PDA

View Full Version : "தனி ஈழம் தான் ஒரே தீர்வு! அதை அமைக்கும் நடவடிக்கையை நான் நிச்சயமாக செய்வேன்!!": ஜெயலலிதா பரபதூயவன்
26-04-2009, 04:25 PM
இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான்; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்க தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.

இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.

எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.

அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட காணொலிக் [Video] காட்சிகளை இலத்திரனியல் காணொலித் தட்டில் [DVD] எனக்கு திரையிட்டு காண்பித்தார்.

அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, காணொலி காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த காணொலி காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.

அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.

உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை இராணுவம் உத்தரவிடுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.

நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.

இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.

கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...

குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை [Concentration Camps] நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.

இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை இராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணிவெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?...

இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.

இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

நன்றி : புதினம்

தூயவன்
26-04-2009, 04:27 PM
ஒலி வடிவில் கிளிக் கவும்
http://www.tubetamil.com/view_video.php?viewkey=4c46523e30782ad31727&page=1&viewtype=&category=

அன்புரசிகன்
27-04-2009, 04:22 AM
இன்னும் காலம் இருக்கே... ஏன் அவசரப்பட்டு முடிவெடுத்துட்டாங்க???

நேசம்
27-04-2009, 04:38 AM
தேர்தலுக்கு இல்லமால் இதை சொல்லி இருந்தால் வரவேற்க குடிய விஷயம்.இதற்கு பதிலாக திமுக தலைவர் உண்ணாவிரதம் நாடகத்தை ஆரம்புயுத்துள்ளார்

aren
27-04-2009, 05:23 AM
இவையெல்லாம் தேர்தல் முடியும் வரைதான். பின் இங்கே பேசிய அனைத்தும் அழிக்கப்படும். இதுதான் அரசியல்.

அனைவரும் இப்படி இலங்கை பிரச்சனையை எடுத்துக்கொண்டு பேசுவது மனதிற்கு வேதனையாக உள்ளது. தேர்தல் இல்லாத சமயத்தில் ஏன் இந்த மாதிரியான பேச்சுகள் உத்தரவாதங்களை நம் அரசியல்வாதிகள் கொடுப்பதில்லை. எல்லாமே ஒரு மாயைதான்.

praveen
27-04-2009, 06:14 AM
தேர்தலுக்கு இல்லமால் இதை சொல்லி இருந்தால் வரவேற்க குடிய விஷயம்.இதற்கு பதிலாக திமுக தலைவர் உண்ணாவிரதம் நாடகத்தை ஆரம்புயுத்துள்ளார்

நேசம் ஜெயலலிதா வெட்டியாக பேசுவதற்கும், கருனாநீதி இதுவரை போர் நிறுத்தச்சொல்லி கோரிக்கை மட்டுமே விடுத்தவர் அதை இறுதிக்கு கொண்டுவர உண்ணாவிரதம் இருப்பதும் இரண்டும் ஒன்றல்ல என்பது எனது கருத்து.

ஒவ்வொரு தேர்தலிலும் இதற்கு முன் இலங்கை பிரச்சினை இல்லை, இந்த தேர்தல் சமயத்தில் அது உச்சகட்டம் அடைந்திருப்பது தான் பிரச்சினை.

பொறுப்பில் இருப்பவருக்கும் பொறுப்பில்லாமல் பேசுபவர்க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

இருவரையும் போற போக்கில் ஒரே தட்டில் வைத்து நிறுப்பது சரியல்ல.

இன்பா
27-04-2009, 06:22 AM
அரசியலுக்காக செய்கிறாரோ? உண்மையில் அக்கரை கொண்டு செய்கிறாரோ? சுயநலத்துக்காக செய்கிறாரோ?

இந்த உண்ணாவிரம் நாடகம் ஆனாலும் இதன் மூலம் இலங்கை அரசுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்கும், அது இலங்கை தமிழருக்கு நல்லதாக அமைய வாய்ப்பிருக்கிறது...

நேசம்
27-04-2009, 06:27 AM
நேசம் ஜெயலலிதா வெட்டியாக பேசுவதற்கும், கருனாநீதி இதுவரை போர் நிறுத்தச்சொல்லி கோரிக்கை மட்டுமே விடுத்தவர் அதை இறுதிக்கு கொண்டுவர உண்ணாவிரதம் இருப்பதும் இரண்டும் ஒன்றல்ல என்பது எனது கருத்து..


இவ்வித* முன்ன*றிவிப்பு இல்ல*மால், ஏன் க*ட்சி நிர்வாகிக*ளுக்கு கூட* தெரிவிக்க*மால் உண்ணாவிர*த*(நாட*க*த்தை) ஆர*ம்பித்த*து ஏன்.ஜெய*ல*லிதா அந்த* அறிவிக்கை விட* வில்லையென்றால் இந்த* நாட*க*ம் ந*ட*ந்து இருக்காது.ஒவ்வொரு தேர்தலிலும் இதற்கு முன் இலங்கை பிரச்சினை இல்லை, இந்த தேர்தல் சமயத்தில் அது உச்சகட்டம் அடைந்திருப்பது தான் பிரச்சினை.
அது தான் இந்த* நாட*க*ங்க*ளூக்கு ஆர*ம்ப*ம்.உண்மையில் த*மிழ*க* க*ட்சிக*ளுக்கு அக்க*றை இருந்தால் அவ*ர்க*ள*து ந*ட*வ*டிக்கை வேறு மாதிரி இருக்கும்
பொறுப்பில் இருப்பவருக்கும் பொறுப்பில்லாமல் பேசுபவர்க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.

இருவரையும் போற போக்கில் ஒரே தட்டில் வைத்து நிறுப்பது சரியல்ல.


ஜெய*ல*லிதாவ*து தேர்த*லுக்காக* த*ன*து கூட்ட*ணி க*ட்சிக*ளின் வேண்டுகோளுக்காக* அல்ல*து உண்மையான* மாற்ற*த்தால் இந்த* அறிவிக்கை வெளியிட்டு இருக்க*லாம்.ஆனால் இந்த* கலைஞ*ரின் இந்த* உண்ணாவிர*த*ம்....

உண்மையில் இருவ*ரையும் ஒரே த*ட்டில் வைத்து நிறுப்ப*து ச*ரியில்லை. இருவ*ருக்கும் நிறைய* வேறுபாடு உள்ள*து.

தாமரை
27-04-2009, 06:33 AM
வார்த்தைகளை வீணாக்க வேண்டாமென்று நினைக்கிறேன். யாராவது எதாவது செய்தால் உடனே போற்றுதலும், தூற்றுதலும் சரியல்ல.

