PDA

View Full Version : மதுவே மரணத்தின் மனு



vairabharathy
28-04-2009, 05:59 AM
மதுவே மரணத்தின் மனு

ஏய்
இல்லற ஆலமரமே...!
உன்
ஆணி வேர் வரை - இத்
துpரவம்
தின்றுவிட்டதே..
இனியுன்
விழுதுகளுக்கு வேர்(று) யார்?

என்
மது மனிதா!
உன்னவள்
விரதத்தில் உருகிட..
இந்நரகத்தில்
நீ கருகிடää
இங்கே
நிர்கதியாயிருக்கும்
நித்திலங்களின் நிலை?

மதுவேää
நீ விண்ணப்பிக்கும்
மரண மனு !

உன்
அங்கம் அருந்தும்
அமில அணு !

இங்கே
'விளம்பரம் செய்யாதீரென"
விளம்பரம் செய்யும்
தெருச்சுவரின்
எச்சரிக்கை வாசகமாய்
அச்சடிக்கப்பட்ட
அனுதாப வார்த்தையே
'குடி குடியைக் கெடுக்கும்"!

இந்நாட்டுக்கு
உங்கள்
உடல்களே
ஊதியத் தீனியா?

இதையுண்ட
களைப்பிலுள்ளதோ
இவ்வளரும்
இந்தியா?!

என்
மதுவன்பர்களே!
சர்க்கார் நடத்தும்
சாராய யாகத்தில்
எரிக்கப்படும்
'சமித்துக் குச்சிகள்"
நீங்கள் !


தன் விளிம்பைக் கடந்து
விரலைச் சுடும்
தீக்குச்சி மாதிரி...

உன்னோடு
உன்
உறவுகளையுமெரிக்கும்
குடிசைத் தீ
நீ..

நீயும்
மெழுகும்
இறப்பிலே ஓரணி...







என் செய்வது
தன்
துன்பமெனும்
சிலம்பையுடைத்து
அங்கமெனும் நகரை
நெருப்பில்லாமல் எரிக்கிறாய்
பொறுப்பில்லா கண்ணகிபோல்...
நீயும்!

இது அரசின் கொலையா?
உன் தற்கொலையா?
பதில் சொல்லாது
இந்த
இன்ப 'மது" கிண்ணம்...!

உன்
இறப்புக்குப்பின்
இல்லறத்துக்கு
துன்ப 'மது" திண்ணம்...!

சுரி
இப்'போதைக்குள்"
விழுந்தவுனைத்
தூக்கிவிட
இப்போதைக்குக்
கை கொடுத்து
காத்திருக்கிறேன்...

மேலெழுந்து
வா..!




அன்புடன்

வைரபாரதி