PDA

View Full Version : யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான ஊடக செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு



தூயவன்
27-04-2009, 03:26 PM
யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி இலங்கை இராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

'பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என பாதுகாப்பு அமைச்சக இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.

இது தொடர்பாக முன்னர் இந்திய இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை முடித்து கொள்வதாக சிறிலங்கா அறிவிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை முடித்துக் கொள்வதாக சிறிலங்க அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளதாக கருதுகிறோம். இதையடுத்து கனரக துப்பாக்கிச்சூடு, விமானத் தாக்குதல், எறிகணைகள் வீசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு சிறிலங்கப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேதருணத்தில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்து ஈடுபடுவர். அப்பாவி மக்களை மீட்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று அறிவித்த போர்நிறுத்தத்தை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று அதிகாலையில் தமிழக முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார்.

இதையடுத்து சிறிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்ச தலைமையில் இன்று நடந்த பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டத்தில் புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக சிறிலங்கா அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

நன்றி : தமிழ்வின்

அன்புரசிகன்
27-04-2009, 04:15 PM
கோத்தபாய ஏற்கனவே சொல்லியாச்சு... இது கலைஞர் தனது உண்ணாவிரதத்தினை முடிவுக்கு கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட வதந்தி. அவ்வளவே...

இன்பா
27-04-2009, 04:24 PM
அடப்பாவிகளா? இப்படியெல்லாம் கூட ஏமாத்துவாங்களா...?

அணுகுண்டு ரகசியத்து யாராவது பிரபாகரனுக்கு இமெயில் அனுப்பங்கப்பா...!

ராஜபக்சே நடுமண்டையில போடட்டும்

விகடன்
27-04-2009, 04:42 PM
கலைஞரிற்கு ஏதாவது வைத்திய சோதனை இருந்திருக்கும். :D :D :D

தூயவன்
27-04-2009, 05:25 PM
அடப்பாவிகளா? இப்படியெல்லாம் கூட ஏமாத்துவாங்களா...?

அணுகுண்டு ரகசியத்து யாராவது பிரபாகரனுக்கு இமெயில் அனுப்பங்கப்பா...!

ராஜபக்சே நடுமண்டையில போடட்டும்

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

praveen
28-04-2009, 05:14 AM
கலைஞரிற்கு ஏதாவது வைத்திய சோதனை இருந்திருக்கும். :D :D :D

கலைஞர் எப்போதும் போல சும்மா இருந்து திட்டு வாங்கி கொண்டிருந்திருக்கலாம், இந்த மாதிரி அவர் மட்டுக்கு போராடி ஏதாவது செய்து அவர் பெயரை கெடுத்திருக்க வேண்டாம். சிலர் என்ன பேசினாலும்(புலிகள் இல்லாத தனி ஈழம் அமைத்து தருவேன்) கை தட்டும் கூட்டம், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை ராணுவத்தை ஒரு படி இறங்க இந்த உண்ணாவிரதம் ஒரு காரணம் என்றால் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அதிக அப்பாவி மக்கள் இறக்க காரணமாக இருந்தது இந்த விமானப்படை குண்டு வீச்சால் தான் என்பதை மறந்து விட்டார்கள்.

தேர்தல் கால வாய்பேச்சில் பழசை(அப்பாவி மக்கள் போரின் மீது சாவது சகஜம்தான்) மறந்து இதற்கு கை தட்டும் தமிழர்களை நினைத்தால் வருத்தமாக தான் இருக்கிறது.

தினமும் தர்மம் போட்ட தே____ இன்றைக்கு ஒன்றும் போடவில்லை, ஆனால் என்றைக்குமே போடாத மகராசி இன்றைக்கு சோறு போட்டாள் என்ற பழமொழி தான் நியாபகம் வருகிறது.

இந்த தள்ளாத வயதில், அவருக்கு இது தேவைதான்.

போர் நிறுத்தம் என்று அறிவித்தாக செய்தி வந்தவுடன் சிலர் கருணாநிதியை இனையத்தில் தூற்றுகிறார்கள், இப்போ சொன்னவுடன் போர் நிறுத்தப்பட்டதென்றால் ஏன் முன்னரே இந்த மனுசன் உண்ணாவிரதம் இருக்க வில்லை, எல்லாம் தேர்தலுக்காக என்று, இப்போ போர் நிறுத்தம் உண்மையிலே இல்லை என்றால் இவர்கள் திட்டு எங்கே போனது,

உண்மையிலே இலங்கையில் தேர்தல் நடைபெற்று முடிவு வரும் வரை அந்த அரசு நிறுத்தாமல் இருந்திருக்கிறது, இப்போது கருணாநிதி உண்ணாவிரதம் + கூட்டனி முறிவு என்ற கடைசி அஸ்திரத்தில் போர் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.