ஒரு காரியத்தின் பலனைக் கண்ட பிறகே அதனைப் பற்றி பேசுதல் அழகு.

என்னதான் செய்கிறார்கள் என்று பார்ப்போம். யாரையும் தூற்ற வேண்டாம். போற்றவும் வேண்டாம்.

இன்பா
27-04-2009, 06:35 AM
இது தான் பிரச்சனையே,

தமிழர்களுக்குள் பிரச்சனையென்றால் அரசியல் சரி,

தமிழருக்கே பிரச்சனை என்றால் கருத்துவேறுபாடுகளை விட்டு ஒன்றாக செயல்பட வேண்டாமா?

praveen
27-04-2009, 06:43 AM
இவ்வித முன்னறிவிப்பு இல்லமால், ஏன் கட்சி நிர்வாகிகளுக்கு கூட தெரிவிக்கமால் உண்ணாவிரத(நாடகத்தை) ஆரம்பித்தது ஏன்.ஜெயலலிதா அந்த அறிவிக்கை விட வில்லையென்றால் இந்த நாடகம் நடந்து இருக்காது.
கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்து அதனை முன்னரே தெரிவித்தும் இருக்கிறார், போன வார ஜூனியர் விகடனில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அது தான் இந்த நாடகங்களூக்கு ஆரம்பம்.உண்மையில் தமிழக கட்சிகளுக்கு அக்கறை இருந்தால் அவர்களது நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும்
அக்கறை இல்லாமல் இல்லை, அதனால் தனது ஆட்சிக்கு ஆபத்து இருக்க கூடாது என்ற முறையிலே தான் இருந்திருக்கிறார். ஏனென்றால் கடந்த காலத்தில் இருமுறை திமுக அரசு இலங்கை பிரச்சினையால் கலைக்கப்பட்டிருக்கிறது. இப்ப்போதும் அங்கே தனி ஈழம் (பின்னர் போர் நிறுத்தம் என்று மாற்றி கொண்டார்) அமையும் என்றால் தனது ஆட்சி கலைக்கப்படுவதில் வருத்தம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சும்மா ஆட்சியை காவு கொடுக்க விருப்பமில்லை, ஏனென்றால் அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று சிலர் காத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இந்திய அரசும் சமீபத்தில் சீனா அதிக அளவில் இலங்கையுடன் உறவாடுவதால் கடும் நடவடிக்கை எடுக்க யோசித்து வருகிறது. இலங்கை அரசும் புலிகள் நிலை தாழ்ந்திருக்கும் போதே முற்றிலும் ஒழித்து விட வேண்டும் என்று மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது, பொருளாதரத்தில் தள்ளாடும் பாக்கிஸ்தான் கூட இந்தியாவை வெறுப்பேற்ற இலங்கை அரசிற்கு 100 மில்லியன் டாலர் உதவி செய்கிறது. அவர்கள் ரானுவத்திற்கு போர் பயிற்சி செய்து தருகிறது.

இவ்வளவு வெளி வேலைகள் நடக்கும் போது, உள் நாட்டு சத்தத்தை எப்படி இந்திய அரசு எதிர்கொள்ளும்.ஜெயலலிதாவது தேர்தலுக்காக தனது கூட்டணி கட்சிகளின் வேண்டுகோளுக்காக அல்லது உண்மையான மாற்றத்தால் இந்த அறிவிக்கை வெளியிட்டு இருக்கலாம்.ஆனால் இந்த கலைஞரின் இந்த உண்ணாவிரதம்....

உண்மையில் இருவரையும் ஒரே தட்டில் வைத்து நிறுப்பது சரியில்லை. இருவருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

ஜெயலலிதா எந்த மக்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்று பேசுகிறாரோ அதே வாயால் தான் போர் நடக்கும் போது அப்பாவிகள் சாவது தவிர்க்க முடியாது என்று சொன்னார். இப்போது கருனாநீதி செய்யும் செயல்களுக்கு எதிர் செயலாகவே பேசி வருகிறார்.

இருவருக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் தான் இலங்கை பிரச்சினை இன்னும் தீராமலே உள்ளது, இவ்வளவு தூரம் ஜெயலலிதா பேசினாலும் இன்னும் விடுதலைப்புலிகள் தான் தமிழ் ஈழத்தை காப்பவர்கள் என்று ஏற்றுக்கொள்ளாமல் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவரையும் வெறுத்தே பேசி வருகிறார். புலிகள் இல்லாமல் தனி ஈழம் என்பது நிச்சயம் இருக்காது, ஏனென்றால் இவ்வளவு நாள் கட்டிக்காத்த போராடியவர்களை விட்டு இவர் தனியே ஈழம் எப்படி உருவாக்குவார்.

இவர் பேச்சுக்கும் செயலுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லாத என்பதையே இது காட்டுகிறது.

இன்பா
27-04-2009, 07:13 AM
முதலில் பிரபாகரனை குறியிட்டு போர் என்று நடந்தது, ஆனால் நிலைமை இனப்படுகொலையாக மாறிப்போய்விட்டது. சிலர் இதை இனப்படுகொலை இல்லை என்றும் சொல்வதுண்டு, அப்படியானாலும் அப்பாவிகள் பெருமளவில் கொல்லப்படுகிறதா இல்லையா?

தாடார் என்று ஜெ. அவர்களும் மாறிவிடவில்லை உண்மையை உணர்ந்திருக்கிறார், கூடவே அரசியலும் செய்கிறார்.

காங். பொறுப்புணர்ச்சியை பாராட்டுகிறேன்(உண்மையான பொறுப்புணர்ச்சியாக இருப்பின்), அதே சமயம் அதீத பொறுப்புடன் செயல் பட்டதன் விளைவு என்ன? ஆயிரக்கணக்கில் உயிர் பலி தான்.

அண்டை நாடுகள் குளிர்காய காத்திருப்பது உண்மையே..?, அதற்காக அவர்கள் செய்ய நினைக்கும் காரியத்தை நாமே செய்வது சரியா??????

எந்த வகையிலும் உயிரிழப்பை பொருத்துக் கொள்ள முடியாது...

இந்த விசயத்தில் நான் திமுக நான் அதிமுக என்பதை விட நாம் தமிழர்கள் என்று இருங்கள் இது தான் உருப்படியான வழி.

