களுக்கே தெரியும்.





யக்கோவ்.. எனக்கொரு ஆசை. கிரிக்கெட்டின் தாயகமென வருணிக்கப்படும் இங்கிலாந்து எந்த உலகக் கோப்பையும் பெறாது வரலாறு படைக்க வேண்டும். அந்த ஆசைல மண்ணைப் போடுறீங்களே.

ஏலே என் அருமைத்தம்பி அமரா, இப்ப என்னா பன்னுவீங்க இப்ப என்னா பன்னுவீங்க...:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:

எப்படியோ அமரன் கூறியது போல் எங்கள் இங்கிலாந்து மகளீரணி கோப்பையை பெற்று கிரிக்கெட்டின் தாயகமென வருணிக்கப்படும் இங்கிலாந்துக்கு நற்ப்பெயரை வாங்கிக்கொடுத்து விட்டது.


இங்கிலாந்து அணி வெல்லும் என்று கணித்து சரியாக ஓட்டுப் போட்ட எனக்கும் நேசத்துக்கும் தலா 5000 இபணம் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் அட்மீனை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நேசம்
22-06-2009, 04:42 AM
இங்கிலாந்து அணி வெல்லும் என்று கணித்து சரியாக ஓட்டுப் போட்ட எனக்கும் நேசத்துக்கும் தலா 5000 இபணம் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் அட்மீனை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.


அணித் தேர்வில் கோட்டை விடுகிறார்கள்.உள்ளூர் அணிகளில் விளையாடுவதை பார்த்தால் எவ்வளவு சிறந்த வீரர்கள் உள்ளார்கள் என்று தெரியும்.உங்க பெருந்தன்மை பாராட்டி எனக்கு கிடைக்கும் இ பணத்தில் பத்து சதவிதம் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்.:lachen001:

aren
22-06-2009, 05:16 AM
யாரும் நினைத்துப்பார்க்காத மேற்கு இண்டீஸ் கோப்பையை வெல்லும் என்று நான் சொன்னேன். ஆனால் அவர்கள் கோப்பையை வெல்லவில்லை. அதற்காக நான் கவலைப்படவில்லை ஏனெனில் அவர்கள் தோற்றது இலங்கையிடம்தான். ஆனால் அவர்கள் அரையிறுதிக்கு வந்ததை நினைத்து பெருமைப் படுகிறேன்.

வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு என் பாராட்டுக்கள்.

நேசம்
22-06-2009, 05:43 AM
பாகிஸ்தானுக்கு யாரும் ஒட்டு போட வில்லை. அதனாலே ஜெயித்து விட்டார்களா

பரஞ்சோதி
22-06-2009, 06:27 AM
என்ன அண்ணா பெண்கள் கிரிக்கட்டிலாவது என்று சொல்கிறீர்கள்...

ஆண்களின் ஆட்டத்திலும் விறுவிறுப்பாக அமைந்தது இந்த இறுதி ஆட்டம். சிறப்பாக ஆடினார்கள்...

இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்.

ஆஹா! தம்பி நான் பெண்கள் என்ற எண்ணத்தில் சொல்லலை?

ஆண்கள் உலககோப்பை போட்டியில் 3 முறை இறுதி போட்டிக்கு வந்து இங்கிலாந்து தோற்றிருக்கிறது. கிரிக்கெட் தோன்றிய நாட்டினால் உலக கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம், பெண்கள் அணியால் தீர்ந்தது என்ற அர்த்தத்தில் சொன்னேன்.

கொஞ்சம் விளக்கமாக சொல்லலைன்னா நம்மள ஒரு வழி செய்திடுவாங்க போலிருக்குதே :mad::traurig001::mad:

பரஞ்சோதி
22-06-2009, 06:30 AM
அபாரம், அற்புதம்

பாகிஸ்தானின் வெற்றியை நானும் கொண்டாடினேன்.

அருமையான அணித்தலைவர், அவருக்கு துணையாக வீரர்கள்.

எதிரிகளும் விரும்பும் கேப்டன் யூனிஸ், அதிரடி அப்ரிடி, கலங்கா கம்ரான், கை கொடுக்கும் உமர் குல், பூஸ்ட் ரசாக் போன்றோரின் ஆட்டத்தினால் பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

சென்ற முறை போல் கடைசியில் கோப்பையை நழுவ விட்டது போல் இருக்ககூடாது என்பதற்காக கடுமையாக உழைத்திருக்காங்க.

வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு என் மனதார வாழ்த்துகள்.

சங்ககாராவின் அருமையான அணி நடத்துததால் இலங்கையும் இறுதிவரை வந்தது, அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

நேசம்
22-06-2009, 07:16 AM
என்னை பொறுத்தவரை வழக்கம் போல் இலங்கை சிறப்பாக பந்து விசி இருந்தால் பாகிஸ்தானுக்கு இந்த இலக்கெ கடினமாக இருந்து இருக்கும்.

