PDA

View Full Version : உயிர்



vairabharathy
28-04-2009, 06:27 AM
:)உயிர்


எழுதாத காகித்தில்
என்
எண்ணக் கவிதையின்
ஜீவிதம்
உயிர்

தொப்புள் கொடியில் - தன்
சின்னச் சின்ன ஆசைகளைச்
சேகரித்து
தொட்டில் மடியில்
கிடத்தி வைக்கும்
தாயின் சேய்
தன்னல உயர்...

உயிர் !

வெற்றிகளைச்
சேமிக்கும்
இலட்சிய வங்கி...

வேதனைகளின் கூடு
சாதனைகளின் ஏடு...

ஏழைகளின்
கோகினூர் வைரம்...

இலட்சியவாதிகளின்
வான மண்டலம்...

சாலோர்களின்
தொற்று நோய்...








உயிர்...
திசுக்களின்
திரவமாய்த் திரிந்து

அணுக்களின்
அங்கமாய் வளர்ந்து
காற்றின்
கருணையால்

உலையாய்க் கொதித்துக்கிடப்பதே
உயிர்.

இது
எழுதுகோலின் ஈரப்பதம்

வாழ்க்கை
அனுபவிப்பவனின்
தேனமுதம்.

samuthraselvam
28-04-2009, 11:02 AM
உயிர்...
திசுக்களின்
திரவமாய்த் திரிந்து

அணுக்களின்
அங்கமாய் வளர்ந்து
காற்றின்
கருணையால்

இந்த வரிகள் அருமை....

உயிர் அருமையாக இருக்கிறது வைரம்.....பெயருக்கு ஏற்றார் போல இன்னும் சிறந்த கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்....