கா.ரமேஷ்
27-04-2009, 07:25 AM
அவர்கள்(அரசியல்வாதிகள் யாராயினும்) செய்துவிட்டு போகட்டும்.முடிவு இதுவரையில் ஒன்றும் இல்லையே என்பதுதான் வருத்தமளிக்கிறது.தற்போதய வேண்டுதல் போர் நிறுத்தப்படவேண்டும். கொத்து கொத்தாக மடியும் மனித அவலத்தை தடுக்க வேண்டும். தயவு செய்து அரசியல் வாதிகளே நீங்கள் என்ன வேண்டுமானாலும் நாடகம் நடத்துங்கள். கொஞ்சம் மக்களுக்கு பயன்படும்படியாக செயல் படுத்துங்கள்... யார் செயல்படுத்தினாலும் வரவேற்ப்போம்... ஓட்டுபோட்டு தேர்ந்தெடுங்கள் செய்கிறோம் என சொல்லாதீர்கள்.செய்துவிட்டு ஓட்டு போடு என கேளுங்கள்.... என்ன நடக்கும் என மாற்றத்தை உங்கள் கண்கூடாக காணுங்கள்.

நேசம்
27-04-2009, 07:28 AM
தாமரை சொல்வது போல் பலனை மட்டும் எதிர்பார்ப்போம்.

கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்து அதனை முன்னரே தெரிவித்தும் இருக்கிறார், போன வார ஜூனியர் விகடனில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது..
அப்ப*டியா.நான் இதை தின*ம*ல*ரில் ப*டித்தேன்.முத*லில் ஜெய*ல*லிதா அறிவிக்கை ம*ன்ற*த்தில் ப*டித்து விட்டு தின*ம*ல*ர் ப*டித்த*தால் முடிச்சு போட்டு விட்டேன் போலிருக்கு. http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3635&cls=row3
இந்திய அரசும் சமீபத்தில் சீனா அதிக அளவில் இலங்கையுடன் உறவாடுவதால் கடும் நடவடிக்கை எடுக்க யோசித்து வருகிறது. .

இவ்வளவு வெளி வேலைகள் நடக்கும் போது, உள் நாட்டு சத்தத்தை எப்படி இந்திய அரசு எதிர்கொள்ளும்..
இது தான் இந்தியா அர*சுக்கு கார*ன*மாக* இருக்கிற*து சிங்க*ளவர்க*ளுக்கு உத*வி செய்ய*.ஆனால் ஒருவேளை த*மிழ*ர்க*ள் இல்ல*மால் வேறு மாநில* ம*க்க*ள் இல*ங்கையில் பாதிக்க*ப்ப*ட்டு இருந்தால் அந்த* மாநில* ம*க்க*ளின் போர*ட்ட*ம் எப்ப*டி இருந்து இருக்கும்.

ஜெயலலிதா எந்த மக்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்று பேசுகிறாரோ அதே வாயால் தான் போர் நடக்கும் போது அப்பாவிகள் சாவது தவிர்க்க முடியாது என்று சொன்னார். இப்போது கருனாநீதி செய்யும் செயல்களுக்கு எதிர் செயலாகவே பேசி வருகிறார்.

.


த*மிழ*கர்க*ள் விச*ய*த்தில் ஜெய*ல*லிதாவுக்கு யாரும் ந*ற்சான்றித*ழ் கொடுக்க* முடியாது.ஆனால் வெளீப்ப*டையாக* பேசுவார். இது எப்ப*டியோ ஈழ*த்த*மிழ*ர்க*ளுக்கு ந*ல்ல*து ந*ட*ந்தால் ச*ரி

இன்பா
27-04-2009, 08:03 AM
இது தான் பிரச்சனையே,

தமிழர்களுக்குள் பிரச்சனையென்றால் அரசியல் சரி,

தமிழருக்கே பிரச்சனை என்றால் கருத்துவேறுபாடுகளை விட்டு ஒன்றாக செயல்பட வேண்டாமா?

போரை நிறுத்துவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது...

கா.ரமேஷ்
27-04-2009, 08:26 AM
இரு தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி... இதை நடைமுறை படுத்தவேண்டும்.

நேசம்
27-04-2009, 01:50 PM
மனதுக்கு நிறைவான விசயம்.இது தொடர வேண்டும் என்பது தமிழர்கள் மட்டுமில்லை மனிதநேயத்தை விரும்பும் அனைவரது விருப்பமாகும்

praveen
27-04-2009, 02:09 PM
மனதுக்கு நிறைவான விசயம்.இது தொடர வேண்டும் என்பது தமிழர்கள் மட்டுமில்லை மனிதநேயத்தை விரும்பும் அனைவரது விருப்பமாகும்

ஆனால் உண்மை நிலை அதுவல்ல, போர் நிறுத்தம் முழுதும் செய்யப்படவில்லை, கழுத்தை நெரித்து கொண்டிருப்பவன் இனி நெரிக்க மாட்டேன் என்று சொல்கிறானேஅன்றி கையை எடுத்து விடவில்லை என்பது போல. கனரக ஆயுத பிராயோகம் இருக்காது என்று அறிவித்து அதற்கு மாறாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

சர்வதேச சமுதாயம், பல்நாட்டு அரச பிரதிநிதிகள் இலங்கையை குறி வைத்து பயனம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து பதில் சொல்லுகையில் இவர்கள் சுயரூபம் தெரியவரும். இன்னும் ஒரு நாளில் முடிந்து விடும் நாலு நாளில் முடிந்து விடும். விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றெல்லாம் சவடால் விட்டு போரை நடத்துபவர்கள், வெளி உலகிற்கு பதில் சொல்ல முடியாமல் தினறுகிறார்கள்.

பல நாடுகளில் வாழும் தமிழர்களின் போராட்டங்களினால் இன்று உலகம் முழுதும் இலங்கை தமிழ் மக்கள் பிரச்சினை உணரப்பட்டு, இந்த பிராந்தியத்தை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி பெரிய அளவில் படுகொலை விழுந்தால் உலக நாடுகள் உக்கிரத்தை இலங்கை தாங்காது.

அய்யா
27-04-2009, 03:13 PM
"நான் தனி ஈழத்தைத்தான் ஆதரிக்கிறேன்.. தனி நாட்டை அல்ல.." என்று சம்மர் சால்ட் அடித்திருக்கிறார் அம்மையார்.

கபில் சிபலுக்கு இப்படி பதில்சொல்லியிருப்பதாகத் தகவல்!

தூயவன்
27-04-2009, 03:19 PM
"நான் தனி ஈழத்தைத்தான் ஆதரிக்கிறேன்.. தனி நாட்டை அல்ல.." என்று சம்மர் சால்ட் அடித்திருக்கிறார் அம்மையார்.

கபில் சிபலுக்கு இப்படி பதில்சொல்லியிருப்பதாகத் தகவல்!

