PDA

View Full Version : வ ர (ர்) தட்சணை



vairabharathy
27-04-2009, 09:39 AM
வ ர (ர்) தட்சணை


மண்ணெண்ணை அடுப்பெரிக்க மட்டுமா? - இங்கே
மங்கையின் உடலெரிக்கவும் தான்
பொன்னும் பொருளுமில்லா திருமணம் - பின்னர்
பொக்ரான் போல் வெடிக்கும் அனுதினம்

சின்னச் சின்ன தவறுக்கெல்லாம்
சீர்வரிசை வாய்சிரிக்கும் - அவளிடம்
எண்ணக் கனவுகளெல்லாம்
எந்நாளும் தீக்குளிக்கும்

வாசத்தோடு சகிää சாம்பார் வைத்தாலும் - அது
வசமாறி அங்கே உப்புக்கரிக்கும்
ஆசையோடு கணவனிடம் பேசும்போது - அவள்
ஆத்தையின் குரல் சமையலறைக்கே வந்தொலிக்கும்
நேசம் கொண்ட சேவைகளெல்லாம்
நிர்கதியாய் அவளைப் பரிதவிக்கும்

பஞ்சணையில் தன்னைப் பறிகொடுக்கும்போது
பாவையிடம் தட்சணையேதும் கேட்பதில்லை
நெஞ்சிலுள்ள ஆசையெல்லாம் - அவள்
நெற்றி தொட்டவன் எண்ணிப் பார்ப்பதில்லை
வஞ்சியர் வாழ்வை இங்கு தியாகமென்பேன் - ஆமாம்
வசிக்கும் அவள் வீட்டை 'வண்டலூர்" காடென்பேன்

மெழுகாய்த் தன் மேனியை - இம்
மேடையிலேற்றி விட்ட திங்கள் - அவள்
அழுதழுதுத் துடைக்காமல் - சுடர்
அணைந்து கிடக்கும் கண்கள்...