பரஞ்சோதி
22-06-2009, 07:39 AM
அது என்னமோ உண்மை தான்.

நேற்று இலங்கையின் பந்து வீச்சும் தடுப்பாட்டமும் அத்தனை சிறப்பாக இல்லை.

மட்டை பிடிக்க வந்த போது விக்கெட்களை இழந்தவுடன் முந்தைய போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் எந்த நிலைக்கு தள்ளாடியதோ அதே நிலை, இருந்தாலும் அணித்தலைவரும், மேத்யூவும் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள்.

பாகிஸ்தானியரிடம் காணப்பட்ட நம்பிக்கை இலங்கை வீரர்களிடம் குறைவாக காணப்பட்டது.

மன்மதன்
22-06-2009, 02:21 PM
பாகிஸ்தான் திரும்பவும் ஃபார்ம்க்கு வந்திருக்கு..

அஃப்ரிடி நன்றாக ஆட ஆரம்பித்திருக்கிறார்.. இந்த
நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் நன்றாக
இருக்கும்..

0 ஓட்டு வாங்கிய பாகிஸ்தான் கோப்பை தட்டி சென்று விட்டது..

பாராட்டுகள்..!!

அமரன்
22-06-2009, 03:19 PM
கோவிக்காதீங்க, பாக்கிஸ்தான் வெற்றி பெற்றதோ இல்லையோ இலங்கை அணி தோத்ததே எங்களுக்கு வெற்றினு என் அலுவலகம் முழுதும் கொண்டாடி மகிழ்கிறார்கள். என்னத்த சொல்ல!!பொதுவாக ஈழத்மிழரிடத்தில் இலங்கை அணிக்கு செல்வாக்கில்லை. இந்திய அணிக்கே செல்வாக்கு அதிகம். ஆனாலும் அடுத்தவன் தோல்வியில் அகமகிழ்வது அழகல்ல.

ஆனால் மன்றத்தில் ஒருவர்கூட இலங்கை அணிக்கு வாக்களிக்கவில்லை, இதன் காரணம்தான் என்ன!!! உங்களுக்கே தெரியும்.


என்ன கொடுமை இது.

(ஆங்.. இந்த இரண்டும் மட்டும்தானே உங்கள் பதிவில் இருக்கு)

விக்ரம்
22-06-2009, 04:57 PM
0 ஓட்டு வாங்கிய பாகிஸ்தான் கோப்பை தட்டி சென்று விட்டது..

பாராட்டுகள்..!!
அரசியலும், விளையாட்டும் ஒன்று நம் மக்கள் எண்ணிவிட்டார்கள் போலும், அதனால் தான் பாகிஸ்தானுக்கு ஓட்டு விழவில்லை.

அட்லீஸ்ட், விளையாட்டிலாவது நாட்டுப்பற்று இருக்கேனு பெருமைப் படலாம் நு நினைத்ததாலோ என்னவோ...

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள்..

நேசம்
23-06-2009, 04:43 PM
அரசியலும், விளையாட்டும் ஒன்று நம் மக்கள் எண்ணிவிட்டார்கள் போலும், அதனால் தான் பாகிஸ்தானுக்கு ஓட்டு விழவில்லை.

அட்லீஸ்ட், விளையாட்டிலாவது நாட்டுப்பற்று இருக்கேனு பெருமைப் படலாம் நு நினைத்ததாலோ என்னவோ...

வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணிக்கு பாராட்டுக்கள்..


இந்திய ரசிகர் மட்டுமில்லை அனைத்து நாடு ரசிகர்களும் பாகிஸ்தானை கணிக்க வில்லை.அந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்தது.போட்டிக்கும் முன்பாக அந்த நாட்டு அணியின் தலைவர் இந்த போட்டியை ஒரு வேடிக்கையான விளையாட்டாக குறிப்பிட்டார்.ஏன் பயிற்சி போட்டிகளில் கூட தோற்றார்கள்.

ஓவியா
24-06-2009, 11:21 AM
பொதுவாக ஈழத்மிழரிடத்தில் இலங்கை அணிக்கு செல்வாக்கில்லை. இந்திய அணிக்கே செல்வாக்கு அதிகம். ஆனாலும் அடுத்தவன் தோல்வியில் அகமகிழ்வது அழகல்ல.


என்ன கொடுமை இது.