இது எப்பபோ ?

praveen
27-04-2009, 03:49 PM
இது எப்பபோ ?

அவர் அரசியலுக்கு வந்ததில் இருந்து:lachen001:

தூயவன்
27-04-2009, 05:33 PM
இல்லை நண்பர்களே அம்மா தான் கூறியதை மிண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்..
இதோ அடுத்த சுட்டி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20064

தூயவன்
28-04-2009, 04:56 PM
நண்பர்களே இந்த கொடுரத்தை கொஞ்சம் பாருக....
எச்சரிகை படங்கள் மிகவும் கொடுரமாக உள்ளது

http://www.puthinam.com/full.php?2b1VoUe0dIcYU0ecKA4U3b466DX4d3f1e2cc2AmS2d434OO2a030Mt3e

இன்பா
29-04-2009, 03:21 AM
வேண்டாம் வேண்டாம் யாரும் அந்த படங்களை பார்க்க வேண்டாம்,

என்னால் ஒன்று செய்ய முடியவில்லையே என்று மிகவும் கூணி குறுகிப் போகின்றேன்..

xavier_raja
29-04-2009, 10:28 AM
ஜெயலலிதா ஒரு விஷியத்தை அறிவுபூர்வமாக அனுகுகிரார என்றால் இல்லை. அவருக்கு கருணாநிதி ஏதாவது செய்தால் அதற்கு நேர் மாறாக எதாவுது செய்யவேண்டும் அவளவுதான். மற்றபடி அவர் ஒரு சசிகலாவின் கைப்பாவை.

praveen
29-04-2009, 10:53 AM
ஜெயலலிதா ஒரு விஷியத்தை அறிவுபூர்வமாக அனுகுகிரார என்றால் இல்லை. அவருக்கு கருணாநிதி ஏதாவது செய்தால் அதற்கு நேர் மாறாக எதாவுது செய்யவேண்டும் அவளவுதான். மற்றபடி அவர் ஒரு சசிகலாவின் கைப்பாவை.

ஜெயலலிதா பிரதமராக இருந்தோ அல்லது ஜனாதிபதியாக இருந்தோ தனி ஈழம் அமைத்து தருவேன் என்று சொல்லியிருந்தால் நம்பலாம். இவர் தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவது பெரிய ஏமாற்று வேலையாக இருக்கிறது. மேலும் புலிகள் இயக்கமும் அதன் தலைவரும் இந்த அம்மையாருக்கு வேப்பங்காய். இவர்கள் இல்லாமல் தமிழ் ஈழம் என்பது என்பது வெட்ட வெளியில் கட்டிடம் இல்லாமல் நகைக்கடை திறப்பது போன்றது.

இவரின் சுயரூபம் அறியாத வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததாக வந்த செய்திகளை படிக்கும் போது, ஜெயலலிதா பொய் எவ்வளவு பேரை எவ்வளவு தூரத்திற்கு சென்று தாக்குகிறது என்று தெரிகிறது.

ஆனால், இந்திய அரசும்(இந்த தேர்தலில் எந்த கட்சி ஜெயித்தாலும்), தமிழக அரசும் போருக்கும் பின் இலங்கை தமிழருக்கு தகுந்த அரசியல் தீர்வை பெற்று தரும் என்பதில் ஐயமில்லை. அதை முன்நிறுத்தி தான் பொருளுதவி செய்து வருவதாக சொல்கிறார்கள்(புலிகளை ஒழிக்க வேண்டும் என்பது மறைமுகமாக மத்திய அரசின் நிலைப்பாடு).

ஜெயலலிதா இந்த தேர்தலில் அதிக இடங்கள் பெறவில்லை என்றால், நான் வெற்றி பெற்றிருந்தால் சொன்னதை செய்திருப்பேன் என்று தமிழக மக்களிடம் இரக்கம் தேடுவார். அப்படியே ஜெயித்தாலும் 40 எம்பி வைத்திருந்த திமுக அரசு செய்ததை விட நான் என்ன செய்ய முடியும் டெல்லிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று மாற்றி பாடுவார்.

ஆதி
29-04-2009, 11:02 AM
//ஜெயலலிதா இந்த தேர்தலில் அதிக இடங்கள் பெறவில்லை என்றால், நான் வெற்றி பெற்றிருந்தால் சொன்னதை செய்திருப்பேன் என்று தமிழக மக்களிடம் இரக்கம் தேடுவார். அப்படியே ஜெயித்தாலும் 40 எம்பி வைத்திருந்த திமுக அரசு செய்ததை விட நான் என்ன செய்ய முடியும் டெல்லிக்காரர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று மாற்றி பாடுவார்.//

சரியாக சொன்னீங்க ப்ரவீன்.. அம்மா இதைதான் செய்வாங்க.. இன்னும் என்ன என்ன சொல்ல காத்திருக்காங்களோ..

இலங்கை விடயத்தில் அம்மையார் எது சொன்னாலும் அதை நம்ப என்னால் இயலாது.. ஏன்னா அம்மாவ பத்தியும் அவங்களோட நிலைப்பாட்டை பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த அறிக்கையெல்லாம் கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலால் வருவதுதான்.. மற்றப்படி எந்த அக்கறையாலும் கிடையாது..

சிவகாசியில் வைக்கோவுக்காக ஓட்டு வேட்டைக்கு சென்ற அம்மையார்.. ஒரு மணி நேரம் பேசிருக்காங்க.. ஆனா ஒரு தடவ கூட வைக்கோவுக்கு ஓட்டு போடுங்க னு பேசவே இல்லை.. இதைவிட கொடுமை வைக்கோங்ற பெயரை உச்சரிக்கவே இல்லையாம்..

anna
29-04-2009, 11:30 AM
ஜெயலலிதா இப்படி பேசி இருப்பது எப்படி உள்ளது என்றால் . ஆடு நனைகிறது ஓநாய் உட்கார்ந்து அழுதது போல் உள்ளது. போர் என்றால் உயிரிழப்பு ஏற்படத்தான் செய்யும் என சொன்ன அம்மாவின் இப்போதைய பேச்சுக்கும் கருணாநிதி உண்ணாவிரத்துக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இல்லை என தெளிவாக தெரிகிறது.

பிரவீண் சொன்னது போல் அம்மா இந்தியாவின் பிரதமாராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்து இதை சொல்லி இருந்தால் நம்பலாம். அதிகபட்சம் ஒரு 40 எம்.பி. களை வைத்துக்கொண்டு(தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் நடக்க கூடியாதா?) என்ன செய்து விட முடியும். அல்லது 40 எம்.பி.களை கையில் வைத்து இருந்த கருணாநிதி யால் தான் என்ன செய்ய முடிந்தது.

