PDA

View Full Version : நீ வாழாத என் வாழ்க்கை



shibly591
26-04-2009, 10:25 AM
என்னைச் சபிக்குமொரு
பகல்பொழுதின் அந்தரத்தில்
உன்னை நினைத்துக்கொள்கிறேன்..
பெரும்புயல் தூர்த்தெறியும் மழைத்துளிகளென
பொலபொலவென தொடர்ந்துதிரும்
என்னினத்து உயிர்களில்
நீயும் ஒருத்தியோ யானறியேன்..
தொடர்பற்ற எல்லைக்கப்பால்
நிர்ப்பந்திக்கப்பட்ட உன் வாழ்க்கை
என் கற்பனைகளையும் மீறியதொன்று !
உணவென்பது கனவாகி
கனவொன்றே உணவாகி
நீ நகர்ந்த நாட்களின் ஏகாந்தப்புள்ளி பற்றி
எத்தனை கடிதங்கள் என் கைகளிலே.
உன் சுவாச உதிர்வுகளின் மேற்பரப்பில்
நூற்றாண்டுகள் கவிந்த இருள் தவிர வேறில்லை.
90 இல் நண்பியானாய்..
2000 இல் தொடர்பறுந்தாய்..
இப்போது நீ மண்மேலா ? மண்கீழா ?
பிரார்த்தனைக் கரங்களால் மீட்கமுடியாத
இறுகிய இருள் யுகம் உன் வாழ்வைச் சபித்தபின்னே
சிரிக்கக்கூட திராணியில்லை எனக்கு.
உனக்கொன்றைச் சொல்ல வேண்டும்
மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு நான் வாழும் இவ்வாழ்க்கை
கடைசி வரை நீ கூட வாழ்ந்திராதவொன்று தோழி...!

ஓவியன்
01-05-2009, 11:45 AM
கவிக்க கரு மண் மேலோ
மண் கீழோ, கவிஞர் அறியாதாயினும்
அந்தக் கருவின் மேல்
கவிஞரின் அன்பு
விண்ணைத் தாண்டியும் வாழும்..!!

கா.ரமேஷ்
02-05-2009, 05:59 AM
அருமை...

அமரன்
07-05-2009, 09:17 PM
உணவு மறிக்கப்பட்டு உடல் மெலிந்து உள்ளம் நலிந்து அழிந்து விடும் நிலையில்.. கனவுகளைத் தின்று குருதி பறிக்கப்பட்டு வெறுமையான நாடிகளில் நம்பிக்கையை ஓட விட்டு கற்பனைகள் வளர்த்து வாழும் ஒரு இனத்தின் எச்சம் தூசாகிக் கண்ணில் விழுந்ததில் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீர் கவிதையாகி உள்ளது. நல்லுள்ளங்கள் பல இப்படித்தான் ஊமை வலிகளுடன் உள்ளன. இன்னொரு நல்லுள்ளத்தை கண்டதில் நெஞ்சு துள்ளுது.

kavitha
08-05-2009, 05:31 AM
இரங்கல் பா நன்று