PDA

View Full Version : ஐம்பது ரூபாய்



vairabharathy
27-04-2009, 09:34 AM
ஐம்பது ரூபாய்
எனக்கு
பொருளியல்
புத்தகம் வாங்க
இன்றே கடைசி நாள்...

என் அம்மாவின்
இருமலுக்கு
மருந்து வாங்க
இதே கடைசித்தாள்...

ஆதவா
27-04-2009, 11:15 AM
பொருத்தமாக
'பொருளியல்"ஐ புகுத்தியது அழகு..

வறுமையின் விளிம்பு,
தள்ளாடி விழாதவரைக்கும் பாடமாகவே இருக்கட்டும்!!

வாழ்த்துக்கள் வைரபாரதி

சிவா.ஜி
27-04-2009, 12:22 PM
கடைசிநாளும், கடைசிதாளும் கவிதையின் அழகு, வலி, உணர்வு எல்லாமுமே.

வளமையான வரிகள். வாழ்த்துகள் வைரபாரதி.