மனிதசங்கிலி,பந்த் உண்ணாவிரதம் எனபதைத்தான் செய்ய முடிந்தது. மற்றபடி அவராலும் ஒண்ணும் செய்ய முடியாது. இந்திய அரசால் தான் தனி ஈழம் பெற்றுத்தர முடியும். இதுக்கு பலதடைகள் உள்ளன.

1.பஞ்சசீல கொள்கைப்படி - ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் தலையிட கூடாது.

2. இந்தியா தன் வல்லாதிக்கத்தை பயன்படுத்தி கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கியது அல்லவா அது போல் இலங்கையில் இருந்து தமிழ்ஈழம் பிரித்து கொடுக்க முயற்சிக்க கூடாதா?
அன்று கிழக்கு பாகிஸ்தானியில் இருக்கும் அனைத்து மக்களும் ஒரு தலைவரின் கீழ் தான் இருந்தனர். இலங்கையில் அப்படி இல்லை ஒட்டு மொத்த தமிழ்மக்களும் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டில் இல்லை. விடுதலைப்புலிகளை இலங்கைஅரசு பயங்கரவாதிகள் என்றே சொல்கிறது.

3. அதற்கு எல்லாம் மேல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்து இந்தியாவின் தீராபழியை பெற்றுக்கொண்டனர் புலிகள்.அவர்களின் செயலை இந்திய அரசு என்றுமே மன்னிக்காது.

தீர்வு என்னவென்றால் தன்னுடைய தமிழ்மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பிரபாகரனும் விடுதலைபுலிகளும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும். அதற்குப்பின்பு அவர்களுக்கு தேவையானவற்றை இலங்கை அரசு செய்ய் வேண்டும். இதற்கு எல்லாம் மேல் அவர்களுக்கு ஒரு மக்கள் தலைவன் அமைய வேண்டும்.

praveen
29-04-2009, 12:14 PM
2. இந்தியா தன் வல்லாதிக்கத்தை பயன்படுத்தி கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் ஆக்கியது அல்லவா அது போல் இலங்கையில் இருந்து தமிழ்ஈழம் பிரித்து கொடுக்க முயற்சிக்க கூடாதா?

பங்களாதேஷ் பூகோள ரீதியாக பிரிந்திருந்தால் சாத்தியமானது, ஆனால் பிரிட்டீஸார் ஆட்சிக்கு முன் இலங்கை 3 பகுதிகளாக தான் இருந்ததாக கேள்விபட்டேன். நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கி அப்படியே சிங்களத்தவரிடம் கொடுத்து விட்டனர். அதற்கு முன் சோல்பரி ஆணைக்குழு ஆராய்ச்சி செய்து ஒன்றாகவே சுதந்திரம் தந்து விடுவோம் என்று செய்து விட்டார்கள்.

இன்பா
29-04-2009, 01:45 PM
உயிர்கள் காக்கப் பட வேண்டும், அந்த போர்களத்தில் நம் சொந்தம் இருந்திருந்தால் எப்படி பதரியிருப்போம்.... துடித்திருப்போம்...!!!!!!!

மனதில் கொள்க...!!!!!!!!!

ஆதரிப்பவர்களுக்கும், துணைப் போகிறவர்களுக்கும், துணைப் போகிறவர்களை தேர்ந்தெடுப்பவர்களும்... மன்னிக்கப் படமாட்டார்கள்... வினையருத்தே தீருவார்கள்... விதி வலியது...!!!!!!!

இத்துடன் இலங்கை விடயத்தில் இனி தமிழ் மன்றத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று சங்கடத்துடன் வெளியேறுகிறேன்... !!!!!!

praveen
29-04-2009, 02:13 PM
இத்துடன் இலங்கை விடயத்தில் இனி தமிழ் மன்றத்தில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று சங்கடத்துடன் வெளியேறுகிறேன்... !!!!!!

இப்ப யார் என்ன சொன்னாங்க :confused:

ஓவியன்
29-04-2009, 03:13 PM
யார் குற்றினாலும் பரவாயில்லை அரிசியானால் சரியென்ற இறுதி நிலையில் நம் உறவுகள் இருக்கையில், ஜெயலலிதா சொல்வதை செய்ய வேண்டுமென நான் இறைவனை இறைஞ்சுகிறேன்....

தூயவன்
29-04-2009, 05:31 PM
"இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில்.

கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


பகடைக் காய்கள்
என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர்.

இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும்.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

"கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி.

தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது.


தமிழர் போராட்டங்கள்
இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள்.

தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர்.

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான்.

தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர்.

முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர்.

ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது.

இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.


"பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!": மீண்டும் வலியுறுத்துகின்றார் ஜெயலலிதா
[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009, 06:42 பி.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]
"இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, உண்ணாவிரத நாடகம் நடத்தி; தான் உண்ணாவிரதம் இருந்ததால், உடனே இலங்கை அரசு, போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டது; எனவே தனது உண்ணாவிரதத்திற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று அறிவித்துவிட்டு, வந்த வேகத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு, வீடு திரும்பிவிட்டார் கருணாநிதி.

ஆனால் உண்மையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதா? அப்படி அறிவிக்கவே இல்லை, என்று இலங்கை அரசு மறுப்பு வெளியிட்டுள்ளது. "போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது" என்று கருணாநிதி அறிவித்துவிட்டு, வீடு போய் சேருவதற்குள்ளாகவே, "போர் நிறுத்தம் செய்வதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிக்கை வெளியிட்டது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இராணுவம் மேற்கொண்டிருக்கும் தாக்குதல் இடைவிடாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவத்தின் தொடர் தாக்குதலில் எண்ணற்ற தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் என்று அங்கிருந்து வருகின்ற செய்திகள் கூறுகின்றன.

முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் கிராமத்தில், நேற்று மட்டும், இலங்கை விமானப் படை 23 முறை வானத்தில் இருந்து குண்டு வீசியதாக இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலை சுற்றியுள்ள தமிழர் பகுதிகள் மீது இலங்கை இராணுவத்தின் கடற்படை, பீரங்கிகள் பொருத்தப்பட்ட படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.

Multi Barrel Rocket Launcher என்ற பல ரொக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசித் தாக்கும் கருவியைக் கொண்டு இராணுவத்தின் தரைப்படை, முள்ளிவாய்க்காலின் வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களைத் தாக்கி இருக்கிறது.

