PDA

View Full Version : : வெயில் கவிதைகள் :ஆதவா
24-04-2009, 03:12 PM
ஓடு பிளந்து பாயும்
மின்சாரத்தைப் போல
வெயிலாயுதம் தாக்குகிறது
சூரியபழம்
கொறிக்கமுடியாத கொதிப்பில்
மிதந்து கிடக்கிறது
முழுத் தொண்டையும் வறண்டு
இரவை மண்நாக்கால் நக்கிவிட
பாலை மின்னுகிறது
கண்ணாடித் துகள்களென
வெம்மையின் பிம்பங்கள்
கூச்சிடும் சப்தத்தில்
கதறிக் கொண்டிருக்கின்றன
சர்ப்பங்கள் ஊறுவதாக
கொப்பளித்த பாதங்களைத் தேடி
மண் அலைகிறது ; அதனை
தன் பையில் பத்திரப்படுத்திக் கொள்கிறது
எத்தனை சேகரித்திருப்போமென
கணக்கேதுமற்று மணல் முன் செல்கிறது
அதற்குத் தெரியப் போவதில்லை
தொடர்ந்து வரும் பெரும்புழுதி
கொப்பளப்பாதங்களின் சுவடுகளை
காகிதங்களெனக் கிழித்து வருவதை.

--------------------------------------

கதிரவன் உக்கிரம்
இளநீர் தணிப்பு
சனிநீராடல்
பருத்தி மேற்தோல்
கம்பங்கூழ் குளுமை
தர்பூசணி காப்பான்
ஐஸ்க்ரீம் தேவதை
வியர்வை மழை
மின்சார பழுது
வெக்கை ஆடை
வெப்பக் குளியல்
அவள் கண்ணசைவு
விறைக்கும் சூரியன்

---------------------------------
நீங்களும் தொடரலாமே!!

ஆதவா
24-04-2009, 03:24 PM
பின்னிரவின் பெருமழையில்
சூரியன் ஒழுகி
துளிகளுக்குள் கரைந்திருந்தது
வானவெளி வெறும் சூன்யத்தால்
நிரம்பிக் கிடந்தது
குளிர்காட்டின் முரட்டுத்தாக்குதலில்
சிதறிக்கிடந்தன வெப்பத்துகள்கள்
அள்ளியெடுக்க ஆவலோடு சென்றேன்
பின்னங்கழுத்தில் குத்திவிட்டு
புறமுதுகிட்டோடியது
வெயில்.

ஆதவா
27-04-2009, 05:57 AM
பிம்பமாக அலைகிறது வெப்பம்
அது துப்பிய கோபத்தில்
கொதிக்கிறது தண்ணீர்
அவமானக் கறைகள்
ஆவியாக வெளியேறுகிறது
உனக்கு சற்றும் பிடித்திருக்கவில்லை
கோபத்தால் தண்ணீர் கலைக்கிறாய்
நீர்முழுக்க சிதறிக் கிடக்கிறது
சூரியன்

ஆதவா
27-04-2009, 02:29 PM
மிகக் கிட்ட நெருங்குகிறாய்
உன் நாசியின் அக்கினியில்
என் காமம் கண்களில் கொப்பளிக்கிறது
உலர்ந்து கசிந்த உன் சொற்கள்
என் துவாரங்களை மெல்ல திறக்கிறது
உன் மார்பு ஏந்திய வெப்பம்
மிதமான புல்லரிப்பில் அழுத்துகிறது
உன் வியர்வை ருசியாக இருக்கிறது
நம்மிருவருக்குமிடையே வெப்பம்
ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது
முன்பிருந்த நடுக்கம் இப்பொழுதில்லை
நம்மிரு உடல்களும் இணைந்து
எழுதிக் கொண்டிருக்கிறது
ஒரு வெயில் கவிதை.

அமரன்
28-04-2009, 09:09 AM
என்னால் தொடர முடியாது ஆதவா.

வெயில் காலம் இன்னும் வரவில்லை.

நல்லா இருக்கு.

samuthraselvam
28-04-2009, 10:37 AM
ஆதவ் அண்ணா... கவிதை அத்தைனையும் அருமை...

வெயிலையும் அமர் அண்ணா....! வெயில் காலம் இன்னும் வரவில்லையா? வெயில் இங்கே மண்டையை பிளக்குது...

அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...

தாமரை
28-04-2009, 10:52 AM
அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...


அதான் இங்க வழிஞ்சிருக்கு... :D

samuthraselvam
28-04-2009, 11:09 AM
அதான் இங்க வழிஞ்சிருக்கு... :D

ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....:lachen001:

ஆதவா
28-04-2009, 11:51 AM
என்னால் தொடர முடியாது ஆதவா.

வெயில் காலம் இன்னும் வரவில்லை.

நல்லா இருக்கு.

அட பரவாயில்லைங்க. நீங்க எட்டிப் பார்த்தாலே போதும்!!!


ஆதவ் அண்ணா... கவிதை அத்தைனையும் அருமை...

வெயிலையும் அமர் அண்ணா....! வெயில் காலம் இன்னும் வரவில்லையா? வெயில் இங்கே மண்டையை பிளக்குது...

அடிக்கிற வெயிலில் மூளையே உருகிப்போயிரும்.. இதில் எங்கே கவிதை வர்றது...

ரொம்ப நன்றிங்க. என்னை அண்ணான்னு கூப்பிடாதீங்க சகோதரி. உங்களை விட ரொம்ப இளையவன் நான்.

இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க. :aetsch013:அதான் இங்க வழிஞ்சிருக்கு... :D

:lachen001::lachen001:

ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....:lachen001:

நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)

நன்றி தாமரை+லீலூமா முறையே அண்ணாச்சி, அக்காச்சி

தாமரை
28-04-2009, 12:09 PM
ஆதவ் அண்ணா... உங்களுக்கு தான் சொல்லுறாரு....:lachen001:
இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க. :aetsch013:

:lachen001::lachen001:

நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..


என் பங்குக்கு....


தார்ச்சாலை முத்தங்கள் பட்டு
நிலங்கள் போலவே
கால்களும் வெடித்துக் கிடக்கின்றன

மழைநீரோ குடிநீரோ
காத்துக்கொண்டிருக்கிற
சடங்கள் இரண்டும்

தூரத்தெரிகிற கருநிறம் கண்டு
அல்ப ஆசையை வளர்த்துக் கொள்கின்றன
முகிலோ தண்ணீர் லாரியோ என்று!

ஆதவா
28-04-2009, 12:47 PM
யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..இப்ப நான் இருக்குன்னு சொல்லவா.... இல்லைன்னு சொல்லவா???? :confused:தார்ச்சாலை முத்தங்கள் பட்டு
நிலங்கள் போலவே
கால்களும் வெடித்துக் கிடக்கின்றன

மழைநீரோ குடிநீரோ
காத்துக்கொண்டிருக்கிற
சடங்கள் இரண்டும்

தூரத்தெரிகிற கருநிறம் கண்டு
அல்ப ஆசையை வளர்த்துக் கொள்கின்றன
முகிலோ தண்ணீர் லாரியோ என்று!

கலக்கல்...

சடங்களா தடங்களா .??...

ரொம்ப அருமையாக இருக்கிறது.!!!!

தாமரை
28-04-2009, 12:50 PM
யாருக்கு இருக்குமோ அவங்களது தானே உருகி வழியும். இதுக்கெல்லாமா சண்டை போட்டுக்கறது..

இப்ப நான் இருக்குன்னு சொல்லவா.... இல்லைன்னு சொல்லவா???? :confused:

சடங்களா தடங்களா .??...இப்போ இல்லேன்னு சொல்லலாம். இருந்திருந்தாலும் உருகி வழிஞ்சதில காலி ஆகி இருக்குமே...:aetsch013::aetsch013::aetsch013:

சடங்கள் தான்,,,, ஜீவனற்றுப் போனவை.. வயலும் அவனும்

samuthraselvam
29-04-2009, 04:17 AM
ரொம்ப நன்றிங்க. என்னை அண்ணான்னு கூப்பிடாதீங்க சகோதரி. உங்களை விட ரொம்ப இளையவன் நான்.
இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க. :aetsch013:
:lachen001::lachen001:


நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)

நன்றி தாமரை+லீலூமா முறையே அண்ணாச்சி, அக்காச்சி

சரிப்பா தம்பி!:p:p

ம்ம்ம்ம் எனக்கொரு தம்பி கிடைச்சிருச்சு......:traurig001::traurig001:

பேரப்பார்த்தா நீங்கதான் எல்லோருக்கும் மூத்தவர்...:icon_ush:

தாமரை அண்ணாவின் கவிதையும் சூப்பர்....!

சிவா.ஜி
29-04-2009, 04:50 AM
எப்போதும்போல்
இப்போதும் அதே புலம்பல்
போன வருடத்தைவிட
இந்த வருடம் வெயில் அதிகம்....!!

தாமரை
29-04-2009, 04:58 AM
என்ன வெயிலடித்தாலும்
மாடி வீட்டு மகராசர்களுக்கு
வியர்க்காது
உள்ளுக்குள்
ஈரம் இருந்தால்தானே!

தாமரை
29-04-2009, 05:11 AM
நாங்கள் கரி பூசினோம்
நீயும் கரி பூசினாய்

உச்சந்தலையிலும்
பிடரியிலும்
உன் அனல் முத்தங்கள்..