இன்பா
28-04-2009, 07:04 AM
ஒன்றை நன்றாக சிந்திக்க வேண்டும்,

போர் நிறுத்தம் செய்வது ராஜபக்ஷே கையில் இல்லை, இந்திய அரசிடம் தான் இருக்கிறது. இங்கே சொன்னால் ஒழிய அது நடக்காது. பிரபாகரன் ஒழித்துக் கட்டாமல் இவர்கள் வாய்திறப்பது இல்லை. இதில் மந்திய அரசு உறுதியுடன் இருக்கிறது.

இந்த உண்ணாவிரதத்தை முன்பே ஏன் செய்யவில்லை என்ற கேள்வி கேட்கிறார்கள் என்றால் அந்த கேள்வியில் பொருள் இல்லாமல் இல்லை, முன்பு பந்த செய்தபோது என்ன சொன்னார் இது சட்டவிரோதம்? என்று சொன்னார், உண்ணாவிரதம் இருந்ததற்க்கு என்ன சொன்னார் என் ஆட்சியை கலைக்க சதி செய்கிறீர்களா என்று சொன்னார்.

அப்படியாகில், இவர் செய்தது சந்தகம் வராமல் இருக்குமா? இந்த கேள்விக்கு பதில் என்ன? கூட்டணியில் இருந்துக் கொண்டே பந்த், உண்ணாவிரதம் என்றால் இவரின் பேச்சை மந்திய அரசு கேட்க வில்லை, அதாவது செவிசாய்கவில்லை என்ற உண்மை விளங்குகிறதல்லவா?

எப்பவும் யாரும் சோறு போடவில்லை, இதோ போடுகிறேன் என்று தான் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ போடுகிறேன் அதோ போடுகிறேன் என்று ஏமாற்றுபவர் போடுகிறேன் என்றால் நம்ப முடியுமா, இல்லை போடவே மாட்டேன் என்று போடமல் இருந்தவர், போட்டே தீருவேன் என்பதை நம்பாமல் இருக்க முடியுமா?

நான் போடுகிறேன் என்பதற்கும், போட்டே தீருவேன் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு தானே?

சரி, போர் என்றால் ஆயிரம் பேர் சாவர்கள் என்றார், ஆனால் தன் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் உணர்ந்து கொண்டுள்ளார் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது. அசோக சக்ரவர்தி போல.

அமரன்
28-04-2009, 08:49 AM
தொடர்ந்தும் பதிவுகளில் கண்ணியம் மின்னட்டும் நண்பர்களே!

பிரவீன்!

ஈழ விவகாரத்தில் கலைஞருடன் பல இடங்களில் உடன்பட்டேன். இந்த விடயத்தில்...

இனி என்ன நடக்கும். போரை விரைவில் முடிக்க ஸ்ரீலங்கா நினைக்கும். தாக்குதம் அசுர வேகம் பெறும். அழிவு கூடும். ஸ்ரீலங்காவுக்கு மக்கள் அழிவு ஒரு பொருட்டல்ல என்பது உங்களுக்கும் தெரியும்.

கலைஞர் இதைச் செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது முன்பே செய்திருக்கலாம்.

விகடன்
28-04-2009, 06:25 PM
போர் கொடூரம் குறைக்கப்படவில்லை பிரவீன்.
மாறாக அதன் கோடூரம் உங்கள் கண்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உண்ணாவிரதமிருந்து யுத்தநிறுத்தம் வந்திருந்தாலோ அல்லது போரின் கொடூரம் தணிக்கப்பட்டிருந்தாலோ வேறுவிடயம். ஆனால், சிறீலங்கா அரசாங்கம் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை இட்டு எந்த கவலையும் கொள்ளவில்லை. அவ்வாறிருந்தபோதிலும் கருணாநிதி தன்னுடைய உண்னாவிரதத்தை முடிவிற்கு கொண்டுவர சொன்ன காரணங்கள்தான் நகைப்பிற்கிடமானது.

அதற்காக அவரை தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்க்கச் சொல்லவில்லை. ஒருநாள் அடையாள உண்ணாவிரதமென்ற பெயரில் இருந்திருக்கலாம். அதையும் சில மாதகாலங்களுக்கு முன்னர் செய்திருக்கலாம்.

