PDA

View Full Version : வாருங்கள் ஒரு நாடகம் அரங்கேற்றம்...சென்னை



இன்பக்கவி
27-04-2009, 02:35 PM
இத்தாலிகாரி தயாரிக்க
தமிழன் என்ற போர்வையில்
மூத்த முதியவன் திரைக்கதை
வசனம் எழுதி
தானே நடித்து கொண்டு
இருக்கும் மிக பெரிய
நாடகம்....

தேர்தல் நாடகம் போடுவதில்
தேரிய நடிகன் அல்லவா???
உனக்கா நடிக்க சொல்லி தர
வேண்டும்....

தலையறுகில் சின்ன வீடு....
காலருகில் பெரிய வீடு...
இப்பவும் மனைவிகளை
பிரியாத மாணிக்கம்...

இருவரும் கண்ணீர் விட்டுக்கொண்டு
கணவனை காப்பாற்ற போராடி
கொண்டு இருக்கும் வேடம்....
கலை குடும்பம் ஆயிற்றே
சொல்லியா தரவேண்டும்....
நடிக்க....

நகைச்சுவை காட்சிக்கும்
பஞ்சம் வைக்க வில்லை..
கைகூலிகளின்
கோஷம் தான் நகைச்சுவை..

"நீங்கள் வேண்டும்... நீங்கள் வேண்டும்...
தமிழர் வாழ நீங்கள் வேண்டும்...
உலக தமிழர் வாழ நீங்கள் வேண்டும்...
போரை நிறுத்து!!! போரை நிறுத்து"!!!

இதை விட நகைச்சுவை காட்சி
இனி எங்கும் நடக்க
போவதும் இல்லை....

நீ என்ன செய்தாலும்
தேர்தலில்
நீ கவ்வ போவது
மண்ணு தான்......

உன் தேர்தல் நாடகம்
தோல்வி அடைய....

உலக தமிழர்களின் சாபங்கள்.......

ஆதவா
27-04-2009, 02:53 PM
தீவிரமா பிரச்சாரத்தில இறங்கிட்டீங்க போல..

இந்தமாதிரி கவிதைகள் உங்களை வேறுபடுத்தாது.. காற்றில் கரைந்துவிடும் ஈரப்பதம் போல மறைந்துவிடும்..

எழுத்துக்களை வீணாக்காதீர்கள்... தயவு செய்து!!