எங்கள் உடல் கறுத்து
வியர்க்கிறது..
உன் உடல் கறுத்து வியர்க்க
நாங்கள் விடும்
உஷ்ணப் பெருமூச்சுகள்

தாமரை
29-04-2009, 05:20 AM
நெளிகின்ற கானலில்
காலை நனைத்துக் கொண்டு
நெடுந்தூரம் நடக்கிறேன்..

சுள்ளென்ற முதுகும்
கொப்புளித்த பாதங்களும்
எரியும் உச்சந்தலையும்
வியர்த்து வழியும்
முகமும் தோள்களும்

இன்னும் எத்தனை வலிகள்
இத்தனை எரிச்சல்களும்
இனிமையானவை எனக்கு
வயிற்றை பசி
எரிக்கும்பொழுது..

தாமரை
29-04-2009, 05:41 AM
காய்ந்து வெடித்த கருவேல மரத்தின்
முட்கள் சிதறிக் கிடக்கின்ற
கண்மாய் காத்திருக்கிறது
என்னைப்போலவே

ஆளில்லா வண்டித்தடத்தில்
தண்ணீர் வண்டி சிந்தியதால்
முளைத்து வறண்ட
புற்களை தின்னும் ஆடாக
நீ கடந்த பொழுது
எனக்குள் துளித்தவைகளை
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

சுற்றிலும் வெம்மை
உள்ளுக்குள் வெறுமை
கருத்த முகத்தில் துளிர்த்த வியர்வையாய்
அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்கும்
மெயின் ரோட்டில் எதாவது பேருந்து

நின்று செல்லும் பொழுதெல்லாம்.

ஆதவா
29-04-2009, 05:56 AM
பிரமாதம்.... பின்னிட்டீங்க. அதிலும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை நான்கே வரியானாலும் கத்திரி வெயில் காய்ந்தடித்ததைப் போல அருமையாக இருக்கிறது.

அடுத்தடுத்த கவிதைகளின் இலக்கிய நயம் தரமானவை!!! மிகத்தரமானவை....
------------------------
சிவா.ஜி அண்ணா.. உங்களிடம் இன்னும் கவிதைகள் எதிர்பார்க்கிறேன்.
--------------------------
அக்காச்சி லீலூமா நீங்களும் வெயில் பற்றி கவிதை எழுதலாமே!!!

தாமரை
29-04-2009, 06:52 AM
வெய்யிலே
ஏழையின் கம்மங்கூழை
பணக்காரனை குடிக்க வைக்கிறாய்.

கொஞ்சம் ஏழைக்கும்
மிச்சமிருக்கட்டும்
இற(ர)ங்கிவிடேன்

சிவா.ஜி
29-04-2009, 07:38 AM
தாமரை கலக்குறீங்க. எனக்கும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு...அசத்துங்க.

சிவா.ஜி
29-04-2009, 07:42 AM
உச்சி சூரியனின் உக்கிரம்
தோற்றுப்போகிறது....
சுள்ளி பொறுக்கும்
செருப்பணியா கிராமத்துத் தாயின்
உதாசீனத்தின் முன்பு...!!

samuthraselvam
29-04-2009, 07:45 AM
கவிதை எல்லாமே சூப்பர இருக்குண்ணா...

samuthraselvam
29-04-2009, 07:50 AM
சிவா அண்ணா நீங்களுமா... கலக்குறீங்க....

அமரன்
29-04-2009, 07:51 AM
தான் தொட்ட இடங்களில்
ஈரம் துடைத்துச் சென்ற வெயில்
பட்டுச் சென்றிருக்கலாம்
தான் படாத இடங்களிலும்..

விழிகள் பட்டு நோகிறது
வெயில் படாத இடங்கள்.

மதி
29-04-2009, 07:56 AM
ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

வெயிலில் உருகி கவிதையாய் கொட்டுங்கள்...

எட்ட நின்று வேடிக்கைப் பார்க்கிறேன்.

தாமரை
29-04-2009, 08:27 AM
குளிர்பதன அறைக்குள் இருந்து
எழுதிக் கொண்டிருக்கிறேன்
வெயில் கவிதைகளை.:sprachlos020::sprachlos020::sprachlos020:

தாமரை
29-04-2009, 08:44 AM
நுங்கும் தர்பூஸூம்
வெள்ளரியும் எலுமிச்சைச் சாறும்
கம்மங்கூழும், நீர்மோரும்
நீயில்லா விட்டால் ருசிக்காது
என் காதல் வெயிலே!

சிவா.ஜி
29-04-2009, 08:45 AM
அதே அறையிலிருந்து
வாசித்துக்கொண்டிருக்கிறேன்
வெயில் கவிதைகளை....

உடல் குளிர்ந்திருந்தாலும்
உள்ளம் உஷ்ணத்தில் கொதிக்கிறது
ஜன்னல் வழியே,
வெயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்த
குப்பத்துக்குழந்தைகளின்
நிலை கண்டு....!!

சிவா.ஜி
29-04-2009, 08:46 AM
வெயில் காதலி....சூப்பர்.....!!!

தாமரை
29-04-2009, 08:49 AM
அதே அறையிலிருந்து
வாசித்துக்கொண்டிருக்கிறேன்
வெயில் கவிதைகளை....

உடல் குளிர்ந்திருந்தாலும்
உள்ளம் உஷ்ணத்தில் கொதிக்கிறது
ஜன்னல் வழியே,
வெயில் குளிப்பாட்டிக்கொண்டிருந்த
குப்பத்துக்குழந்தைகளின்
நிலை கண்டு....!!

ஒண்ணு நீங்க அவங்களோட போய் விளையாடுங்க..
இல்ல அவங்களை உள்ள கூட்டிகிட்டு வந்து கதை சொல்லுங்க..

எதுக்கு கொதிக்கணும்?
-------------------------------------------------------------------

என் வீட்டுக் கூரை
ஓட்டைகளை காட்டிக் கொடுத்து
சரிசெய்யச் சொல்கிறது வெயில்
அடுத்த மழை வரும்முன்பு.

சிவா.ஜி
29-04-2009, 08:54 AM
ஒண்ணு நீங்க அவங்களோட போய் விளையாடுங்க..
இல்ல அவங்களை உள்ள கூட்டிகிட்டு வந்து கதை சொல்லுங்க..

எதுக்கு கொதிக்கணும்?அப்படியே கூட்டிக்கிட்டு வந்தாலும் அது தற்காலிகம்தானே...

கொதிக்கறது அவங்களோட நிரந்தர நிலையை நினைச்சுத்தான்...

தாமரை
29-04-2009, 08:54 AM
மழைக்கு லட்சக்கணக்கில கவிதை இருக்கு. பனிக்கும், வசந்தத்திற்கும், ஏன் இலையுதிர்காலத்துக்கும் கூட எத்தனையோ கவிதை இருக்கு.

ஆனால் வெயிலுக்கு என்று கவிதைகள் மிகக் குறைச்சல்தான்.. என்னவோ ஆதவா இந்தவருஷம் இந்தத் தலைப்பை ஆரம்பிச்சு வச்சாரு,. நாங்களும் எழுதிகிட்டு இருக்கோம்..

இதை வேறு எதோடும் இணைத்து எங்களை பின்னாடி திட்டக் கூடாது மக்கா..

மதி
29-04-2009, 09:04 AM
சேச்செ... அப்படியெல்லாம் திட்டமாட்டோம். :)
நீங்க நடத்துங்க..

கற்பனைகளை கடன் வாங்க கத்துக்கறோம்.

தாமரை
29-04-2009, 09:04 AM
உச்சி வெயில் முத்தமிட்ட
உப்பு முத்தக் கறைகளை
கேணித் தண்ணீரில்
கழுவிக் கொண்ட காலங்கள்

கண்களை இடுக்கி
தண்ணீர் லாரி நோக்கி
நெற்றியில் கைவைத்து
நோக்கும் நேரத்தில்
எழுவதை
தவிர்க்க முடிவதில்லை.

வீச்சமில்லா நீர் குளித்து
வருடங்களாகின்றன

முலையுண்ணும் மகவு
இரத்தமுறிஞ்சியது போல்
ஆல்துளைக் கிணறுகளில்
செந்நீர்

கங்கையும் கழுவ முடியா பாவத்தை
வெயிலே உன்னால் மட்டும்தான்
கழுவ முடியும்

உக்கிரமாய் எரிந்து
அத்தனை நீரையும் ஆவியாக்கி
சுத்த நீரை கொடு..
மழையாய்.

தாமரை
29-04-2009, 10:22 AM
மாடுகள் மேய்ச்சலை மறந்து
காய்ந்த வேப்பமரத்தின் கீழ்
சோர்ந்து படுத்திருக்கின்றன

பழஞ்சோறும் வெங்காயமும்
பசியடக்கி தந்த குளுகுளுப்பில்
மேய்ப்பனும் தூங்குகிறான்

காக்கைகள் கூட
இரைதேடலை
மாலைக்கு ஒத்தி வைத்து
கூடுகளில் போடுகின்றன
குட்டித் தூக்கம்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை
கரிசல் மண்ணும்
முட்செடிகளும்
அசையாமல் தூங்குகின்றன

சுழன்று எரிகின்ற சூரியனே
நீயும் கொஞ்சம்
உறங்கி ஓய்வெடு..