இந்தத் தாக்குதல்கள் எல்லாம் எந்த நேரத்தில் நடைபெற்றது தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி மெரினா கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு வசதியோடு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி முடித்த அந்த நேரத்தில்.

கருணாநிதி காலை உணவை முடித்துவிட்டு, மதிய உணவை உட்கொள்வதற்கு முன்பாக, இடைப்பட்ட மூன்று மணி நேரம், உண்ணாவிரதம் இருந்ததற்காக, கருணாநிதியின் தொண்டர்கள், ஊர் முழுவதும் பேருந்துகளை அடித்து, நொறுக்கி, கடைகளை சூறையாடி, பொதுமக்களை அச்சுறுத்தி, அராஜக ஆட்டம் போட்ட அந்த நேரத்தில் தான், இலங்கையில் தமிழர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பகடைக் காய்கள்

என்றைக்கு ஓயும் எங்கள் தமிழர் துயரம் என்று நாம் நினைக்காத நாளில்லை. வேண்டாத தெய்வமில்லை. இத்தகைய துயரமான சூழ்நிலையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் சிலர், தேர்தல் தோல்வி உறுதி என்று ஆகிவிட்ட நிலையில், இலங்கைத் தமிழர்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி, அரசியல் சூதாட்டத்தில் காய்கள் நகர்த்துகின்றனர்.

இந்தக் கயமையை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கண்டிக்க வேண்டும்.

மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி, நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டணி பெறப் போகின்ற அவமானகரமான தோல்வியை எண்ணி அஞ்சுகிறார். அதன் எதிரொலி தான் அண்ணா சமாதியில் உண்ணாவிரத நாடகம்.

தனது நாடகம் வெற்றி பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்க முயற்சித்து அதில் மீண்டும் தோல்வியுற்றிருக்கிறார் கருணாநிதி. உண்மை தோற்றதில்லை; பொய் ஒருபோதும் வென்றதில்லை என்பதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

"கெட்டிக்காரனின் பொய்யும், புரட்டும் எட்டு நாளில் தெரிந்துவிடும்" என்பது தமிழ்நாடே அறிந்த பழமொழி.

தன்னை கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, அரங்கேற்றிய பொய் நாடகம், புரட்டு வசனம் எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. வேடம் கலைந்தது. தமிழர்களின் வேதனை தொடர்கிறது.

தமிழர் போராட்டங்கள்

இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் போக்க, சென்னையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்கள் பெண்கள்.

தென் ஆப்பிரிக்காவில், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை வரும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார் ஒரு தமிழர்.

பிரிட்டனில் உண்ணாவிரதம் இருந்தவரின் உயிர் ஊசலாடுகிறது. உலகெங்கும் தமிழர்கள் அறிவிக்கப்படாத உண்ணாவிரதங்களை தங்கள் வீடுகளில் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், உலகத்திலேயே மிகக்குறுகிய நேரம், அதாவது 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த ஒரே நபர் இந்தக் கருணாநிதி தான்.

தேவையான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொண்டு, ஊரை ஏமாற்ற உண்ணாவிரதம் உட்கார்ந்தார் கருணாநிதி.

தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு ஆரம்பித்ததும் படுத்துக்கொண்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லாம், தங்கள் தொழில்களை ஒத்திவைத்தனர்.

முகத்தில் சோகம் வழிய வழிய கருணாநிதியை சுற்றி சுற்றி வந்து நாடகத்தை சுவாரஸ்யமாக்க முயற்சித்தனர்.

ஊட்டச்சத்துக்கான அடுத்தவேளை வந்தவுடன், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்ததாக நாடகத்தை அடுத்த காட்சிக்கு நகர்த்தினார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று கருணாநிதி அறிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நாடகத்தில் தனது கதா பாத்திரத்திற்கு ஒதுக்கப்பட்ட வசனங்களை ஒப்பித்தார்.

நேரடி ஒளிபரப்பு முடிவடைந்தது. அடுத்த வேளை உணவுக்கு எல்லோரும் புறப்பட்டுச் சென்றார்கள். இலங்கைத் தமிழர்களின் துயரம் தீர்ந்தது.

இனிமேல் இலங்கை ராணுவம் தமிழர்களை வாழ வைக்கும் பணிகளில் ஈடுபடும் என்று இலங்கை இராணுவத்தின் அறிவிக்கப்படாத செய்தியாளராக மாறினார் கருணாநிதி.

வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், Internet, SMS - இவையெல்லாம் நொடிக்கு நொடி உலகெங்கும் இருந்து செய்திகளை பரப்புகின்ற இந்த 21ஆம் நூற்றாண்டில், ஓடாத ரயில் முன் தலை வைத்துப் படுத்தவரின் அந்தக் கால நாடகம் எடுபடவில்லை.

போர் நிறுத்தம்
போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறுகிறது. இலங்கை அதிபர் செயலகத்தில் இருந்து போர் நிறுத்தம் என்ற ஒரு அறிவிப்பு வந்ததாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் கூறப்படுவது தவறான செய்தி என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் தாக்குதல் தொடர்கிறது. ப.சிதம்பரம் இயக்கத்தில் கருணாநிதி நடிப்பில் அரங்கேற்றப்பட்ட உண்ணாவிரத நாடகம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் தமிழர்கள் மீது தாக்குதலைத் தொடர்ந்தன.

இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில், 272 தமிழ் உயிர்கள் பலியாயின. நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமுற்றனர்.

இது எல்லா பத்திரிகைகளிலும் ஏப்ரல் 28 ஆம் நாள் காலையில், முதல் பக்க செய்தியாக வெளிவந்துள்ளது.

உண்மை இப்படி இருக்க, கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்கள் தங்கள் முயற்சியால் போர் நிறுத்தமே ஏற்பட்டுவிட்டதாக நாடகம் ஆடுகிறார்களே! அதை நாம் நம்ப வேண்டும் என்றும் சொல்லுகிறார்களே! அதற்கு பொய் சாட்சி கூற தில்லியில் இருந்து தொலைபேசியில் செய்தி வந்தது என்று சொல்லுகிறார்களே!

இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? தமிழ்நாடு என்றால் அவ்வளவு இளக்காரமாக நினைத்துவிட்டார்களா?
தமிழக மக்கள் இவர்களுக்கு, அவ்வளவு கேவலமாகப் போய்விட்டார்களா?