ஜெயலலிதாவின் பேச்சைக்கூட நம்பத்தயாரில்லை. ஏனெனில் அவர் இப்போது சொல்வதுபோல எதிர்காலத்தில் செய்யமுடியுமாயின், அம்முயற்சியை இன்று மேற்கொண்டிருந்து அவர் எதிர்பார்க்கும் வெற்றியின் ஒருபகுதியினையாவது அடைந்திருக்கலாம்.

விகடன்
28-04-2009, 06:45 PM
மேலும், கனரக ஆய்தமென்பது விமானக்குண்டுவீச்சு (கொத்துக்குண்டு) மட்டுமல்ல. தரையிலிருந்து ஏவப்படுபவை பலதுமுள்ளது.

மேலும், தாங்கள் சொன்னதுபோல் விமானக் குண்டுப்பாவனை இன்றுமிருக்கத்தான் செய்கிறது.

தள்ளாத வயதில் இப்படியான நடவடிக்கை மேட்கொண்டதாக கருணாநிதிக்கு அனுதாபத்தை சொல்கிறீர்கள். இருக்கட்டும்.
பொதுவாக ஒன்றைக் கேட்கிறேன்....
இந்தத்தள்ளாத வயதில் ஏன் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்?

அமரன்
28-04-2009, 08:22 PM
நபரை விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை. செயல்களையே விமர்சிக்க விரும்புகிறேன். விமர்சிக்கிறேன். எந்தப்பிரச்சினையானாலும் எந்தத்தரப்பானாலும் என்னிலை இதுதான்.

இன்றும் வன்னியில் மக்கள் மீது வான்,தரை,கடல் வழித்தாக்குதல்கள் நடைபெற்றிருக்கின்றன என்ற காணொளிச் சாட்சியுடனான செய்தியை ரொய்ட்டரில் பார்த்துவிட்டு கலைஞர் தொலைக்காட்சியைத் திருப்பினால் போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளதாகச் செய்தி சொல்கிறார்கள்.

இத்தைகைய செயல்களால் கலைஞரை சந்தேகிப்போருக்கும், விமர்சிப்போருக்கும் தீனி போடுவது எந்தளவு பாரதூரமானது.

ஜெயா டிவியில் இன்றைய வன்னிச் சிதைவுகளின் காணொளியை இணைத்தும் கலைஞரின் இன்றைய அறிக்கையில் தமக்குத் தேவையான பகுதியையும் போட்டு தம்பக்கம் மக்களை இழுக்க முனைகிறார்கள். (வன்னி அவலங்களை பலரைச் சென்றடைவதே புலம்பெயர் தமிழரின் முதன்மையான நோக்காக உள்ளது என்பதைக் கருத்தில் கொள்க)

இப்படித்தான் கலைஞர் மீதான சொல்லடிகள் வலுப்பெறுகின்றன. கலைஞர் செய்யும் நல்ல விசயங்கள் கூட காணாமல் போய்விடுகின்றன.

பூமகள்
29-04-2009, 03:46 AM
வன்னி மக்கள் போரில் சாவதைக் கூடத் தனக்கு சாதகமாக்கி ஓட்டுச் சேர்க்கப் பார்க்கும் அரசியல் வாதிகளை என்ன செய்தால் தகும்??

கோபமும் வருத்தமுமே மேலிடுகிறது..

தேர்தலுக்காகப் பொய் வாக்குறுதிகள் எல்லாம் போய், இப்போது நவீனமாக ஈழ மக்களின் அவல நிலையைக் கூட தன் சுய நலத்துக்காகப் பயன்படுத்தும் கட்சிகளும் தலைவர்களும் இருக்கும் வரை பூமி உய்க்காது...

மக்கள் உண்மையை உணரா வண்ணம் ஊடகங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து ஒவ்வொரு கட்சியும் அதன் பிரச்சாரத்தை செவ்வனே செய்து.. முற்றிலுமாக உண்மைச் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுவருகிறது பலகாலமாகவே.....

புரட்சி வெடித்து மக்கள் மனதில் தெளிவு பிறக்கும் வரை இந்தக் கூத்துகள் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கும்..

praveen
29-04-2009, 05:09 AM
பொதுவாக ஒன்றைக் கேட்கிறேன்....
இந்தத்தள்ளாத வயதில் ஏன் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்?

பதிலுக்கு பதில் தருவதாக நினைக்க வேண்டாம் நண்பரே, மனதில் தோன்றியதை சொல்கிறேன்.

