PDA

View Full Version : கறை மூடிக் கிடக்கும் கதைகள்.



அமரன்
22-04-2009, 07:07 AM
கறை மூடிக் கிடக்கின்றன
என் எழுத்துகள்.

துருபிடித்த நம்பிக்கைகள்
அறுத்து வடிந்த செந்நீர்
பெருத்தத் திட்டுகளாய்..

முனை மழுங்கிய கோட்பாடுகள்
குத்திக் கிளம்பிய நீர்
கறுப்பேறி அயர்களாய்..

செத்துப் போன அனுபவங்கள்
கீறி ஊறிய கண்ணீர்
பழுப்பேறிக் கொப்புளங்களாய்..

படிந்து கிடக்கும்
நாற்றம் வீசும் கறைகள்
கழுவப்பட்டுவிடும்
ஒட்டப்பட்ட
தீவிரவாத முத்திரை நைந்து போகையில்.

ஆதவா
23-04-2009, 03:17 PM
உங்கள் எழுத்துக்கள் நன்கு உரிந்து மெருகேறி வருவதை நிதானிக்க முடிகிறது.

யாரும் தீவிரவாதிகளாக மாறிவிடுவதில்லை.. நிர்பந்திக்கப்படுகிறார்கள். அல்லது திணிக்கப்படுகிறார்கள். அவை எப்பொழுது நைந்து போகின்றன என்ற கேள்விக்கு அநேகமாக எவரிடமும் விடை இருப்பதில்லை.

கறைகளற்ற மனிதர்களைக் காணமுடியாது. ஒவ்வொருவரும் போடும் வேடத்திற்கிடையே நசுங்காமல் கறைகள் காத்துக் கிடக்கும்.

தொடருங்கள் அமரன்

பாரதி
23-04-2009, 04:27 PM
இதுவும் கடந்து போகும்.
இனி வரப்போகும் பெருமழைக்காலத்திற்காக காத்திருப்போம்.
நம்பிக்கையில்தான் வாழ்க்கை.