தாமரை
29-04-2009, 11:12 AM
வெய்யிலை ரசித்து எத்தனைக் காலமாச்சு.. வறண்டு கொண்டிருக்கும் கண்மாய் கரையில் இருக்கும் காய்ந்த மரத்தடியில் லுங்கியோடும் துண்டோடும் கும்பலாய் கதைத்து (ஸ்டடி லீவில் படிப்பதாய் பேர் பண்ணி) பிறகு கண்மாயோரம் உள்ள கேனியில் குளித்துக் குளிர்ந்து ஆடிய ஆட்டங்கள்..


வெயிலே நான் உன் ரசிகன்..

கான்கிரீட் காட்டினில் வெய்யில் தீண்டத்தகாததாய் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதுதான் வருத்தம்.

வெய்யிலை இன்று மீண்டும் ரசிக்க வைத்த ஆதவனுக்கு நன்றி..

(வெய்யிலுக்காக ஆதவனுக்கு நன்றி சொல்லாம வேற யாருக்குச் சொல்றது?:D:D)

தாமரை
29-04-2009, 03:48 PM
உச்சி வெயிலில் குச்சி ஐஸ்
விற்றுக் கொண்டு போகிறான்
வியர்க்க வியர்க்க

காசுள்ளவன் வாங்கி
காசில்லாத நண்பனுக்கு
காக்கா கடி கொடுக்க

ஆதவனுக்குப் பொறாமை வந்து
இன்னும் கொஞ்சம் எரிகிறான்

தாமரை
30-04-2009, 04:58 AM
அது ஒரு வெயில் காலம்

வெயிலை உள்வாங்க
குறைக்கப்பட்ட முடி
குறைக்கப்பட்ட ஆடை

புழுதி பறக்கும்
செம்மண் சாலையில்
குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
நாங்கள் விரட்டிச் செல்லும்
சைக்கிள் டயர்கள்

வற்றி விட்ட ஏரியில்
மிச்சமிருக்கும் சிறிது நீரில்
துண்டு போட்டு பிடித்த
அயிரை மீன்கள்

முள்ளுச் செடிகளில்
தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
கவட்டை வில்கொண்டு
வேட்டையாடிய வீர சாகசம்

கல்லெறிந்து பறித்த மாங்காயா
நெருப்பு எறும்புகளைத் தாண்டி
மரமேறி பறித்த மாங்காயா
எது ருசி என
உப்பு மிளகாய் கலவையில்
முக்கி ருசித்தது

வேப்ப மரத்தடியில்
கயிற்றுக் கட்டிலில்
வானத்து நட்சத்திரங்களில்
எனக்கென்று ஒன்றை கண்டு
பெயரிட்டு மகிழ்ந்தது

மொட்டைமாடியில்
கயிற்றுக் கட்டிலில்
கூடாரம் போட்டு
வீடு கட்டி வாழ்ந்தது

இன்னும் இன்னும்
எத்தனையோ நினைவுகள்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
கான்கிரீட் சிறையில்

பூமகள்
30-04-2009, 05:04 AM
அது ஒரு வெயில் காலம்

வெயிலை உள்வாங்க
குறைக்கப்பட்ட முடி
குறைக்கப்பட்ட ஆடை

புழுதி பறக்கும்
செம்மண் சாலையில்
குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
நாங்கள் விரட்டிச் செல்லும்
சைக்கள் டயர்கள்

வற்றி விட்ட ஏரியில்
மிச்சமிருக்கும் சிறிது நீரில்
துண்டு போட்டு பிடித்த
அயிரை மீன்கள்

முள்ளுச் செடிகளில்
தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
கவட்டை வில்கொண்டு
வேட்டையாடிய வீர சாகசம்

கல்லெறிந்து பறித்த மாங்காயா
நெருப்பு எறும்புகளைத் தாண்டி
மரமேறி பறித்த மாங்காயா
எது ருசி என
உப்பு மிளகாய் கலவையில்
முக்கி ருசித்தது

வேப்ப மரத்தடியில்
கயிற்றுக் கட்டிலில்
வானத்து நட்சத்திரங்களில்
எனக்கென்று ஒன்றை கண்டு
பெயரிட்டு மகிழ்ந்தது

மொட்டைமாடியில்
கயிற்றுக் கட்டிலில்
கூடாரம் போட்டு
வீடு கட்டி வாழ்ந்தது

இன்னும் இன்னும்
எத்தனையோ நினைவுகள்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
கான்கிரீட் சிறையில்
அற்புதம்.. அபாரம்... கலக்கல்...

என் ஏக்கமான மனதைப் படம் பிடித்து வடித்திருப்பது போல இருக்கிறது அண்ணா...

கான்கிரீட் சிறைகளில்.. நட்சத்திரம் ரசிக்கவும்.. நிலா ரசிக்கவும் வழியின்றி வலிக்கிறது மனம்...

வெயில் கவிதையில் இது அருமையிலும் அருமை.. எதார்த்தம் நிரம்பி வழிகிறது..

பாராட்டுகள் அண்ணா... தொடருங்கள்.

பூமகள்
30-04-2009, 05:08 AM
நெருஞ்சிக் காட்டு
ஒற்றையடிப் பாதை முள்ளும்..

கோயில் தொடும்
கல் வழிப் பாதை கூர்மையும்..

பதம் பார்க்கும் குதியை
தன் கரங்களால்
பொடித் துகள்களாகச்
சுட்டுக் கொண்டிருந்தான்
துணையாக வந்த
வெப்பக் கதிரோன்..!!

(என்னை வெயில் கவிதை எழுத வைத்த ஆதவாவுக்கும் தாமரை அண்ணாவுக்கும் நன்றிகள்.. :))

ஆதவா
30-04-2009, 05:18 AM
உச்சி சூரியனின் உக்கிரம்
தோற்றுப்போகிறது....
சுள்ளி பொறுக்கும்
செருப்பணியா கிராமத்துத் தாயின்
உதாசீனத்தின் முன்பு...!!

நம்மிருவருக்கும் ஒரேமாதிரியான எண்ணம்!!!! அருமை அண்ணா!!

ஆதவா
30-04-2009, 06:09 AM
தாமரை அண்ணா கலக்குகிறார். கூடவே சிவா.ஜி அண்ணாவுக்கு சகோதரி பூமகளும். அப்பப்போ தொட்டுப் பார்த்து ' ஆ ' என்று சொல்லும் மதி, ஜில் ஜில் அமரன்....

கவிதைகள் அனைத்தும் பிரமாதம்!!!

பொதுவாக வெயில் என்பதால் வறட்சியும் ஞாபகத்திற்கு வரும். வெயில் கவிதைகளும் வறண்டு வரவில்லையோ என்றும் தோணியது...

அப்படியல்ல... அள்ள அள்ள குறையாத வெயிலைப் போன்று கவிதைகளும் எழுதலாம் என்பதை மக்கள் உணர்த்துகிறார்கள்!!!

தாமரை
30-04-2009, 06:25 AM
வெயிலே
எங்கள் விளையாட்டுத் தோழனே
உன்னுடன் விளையாடத்தானே
விடுமுறை

பாட்டி வீட்டுக் கேணியில்
பாதாளத்தில் கிடக்கும் குளிர்நீரும்

கமலாலயக் குளத்தில்
தேங்கி நிற்கும் பச்சை நீரும்

நேரு பூங்காவின்
சிமெண்டு பெஞ்சுகளும்

மாரியம்மன் பண்டிகைக்கு வாங்கிய
மண்குதிரை பொம்மைகளும்

உன்னுடன் மட்டுமே
எனக்குப் பரீட்சயம்.

அவைகளெல்லாம் அடையாளம் துறந்து
என்னை விட்டுப் போனாலும்

வா பேசிமகிழ்வோம்
பழைய நினைவுகளை.

தாமரை
30-04-2009, 06:27 AM
தாமரை அண்ணா கலக்குகிறார். கூடவே சிவா.ஜி அண்ணாவுக்கு சகோதரி பூமகளும். அப்பப்போ தொட்டுப் பார்த்து ' ஆ ' என்று சொல்லும் மதி, ஜில் ஜில் அமரன்....

பூமகள் சிவா.ஜி அண்ணாவுக்கு மட்டும் தான் சகோதரியா?
ஆட்டோ வருது டோய்.... ஆதவா.. ஓடி போயிடு...

மதி
30-04-2009, 06:30 AM
வெயில் கவிதைகளின் வெக்கை தாங்கல
ஏ.சி குளிரில் வெயில் கவிதைகளைப் படிக்க ம்ம்...

நாளை சென்னை சென்றால் தெரியும் சேதி...

தாமரை
30-04-2009, 06:34 AM
வெயில் கவிதைகளின் வெக்கை தாங்கல
ஏ.சி குளிரில் வெயில் கவிதைகளைப் படிக்க ம்ம்...

நாளை சென்னை சென்றால் தெரியும் சேதி...

வெக்கை தாங்கல
ஏ.சி குளிரில்
வெயில் கவிதைகளைப் படிக்க

மதிய வெய்யிலில்
மெரீனா மணலில் அமர்ந்து
படிக்கக் குளிரும்
மதி...

