PDA

View Full Version : குடை, தலைக்கவசம்



vairabharathy
25-04-2009, 11:12 AM
குடை

இயற்கையின்
தீர்ப்புக்கெதிராய்
மேல் முறையீடு....



தலைக்கவசம்

ஜூன் அன்று
என் வருகையென்று
சட்டம் - அரசின்
புதுத்திட்டம்

தமிழ்க் கடவுள்
தலை தனிலே
சூட்டிக்கொண்ட
பொற்கிரீடம்
பணமுள்ள
பலர் பார்வைக்கு...

இயேசுவை
துன்புறுத்திய
முட்கிரீடம்
வாங்கும்
சில ஏழைக்கு.

தலைக்கவசம்
விபத்தொன்றிலே
சிரச்சேதமாகாமல்
கரமாய் காத்திடும்
காப்புடை...

நம்
சிரத்திற்கென்றே
செய்யப்பட்ட
சின்னக்குடை...

நச்சுக்காற்றை
ஏற்காத
நாசிகளின்
சக வாசி...



விரைந்தோடும்
வாகனர்களின்
விசுவாசி...

காதலர்களை
காப்பாற்றும்
பர்தா...

கரும்புகையிலிருந்து
காத்திடும்
இன்னொரு
'கர்த்தா"

வாகன
வர்க்கத்திற்கென்றே
செய்யப்பட்ட
தொப்பி...

இது
சிரமெனும்
முத்தனை
மூடி வைக்கும்
சிப்பி...

இனி
வரங்கொடுத்த
ஈசனுக்கும்
தரலாமே
தலைக்கவசம்.

நிஜமென்பேன்...

தலைக்கவசம்
நம்
உயிரின்
காவல் வம்சம்!

praveen
25-04-2009, 11:29 AM
புதிய கவிதைகள், பாடல்கள். பகுதியில் கவிதை பதிக்காமல் கதையா பதிப்பார்கள் நண்பரே, இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஆங்கிலத்தில் தேவையா?. பொருத்தமான தலைப்பு தமிழில் இடுங்கள் நான் விமர்சனம் பதிக்கிறேன்.

பிறதளத்தில் எடுத்து இங்கே கையாள்வதென்றால் மூலத்தை குறிப்பிட்டு நன்றி கூறுங்கள்.

vairabharathy
25-04-2009, 11:39 AM
புதிய கவிதைகள், பாடல்கள். பகுதியில் கவிதை பதிக்காமல் கதையா பதிப்பார்கள் நண்பரே, இப்படி ஒரு தலைப்பு அதுவும் ஆங்கிலத்தில் தேவையா?. பொருத்தமான தலைப்பு தமிழில் இடுங்கள் நான் விமர்சனம் பதிக்கிறேன்.

பிறதளத்தில் எடுத்து இங்கே கையாள்வதென்றால் மூலத்தை குறிப்பிட்டு நன்றி கூறுங்கள்.

அப்படியே ஆகட்டும்

நண்பரே,