அவர் அடைந்திருக்கும் முதல்வர் பதவி என்பது நியமனபதவி அல்ல, அவர் தேர்தலில் வெல்லாமல் மேல்சபை மூலம் முதல்வராக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் கொடுத்தது அது. அவர் ஆசைப்பட்டாலும் தமிழக மக்கள் அனுமதிக்காமால் அவர் அந்த பதவியில் அமர முடியுமா?. இந்த தள்ளாத வயதிலும் திட்டங்கள் தீட்டுவதிலும் அதனை செயல்படுத்துவதிலும் மற்றவர்களுக்கு முன் உதராணமாக இருக்கிறார். சமீபத்தில் இலங்கையில் அல்லற்படும் மக்களுக்கு நிவாரண பொருட்களை பேக் செய்து அனுப்பும் இடத்திற்கு நேரிலே மோட்டார் நாற்காலியில் சென்று பார்த்து அனுப்பினார். அவர் வயோதிகத்தை காரணம் காட்டி ஏதாவது செய்யாமலிருக்கிறாரா என்று சொல்லுங்கள்.

இதற்கு முன் ஒரு முதலமைச்சர் பேசக்கூட முடியாமல் இருந்தாரே, அப்போதெல்லாம் இந்த கேள்வி எழுந்ததா?. கருணாநிதி என்றால் இலங்கை தமிழருக்கு இளக்காரம் தான். இவர் முன்பு பிறந்த நாள் நிதியில் இருந்து பணம் ஒவ்வொரு ஈழ இயங்கங்களுக்கு கொடுத்த போதும் ஒரு இயக்கம் மட்டும் அண்ணன் கோவித்து கொள்வார் என்று வாங்க மறுத்தது மறந்து போய் விட்டதோ, எட்டி உதைத்த காலுக்கும் முத்தம் கொடுக்க நினைத்தவர் தான் கலைஞர்.

நேசம்
29-04-2009, 06:07 AM
ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞரை விட மற்றவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால், நான் நிச்சய்ம் சொல்வேண்.கலைஞருக்கு அதை விட பல மடங்கு இருக்கும்.இதில் சந்தேகம் இல்லை.ஆனால் சமிப காலமாக அவரது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது.அதனால் அவரது நடவடிக்கைகல் முனைப்புடன் இல்லை.

இன்பா
29-04-2009, 06:31 AM
ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞரை விட மற்றவர்களுக்கு அக்கறை இருக்கும் என்று சொன்னால், நான் நிச்சய்ம் சொல்வேண்.கலைஞருக்கு அதை விட பல மடங்கு இருக்கும்.இதில் சந்தேகம் இல்லை.ஆனால் சமிப காலமாக அவரது நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது.அதனால் அவரது நடவடிக்கைகல் முனைப்புடன் இல்லை.

பதில் உங்கள் பதிவிலேயே இருக்கிறதே,

ஈழத்தமிழர் விசயத்தில் கலைஞருக்கு அக்கறை இல்லை என்று யாரும் சொல்லவில்லை, ஆனால் கலைஞரின் தராசில் ஒரு பக்கம் பதவியும் மறு பக்கம் ஈழத்தமிழர் பிரச்சனையும் வைத்தால்...

ஈழத்தமிழர் பிரச்சனையில் யாருக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும், தமிழராகிய நமக்கு தானே, அவர் பதவிக்கு ஆசைப் பட்டாரா? மக்கள் அமரவைத்தாரா? சரி மக்களே அமர வைத்தார்கள், மக்களின் மனநிலை புரிந்துக்கொள்ள வேண்டுமல்லவா? மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க வேண்டுமல்லவா?

அவர் நல்ல திட்டங்களை செயல் படுத்தியவர் தான் மறுப்பதற்கில்லை, ஆனால் தற்போது அவரின் எண்ணமெல்லாம் வேறு, தனக்குப் பிறகு திமுக என்ற கவலையொன்றன்றி வேறு இல்லவே இல்லை.

ஏன் வெறுமனே கேள்விகள் கேட்க வேண்டும், இப்படி கேள்விகள் அடுக்கிக் கொண்டு போய்கொண்டே இருக்கலாம்.

ஒரே கேள்வியில் எல்லாவற்றையும் அடுக்கிவிடலாம்?

அவர் இன்னும் ஏன் காங். கூட்டணியில் இருக்கிறார்?

அமரன்
29-04-2009, 08:19 AM
ஆட்சிமாறினால் காட்சிமாறும் என்பதை நானும் நம்பவில்லை.

நாட்டு நலன், பிராந்திய நலன், உலக நலன் என்ற ஓட்டத்துடன் ஒத்தோடத் தொடங்கிவிட்டது ஈழம் தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு.

