PDA

View Full Version : வெறுமைகள் உணர்த்தும் கவிஞனின் உண்மைகள்.



அமரன்
22-04-2009, 07:44 AM
என்
நாட்குறிப்பின் பக்கங்களை
நிறைந்து விடுகின்றனவாம்
வெறுமைகள்.


என்
வெண்மைப் பக்கங்களில்
தூங்கும் எதையும்
சுமக்கும் வலிமை கொண்டதில்லை
வேறு மைகள்.

என்
நாட்களின் குறிப்பை
இறைத்து விடுகின்றன~அவ்
வெறுமைகள்.

என்
வாழ்வை வாழ்ந்தால்
உணர்த்தும் அவ் உண்மைகள்.

ஆதவா
23-04-2009, 03:11 PM
என்
நாட்குறிப்பின் பக்கங்களை
நிறைந்து விடுகின்றனவாம்
வெறுமைகள்.


என்
வெண்மைப் பக்கங்களில்
தூங்கும் எதையும்
சுமக்கும் வலிமை கொண்டதில்லை
வேறு மைகள்.

என்
நாட்களின் குறிப்பை
இறைத்து விடுகின்றன~அவ்
வெறுமைகள்.

என்
வாழ்வை வாழ்ந்தால்
உணர்த்தும் அவ் உண்மைகள்.

எனக்கென்னவோ இறுதி பத்தி மட்டும் ஒருமாதிரியாக இருப்பதாகத் தோன்றுகிறது.

இதைப் போன்றே நானும் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன். (பல காரணங்களால் அது இங்கே பதிவிடப்படாமல் கிடக்கிறது) அக்கவிதையில் தினக்குறிப்பின் எழுதப்படாத பக்கங்கள் எழுத்தாளனை அவமானப்படுத்துவதாக முடித்திருப்பேன்.

ஒருவகையில் வெறுமை ஒரு அவமானக்குறியாகத் தென்படுகிறது. சிலசமயங்களில் அது தனித்தியங்கும் வெளியைக் குறிப்பதாக இருக்கிறது. வெறுமையின் எழுத்துக்கள் என்றும் நீர்த்துப் போவதில்லை. கண்களுக்கு முன்னே நின்று உறுத்திக் கொண்டே இருக்கும் முற்கள் அவை.

சற்று நினைத்துப் பாருங்கள்.... வெறுமை என்று ஒன்றுமே இல்லை... ஒன்றுமே இல்லாமல் இருப்பது கூட ஏதோ ஒன்று விட்டுச் சென்ற அடையாளங்கள்தானே!