PDA

View Full Version : மலரும் மனிதனும்



vairabharathy
27-04-2009, 09:28 AM
மலரும் மனிதனும்

முட்கள்
மத்தியில்
சில பூக்களாய்...

மனக்கல்லென
மத்தியில்
மனிதன்

காம்பின்
கரத்தில் மலர்
நல்ல
மாண்பின் குணமே
மனிதன்

மனிதனும் மலரும்
ஒரு பொருட் பன்மொழி - இதை
ஒப்புமைப்படுத்திக்
காட்டுவது என்வழி...

இரண்டும்
வாழ்வது பொது நலமாய்
இரண்டும்
வீழ்வது ஓரினமாய்...

காலை
கூந்தல் நிலத்தில்
கொஞ்சி விளையாடி
மாலை
அந்திப்பொழுதில்
அங்கம் கருகிடும்
மலராய்...









தூளியில்
துயிலெழுந்து
இடையில்
இன்ப துன்பத்தில் அடிபணிந்து
கடைசியில்
கல்லறைக்கூட்டில்
மறு உறக்கம்
மனிதன்...

பேசா
தெய்வ மேனி மீது
வாசம் வீசிடும்
மலர்...

மந்திர கோ~மிடுபவன்
மனிதன்...

காம்பையிழந்த பின்னும்
நாரை நம்பும்
மலர்...

தொப்புள்
கொடியையிழந்த பின்னும்
தொட்டில்
மடியை நம்புபவன்
மனிதன்.

மலரும்
மனிதனும்
வாழ்க்கையில் 'ஒன்றே"
இதனைப்
புரிந்து கொண்டால்
எல்லாம் 'நன்றே".