இப்படிப் போட்டு கவிதைன்னு சொல்லிட வேண்டியதுதானே

தாமரை
30-04-2009, 06:40 AM
மணல் பரப்பி
நீர் பிடித்து வைத்த
சிங்க முகப் பானையின்
வாய் வழி வழிந்த
குளிர் நீரின் சுவைக்கு
குளிர்பானம் தொடும் நேரமெல்லாம்
நாக்கு ஏங்குகிறது.

தெருவோரப் பானைக் கடையெல்லாம்
தேடுகிறேன்
பெட்டிச் சிறைக்குள்
அடைக்கப்பட்ட நீரின்
சுதந்திரம் வேண்டி..

samuthraselvam
30-04-2009, 07:28 AM
அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!!:icon_ush: இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.:rolleyes:

அடேங்கப்பா... எவ்வளவு கவிதைகள்.. ஆதவனின் வெயில் கரங்களை விட உங்களின் கவிதைகள் அதிகமாகிவிடும் போல் தெரிகிறதே....:icon_b:

வெயில் என்ற தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பே வெளிவிடலாம்.....:icon_b:

இதே வேகத்தில் கவிதைகள் வந்து குவிந்தால், வெயில் காலம் முடிவதற்குள் இந்தத் திரி பல பக்கங்களை தாண்டிவிடும்.:sprachlos020:

அமர் அண்ணா, சிவா அண்ணா, பூமகள் ஆகியோரின் கவிதைகளும் அற்புதம்.

பூமகள்
30-04-2009, 07:32 AM
அலைந்து திரிந்து
பசித்த மதியத்தில்..
உச்சிக் கதிர்கள்
உச்சி வகிடு வழி
வழியத் துவங்கியிருக்கும்..

எப்போதும் நிற்கும்
மரத்தடி நிழலின்
புழுது படிந்த இலைகளின்
வடிகட்டிய குளுமை
வெப்பக் காற்றோடு
ஈர முதுகு சில்லிக்க வைக்கும்..

ஓரமாய் பானையோடு
கம்பங்கூல் தாத்தாவும்..
அவர் கொண்ட சுத்தமான
ஆறுவகை வற்றல் குவியல்களும்..

நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!

மதி
30-04-2009, 07:51 AM
நீங்க சொன்ன மாதிரி எழுதலாம்..
ஆனா நான் தான் கவிஞன் இல்லையே... :(

கற்பனைகளை கடன் வாங்க வேண்டிய நிலையில் தானே இருக்கிறேன்.
வெக்கையில் மதியும் இழந்தாச்சு..

பூமகள்
30-04-2009, 07:56 AM
அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!!:icon_ush: இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.:rolleyes:
தங்கையே...
தாமரை அண்ணா ஒரு கடல்... அள்ள அள்ளக் குறையாத கருத்துகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக் காரர்..

அவர் அறியேன் என்று சொல்லி இது வரை நான் கேட்டதில்லை..

அவரின் பல் முகங்கள் நெருங்கியவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகும்.. இப்போது நீங்களும் அருகில் வந்திருப்பது புரிதலிலிருந்து தெரிகிறது..

எங்கள் அனைவருக்கும் அவ்வப்போது தேவைப்படும் அனைத்து பதில்களும் இந்த மகா சமுத்திரத்திடமிருந்து அன்புடன் கிட்டிவருகிறது...

இவரின் ஆழம் அறிந்தவர் எவருமில்லை என்றே சொல்லலாம்.. உணர்ந்ததால் இத்தனை சொல்கிறேன்..

மொத்தத்தில்..

தாமரை அண்ணா..அளக்க முடியாத ஆழமறிய இயலாத அறிவுச் சுரங்கம்...
வற்றா ஜீவ நதி...
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் சற்றும் சலனப்படாத ஆழ் கடல்..இதுக்கு மேல சொன்னா.. தாமரை அண்ணா எத்தனை ஈ-பணம் கொடுத்தார் இப்படி பேச என்று ஒரு கூட்டம் கேட்டு வரும்... ;) ஆகவே.. இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.. :icon_ush::icon_rollout:

அமரன்
30-04-2009, 08:19 AM
தங்கையே...
தாமரை அண்ணா ஒரு கடல்... அள்ள அள்ளக் குறையாத கருத்துகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக் காரர்


அதான் குடிக்கக் குடிக்க தாகம் தணிவதில்லை.

பூமகள்
30-04-2009, 08:24 AM
தாகம் தணிந்து விட்டால் தேடல் இருக்காதே அமர் அண்ணா...!! ;)

(நாங்களும் சொல்வோம்ல....!! :D:D)

தாமரை
30-04-2009, 08:43 AM
அறிவுப் பூர்வமான பதில், விமர்சனம், விவாதம், விதண்டாவாதம், பொதுவான அலசல்கள், வந்த சண்டையை பிடிப்பது, வம்பு சண்டைக்கு இழுப்பது, நக்கல், நையாண்டி, மொக்கை.................!!!!:icon_ush: இப்படி தான் உங்களின் எழுத்துக்களை இதுநாள் வரை ரசித்திருக்கிறேன்... ஆனால் ஒரு கவிஞராக இந்தத் திரியின் மூலம் தான் அறிகிறேன்.:rolleyes:

.

எப்படி பருவகாலங்கள் மாறி மாறி வருதோ அப்படி எழுத்துக்களும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்

எதாவது ஒரு பருவத்தில் பூமியைப் பார்த்துவிட்டு பூமி இப்படித்தான் என்று நாம் கற்பனை செய்து கொள்வதில்லை..

கவிதைகளாகவே வாழ்ந்த பருவ காலம் ஒன்று உண்டு.. கட்டுரைகளாக கழித்த காலங்களும், விவாதங்களில் வெடித்த காலங்களும், நகைச்சுவையில் திளைத்த காலங்களும், அனுபவங்களை வடித்த காலங்களும், கதைகளை கொறித்த காலங்களும் இப்படி அந்தந்த பருவத்திற்கேற்ற மாதிரி பூமி ஆடை அணிந்து கொள்வது போல எழுத்தாளன் வேடமேற்றுக் கொள்கிறான்.

எழுத்தை ஆண்டால் தானே எழுத்தாளன்.. மத்தவங்க வெறும் எழுதுபவர்கள் மட்டும்தானே...

அதனால்தான் எழுத்து எவ்வடிவு என்றாலும் அதைக் கைகொள்கிறேன்.

என்னுடைய கவிதைகளைத் தேடிப்படிக்க சிரமப்பட வேண்டியது இருக்கும். அமரன், பூமகள், மீரா, அக்னி இப்படிச் சிலரைக் கேட்டால் சுட்டி தந்து உதவுவார்கள்..

உங்களுக்காக சில திரிகள்...தாமரை கவிதை எழுதிய திரிகள்.. தேடிப் பிடிச்சு படிக்கணும். எங்கியாவது ஒளிஞ்சுகிட்டு இருக்கும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15396
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10049
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6177
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6055
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6077
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7397
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6057
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18437
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=271866&postcount=21
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7317&page=2
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9343
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14256
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15696
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6293
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6268
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=152175&postcount=23
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6067
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6242
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6344
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7192
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267051&postcount=6
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6068
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6584
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6583
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6546
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=146368&postcount=4
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6139
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6075
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6128
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9343
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7072
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6093
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17286
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10049
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9283
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15466
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6690
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6268
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6068
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6550
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6549
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6546
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6267
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6177
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6051
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6081
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6139
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6128
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6075
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6093
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6056
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6208

அமரன்
30-04-2009, 08:48 AM
என் சேமிப்பிலிருந்து சில..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6258 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6258)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6471 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6471)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6052 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6052)

http://www.tamilmantram.com/vb/showt...?t=7056

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6683 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6683)

மேலும் தேவைப்பட்டால் தனிமடலிடுங்க.

தாமரை
30-04-2009, 10:39 AM
சுருக்கங்கள் விழுந்த கரங்கள்
சுருள் முடியைக் கோதி
உருண்டைச் சோறெடுத்து
ஊட்டிய தருணங்களில்
எரிந்தான் சூரியன்

பனைவிசிறிகள்
அசையாமல் நின்ற
காற்றுக்கு
நடனம் சொல்லித்தந்து
ஆடவைத்ததில்
இன்னும் கோபம் கொண்டு
உக்ரமாய்
எரிகிறான் சூரியன்


நீ விசிறி விடு

அவன் எரியட்டும் பாட்டி

தாமரை
30-04-2009, 10:46 AM
நினைவில் எழுந்து
நாவின் நீர் சுரப்பிக்க..
காத்துக் கொண்டிருக்கிறேன்..
அடுத்த வருட
வெயில் காலத்துக்காக...!!

வெயில் காலத்து விடுமுறையும்
பாட்டி வீடும்
ஆகஸ்ட் பதினைந்தை
மிட்டாய் நாளாக்கி
கேலி செய்கின்றன.. :icon_rollout::icon_rollout:

ஆதவா
30-04-2009, 10:58 AM
படர்ந்திருக்கும் வெயில்
உச்சியைக் குத்தியிழுக்கிறது
அடர்ந்திருக்கும் ரோமங்களின் வழி
கைகளில் ஊடுறுவப் பார்க்கிறது
முகமெங்கும் வெயிலின் தடங்கள்
அப்பிவிடா தடயங்கள் இருக்கின்றன
என் தோள் தேடி வருகிறார்கள்
பறவையினத்தவர்கள்
வெப்பத்தை வென்றுவிட்ட சந்தோஷத்திலும்
சலனமற்று இருக்கிறது.
என் காலடி நிழல்

தாமரை
30-04-2009, 11:03 AM
மதிய உணவு முடிந்து
மெல்ல நடக்கிறேன்
நீளமாய் சோம்பி உறங்கும்
கருநாகச் சாலை அரவின் மீது..

