PDA

View Full Version : குருடியைப் பற்றிய கவிதையொன்று



ஆதவா
28-04-2009, 06:23 AM
குருடியைப் பற்றிய கவிதை
எழுதவேண்டுமென்ற ஆவல் இருந்துவந்தது
அதற்கென தேடியலைந்ததில்
மழுங்கிய விழிகளுடைய
நான்கு தெருப்பாடகிகளைக் காண நேர்ந்தது
மிகமெல்லிய கீச்சுக் குரலில்
அவர்கள் கசித்த பாடல்களை
கவிதையின் குறிப்புகளாக்கிக் கொண்டேன்.
காணக்கூடாத இடமெங்கும்
கிழிந்து தைத்திருந்த ஆடையினை
உவமைகளாக்கிக் கொண்டேன்
மலையிடுக்கில் நீரூறுவதைப் போல
கண்களில் வடிந்த கண்ணீரால்
கவிதையை நிரப்பிக் கொண்டேன்
எதிர்பார்ப்புகளற்று அகன்று சென்றார்கள்
தெருப்பாடகிகள்
குருடாகிக் கிடந்தது
என் கண்களும், கவிதைகளும்.

கா.ரமேஷ்
28-04-2009, 06:30 AM
நிதர்சனமான உண்மைகள் சில சமயம் ரணங்களை ஏற்படுத்தும் ..... இந்த கவிதையின் நிகழ்ச்சியை போல பல சமயங்களில்....

ஆதவா
28-04-2009, 11:55 AM
மிக்க நன்றி கா.ரமேஷ்..

அமரன்
25-05-2009, 01:38 PM
தேகக்குழலிசை சிந்தும் ஆடைத்துளை.
வறுமையின் குரலால் வந்து வழும் பாடலிசை..
அனைத்தையும் எடுத்து வைத்த குறிப்புகளில் உறைந்திருப்பது என்னவோ நிர்வாணம்தான்.

ஓவியனுக்கு நிர்வாணம் தெரிவதில்லை.
ஓவியத்தில் நிர்வாணம்.....?
கல்லுக்கும் உண்டு கலை நயம்.....!

பாராட்டுகள் ஆதவா!

சின்ன சின்ன விசயங்களின் மீதான உங்கள் கூர்பார்வை வியப்பைத் தருகிறது.