PDA

View Full Version : ஆசிரியர்



vairabharathy
28-04-2009, 06:21 AM
ஆசிரியர்

கருப்புக் கடலில்
எழுத்துக்களைச் சேகரிக்கும்
நித்தில 'மனிதர்"

தான் சுவைத்த
கல்விப் பண்டத்தைப்
பலருக்கும் பங்கிடும்
இன்னொரு 'பரமன்"...

நான்கு கால்
ஆசனத்திலமரும்
மாண்புள்ள 'நூல்"...

கருணையிலும்
கண்டிப்பிலும்
கணக்குப் பார்க்காத
கருவூல 'அமைச்சர்"...

எதிர்காலத்
தூண்களின்
நிகழ்கால நிலம்...

பிழைநீக்கிப்
பயிற்றுவிக்கும்
நடமாடும் 'இலக்கணம்"...

ஆம்!
இவர்
இளம் உள்ளங்களுக்கே
சமர்ப்பணம்...