இத்தனை வருடங்கள் தொலைத்து விட்ட
வெய்யில் சகவாசத்தை
ஆதவன் சுட்டு உணர்த்த
அசை போட ஆரம்பிக்கிறேன்,,

முதுகும் உச்சந்தலையும்
சுள்ளென சுட
மனது மட்டும்
சில்லென்று இருக்கிறது..

நாற்புறம் மட்டுமல்ல
வானத்தையும் அண்ணாந்து பார்க்கிறேன்..

வியர்த்து வழிந்த சூரியன்
முகம் துடைத்துப் போட்ட
கைக்குட்டை வெண்மேகம்

பறவைகளே இல்லா வானம்
முகம் வெளிறிக் கிடக்கிறது..

மரங்களெல்லாம் அசையாமல்
இழந்து விட்ட இயற்கைக்கு
மௌன அஞ்சலி செய்து கொண்டிருக்கின்றன

அவசர அவசரமாய்
கரியாய் இருமிக் கொண்டு
வாகனங்கள்
விரைந்து கொண்டிருந்தன,..

வெளியில் தெரிந்தவை எல்லாம்
வேகங்கள் சோகங்கள்

ஆழ மூச்சிழுத்து
பெயர் தெரியா மொட்டை மரத்தடியில்
உள்ளுக்குள் எனை வாங்கி
நானறிந்த வெயில் காலங்களை
தேடிப் பார்த்து
குளிர்ந்து போகிறேன்..

மீண்டு(ம்) மெல்ல நடக்கிறேன்
உச்சிச் சூரியன் வெப்பத்தை
உள்ளிருந்து வந்து நீர்
தணித்துக் கொண்டிருக்கிறது...

உதடுகள் உப்புக் கரிக்கின்றன..
கைகால்கள் பிசுபிசுக்கின்றன
வெற்றுக் கால்களால்
நடக்க ஆசை என்றாலும்
இயலாமையினால்
குறுகித் தலைகுனிகிறேன்

தூரத்துக் கானல் நீரில்
வாகனங்களின் பிரதிபலிப்புகள் கண்டு
எத்தனை ஆண்டுகள் ஆகின்றன
அசை போடுகிறேன்..

சாக்கடை நீரை ஒரு குருவி
தயங்கித் தயங்கி அருந்துவதைக் கண்டு
சட்டென
உறுதி எடுத்துக் கொள்கிறேன்

நாளை முதல் ஒரு வாளித் தண்ணீர்
பால்கனியில் வைத்திட வேண்டும்..
சட்டெனப் தோன்றியது
வெய்யிலின் பிரஹாசம்
உள்ளிருந்தும்...

ஆதவா
30-04-2009, 11:05 AM
என் உதடுகள் உலர்ந்து
காய்ந்து கிடக்கின்றன
கசியும் வார்த்தைகளுக்கு
வெப்பத்தால் பூச்சிட்டு
கடுமையாக்கிக் கொள்ளுகின்றன
மனதெங்கும் படிந்திருக்கும் மெளனம்
உதடுகளை விலக்கிவிட்டு
மற்றெவ்வழியும் பிதுங்குகிறது
உள்ளூர அலைந்திருக்கும்
இந்த வெப்பத்தை
எப்படிக் கரைக்கவேண்டுமென
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
பகல் புகுந்த என்னிடம்

ஆதவா
30-04-2009, 11:10 AM
நாளை முதல் ஒரு வாளித் தண்ணீர்
பால்கனியில் வைத்திட வேண்டும்..
சட்டெனப் தோன்றியது
வெய்யிலின் பிரஹாசம்
உள்ளிருந்தும்...

:icon_b::icon_b:

அருமை!!!

ஆனால், இக்கவிதை சொல்ல இவ்வளவு நீண்டிருக்கவேண்டுமா என்று யோசிக்கிறேன்..

தாமரை
30-04-2009, 11:10 AM
உதடுகள் வெடிப்பது பனிக்காலத்தில் ஆதவா...

ஆதவா
30-04-2009, 11:15 AM
செல்லும் வழியெங்கும்
வெப்ப ஆறு ஓடுகிறது
வெம்மை காணாதவர்களே
இந்த வெப்பத்தை கொஞ்சம்
மொண்டெடுங்கள்
உச்சியில் ஊற்றி
வெயிலில் மிதந்து கொள்ளுங்கள்
வியர்வையை படரவிடுங்கள்
உடலெங்கும் ஊடுறுவிப் பரவும்
வெப்பத்தில்
உணர்ந்து கொள்வீர்கள்
நீங்கள் குளிர்பதன அறையில்
இருப்பதற்கான சாத்தியங்களை

தாமரை
30-04-2009, 11:16 AM
:icon_b::icon_b:

அருமை!!!

ஆனால், இக்கவிதை சொல்ல இவ்வளவு நீண்டிருக்கவேண்டுமா என்று யோசிக்கிறேன்..

அட இது உண்மை நிகழ்வப்பா..(வெண்பா, கலிப்பா மாதிரி இல்லை) இன்னிக்கு வெய்யிலில் மனம் போன மாதிரி நடந்து விட்டு வந்தேன்..

எங்க பாட்டி வீட்டில சிட்டுக் குருவி கூடு இருக்கும்.. தாவாரத்தில் சோளம் கம்பு கேழ்வரகு இப்படி எதையாவது ஒரு தானியத்தை இறைத்து ஒரு தட்டில் தண்ணீர் வைத்து விடுவோம்..

குருவிகள் கீச் கீச்சென்று மகிழ்ச்சியாய் அதைச் சாப்பிட்டு தண்ணீரை அலகிலெடுத்து அண்ணாந்து குடிக்கும் அழகிருக்கே...

அதையெல்லாம் ஞாபகப் படுத்திய இந்த வெய்யில் கவிதைகளில்

உச்சி வெய்யிலில் ஒரு சாவகாசமான நடை பயணத்தில் கூடவே அழைச்சுகிட்டுப் போயிட்டு வரலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,, இன்னதுதான் எழுதணும்னு நினைச்சா நீ சொன்ன மாதிரி நாலுவரி போதும்

ஆனால் அதைச் சொல்லணும்னு நினைச்சு எழுதலை எழுதிக் கொண்டிருக்கும் போது தானா வந்தது அது.

ஆதவா
30-04-2009, 11:25 AM
உச்சி வெய்யிலில் ஒரு சாவகாசமான நடை பயணத்தில் கூடவே அழைச்சுகிட்டுப் போயிட்டு வரலாம் என்று எழுத ஆரம்பித்தேன்,,
.

அது ஞாபகத்திற்கு வந்தது. ஏன்னா, நானும் ஒரு வெயில் பயணத்தை இப்போது முடித்தேன்!!! :)

ஆதவா
30-04-2009, 11:27 AM
உதடுகள் வெடிப்பது பனிக்காலத்தில் ஆதவா...

இப்போ மாத்திட்டேன்!!!! :D

தாமரை
30-04-2009, 11:36 AM
வெப்ப ஆற்றில் நீந்த
தெரிந்திருக்க வேண்டும்..
ரசனை நீச்சல்
-----------------------------------

தன் வீட்டுக் கிணற்றில்
தண்ணீர் வற்றி விட
என் வீட்டு வழியே
குடமேந்திச் செல்லும்
அத்தை மகள் பார்வை

குளிர்பார்வைத் திசை கண்டு
கொதிக்கும்
பங்காளிப் பார்வை

அவள் விட்டுச் சென்ற சுவடுகளை
வெற்றுப் பாதத்தால் முத்தமிட்டுத் தொடர்கிறேன்
எரியும் சூரியனையும் அவனையும்
அலட்சியம் செய்கிறேன்..

என் வீட்டு வழி
எடுத்து வந்த நீரை
சொம்பு நிறைய மொண்டு கொடுக்க
குடித்து தாகமாகிறேன்

அம்மா அப்பா வீட்டில இல்லை
அவள் முணுமுணுக்க
மெல்லத் திரும்பி நடக்கிறேன்

வெப்பம் ஏறிக் கொண்டிருக்கிறது
தைக்கு காத்திருக்கும் மனதுடன்
தைக்கும் அவள் பார்வை முதுகில்

எனக்குள்
கோடை மழை

samuthraselvam
02-05-2009, 08:53 AM
வாவ்..... என்ன ஒரு இளமை ததும்பும் துள்ளல் கவிதை...

அதிலும்


அவள் விட்டுச் சென்ற சுவடுகளை
வெற்றுப் பாதத்தால் முத்தமிட்டுத் தொடர்கிறேன்
எரியும் சூரியனையும் அவனையும்
அலட்சியம் செய்கிறேன்..

என் வீட்டு வழி
எடுத்து வந்த நீரை
சொம்பு நிறைய மொண்டு கொடுக்க
குடித்து தாகமாகிறேன்

வெப்பம் ஏறிக் கொண்டிருக்கிறது
தைக்கு காத்திருக்கும் மனதுடன்
தைக்கும் அவள் பார்வை முதுகில்

எனக்குள்
கோடை மழை இந்த வரிகள் இருக்கே சரியான ரொமான்ஸ்...

