PDA

View Full Version : பிரியாத நட்பு வேண்டும்.



vairabharathy
28-04-2009, 06:09 AM
பிரியாத நட்பு வேண்டும்.


கர்நாடகமாய் நீ...
தமிழ் நாடாய் நான்...
காவிரியெனும் நட்பில்
புதியதோர் ஒற்றுமை...

இந்தியாவாய் நான்...
இஸ்லாமாபாத்தாய் நீ...
நம்
கைகளிணைக்கும் நட்பாய்
கா~;மீர் ரோஜா.

தேசிய கீதத்தின் போது
என்னுள் எழும்
உன்னத உணர்வாய்
நம் நட்பை
நான் மதிக்கிறேன்.

கருவிலிருந்து
கல்லறை வரை
தன்னலம் கருதா
தாய்ப்போல் நீயிரு! - அப்
பாசச் சூட்டில்
பரிணமிக்கும்
சேயாய் நானிருக்கிறேன்.

சூரிய ஒளிச்சேர்க்கையால்
வீரிய விதைகள் முளைக்கின்றன.
இச்சிறு
வித்துக்கு
சூரியனாய்...
அல்ல
சிறு மெழுகொளிபோலாவது
நீ வேண்டும்.

இனி
எவரெஸ்டாய் நான்...
எனை வென்ற
ஹில்லாரியாய் நீ...

போர்;க்களமாய் நான்...
மாவீரனாய் நீ...

மெய்யாய் நான்...
உயிராய் நீ...

பூஜ்ஜியமாய் நான்
எனக்கு முன்
எண்ணாய் நீ...

இப்படி
எல்லா நிலையிலும்
நாமிணைவோம் - என்ற
நம்பிக்கையில்

அன்பேயறியாத
இவ்வகிலத்தில்
பிரியாத உன்
நட்பு வேண்டும் !
என்றென்றும் !