PDA

View Full Version : புதிய பரிணாமத்தில் இலண்டன் தமிழ் மாணவர்களின் எழுச்சி



அமரன்
22-04-2009, 11:23 AM
கடந்த இரு வாரங்களாக இலண்டனில் உள்ள தமிழ் மாணவர்களால் நடத்தப்படும் எழுச்சிப் போராட்டம் மக்களின் ஆதரவுடன் முனைப்புப் பெற்றிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்கள் சீருடையுடன் எழுச்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று வரை எழுச்சிக் கூட்டத்தில் காணப்பட்ட தமிழீழத் தேசியக் கொடியும் பிரபாகரனின் படமும் இன்று இல்லாமல் போக, தமிழ் மக்கள் மீது கட்டவைழ்த்து விடப்பட்டுள்ள கொடூரங்களை வெளி உலகுக்குக் கொண்டு வரும் வகையில் பதாகைகளும் படங்களும் கோசங்களும் அதிகமானோர் கைகளில் தாங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சட்டங்களுக்கு அமைவாக அந்த நாடுப் பிரஜாவுரிமை பெற்ற மாணவர்கள் தமது தேசியத்துக்காக போராட்டத்தில் குதித்திருப்பது பலர் கவனத்தை திருப்பும் அதேவேளை 10000 க்கு அதிகமானோர் குழுமி இருப்பது போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

நன்றி : நண்பன் ஒருவன்.

சூரியன்
22-04-2009, 12:38 PM
இது சம்மந்தப்பட்ட படங்கள் ஏதும் இல்லையா அண்ணா?

செல்வா
22-04-2009, 12:38 PM
ஒரு வாசல் அடைத்தாலும் மறுவாசல் திறக்கும் என்பது ... இதுதானோ...

சொல்ல இயலாது திறக்கும் புதுவாசல் முந்தைய வாசலை விட வலிமையாக வளமையைக் கொடுக்கலாம்....

இன்னும் இதே போன்ற போராட்டங்கள் பல இடங்களிலிருந்தும் முன்னெடுக்கப் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு....

நேசம்
22-04-2009, 01:06 PM
செவிடன் காதில் ஊதிய சங்காக இறுக்கிறது இந்த இனவெறியர்களின் செயல்.மனம் தளராமால் போராட்டங்கள் வலிமையாக தொடரவேண்டும்

கா.ரமேஷ்
23-04-2009, 06:43 AM
மாணவர்களின் போராட்டம் வலுப்பெறவேண்டும்.... நோக்கம் வெற்றிகரமாக அமையவேண்டும்.

பூமகள்
24-04-2009, 07:42 AM
இரு கண்களையும் காதுகளையும் இறுக மூடிக் கொண்டிருக்கும் சிங்கள அரசு, இனி இவ்வகை சுனாமிகளால் கதிகலங்கட்டும்..

போராட்டம் இன்னும் வலுப்பெற்று பெரும் புயலை அவர்கள் மனதில் விதைக்கட்டும்..

வெளிச்சம் நோக்கிப் புறப்பட்டிருக்கும் தமிழினம்.. இழப்புகளைத் தாண்டி சீறி எழும் காலம் வெகு தொலைவில் இல்லை..