தாமரை
03-05-2009, 04:37 AM
ஆதவன் எழுதிய
அழகிய கவிதை
வெயில்

தாமரை
04-05-2009, 03:55 AM
உடலெங்கும் வியர்க்கிறது
இஸ்திரிச் சட்டைகள்
நனைந்து ஒட்டிக் கொள்கின்றன

செயற்கை மணங்களில்
மறந்து போன
சொந்தமணம்
நாசிக்குப் புரிகிறது

அக்னிக் காற்றும்
தென்றலாகும்
அற்புதம் நடக்கிறது..

முகிலன்
சமுத்திரச்செல்வம் மொண்டெடுத்து
பார் முழுதும்
இறைக்க விரைகிறான்

எதுவும் அறியாமல்
கண்ணாடிச் சுவர்களுக்கிடையில்
குளிர்பதன அறைக்குள்
பதப்படுத்தப்பட்டு
கெட்டுப் போன சில
உடல்கள் புலம்புகின்றன

ஐயகோ என்ன வெயில்!!!

samuthraselvam
04-05-2009, 06:17 AM
வெயிலுக்கு இதமான ஐஸ்.........:p
இன்னிக்கு காத்து அருமையா அடிக்குதே.....:lachen001:

samuthraselvam
04-05-2009, 06:40 AM
உடம்பு தான் வெயிலில் கருக்கிறதே தவிர.....
மனது எப்போதுமே வெள்ளை தான்...
வெயிலில் உழைக்கும் விவசாயிகளுக்கு...

தாமரை
04-05-2009, 06:56 AM
அகச் சிவப்பு
புற ஊதா
இராமனா, கிருஷ்ணனா
இந்த வெயில்..?

samuthraselvam
04-05-2009, 07:07 AM
காலை வேளை....
பனித்துளிகளின் பரவசம்.....
தாமரையின் மலரசம்....
வண்டுகளின் ரீங்காரம்.....
சூரியனின் நவரசம்....
பனித்துளியின் மரணஅவசரம்.....

samuthraselvam
04-05-2009, 07:11 AM
ஆதவன் வருதல்....
தாமரை மலர்தல்....
பிரிக்கமுடியாதது...
ம்ம்ம்..... (இதெல்லாம் ஐஸ்...., கண்டுக்காதீங்க..)

தாமரை
04-05-2009, 09:17 AM
இரவெல்லாம் உழைத்துழைத்து
காற்றைச் சுத்தப்படுத்தி
வியர்த்து நிற்கும் புற்களின்
நெற்றி துடைத்து முத்தமிட்டது
சூரியக் கதிர்!

சிவா.ஜி
04-05-2009, 12:52 PM
அடடா...தாமரை, ஆதவாவோடு லீலுமாவும் களமிறங்கியாச்சா....அசத்துங்க.

வெயிலை ரசிக்கமுடியுமோ என்னவோ....வெயில் கவிதைகளை ரசித்து ருசிக்க முடிகிறது.

தாமரை
04-05-2009, 01:12 PM
அகச் சிவப்பு
புற ஊதா
இராமனா, கிருஷ்ணனா
இந்த வெயில்..?

ஒவ்வொரு கோபிகையின்
தலையிலும் வெய்யில்
அவளுக்கேச் சொந்தமாய்
ஆம்
கிருஷ்ணந்தான் வெய்யில்

வில்லேந்தியவன் மழை மேகமல்லவா?
இவன்
சுற்றி எரியும்
சூரியச் சக்கரமேந்தியவன்
அதனால் இவன்
கிருஷ்ணந்தான்

அத்தனை ஆடைகளையும்
கவர்ந்து கொண்டு
குளமும் கிணறும் தேடி
கோபிகைகள் குளிக்கக் காணுமிவன்
எப்படி இராமனாவான்?

இராமனென்றால்
இவன்
கால்தொட்ட பாறைகள் எல்லாம்
பெண்களாக ஆகியிருக்குமே!

வெய்யில் கிருஷ்ணந்தான்
அவன் கீதையினால் வந்த ஒளியில்தான்
உலகம் புரிகிறது

அவன் உண்டதுதான்
உலகத்தின் வயிற்றை நிரப்புகிறது
மழையாக

மண்ணுண்ட வெயில்
வாய்திறந்து
உலகங்கள் காட்டும்

இவன் வேணுகானமதில்
உலகத்தோர்
நடனமாடுவர்

வெள்ளை மேகப் பசுக்களை
வானில் மேய்த்து
மழைப்பால் சுரக்க வைக்கும்
இடைக்குலச் செம்மல்

உலகமே கிருஷ்ணமயம்

நீலநிறத்தை உலகத்திற்கு தந்து
நினைவூட்டும் வெய்யில்
கிருஷ்ணன்

தாமரை
09-12-2009, 03:23 AM
வெயில் காலம் போய் குளிர்காலம் வந்தாச்சி.. ஆதவன் வந்தா குளிர்காலக் கவிதைகளும் எழுதலாம்..

யாராச்சும் அழைச்சுகிட்டு வாங்களேன்,

aren
09-12-2009, 03:47 AM
ஆதவாவின் அட்ரஸையேக் காணோமே

தாமரை
09-12-2009, 03:36 PM
இதழ் வெளிய வந்தா அவரும் வந்திடுவாரோ என்னவோ?

தாமரை
11-04-2012, 07:00 AM
கோடைக்காலத்து வேடந்தாங்கல்
மனம் பிளந்து காத்திருக்கிறது
மழைக்கும்
பறவைகளுக்கும்!!!

ஆதவா
11-04-2012, 10:46 AM
கோடைக்காலத்து வேடந்தாங்கல்
மனம் பிளந்து காத்திருக்கிறது
மழைக்கும்
பறவைகளுக்கும்!!!

ஆதவன் (மனம்) பிளந்து
திறந்தேயிருக்கிறான்
உக்கிர வெயில்!


திரும்பவும் ஸ்டார்ட்டா??

யாரெல்லாம் வரீங்கோ?

ஆதி
11-04-2012, 11:37 AM
நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்துக்குறேன்

தாமரை
11-04-2012, 11:54 AM
குளிக்க நீரில்லை துவளவில்லை உடல்
தன் நீரிலேயே குளித்தது
வியர்வை!!!

கீதம்
11-04-2012, 12:09 PM
வெயில் காணாதபோதும் துவளவில்லை மனம்,
வெயில் கவிதைகளில் குளிர்காய்ந்துகொள்ளும் இனி.

தாமரை
11-04-2012, 05:13 PM
நாக்கு வறள
பசையாய் எஞ்சி இருக்கும்
சிறிது எச்சிலை
தொண்டை வலிக்க விழுங்கி

வெறிச்சோடி இருக்கும் வீதிகளில்
இரைக்க இரைக்க
மிதிவண்டி மிதித்தபடி

நகர்வலம் வருகிறேன்

நானே ராஜா!!!

ஆதவா
11-04-2012, 05:36 PM
வடிந்தோடும் நீரில்
கசந்து குளுமைதேடும் விழிகளில்
விசிறியாய் மாறும் விரல்களில்
இருவாரம் கவனிக்கப்படாத தாடையில்
காலர்பட்டை தேய்க்கும் பின்னங்கழுத்தில்
இப்படி இப்படியாய்
எங்கும் தன்னைக் காட்டிக் கொள்கிறது
புறப்புழுக்கம்
கைவிடப்பட்ட குட்டையைப் போல
அடையாளமற்று கிடக்கிறது
மனப்புழுக்கம்.

தாமரை
12-04-2012, 04:42 AM
சுள்ளென உறைக்கிறது..
உடம்பெல்லாம் எரிகிறது..
காணக் கூசுகிறது கண்கள்
நாவெல்லாம் வறண்டு அசைய மறுக்கிறது
வியர்த்து வழிகின்றது
கால்கள் நடுங்குகிறது
உடலெல்லாம் சக்தியற்று
துவண்டு போகிறது
யாரின் நிழலாவது தேடி ஓடி
அந்த இருட்டில் ஒளிந்து கொள்ள தோன்றுகிறது

சந்திக்க திராணியில்லை
உண்மை வெயிலே!!!

(உண்மைக்கும் வெயிலுக்குமான சிலேடையாகக் கருதவும்)

தாமரை
12-04-2012, 10:11 AM
தண தணவெனக் கொதித்து
நெஞ்சு பிளந்து
செத்த பாறையில்

உடல் முழுக்கப் புழுதியோடு
ஒற்றைக் காலில்
தவம் செய்கிறது
சின்னஞ்சிறு அரச மரம்

கீதம்
12-04-2012, 11:05 AM
ஆசை மட்டுமல்ல,
வெயிலும் வெட்கமறியாது.
அறிந்திருந்தால்….

