PDA

View Full Version : பிரபாகர மனிதம்!



நாகரா
23-04-2009, 04:38 AM
புலிக்குள் புகுந்த
அன்பாம் சிவமே
வீரமாய்ப் பாயும்
விடுதலை வேட்கை!
மன இத அறம்
மறந்தோரின் தீவிரவாதமே
அன்பாம் சிவத்தைப்
புலியின் அவதாரத்தில் புகுத்தி
மறஞ்செய உசுப்பியது!
மன இத அறத்தின் ஞாபகம்
மறந்தோரில் மீண்டும் மூண்டாலன்றி
மறஞ்செயும் புலியின் அவதாரங்கள்
மீள மீளப் பாயும்!
புலியின் வன்பை
அன்பாய் இரசவாதம் செய்ய
மன இதம் வேண்டும்!
மன இதம் வரும் வரைக்கும்
புலி மாயாது!
மன இதம் வந்த பின்னர்
அன்பாம் சிவத்தில்
புலி மாயா நிலை எய்தும்!
மன இத அறம் மறந்தோரே!
தீவிரவாதத்தின் காரண கர்த்தரே!
பிரபாகரத்தை விதையாக்கிப்
பூமியில் புதைத்தோ
புலிகளை வதைப்பீர்!
பிரபாகர விதையின் சாவில்
வீரியப் புலிப் பயிர்கள்
இன்னும் அமோகமாய் விளையும்
என்பதை இப்போதே அறிவீர்!
மன இத அறத்தின் கண்
திரும்பட்டும் உம் மனம்!
அன்பாம் சிவத்தில்
திரும்பட்டும் பிரபாகரமும்
அதன் விளைச்சலாம் புலிகளும்!
ஒருவனாம் தேவனின் பிள்ளைகள்
நம் குலம் ஒன்றே என்பதன்
ஞாபகம் நம்முள் மூள
மனிதராய் வாழ்வோம் வாரீர்!
அன்பே சிவமாய்
அவனியில் எழுவோம் வாரீர்!
பிரபாகரத்தில் புலிகளை உசுப்பிய
நீவிர்
மனிதராவீர் முதலில்!
பிரபாகர மனிதம்
பிரகாசமாய் விடியும்
நம்மிடை நிச்சயம்!

அன்புரசிகன்
23-04-2009, 04:51 AM
வழமைக்கு மாறிய பின்னடைவுகள் காரணம் இப்போது களத்தில் ஒருவரல்ல. பலரது கூட்டணியுடன் மூர்க்கமாக பாயும் போது பதுங்குதல் சாதூரியம். ஆனால் எதுவரை என்பது தான் ஏக்கம்.

காரணம் சிங்கத்தின் கர்ச்சனையில் பாய்வது நம்முறவுகளின் இரத்த வீழ்ச்சி அல்லவோ...

எல்லாம் நல்லதுக்கே என்ற நம்பிக்கையுடன் ஏக்கம் தொடர்கிறது.

கா.ரமேஷ்
23-04-2009, 06:28 AM
எதிர்பார்ப்பு அதுதான் பிரகாசமாக விடியட்டும்....! எம் இனமக்கள் உயிர்பலி இல்லாத தேசமாய் மாறட்டும்......!

இன்பா
23-04-2009, 06:37 AM
காயத்தின் மேல் மயில் இறகு கொண்டு வருடியதுப் போல் வேதனையிலும் உங்கள் கவிதை கொஞ்சம் மகிழ்ச்சி கொடுக்கிறது.

நாளைய விடியல் நன்மை பயக்கட்டும்.

நாகரா
18-06-2009, 09:47 AM
பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் நன்றி

தூயவன்
18-06-2009, 10:31 AM
சிறந்த கவிதை நாகரா அவர்களே... இக் கட்டத்திக்கு தேவையானது

நாகரா
18-06-2009, 10:34 AM
சிறந்த கவிதை நாகரா அவர்களே... இக் கட்டத்திக்கு தேவையானது
நன்றி நண்பரே

நேசம்
18-06-2009, 10:51 AM
வேதனையான உள்ளங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வரிகள்.எதிர்பார்ப்புகள் இன்னும் குறையமால் இருக்கிறது.அந்த எதிர்பார்ப்புகள் ஒரு நாள் நிறைவேறி சுகந்திரமான காற்றை சுவாசிக்க கூடிய காலம் விரைவில் வரும்,வாழ்த்துகள் அண்ணா

நாகரா
18-06-2009, 12:08 PM
உம் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நேசம்