PDA

View Full Version : நிழலின்.. நிழலாய்



sathyamani
25-04-2009, 10:31 AM
எனக்கு கடந்த காலமெல்லாம்
நினைவில்லை
நீ கடந்து போனகாலத்தை தவிர

பிரிகின்ற நொடியில் பிரியாமாய் சொன்னாய்
யாரையாவது மணந்து கொள் என

மரண தீர்ப்பு எழுதிவிட்டு
மனம் திருந்தி வாழச்சொல்லும் நீதிபதியாய்

கிளையின் கைப்பிடி துணையோடு
மரத்தை சாய்க்கும் கோடலி போல்
என் மனதின் துணையோடு என்னை

சாய்த்தாய்... நீ

ஆதவா
25-04-2009, 10:42 AM
சில தீர்ப்புகள் முரணாக இருக்கலாம்.
தீர்ப்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தது!!
காதலும் அப்படித்தானே!!!

காதல் சிலருக்கு புத்தகம்... சிலருக்கு அதிலொரு அத்தியாயம்..

உங்களுக்கு வேறு சொற்களோடு வேறு அத்தியாயம் கிடைக்கலாம்!!!!
காத்திருங்கள்!

கவிதைக்கு பாராட்டுகள்

பாரதி
25-04-2009, 11:24 AM
நிழல் வெயிலில் இருக்கும் போதோ, வெளிச்சத்தில் இருக்கும்போதோதான் இருக்கும் - இல்லையா...? நிழலின் நிழல் என்ற தலைப்பைக் கண்டதும் நிழலின் குரல் என்று நான் எழுதியது நினைவுக்கு வந்தது.

இதயத்தைக் கொன்றவரே இறுதித்தீர்ப்பை வாசிப்பதாக அல்லவா இருக்கிறது; நீதிபதியாகவும் கோடாலியாகவும் உருவகப்படுத்தி இருப்பதை ஏற்க இயலவில்லை.

பிரிவின் வலி வார்த்தைகளில் தெரிகிறது. பிரியமான வலி என்பதால் பொறுத்துக்கொள்ளுங்கள் நண்பரே.