உலக அரங்கில் நின்று கடந்த, நிகழ்காலங்களை பாருங்கள். உண்மைகள் புலப்படும்.

நேசம்
29-04-2009, 10:30 AM
இந்தியா உதவில்லையென்றால் மற்ற நாடுகள் அதாவது பாகிஸ்தான் அல்லது சீனா இலங்கைக்கு உதவி செய்யும்.அது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக அமையும்.அதனால்தான் இந்தியா உதவி செய்யுகிறது என்று சொல்லப்படுகிறது.இதை மத்திய அரசு விளக்கமாக கலைஞருக்கு சொல்லி விட்டதால், அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும், மேலும் வேறு எந்த அரசு இருந்தாலும் இலங்கைக்கு கண்டிப்பாக உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா...

ஆதி
29-04-2009, 10:51 AM
இந்த முறை கலைஞரால் அதிகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல இயலவில்லை.. நான்கு முறைதான் சென்றார் என்று நினைக்கிறேன்.. ஆனால் உண்ணாவிரதம் என்ற பெயரில் தமிழ்நாட்டையே அரைநாளில் தம் பக்கம் திருப்பி கொண்டார்.. அவர் தனது அரசியல் முதிர்ச்சியை, காய் நகர்த்தும் வித்தையை இந்த விடயத்தில் காட்டி இருக்க கூடாது..

praveen
29-04-2009, 11:01 AM
இலங்கை சார்க் நாடுகளில் ஒன்று தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று உதவ வேண்டும் என்பது ஒரு கொள்கை.

மேலும் இந்தியா உதவவில்லை என்றால் மற்ற நாட்டின் உதவியை நிச்சயம் இலங்கை நாடும், பின்னர் உதவி செய்தவர் இலங்கையில் பதிலுக்கு வணிகம் அல்லது மற்ற(ராணுவ) வேலைகளுக்காக உறவு மேற்படுத்துவர். இதனால் இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்து. மற்றவன் செய்யும் வேலையை நாம் செய்வோம் என்றும்.

புலிகள் ஒழிப்பது என்பது காங்- அரசின் எண்ணம், அதற்கு உதவினால் போல் ஆயிற்று இதனை திமுக மாதிரி தமிழ் கட்சியிடம் சொல்லி அதரவு வாங்க முடியாது என்பதால் மேலே சொன்னதை சொல்லி காங்கிரஸ் காரியம் சாதிக்கிறது.

வடஇந்திய முதலாளிகள் பெரிய அளவில் லாபம் அடைய இந்த போரை இந்திய அரசு ஊக்கப்படுத்துகிறது என்றும் சொல்கிறார்கள். இந்திய பொருட்களை சந்தையிட இலங்கை நல்ல வாய்ப்பாக இருப்பதாலும், நிறைய வளங்கள் இருப்பதால் அங்கே அமைதி நிலவினால் நிறைய தொழிற்சாலைகள் அமைத்து அதிக லாபம் பெறலாம் என்பதால் தீவிரவாதம் ஒழிய பெரிய அளவில் கூட்டனி அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

தீவிரவாதி என்ற சொல்லால் உலக அளவில் புலிகள் இயக்கத்தை குறிப்பிடுகின்றனர், ஆனால் தமிழ்நாட்டில் யாரொருவரும் (மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களை தவிர) புலிகளை அப்படி பொதுவாக சொல்வதில்லை.

விகடன்
29-04-2009, 04:00 PM
தமிழ்நாட்டில் யாரொருவரும் (மானங்கெட்ட காங்கிரஸ்காரர்களை தவிர) புலிகளை அப்படி பொதுவாக சொல்வதில்லை.

அப்படியாயின் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் சுயநிர்ணய உரிமையையும் ஆமோதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிரம் தாழ்த்துகிறேன்.

அமரன்
30-04-2009, 07:36 AM
இங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாநகர மேஜர் ஒருவர் சொன்னார் "புலிகள் தமிழரின் காவலர். பயங்கரவாதிகள் அல்லர்". இன்னொருவர் சொன்னார் "நீங்கள் பயங்கரவாதி என்றால் நானும்தான் பயங்கரவதி. உரிமைக்காக தினமும் நான் போராடுகிறேன்".

இங்கே நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்கள் தொகை, எழுப்பட்டும் கோசங்கள், பதாகை சுலோகங்கள், பேச்சாளர்கள் வார்த்தைகள் எல்லாமே அரச்சாங்கத்தினால் ஆவணப்படுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.