PDA

View Full Version : இன்றைய பெண்கள்



vairabharathy
28-04-2009, 05:51 AM
இன்றைய பெண்கள்

பரிதி விட்டெரியும் ஒளிகள்
பாரெங்கும் புகுவது போல
புதமைகளில்லா துறைகள்
பாரினில் எங்காவது உள்ளதோ!?

வீட்டுச் சிறையைக் கடந்து
விண்ணிலடிக்கும் சிறகுகள் - சாதனை
ஏட்டுச் சுவழகளைத் திறந்தால்
எல்லாம் பெண்களின் வரவுகள்

கழனியிலிருந்து கணினி வரை
கன்னியரின்றி வேலைகளுண்டோ!
உழவு முதல் உயிர் தரிக்கும் வரை
உமையிழந்தால் வேறு வழியுண்டோ!

விஞ்ஞானத்திலும்ää விவசாயத்திலும்
விவேகமாய் உங்களணி
மெஞ்ஞானத்தோடு இம்மேதினியில்
மெல்லியர் உங்கள் பணி

இருந்தும்..

திரைச்சீலைக்குத் தன் தேகத்தைத்
தீனியாய் விற்றுக்க களிக்கும்
கறைபடிந்த சில கசாப்புக் கன்னியர் - இக்
காசினியில் அழிக்க வேண்டிய களையினர்

மேலும்

அழகு போகுமென
அழும் தம் பிள்ளைக்கு
ஒழுக்க நெறியுள்ள பெண்களும்
ஊட்ட மறுக்கின்றனர் தாய்ப்பாலை...



இவர்களில்லை எம் பாரதி கண்ட புதுமை
இங்கே உயிரிருந்தும் உணர்வற்ற வெறுமை
சுவரிலே வாழ்ந்து வரும் சித்திரங்கள் - என்
சுதேசியின் பார்வையில் தப்பிய விசித்திரங்கள்

மகாகவி கண்ட புதுமையாய்
பாவேந்தரின் குடும்ப விளக்காய்
மகாத்மாவின் கலங்கரமாய்
மாற வேண்டும் சில பெண்கள்

உண்மையில்

மென்மையான பேச்சும்
மேன்மைக் கொண்ட பார்வையும்
வன்மையில்லா குணங்களும் - நல்
வஞ்சியரின் சிறப்பியல்புகள்!

கா.ரமேஷ்
28-04-2009, 05:57 AM
அருமையான வரிகள்.... வாழ்த்துக்கள்...!

kavitha
06-05-2009, 08:45 AM
மாற வேண்டும் சில பெண்கள்

....
இக்
காசினியில் அழிக்க வேண்டிய களையினர்
காசினி அருமை.