PDA

View Full Version : எழுதாத தருணங்கள்...



சசிதரன்
23-04-2009, 04:45 PM
பேச்சுக்களும் சிரிப்புகளும் முடிவுற்று
நண்பர்கள் கலைந்த பின் தோன்றும்
ஞாயிற்றுக் கிழமை மாலையின் தனிமையை
விவரிப்பதற்கு கடினமாயிருக்கிறது.

பேரிரைச்சலுடன் அலைகள் துப்பும்
சமுத்திரத்தின் ஆழ்பகுதி போல
கனத்த மௌனம் போர்த்தி கொள்கிறது
அத்தகைய தருணங்கள்.

மொழிபெயர்க்க முடியாத தனிமைகளை
என்ன செய்வதென்று தெரியாமல்
காகிதம் எடுத்துக் கொள்வேன்.

கடிகார முட்களின் டிக் டிக் ஓசை
மௌனத்தை இன்னும் கனமாக்கும்.

எத்தனையோ முறை முயன்றிருக்கிறேன்
இது போன்ற தருணங்களை
வார்த்தையில் பதிவு செய்ய...

அமைதியான கிணற்றை போலிருக்கும்
மனதில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல்...
எதனைத்தான் தூர் வார முடியும்?..

வெகுநேரம் அமர்ந்திருந்து
வார்த்தை ஏதும் தோன்றாமல்
காகிதம் கிழித்தெறிந்து
ஒப்புக் கொள்வேன் என் தோல்வியை.

தனிமைக்கும் எனக்குமான போரில்
இப்படிதான்...
எப்பொழுதும் பலியாகி போகும்...
ஒரு வெள்ளை காகிதம்.

ஆதவா
24-04-2009, 01:43 AM
வெயில் பட்ட கற்களின் மேல் தோலைப் படர்த்தியதைப் போன்ற சுளீர் தான் யாருமற்ற தனிமை.

ஒருவகையில் தனிமையோடு பழகியபிறகு தனிமை தெரிவதில்லை. என் வாழ்வில் இதுவரை நான் கண்டதில் இருளும் தனிமையும் என்னை ஒரு ஊமையாக்கியது.. அப்பொழுது அடக்கி வைத்திருந்தவைகளெல்லாம் தனிமை கிழியும் பொழுது மடைவெள்ளமாய் வெளியேறிவிட்டது.

தனிமையை அடையாளப்படுத்த மெளனம் எனும் மொழி தேவைப்படுகிறது. வெறும் வார்த்தைகளில் வசப்பட்டுவிட தனிமை சாதாரண வளைவுகளில் சஞ்சரிப்பதில்லை.

உங்கள் கவிதையும் அதைச் சொல்லும் பாங்கும் கவனிக்கத்தக்கது. எப்பொழுதும் தனிமைப் போரில் ஏதாவது ஒன்று பலியாகியே இருக்கும் உங்களுக்கு காகிதம்.... சிலருக்கு கவிதைகளும்!!

சசிதரன்
29-07-2009, 04:59 PM
தங்கள் விமர்சனத்திற்கு மிக்க நன்றி ஆதவா...:)

இளசு
29-07-2009, 07:33 PM
ஆதவனின் விமர்சனம் தாண்டி சொல்ல ஏதுமில்லை..

பாராட்டுகள் சசி!

அசத்தினாய் ஆதவா...

கா.ரமேஷ்
30-07-2009, 06:39 AM
தனிமைக்கும் எனக்குமான போரில்
இப்படிதான்...
எப்பொழுதும் பலியாகி போகும்...
ஒரு வெள்ளை காகிதம். ////////////

அருமை...

தனிமையின் முடிவில்ஏதாவது ஒன்று பலியாகிபோவது என்னவோ உண்மைதான் ...

சிவா.ஜி
30-07-2009, 07:09 AM
தனிமையின் வெறுமையில் மனம் கனத்துப்போவதென்னவோ உண்மைதான். அந்தப் பொழுதுகளிலெல்லாம் எதைச் செய்வது என்ற தடுமாற்றம் எல்லோரையும் ஆக்ரமிக்கும்.

விதிவிலக்காய் சில படைப்பாளிகள் எப்போதும் விரும்புவது தனிமையே. தனிமை சிலருக்கு ஒவ்வாமை...சிலருக்கு தேவை.

அழகான வரிகளில் உங்கள் காகிதம் நிரம்பி, தனிமையின் பலனை தந்திருக்கிறது.

வாழ்த்துகள் சசி.

அமரன்
30-07-2009, 07:44 AM
அழகான கவிதை.. ஆழமான விமர்சனம்.. இதைவிட வேறென்ன வேண்டும் கவிஞனுக்கும் ரசிகனுக்கும்.. பாராட்டுகள் இருவருக்கும்.

..

சசிதரன்
30-07-2009, 05:14 PM
ஆதவனின் விமர்சனம் தாண்டி சொல்ல ஏதுமில்லை..

பாராட்டுகள் சசி!

அசத்தினாய் ஆதவா...

மிக்க நன்றி இளசு அண்ணா...:)

சசிதரன்
30-07-2009, 05:15 PM
தனிமைக்கும் எனக்குமான போரில்
இப்படிதான்...
எப்பொழுதும் பலியாகி போகும்...
ஒரு வெள்ளை காகிதம். ////////////

அருமை...

தனிமையின் முடிவில்ஏதாவது ஒன்று பலியாகிபோவது என்னவோ உண்மைதான் ...

தங்கள் பாராட்டிற்கு நன்றி ரமேஷ்...:)

சசிதரன்
30-07-2009, 05:16 PM
தனிமையின் வெறுமையில் மனம் கனத்துப்போவதென்னவோ உண்மைதான். அந்தப் பொழுதுகளிலெல்லாம் எதைச் செய்வது என்ற தடுமாற்றம் எல்லோரையும் ஆக்ரமிக்கும்.

விதிவிலக்காய் சில படைப்பாளிகள் எப்போதும் விரும்புவது தனிமையே. தனிமை சிலருக்கு ஒவ்வாமை...சிலருக்கு தேவை.

அழகான வரிகளில் உங்கள் காகிதம் நிரம்பி, தனிமையின் பலனை தந்திருக்கிறது.

வாழ்த்துகள் சசி.

மிக்க நன்றி சிவா அண்ணா...:)

சசிதரன்
30-07-2009, 05:18 PM
அழகான கவிதை.. ஆழமான விமர்சனம்.. இதைவிட வேறென்ன வேண்டும் கவிஞனுக்கும் ரசிகனுக்கும்.. பாராட்டுகள் இருவருக்கும்.

..

முற்றிலும் உண்மை அமரன் அவர்களே.... இவ்வளவு அன்பான அழகான விமர்சனங்களை விட வேறென்ன வேண்டும் படைப்பவனுக்கு.... நமது தமிழ் மன்ற சொந்தங்களின் விமர்சனங்களும் பாராட்டுக்களும் எனக்கு என்றும் ஊக்கமளிப்பவை...:)

கீதம்
03-08-2009, 05:51 AM
தனிமை மிகவும் கொடுமையானது. ஒவ்வொரு முறையும் தோற்று முடிவில் ஒரு வெள்ளைக் காகிதத்தை நிரப்பியது மட்டுமன்றி படிப்போர் மனதையும் கனமான நினைவுகளால் நிறைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

அருள்
03-08-2009, 02:41 PM
இந்த கவிதை சொல்வது .....
சசிதரன் மௌனத்தை