மதிலுக்குள்ளும், மாடியிலும்
வழக்கமற்ற வழக்கமாய்
மேலாடை துறந்துலாத்தும் ஆடவரையும்,

தார்ச்சாலையோரத் தர்பூசணிச்சாறு வழியும்
முழங்கைதனை நாவால் வழித்திடும்
நாசூக்கு மறந்த நங்கையரையும்,

மனமுதிர்த்த மதியா வாயிலானாலும்
மரமுதிர்த்த நிழலில் நின்றிளைப்பாரும்
திரைமனங்களின் சில மறைமுகங்களையும்,

வரவேற்பறைக் காத்திருப்பின் புழுக்கத்தில் நெளிந்து
மின்விசிறிப் பொத்தான் தேடி
அனுமதியின்றி சொடுக்கும் கரங்களையும்
காணவிட்டு வேடிக்கை காட்டுமா?

கீதம்
12-04-2012, 11:06 AM
தண தணவெனக் கொதித்து
நெஞ்சு பிளந்து
செத்த பாறையில்

உடல் முழுக்கப் புழுதியோடு
ஒற்றைக் காலில்
தவம் செய்கிறது
சின்னஞ்சிறு அரச மரம்

அரசிளங்கன்றின் ஒற்றைக்கால் தவம் வெயிலின் வெக்கை மீறி ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

தாமரை
12-04-2012, 07:13 PM
கண்மணியின் இந்தக் கவிதையும் வெயில் கவிதைதானே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16072

சிவா.ஜி
12-04-2012, 09:27 PM
கட்சித் தொண்டர்கள் தங்கள்
குண்டர்கள் முகமூடி கழற்றி
தொண்டர்களாய் மாறி
தண்ணீர் பந்தலமைக்கும்
வெக்கையான வேனிற்காலம்...!!!

சிவா.ஜி
12-04-2012, 09:30 PM
இத்திரி மன்றத்துக்கே உரிய மாபெரும் சிறப்பு....சீஸன் மாறினால்....விளையாட்டும் மாறுமே நம் காலம்....அதைப்போலவே...வெயில் தொடங்கியதும்...திரியும் தொடங்கியதே....இது மன்றத்தின் சிறப்புகளில் ஒன்று.

திரி வளர்ந்து குளிர்ந்திட வாழ்த்துக்கள்.

தாமரை
13-04-2012, 02:00 AM
சிறுவர்களுக்கு
வெயில் வருத்துவதாயில்லை

அது அப்படி ஒன்றும்
கொடுமையானதாகத் தெரியவில்லை

அதற்கு முன் வரும்
தேர்வுகளை விட!:aetsch013:;):lachen001:

சிவா.ஜி
13-04-2012, 10:10 AM
ரொம்ப ரொம்ப உண்மை தாமரை.....!!!

நாமெல்லாம் வெயில் சுமந்து விளையாடினோம்...
இப்போதுள்ள பிள்ளைகள் வெயிலுக்கு பயந்து
உள்விளையாட்டு விளையாடுகிறார்கள்....இதுதான் வித்தியாசம்...இந்த தலைமுறை....ஆரோக்கியமற்ற தலைமுறை. என்ன செய்வது....

தாமரை
14-04-2012, 01:41 AM
வெயிலில் கறுத்துடுவே என
வெள்ளைக்கார பூச்சுகள்
பூச்சாண்டி காட்டுகின்றன

வியர்வை துர்நாற்றம்
புஸ் எனச் சீறுகின்றன
நறுமண நச்சரவங்கள்

தலைசுற்றல் மயக்கம்
கொப்புளங்கள் புண்கள்
வியர்குரு அம்மையென
மருத்துவ மேதைகள்
மிரட்டி வைக்கிறார்கள்

இதற்கெல்லாம் பயந்து
பூச்சிக்கொல்லிகளாலும்
உரத்தினாலும்
சத்திழந்த நிலமாய்
நம் குழந்தைகள்

வெயிலூட்டிப் பழக்கப்படாத
குயில் குட்டிகள்

தாமரை
14-04-2012, 01:53 AM
சூரியனே சூரியனே
தமிழன்
இலவசங்களுக்கு மயங்கிக் கிடக்கிறான்
என்ற உன் கருத்தை
மாற்றிக் கொள்

நீ எத்தனைதான் இலவசமாக
சக்தி தந்தாலும்
ஒரு துளியும் உபயோகிக்க மாட்டான்

தன்மானத் தமிழன்!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-04-2012, 04:48 AM
வெயில்க விதைகளை வேகமாய்நான் பார்த்தேன்
மயிலாடக் கண்டேன் மனம்
:):aktion033::aktion033:

M.Jagadeesan
15-04-2012, 01:27 AM
சூரியனே சூரியனே
தமிழன்
இலவசங்களுக்கு மயங்கிக் கிடக்கிறான்
என்ற உன் கருத்தை
மாற்றிக் கொள்

நீ எத்தனைதான் இலவசமாக
சக்தி தந்தாலும்
ஒரு துளியும் உபயோகிக்க மாட்டான்

தன்மானத் தமிழன்!!!


சூரியன்தான் இலவசத்தைத் தொடங்கி வைத்தான்
சூனியத்தைத் தனக்குத்தானே வைத்துக் கொண்டான்.

M.Jagadeesan
15-04-2012, 01:48 AM
தார்பூஸ் பழம் உண்டு தாகம் தணிப்பீர்
மார்மீது சந்தணத்தை அள்ளிப் பூசி
வேர்க்குருவை நீக்கிடுவீர் வெம்மை தணிக்க
மோரருந்தி, வெள்ளரியின் பிஞ்சை உண்பீர்.

கோடைகடும் வெய்யிலில் தப்பிப் பிழைக்க
ஆடவர்கள் மொட்டையுடன் அலைதல் நன்று
கேடுதரும் தெருவோரப் பானம் தவிர்த்து
பீடுதரும் மண்பானை நீரை உண்பீர்.

குடையுடன் செருப்பணிந்து வெளியில் செல்வீர்
உடையென்று கதராடை அணிதல் நன்று
தொடைஇடுக்கில் அக்குளில் பவுடர் பூசி
படைஏதும் வாராமல் காத்துக் கொள்வீர்.

பனம்நுங்கைப் பாலுடன் சர்க்கரை இட்டு
தினமருந்த தீராத வெம்மை நீங்கும்
தனமுடையோர் ஊட்டிகொடைக் கானல் செல்வீர்!
சினம் தவிர்த்தால் எவ்விடமும் குளுமைதானே!!

தாமரை
15-04-2012, 02:09 AM
சூரியன்தான் இலவசத்தைத் தொடங்கி வைத்தான்
சூனியத்தைத் தனக்குத்தானே வைத்துக் கொண்டான்.

அந்தச் சூரியனின் இலவசத்தை
ஓட்டைப் போட்டு மறுத்தோம்

இந்தச் சூரியனின் இலவசத்தை
ஓட்டைப் போட்டு பெற்றோம்

மொத்தத்தில் நம் இதயத்தில்
நாமே போட்டுக் கொண்டோம்
ஓட்டை!!!

தாமரை
15-04-2012, 02:25 AM
தார்பூஸ் பழம் உண்டு தாகம் தணிப்பீர்
மார்மீது சந்தணத்தை அள்ளிப் பூசி
வேர்க்குருவை நீக்கிடுவீர் வெம்மை தணிக்க
மோரருந்தி, வெள்ளரியின் பிஞ்சை உண்பீர்.

கோடைகடும் வெய்யிலில் தப்பிப் பிழைக்க
ஆடவர்கள் மொட்டையுடன் அலைதல் நன்று
கேடுதரும் தெருவோரப் பானம் தவிர்த்து
பீடுதரும் மண்பானை நீரை உண்பீர்.

குடையுடன் செருப்பணிந்து வெளியில் செல்வீர்
உடையென்று கதராடை அணிதல் நன்று
தொடைஇடுக்கில் அக்குளில் பவுடர் பூசி
படைஏதும் வாராமல் காத்துக் கொள்வீர்.

பனம்நுங்கைப் பாலுடன் சர்க்கரை இட்டு
தினமருந்த தீராத வெம்மை நீங்கும்
தனமுடையோர் ஊட்டிகொடைக் கானல் செல்வீர்!
சினம் தவிர்த்தால் எவ்விடமும் குளுமைதானே!!


கடைசி வரி மிகவும் மிகவும் உண்மை.

எப்படி ஒவ்வொரு பருவங்களிலும் அப்பருவத்தின் அதீதத்தில் உண்டாகும் துன்பம் தவிர்க்க இயற்கையே பல விஷயங்களை தன்னுள் விளைவித்துக் கொள்கிறதோ அதே போல்

மனிதனுக்குள்ளும்

கோபம், அன்பு, பயம், காமம், வெறுப்பு, நம்பிக்கை என பல பருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மிதமிஞ்சிப் போய் கேடு விளைவிக்காமல் இருக்க அதற்கேற்ற எண்ணங்களும் மனிதனுக்குள்ளே விளைகின்றன.

சரியானவற்றை உபயோகித்து வாட்டத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

ஆனாலும் என் வீட்டிற்கு வந்தால்
குடிக்க நீர் கிடைக்காது..

என் மனையாளை வெகுள வைத்து விட்டீர்

பின்னே

ஆடவர்கள் மொட்டையுடன் அலைதல் நன்று

என்று சொல்லி விட்டீர்

அவருக்கு மொட்டை போடவா? - நான்
புதிதாய் ஒரு மொட்டைத் தேடவா?

என்றுதான் கேட்டேன்
வெள்ளந்தீயாக!!!

