PDA

View Full Version : போர்க்களத்தில் சில பூக்கள்



vairabharathy
28-04-2009, 06:04 AM
போர்க்களத்தில் சில பூக்கள்
நூலாயுதங்களைக் கொண்டு
தேர்வெனும்
போர்க்களத்தில்
சில
பூக்கள்...

திருமண மேடையிலிருந்து
வெறுமணமாய்
இல்லறமெனும்
போர்க்களத்தில்
சில
பூக்கள்...


தேய்பிறையாய்
தேகம் சுருங்கி
உளம் கருகி
வெந்துகிடக்கும்
வேர்வையெனும்
போர்க்களத்தில்
சில
பூக்கள்...


ஓடும் நீரின்
இலட்சியம்
கடலில் கலப்பதே
இலட்சியமெனும்
போர்க்களத்தில்
சில
பூக்கள்...

இந்த
போராட்டப் பூக்கள்
வாழ்வில்
தேய்ந்து வளரும்
நிலாக்கள்...!

கா.ரமேஷ்
28-04-2009, 06:15 AM
தேய்ந்து வளரும் பூக்கள்...!////

நல்ல வரிகள்