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, பொய்யிலும், புரட்டிலும் ஈடுபட்டிருக்கும், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினரின் இத்தகைய மோசடி நடவடிக்கைகள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

ஆனால், இவர்களது இத்தகைய மனிதாபிமானமற்ற, நகைப்புக்குரிய ஏமாற்று வேலைகளால், அண்டை நாடு என்ற பொறுப்பிலும், சொந்த சகோதரர்கள் என்ற கடமையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு செய்திருக்க வேண்டிய அடிப்படை உதவிகளை இந்தியா செய்யவில்லை.

அதற்குக் காரணம், நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமிழர்களின் துயரத்தைப் போக்குவதில் காட்டவில்லை என்பது தான்.

திமுக-காங்கிரசின் கவனம் எல்லாம், தங்கள் சுய லாபத்திற்காக, இலங்கைத் தமிழர் பிரச்சினையை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது.

ஆட்சியில், அதிகாரத்தில், செயல்பட வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள் செய்யக்கூடிய பணிகளை நிறைவேற்றுவதில், அவர்களுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை.

திமுக-விற்கும், காங்கிரசுக்கும், எல்லாமே அரசியல் தான்.

பதவி, பணம், அந்தஸ்து என்பதை நோக்கித் தான், அவர்களுடைய நாடகங்கள் எல்லாம் என்று, தமிழக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தக் குற்றச்சாட்டின் விளைவாக வரப் போவது தான், அவர்களுடைய தேர்தல் தோல்வி; மக்களின் தேர்தல் வெற்றி.

இலங்கைத் தமிழர் மீது உண்மையான அக்கறை கொண்ட புதிய ஆட்சி அடுத்து மலரப் போகிறது. அதற்கான முன் அறிவிப்பு தான் இங்கே அலைகடலெனக் கூடியிருக்கும் மக்கள் கூட்டம்.

ஈழத் தமிழர் நலன் காக்க, மோசடி அரசியல்வாதிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள். எனது கரத்தை வலுப்படுத்துங்கள்.

நாம் அமைக்கப் போகும் புதிய மத்திய அரசு, தமிழர் உரிமைகளை காப்பாற்றும் அரசாக அமைவது உறுதி, உறுதி, உறுதி.

சர்வதேச சட்டம்
காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் அமைந்து இருக்கின்றன.

அந்த அளவிற்கு வரலாறு தெரியாதவர்களும், விவரம் புரியாதவர்களும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களாக இருக்கின்றார்கள்.

எங்களுடைய சொல்லைக் கேட்கும் புதிய மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அண்மையில் சொல்லி இருந்தேன்.

இதற்கு ஒரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், "இந்த அம்மாவுக்கு சர்வதேச சட்டம் (International Law) தெரியவில்லை. எப்படி இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியும்? இலங்கை என்ன இந்தியாவின் மாவட்டமா? காலனியா?" என்று வினவியிருக்கிறார். இதிலிருந்து இவர் தான், விவரம் புரியாத ஒரு மனிதர் என்பது தெரிகிறது.

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்த போது, கிழக்கு பாகிஸ்தான் மீது படையெடுத்து பங்களாதேசுக்கு விடுதலை வாங்கித் தரவில்லையா! இந்திரா காந்திக்கு சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்? 1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போரை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மறந்துவிட்டார் போலும்! இனவெறியை தடுப்பதற்காகத் தான் இந்தப் போரை இந்திரா காந்தி நடத்தினார் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பிறகு, இந்திரா காந்தியின் மகன் ராஜிவ் காந்தி இந்திய நாட்டின் பிரதமாக இருந்த போது, இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பவில்லையா? அவருக்கும் சர்வதேச சட்டம் புரியவில்லை என்று சொல்கிறாரா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்?

இந்திரா காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி, பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை பின்பற்றித் தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித் தான், நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்.

தேசத் துரோகம்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது தேசத் துரோகச் செயல் என்று மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்தியாவை துண்டாட நினைப்பது தான் தேசத் துரோகச் செயலே தவிர, இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்வது தேசத் துரோகச் செயல் அல்ல என்று நான் தெளிவுபடுத்தினேன்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை முற்றிலுமாக புறக்கணித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மதிக்காமல், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது தான் தேசத் துரோகச் செயல்! இதைச் செய்தது காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான். இதிலிருந்து யார் தேசத் துரோகி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கபடச் சதி

இப்போது ஒரு முக்கியமான விடயத்தை சொல்லப் போகிறேன். கவனமாக கேளுங்கள். கருணாநிதி - ராஜபக்சவின் சதித் திட்டத்தைப் பற்றி கிடைத்த தகவலை, நான் உங்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதி ராஜபக்சவுடன் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து எனக்கு தகவல்கள் வந்துள்ளன.

அதாவது கருணாநிதி ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். "இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கு அவர் சொல்கிறபடி கேட்கும் மத்திய அரசு அமைந்து விட்டால், இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா.

ஜெயலலிதா சொன்னால் செய்து விடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத் தான் பிரச்சினை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதை கேளுங்கள். தேர்தல் நடக்கும் நாளான மே மாதம் 13 ஆம் நாள் வரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்பொழுது தான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தயவில் மீண்டும் மத்திய அரசு அமைந்தால், நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் எனக்கு உதவினால், நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

"எனவே, உங்களுக்குப் பிரச்சினை வராமல் தடுக்க, மே மாதம் 13 ஆம் நாள் வரை, போர் நடத்தாமல் பொறுத்து இருங்கள். இங்கே தேர்தல் முடிந்த உடன், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்று கருணாநிதி ராஜபக்சவிடம் பேசி இருப்பதாக நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.

தன் பதவி பறிபோகிறது என்றால் எதையும் துணிவுடன் செய்வார் கருணாநிதி. கருணாநிதியின் தன்னலம் குறித்து நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

செய்வீர்களா?... நீங்கள் செய்வீர்களா?... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நன்றி : புதினம்

தூயவன்
29-04-2009, 05:34 PM
என்னடா இது அம்மா அறிக்கை மேல அறிக்கை விடுறாங்க ரொம்ப அதிசயமாய் இருக்கு.. குழப்பமாகவும் இருக்கு..


இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தை பின்பற்றி - அதே தர்ம நியாயங்களை பின்பற்றி - நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே 'தனி ஈழம்' அமைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இடம் இடிக்குதே :confused::confused::fragend005:

praveen
30-04-2009, 04:25 AM
நகைச்சுவை நடிகர் செந்தில் நடித்த காட்சி ஒன்றில், ஒரு பெரிய மலையை தோளில் நிறுத்தி காட்டுவதாக கூட்டம் கூட்டி பணம் வசூல் செய்த பின் அந்த மலை அருகில் சென்று நான் மலையை தூக்க ரெடி, யாராவது மலையை எடுத்து என் தோளில் ஏற்றி வையுங்கள் என்பார். காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தவர் கேள்வி கேட்பார்கள் எனவே விரைந்து மலையை தூக்கி என் தோளில் வையுங்கள் என்று அதை தாங்க ஆயத்தம் ஆவது போல காலை பலப்படுத்தி நிற்பார்.