ஆதி
03-05-2012, 10:57 AM
வண்ணங்கள் தூவி
வரவேற்ற இந்த நகரத்தில் மனிதர்கள்
அங்கலாய்க்கிறார்கள்
"எப்போதான் இந்த வெயில் தீருமோ!!!"

jayanth
03-05-2012, 12:33 PM
வண்ணங்கள் தூவி
வரவேற்ற இந்த நகரத்தில் மனிதர்கள்
அங்கலாய்க்கிறார்கள்
"எப்போதான் இந்த வெயில் தீருமோ!!!"

பெங்களூராம் எங்களூரில்
தீர்ந்தது வெயில் இப்பொது...

வேண்டுவோம் வருணணை
உங்களூரில் வெயில் தீர...

கீதம்
03-05-2012, 12:42 PM
ஆடவர்கள் மொட்டையுடன் அலைதல் நன்று

என்று சொல்லி விட்டீர்

அவருக்கு மொட்டை போடவா? - நான்
புதிதாய் ஒரு மொட்டைத் தேடவா?

என்றுதான் கேட்டேன்
வெள்ளந்தீயாக!!!கேட்டீர் வெள்ளந்தீயாக,
கிடைத்தது உள்ளந்தீயாக.

தாமரை
03-05-2012, 02:12 PM
கேட்டீர் வெள்ளந்தீயாக,
கிடைத்தது உள்ளந்தீயாக.
வெள்ளந்தி என்பது வழக்கில் இருக்கும் சொல். வெள்ளந்தி என்பதை ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் ஒருவர் விளக்கி இருந்தார். அதாவது வெள்ளத்திற்கும் சரி தீக்கும் சரி. நல்லது கெட்டது தெரியாது. வேண்டியது வேண்டாதது தெரியாது. அதுமாதிரி இருப்பவர்களை வெள்ளந்தீ போல என்பார்கள். அதுதான் மாறிப் போய் வெள்ளந்தி ஆகியது என்று.

வெள்ளந்தியாக என்பதை வெள்ளம் - தீயாக என்று நுணுக்கி எழுதினதை இரசிக்கலையோ? அதிலேயே பொருள் இருக்கே, அன்பு வெள்ளமாக பாயும் அவள் தீயாக எரித்தாள் என. அதிகம் படிச்சா இப்படித்தான். தெரிஞ்சதெல்லாம் இருப்பதை மறைத்துவிடும். அதனால் வெள்ளந்தியாக இருக்கறதே நல்லது!!!

கீதம்
03-05-2012, 10:43 PM
வெள்ளந்தி என்பது வழக்கில் இருக்கும் சொல். வெள்ளந்தி என்பதை ஒரு முறை ஒரு பத்திரிக்கையில் ஒருவர் விளக்கி இருந்தார். அதாவது வெள்ளத்திற்கும் சரி தீக்கும் சரி. நல்லது கெட்டது தெரியாது. வேண்டியது வேண்டாதது தெரியாது. அதுமாதிரி இருப்பவர்களை வெள்ளந்தீ போல என்பார்கள். அதுதான் மாறிப் போய் வெள்ளந்தி ஆகியது என்று.

வெள்ளந்தியாக என்பதை வெள்ளம் - தீயாக என்று நுணுக்கி எழுதினதை இரசிக்கலையோ? அதிலேயே பொருள் இருக்கே, அன்பு வெள்ளமாக பாயும் அவள் தீயாக எரித்தாள் என. அதிகம் படிச்சா இப்படித்தான். தெரிஞ்சதெல்லாம் இருப்பதை மறைத்துவிடும். அதனால் வெள்ளந்தியாக இருக்கறதே நல்லது!!!

ஆத்தீ... வெள்ளந்தீயில இத்தனை விசயமிருக்கா?

அட, நான் வெள்ளந்தியாவே இருந்துக்கிறேன். :)

ஆதி
04-05-2012, 04:36 AM
2006 தேர்தலை மனதில் கொண்டு படித்தால் கீழுள்ள வரிகள் சிலேடையாகிவிடுகிறது அண்ணா, மிக ரசித்தேன்


சூரியனின் இலவசத்தை
ஓட்டைப் போட்டு பெற்றோம்

மொத்தத்தில் நம் இதயத்தில்
நாமே போட்டுக் கொண்டோம்
ஓட்டை!!!

ஆதி
04-05-2012, 04:40 AM
பெங்களூராம் எங்களூரில்
தீர்ந்தது வெயில் இப்பொது...

வேண்டுவோம் வருணணை
உங்களூரில் வெயில் தீர...

ஜனவரி வரை அந்த ஊர்லதான அப்பு நாங்களும் இருந்தோம், இந்த ஊர்ல பகல்ல வெயிலடிச்சாலும், ராத்திரி சும்மா டிசம்பர் மாச தேனி மாதிரி இல்ல இருக்கு

ஆதவா
02-05-2015, 08:19 AM
இளஞ்சூட்டு முத்தத்தை
நீ
ஒரு மழைநாளில் பரிசளித்தபோது
வெப்பம் ஒரு கவிதையாக
என்னுள் படர்ந்தது

இரு தேநீர் கோப்பைகள்
அருகருகே கைகள் பிணைத்து
காதல் பேசியபோது
வெப்பம் ஒரு தேயிலையின் ருசியாக
எனக்குள் நுழைந்தது

ஒருசேர சங்கமிக்கும்
கடலின் விளிம்பில்
கற்கள் பொறுக்கிக் கொண்டிருக்கும்போது
வெப்பம் ஒரு அலையாக
என் கால்களைத் தழுவியது

இருசோடி
உதடுகளுக்கிடையேயும்
உடல்களுக்கிடையேயும்
கண்களுக்கிடையேயும்
வெப்பம் ஊடுறுவியபோது
அது குழந்தையாக
தவழ்ந்தது
உனக்கும் எனக்குமாய்

ஆதவா
02-05-2015, 09:08 AM
சொட்டுச்சொட்டாக விழுகிறது
மழை
ஒவ்வொரு துளிக்குள்ளும்
உஷ்ணம், வெப்பம்
ஆக்ரோஷம்

கும்பகோணத்துப்பிள்ளை
20-01-2017, 05:25 PM
அது ஒரு வெயில் காலம்

வெயிலை உள்வாங்க
குறைக்கப்பட்ட முடி


அழுத கண்ணும் சிந்திய முக்குமாய்!
அப்பா கழுத்தில் கைவைத்து அமுக்கிபிடிக்க
தலைக்கு மேல நாவிதரின் கிடிக் கிடிக்
சத்தத்தில் தூங்கிபோன நாட்களை நினைவுட்டுகிறது.

கும்பகோணத்துப்பிள்ளை
20-01-2017, 06:07 PM
அது ஒரு வெயில் காலம்

புழுதி பறக்கும்
செம்மண் சாலையில்
குதிரை வீரனாய் கற்பித்துக் கொண்டு
நாங்கள் விரட்டிச் செல்லும்
சைக்கிள் டயர்கள்


வற்றி விட்ட ஏரியில்
மிச்சமிருக்கும் சிறிது நீரில்
துண்டு போட்டு பிடித்த
அயிரை மீன்கள்

முள்ளுச் செடிகளில்
தலைதூக்கும் ஓணான் சிங்கங்களை
கவட்டை வில்கொண்டு
வேட்டையாடிய வீர சாகசம்

கல்லெறிந்து பறித்த மாங்காயா
நெருப்பு எறும்புகளைத் தாண்டி
மரமேறி பறித்த மாங்காயா
எது ருசி என
உப்பு மிளகாய் கலவையில்
முக்கி ருசித்தது

வேப்ப மரத்தடியில்
கயிற்றுக் கட்டிலில்
வானத்து நட்சத்திரங்களில்
எனக்கென்று ஒன்றை கண்டு
பெயரிட்டு மகிழ்ந்தது

மொட்டைமாடியில்
கயிற்றுக் கட்டிலில்
கூடாரம் போட்டு
வீடு கட்டி வாழ்ந்தது

இன்னும் இன்னும்
எத்தனையோ நினைவுகள்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்
கான்கிரீட் சிறையில்


நெஞ்சுமுட்ட நிறைய ஞாபககற்றைகளை
வீசியடிக்கிறது உங்கள் பதிவு

கவட்டை கம்பு பனைரோதை பட் பட் சத்ததிற்க்கு மடித்து தைக்கப்பட்ட குமுதம் அட்டை
குடைக்கம்பியில் வில்லும் அம்பும் செய்து ஆற்றில் பாறைக்கடியில் தேங்கியநீரில் பதுங்கிய குறவைமீன் வேட்டை

வேப்பம்பழம், சப்பாத்திபழம் சாப்பிட்டு காலில் எற்பட்ட புண்னிற்க்கு பக்கத்துவீட்டு கம்பவுண்டர் தாத்தா
போட்ட எரிச்சல் மருந்தும் கடு கடு கட்டும்

மதிய நேர கினற்றுக்குளியல், கட்டுக்கரையில் கானாமல்போகும் காலடிநீர்தடம்

புளியம்பிஞ்சையும் கொழுந்திலையயையும் கருங்கல்லில் இழைத்து உப்பையும் மிளகாயையும் சேர்த்திழைத்து வழித்துண்டது

இப்படி எகப்பட்ட நினைவுகளால் இத்திரியை தொடர்ந்து படிக்கமுடியாமல் போனது

மறுபடியும் உள்நுழைய வேண்டும்...