PDA

View Full Version : இளமையில் வறுமை



vairabharathy
28-04-2009, 06:07 AM
இளமையில் வறுமை

தந்தை தரும் ஓராயிரத்தில் - மாதம்
தவணை முறையில் பசி மறந்தேன்...
கந்தை நூலாடையணிந்தே
கல்விச் சாலையில் வலம் வந்தேன்...

துடைப்பங்குச்சியுடைத்து - காதின்
துளையடைத்து - அரசுக்
கடைத் தேர்வுக்குக் கட்டணமாய்
கைக்கொடுத்தது என் அம்மா கம்மல்...

குடிகாரன் வேட்டி போல் - நிலை
குலைந்து கிடக்கும் குடிசை வீடு - மாதப்
புடியினை எதிர்பார்த்து எதிர்பார்த்தே
பட்டினியாய்க் கிடக்குது சமையற்கூடு !

தமிழ்ப்புத்தகத் தாள்களின் நடுநடுவே
தண்டலட்டைகளின் தஞ்சம் - கண்ணீர்
குமிழ்களில் மனங்கசிந்து - நிலை
குலைந்து நின்றதெனது நெஞ்சம்


மண்ணில் நான் பிறந்த கருவில்
மலர்ந்த மூன்று மாதத் தங்கை - அப்
பெண் பசிக்கு வற்றி விட்டதென்
பெற்றவளின் 'வெண் கங்கை".!

காலணியில்லா அப்பா கால்கள்ää
காதணியற்ற அம்மா செவிகள்
பால் சுவையறியா தங்கையிதழத் தனையுமென்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியிலே வலி மறந்தன.

வறுமையென்பதே துன்பம் - அது
இளமையில் வறுமையோ
வாழ்ந்து கெட்டவனின் பிம்பம்! - நம்
இந்தியாவும் ஒரு வகையில்
இத்தலைப்பின் சொந்தம்!