(ஆங்.. இந்த இரண்டும் மட்டும்தானே உங்கள் பதிவில் இருக்கு)

அதெல்லாம் முடியாது அடுத்த கேள்விக்கும் பதில போட்டுங்க உதவி தலைவரே ;)

தாமரை
24-06-2009, 11:48 AM
இங்கிலாந்து அணி வெல்லும் என்று கணித்து சரியாக ஓட்டுப் போட்ட எனக்கும் நேசத்துக்கும் தலா 5000 இபணம் கொடுக்க வேண்டுமென தாழ்மையுடன் அட்மீனை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

வாளை மீன் தெரியும், விலாங்கு மீன் தெரியும், சுறா மீன், வௌவால் மீன், வஞ்சிரம் மீன், ரோகு, கட்லா, கெழுத்தி, கெண்டை இப்படி எத்தனையோ வகை மீன் தெரியும். ஆனா இந்த அட்மீனை எனக்குத் தெரியாதே,,,

பரஞ்சோதி
24-06-2009, 12:27 PM
ஹி ஹி

இருக்கிற அட்மீனை எல்லாம் சகோதரி வாங்கி சாப்பிட்டு விட்டாங்க போல :)

தலை இல்லாத குறை உங்களால் தீருது. இப்போ வேற என்னமோ நடக்க போகுது, நான் எஸ்கேப்.

நேசம்
24-06-2009, 12:29 PM
ஆட்டோ தான் ரெடி பண்ணனும் பொலிருக்கு அக்கா...

பரஞ்சோதி
24-06-2009, 12:40 PM
ஹி ஹி

நேசம், நம்ம சொர்ண அக்காவுக்கு ஆட்டோ பிடிக்காது, ஐ மீன்

மீன்பாடி வண்டி தான்.

ஓவியா
25-06-2009, 12:04 AM
ஏலே கட்டுங்கடா வண்டிய,.....:mad::mad::mad:..


மீதி மீன வறுக்கறதுக்கு முன் ஓடிடலாம்......;););)



தெய்வமே!! நான் அந்த மீன்பாடி வண்டி பிஸ்னஸ மறந்து போய் ரொம்ப காலமாச்சு, ஆட்டோ ஷாப்பையும் ஆண்டியா போகும் போது தானம் பன்னிட்டு போய்ட்டேன், கையிலே சைக்கில் சேய்ன மட்டும் வச்சிகிட்டு இப்ப நான் என்னத்தப் பன்னமுடியும்.....:eek::eek::eek:



மயூ:பாஸ் மாட்டு பண்டிக்கு பெட்ரோல் போட காசிலே அதனாலே மீரா விட்டு நாய துரத்த சொல்லுங்க ஓடியே போய் மலேசியா சேர்ந்துடலாம்....:redface::redface:

பரஞ்சோதி
25-06-2009, 06:54 AM
ஆஹா!

அக்காவிடம் பெரிய கூட்டமே இருக்குது போல இருக்குதே.

எனக்கு ஏதாச்சும் ஒரு பதவி கொடுங்க, சும்மா எள்ளுண்ணா எண்ணெயாக இருப்போமுல்ல.

- அப்ளிகேசன் பார்முடன்

aren
25-06-2009, 07:21 AM
ஆஹா!


எனக்கு ஏதாச்சும் ஒரு பதவி கொடுங்க, சும்மா எள்ளுண்ணா எண்ணெயாக இருப்போமுல்ல.



அக்கா எள்ளுதானே கேட்டாங்க, நீங்கள் ஏன் எண்ணெயாக இருக்கீங்க?

பரஞ்சோதி
25-06-2009, 07:24 AM
ஹி ஹி அப்போ தான் பதவி உயர்வு கிடைக்கும்.

வண்ணாரப்பேட்டை, காசிமேடுன்னு ஒரு ஏரியா ஒதுக்கி கொடுத்திடுவாங்க தானே.

aren
25-06-2009, 07:26 AM
ஹி ஹி அப்போ தான் பதவி உயர்வு கிடைக்கும்.

வண்ணாரப்பேட்டை, காசிமேடுன்னு ஒரு ஏரியா ஒதுக்கி கொடுத்திடுவாங்க தானே.

ஏன், போயஸ் கார்டன், கோபலபுரம் போன்ற ஏரியா கொடுத்தால் வாங்க மாட்டீங்களா?

பரஞ்சோதி
25-06-2009, 07:35 AM
அய்யோ, குண்டர் சட்டத்தில் என்னை நிரந்தரமாக உள்ளே தள்ள சதி நடக்குதுங்கோ :)

aren
26-06-2009, 03:27 AM
அய்யோ, குண்டர் சட்டத்தில் என்னை நிரந்தரமாக உள்ளே தள்ள சதி நடக்குதுங்கோ :)

ஏன், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை போன்ற இடங்களை விட வசூல் இந்த இரண்டு இடத்திலும் உங்களுக்கு கிடைக்குமே.