அது போல, ஜெயலலிதா இந்த பிரச்சினையை தீர்ப்பதாக சொல்லி வாக்குகள் பெற்று பின்னர், அந்தப்பிரச்சினையை மத்தியில் பின்னர் அமையும் அரசு முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். மத்தியில் யாரும் இவரின் கோரிக்கைக்கு இதுவரை பின்பாட்டு பாடவில்லை என்பது குறிப்பிட தக்கது. பின்னர் வாக்களித்த மக்களிடம் நான் சொன்னபடி கோரிக்கை வைத்தேன்/கேட்டுக்கொண்டேன், இந்த பாழும் மத்திய அரசு தான் அப்படி செய்ய மாட்டேன்கிறது என்பார்.

இந்த அம்மையார் கட்சி கூட்டனி வகிக்கும் 3வது அணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பரதன் என்பவர் இவரது இலங்கையை பிரித்து தனிஈழம் என்ற நாட்டை உருவாக்கும் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் பேசப்படும் பேச்சானது, ஒரு சிறுபிள்ளையின் கையில் இருக்கும் பொருளை பிடுங்க திருடன் ஒருவன் சொல்லும் பொய்களுக்கு சமமானது. அதை அந்த சிறுபிள்ளை நம்பி ஏமாந்த பின் தான் தெரியவரும்.

நாமும் பல நாட்கள் உயிருடன் தான் இருப்போம், இந்த பிரச்சினை தேர்தலுக்கு பிறகு என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

பதிலுக்கு கலைஞர் இந்த மாதிரி சொல்லாததற்கு காரணம் திரும்ப காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று (மடத்தனமாக) நம்புகிறார். எனவே சாத்தியமில்லாத பேச்சுக்கள் வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறார். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை, அத்தோடு சேர்த்து திமுகவும் அநேக இடங்களில் தோல்வியடையும். தேர்தல் வருவதற்குள் ஏதாவது மேஜிக் செய்தால் தான் சிறிது வெற்றி விகிதம் மாறுபடும் என்று நினைக்கிறேன்.

அமரன்
30-04-2009, 07:48 AM
இவரின் சுயரூபம் அறியாத வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்ததாக வந்த செய்திகளை படிக்கும் போது, ஜெயலலிதா பொய் எவ்வளவு பேரை எவ்வளவு தூரத்திற்கு சென்று தாக்குகிறது என்று தெரிகிறது


பிரவீன்.

தமிழர் உரிமைக்காக எழும் ஒவ்வொரு குரலையும் சான்றுப் பதிவாக்குவதும் அந்தக் குரல்களுக்கு நன்றி பாராட்டுவதும் இந்தப் போராட்டத்தின் ஒரு அம்சம்.

கலைஞரும் பலது செய்திருக்காரே, அவரை ஏன் தூற்ற வேண்டும் என்ற கேள்வி எழலாம்? ஊடகங்கள் பலதுக்கும் உன்மையான தமிழர் நல விரும்பிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதில்லை.பங்களாதேஷ் பூகோள ரீதியாக பிரிந்திருந்தால் சாத்தியமானது, ஆனால் பிரிட்டீஸார் ஆட்சிக்கு முன் இலங்கை 3 பகுதிகளாக தான் இருந்ததாக கேள்விபட்டேன். நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கி அப்படியே சிங்களத்தவரிடம் கொடுத்து விட்டனர். அதற்கு முன் சோல்பரி ஆணைக்குழு ஆராய்ச்சி செய்து ஒன்றாகவே சுதந்திரம் தந்து விடுவோம் என்று செய்து விட்டார்கள்.


இங்கே இது தேவை இல்லை. இருந்தாலும் சொல்றேன்.

சோல்பரி யாப்பு அமைக்க முதல், கண்டிச் சிங்களவர் பக்கத்திலிருந்து (பண்டாரநாயக்கா) சமஸ்டியை பரிந்துரைக்கிறாது. கரையோரச் சிங்களவர் பக்கத்திலிருந்து (செனநாயக்கா) அதிகாரப் பகிர்வற்ற ஒற்றை ஆட்சியை பரிந்துரைக்கிறது. தமிழர் பக்கத்திலிருந்து(பொன்னம்பலம்+செல்வா) அதிகாரப்பகிர்வுடன் ஒற்றை ஆட்சியை பரிந்துரைக்கின்றது.

சோல்பரி என்ன செய்கிறார்? அதிகாரப்பகிர்வற்ற ஒற்றை ஆட்சி யாப்பை அமைக்கிறார். சிறுபான்மை பிரதிநிதியின் ஒப்புதல் இல்லாமல் சிறுபான்மைக்கு எதிரான எந்த ஒன்றையும் செய்ய முடியாது என்ற (23 ஆவது) சரத்தைச் சேர்க்கிறார். அதே நேரம், 2/3 பெரும்பான்மையுடன் எந்த ஒரு சட்ட மூலத்தையும் நிறைவேற்றலாம் என்றும் சரத்து எழுதுகிறார்.

இந்த யாப்பு இருக்கும் போதுதான் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த யாப்பையும், இந்த யாப்பை மாற்றாது சுதந்திரம் வழங்கப்படுவதையும் தந்தை செல்வா தலைமையில் எதிர்க்கிறார்கள். எதிர்ப்புப் பயனற்றுப் போகிறது.

இதில் குறிடத்தக்க விடயம் என்ன என்றால் சமஷ்டியை ஆதரித்த பன்டாரநாயக்கா அரசியல் ஆதாயங்களுக்காக (பிக்குகள் அழுத்தத்துக்கு பணிந்து) தனிச்சிங்களச்சட்டம் கொண்டு வந்து திரி கிள்ளிப் போட்டார்.

praveen
30-04-2009, 02:17 PM
ஜெயலலிதாவின் முந்தைய தேர்தல் கோசம் பற்றி அறியாதவர்கள் கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், அப்படி சொன்னவர் என்ன செய்தார் இன்றுவரை என்பதை அறிந்தால், இப்போது போடும் கோஷம் என்னவாகும் என்று தானே தெரியவரும்.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன்(ள்) வானம் ஏறி வைகுண்டம் போவானா(ளா)ம்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/jeya_election_slogan.jpg
நன்றி - தமிழ்முரசு